Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கைதி -7

Ramya Anamika

Well-known member
Member
ரம்யா சிஸ், அருமை நல்ல காமெடி......:D, நிறைய பேர் இப்போது நமகென்ன என்றுதானே இருக்காங்க, நல்லா சஸ்பென்ஸ் வைக்கறீங்க சிஸ், படிப்பதற்கு சுவாராஸ்யமாக இருக்கிறது........(y)
Tq u sis😍😍😍😍
 
Aarthi Murugesan

New member
Member
A
💖 கைதி -7💖
சிவா கோபமாக முறைத்துக்கொண்டே, "யாருடா நீ? என்னையே நக்கல் பண்றியா??? உன்னைய சும்மா விடமாட்டேன்" என்று கோவமாக கத்தினான்.

"சிவா பொறுங்க. இவர் சிஐடி ராகவன். மிருணாவ கண்டுபிடிக்குற கேஸ்க்காக நான் தான் வரச் சொன்னேன்" என்றார் கமிஷனர் வேகமாக.

"அதுக்காக இவன் என்னையே நக்கல் பண்ணுவானா???" என்றான் கோபமாக முறைத்துக் கொண்டே.

"சிவா சார், அந்த பொண்ணு உங்ககிட்ட இருந்தே தப்பிச்சு போயிருக்கா. இதுல நாங்களாம் எம்மாத்திரம்? சொல்லுங்க. நீங்க ஸ்கெட்ச் போட்டா தூக்காம இருக்க மாட்டீங்கன்னு கமிஷனர் சார் உங்கள பெருமையா சொன்னாரு" என்றான் கமிஷனரை கைகாட்டி.

"நான் ஒன்னும் கொலை பண்ண அவளுக்கு ஸ்கெட்ச் போடல, கல்யாணம் பண்ண தான் போட்டேன். என்ன பண்றது கொஞ்சம் சிரிச்சு பேசினதும் மயங்கிட்டேன்" என்றான் யோசனையுடன் அவனைப் பார்த்து.

"ம்ம்.. அந்த பொண்ணு எப்ப காணாம போனாங்க? அவங்க போட்டோ இதெல்லாம் குடுங்க கமிஷனர் சார்".

"எல்லாம் இந்த பைல்ல இருக்கு ராகவ்" என்று கொடுத்தார்.

"ஓகே சார்!! நான் பார்க்குறேன்" என்று வாங்கிக் கொண்டான்.

"எப்பா தம்பி மிருணாவ நீயாச்சும் கண்டுபிடிப்பியா???" என்றான் சந்தேகமாக.

"நான் எப்படி சிவா சார் உறுதியா சொல்றது?? என்னால முடிஞ்ச வரைக்கும் விசாரிக்கிறேன், கண்டுபிடிக்கறேன், நீங்களும் தேடுங்க".

"நான் எல்லா ஊருக்கும் ஆளு அனுப்பி இருக்கேன், தேடிட்டு தான் இருக்காங்க" என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சிவாவின் போன் அடித்தது.

"சரி நான் கிளம்புறேன், சீக்கிரம் கண்டுபிடிங்க" என்று வேகமாக சொல்லிவிட்டு சென்றான்.

"ராகவ் கொஞ்சம் சீக்கிரமா சர்ச் பண்ணுங்க, எம்.எல்.ஏ, சி.எம் கிட்ட இருந்துலாம் பிரசர் பண்ணுறாங்க, என்னால முடியல, ஏதாச்சும் கலவரம் பண்ணிடுவாங்களோன்னு பயமா இருக்கு" என்றார் பயத்துடன்.

"சார் உங்களுக்கும் ஒரு பொண்ணு இருந்தா இப்படி தான் பண்ணுவீங்களா??? அந்த பொண்ணோட வாழ்க்கைய பத்தி யோசிக்க மாட்டிங்களா??" என்றான் கோவமா.

"ராகவ் மெதுவா பேசுங்க. இங்க சுவருக்கு கூட காது இருக்கு. சிவாவை எதிர்த்தா நாம இங்க வண்டி ஓட்ட முடியாது, தேவையில்லாம பகச்சுக்காதீங்க".

"அதானே யார் வாழ்க்கை எப்படி போனா நமக்கு என்ன???? அப்படி தானே???" என்றான் நக்கலாக.

