Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -3

Advertisement

?கைதி -3 ?

நான் வலையில் சிக்காத மீனாய்
வலைந்து, நெளிந்து என் உறவை விட்டு கடல் கடந்து போக போகும் நேரம் கடலின் நீரோ வற்ற ஆரம்பித்தது. வற்றிய நீரோடு என் உயிரும் வற்றி போய்விடுமா??? அல்லது மழை வந்து என் உயிர் காக்குமா???


"அப்பா போதும்பா என்னால முடியல அவன் இன்னைக்கு அமர் அண்ணாவ குத்த வரப்ப ரொம்ப பயந்துட்டேன், என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது" என்றாள் லக்ஷிமணன் தோளில் சாய்ந்து.

"மிருணா இங்க பாரு.. அழுகுறியா?? என் பொண்ணுக்கு அழுகலாம் தெரியுமாடா???" என்றார் அவள் முகத்தை நிமிர்த்தி.

"இல்லப்பா நான் அழல, என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறேன்" என்றாள் வருத்தமாக.

"நாம வீட்டுக்கு வந்துட்டோம், அண்ணாவும் அப்பாவும் போயிட்டாங்கலான்னு தெரியல்லையே!!! ஏன் மிருணா அண்ணாட்ட அப்படி பேசுனா?? அண்ணா முகமே மாறி போச்சு!!" என்றாள் வருத்தமாக.

"ஆமாடி ஏன்டி அப்படி பேசுன??" என்றார் கவிதா.

"அண்ணா அங்கயே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா அந்த கிறுக்கன் கத்தியால குத்துனாலும் குத்தி இருப்பான் அதனால தான் அண்ணாவ போக சொன்னேன், அதுவுமில்லாம அண்ணாவ வச்சு என்னைய மிரட்ட பார்க்குறான், நான் அதுக்கு இடம் தரமாட்டேன்" என்றாள் உறுதியாக லக்ஷிமணனிடம் இருந்து விலகி.

"அண்ணா எப்படி ஒன்னும் பேசாம நம்மல விட்டுட்டு போனாங்க?? எனக்கு அதான் புரியல்ல" என்றாள் யோசனையுடன்.

"அண்ணாக்கு நான் சொல்றது முதல்ல புரியல தான், என் ஸ்கூல் ஃப்ரண்ட் முகிலனா நான் வர சொல்லி இருந்தேன், அவன் இப்ப தான் போலீஸ் ட்ரைனிங் முடிச்சுட்டு ஊருக்கு வந்து இருக்கான், அவன அண்ணாக்கு நல்லா தெரியும் ஒரு தடவ நானும் அண்ணாவும் மால்க்கு போனப்ப அங்க அவன் வந்தான். அப்போலெருந்து அண்ணாவும் அவனும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க, அண்ணா என்னைய உற்று பார்க்கிறப்ப அங்க இருந்த முகிலன கண்ஜாடை காட்டினேன் அண்ணாவும் அத புரிஞ்சுகிட்டு போயிட்டாங்க".

"அப்ப முகில் கிட்ட நீ எப்ப பேசுற?? என்ன சொன்ன???".

"அப்ப அவன்கிட்ட என் ப்ராப்ளம மெசேஜ் மூலமா சொல்லிட்டேன் அவன் சுதாவயும் போய் பார்த்து நடந்த எல்லாத்தையும் விசாரிச்சுட்டான். உங்கள விட்டுட்டு போறது எனக்கு பயமா இருந்தது அதான் அவனால ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டுட்டு?? உங்களையும் பார்த்துக்க சொல்லணும்னு தான் வர சொன்னேன்"
.

"அடுத்து என்ன பண்றது?? எல்லாம் கதவு மூடியே இருக்கே!!!" என்றார் கவலையாக.

"அதுதான் கவி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறேன்".

"அவன் என்னைய வாட்ச் பண்ணிக்கிட்டு இருக்கான் அது எனக்கு நல்லா தெரியுது, நான் எங்க போனாலும் அவனுக்கு தெரிஞ்சுடும்" என்றாள் யோசனையுடன்.

"ம்ம்... ஆமா" என்றனர் மூவரும்.

