Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 39 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 39 ❤️‍🔥

"அவள் வெட்க சிவப்பை
கடனாய் கொண்டதோ செந்தூரம்..!?"




கருமேக குளத்தினிலே மிதக்கும் வான்மீன்களை ரசிக்க வந்த இரவின் பெண்ணரசி வெண்ணிற ஆடையாள் அவள் ஊர்வலம் போக....

கட்டிலும் மெத்தையும் கதகதக்க, அருகில் உள்ள செம்பில் பால் கொதிகொதிக்க, பதைபதைக்கும் பெண்மான் பொன்னாய் தகதகக்க மணக்கும் மல்லிகை பந்தலாய் அமர்ந்திருந்த நிவேயை கள்ளப்பார்வை பார்த்திருந்தான் இக்னேஷ்.

"நடப்பது எல்லாம் கனவோ!? மாய வலையோ!?"

'எதுவோ?' ஒன்றில் சிக்கிய உணர்வில் நிவேதா அதிசயமாய் அமைதியாக இருக்க.

"க்கும்.."என்ற தொண்டை செருமலில் குடுமியின் முகம் பார்த்தாள் கன்னிகை.

அடுத்து ஒன்றும் பேசாது; பேசத் தோன்றாது; அமைதி காத்தான் அவன்,அவளும் தான்....

பெண்ணிற்கு மட்டுமா அங்கே நாணம் பிறக்கும்.ஆணுக்கும் அங்கே ஓர் அழகிய தயக்கம்,கூச்சமும் பிறக்கத் தான் செய்யும்.

"காணாத காமன் தோட்டத்தில் இளம் சிட்டுக்களை விட்டு சென்றால் அவை வழி அறியாது மசங்கிட.....!"

படாது பட்டு செல்லும் தென்றலை போலே அவள் விரலை மெல்லிதழாய் எடுத்து வருட....விழி விரித்து அவன் முகம் பார்த்தாள் நளின நங்கை.

ஊக்கம் பெற்ற வீரனாய் அவள் கரமதின் இடைகளை விரலால் இறுக நிரப்பியவன் அதில் அழுத்தம் கொடுக்க.

காது மடலில் ஓர் இன்ப அதிர்வு.ஆனால் தயக்கம் மட்டும் பெரும் கடலாய் பெருக.

"ஐ லவ் யூ வேதா!" என்றான் இக்னேஷ்

நிவேதா நம்பாத பார்வை அவனை பார்க்க..

ரிதம் அழைப்பு விடுத்தது முதல் தன் மனம் நிலையில்லாது தவித்த தவிப்பை கூறியவன்.

தான் காதலை உணர்ந்த தருணத்தை உரைக்க... சொக்கி போனாள் சொக்கும் விழியாள்.

தான் முல்லை இல்லம் வந்து சேர்ந்த இளவம் பஞ்சு என்று தன்னிலையை கூறியவன் பொறுமையாய் அவள் தோள் மீது கையை இட.

அவன் மன உணர்விற்கு மதிப்பளித்து அமைதி காத்தாள் மனையாள்.

நிவேதாவும்,"மாமாவின் மூலம் இந்த வரன் வந்தது என்றும்; அவன் புகைப்படம் கூட தான் கண்டதில்லை என்றும்; இன்று அவனை காண்பதற்கு முன்பே ரிதம் லதா உடன் வந்து தன்னிடம் அனைத்தையும் சொல்லி இருக்க மதிவாணன் முகத்தை சரிவர தான் கவனிக்கவில்லை!" எனும் தன் பக்க விளக்கத்தை தெளிவாய் வழங்கினாள் நிவேதா.

"ஆமாம் நீங்க எப்படி இவன் வைஃப் மர்டர்
வீடியோவை எடுத்தீங்க!?"

காலையில் இருந்து மூளையை குடைந்த கேள்வியை குவளைய மலரவள் கேட்க.

