Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 30 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 30 ❤️‍🔥

"கனவுகளில் கோர்க்கிறேன்
நம் கரங்களை.....!!!"



"நான்கு நாட்களில் எங்கே வெளிநாடு செல்வது!?"

அதனால் வட இந்தியாவில் உள்ள சில இடங்களுடன் முகலாய அரண்மனைகளையும் சென்று சுற்றி பார்க்க சென்றனர் ஏகனின் குடும்பம்.

அதுவும் இவர்கள் சென்ற போது இவர்களைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.

நடப்பதை கண்டவளோ," தொழில் உலகின் பெரும் புள்ளி என்பதால் சிறப்பு அனுமதி வாங்கி உள்ளனர் போல!"

நடக்கும் அனைத்திற்கும் தானாக ஒரு பாடம் கற்பித்து கணவனை தொடர்ந்தாள் ரிதம்.

இவர்களுடன் உணவு சமைக்க என்று ஒரு ஐவர் குழுவும் இணைந்து வந்திருந்தனர்.

"இது எதற்கு!? செல்லும் வழியில் உணவகங்களுக்கு பஞ்சமா என்ன!?" என்பது அடுத்த கேள்வியாக இருந்தாலும் ஒன்றும் கேட்காது அமைதியாகவே இருந்தாள்.

'பெண்' எனும் பொன் பேழை பொறுமை இழந்தால் வெடிக்கும் எரிமலை பிழம்பு என்பதை அறியாத ஏகனோ குதூகலமாக இருந்தான்.

அகரனுக்கு மட்டும் தான் முழு மகிழ்வும். இதுவரை வரும் போது எல்லாம் அவன் விருப்பம் கேட்க யாரும் இல்லாது வேடிக்கை மட்டும் பார்ப்பவன் தேவை என்றால் தான் தந்தையிடம் பேசுவான்.

மற்றபடி பிள்ளை சமத்தாக தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன்.இன்று அவன் பேச்சை கேட்பதற்கும்,அதற்கு பொறுமையாக பதில் சொல்வதற்கும் ஒரு ஆள் கிடைக்கவும் தன் மனதின் உணர்வுகளை பகிர.

மகனை இடுக்கில் தாங்கியவாறு அனைத்தையும் கேட்டுக்கொண்டும் பதில் கூறிக் கொண்டும் வந்தாள் அன்னை.

"ம்மா இது ஏன் இப்படி இருக்கு!?"


"இது என்ன அனிமல்மா!?"


"இது வாய் இவ்வளவு பெருசா இருக்கு!?


"ஐயன் மேன் மாதிரி பவர் ஃபுல் அங்கிள்லாம்மா இவரு!? பாருங்க எவ்ளோ பெரிய ஸ்டீலை தூக்கிட்டு இருக்காரு!"

என்று காணும் கலைகள் யாவிலும் ஆயிரம் கேள்விகள் கேட்டான் சிறுவன்.


ஆண்கள் மூவரும் பின்னால் வர மகனை சுமந்து கொண்டு அவன் கேட்கும் அனைத்திற்கும் நிறுத்தி நிதானமாக பதில் கூறியவாறு முன்னால் நடந்தாள் பெண்மான்.

அலைந்த அலைச்சலில் கால் வலி எடுக்க அறைக்கு வந்ததும் மகனை குளிக்க செய்து இரவுடை மாற்றியவள் தானும் சென்று அலுப்பு தீர வெந்நீரில் இதமாய் நீராடி வர.


அவள் மன்னவன் அவளை கடந்து உள் சென்றவன் நாசிக்குள் நுழைந்த அவளின் பாலில் குழைத்த சந்தன மணம் இரவின் ஏகாந்தத்தோடு கட்டிளம் காளையனை கொல்லாமல் கொல்ல.

"தீராது தன்னை தொடரும் சாபத்தை வரமாய் வாங்கி வந்த தன்னிலை எண்ணி நொந்து போனான்!"

அறையில் இரண்டு கட்டில்கள் இருக்க ஒன்றில் அகரன் உறங்கி விட. கணவன் வருகைக்காக காத்திருந்தாள் ரிதம்.

இன்று முழுவதும் அலைந்தும் பிள்ளையை தொட்டு தூக்காத கணவனை நினைக்கையில் அவளுக்கு கோபம் தான்.


"இதற்கு காரணம் எதுவும் இருக்குமா!?" என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை.

"இதில் யோசிக்க என்ன உள்ளது!?" என்பது அவளின் வாதமாய் இருந்தது.

