Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 31 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 31❤️‍🔥

"புதையத்
துடிக்கிறேன்
உன் நெஞ்சமதில்......!!!"



தன் வாழ்வில் நடந்து முடிந்தவற்றை எண்ணி மனம் நோவது விரும்பாது; சன்னதி சென்று அம்மனை தரிசனம் செய்தவள் இருள் கவிழ நேரமாவதை உணர்ந்து இதற்கு மேல் இங்கு இருந்தால் சரிவராது என்பதால் இல்லம் சென்று சேர்ந்தவள் என்றைக்கும்,

"இது வேண்டுமா தாத்தா!?, அது வேண்டுமா!? இரவு உணவு என்ன வேண்டும்!?" என்று கேட்பவள் இன்று அமைதியாக உணவை பரிமாறி விட்டு செல்ல.

சிதம்பரம் தாத்தாவும் தான் கூறும் பதிலில் அவளின் 'மனம் ஆறும்' என்று தெரிந்திருந்தாலும்; அதனை சொல்ல வேண்டிய நபரும் தான் இல்லை; என்பதால் அமைதிகாத்தார்.

ஆனால் உணவை முடித்துக் கொண்டு செல்லும் போது,"அம்மா ரிதம் நீ எனக்கு படியளக்கற அன்னபூரணிம்மா உன்னை தாத்தா தப்பா நினைப்பேனாடாமா!?" என்றதோடு செல்ல.

'அவ்வளவு தான்!' அணையிட்டு கிடந்த கண்ணீர் காட்டாற்று வெள்ளமாய் கரையுடைத்தது.

விசும்பல் இல்லை, கேவல் இல்லை, 'தன் மீது நம்பிக்கை இல்லையா!?' என்ற மனதிற்கு;

'நீ எனக்கு உணவு கொடுக்கும் தெய்வம்! உன்னை நம்பாமலா உன் கரத்தில் உணவை உண்ணுகிறேன்!?'

என்று தாத்தா சொல்லாது சொல்லி அரும்பவளின் மனதிற்கு பீலியால் மருந்திட்டு நிம்மதி கிடைக்க அதனால் வந்த மௌன கண்ணீர்.

துடைக்க துடைக்க வற்றாத ஜீவ நதி பிரவாகமாக பெருக மௌனமாய் அவ்விடம் அகன்றவள் மகனை தோட்டத்தில் விளையாட விட்டு தான் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவளுக்கு இப்போது மிகவும் தேவையானது சிறு அமைதி மட்டுமே என்பதால் கண்கள் மூடி அமர்ந்து கொண்டாள்.


அறைக்கு சென்ற தாத்தாவிற்கு கண்களை மூடினால் ரிதமின் மௌனமாய் கண்ணீர் வடித்த காட்சியே தோன்ற மொட்டை மாடி சென்றார்.

அவருக்கும் அமைதி வேண்டுமே சிறு பெண்ணின் மனதிற்கு இதமளிக்கும் மருந்து தன்னிடம் இருந்தாலும்; அதனை வாய் திறந்து சொல்ல முடியாத நிலையில் தன்னை நிறுத்திய விதியை நொந்தவாறு அமைதியாக இருளில் மூழ்கிய இரவு வானில் எதையோ தேடி அலைந்தார்.

சத்தமில்லாது மனைவி அருகே இருந்த வேறொரு இருக்கையில் வந்து அமர்ந்தான் ஏகன்.

தான் வந்தது கூட அறியாது கண்மூடி அமர்ந்திருக்கும் பெண்ணவளின் ஓய்ந்த தோற்றம் அவனுக்கு மனதை பிசைய.

நெஞ்சில் முள் குத்திய நோவு,யாரோ கத்தியை கூறாக்கி அதை நேராய் இதயத்தில் சொருகிய உணர்வு.
துணையின் வலியில் தானும் வலியை அனுபவிக்க.அதற்கும் மேல் வலியின் கொடுமை பொறுக்க முடியாது "ரிதம்" என்று மென்மையாய் அழைத்தான்.

அவன் குரலில் ஒரு 'கரகரப்பு இருந்ததோ? சந்தேகம் தான்!'

'ஏனென்றால்!?'

முகம் தெளிவாக இருக்கிறதே.ஆராய்ச்சி எல்லாம் கிடப்பில் விட்டுவிட்டு கணவனை கண்டாள் தாரகை.

"என்ன ரிதம் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு!? ஏதாவது சொன்னா தானே புரியும் சொல்லு!எல்லாத்தையும் உனக்குள்ள வச்சுட்டு ஏன் வொர்ரி பண்ற!?" என்றான் அக்கறையாய்.

