Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 40 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 40 ❤️‍🔥


"சுவைக்க தூண்டும்
வற்றா அமிர்தம் நீ.....!!!"




இரவே நிவேதாவின் மாமாவிற்கு,"இனி பயப்பட ஒன்றும் இல்லை!" என்று கூறியதால்.. காலை வரை தான் மட்டும் அவர்களோடு இருந்த ரிதம் தன் அத்தை,மாமா இருவரையும் இல்லத்திற்கு அனுப்பி இருந்தாள்.

'பாவம்!'

அவர்கள் தான் மருத்துவ குழுவோடு இணைந்து பேசி சுற்றியது என்பதால் அவர்களை அனுப்பிவிட்டு தான் மட்டும் அங்கே இருந்தவள்.கிளம்பும் நேரம் நிவேதாவின் மாமா மனைவியிடம் வந்து..

"பெரியம்மா இதுல கொஞ்சம் பணம் இருக்கு கை செலவுக்கு வச்சுக்கோங்க. இப்போ நிவேதா இங்க வரமுடியாது அதுனால அவளை நேரா வீட்டுக்கு வர சொல்லிடுறேன் பெரியம்மா!" என்று குணமாய் கூற.

அவள் சொல்ல வருவது புரிந்தவராய்;

"சரி ரிதம்! எனக்கு புரியுதுமா. நீயும் அவளை கொஞ்சம் பாரத்துக்கோமா.அந்த தம்பி நல்ல பையன் தானேம்மா!?" என்றார் கவலையாக.

"ஆமாம் பெரியம்மா! என் வீட்டுக்காரருக்கு தம்பி மாதிரி அவரு.நல்ல குணம் பெரியம்மா!" நம்பிக்கை கூறி அங்கிருந்து விடைபெற்றாள் ரிதம்.

முதலில் கணவன் கூறிய 'இல்ல முகவரிக்கு' செல்லாது;பாதியில் விட்டுவந்த தோழியை காண இவள் செல்ல.

தன் மனைவி,"அங்கு தான் வருவாள்!" என்பதை உணர்ந்தது போல அங்கே தன் காருடன் அமர்த்திருந்தான் ஏகன்.

ரிதம் கண்டும் காணாது வீட்டிற்குள் சென்றவள் கண்டதோ...

தோழியர் இருவரும் முட்டிக் கொண்டு நிற்க அவர்களின் கணவன்மார்கள் இருவரும் கையில் நொறுக்கு தீனி இல்லா கவலையோடு வேடிக்கை பார்த்திருந்தனர்.

"என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்!?" என்றபடி வந்த ரிதமின் பின் சென்று ஒழிந்தாள் நிவேதா.

"ரிதம் நீ விலகுடி இன்னைக்கு இவளை ஒருவழி பண்ணாம விடவே மாட்டேன்!" என்றாள் ரேணு.

"நீ பொறுமையா இருடி ரேணு!"என்று அவளை அமைதிபடுத்தியவள்

நிவேதா புறம் திரும்பி,"என்ன திருகு வேலை பார்த்தடி நீ!?" என்றாள்

"நான் ஒன்னுமே பண்ணலைடி!" அறியாபிள்ளை போல் விழிக்க

"நடிக்காத என்ன திருகு வேலை பார்த்த!?" என்று கண்டிப்பாய் வந்தது ரிதமின் குரல்

"நான் இப்போ என்ன பெருசா பண்ணிட்டேன் 'ஹா......' ஏதோ பால் சட்டில இருந்த பாலாடை பார்க்க அழகா இருக்கேன்னு எடுத்து சாப்பிட்டேன் வேற என்ன நான் பண்ணினேன்!?" என்றாள் இவளும் இப்பொழுது கோபமாக.

ஆண்கள் இருவருக்கும் 'அது ஒன்றும் பெரிய தவறு இல்லையே!' என்று தான் தோன்றியது.

ஆனால் ரேணு கூறிய பிறகுதான் நிவேதாவின் 'திருகுதத்தம்' புரிந்தது.

"ஏன்டி காய்ச்சி வச்ச ரெண்டு லிட்டர் பாலுக்குள்ள கையவிட்டு பாலாடை அள்ளி சாப்பிட்டுட்டு ஒன்னுமே பண்ணலைன்னு வேற சொல்றா பாருடி இவ!" என்க.

'அட பாவி!' என்றானது வேடிக்கை பார்த்த இளஞ்சிங்கங்கள் இருவருக்கும்.