தன்னை மறந்து ரிதம் சோஃபாவில் உறங்கிவிட தனக்காய் காத்திருந்த மனைவி உறங்கிய பின் வெளியே வந்த ஏகன் மனமோ

"எதை கண்டு ஓடுகிறாய்!? இவளிடம் உன்னால் காலம் முழுதும் மறைக்க முடியுமா!? எப்படியும் தெரியத்தான் போகிறது அதற்கு முன் நீயே கூறினால் பாதிப்பு குறையும்!"

மூளை எவ்வளவு எடுத்து கூறியும் கேட்காத அவன் காதல் உள்ளம், "வருவதை வரும் போது பார்த்துக் கொள்ளலாம்...இன்று இந்த தருணம் கொடுக்கும் இதம் போதும்!" என்ற முடிவுடன் தன் படுக்கையில் சென்று வீழ்ந்தான்.


"அப்படி எது ஏகனை கொல்லாமல் கொல்லும் சாபமாக உள்ளது!?"

___________________________________________________

"டேய் மாயா!" என்று அழைத்துக் கொண்டே வந்தான் சௌந்தர்.

"சொல்லுங்க ஐயா!" பணிவாய் வந்து நின்றான் மாயன்.

"நான் உன்கிட்ட குடுத்த வேலை என்ன ஆச்சுடா!?"

"ஐயா சொல்லி இருக்குங்க.வேலை எல்லாம் ஆரம்பிச்சாச்சுங்க .இந்தியா பூராமு ஆளுங்களை இறக்கி இருக்குங்க கண்டிப்பா உங்க ஐயாவை கண்டுகிடலாமுங்க!" என்றான் பொறுப்பாய்.


தலை அசைத்த சௌந்தர், "கண்டிப்பா ஐயாவை கண்டுபிடிச்சு ஆகனும் மாயா! அவர்கிட்ட தான் எனக்கு சொந்தமான விலைமதிப்பில்லா சொத்து இருக்கு!" என்றபடி தன் புல்லட்டை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான் சௌந்தர்.

___________________________________________________


தங்கும் விடுதி அறைக்குள் அடைந்து கிடந்த தீக்க்ஷிக்கு சிறு விளம்பரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லாம் இந்த விடுதி முதலாளியின் தயவில் தான்.

இப்பொழுது வந்திருக்கும் வாய்ப்பினை சிக்கென பற்றினால் என்றால்,'பெரும் வாய்ப்புகள் தேடி வரும் வாய்ப்பு உள்ளது!' என்பதால் ஏகனை கிடப்பில் விட்டுவிட்டு தன் வேலையை பார்க்க கிளம்பினாள் அவள்.

"வாய்ப்பு வரும் போது பயன்படுத்தினால்; அடுத்த வாய்ப்பு தேடி வரும் என்பதில் அவளுக்கு நம்பிக்கை.அதுமட்டுமல்ல அவளின் நடிப்பு திறமை மேல் அவளுக்கு இருக்கும் உறுதி அத்தகையது!"

அந்த உறுதியில் தான் ஏகன் உடன் மணமுறிவும்;பெற்ற பிள்ளையை விட்டு செல்லும் துணிவும்; அவளுக்கு வந்தது.

என்ன நம் உறுதியில் கல் எரிந்து குழப்ப சில எதிர்மறை மனிதர்கள் எங்கும் இருப்பர் அல்லவா.


அப்படி ஒரு சூழலில் சிக்கிய தீக்க்ஷிக்கு அவளின் உறுதி முழுதாய் ஆட்டம் காண...


"சில காலமாக அறைக்குள் அடைந்து கிடந்த பறவை; சிறிதாக கதவு திறக்கவும் தன் செட்டை விரித்து பறக்க தயாராகியது"


இந்த பக்கம் விளம்பரப்படம் நடிக்க தீக்க்ஷி
சென்னை நோக்கி பறந்த நேரம்...


நான்கு நாட்கள் இன்பமாய் குடும்பத்துடன் கழித்துவிட்டு ஏகன் குடும்பத்துடன் கோயம்புத்தூர் வந்து இறங்கினான்.


அனைவரும் இல்லம் வர அங்கே இவர்களுக்காக காத்திருந்தது நிவேதாவின் திருமண அழைப்பிதழ்.

மாப்பிள்ளை சென்னையில் காவல் துறை அதிகாரியாக உள்ளதாக பத்திரிக்கையில் இருக்க.

ரிதம் மனம் பாதி சரி என்றாலும்; மீதி மாப்பிள்ளையை 'விசாரிக்க வேண்டும்!' என்றே அடித்துக் கொண்டது.

