Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 44 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 44 ❤️‍🔥



"தீரா சாபம்
தீருமோ உன்னால்.........!?"



தீக்க்ஷி இதற்கு முன் இருந்த படப்பிடிப்பின் போது நண்பன் ஆனவன் தான் ரோகன்.


நண்பன் என்றால் நண்பன் மட்டுமே என்று நினைத்தால் அது தவறு கிடையாது.


'ஆனால்!'


இங்கே அதையும் தாண்டிய பிணைப்பு ஏற்பட.. இவர்களின் நெருக்கம் அனைவரின் கண்களில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ள யாருக்கும் அங்கே நேரமில்லை.

இதனை செய்தியாளர்கள் கூட்டம் கண்கொத்தி பாம்பாக கவனிக்க பெரும் தொழில் அதிபரின் மகனான ரோகன் அதை பெரிதாக எடுக்க வில்லை.

அவனை பெற்ற தந்தையான கோடிகளின் அதிபர் ராஜீவ்,'இதனை கண்டும் காணாது போவாரா என்ன!?'

தான் சம்பாதிக்கும் பணத்தை மகன் செலவிடுவது அவருக்கு கவலை இல்லை தான்.இருந்தும் அதனை அநியாயமாக ஒரு பெண்ணிடம் மகன் ஏமாந்தால் அவர் 'என்ன செய்வார்!?'

தரமாய் செய்தார் 'ஒரு சம்பவம்...!'

தீக்ஷிக்கு அவளின் நிலை எண்ணி பெரும் கோபம் உண்டானது.

"என்றைக்கு அவள் ஏகனை மணந்தாளோ? அன்றில் இருந்து அவளுக்கு பணத்தில் குறை வந்தது கிடையாது!"


ரோகன் என்பவன் அவள் வாழ்வில் வந்து அவளுக்காக செலவுகள் பல செய்தாலும் அசடன் அவன்.


ஏகனி. ஊக்ஷன் 'கம்பீரம்' எல்லாம் இவனுக்கு சுட்டு போட்டாலும் வராது.ஆனால் ரோகன் கணக்கு வழக்கின்றி இவளுக்காக செலவு செய்திட முன்னால் வர.

தானாய் வரும் லட்சுமியை வேண்டாம் சொல்ல தீக்ஷி தியாக செம்மல் கிடையாதே.

'வந்தவரை லாபம்!' என்று அவனை முடிந்தவரை உறிஞ்சி எடுக்க.

'எடுத்தவரை போதாது!' என்று ரோகன் பெயரில் உள்ள எஸ்டேட் ஒன்றை இவள் பேருக்கு மாற்றி தரக்கோர.... அதுவரை மகன் செல்லும் பாதை அறிந்து கண்டிக்காத அவன் தகப்பன் தீக்க்ஷி சொத்துக்களை எழுதி வாங்க முயல்வது தெரிந்ததும் பொங்கி எழுந்துவிட்டார்.


ஏகன் போல 'சாக்கடை' என்று எண்ணி விரட்ட அவருக்கு பெரிய மனதில்லை போல.


'ஆம்'


இந்தி திரை துறையில் இனி அவள் நடிக்காதவாரு செய்ததுடன் இனி சில ஆண்டுகளுக்கு அவள் திரையில் வராத அளவிற்கு வேலை பார்த்து இருந்தார்.



கையில் இருந்த இருப்பை எல்லாம் தீர்த்து எத்தனை போராடியும் அங்கே திறமை வாய்ந்த தீக்க்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காது போனது.அதனால் தான் இனி தன்னால் வட இந்திய படங்களில் நடிக்க முடியாது என்பதை அறிந்து அங்கிருந்து கிளம்பி தென்னிந்தியாவில் தன் ஜாகையை அமைக்க.


மீண்டும் 'ஏகன்' எனும் ஒரு கொழுக்
கொம்பை நாடி வந்திருந்தாள்.


அவளே அறியாத ஒன்று...

ஏகன் இவளை எங்கு கண்டாலும், 'நடமாட்டம் இல்லாது செய்யும் நோக்கோடு இருக்கிறான்!' என்று.


கண்டாலே இந்நிலை என்றால்; அவன் மகனை இவள் தொட நினைக்கிறாள் என்பது அறிந்தான் என்றால் இவளின் நிலை 'என்னவாகும்!?'