"ஏன்டி இப்படி பண்ற உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாது இப்போ வீட்டுக்கு யாராவது வந்தா எப்படி டீ காபி குடுக்குறது!?"

ரிதம் ஆற்றாமை உடன் கேட்க.

மங்கை மணாளனுக்கு 'பொறுக்கவில்லை!' நிவேதாவை தோழியர் கூறிய குறைகள்.

"நான் போய் வாங்கிட்டு வரேன் ரிதம்!" என்றவன் தெரு முக்கில் இருந்த கடையை கவனித்து அங்கே செல்ல.

பால் பாக்கெட் தீர்ந்ததாக தகவலுடன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பி வந்தான் இக்னேஷ்.இதெல்லாம் அறிந்து தானே அவர்கள் இவ்வளவு நேரம் தொண்டை நீர் வற்ற பேசி இருந்தனர்.

மனைவியை கேள்வி கேட்பது பொறுக்காது பெண்கள் தடுக்க தடுக்க சென்ற செயல் வீரன் வெறும் கையோடு திரும்பினான்.


அது சிறிய ஊர்.அங்கே பால் பாக்கெட் எல்லாம் அளவிற்கு அதிகமாக வாங்கி வீணாகி போனால் என்ன செய்வது என்பதால் குறைவாக தான் வாங்குவர்.


காலை ஒரு முறை டிப்போவிற்கு சென்று பால் வாங்கினால் மாலை டிப்போவில் இருந்து ஒருவர் வந்து அடுத்த நாளுக்கான பாலை கொடுத்துவிட்டு செல்லுவார்.

"இப்பொழுது என்ன செய்வது!?" என்று யோசிக்க.

நிவேதாவை ஒரு பார்வை பார்த்த ரிதம் அந்த பாலை காய்ச்சி நீயும்,அண்ணனும் 'பால்கோவா' சாப்பிடுங்க 'இதுவே என் கட்டளை' என்பதாக கூறி...

"நான் போய் என்ன பண்றதுன்னு பாக்கறேன்!?" என்றவள் அமைதியாக மேல் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.


அங்கு தான் நேற்று கிளம்பும் போது அவள் பைகளை வைத்துவிட்டு சென்றாள் என்பதால்; அங்கே சென்று குளித்து உடை மாற்றியவள் கீழே வந்து சேர.

"மனைவி கிண்டிய பால் கோவா, சட்டியை விட்டு வராது போக ஜல்லிக்கட்டாய் அதனுடன் மல்லுகட்டினான்!" இக்னேஷ்.

அவளுக்காக முன்னால் வந்த பாவத்திற்கு இக்னேஷிற்கான 'தண்டனை கொஞ்சம் அதிகமோ!?' என்று யோசனையில் இருந்தான் பிரபாகரன்.

"உனக்காக பேச போய் எனக்கு எவ்வளவு பெரிய தண்டனைடி குடுத்துருக்க!?" என்று இக்னேஷ் காதல் மனைவியை முறைக்க.

அவளோ, கடினப்பட்டு இக்னேஷ் பிரிக்கும் பதார்த்தத்தை எல்லாம் சிறிது சிறிதாக எடுத்து கோணிய முகத்துடன் உண்டிருந்தாள்.

ரேணு தான்,"இவளுக்கு இனிமே நியாயம் கேட்டு ஒரு ஆள் வரமாட்டாங்க!" என்று கூறி "ஹாஹாஹா.."என்று விடாது சிரித்து கண்களில் நீரே வந்துவிட்டது அவளுக்கு.

நிவேதாவின் கண்கள் தோழியை முறைத்தாலும் கைகள் தன் வேலையை செய்தது.

இதில் கொடுமை 'எதுவெனில்!?'

"தன் வாயிற்குள் சிறு அளவில் வைக்கும் நிவேதா; கணவன் வாயினை நிறைத்து கொடுமை செய்தாள்!"


(இதற்குப் பெயர் பால்கோவா என்றால் பால்கோவா பிரியர்களுக்கு கோபம் வரும் என்பதால் வெறும் பதார்த்தம் என்றே நாம் கூறலாம்!)

திருமணமான மறுநாளே இத்தகைய நிலைக்கு தன்னை ஆளாக்கிய விதியை நொந்து கொண்டு,

"இனி நீ கிட்சன் பக்கம் கூட போய்டாதடி!" என்றான் மன்னவன்.