விடுப்பில் சென்ற நான்கு நாள் வேலைகளின் நிலுவைகள் ஏகனை இழுத்துக்கொள்ள.அலுவலகத்தில் இருந்து அவன் வருவதற்கு நேரம் எடுத்தது.


மாலை நேரம் மகனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்லமாம் என்று எண்ணி இருந்தாள் ரிதம்.


அன்று ஏகனுடன் திருமணம் ஆன மறுநாள் சென்றதன் பிறகு.ஆசையாய் ஒருமுறை அவனுடன் சென்றது அதன் பிறகு செல்லவில்லை.

இன்று சென்று வரலாம் என்ற எண்ணம் அவளுக்கு.மகனை அழைத்துக் கொண்டு அறையில் இருந்து ரிதம் கீழே வர

"என்னம்மா ரிதம் எங்க கிளம்பிட்டீங்க!?" என்றார் சிதம்பரம் தாத்தா.

"இல்லங்க தாத்தா நான் கோவிலுக்குப் போய் ரொம்ப நாள் ஆனது போல இருக்கு அதுதான் இன்னைக்கு போகலாம்னு இருக்கேன் போய்ட்டு வர்றேன் தாத்தா!" என்றவள் வாயிலை நோக்கி நடக்க.

"அகரன் என் கூட இருக்கட்டும் ரிதம் நீ மட்டும் போய்ட்டு வாம்மா!" என்றார் பெரியவர்.

அவரின் பேச்சை மீற முடியாது; வேறெதுவும் பேசாது அமைதியாக அகரனை விட்டுவிட்டு சென்றாள்.

"மனமே ஆறவில்லை அவளுக்கு அவளை பற்றி என்ன நினைக்கின்றனர்!?" அங்கே.


மணந்தவன் இருவரிடையே சொல்லால் ஆன நம்பிக்கை உடன்படிக்கையின் படி தான் திருமணம் செய்தான்.இவளும் தன் தாத்தாவின் வாக்கை எண்ணி தான் திருமணம் செய்தாள்.

'இல்லை' என்று கூறவில்லையே.

அதற்காக உள்ளிருந்து சுரக்கும் அன்பெனும் ஊற்றை அலையாய் நெருங்கி வந்து பட்டென்று விலகி மாயம் செய்கிறான் மங்கை மணாளன்.


இன்று தாத்தாவோ,"அகரனை விட்டுச் செல்!" என்கிறாரே;


"அப்பொழுது தான் அவ்வீட்டில் எந்த இடத்தில் இருக்கின்றோம்!?"


"தன்னை நம்பி வெளியில் குழந்தையை விடாத அளவிற்கு தன் மீது இவர்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது போல!"

தன் போக்கில் எண்ணியவாறு கோவிலில் அம்மன் முகம் கூட காணாது தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவளின் நினைவுகள் எல்லாம் பல காலம் முன்பு சென்றது...

தாத்தாவின் கை பிடித்து அவருடன் வந்தபிறகு அவளை மனம் நோகாது பார்த்து கொண்டார் தாத்தா.

பெற்றோரின் ஞாபகம் வந்தாலும் எதையாவது 'கோமாளி தனம்' செய்து சிரிக்க வைத்துவிடுவார்.

இன்று இவளின் மனம் கவலையுற தாத்தாவை மனம் நாடினாலும் அவரின் உடல்நலன் அவளை யோசிக்க வைக்கிறது.

அமைதியாக என்பதை விட வரத் துடித்த கண்ணீரதனை அடக்கிக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தாள் என்பதே பொருந்தும்.

'ஏனென்றால்!?'

சிதம்பரம் தாத்தாவின் பதில் அவளை அவ்வாறு எண்ணத் தூண்டியது.

"பாப்பு இங்க வாயேன்!"


"பாப்பு அம்மா இங்க இருக்கேன்டி செல்லம் என்கிட்ட வா!"


"பாப்பும்மா அப்பா கிட்ட வாங்க!"


"பாப்பு குட்டி அம்மாச்சிகிட்ட வாங்க தங்கம்!"


"குட்டி தங்கம் தாத்தா கிட்ட வாங்க!"


என்று அவளை சுற்றி நின்ற உறவுகள் கூட்டம் அவளை அழைக்க பிஞ்சு பாதம் தரை நோகாது இரண்டு எட்டு வைப்பதற்குள் கீழே விழுக சென்ற பத்து மாத ரிதம்.


கீழே விழுவதற்கு முன் ஓடிவந்து அவளை தாங்கிய குடும்பம்.


"ஏய் பாப்பு ஓடாதடி நில்லு!"