"அம்மா எனக்கு தலை வலிக்குது காபி வேணும்" என்றாள் சோர்வாக.

"நான் போய் கொண்டு வரேன் நீ போய் ரெஸ்ட் எடு " என்று உள்ளே சென்றார்.

"சரிப்பா நான் போய் படுக்குறேன். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு" என்று ரூமிற்கு சென்றாள்.

"அப்ப இங்க இவ்ளோ பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு இவ பாட்டுக்கு போய் படுக்குறேன்னு சொல்ற, எப்படி படுத்த தூக்கம் வரும்???" என்றாள் குழப்பமாக.

"அவ தனியா யோசிக்கணும்னு நினைக்கிற விஷா அதான் போறா".

"ஓ.. சீக்கிரமா இந்த பிரச்சனை சரியான போதும் எனக்கு வெளில போகவே பயமா இருக்கு".

"பயப்படாத டா அப்பா இருக்கேல" என்று தோளில் சாய்த்துக் கொண்டார். மாலை சுதா வீட்டுக்கு வந்தாள்.

"வாடி விவேக் அண்ணா வரலையா??".

"வாமா.. வாங்கக்கா.." என மற்றவர்களும் வரவேற்றனர்.

"ம்ம்... நான் உன்கிட்ட பேசனும் மிருணா அதான் வந்தேன்" என்று உட்கார்ந்தாள்.

"என்ன விஷயம் டி?? சொல்லு..".

"முகிலும் அமர் அண்ணாவும் பார்க்க வந்தாங்க, உன் வீட்டை அங்க அங்க இருந்து வாட்சு பண்றாங்க".

"என்னக்கா சொல்றீங்க???" என்று பதறினாள் விஷா.

"ஆமாடா நா வரத கண்டிப்பா பார்த்திருப்பாங்க என்னைய ஏற்கனவே அந்த சிவாவுக்கு தெரியும் ஜென்ஸ் யாராச்சும் வந்தா அவன் பிரச்சன பண்ண வருவான் அதான் என்னைய அனுப்புனாங்க அண்ணா".

"அண்ணா என்ன சொன்னாங்க?? டி நானே!! அவங்க ரெண்டு பேரையும் வர வேணாம்னு சொல்லாம்னு இருந்தேன் நல்லவேல வரல" என்று பெருமூச்சு விட்டாள்.

"மிருணா முதல சுதாவ பேச விடுமா" என்றார் லக்ஷிமணன்.

"இது சும்மா புக்ஸ் என்னைய யாராச்சும் தடுத்தா இத சொல்றதுக்காக எடுத்துட்டு வந்தேன், இந்த சிவா ரொம்ப பெரிய ஆளு. அவன இங்க வச்சு எதுவும் பண்ண முடியாதாம் டி முகிலுக்கு என்ன பண்றதுன்னு தெரியலன்னு சொன்னான். அண்ணா என்ன பண்ணலாம்னு நாளைக்கு சொல்றேன்னு சொன்னாங்க, உன்னைய வீட்டை விட்டு வெளியில போக வேணாம்னு சொல்ல சொன்னாங்க".

"ம்ம்... சரிடி".

"சரி நான் கிளம்புறேன்".

"இருடா காபி குடிச்சுட்டு போலாம்".

"இல்லம்மா வேணா நான் இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு போயாகணும்" என்று சென்றாள். அந்த நாள் அப்படியே முடிந்ததும். மறுநாள் விஷா, லக்ஷ்மணன் வழக்கம்போல் தன் பணி மற்றும் காலேஜிக்கு சென்று வந்தனர். எந்த பிரச்சினையும் இல்லாமல் அந்த நாளும் சென்றது. மறுநாள் வழக்கம்போல விடிந்ததும் லக்ஷ்மணன் மற்றும் விஷா கிளம்பியதும் சிறிது நேரத்தில் மிருணா கிளம்பி ஹாலுக்கு வந்தாள்.

"ஏய்!! எங்கடி போற?? " என்று பதறினார்.

"அம்மா நான் பக்கத்துல இருக்க லைப்ரரிக்கு போறேன்".