அதற்கு வீராப்பாய்,"இங்க பாரு குடுமி எனக்கு பலகாரம் செய்ய தான் பக்குவம் தெரியாது.ஆனா சாப்பாடு நல்லா செய்வேன்!" என்றாள் நிவேதா.

இதை ,'நம்பலாமா!?' , 'வேண்டாமா!?' என்று பட்டிமன்றம் நடத்தி இருந்த நேரம்

"மேடம்..." என்று ஒரு குரல் வாயிலில் இருந்து கேட்டது

"யாரது!?"

என்று எட்டிப் பார்க்கும் சாக்கில் எழுந்து கொள்ள முயன்ற நிவேதாவை தன் கண்பார்வையில் அடக்கி அமரவைத்த ரிதம் தான் சென்று பார்க்க.

அங்கே ஏகன் பாதுகாவலர் ஒருவர் நின்றிருந்தார்.

"சொல்லுங்க அண்ணா!?"

"மேடம் சார் உங்களுக்கு எதும் ஹெல்ப் வேணும்னா செய்ய சொன்னாங்க!" என்க.

அவரிடம் 'ஒன்றுமில்லை!' என்று அனுப்பியவள் தன்னவன் வாகனம் இருக்கும் இடம் வந்தாள்.

காரின் ஜன்னலை தட்டி உள்ளே வருமாறு அழைக்க அவன் தயங்கினான்.

"நம்ம வீட்டுக்குள்ள வர்றதுக்கு உங்களுக்கு அப்படி என்ன தயக்கம்!?" என்று வீம்பாய் நிற்க.

அவளுக்காக மட்டுமே அவ்வீட்டில் கால்பதித்தான் ஏகன்.

தன் பாஸை கண்டவன்,"மன்னா! பார்த்தாயா என் நிலையை!?" என்பது போல் பாவமாய் பார்க்க.

ஏகன் முகத்தில் புன்னகை அரும்பிய அதே நேரம்;

"நல்லவேளை தன் மனைவிக்கு சமையல் நன்றாக வரும்!" என்ற ஆன்ம திருப்தியும் ஏற்பட...அமைதியாக சென்று ஒரு இருக்கையில் அமர.

வெளியே வந்த ரேணு,"அண்ணா தண்ணி கொண்டு வரவா!?" என்க

"இல்லம்மா எனக்கு வேண்டாம்!" என்றான்.

"நான் போய் எடுத்துட்டு வரவா!?" என்றாள் ரிதம்.

"இல்லடி நான் வீட்ல சாப்பிட்டு தான் வந்தேன்!" என்றிட

சட்டியில் ஒட்டிக் கொண்டிருக்கும் 'பிசின்' போன்ற ஒன்றை இக்னேஷ் சுரண்ட அவனுக்கு ஒரு வாய்,தனக்கு ஒரு வாய் என ஊட்டிக் கொண்டிருந்த நிவேதா...
என்று அங்கு நடக்கும் கூத்தை கண்ட ஏகன்
மனைவியிடம் "என்ன நடக்குது இங்க!?" என்று கண்களால் வினவ.

ரேணு தான் சிரிக்க சிரிக்க ,'காலை நடந்த கூத்தையும்; இருவரின் தண்டனையையும்!' விளக்க.

"அதுக்கு புதுசா பால் வாங்கி இருக்கலாம் இல்ல அதை விட்டுட்டு இதை இப்படியா பண்ணுவாங்க!?" என்றான் தன் உதவியாளனுக்கு பரிந்துகொண்டு.

"இப்போ நீங்க அமைதியா இல்லைன்னா உங்களுக்கும் நிவேதா செஞ்ச அந்த கட்டி பார்சல் ஆகும் என்ன சொல்றீங்க!?" என ரிதம் எச்சரிக்க.


"கேட்டால் சுவையாக செய்து தர அவன் மனைவி இருக்க.நிவேதா செய்யும் ஒட்டுகட்டியை உண்ண அவனுக்கு என்ன தலை எழுத்தா!?"

'கப்சிப்' என்று வாயை மூடிக் கொண்டான் ஏகன்.

அடுத்த தெருவில் இருக்கும் இளைஞன் ஒருவனை அழைத்த ரிதம்..காரைக்குடி வரை சென்று பால்பாக்கேட் வாங்கி வருமாறு உதவி கேட்க.