"அவனை பத்தி பொதுவான எந்த தப்பான கருத்தும் எங்களுக்கு கிடைக்கவே இல்லை.நாங்களும் ரெண்டு நாளா அவனை கண்காணிச்சதுல ஒரு இடத்துலயும் குறை இல்லை.அங்க தான் எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு.அவன்கிட்ட இருக்க தப்ப மறைக்க அவன் நல்லவனா சுத்துற மாதிரி இருந்துச்சு.அதுனால தான் நேத்து நைட்டு அவன் ஃபோனை 'ஹேக்' பண்ணலாம்னு யோசிச்சோம்.அதுபடி இன்னைக்கு காலைல அவன் ஃபோனை ஹேக் பண்ணதுல ஒவ்வொன்னா பார்த்து நமக்கு தேவையானதை எடுத்து அனுப்ப தான் நேரம் ஆகிடுச்சு இல்லைனா எப்பவோ இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம்!" என்றான் வெறியாக.

"ரிதம் உன் கிட்ட ஃபோட்டோ கேட்டப்போவே நீ குடுத்திருந்தா கூட முன்னாடியே நிறுத்தி இருக்கலாம்!"

இப்பொழுது அத்தனை பேரிடமும் தேவையில்லாத பேச்சு வாங்கிய நிவேதாவை நினைத்த வேதனை குரலில் இயம்ப.

"இல்ல மாமா என்கிட்ட ஃபோட்டோ குடுத்தாங்க.ஆனா எனக்கு அதை பார்க்க தோணலை.அதுனால எங்கையோ வச்சேன் எங்க வச்சேன்னு தெரியலை. அப்பறம் மாமாகிட்ட இருந்ததை தான் ரிதம் வாங்கி உங்களுக்கு அனுப்பினா!"


மனைவி அவனின் புகைப்படம் கூட காணாதது மனதிற்குள் உவகையை தூவ தன்னை நிலைநிறுத்தியவன் தயக்கமாய் அவளை பார்க்க.


அவளுக்கும் கூட அவன் மீது ஈர்ப்பு ஒன்று இருந்ததோ...!

அவன் கண்களில் வழியும் காதலை கண்டு மறுக்க மனமில்லாது போனது அந்த மந்தார மலருக்கு.



தன் விழியால் அவள் விழிகளுக்கு எதை கடத்தினானோ 'கடத்தல்காரன்' ஆணவன் பற்றிய கரத்தில் இப்போது நிவேதாவின் கரமானது வெட்கத்தில் வெடவெடக்க பற்றுகோளாய் சற்றே அழுத்த.

"முதல் இன்பத்து குறளுக்கு அச்சாரம் ஆணே இயற்றினான்!"


"காமன் தேசத்து கள்ளாடும் தேரில் இருவரும் ஏறட்டும்... நாம் அங்கிருந்து செல்வோம் லாலீஸ்....!"


"ஏய் ரிதம் நீ எப்போ வருவடி!?"


"எங்க வரணும்!?"


"ஏய் வீட்டுக்குத்தான்!"


"எந்த வீட்டுக்கு!?"


"இங்க காரைக்குடில இருக்க நம்ம வீட்டுக்கு!"


"நான் எங்கேயும் வரலை.இங்க பாவம் பெரியம்மா மட்டும் தனியா இருக்காங்க!"


"அதுக்கு தான் அம்மா,அப்பாவை துணைக்கு இருக்க வச்சுருக்கேன்லடி நீ முதல்ல இங்க கிளம்பி வா!"


"அத்தை மாமா கூட பெரியம்மாக்கு பழக்கமே கிடையாது.. எதும் வேணும்னா அவங்ககிட்ட போயி எப்படி கேட்பாங்க?
வந்துட்டாரு பேசிட்டு நீங்க போய் தூங்குங்க.நான் இங்க என்ன நிலவரம் தெரியாம வரவே மாட்டேன்!" என்றாள் ரிதம்.


புதிதாய் இளமையின் துள்ளல் மீண்டும் தரித்த உணர்வால், மனைவியின் அருகாமை வேண்டி ஒற்றை விரலில் நின்றது ஏகன் மனது.