"ராகவ் அந்த பொண்ணு ஒன்னும் எனக்கு வேண்டப்பட்ட பொண்ணு இல்லையே!!! நான் அந்த பொண்ண நினைச்சு கவலைப்பட்டா, என் குடும்பம் தான் போயிடும், சரி விடுங்க இத பத்தி பேசுனா நமக்குள்ள வாக்குவாதம் தான் வரும், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, அந்த பொண்ண சீக்கிரம் கண்டுபிடிங்க" என்று கெஞ்சலுடன் முடித்தார்.

"உங்களையெல்லாம் திருத்தவே முடியாது சார், நான் முயற்சி பண்றேன், வரேன்" என்று சென்றான்.

ஊட்டி:

மிருணா, ஸ்ரீ, மீனாட்சி, வாணி நான்கு பேரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். "டேய்!! மிருணா நீ எல்லாருக்கும் நிக் நேம் வைப்பியாமே!! ஸ்ரீ சொன்னா எங்களுக்கு என்ன வச்சிருக்க??" என்றார் கிண்டலாக.

"அச்சோ!! வாணித்த அப்படி எல்லாம் இல்ல, ஸ்ரீ பொய் சொல்றா" என்றாள் வேகமாக.

"ம்ம்... நான் பொய் சொல்றேனா?? நான் தான் நச்சுப்பாம்பு, பண மரம், தென்ன மரம் இப்படி எல்லாம் பேர் வெச்சேன், அப்படித்தானே!!!" என்றாள் கிண்டலாக.

"அது..." என்று இழுத்தாள்.

"மிருணா உன் வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் ஸ்ரீ சொன்னாடா, எவ்ளோ கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்திருக்க" என்றார் வருத்தமாக அவள் தலை முடியை கோதி.

"மீனாத்த இதுக்கு எதுக்கு வருத்தப்படுறீங்க, அதான் நான் வந்துட்டேனே!!!" என்றாள் லேசான சிரிப்புடன்.

"இந்த நச்சுப்பாம்பு எப்படி சும்மா அமைதியா இருப்பான். இந்நேரம் எல்லா இடத்துலயும் உன்னைய தேடிட்டு இருப்பான்ல டா?" என்றார் வாணி.

"ஆமாத்த" என்றாள் யோசனையுடன்.

"அதனாலதான் அமர் நமக்கு போன் கூட பண்ணல, அவன வாட்ச் பண்ணிக்கிட்டே இருக்காங்களாம்" என்றாள் யோசனையுடன்.

"ஸ்ரீ!! அப்ப அமர் உன்கிட்ட பேசவே இல்லையாடா?" என்றார் மீனாட்சி.

"ஆமாம்மா, அந்த நச்சுப்பாம்பு அவன் போன் கால் எல்லாத்தையும் வாட்ச் பண்றான்னு அண்ணா சொன்னான்".

"கொஞ்ச நாளாச்சும் உன் தொல்லையில இருந்து ஜாலியா அவன் இருக்கட்டும்" என்றார் கிண்டலாக.

"வாணி மா" என்று முறைத்தாள்.

"ஸ்ரீ பேபி வாணித்த உண்மைய தானே சொன்னாங்க" என்றாள் கிண்டலாக.

"மிருணு நீயுமா?? ம்ம்.. அதே மாதிரி நீ ஒரு உண்மையை ஒத்துக்கோ. நீ ஒத்துகிட்டா நானும் ஒத்துக்குறேன், அந்த கூர்க்கானால தான் நீ தப்பிச்சு வந்தன்னு ஒத்துக்கோ" என்றாள் கிண்டலாக.

"ச்ச.. அந்த கூர்க்காவ எதுக்கு நீ நியாபகப்படுத்துற, சரியான கேள்விக்கு பொறந்தவன் அந்த பனைமரம் " என்றாள் கோபமாக.

"கேள்விக்கு பிறந்தவனா???" என்று மூன்று பேரும் சிரித்தனர்.

"ஆமா... ஆமா.. இம்சைங்க ஜீப்ல வரப்ப எவ்ளோ கேள்வி கேட்டானுங்க தெரியுமா?? தென்னமரம், போலீஸ் டிரஸ்ல இருந்தவன் கூட சும்மா இருக்கான், இந்த பனமரம் எவ்ளோ கேள்வி கேட்டான், ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விடல குரங்குங்க" என்றாள் கோபமாக. மூவரும் சத்தமாக சிரித்தனர்.