"ஏய்!! உன்னைய வெளியில அனுப்பிட்டு என்ன ஆகுமோன்னு பயப்பட சொல்லுறியா???".

"எனக்கு பாடி காட்டா தான் ஆளுங்க போட்டு இருக்கானே!! அந்த கிறுக்கேன். எனக்கு ஒன்னும் ஆகாது அரை மணி நேரத்துக்குள்ள வீட்டுல்ல இருப்பேன்" என்று சென்றாள்.

கவிதா பதறி லக்ஷ்மணனிடம் போனில் சொன்னார். அவர் உடனே மிருணாவிற்கு போன் அடித்தார். "அப்பா நானே பண்ணனும்னு நினைச்சேன் நீங்க பண்ணிட்டீங்க".

"என்னம்மா எதுக்கு வெளியில போன?? ஏன் இப்படி பண்ற??" என்றார் லேசான பயத்துடன்.

"அப்பா எனக்கு ஒன்னும் ஆகாது நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க இந்த ரெண்டு நாள்ல ஆபிஸ் போறப்ப யாராச்சும் உங்கள ஃபாலோ பண்றாங்களா???" என்றாள் வேடிக்கை பார்த்து நடந்துக் கொண்டே.

"இல்லம்மா யாரும் பண்ணல???".

"சரிப்பா யாராச்சும் பேங்க்ல உங்கள வாட்ச் பண்றாங்களா??".

"இல்லம்மா எப்போதும் போல தான் இருக்கு, ஏன்??? டா".

"வீட்டுக்கு வாங்க சொல்றேன். சீக்கிரமா வீட்டுக்கு போயிடுவேன் கவலைப் படாதீங்க " என்று வைத்தார்.

அடுத்து விஷாலினியிடம் போன் செய்து கேட்டாள் அவளும் லக்ஷ்மணன் சொன்ன அதே பதிலை சொன்னாள். நேராக லைப்ரரிக்கு சென்று புக் எடுப்பது போல் தன்னை தொடரும் மூன்று பேரை கவனித்தாள் பின் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள்.

"அப்பாடி வீட்டுக்கு வந்துட்டியா டி ஏன் டி இப்படி பண்ற?? நீ வர வரைக்கும் எவ்ளோ பயந்துந்தேன் தெரியுமா???" என்றார் கலங்கிய குரலில்.

"ஒன்னும் இல்லம்மா எனக்கு ஒன்னும் ஆகாது" என்று அணைத்து சமாதானம் செய்தாள். மாலை விஷா மற்றும் லக்ஷ்மணன் வந்ததும் அவளிடம் என்ன விஷயம் என்று கேட்டனர்.

"அப்பா அவன் என்னை மட்டும்தான் வாட்ச் பண்றான் நம்ம வீட்டை சுத்தி மொத்தம் ஏழு பேர் கண்காணிக்கிறாங்க, நான் வெளில போனப்ப என்னைய மூணு பேரு ஃபாலோ பண்ணுனாங்க, வீட்டு கிட்ட நாலு பேரு நின்னாங்க இத கண்டுபிடிக்க தான் வெளியில போனேன்" என்றாள் விளக்கமாக.

"அச்சோ!! இப்ப என்னங்க பண்றது?? வெளியில எங்க போனாலும் தெரிஞ்சு போயிடும் நம்மளால தப்பிக்கவே முடியாதா" என்றார் கலங்கிய குரலில்.

"இரு கவி யோசிக்கலாம் பயப்படாத" என்று சமாதானம் செய்தார்.

வீட்டின் காலிங் பெல் அடித்ததும்,"விஷா போய் யாருன்னு பாருடி".

"சரிமா.." என்று சென்று கதவை திறந்தாள்.

"ஹாய் மச்சினிச்சி.." என்றான் சிவா இழித்துக்கொண்டே.

"அம்மா... அப்பா.." என்று பயத்துடன் கத்திக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள்.

"என்னாச்சு??" என்று மூவரும் பதறி எழுந்து பக்கத்திலும் வந்தனர்.