(எத்தனை காலம் தான் ஒற்றை காலால் நிற்பது!?)

அவள் கூற்றின் உண்மை புரிய,"சரி நான் தூங்க போறேன்டி.நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பறேன் ரிதம் அப்போ நீயும் தாத்தாவும் என் கூட வரணும்!" என்றான் கட்டளையாக.

"நாங்க எதுக்கு உங்க கூட வரணும்? பிள்ளை தான் உங்க பிள்ளைன்னு சொல்லி விரட்டுனீங்க.தாத்தா என்னோட தாத்தா அவரோட நான் எங்க போகணும் எங்க போக கூடாதுன்னு நீங்க எப்படி சொல்லுவீங்க!?"

"அடக்கடவுளே ஒரு வார்த்தை கோபத்துல தெரியாம விட்டதுக்கு இவ என்ன யோசிச்சு யோசிச்சு அடிக்கிறா!?" என்று மனதுள் நொந்து கொண்டு

வெளியே," அவர் உன்னோட தாத்தா தான். ஆனா நீ என்னோட பொண்டாட்டிடி சட்டப்படி தெரியும் தானே! அப்போ எனக்கு உன்னை கூப்பிட உரிமை இருக்கு தானடி!?" என்றான்.

அதுவரை புகையை விட்டு கொண்டிருந்த கோபம் சட்டென தணிந்து இதழ் மூரலை முகிழ்த்த கள்ளமாய் அதை மறைத்தாள் மாது.

"என்னடி பேச்சையே காணால!?"

என்றவனிடம் வேறு ஒன்றை கேட்டு நின்றாள் அவள்.


"உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் கேட்கட்டா!?"


"என்னடி பீடிகைலாம் பலமா இருக்கு சரி கேளு!"


"இல்ல உங்க ஃபர்ஸ்ட் வைஃப் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா!?"


இத்தனை நாட்கள் அவன் கொடுக்காத உரிமையை இன்று தானே கொடுத்தான்.

"நீ என் மனைவி!" எனும் வார்த்தை அவன் வாயில் இருந்து உதிர்ந்ததே அதனால் கிடைத்த தைரியத்தில் இவள் கேட்க.

"எனக்கும் அவளுக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சு!" என்றவன்

சம்மந்தம் இல்லாமல்,"உனக்கு இப்போ இருக்க ஹீரோயின்ல யாரை பிடிக்கும்!?" என்க.

"என்ன கேள்வி இது சம்மந்தமே இல்லாமல்!?" என்றாள் புரியாது.

"கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடி..." விடாது கேட்டு நிற்க.

இவளுக்கு சம்மீப காலமாக படம் பார்க்க நேரம் இல்லை என்றாலும்;புதிய
கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் வல்லமை நிறைந்த நடிகை ஒருத்தியை மிகவும் பிடிக்கும்.நடிப்பு என்றால் அவள் தான்... 'தத்ரூப'மாக நடிப்பாள்.

"அவளின் கண்களில் நாம் கதாபாத்திரத்தின் நளினங்களை தத்ரூபமாக காணலாம்!" என்று புகழ.

அவளின் பெயர் கேட்டு நின்றான் ஏகன்.

"அவங்க பேரு தீக்க்ஷிதா!" புன்னகை மலரக் கூறினாள் ரிதம்.

"அவ தான் என்னோட முதல் மனைவி அகரனை நமக்கு குடுத்தவ!" என்றான்.

அவளை 'பெற்றவள்' என்று கூற மனம் வரவில்லை ஏகனுக்கு.ஆதலால் தான் நமக்கு கொடுத்தவள் என்பதோடு முடித்துக் கொண்டான்.

'அதன்பின் என்ன பேச!?' என்றொரு தயக்கம் அங்கே முளைக்க.

"சரிடி நீ அங்க என்னன்னு பார்த்துக்கோ. நாளைக்கு நம்ம ஊருக்கு போறது உறுதி!" என்று அழைப்பை துண்டித்தான்.