"அவ்ளோ பெரிய அந்த நச்சுப்பாம்பு கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். இந்த மரங்க என்ன தூசுன்னு நினைச்சு, வேகவேகமா தப்பிச்சு போய் டிரெயின்ல உட்கார்ந்தா, அதுங்க ரெண்டும் கூலா என் முன்னாடி வந்து நிக்கிதுங்க, எனக்கு செம்ம ஆத்திரம் கொஞ்சம் பயமாகவும் இருந்தது".

"ஆமா உன் பழைய நம்பர் குடுத்துட்டு வந்தியே, இன்னமுமா அவங்க உன்னைய கண்டுபிடிக்காம இருப்பானுங்க? அதுவும் நீ சொல்ற நச்சுப்பாம்பு இன்னேரம் இவங்கள விசாரிக்காமயா இருப்பான்" என்றாள் யோசனையுடன்.

"ஆமா ஸ்ரீ!! எனக்கும் அதே யோசனை தான், அந்த மரங்க நச்சுப்பாம்பு கிட்ட, நான் ஊட்டி ட்ரெயின்ல ஏறுனது சொன்னா, என் நிலமை அவ்ளோ தான்" என்றாள் லேசான பயத்துடன்.

"டேய்!!! நீ இப்ப இருக்கிறது சக்கரவர்த்தி ஓட கோட்டை. இங்க இருந்து யாராலும் உன்னைய தூக்க முடியாது" என்று உள்ளே வந்தார் சக்கரவர்த்தி. அவருடன் சோமுவும் வந்தார்.

"ஆமா மிருணா உன்னைய நெருங்கனும்னா, எங்களை தாண்டி தான் வரணும், அதுவும் எங்க பசங்க இருக்காங்க. அவங்க அவ்ளோ சாதாரணமா யாரையும் உன் கிட்ட நெருங்க விட மாட்டாங்க, தைரியமாய் இரு" என்றார் சோமு.

"ம்ம் ... சரி மாமா".

"ஏங்க நீங்க எப்ப வந்தீங்க???".

"இப்ப தான் வந்தோம் மீனா. ரெப்ரஷ் பண்ணிட்டு வரேன், நீ சாப்பாடு எடுத்து வை"
என்று உள்ளே சென்றார்.

"அண்ணி பசங்க கால் பண்ணுனாங்க".

"என்னங்க என்ன சொன்னாங்க??? எங்களுக்கு கால் பண்ணவே இல்ல, எதுக்கு உங்களுக்கு கால் பண்ணுனாங்க???"
என்றார் வேகமாக.

"வாணி பொறும பொறும. உனக்கும் அண்ணிக்கும் லைன் போகலன்னு சொன்னாங்க".

"ஓ... என் போன்லாம் பார்த்தா ஃபோனா தெரியலையா சோமுப்பா" என்றாள் நக்கலாக.

"நீ தானே ஸ்ரீ புது ஃப்ரெண்ட் வந்துட்டா, உன்கூட எனக்கு என்ன பேச்சுன்னு சொன்னியாமே!!!" என்றார் கிண்டலாக.

"ம்ம்... ஆமா அவங்க மட்டும் ஒழுங்கா?? சென்னை போய் ரெண்டு மாசம் ஆச்சு. வீடுன்னு ஒன்னு இருக்கு வரணும்னு தோணுதா?? இதுல என்னைய குத்தம் சொல்ல வந்துட்டானுங்களா??" என்றாள் கோவமாக.

"ஸ்ரீ அவனுங்க உன் அண்ணனுங்க, ஞாபகத்துல வச்சுக்க" என்றார் மீனாட்சி முறைப்புடன்.

"உங்க புள்ளைங்களுக்கு என் ஞாபகம் இருக்காமா? என்னைய சொல்ல வந்துட்டீங்க" என்றாள் கோபமாக.

"பாப்பா.." என்றனர் மூவரும் கண்டிப்பான குரலில். மிருணா நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"ஸ்ரீ அவங்க வேலை அப்படி டா" என்றார் சோமு சமாதானமாக. அம்மாக்கள் இருவரும் முறைத்துக் கொண்டே இருந்தனர்.