"நான்தான் என்னைப் பார்த்து எதுக்கு பயந்து ஓடுற" என்றான் இழிப்புடன்.

மிருணா விஷாவை தன் முதுகுக்குப் பின்னால் நிறுத்தி," நீ எதுக்கு இங்க வந்த?? வெளியில போ.." என்றாள் கோவமாக.

"நமக்கு இன்னும் நாலு நாள்ல கல்யாணம் அத மறந்துடியா டார்லிங், வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ளைக்கு இப்படி பயப்படுறீங்களே!!" என்றான் சிரிப்புடன்.

"அது இந்த ஜென்மத்துல நடக்காது" என்றாள் கோவமாக.

"கண்டிப்பா நடக்கும் நடத்தி காட்டுவேன். உன் அப்பா சாகனும்னு நீ ஆசை படுவிய என்ன??" என்றான் நக்கலாக.

"ஏய்!! என்ன மிரட்டுரியா???" என்று கோவமாக கத்தினாள்.

"இல்ல உண்மைய தான் சொல்றேன்" என்று தன் பக்கத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்து லக்ஷிமணனின் தலையை நோக்கி குறி வைத்தான். அனைவரும் அதிர்ந்தனர்.

"வேணாம்.. வேணாம்.. எங்க அப்பாவ ஒன்னும் பண்ணிராத".

"சொல்லு என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு அதுக்கப்புறம் உங்க அப்பாவ விடலாமா இல்லையான்னு நான் யோசிக்கிறேன்".

"நான் உன்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் எங்க அப்பாவ விட்டுடு" என்றாள் அவசரமாக.

"இப்ப சொன்ன பார்த்தியா இதுதான் சரி... கல்யாணத்துக்கு தயாரா இரு தப்பிக்கலாம்னு நினைக்காத உன் வீட்ட சுத்தி ஆளுங்க இருக்காங்க, நீ என்ன பண்ணுனாலும் அத நான் கண்டுபிடிச்சுடுவேன்" என்று சத்தமாக சிரித்தான்.

"வேணாம்.. மிருணா எனக்காக இதுக்கெல்லாம் ஒத்துக்காத" என்றார் கெஞ்சலாக.

"இல்லப்பா எனக்கு என் வாழ்க்கைய விட நீங்க தான் முக்கியம்" என்றாள் கலங்கிய குரலில்.

"ம்ம்.. மாமா அவளே ஒத்துகிட்டா.. உங்க உயிர் தப்பிச்சிருச்சு நான் துப்பாக்கி எடுத்து உயிர் தப்புன முதல் ஆளு நீங்க தான்" என்று சத்தமாக சிரித்துக்கொண்டே துப்பாக்கியை பாக்கெட்டில் சொருகினான்.

நான்கு பேரும் இயலாமையுடன் நின்றனர்." டார்லிங் மாமா கிளம்புறேன்மா அத்தை.. மாமா.. வரேன் பாய் மச்சினிச்சி.." என்று கிளம்பினான்.

லக்ஷிமணன் தொப்பென்று கீழே உட்கார்ந்தார்." அப்பா... என்னங்க..." என்று மூவரும் பதறி சுற்றி உட்கார்ந்தனர்.

"இப்ப என்னம்மா பண்ண போறோம்??" என்றார் இயலாமையுடன்.

லக்ஷ்மணனின் போன் அடித்தது புது நம்பரில் இருந்து கால் வந்தது,"ஹலோ..." என்றார் கரகரத்த குரலில்.

"அப்பா முதல்ல கதவ மூடிட்டு வந்து பேசுங்க.. என் பேர சொல்லாதீங்க, போன உள்ளயே வச்சுட்டு போங்க".

"சரிப்பா.." என்று போனை கீழே வைத்து விட்டு வேகமாக சென்று கதவை மூடி வந்து போனை எடுத்தார்.

மூவரும் புரியாமல் பார்த்தனர். "சொல்லுப்பா.." என்றார் வேகமாக.

"அப்பா நானும் முகிலும் நைட்டு பத்து மணிக்கு மேல பின்பக்க கதவு வழியா வரோம்.. நீங்க வந்து கதவ திறங்க, லைட் போடாதீங்க".