அப்போ 'அகரன் ஸ்டார் பேபியா!?' என்று தனக்குள் நினைத்தவள் மனமோ இல்ல அவன் 'என்னோட பேபி!' என்றது.

அவளுக்கு அப்படி ஒரு பாதுகாப்பில்லாத உணர்வு வரக்கூடாது என்பதால் தான் தன் முதல் மனைவி பற்றிய பேச்சை இதுவரை ஏகன் எடுக்காது இருந்தான்.அவளாக கேட்டால் சொல்லிவிடலாம் என்றிருந்தான்.

இன்று அவளாகவே அப்பேச்சை ஆரம்பிக்க 'அவள் யார்!?' என்பதை கூறினான்.

"என்னங்க இது!?"

"எதுடி? பார்த்தா தெரியல!"

"ஏன் தெரியாம அங்க அவங்க ரெண்டு பேருக்கும் வாங்கிட்டு வந்த பூல பாதிய சுட்டுட்டு வந்து இங்க கொட்டி வச்சிருக்கீங்களே காலைல இதை யாரு சுத்தம் பண்ணுவா!?" ரேணு கேட்க

"ஏன்டி என்ன பார்த்தா திருட்டு பய மாதிரி இருக்கா உனக்கு சொல்லுடி!?" என்ற பிரபா மேலும் தொடர்ந்தான்.."நான் ஒன்னும் திருடல அவங்களுக்கு வாங்கும் போது நமக்கும் கொஞ்சம் சேர்த்து வாங்கிட்டேன் அவ்வளவு தான்!" என்றவன்

"இதை சுத்தம் செய்ற கவலை உனக்கு எதுக்கு!? வாங்கிட்டு வந்த நானே அதை சுத்தம் பண்ணிடுவேன்!" பிரபாவின் மனமோ மனைவியை ஆலிங்கனம் செய்திட துடிக்க.


துள்ளலாய் துடிக்கும் மனதின் ஆட்டத்தை அடக்க வழி அறியாது அவனுள் அடங்கினாள் ரேணு.

(ஹோ.....! இதுனால தான் நிவேதா இவனை ரொமான்டிக் மேன்னு சொல்றாளா!? பேஷ்!! பேஷ்!!!)

நிவேதாவை சுற்றி இரும்பு வேலி ஒன்று இருக்க.

அசைக்க முடியா முறுக்கு கம்பிகள் போன்ற கரங்களுக்கு இடையில் கிடந்த பூவை நிலை பரிதாபம் தான்.

அவனோ ஒற்றை அடியில் பலரை தாக்கும் வித்தை கற்ற 'எஃகு' கரத்தான். அவளோ "தோசை கல்லில் விரல்நுனி பட்டாலும் படபடக்கும் பதுமை!"

அவளை," பதுமை கொண்டாடாமல்; அவன் கைகளில் திண்டாட செய்திருந்தான்!" இக்னேஷ்.

முதலில் விழித்த நிவேதாவின் கண்களில் விழுந்தது அவளவனின் கற்றை முடி தான்.

அவன் முடிக்குள் கைவிட்டு இழுத்து பார்த்தாள் "உண்மை முடிதானா!?" என்று.

"ஏய் வலிக்குது கையை எடுடி!" என்றவாறு விழி திறந்தவன்


"நேத்து நைட்டு எல்லாம் அந்த இழு, இழுத்தும் கையோட வரலையேடி. அப்பறம் ஏன் திரும்ப இப்பவும் இழுக்குற!?" என்றான் குரலில் அவளின் செய்கை கொண்ட ஆனந்தம் விரவி இருந்தது.

"அய்ய....!!!" என்றதோடு எழுந்தவள் ஒன்றும் பேசாது அவன் முகமும் பார்க்காது குளியல் அறை புக.

இவனோ மல்லாந்து விட்டம் பார்த்தவன் "தன் வாழ்வில் ஒரே நாளில் நேர்ந்த அற்புதங்களை எண்ணி வியந்தான்!"