அகரன் பயிலும் பள்ளி வாயிலில் நின்றிருந்தாள் தீக்ஷி.


அவளுக்கு ஏகன் மூலம் தன் பணத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஏகனின் பிள்ளை பாசம் முதலில் நின்று இவளை இழுக்க.


"அதில் இருந்தே தன் ஆட்டத்தை தொடங்கலாம்!"என்று இருக்க.



அதன்படி பள்ளி வாயிலில் நின்றிருந்தாள்..
கைபேசியில் அவள் பெற்ற பிள்ளையின் வரிவடிவம் இருந்தது.



"தான் பெற்ற பிள்ளை எவ்வாறு இருப்பான்!?"



ஒரு தாய் புகைப்படத்தில் கண்டுதான் தன் பிள்ளையை அறிகிறாள் எனில் அவள் எத்தகைய அபாக்யவதி.அதெல்லாம் அவளுக்கு தேவை கிடையாது.
அவளை பொருத்தவரை பாக்யம் என்பது 'பணம் நிறைந்து இருத்தல் மட்டுமே!'என்று எண்ணி சுற்றும் பூமியின் பெரும் பாரம்.



சில விளம்பரப் படங்கள் தற்சமயம் அவள் கைவசம் உள்ளது.அதைவைத்து அவள் முன்னேறலாம் தான்...ஆனால், அவளை.. அவளின் செயல்களை.. எல்லாம் கண்டும் காணாதது அவளை பாதுகாக்கும் புகலிடம் ஒன்று தேவை.



"நான் யார் தெரியுமா!? ஏகன் மனைவி!" என்று சொல்லிக்கொண்டு அவனையும் அவன் பணத்தையும் ஆள நினைக்கும் எண்ணத்தில் தான் இம்முறை வந்திருக்கிறாள்.



அனைத்து பிள்ளைகளும் சென்றபின் அகரன் மெதுவாக நடந்து வர.


கண்டுகொண்டாள் ஏகனின் புதல்வனை
அவன் அருகே சென்று நிற்க.. திடீரென்று "யாரோ தன்னை நெருங்கக் கண்டு விலகினான் பிள்ளை!"



இவளோ அவன் கைகளை பிடித்துக் கொண்டு உரிமை கொண்டாடத் தொடங்கினாள்.


"கண்ணா அம்மா வந்திருக்கேன்டா பாரு!" என்றவள் பேசத் தொடங்கும் போதே


"மேடம் தம்பியை விடுங்க நீங்க தள்ளி போங்க!" என்றவாறு அருகில் வந்திருந்தார் அகரனை பள்ளிக்கு அழைத்துவர நியமிக்கபட்ட வாகன சாரதி.


அவரை பலம்கொண்டு தள்ளிவிட்டு மீண்டும் அகரனை நெருங்க.


அவள் தள்ளியதில் விழுந்தவர் தலையில் அடிபட்டாலும்; எழுந்து வர முயல... அதற்குள் பல அனர்த்தம் நேர்ந்துவிட்டது.


தன்னை மீண்டும் நெருங்கிய தீக்ஷியை கண்டு அகரன் முகத்தை சுருக்கிக் கொண்டு ஓட முயல....

ஓடும் பிள்ளையின் கைபற்றி இழுத்தவள் "அம்மா வந்திருக்கேன்னு சொல்றேன் நீ எங்கடா ஓடுற!?" மிரட்டலாய் கேட்க.

அவனோ,"விடுங்க நீங்க யாருன்னே எனக்கு தெரியாது.எங்க அம்மா பேரு ரிதம் இப்போ வேலைக்கு போயிருக்காங்க!" துள்ளினான் சிறுவன்.

அவனை விடாது பிடித்தவள் கன்னத்தை கிள்ளி,கைகளில் சில அடிகளை கொடுக்க அவ்வளவு தான் பிள்ளை மண்ணில் சரிந்தான்.

பட்டென்று அவன் சரியவும் 'எங்கே தான் மாட்டிக்கொள்வோமோ!?' எனும் அச்சத்தில்
அவனைவிட்டு விட்டு ஒரே ஓட்டமாக தான் வந்த காரில் ஏறி ஓடி இருந்தாள் அந்த அன்புத்தாய்.


