Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காத்திருந்தேனடி உனது காதலுக்காக!!-13

Advertisement

Miloni

Active member
Member
அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு நினைவுகளாக மாறிப்போனது..

அன்றைக்குப் பிறகு மிது அவளிடம் அன்பாகவே நடந்து கொண்டான் அவனுடைய பார்வையில் ஒரு மென்மை இருந்தது..

முன்பு அவள் பார்க்காத போது பார்த்தவன் இப்பொழுதெல்லாம் தைரியமாக அவளை நேராகப் பார்க்க ஆரம்பித்தான்..

வேலை தொடர்பாக விளக்க வேண்டிய அந்த நேரம் வரும் பொழுது ஒவ்வொரு நாளும் அவளுக்கு சுகமான அவஸ்தையாக மாறி போனது..

அவள் விளக்கி முடிக்கும் வரை அவன் பார்வை அவளை விட்டு எங்கேயும் அகலாது..

அவளையே ரசனையுடன் பார்ப்பான் சிலநேரம் அவன் பார்வையின் வீச்சை தாங்காது பாதியிலேயே முடித்துக் கொண்டு ஓடி விடலாம் என நினைப்பாள் அன்றைக்கு வேண்டுமென்றே நிறுத்திவைத்து சந்தேகம் கேட்பான் ஒருவழியாக திக்கி திணறி பதில் சொல்லி முடிப்பாள்..

அவளை அடிக்கடி அவன் அழைப்பது அவன் அறையில் இருந்து முகம் சிவந்து அவள் வருவது சுந்தரி செல்வி கிருஷ்டிக்கு சந்தேகத்தை உண்டு பண்ணி இருந்தது..

யாருக்கும் உறுதியாக இதுதான் என கூற முடியவில்லை ஏன் சைதன்யாவிற்கும் அதே நிலைமைதான் ஏனெனில் அவன் வாய் திறந்து இதுவரை ஒன்றும் கூறாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம்..

சைதன்யாவிற்கு தான் அவனால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம் அதேபோல் அவனும் தன்னால் ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்பது புரியாமல் இல்லை ஆனால் அவன் ஏன் இன்னும் சொல்லாமல் இருக்கிறான் அதுதான் புரியவில்லை..

ஏதாவது காரணம் இருக்கும் ஒருவேளை இப்போதுதான் தொழிலை தொடங்கி இருக்கிறோம் அது கொஞ்சம் வெற்றியடையட்டும் என நினைத்திருக்கலாம்..

விழாவிற்கு பிறகு அதில் கிடைக்கும் ஆர்டர்களைப் பொறுத்து வெற்றி வாய்ப்பை கணித்துவிடலாம் அதன்பிறகு எப்படியும் சொல்லுவான்..

எப்படியோ இப்போது இருக்கும் இந்த நிலைமையே அவளுக்கு சுகமாக இருந்தது மறுநாள் அவன் வீட்டு பூஜைக்கு செல்ல வேண்டும்..

சந்தோஷிடம் அதைப்பற்றி சொல்லவேண்டும் மிதுவிடமும் அன்று காலையில் அதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் கேட்டுவிட்டு எனக்கு நாளை ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது தன்யா இல்லையானால் நானே வந்து உன்னை அழைத்து சென்றிருப்பேன்..

அப்படியானால் அவன் வீட்டில் இருக்க மாட்டானா அவளுக்கு முகம் சுருங்கி போனது அதை கவனித்துவிட்ட அவனுக்கும் உள்ளுக்குள் சிரிப்பு தான்..

வெளியில் தன் மனதை காட்டாமல் ஓகே சார் என தன் அறைக்கு வந்து விட்டாள்..

சரவணன் ஏதோ ஆர்டர் விசயமாக பேசுவதற்கு சைதன்யாவை காண வந்திருந்தான் சுந்தரி அவனைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் ஒதுங்கி போனாள்..

சரவணன் அவளை பார்த்துவிட்டு தலைகுனிந்து கொண்டான் அவ்வப்போது அவன் சுந்தரியை பார்த்த பார்வையில் ஏதோ கவலை இருப்பது போல தோன்றியது..

கொஞ்ச நாட்களாக சைதன்யா இதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் முன்பெல்லாம் நன்றாகத்தானே பேசிக்கொண்டு இருந்தார்கள் இப்போது இவர்களுக்குள் என்ன பிரச்சனை..

அவன் போன பிறகு சுந்தரியிடம் அதுபற்றி கேட்டாள் ஒரு மெல்லிய தயக்கத்தின் பின் சரவணன் அவளை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொன்னாள்..

அப்படியா ரொம்ப சந்தோஷம் சுந்தரி நீ அதற்கு என்ன சொன்னாய் என ஆவலுடன் கேட்டாள்..

நான் எப்படிக்கா ஒத்துக்கொள்ள முடியும் என் நிலைமை தான் உனக்கு தெரியுமே முடியாது என மறுத்து விட்டேன்..