என்ற அன்னையின் அதட்டலுக்கு பழிப்பு காட்டி ஜிலேபி கொலுசு ஓசையிட ஓடிய ரிதமும்,அவளை துரத்திய அன்னையும்.


"என்ன மார்க்குடி இது!?
எல்லாம் உனக்கு இவங்க குடுக்குற செல்லம் தானே!" என்று அன்னை கண்டிக்க


"அத்தை பாப்பு அடுத்த மிட் டெர்ம் டெஸ்ட்ல நிறைய மார்க் வாங்குவா பாருங்க அத்தை!"


அவளுக்காக பரிந்து வந்த ரிதமின் அத்தை மகன் ஈஸ்வர்.


"விடுங்க அண்ணி புள்ளைங்கன்னா அப்படி தான இருப்பாங்க! தங்ககட்டி அடுத்த முறை நிறையா மார்க்கு வாங்கும் என்னடி!?"

கொஞ்சிய ரிதமின் அத்தை.. அவளின் தந்தையின் தங்கை.

"பாப்பும்மா நீ மட்டும் நிறைய மார்க் வாங்கினா மாமா உனக்கு சைக்கிள் வாங்கி தர்றேன்!" என்று ஊக்கம் கொடுத்த அத்தையின் கணவர்.

"ஏன்டி இவளே மார்க்கு என்ன பெரிய மார்க்குன்னு இப்ப புள்ளைய திட்டிட்டு இருக்கவ!? போடி போய் பிள்ளைக்கு காப்பி ஆத்தி கொண்டா. வெறும் வயித்தோட பிள்ளைய நிக்கவச்சு வேடிக்கை காட்டுறா!"

தன்னை திட்டிய அன்னையையே விரட்டிய தாயின் தாயான அம்மாச்சி.



"ஏன் பிள்ளையை திட்டினாய்!? பிள்ளை முகமே வாடி வதங்கி கிடக்கே...என்னம்மா தங்கம் செய்றது!? இனி இப்படி திட்டாத தங்கம்!" என்று அன்னைக்கு தந்தையாக அன்புடன் கண்டிப்பையும் வழங்கும் தாத்தா.


"சோகம் மறந்து சிரிக்கும் வரை அம்பாரி சுற்றும் தந்தை!!"

உறவுகள் நிறைந்து வாழ்ந்த அவள் வாழ்வு 'இருளில் மூழ்கும்!' என்று அவள் கனவிலும் நினைக்கவே இல்லையே.

ஆனால் நினைக்காததை நிகழ்த்தி மனிதன் நம்பிக்கையை அழித்து வாழ்வின் விளிம்பில் தள்ளி.அவன் மனதில் இருக்கும் 'தான்' எனும் அகம்பாவம் அழிய செய்து விளையா
டி பார்ப்பதில் "விதிக்கு நிகர் வேறு ஏதும் இல்லை!"


கோரத் தாண்டவம் ஆடித் தீர்த்தது அச்சிறு பெண்ணின் வாழ்வில்.

வாழ்வின் வசந்தமாய் வந்து கடந்த கற்கண்டு காலத்தை நினைவில் மலரச் செய்து மனதில் மணம் கமழ செய்திருந்தாள் ஏக்க தாரகை.
 
"அப்படி எது ஏகனை கொல்லாமல் கொல்லும் சாபமாக உள்ளது!?"

ப்ச்.... வர வர ரொம்ப குழப்புறேடா, ஏகன்?


நீதான் நிம்மதியா இல்ல....

எங்களையாவது தூங்க விடேன்!!! 😇😇😇😇😇
 
ப்ச்.... வர வர ரொம்ப குழப்புறேடா, ஏகன்?

நீதான் நிம்மதியா இல்ல....

எங்களையாவது தூங்க விடேன்!!! 😇😇😇😇😇
அப்பா ஏகா நீயும் கூட சிலரின் தூக்கத்தை கெட்டுக்கற அளவுக்கு வந்திருக்கப்பா... இப்படியே எல்லார் தூக்கத்துக்கும் எண்ட் கார்டு போட்டு விடுறது உன் பொறுப்பு தான்டா எப்பா 😎😎😎
 
அப்பா ஏகா நீயும் கூட சிலரின் தூக்கத்தை கெட்டுக்கற அளவுக்கு வந்திருக்கப்பா... இப்படியே எல்லார் தூக்கத்துக்கும் எண்ட் கார்டு போட்டு விடுறது உன் பொறுப்பு தான்டா எப்பா 😎😎😎
😁😁😁😁சும்மா லூலூவாய்க்கு 💤💤📢
 
Top