"ம்ம்... புரியுது சோமுப்பா. அதுக்காக ஒரு வீடியோ கால் கூடவா பண்ண மாட்டாங்க, இந்த ஒரு மாசமா ஒழுங்கா போன் பண்ணுனாங்களா சொல்லுங்க" என்றாள் கோபமாக.

"சரி விடுடி, காச்சுப்பூச்சுன்னு கத்தாத, உன் ஃப்ரெண்டுக்கு பர்த்டேன்னு சொன்னியே? அவள பார்க்க போறியா???" என்று பேச்சை மாற்றினார்.

"இல்ல வாணிமா மிருணா தனியா இருப்பா. நான் போகல".

"ஸ்ரீ நோ ப்ராப்ளம், நீ போயிட்டு வா".

"ஏய்!!! பேசாம நீயும் வரியா? ஜாலியா இருக்கும்" என்றாள் ஆர்வமாக.

"எனக்கும் வெளியில போகணும்னு ஆசை தான், வீட்டிலேயே சிறைக் கைதி மாதிரி இருக்கு" என்று இழுத்தாள்.

"காவலுக்கு வேணும்னா நாலு அஞ்சு பேர அனுப்புறேன் டா, போய்ட்டு வா" என்றார் மிருணாவிடம்.

"மாமா உண்மையாவா சொல்றிங்க?" என்றாள் சந்தோஷமாக.

"ஆமாடா" என்றார் சிரிப்புடன்.

"ஹே!! ஜாலி. மிருணா நான் உனக்கு நிறைய இடம் சுத்திக் காட்டுகிறேன்" என்றாள் சந்தோஷமாக.

"தேங்க்ஸ் மாமா, ஜாலியா போலாம் பேபி" என்றாள் சந்தோஷமாக.

அப்போது வீட்டின் போன் அடித்தது. மீனா சென்று எடுத்தார். "கண்ணா!! ரெண்டுபேரும் எப்படிடா இருக்கீங்க???" என்றார் அன்பாக.

..................

"நாங்க நல்லா இருக்கோம், நீங்க ரெண்டு பேரும் எப்படா வரீங்க??"
என்றார் எக்கமாக.

..................

"வரீங்களா?? வாங்கடா வாங்க"
என்றார் சந்தோஷமாக.

..................

"சரிடா!! உங்களுக்கு கண்டிப்பா பிரியாணி செஞ்சு தரோம்"
என்றார் சிரிப்புடன்.

"அக்கா... என் கிட்ட குடுங்க" என்று ஆசையுடன் வாங்கி பேசினார்.அவர் பேசியதும், ஸ்ரீ போனை வாங்கினாள்.

"டேய்!! எருமை எப்ப வரீங்க???".

...................

"நாளான்றிக்கு காலைல வரீங்களா? சீக்கிரம் வாங்க நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் அண்ணா"
என்றாள் சோர்வாக.

....................

"ம்ம் சரி.. எனக்கு நிறைய வாங்கிட்டு வாங்க, நானும் பேபியும் என் ஃப்ரெண்ட் பர்த்டே பார்ட்டிக்கு போறோமே!! ஜாலியா இருக்க போகுது"
என்றாள் சந்தோஷமாக. அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ ஸ்ரீயின் முகம் மாறியது. "இல்லணா!! சோமுப்பா காவலுக்கு ஆள் அனுப்புறேன் சொன்னாங்க".

...................

"இரு தரேன்"
என்று சோமுவிடம் கொடுத்தாள்.

"சொல்லுடா கண்ணா" என்றார். அவன் பேசிய அனைத்தையும் கேட்டதும். "சரி சரி நீங்க ரெண்டு பேரும் வாங்க வச்சுடுறேன்" என்று வைத்தார்.

"என்னாச்சு தம்பி??".

"அண்ணி மிருணா எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லிட்டான்"
என்றார் மிருணாவை பார்த்தபடி.

'இவனுங்க யாரு?? என்னைய வெளிய போகக் கூடாதுன்னு சொல்ல, என்ன திமிரு' என்று மனதில் நினைத்துக்கொண்டு வந்த கோபத்தை அடக்கினாள்.

"மிருணா பசங்க வந்துருவாங்க உன்னைய அப்ப வெளில அழைச்சிட்டு போவாங்க டா" என்றார் வாணி சமாதானமாக.