"சரிப்பா..".

"நான் வச்சுறேன்பா நைட் பார்க்கலாம்" என்று வைத்தான்.

"யாரு போன்ல???" என்றனர் மூவரும்.

"அமர் தான்" என்று அவன் சொன்ன அனைத்தையும் சொன்னார்.

இரவு பதினோரு மணி போல் அமர் போன் செய்து கதவை திறக்க சொன்னான். லக்ஷிமணன் சென்று கதவை திறந்தார்.அமர் மற்றும் முகில் உள்ளே வந்தனர்.

"அண்ணா..." என்று மிருணா மற்றும் விஷா அணைத்தனர்.

அமர் சிரிப்புடன்," பயந்துட்டீங்களா டா??" என்றான் விலகி.

வீட்டில் சிறிய விளக்கு மட்டுமே ஒளிர்ந்தது அனைவரும் பெட்ரூமிற்கு சென்றனர்." அச்சோ!! ஆமாணா இன்னைக்கு அந்த கிருக்கேன் அப்பா தலைக்கு நேரா துப்பாக்கிய நீட்டிட்டான். மிருணா அவன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் தான் துப்பாக்கிய உள்ள வச்சான்" என்றாள் பயத்துடன் வேகமாக.

அமர் கதை கேட்பது போல் கேட்டுக்கொண்டு இருந்தான். "பாஸ் இந்த பொண்ணு சொல்லுற கதைய கேட்க இங்க வரல ஞாபகம் வச்சுக்கோங்க" என்றான் முகில் சலிப்புடன். விஷாலினி முறைத்தாள்.

"ஆமாடா பீ சீரியஸ் உன்கிட்ட அப்புறமா கதை கேட்குறேன் விஷா குட்டி, மிருணா எதுக்கு ஒத்துகிட்ட??" என்றான் யோசனையுடன்.

"நான் ஒன்னும் உண்மையா ஒத்துக்கல இப்போதைக்கு ஒத்துக்குறேன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் அவ்ளோ தான்".

அனைவரும் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தனர்." என்னடா சொல்ற அவன சமாளிக்கத்தானா??" என்றார் மகிழ்ச்சியாக.

"ஆமாப்பா ஒத்துக்கலனா உங்க மூணு பேரையும் உயிரோட விட மாட்டான். நீங்க மூணு பேரும் நாளைக்கு யூ.எஸ் கிளம்புறீங்க" என்று குண்டை தூக்கி போட்டாள்.

"என்னடி சொல்ற உன்னைய விட்டுட்டு நாங்க எப்படி போக முடியும்??" என்று பதறினார்.

"அம்மா அண்ணாவ‌ வச்சும் மிரட்ட முடியாது. என்னைய உங்க மூணு பேரையும் வச்சு தான் மிரட்டுவான். நீங்களும் இல்லனா அவனுக்கு வேற ஆளு இல்ல.." என்றாள் உறுதியாக.

"ஆமா மிருணா சொல்றது கரெக்ட் ஆன்ட்டி நீங்க மூணு பேரும் நாளைக்கு கிளம்புங்க. டைரக்ட்டா யூ.எஸ் இல்ல மாறி மாறி தான் போக போறீங்க" என்றான் முகில்.

"இவள விட்டுட்டு நாங்க மட்டும் எப்படி அங்க போறது?? அப்ப இவ.. இவ.. அவன் கிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்படனுமா??" என்றாள் அழுகையுடன்.

"விஷா முதல்ல அழுகுறத நிறுத்து, அமர்.. முகில்.. இந்த பிளான எப்ப போட்டீங்க???".

"அப்பா உங்கள பார்க்க வரோம்னு சொன்னதும் மிருணா வேற நம்பர்ல இருந்து மெசேஜ் பண்ணுனா.. உங்க மூணு பேரையும் யூ.எஸ் அனுப்பனும்னு அதான் டிக்கெட் போட்டோம். நீங்க டெல்லி போயிட்டு அங்க ஹோட்டல்ல ஒரு நாள் தங்கிட்டு அடுத்த நாள் யூ.எஸ் கிளம்புங்க. அதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்" என்றான்.