"அடி ரிதம் இந்த அக்கறையில சக்கரையா கரஞ்சுடாதடி இம்ம்... வெறப்பா இருடி...!" என்று இறுக்கமாய் அமர்ந்து கொண்டாள் மாது.

"சொல்லு என்ன ஆச்சு!?" மீண்டும் கேட்க

"ஒன்றும் இல்லை!" என்று அவனுக்கு பதில் கூறிவிட்டு..

"ஜாமூன் வாடா உள்ள போகலாம்!" என மகனின் கைபிடித்து இல்லம் சென்றுவிட்டாள்.

இவன் அறைக்கு சென்ற போது நிவேதா உடன் அழைப்பில் இருந்தாள் போல அன்னையும் பிள்ளையும் இவனை கண்டுகொள்ளாது 'கெக்கபெக்க'வென்று சிரித்து இவனை வெருப்பேற்றினர்.

பேச்சின் ஊடே அகரன் உறங்கி வழிய அவனை உறங்க வைத்து பால்கனி வந்தாள் ரிதம்.

அவளுக்கு நிவேதாவிடம் பேசி தெளிவு பெற சில விசயங்கள் இருந்தது.அதனால் ஓசை படாது பால்கனி வந்து தோழிக்கு அழைத்தாள்.

"என்னடி ரிதம் தம்பி தூங்கிட்டானா இப்போ எதுக்குடி கால் பண்ணியிருக்க!?" கொட்டாவி விட்டவாறு நிவேதா தொடங்க.

"நிவே தூங்கிட்டியா!?"

"இல்லடி சொல்லு என்ன கேட்கணும் கேளுடி இப்போ முழிச்சுட்டேன்!?"

"நிவே நீ உன் உட்பீ கூட இந்தா பேசினது கிடையாது உண்மையை சொல்லுடி!?"

"பாவி! உன்கிட்ட மறைக்க எதுவுமே இல்லையேடி.அப்பறம் எதுக்கு இதை மறைக்க போறேன்.உண்மையா அவன் எப்படி இருப்பான்னு கூட எனக்கு தெரியல. மாமா ஃபோட்டோ காட்டினாங்க.நான்தான் நேர்ல பார்த்துக்கிறேன் மாமா அப்படின்னு சொல்லிட்டேன்.அப்போதான் ஒரு த்ரில்லா இருக்கும் இல்ல அதனால!"

"ஓ..! அப்போ சரி நிவே எனக்கு அந்த மாப்பிள்ளை ஃபோட்டோவை சென்ட் பண்ணுடி மறக்காம"


"அதுவா அது எங்க கெடக்குன்னு தெரியலை ரிதம்.தேடி எடுத்து உனக்கு சென்ட் பண்றேன்டி.நீ எப்போ கிளம்பற!?"

“நான் இன்னும் அவர்கிட்ட கேட்கல நிவே
தாத்தா இருக்க நிலைக்கு அவரை கூட்டிட்டு வர முடியாது.அதுனால நானும் ஜாமுன்னும் வரலாம்னு இருக்கோம்"

"ஹேய் செமடி! குட்டி தங்கம் வர்றானா. சரிடி ஒழுங்கா நீ அந்த ஆங்கிரி சாமியார் கிட்ட கேளு.இப்போ என்ன தூங்க விடுடி!" என்று ஆறாம் கொட்டாவியை குதூகலமாக விட்டு உறங்க சென்றுவிட்டாள்.

"எப்படியும் நிவேதா புகைப்படம் அனுப்புவாள்!" என்ற நம்பிக்கையில் இவளும் உறங்க சென்றாள்.

பாவம் இன்று சில தினங்களில் நேரும் அனர்த்தம் அறியாது அனைவரும் உறக்கத்தில் இருந்தனர்.


ஏகனின் இல்லம் என்றும் போல் இன்றும் விடியலுக்கு முன்பே பரபரப்பாக இருந்தது.

காலை சிதம்பரம் தாத்தாவும் ஏகனும் யோகாசனம் செய்திட அவர்களின் அருகே விரிப்பை விரித்து அதில் அமர்ந்து உறங்கிய தன் தாத்தாவை கண்டு புன்னகையோடு பூப்பறித்திருந்தாள்.

யோகா செய்து தாத்தனும் பேரனும் உடலை வளைக்க வேல் தாத்தாவோ உறக்கத்தில் எந்த பக்கம் சாய்வது என்பது அறியாது உடலை வளைத்து திவ்ய நடனம் புரிந்திருந்தார்.