"சீக்கிரமா இந்த அம்னீஷியா சரியான பரவால்ல, மிருணா உன் பாதுகாப்புக்காக தான் சொல்றாங்க, நீ கோபப்படாத டா, உன்னைய சுற்றி வளையம் இருக்கு. அத விட்டு வெளில வந்தா, உனக்கு தான் ஆபத்து" என்றார் மீனாட்சி.

"சரிங்க அத்த" என்றாள் அரைமனதுடன்.

"தம்பி நீங்க போயி ரெபிரஷ் ஆகிட்டு, சாப்பிட வாங்க. வா வாணி!!! நாம போகலாம்" என்று அழைத்து சென்றார். சோமுவும் உள்ளே போனார்.

"ஸ்ரீ யாருக்கு அம்னீஷியா?? அத்த ஏதோ சொன்னாங்களே?? நான் சரியா கவனிக்கல".

'அச்சோ!! இந்த அம்மா இப்படியா உலரும், சரி சமாளிப்போம்'
என்று நினைத்துக்கொண்டே, "அப்படியெல்லாம் சொல்லையே பேபி, நாம இன்னொரு நாள் வெளில போலாம் சரியா, நான் என் ஃப்ரெண்ட் கிட்ட வரலைன்னு சொல்லிடுறேன்" என்று போனை எடுத்தாள்.

"இல்ல ஸ்ரீ எனக்காக தான் நீ இந்த ஒரு மாசமா வெளியே போகாமல் இருக்க, எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல, நீ போயிட்டு வா. நான் அத்த கூட இருக்கேன்".

"ஆர் யூ சூயர்??".

"ம்ம்... ஆமா நீ போயிட்டு வா"
என்றாள் சிரிப்புடன்.

"ஓகே வா!! சாப்பிட்டு ஈவினிங் நான் என்ன ட்ரெஸ் போடணும்னு எடுத்து குடு, அது தான் போடுவேன்" என்று அழைத்து சென்றாள்.

மிருணாவின் மனம் அவள் குடும்பத்தினரை தேடியது. இவர்கள் முன் வருத்தத்தை காட்டாமல் அமைதியாக இருந்தாள். அந்த நாள் அப்படியே சென்றது. மறுநாள் இரண்டு அம்மாக்களும் தன் மகன்களின் அறையை சுத்தம் செய்தனர்.

ஸ்ரீயும் மிருணாவும் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தனர். "ஸ்ரீ உன் அண்ணாங்க எப்படி?? இத்தனநாளா எனக்கு ஒன்னும் தெரியல இப்ப அவங்க வரவும், எனக்கு ஒரு மாதிரி இருக்கு".

"ஏய்!! என் அண்ணாங்க ரெண்டு பேருமே ஜாலி கேரக்டர் தான், உன்னைய அவங்க வெளியாளா நினைக்கவே மாட்டாங்க, நீ இந்த மாதிரி பீல் பண்ணவே தேவை இல்லடா"
.

"இருந்தாலும், ஆமா ஹால்ல மாமா, அத்தை, பாட்டி, தாத்தா போட்டோ எல்லாம் இருக்கு, உன் போட்டோ டிவி மேல இருக்கு ஆனா உன் அண்ணாங்க போட்டோவ நான் வந்ததுல இருந்து பார்க்கவே இல்லையே???".

"அதுவா ரெண்டு நாதாரிக்கும் கண்ணு பட்டுடுமாம்.. அவங்க போட்டோ எல்லாத்தையும் எடுத்துட்டு போய் ரூம்ல வைக்க சொல்லிட்டானுங்க பக்கிங்க".

"அப்படியா??" என்றாள் சந்தேகமாக.

"என்கிட்ட அப்படி தான் சொன்னாங்க, அப்புறம் அம்மா கிட்ட கேட்டேன், அப்பதான் டிவி கிட்ட இருந்த போட்டோ எல்லாம் விரிசல் விட்டுருச்சு எடுத்து உள்ள வைங்க, வரப்ப வேற கொண்டு வரேன்னு சொன்னாங்க".

"ஓ.. அப்படியா??".

"ரூம்ல நாங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோ டேபிள் மேல இருக்கு அத பார்க்கலையா நீ??"
.

"இல்ல".