மண்ணில் விழுந்து புழுவாய் துள்ளத் தொடங்கினான் பிள்ளை.....அவன் உடல் முழுதும் ஒவ்வாமையின் அறிகுறிகள் தென்பட தொடங்கியது.



இந்த இரண்டு நாட்கள் வேலை அதிகம். அதெல்லாம் அவளுக்கு கவலை கிடையாது அவளின் எண்ணம் எல்லாம் அகரன் மட்டுமே நிறைந்திருந்தான்.


பிள்ளையை பார்த்து முழுதாக ஒரு நாள் ஆகப்போகிறது.


மகனை பார்க்கும் ஆவலில் வீட்டிற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு,சிறு தூக்கம் தூங்கி எழ.
உடல் அலுப்பு தீர்ந்தாலும் மனம் ஒருநிலையில் நில்லாது தவிக்க.



மகன் வரும் வரை காத்திருக்க பொறுமை இல்லாது ஓட்டுனரை அழைத்துக் கொண்டு பிள்ளை பயிலும் பள்ளிக்கே சென்றுவிட்டாள் ரிதம்.


அவளை பள்ளி நோக்கி சக்தி ஒன்று உந்திய உணர்வு அவளுக்கு.


"ஏன் மனம் பதறுகிறது!?"


காரணம் அறியா பதட்டம் இதயம் கூட மிதமிஞ்சிய வேகத்தில் துடிக்கும் உணர்வு.


மகனைக் காணும் ஆவலில் வந்தவள் கண்களில் விழுந்தது எல்லாம் மண்ணில் விழுந்து துடிக்கும் மகன் மட்டும் தான்.


விரைந்து ஓடினாள் ரிதம் "அகரா.......!" என்ற அலறலுடன்.



"அம்மா.. அம்மா.. அம்மா.. எரியுது..! அரிக்குது..!!" பிள்ளை அவனோ பெறாத அன்னையை கண்டு கன்றாய் கதறத் தொடங்கினான்.



அவளுக்கு நினைவில் வந்தது எல்லாமே பிள்ளை மட்டுமே என்றாக...தான் வந்த வாகனத்தின் ஓட்டுனரை அழைத்து கீழே விழுந்திருக்கும் அகரனின் தனிப்பட்ட ஓட்டுனரை வண்டியில் ஏற்றுமாறு கூறியவள் மகனை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வாகனத்தில் ஏறினாள்.


கார் விரைந்தது என்பதை விட கார் பறந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
நல்லவேளையாக ஏகன் மகன் போக்குவரத்திற்கு ஒரு காரும்.


ரிதம் 'வேண்டாம்!' என்று மறுத்தும் அவளுக்கென்று தனி காரும் அனுப்பியது எவ்வளவு நல்லதாகி போனது என்பது
இன்று தான் புரிந்தது அவளுக்கு.


இப்பொழுது இவளுக்கு மட்டும் தனியே கார் ஒன்று இல்லை எனில்;போக்குவரத்து குறைவாக உள்ள இந்த இடத்தில் எங்கிருந்து வாகனம் பிடித்து.. எப்பொழுது இவள் வீட்டில் இருந்து பள்ளி வந்து... பிள்ளையை பார்ப்பதற்குள் அவனுக்கு வேறு எதுவும் நேர்ந்தால் என்ன செய்வது!?"

"அகரன் பாதம் தரையில் படாது கங்காரு குட்டியை சுமப்பது போல சுமந்து திரிந்தவள் அவள் தானே!"

அவளின் கண்முன்னே,"மண்ணில் துள்ளத் துடிக்க கதறும் மகனை கண்ட அன்னை மனதுதான் என்ன பாடுபடும்!?"

"ஐயோ தம்பி! ஒன்னும் இல்லைடா அம்மா வந்துட்டேன். இதோ ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கோம் தங்கம்!" என்றவள் சேலை முந்தானையை எடுத்து அவனுக்கு விசிறிக் கொண்டே வந்தாள்.


தன் தண்ணீர் பாட்டிலை எடுத்து பார்க்க தண்ணீர் இல்லாததால் ஓட்டுனரிடம் தண்ணீர் கேட்க.


அவர்,"கொடுக்க மாட்டேன்!" என்க


"அண்ணா கொஞ்சம் உங்க பாட்டில்ல இருக்க தண்ணி தாங்கண்ணா!" என்று அழுகை ஊடே கேட்க


"இல்ல மேடம் சார் சொல்லி இருக்காங்க தம்பிக்கு எங்க பொருள் எதையும் குடுக்க கூடாதுன்னு!" என்றார் அவர் சங்கடமாக.