அவனோ," என்ன அக்கா பால் பாக்கெட்டா!? நிவேதா அக்கா பாலாடை எடுத்துடுச்சா!?" என்று கிண்டலாக வினவிக் கொண்டே சென்று விட்டான் அவன்.

இப்பொழுது பிரபாவால் கூட 'பாவம்!' என்று நினைக்க முடியாது போக அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.

ரேணுவோ நிவேதா முகம் இன்னும் பாவமாய் மாறக் கண்டு.

"சரிடி ரிதம் இதுவே இவளுக்கு கடைசியாக இருக்கட்டும். இனி இப்படி செஞ்சான்னா அவளையே ஒரு வாரத்துக்கு சமைக்க சொல்லி அவளையே சாப்பிட சொல்லலாம்!" என்றாள் ரேணு.

அவள் தான் முதலில் புகார் கூறியது என்றாலும்; தோழியின் முகம் சுருங்க அமர்ந்திருந்த நிலை காணபொறுக்காது பரிந்துவர.

அப்பொழுதும் விடாத ரிதம் அந்த சட்டியை கழுவும் பொறுப்பை தம்பதிக்கு வழங்கி கௌரவித்தாள்.

அன்றைய நாள் அமோகமாக நகர்ந்த நேரம்

"அடியேய் எவடி அவ.என் புள்ளைய பார்த்து ராசி இல்லாதவன்னு நாக்கு மேல பல்ல போட்டு பேசுனவ....இப்போ பேசுங்கடி ஆக்கம் கெட்டவளுங்களா!" என்றவாரு வந்தார் ரேணுவின் தாய்.

அவ்வளவு தான் மதிய உணவிற்கு வேலையில் இருந்த ரிதம்,ரேணு இருவரும் பதட்டமுற.

நிவேதாவோ,"இதோ என் தளபதி வந்தாச்சுல!" என்று கூவலோடு ஓடி இருந்தாள் வாயிலுக்கு.


ரேணு ரிதமிடம் கெஞ்சலில் இறங்கினாள்.
"அடி போய் அது வாயை மூடுடி இல்லைனா அவ்வளவு தான்! என் வீட்டுக்காரர் இருக்கது கூட யோசிக்காம எதையும் பேசிட போகுது!"என்று விரட்ட.


வாசலை நோக்கி சென்ற ரிதம் "அகிலாம்மா நீங்க உள்ள வாங்க பேசிக்கலாம்!"

"இல்ல ரிதம் இதுக்கு எனக்கு ஒரு தீர்வு வேணும் ரிதம் இல்லைனா புள்ளைய நாளபின்ன எவளும் எதுவும் பேசுவா!" என்று வீம்பாக வம்பிற்கு நிற்க.


"சரி நீங்க நின்னு சண்டை போட்டு முடிச்சிட்டு வாங்க உங்க மருமகனுக்கு யார் வந்து விருந்து வைக்கிறது!?" என்று ரிதம் சரியான இடத்தில் அவருக்கு கொக்கி இட...

"என்னாது கல்யாணம் ஆகிடுச்சா என் தங்கத்துக்கு!?" என்றவாறு வீட்டிற்குள் புயலாய் நுழைந்தார் அகிலாண்டம்.

அவரின் பின்னே அமைதிப்படையாய் நுழைந்தார் ரேணுவின் தந்தை ஆடியபாதம்.


பல ஆண்டுகளாக சொத்து பிரச்சனை ஒன்று நிலுவையில் இருக்க அதன் தீர்ப்பு நேற்று நடக்க இரு தரப்பினரையும் வரகூறி நீதிமன்ற அழைப்பு வந்திருக்க.

'சென்றே ஆகவேண்டிய கட்டாயம்' என்பதால் சென்றவர்கள் மாலை வரை வேலை முடியாது நீள.இன்று காலை வேலைகள் மொத்தமும் முடிந்த பின்னர் வந்திருந்தனர்.


உள்ளே செல்ல கதவில் சாய்ந்து நின்ற நிவேதா அவரைக் கண்டு ஓடிவந்து அணைத்து கொள்ள.

"தங்கம் இது தான் உன் வீட்டுகாரராடி. பொன்னியின் செல்வன் 'ஜெயம் ரவி' மாதிரி குடுமி போட்டிருக்கு ஆளு நல்லா தான்டி இருக்காப்ள!" என்றவர்

"இது யாருடி தோரணையா இருக்கது!?" என்றார் அவளிடமே

"இவரு என் வீட்டுக்காரர் அகிலாம்மா!" என்றாள் ரிதம்.