ஸ்ரீயின் போன் அடித்தது. "என் ஃப்ரெண்ட் கால் பண்றா. அவ கிட்ட பேசிட்டு வரேன்" என்று எழுந்து சென்றாள். மிருணா தன் அறைக்கு சென்று ஸ்ரீயின் லேப்டாப்பில் தன் குடும்பத்தினரை ஸ்கைப்பில் அழைத்து பேச ஆரம்பித்தாள். அந்த நாள் அப்படியே சென்றது. மறு நாள் மிருணா லேட்டாக கீழ வந்தாள்.

மீனாட்சி, வாணி, ஸ்ரீ மூன்றுபேரும் தடபுடலாக கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். "ஓய்!!! பேபி எழுந்துட்டியா???" என்றாள் ஸ்ரீ.

"சாரி!! நைட் லேட்டா தான் தூங்குனேன்" என்றாள் தயங்கியபடி.

"இதுல என்ன இருக்கு டா, காபி இந்தா" என்று வாணி கொடுத்தார்.

"என்ன வேலை எல்லாம் தடபுடலா நடக்குது போல" என்றாள் கிண்டலாக குடித்துக்கொண்டே.

"ஆமாமாம்!! அம்மாவோட தவப்புதல்வர்கள் வந்துட்டாங்களா.. அதான்" என்றாள் கிண்டலாக.

"ஸ்ரீ உன் அண்ணாங்க வந்துட்டாங்களா???" என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

"வந்ததும் சாப்பிட்டு தூங்க போயிட்டாங்க டா, அவங்களுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்கும், இன்னிக்கு ஸ்பெஷலா நிறைய டிஷ் பண்றேன், உனக்கு என்ன வேணும் டா???" என்றார் மீனாட்சி.

"எனக்கு எதுவும் வேணாம், நீங்க உங்க பையனுக்கே பண்ணி குடுங்க" என்றாள் சிரிப்புடன்.

"அதெல்லாம் நீ சொல்லவே வேணாம் பேபி, இவங்க பசங்க கீழே வந்ததும், நம்மள கண்டுக்கவே மாட்டாங்க பாரு" என்றாள் ஸ்ரீ கிண்டலாக.

இரு அம்மாக்களும் செல்லமாக ஸ்ரீயின் முதுகில் தட்டினார். "உனக்கு கிச்சன்ல என்ன வேலை பேபி???".

"பேபி கிண்டல் பண்ற மாதிரி கேள்வி கேட்காத போதும், உன் ரூமுக்கு வந்து பார்த்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த, சரி நமக்கு மதியம் சாப்பாடு வேணும்ல, அதான் இந்த பூண்ட எப்படி உரிக்கிறதுன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்"
என்றாள் பொய்யான சோகத்துடன் .

"நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்புங்க, நீங்க இங்க நின்னுட்டு பேசிட்டு இருந்தா, வேலை ஆகாது, பசங்க கீழே வந்ததும் பசிக்குதுன்னு சொல்லுவாங்க".

"வாணிமா... வாணித்த..." என்றனர் பொய்யான கோபத்துடன்.

"ஸ்ரீ கெட் அவுட், மிருணா நீ சாப்பிடு டா".

"இல்ல மீனாத்த.. எனக்கு பசிக்கல கொஞ்ச நேரம் ஆகட்டும்".

"சரிடா".

ஸ்ரீயும் மிருணாவும் ஹாலில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். "பேபி நான் போய் குளிச்சிட்டு வரேன், அம்மா வேற கால் பண்ண சொன்னாங்க".

"ம்ம்... அத்த காலைல எனக்கு கால் பண்ணாங்க. நான் சொல்ல மறந்துட்டேன், இந்தா போன் எடுத்துட்டு போய் பேசு"
என்று தந்தாள். மிருணா வாங்கிக்கொண்டு மேலே சென்றாள்.

சிறிது நேரம் பேசிவிட்டு, குளித்து தலையை நன்றாகத் துவட்டி, இருபக்க முடியை எடுத்து கிளிப் போட்டு, சிறிய போட்டு வைத்துக் கொண்டு கீழே வந்தாள். டைனிங் டேபிளில் சிரித்து பேசும் சத்தம் கேட்டது.