"அண்ணா அதெல்லாம் பார்க்கற நேரமா குடுங்கண்ணா!" வீம்பாய் கேட்க


அதன் பின்னர் மறுக்க முடியாது அவர் எடுத்து கொடுத்த நீரை புகட்ட அது மேலும் பிள்ளைக்கு 'உடல் உபாதைகளை' அதிகரித்தது.



"என்ன ஆனது!?" ஒன்றும் புரியா நிலை.
மருத்துவமனை சென்று சேர்ந்ததும் சிறுவனுக்கு சிகிச்சை தொடங்க.



சிறிது நேரத்தில் மாமியார் முகம் கண்டவள் அவரிடம் ஒன்றும் பேசவில்லை.



ஒரு ஓரமாக சென்று அமைதியாக அமர்ந்து கொள்ள ஒரு மணி நேர போராட்டத்தின் முடிவில் அறையில் இருந்து வெளிவந்த மருத்துவர்கள் குழு.


"பையனுக்கு ஒன்னும் இல்ல.இனி ரொம்ப கவனமா பார்த்துக்கோங்க!"என்று கூற கேட்ட பிறகுதான் உயிரே வந்தது அவளுக்கு.


வாகன சாரதியை தன் ஆட்கள் மூலம் அடி வெளுத்துக் கொண்டிருந்தான் ஏகன்.


பள்ளியில் இருந்து அவனுக்கு தகவல் கிடைத்த உடன் அவன் செய்த முதல் வேலை,மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வாகன ஓட்டுனரை அழைத்து வரக்கூறியது தான்.


'இதற்கு தீர்வு காணாது மகனைக் காண்பதில்லை!' என்ற சபதம் ஏற்றவன் போல வெறியாய் சுற்றினான்.



அவர், "தான் செய்யவில்லை!" என்று எவ்வளவு கூறியும் ஏகன் கேட்கவில்லை கோபம் அவன் கண்களை மறைத்தது.


அடித்ததோடு வாகன சாரதியை வேலை நீக்கம் செய்துவிட.அவர் ஏகனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே சென்றார்.

அவர் பார்வை அவனை சுட்டாலும் அவன் 'கண்டுகொள்வதாக இல்லை!'



அடிவாங்கிய நபர் நடக்க இயலாது அவ்விடம் விட்டு அகல.அவர் சென்ற சிறிது நேரத்தில் கையில் காணொளி பதிவுடன் வந்தான் இக்னேஷ்.


அதில் நடந்த சம்பவம் பதிவாகி இருக்க... அத்தனை அடிவாங்கி நடக்க முடியாத போதும் அவர் பார்த்த பார்வை 'உண்மையின் பார்வை அல்லவா!'

"என்றைக்கும் உண்மைக்கு தான் சாட்சி தேவை;பொய்மைக்கு அதெல்லாம் தேவையே கிடையாது!"


உண்மையை நிரூபிப்பதை கூட சட்டத்தில் சுமையாக தானே வைத்துள்ளனர்.
'பர்டன் ஆப் ப்ரூஃப்' என்று.


லதா மூலம் 'பிள்ளை நலம்' என்ற தகவல் அறிந்த ஏகன் மருத்துவமனை வர, அவனுடன் இக்னேஷ் இருந்ததால் அவன் மூலம் நிவேதா, நவநீ என்று ஒவ்வொருவருக்கும் தகவல் பரவ.

நிவேதா மூலம் ரேணுவிற்கு பரவ...மொத்த கூட்டமும் மருத்துவமனை வந்து சேர்ந்தது.

சிதம்பரம் தாத்தா மட்டும் வரவில்லை.


அதுவரை நிவேதா,ரேணு என்று யார் வந்து பேசியும் அசையாது சிலையாக அமர்ந்திருந்தவள்.