"மிருணாவ மட்டும் எப்படிடா தனியா விடமுடியும்??" என்றார் தவிப்புடன்.

"அப்பா அவ இங்க இருக்க மாட்டா. நாளைக்கு நைட்டு மூனு இருபதுக்கு டிரெயின் இவ என் வருங்கால மனைவி ஹரிணி வீட்டுக்கு போகப் போறா".

"என்ன??" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ஆமா மிருணா இது நாங்க போட்ட பிளான், இந்தா டிரெயின் டிக்கெட்" என்று தந்தான்.

"என்ன முகில் ஸ்ரீ ஹரிணின்னு இருக்கு??" என்றாள் அதிர்ச்சியுடன்.

"ஃப்ளைட் டிக்கெட் உன் பேர்ல இருந்தனால தான் நீ மாட்டுன, டிரெயின்ல நீ டிக்கெட் காட்டுனா மட்டும் போதும்".

"சரி அண்ணா ஆனா மூணு பேரும் ஒன்னா கிளம்பி ஏர்போர்ட் போனா தெரிஞ்சு போயிடுமே!!!" என்றாள் யோசனையுடன்.

"அதுக்கும் ஒரு பிளான் இருக்கு அங்கிள் கிளம்பி பேங்குக்கு போயிட்டு அப்பறம் கிளம்பட்டும், ஆன்ட்டி கோவிலுக்கு போயிட்டு அப்பறம் கிளம்பட்டும், விஷாலினி வழக்கம்போல காலேஜுக்கு கிளம்பட்டு காலேஜ்ல இருந்து விஷாவ யாரையாச்சும் பிக்கப் பண்ண சொல்லிடலாம்".

"டேய்!! முகில் நீயே விஷாவ அழைச்சுட்டு வந்துருடா , அம்மா நீங்க ஆட்டோல வந்துருங்க, அப்பா நீங்க நாளைக்கு ஆட்டோல பேங்க் கிளம்புங்க, யாரும் பார்க்குறதுக்கு முன்னாடி பஞ்சர் பண்ணிட்டு கிளம்புங்க".

"ம்ம்.. சரி ஆனா மிருணா நடுராத்திரி எப்படி போவா??" என்றார் தவிப்புடன்.

"அப்பா நான் வந்து.." என்று அமர் சொல்லும் போதே இடையில்,

"அண்ணா வேணா நானே தனியா மெயின் ரோட்டுக்கு போய் ஆட்டோ பிடிச்சு போயிக்கிறேன். யாராச்சும் கூட வந்தா கண்டிப்பா மாட்டிப்பேன்" என்றாள் யோசனையுடன்.

"ம்ம்.. கரெக்ட் மிருணா நீ தனியா போ..." என்றான் முகில் வேகமாக.

"நான் இப்ப யூ.எஸ் போயிட்டா என் படிப்பு " என்றாள் முழித்துக்கொண்டே.

"ரொம்ப சின்சியர் தாமா நீ.. இங்க உயிரக் கையில பிடிச்சுகிட்டு எப்படி ஓடுறதுன்னு பார்க்காம படிப்பு பத்தி கவலைப்படுற" என்றான் கிண்டலாக.

"ஹலோ.. நீங்க என் அக்கா ஃப்ரெண்டுகுறனாலா சும்மா விடுறேன் " என்றாள் மிரட்டலாக.

"ஐயோ!! அம்மா.. பயமா இருக்கே!! ஹா ஹா... புள்ளபூச்சி எல்லாம் மிரட்டுது" என்றான் சிரிப்புடன். மற்றவர்கள் இருந்த மனநிலை மாறி சிரித்தனர்.

"ஏய்!! யாரு புள்ள பூச்சு நான் எவ்ளோ தைரியமானவன்னு தெரியுமா உனக்கு???" என்று சண்டைக்கு கிளம்பினாள்.

"தெரியுமே ஏர்போர்ட்டுல்ல உன் அம்மா முதுகுக்கு பின்னாடி ஒளிந்து பார்க்குறப்பயே உன் தைரியம் தெரிஞ்சு போச்சு" என்றான் கிண்டலாக . விஷாலினி முழித்தாள். அனைவரும் சிரித்தனர்.