'ஸ்ரீ யோட அண்ணாங்க வந்துட்டாங்க போல, இவங்ககிட்ட ஹெல்ப் கேட்டு, எப்படியாச்சும் யூ.எஸ் போயிடானும், இல்ல அம்மா அப்பாவ வர வைக்கணும்' என்று நினைத்துக்கொண்டே டைனிங் ஹாலுக்கு வந்தாள். அங்கு இருந்த இருவரையும் பார்த்து அதிர்ந்து அப்படியே நின்றாள்.

"ஹே!! மிருணா வந்துட்டியா டா?? வா வந்து சாப்பிடு. நீ இன்னும் காலையிலிருந்து சாப்பிடல" என்றார் மீனாட்சி.

இருவரும் அவளை பார்த்து, " ஹாய்..." என்றனர் சிரிப்புடன்.

"நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க??? ஃபாலோ பண்ணி வந்தீங்களா???" என்றாள் கோபமாக. பெண்கள் மூவரும் குழப்பமாக பார்த்தனர்.

"உன்ன ஃபாலோ பண்ணி வந்து இருந்தா, நாங்க வர இவ்ளோ நாள் ஆயிருக்குமா?? பாரு டா விக்கி இந்த பொண்ண, சின்ன புள்ள தனமா இருக்கு" என்றான் ராகவ் கிண்டலாக.

"அப்ப எதுக்கு வந்தீங்க???" என்றாள் கோபமாக.

"உன் பேரு மிருணாவா??" என்றான் விக்ரம், கூர்மையான பார்வையுடன்.

"அது.." என்றாள் தயங்கியபடி.

"நீ பாட்டுக்கு யூஸ் பண்ணத நம்பரை கொடுத்துட்டு வர, எங்களால உன்ன கண்டுபிடிக்கமுடியாது நினைச்சியா??? அவ்ளோ சீக்கிரம் உன்ன விடுவோமா???" என்றான் புருவம் உயர்த்தி.

"அப்படி சொல்லுடா விக்கி, எப்படி கண்டுபிடிச்சோம்னு பார்த்தியா???" என்று காலரை தூக்கி விட்டான் ராகவ்.

"எப்பா ரொம்ப பெரிய ஆளு தான்" என்று நக்கலாக சொல்லிவிட்டு ஸ்ரீயிடம் குனிந்து, "நான் சொன்ன மரம் இவங்க ரெண்டு பேரும் தான்" என்றாள் மெதுவாக.

ஸ்ரீ அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தாள். "இங்க பாருங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்திருக்கீங்கன்னு இன்னும் சொல்லல" என்று கோவமாக கேட்டுக் கொண்டே, நகர்ந்து மீனா மற்றும் வாணியின் பக்கத்தில் சென்றாள்.

"ம்ம்.. இங்க பிரியாணி செம்ம டேஸ்ட்டா கிடைக்கும்னு கேள்விப்பட்டோம், அதுக்காக தான் வந்திருக்கோம், என்ன டா ராகி???" என்றான் கிண்டலாக மிருணாவை பார்த்துக் கொண்டே.

"ஆமா டா விக்கி".

"அத்த நான் சொல்லி இருக்கேன்ல, ஜொல்லு பார்ட்டி, கூர்கா இவங்க தான் "
என்று மெதுவாக சொன்னாள். இருவரும் முழித்துக்கொண்டு பார்த்தனர். "இது யார் வீடு தெரியுமா??? என் மாமா வீடு, என் மாமாக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்கள கூப்பிட்டா நீங்க ரெண்டு பேரும் காலி, தேவை இல்லாம என்னைய பாலோ பண்ணி வந்து, ஹாஸ்பிடல்ல சேர்ந்துறாதீங்க" என்றாள் கோபமாக.

'இவனுங்க கிட்டயே போய் இவனுங்கள பத்தி சொல்லுறாளே!!!' என்று ஸ்ரீ நினைத்துக்கொண்டே முழித்தாள்.

"ஓ.. பிரியாணி சாப்பிட வந்த இடத்துல இப்படி ஒரு ஃபைட்ட நான் எதிர்பார்க்கல, பரவால்ல பிரியாணிக்காக ஃபைட் பண்ணலாம்" என்றான் ராகவ் கிண்டலாக.

"சென்னையில்ல கிடைக்காத பிரியாணி, இங்க கிடைக்க போகுதா?? யார் கிட்ட உங்க டகால்டி வேலைய காட்டுறீங்க" என்றாள் கோபமாக.