கணவன் வந்து "ரிதம்..!" என்ற உடன் கண்களில் வடிந்து கழுத்தை கடந்து சேலையை நனைத்த கண்ணீர் துளியுடன் நிமிர்ந்து முகம் பார்த்து



"சொல்லுங்க என் பிள்ளைக்கு என்ன தான் ஆச்சு!? என் பிள்ளைக்கு உடம்புல என்ன நோய் இருக்கு!?என்கிட்ட குடும்பமா எதையோ நீங்க மறைக்கிறீங்க!?"எனக்கு தெரியும் அவன் உங்க பிள்ளை தான்! ஆனா... அவனை பார்த்துக்கற ஒரு ஆயாவா நினச்சாவது சொல்றீங்களா!? ஒன்னுமே புரியலங்க இங்க என்ன நடக்குதுன்னு...? என்னால முடியலங்க!!!"




"வெளிய எங்கேயும் பிள்ளைய விடமாட்டேன் சொல்லி உங்ககிட்டவே வச்சு
பார்த்துகிறது நல்லது தான்.ஆனா... அவனை ஏன் என்னை தவிர யாருகிட்டையும் நெருங்க விடமாட்டேனு சொல்றீங்க!?"



"எனக்குள்ள ஆயிரம் கேள்வி இதுபோல இருக்குங்க எனக்கு யார் பதில் சொல்லுவா சொல்லுங்க!?"



"தாத்தா கூட அன்னைக்கு சொன்னாரே 'உனக்கு சொல்றதுக்கான ஆள் நான் இல்லைன்னு!' நீங்களும்
சொல்லமாட்டீங்க!? அப்ப நான் யார்கிட்ட போய் கேட்கட்டும் சொல்லுங்க!?"


"நீங்க எல்லாருமா சேர்ந்து என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க!?"


"எனக்கு நல்லா தெரியும்!"


"ஐயோ! என் புள்ள தரைல புரண்டு வலியில துடிச்சு போய் அழுதானே!!!"என்று நடந்த
சம்பவத்தை நினைத்து இவள் துடிக்க.


தோழியை இருபுறம் தாங்கிய
நிவேதாவும்,ரேணுவும் அங்கிருந்த ஏகன் குடும்பத்தினரை பார்க்க.


அவளின் கதறல் ஒலி பொறுக்காது கூறத் தொடங்கினான் ஏகன்.

தங்கள் பரம்பரை வாங்கி வந்த சாபத்தின் கதையை.....

நாமும் கேட்கலாம் அடுத்த பாகத்தில் இருந்து.


"அப்படி என்ன பெரிய வீகம்!?"
 
சொல்லுங்க கேட்போம் அந்த சாப கதையை.......
ஏ சோக...🔊 மன்னிக்கவும்😜😜 ஏ சாப கதைய கேளு நண்பர் குழாமே... நண்பர் குழாமே... அத கேட்டாக்க தாங்காதுங்க உங்க மனமே... ஆமா உங்க மனமே🔊🔊🔊🔊💤💤💤💤
 

ஐயையோ, என்னடா இது?...

விக்கிரமாதித்தன் லெவலுக்கு சாபமெல்லாம் கொண்டுவரீங்க?....
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே சாபமா? அதுவும் பரம்பரை சாபமா?.
ஆஹா இதைய எங்கியோ பாத்தமாதிரி இருக்குதே மூவில?.
யாராவது தொட்டா மத்தவிக பொருளை யூஸ் பண்ண நேர்ந்தா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஐ கண்டுபுடிச்சிட்டேன்.
ஹன்சிகா மோத்துவானி ரோபோவா நடிச்ச படத்துல இப்படி வரும் அலர்ஜி பிராப்ளம் ஈரோக்கு.
ஆனா ரிதமோட கையில அகரன் நல்லாதானே இருந்தான்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
எதே சாபமா? அதுவும் பரம்பரை சாபமா?.
ஆஹா இதைய எங்கியோ பாத்தமாதிரி இருக்குதே மூவில?.
யாராவது தொட்டா மத்தவிக பொருளை யூஸ் பண்ண நேர்ந்தா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ஐ கண்டுபுடிச்சிட்டேன்.
ஹன்சிகா மோத்துவானி ரோபோவா நடிச்ச படத்துல இப்படி வரும் அலர்ஜி பிராப்ளம் ஈரோக்கு.
ஆனா ரிதமோட கையில அகரன் நல்லாதானே இருந்தான்.
அஸ்க்கு புஸ்கு நான் சொல்லமாட்டேன்பா... ஆனா நீங்க பாதி கண்டுபிடிச்சுடீங்க 😜😜😜😜
 
Top