"விஷா உன் காலேஜ் பிரின்சிபால் கிட்ட அப்பா பேசிட்டாங்க உன்கிட்ட நாளைக்கு டிசி தருவாங்க வாங்கிக்கோ!! யூ.எஸ்ல காலேஜ் ஜாயின் பண்ணிக்கோ, நான் ஏர்போர்ட்ல மாறுவேஷத்துல வருவேன் நானே வந்து உங்க கிட்ட பேசுறேன் என்னைய தேடுறேன்னு மாட்டிக்காதீங்க சரியா".

"ம்ம்... சரி " என்றனர் மூவரும்.

"விஷா நாளைக்கு உங்க மூணு பேரோட பாஸ்போர்ட்டையும் பேக்ல எடுத்து வச்சுக்கோ!! பதினொரு மணிக்கு ஃப்ளைட். டிக்கெட்ட நாங்க ஏர்போர்ட்ல கொண்டுவந்து தரோம்".

"சரி அண்ணா..".

"அப்ப நாங்க கிளம்பறோம் பாப்பா.. கேர்புள்ல இரு இதுல சக்கரவர்த்தி அங்கிள் நம்பர் இருக்கு ,ஆல்ரெடி அப்பா எல்லாம் பேசிடாங்க நீ இறங்குனதும் உன்னைய பிக்கப் பண்ண கார் வந்துடும் பயப்படாத டா" என்று சீட்டை தந்துவிட்டு அணைத்து விடுவித்தான்.

"அண்ணா நீ அப்பப்ப வருவல்ல" என்றாள் எதிர்பார்ப்புடன்.

"இங்க இருக்க நிலைமைய பார்த்துட்டு நான் சொல்றேன் டா".

"மிருணா கவனமாயிரு நாளைக்கு நைட்டு இரண்டு மணி போல அந்த தடியனுங்க தூங்கிட்டாங்களான்னு செக் பண்ணிட்டு வீடு முழுக்க லாக் போட்டுட்டு பின் பக்க வழியா கிளம்பு சரியா".

"சரி முகில் நான் என் சிம்ம இங்கேயே உடைச்சுப் போட்டுடுவேன், நோக்கியா போன் தான் வச்சிருப்பேன் அதுல தான் என்னைய கண்டுபிடிக்க முடியாது".

"அச்சோ!! தர மறந்துட்டேன் பாரு இந்தா பாப்பா" என்று தந்தான்.

"என்ன இது" என்று வாங்கிப் பார்த்தாள்.

"நோக்கியா போன் நீ இதுக்காக வாங்கப் போனா மாட்டிப்ப அதான் முன்னாடியே வாங்கித்டோம்" என்றான் முகில் சிரிப்புடன்.

"தேங்க்ஸ் ஆல்ரெடி உடைஞ்ச போன் இருக்கு, அது ஓர்க் ஆகும்".

"அது ஒழுங்கா வொர்க் ஆகலனா அதுக்கு தான் பாப்பா இத யூஸ் பண்ணிக்கோ, இதுல அங்கிளோட நம்பர் உனக்கு தேவையான எல்லாம் நம்பர் சேவ் பண்ணி வச்சிருக்கேன், ட்ரெயின் கிளம்புனதும் மெசேஜ் பண்ணு".

"சரி.." என்றாள். அமர் மற்றும் முகில் கிளம்பி சென்றனர்.

இவர்கள் போட்ட பிளான் நடக்குமா??? அல்லது அனைவரும் சிவாவிடம் மாட்டிக் கொள்வார்களா???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.................

? கைதியின் சிறை தொடரும்?................
???????
 
வேற ஒரு ஸ்டோரியா?
ஐ ஜாலி ஜாலி
அந்த புது நாவல் பெயர் என்னப்பா?
சீக்கிரமா புதிய நாவல் கொடுங்க, ரம்யா டியர்
New novel la illa bby na sahaptham and Wattpad la ezhuduren.. anga upt podanum adhan .. nega kettanala seekarama nxt novel Inga poduren dear..
 
Top