"கிடைக்காதுதான்" என்றனர் இருவரும்.

"இத வேற யார்கிட்டயாச்சும் போய் சொல்லுங்க, அங்க கிடைக்காதது இங்க வந்து கிடைக்குமா?? இத வேற நாங்க நம்பனுமா??" என்றாள் முறைப்புடன்.

"ஆமா எங்க பிரியாணி சாப்பிட்டாலும், அம்மா கையால சாப்பிடற மாதிரி வருமா???" என்று புருவம் உயர்த்தினான், விக்ரம் என அழைக்கப்படும் ஹரி விக்ரமன்( நம் கதையின் நாயகன்).

"அதுக்கு உன் அம்மா கிட்ட போயி பண்ணி தர சொல்லி சாப்பிட வேண்டியதானே!! இங்க எதுக்கு வந்த???" என்றாள் கோபமாக.

"அத தான் பண்றோம்" என்றான் கிண்டலாக ராகவ் என அழைக்கப்படும் ஹரி ராகவன்.

"என்னது???" என்று அதிர்ந்து மீனாட்சி, வாணி, ஸ்ரீ மூவரையும் பார்த்தாள். மூவரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளைப் பார்த்தனர். "அம்மா.." என்றாள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியுடன் மீனாட்சி மற்றும் வாணியை கைகாட்டி.

"ம்ம் ஆமா அம்மா" என்றனர் இருவரும் சிரிப்புடன் தலை ஆட்டி.

"அச்சோ!!" என்று கண்களையும் மூடிக் கொண்டு, இரு கைகளையும் தலையில் வைத்து அப்படியே உட்கார்ந்தாள்.
ஐந்து பேரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தனர். லேசான வெட்கச்சிரிப்புடன் ஐந்து பேரையும் பார்த்து முழித்தாள்.

"மிருணா இவங்கதான் ஸ்ரீ யோட அண்ணா டா. பெரியவன் விக்ரம் சின்னவன் ராகவ்" என்றார் வாணி சிரிப்புடன்.

"ம்ம்.. சாரி எனக்கு தெரியாது" என்றால் முழித்துக் கொண்டே.

"இட்ஸ் ஓகே" என்றனர் இருவரும் சிரிப்புடன்.

"அண்ணா நீங்க ரெண்டு பேரும் தான் இவள ட்ரெயின் ஏத்தி விட்டாதா??" என்றாள் வேகமாக.

"ஆமா" என்றனர் இருவரும்.

ஸ்ரீ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள். மிருணா வேகமாக அவள் வாயை பொத்தினாள். "என்னாச்சு ஸ்ரீ " என்றான் ராகவ்.

"டேய்!! ராகி இவ உங்க ரெண்டு பேத்தையும் என்ன சொன்னா தெரியுமா???" என்றாள் மிருணாவின் கையை எடுத்துவிட்டு.

"என்ன சொன்னா???" என்றனர் இருவரும்.

"வேணா ஸ்ரீ சொல்லாத ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாக.

"சரி பேபி, சொல்ல மாட்டேன்".

"ஸ்ரீ நீ இப்ப சொன்னா நாளைக்கு உன்னையும் மிருவையும் வெளியில் அழச்சிட்டு போறேன்" என்றான் விக்ரம்.

"நிஜமாவா விக்கிணா" என்றாள் சந்தோஷமாக.

"ஆமா.. கண்டிப்பா நாளைக்கு வெளில போலாம் நீ சொல்லு" என்றான் உறுதியாக.

"சரி சரி நான் என்ன கேட்டாலும் வாங்கி தரணும், உங்க ரெண்டு பேரோட செலவுல ஓகேவா".

"ஓகே"
என்றனர் இருவரும் கோரசாக. மிருணா ஸ்ரீயை முறைத்தாள்.

"சொல்லாத ஸ்ரீ " என்றாள் முறைத்துக் கொண்டே.

நாளைக்கு இவர்கள் வெளியே செல்வார்களா??? செல்லும் இடத்தில் சிவா ஆளிடம் மாட்டுவார்களா??? யாருக்கு அம்னீசியா???? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.......................

💘கைதியின் சிறை தொடரும்............💘
Akk
 
Akka nalla irruku aduthu next episode ku waiting
 
Top