"ஹாஹாஹா...." என்ற சிரிப்பொலி வீட்டு வாயிலில் கேட்க

மகனின் சிரிப்பொலியை காலை பொழுதில் கேட்ட ஏகன் மனம் இறகாய் மாறியது.

தன்னை மயக்கிய மாந்தளிர் ஒன்று; தன் மகனையும் அன்பால் மயக்கியது கண்டு அவனுக்கு பேருவகை தான்.

தன்னிடம் மட்டுமே மகன் வளர்ந்திருந்தால் கண்டிப்பாக உள்ள உணர்வுகளை வெளியிட பழகாது போயிருப்பான் என்பதும் நன்கு உணர்ந்து கொண்டவன் தாய்மையின் பெருமையை அங்கே கண்ணார கண்டான்.

இன்றல்ல என்றுமே அகரனை ரிதம் மூத்தாள் பிள்ளை என்று கண்டதே கிடையாது.அவளே சுமந்து அமுதூட்டியவள் போல் தான் அவனை மார்மீதும் தோள் மீதும் சுமக்கிறாள்.

வெளியில் சென்றால் போதும் கைகள் வலித்தாலும் ஒரு,"கைவலிக்கிறது பிள்ளையை பிடிக்க முடியுமா!?" என்று அவனிடம் அவள் வந்து நின்றதில்லை.

அவ்வாறு அவள் வந்திருந்தால் ஒருவேளை பல கேள்விகளுக்கு விடையும்,பல
குழப்பங்களுக்கு தீர்வும் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் சந்தர்பமே வழங்காது பெற்றவள் 'பாரம்' என்று விட்டு சென்ற பிள்ளையை வந்தவள் அன்னையாய் தாங்க.

அகரனும் சாதாரணமாக இல்லையே "யாருக்கும் அவன் கொடுக்க ஓர் உரிமையை அல்லவா அவளுக்கு அள்ளி வழங்கி இருக்கிறான்!"

"அவன் சிறுவனாக இருக்கலாம்.ஆனால் இதுவரை ஏகனுக்கு கூட கிடைக்காத ஒரு பெரும் பேரை அவளுக்கு அவன் வழங்கி உள்ளான் என்பதை அறியாமல் போகலாம்.ஆனால் பெற்றவனுக்கும் பிறந்ததில் இருந்து அவனை காண்பவர்களுக்கும் தெரியாது போகுமா என்ன!?"

மகனின் சிரித்த அழகு விரித்த முகம் காண 'கண்ணிரண்டு போதவில்லை!' தகப்பனுக்கு.

"ஜாமூன் எழுந்துட்டியா கண்ணா!?"

"ஆமாம் ரசகுல்லா எழுந்துட்டேன். நீங்க காலைல என் பக்கம் இல்லைன்னா தூக்கம் வரலாம்மா அதுதான் எழுந்துட்டேன்!" என்றவாறு வந்தவன் வேல் தாத்தாவின் திவ்ய நடனத்தை அன்னையிடம் காணவில்லை கிண்டலடித்து சிரிக்க.

அதற்கு மேல் யோகா எங்கே செய்வது. அன்றைய தினம் மகனின் சிரிப்பால் நிறைந்து போனதே ஏகனுக்கு.


மனைவி மகன் அருகே இருந்த கல் இருக்கையில் அமர்ந்து"அம்மாவும் பிள்ளையும் என்னடா பேசுறீங்க!?
சொல்லுங்க நானும் தெரிஞ்சுப்பேன் இல்ல!" என்க.

"அப்பா அங்க பாருங்க வேல் தாத்தா ஹாஹாஹா... யோகா செய்யாம தூங்கி விழறாங்க! அம்மா ஹாஹாஹா... தாத்தா எந்த பக்கம் விழுவாங்க!?" கேலியாய் பேச.


வேறு என்ன வேண்டும் பல மேடைகளில் சாதனையாளனாக நின்ற பொழுது கிடைத்த ஆனந்தம் கூட இன்றைக்கு கிடைத்த அளவிற்கு பெரிதாய் இல்லை என்றாகி போனது அங்கே ஏகனுக்கு.

"டேய் தாத்தாவை கேலி பண்ற படவா ராஸ்கோல் அம்மா அடிக்க போறேன் பாருடா!"

"அம்மா அது படவா ராஸ்கல் ராஸ்கோல் கிடையாது!" என்று அன்னையின் சொல்லில் பிழை திருத்தம் செய்ய

"சரிடி அழகு நீங்க சொன்னா சரிதான். இப்போ போய் யோகா பண்றீங்களா!" மகனுக்கு நினைவூட்ட.

"ம்மா... ம்மா...!"

அழகாய் செல்லம் கொஞ்சினான் பிள்ளை.