சுந்தரிக்கு ஒரு கால் முடியாத தம்பி குடிகார அப்பா அம்மா கிடையாது அப்பாவுடைய தங்கையான அவளுடைய அத்தை கணவனை இழந்தவர் அவர்தான் இவள் வேலைக்கு வரும்போது அவள் தம்பியை கவனித்துக்கொள்கிறார்..

என்ன சுந்தரி இது, சரவணன் ரொம்ப நல்ல பையன் அவனை வேண்டாம் என மறுத்திருக்கிறாய்..

அக்கா நான் வேலைக்கு போய் தான் என் குடும்பத்தை நடத்த முடியும் தம்பிக்கு மருந்து செலவு வைத்திய செலவு என அதற்கே வருமானம் பத்தவில்லை இதில் அப்பா வேறு குடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்..

இதில் நான் எங்கே அக்கா கல்யாணத்தைப் பற்றி யோசிப்பது நான் போய் விட்டால் அவர்களை யார் பார்த்துக் கொள்வது எங்கள் அத்தை அவர் கணவர் இறந்த பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தார் இதுவரை எங்களுக்கு எல்லாமுமாக இருக்கிறார் எனக்கு கல்யாணம் ஆனால் அவர்களையெல்லாம் யார் பார்ப்பது..

அதற்காக கடைசிவரை நீ இப்படியே இருக்க முடியுமாடி..

என்னக்கா செய்வது இதற்கு வேறு தீர்வு இல்லையே இப்படி ஒரு நிலைமையில் அவரது காதலை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் நீயே சொல்..

சைதன்யாவிற்கு சுந்தரியை நினைத்து கவலையாக இருந்தது அப்பாவிடம் இது பற்றி பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள்..

சரி சுந்தரி நீ எதைப் பற்றியும் யோசிக்காதே அப்பாவிடம் பேசி நான் இதற்கு ஏதாவது வழி கண்டுபிடிக்கிறேன் என ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டாள்..

பாவம் சுந்தரி எவ்வளவு கவலை இருந்தாலும் அதை முகத்தில் காட்ட மாட்டாள் எல்லோருடனும் கலகலப்பாக இனிமையாகவும் பழகுவாள் அவளுக்கு இப்படி ஒரு நிலைமை..

சரவணன் இவளுக்கு ரொம்பவும் பொருத்தமானவன் அவனிடம் இவளது குடும்ப நிலைமையை எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்..

மாலை கிளம்பும் வேலையில் மிது அவளை மறுபடியும் அழைத்தான்..

சிறு தயக்கத்தின் பின் ஒரு கவரை அவள் கைகளில் கொடுத்தான் அவள் என்னவென்று கேட்க பிரித்துப்பார் என சொன்னான்..

கண்ணைப் பறிக்கும் அளவு அழகான ஒரு சேலை இருந்தது அந்த சேலையில் அழகான மயிலும் சேலையின் உள் புறம் அதன் தோகையும் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது..

சேலையின் அழகு அவளை கவர்ந்தாலும் இது எதற்கு என அவன் முகம் பார்த்தாள்..

வந்து.. நிரஞ்சனா உன்னிடம் கொடுக்க சொன்னாள் நாளை வரும் போது உன்னை கட்டி கொண்டு வர சொன்னாள்..

ஆனால் சார்.., என அவள் இழுக்கவும் ப்ளீஸ் சைதன்யா இது அவளுடைய ஆசை வேண்டாம் என்று சொல்லாதே அவள் மனது கஷ்டப்படும் என்றான்..

இது உண்மையிலேயே அவளது ஆசைதானா சார் எனக்கேட்க அந்த அறையில் நிசப்தம் நிலவியது..

கதவு தட்டும் ஓசை கேட்கவும் தன்யாவிடம் திரும்பி நாளை முதன்முதலில் வீட்டுக்கு வரும்போது இதனை நீ கட்டிக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் தயவுசெய்து மாட்டேன் என்று சொல்லாமல் கட்டிக் கொண்டு வா என கூறிவிட்டு அவள் பதில் பேச இடம் கொடாது வெளியில் நின்று கதவு தட்டிய வரை உள்ளே வருமாறு அழைத்தான்..

தந்திரக்காரன் மறுக்க கூட இடமே கொடுக்கவில்லையே.. தங்கை வீட்டிற்கு வர ஒத்துக்கொள்ள வைத்தாள்.. அண்ணன் இதனை கைகளில் திணித்து மறுப்பு கூற முடியாமல் செய்துவிட்டான் இருவருமே புத்திசாலிகள் தான்..

சந்தோஷிடம் மறுநாள் அவன் வீடு போவது பற்றி சொல்லி கிறிஸ்டியை அழைத்துச் செல்வதாக சொன்னாள்..

கிறிஸ்டியிடம் காலையில் தயாராக வந்து நிற்குமாறும் தான் வந்து அழைத்துக் கொள்வதாகவும் சேலையில் வருவதால் ஆட்டோவில் செல்லலாம் என சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
 
Top