"உனக்கு ஏத்த பொருத்தமான ஆளுதான் நல்லா உயரமா சினிமா ஸ்டாரு மாதிரி இருக்காரே!" என்று புகழ் பாட.

சிறிது நேரம் அங்கிருந்த ஏகன் 'வேலை' என்று கூறி வெளியே சென்றவன் வெளியில் உண்பதாக கூறிவிட.



மதிய உணவை முடித்துக் கொண்டு தாத்தா,அகரன் உடன் பாலு,லதா இருவரும் வந்து சேர.

ரிதம் ஒரு புறம்,அகிலா ஒரு புறம் என்று இருவரும் கேள்வியால் குடைந்தனர்.
"ஏன் இங்க வந்து சாப்பிடலாம் இல்ல!?" என்று.


அவர்கள் வேலையாள் அறியாது சமைத்து விட; தவிர்க்க முடியாது உண்டதாக கூறி சமாளித்து விட....

ரிதம் மனது தான்,"ஏகன் குடும்பமாக சேர்ந்து எதையோ மறைக்கும் உணர்வு!
அது என்னவாக இருக்கும்!?" என்ற யோசனையை சுமந்து சுற்றினாள்.

மற்ற அனைவரும் மதிய உணவை முடித்து ஊருக்கு செல்ல தயாராகினர்.

ரேணு அவள் கணவன் பிரபாகரன், நிவேதா இக்னேஷ் ஒரு காரில் வர.

ஏகன் அவன் குடும்பம் ஒரு காரில் வர.
பாலு,லதா காரில் தாத்தா ஏறிக் கொள்ள,நிவேதா இக்னேஷின் இணைந்த பயணம்..


"இனிதே தொடங்கியது...!"
 
ரிதம் மனது தான்,"ஏகன் குடும்பமாக சேர்ந்து எதையோ மறைக்கும் உணர்வு!
அது என்னவாக இருக்கும்!?" என்ற யோசனையை சுமந்து சுற்றினாள்.

ஹலோ, Author ji,


இப்படியெல்லாம் build up குடுத்துட்டு கடைசியில பெருசா ஒண்ணுமே இல்லன்னு கைய விரிச்சீங்க.....

அப்புறம் இருக்கு உங்களுக்கு !!!!!! :censored::censored::censored::censored::censored::censored::censored::censored:
 
அப்படி என்ன சீக்ரெட் ஏகன் 🤔🤔🤔🤔🤔
அத அவன் ரிதம் கிட்டயே சொல்லலையே நமக்கா சொல்லுவான் அழுத்தம் புடிச்ச மண்டகசாயம்😠😠😠
 
ஹலோ, Author ji,

இப்படியெல்லாம் build up குடுத்துட்டு கடைசியில பெருசா ஒண்ணுமே இல்லன்னு கைய விரிச்சீங்க.....

அப்புறம் இருக்கு உங்களுக்கு !!!!!! :censored::censored::censored::censored::censored::censored::censored::censored:
ஈஈஈ....😁😁😁 நோ பேட் வேர்ட்ஸ்.... கண்டிப்பா எதிர்பாராததை எதிர்பாருங்கள்😎😎😎
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நிவே பண்ணுன வேலையால குடுமியும் சேந்து சட்டி சுரண்டுதே‌
அப்படி என்ன சீக்ரெட் டா இருக்கும்🙄🙄🙄🙄??.
அந்த நாடகம் சரியான சுயநலம் புடிச்ச பணம்புடிங்கி.
ஒரு வேளை அகரன் பிறப்பு விசயத்துல ஏதாவது சீக்ரெட் இருக்குமோ?🤔🤔🤔🤔🤔
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நிவே பண்ணுன வேலையால குடுமியும் சேந்து சட்டி சுரண்டுதே‌
அப்படி என்ன சீக்ரெட் டா இருக்கும்🙄🙄🙄🙄??.
அந்த நாடகம் சரியான சுயநலம் புடிச்ச பணம்புடிங்கி.
ஒரு வேளை அகரன் பிறப்பு விசயத்துல ஏதாவது சீக்ரெட் இருக்குமோ?🤔🤔🤔🤔🤔
அப்படியே ஒரு அமாஞ்சிகிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிடலாம் பார்க்காதீங்க நான்லாம் பிரச்சனை இருக்க விசயத்தை சொல்லவே மாட்டேன் ஆமாம்🤣🤣😂😂
 
Top