"நெவர் மை பாய் போய் யோகா பண்ணீட்டு வா!" என்று கண்டிக்க

இருவரும் 'என்ன பேசுகிறார்கள்!?' என்பதை புரியாது பார்த்திருந்தான் ஏகன்.

"அவன் என்ன கேட்கறான் ரிதம்!?"

மனைவியிடம் சந்தேகம் கேட்டான் கணவன்.

அன்னையை முந்திக் கொண்டு வந்த மைந்தனோ,"அப்பா எப்பவும் மார்னிங் பனி இருக்கும் இல்ல அது மரத்துல இருக்க பூ மேல எல்லாம் விழுந்து ஜில்லுன்னு இருக்கும் இல்ல.அந்த பூல அம்மாக்கு நினைய பிடிக்கும் அதுனால அம்மாவும் அதை ஆட்டிவிட்டு விளையாடுவோம்.இன்னைக்கு கேட்டா அம்மா யோகா பண்ணு சொல்லிட்டாங்க!
நீங்க சொல்லுங்கப்பா நான் யோகா பண்ணிட்டு வர்றகுள்ள சன் ரைஸ் வந்திடும், குளு குளு போய்டும்.அதுக்கு தான் கேட்கறேன்.அது அம்மாக்கு பிடிக்கும் இல்ல!" என்று அழுத்தி கூறி 'தன் ஆசையும் அதுவே' என்று சொல்லாமல் சொல்லிவிட்டான் பிள்ளை.

"பொடியா உனக்கு தானே வேணும் வா அம்மா ஆட்டி விடுறேன் நீ நின்னுக்கோ ஓகே வா.. ஓடி வா..!"என்று அன்னை மகனை பவளமல்லி மரத்தின் கீழ் நிற்க செய்ய.

இருவரும் நிலை உணரும் முன் அவர்களின் மீது பூமலை பொழிந்தது.
உற்சாகம் பொறுக்கவில்லை இருவருக்கும்.எப்பொழுதும் ரிதம் மரத்தை உலுக்க அகரன் மட்டுமே விளையாடுவான்.


அவனுக்கு அன்னையை வைத்து உலுக்கும் ஆசையில் கேட்டாலும்,'பிஞ்சு கைகள் நோகுமே!' என்று தாயானவள் மறுத்துவர.
இன்று எதிர்பாராது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இருவரும் உற்சாகம் கொண்டனர்.

அவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி,"கடைசி வரை குடும்பம் எனும் கொடியில் சேராது தனித்து வாழ்வோமோ!?" என்ற ஏகனின் மனதிற்கு இது பெரும் வரமே.

மகன் மட்டுமல்ல 'ரிதம்' எனும் இசை மகளை மணந்து தானும் பாக்கியம் செய்ததை அந்த நொடி உணர்ந்தான் மங்கை மணாளன்.

"அப்பா இன்னும் உலுக்குங்கப்பா ஐ சூப்பர் ஐ ஜாலி அம்மா உங்க தலை முழுக்க பூவா இருக்கு!" என்ற மகனை குரங்கு குட்டியை தூக்குவதை போலே முன் புறம் தூக்கி சுற்றினாள் ரிதம்.


க்காட்சியை கண்டு சிதம்பரம் தாத்தாவிற்கோ 'தன் சந்ததி இனி வழுபெரும்' என்ற நம்பிக்கையில் ஆனந்த கண்ணீரே பெருகியது.


வாருங்கள் இந்த உற்சாகம் நிலைக்க வாழ்த்தலாம்.
 
"என்ன ரிதம் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க என்ன ஆச்சு!? ஏதாவது சொன்னா தானே புரியும் சொல்லு!எல்லாத்தையும் உனக்குள்ள வச்சுட்டு ஏன் வொர்ரி பண்ற!?"

டேய்... டேய்... ஏகன், இது உனக்கே கொஞ்சம் ஓவரா படல்லியாடா??????


இந்த கேள்வியை கேக்க தகுதியானவனா நீ?

உன்னோட அழுத்தத்தை விடவா அவளோட விறைப்பு கூடியிருக்கு????
 
டேய்... டேய்... ஏகன், இது உனக்கே கொஞ்சம் ஓவரா படல்லியாடா??????

இந்த கேள்வியை கேக்க தகுதியானவனா நீ?

உன்னோட அழுத்தத்தை விடவா அவளோட விறைப்பு கூடியிருக்கு????
அப்படி கேளுங்க மக்கா😀😀😀 அப்படியாவது இவன் அழுத்தமும் ஆணவமும் குறையுதான்னு பார்க்கலாம்🧐🧐🧐🧐
 
Top