அவள் குளித்து வர தானும் அவளை சிறு சீண்டலில் சிவக்க செய்து சென்றவன் திரும்பிவர அவள் தன்னை காத்துக்
கொள்ள வெளியே சென்றிருப்பதை புரிந்த புன்னகையோடு வெளியே வந்தான்.


ஒரே நேரத்தில் குளித்து முடித்து அறைக்கதவை திறந்த ரேணுவும், நிவேதாவும் அசட்டு புன்னகை சிந்தி சமையல் அறைக்குள் நுழைய.


ரேணு," என்னடி எல்லாம் ஓகேவா!?" என்று கேட்க.


"எங்களுக்கு ஓகேவோ இல்லையோ உனக்கு ஓகே தான் போல! நினைச்சேன்டி என்ன இந்த ரொமான்டிக் மேன் இந்த டைம் ஒன்னுமே பண்ணலையேன்னு.அப்போ தான் அந்த ரூமுக்குள்ள தனியா பூக்கூடை ட்ராவல் ஆகுது... ரைட்டு தம்பி பலே பாய் அப்படின்னு விட்டுட்டேன்!!!" என்றாள் நிவேதா.

"ஏன்டி அவரை அப்படி சொல்லாதன்னு உனக்கு சொல்லி இருக்கனா இல்லையா!?" ரேணு எகிற.

"நீ சொல்லி இருக்க.ஆனா நீ சொல்லி எதையாவது கேட்டிருக்கேனா நான்!?" என்றாள் நிவேதா.

இருவரின் சண்டைக்கு இடையில் காலை உணவு தயாராக நிவேதவின் வீட்டில் தான் இந்த கூத்து எல்லாம் நிகழ்ந்தது.
 
அப்போ 'அகரன் ஸ்டார் பேபியா!?' என்று தனக்குள் நினைத்தவள் மனமோ இல்ல அவன் 'என்னோட பேபி!' என்றது.

ரிதத்துக்குள்ள இயல்பாகவே மேலெழும் இந்த தாய்மை உணர்வும் சொந்தமும் தான் அவளோட பெரிய அழகு......
👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦
 
ரிதத்துக்குள்ள இயல்பாகவே மேலெழும் இந்த தாய்மை உணர்வும் சொந்தமும் தான் அவளோட பெரிய அழகு......
👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦👩‍👦
பெண்மையின் பேராண்மை ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 உண்மை அன்பில் தானே உள்ளது😊😊😊
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அதானே இவன் கூப்பிட்டா உடனே நாங்க கிளம்போனுமா!!!😆😆😆😆🤭🤭🤭🤭.
அதெல்லாம் முடியாது முடியாது.
என்ன பண்ணறே ஏகா அகரன் ரிதமோட பையன் தான் ஆயிரம் வாட்டி பேப்பர்ல எழுதி கொண்டு வந்து ரிதம் கிட்ட சப்மிட் பண்ணு.
அப்பறமேட்டு நாங்க ஓகேன்னு தோணுனா வர்றோம் 😎😎😎😎😎.

அகரன் ரிதமோட பேபி. இதைய மனசார செயல்படுத்துறா ரிதம்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அதானே இவன் கூப்பிட்டா உடனே நாங்க கிளம்போனுமா!!!😆😆😆😆🤭🤭🤭🤭.
அதெல்லாம் முடியாது முடியாது.
என்ன பண்ணறே ஏகா அகரன் ரிதமோட பையன் தான் ஆயிரம் வாட்டி பேப்பர்ல எழுதி கொண்டு வந்து ரிதம் கிட்ட சப்மிட் பண்ணு.
அப்பறமேட்டு நாங்க ஓகேன்னு தோணுனா வர்றோம் 😎😎😎😎😎.

அகரன் ரிதமோட பேபி. இதைய மனசார செயல்படுத்துறா ரிதம்.
ஏகனுக்கு தண்டனை எல்லாம் பலமா இருக்கே 🤔🤔🤔🤔
 
Top