Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 47 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 47 ❤️‍🔥

"பட்டுப்போன மரமதில்
புது துளிர்கள்
உன்னால்.........................!!!"





மழை நேரம் பெரும் மழை பொழிய குப்பை தொட்டியி்ன் அருகே இருந்த நாயினை தூக்கி கொண்டு வழியில் செல்லும் வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டிருந்தாள் அதே தேவதை பெண்.
அவ்வழியே வந்த லதா பாலுவின் காரையும் நிறுத்தி உதவி கேட்டிருந்தாள்.


"தேடி அலைந்த திரவியம் வாசல் வந்த மகிழ்வு!" அவர்களுக்கு.


"சார் சார் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா!? பாவம் சார் அடிபட்டு காயமா இருக்கு சார்!" என்றாள் அவள்.


"வண்டில ஏறும்மா!" என்று அவளுக்கு அனுமதி அளித்தனர் பாலு தம்பதி.


அவர்களுக்கு அவளை அறிய கடவுளே கொடுத்த வாய்ப்பாக எண்ணிக் கொண்டனர் இருவரும்.


"உன் பேரு என்னம்மா!?" என்றார் லதா


அவள் தன் பெயரைக் கூறாது அவரை பார்க்க,"இல்லம்மா என் பேரு லதா இவர் என் கணவர் உன்னை நாங்க கோவில்ல பார்த்தோம். நல்ல பொண்ணா இருக்கியே அதுதான் உன் பேர் என்னனு தெரிஞ்சுக்க கேட்டேன்!?" என்றார்.

"என் பேரு தீக்க்ஷிதா ஆன்டி!" என்றாள் தயக்கம் நீங்கி.

"ஓ! அப்பா அம்மா என்ன பண்றாங்கமா?"

"எனக்கு யாரும் இல்ல ஆன்டி!" என்றவள் கண்ணில் நீரின் பளபளப்பு.

"சாரிம்மா!" என்ற லதா "என்ன படிச்சிருக்கமா!?" என்றார்.

அவர் இன்றே அவளை பற்றிய தகவல் வேண்டும் ஒரு முடிவில் இருந்தார் போல.
அவரை விநோதமாக பார்த்தாலும் பதில் கூற மறக்கவில்லை அவள்.


"பியூட்டிஷன் கோர்ஸ் முடிச்சிட்டு பார்லர்ல வேலை பார்க்கிறேன் ஆன்டி!" என்றாள்.

"எந்த பார்லர்லமா வேலை பார்க்கற!?" என்றவர் கேட்கும் போதே கால்நடை மருத்துவமனை வந்திருக்க

"சார் இங்க தான் நிறுத்துங்க நான் இறங்கிக்கிறேன்!" என்றவள் அந்த மருத்துவமனையில் இறங்கி "ரொம்ப நன்றிங்க சார்...நான் போய்ட்டு வர்றேன் மேடம்!" என்றவாரு சென்றுவிட்டாள்.


பாலுவின் வாகனம் நகர்ந்த மறுநொடி அவளை நோக்கி ஓடி வந்தனர்..அவளை இதுவரை படம் பிடித்துக் கொண்டிருந்த குழுவினர்.

"ஆம்! இதுவரை அவள் செய்யும் செயல்கள் யாவும் வெளியில் இருந்து பார்ப்பதற்கு சமூக சேவையாக தெரிந்தாலும்; ரகசியமாக அதனை படம்பிடிக்க ஒரு குழுவே இருந்தனர்!"

"குறும்படங்கள், விளம்பரங்கள் எல்லாம் செய்து நடிப்பில் தன்னை பெரிதாய் உயர்த்த விரும்பும் நடிப்பின் பிள்ளை அவள்.ஆனால் மனித குணங்கள் ஏதும் இல்லா கொடூர மனம் கொண்ட பெண் வடிவுடை பூதனை அவள் என்பது தான் யாருக்கும் தெரியாது போன நிதர்சனம்!"


ஒருவழியாக அவள் பகுதிநேரமாக வேலை செய்யும் பிரபல பியூட்டி பார்லரை கண்டு கொண்டார் லதா.

தீக்க்ஷி அங்கே வேலை செய்வதற்கு பெரும் காரணமே ஒரு இயக்குனரின் மகள் அங்கு தான் வழக்கமாக தன்னை அழகு படுத்த வருவாள்.


அவளை தோழியாக மாற்றி அவளின் மூலம் வெள்ளித் திரையில் மிளிர வேண்டும் என்ற 'ஆசை' அவளுக்கு கழுத்து வரை உண்டு.

அப்படி ஒரு முறை வந்த போது தான் அந்த பெண்ணிற்கு மூச்சு கோளாறு ஏற்பட.

வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தவள் உடனே அந்த பெண்ணை அக்கறையாக பார்ப்பதும்,அவசர ஊர்திக்கு அழைப்பு விடுப்பதும் என்று தன்னை அனைவரின் முன்பும் 'பரபரப்பாய்' காண்பித்துக் கொண்டாள்.

அவளின் நடிப்பை நம்பிய கூட்டம் அவளின் நாடகத்தை 'இரக்கம்' என்று எண்ணியது.


மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விதியோ இவளின் புறம் தான் அமர்ந்திருந்தது போல.

அதுவும் பாலு லதாவின் மருத்துவமனையாக இருக்க.இவளின் தயாள குணத்தை கண்டு கண்ணீர் வந்துவிட்டது லதாவிற்கு.

ஒரு மருத்துவராய் அவளின் பரந்த குணம் அவரை மேலும் இழுக்க.முடிவே செய்துவிட்டார்.இவள் தான் தன் 'மூத்த மருமகள்!' என்று.

அதுவரை மனைவியின் ஆசை என்று இருந்த பாலு கூட அன்றைக்கு அவளின் இரக்கம் கண்டு சறுக்கிவிட்டார்.

இரண்டொரு நாளில் நேரே அவளை பார்லரில் சென்று பார்த்த லதா "தனியே பேச வேண்டும்!" என்று அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.

அங்கே வாசலில் இருக்கும் அன்பர்களுக்கு இவள் அன்பாய் உதவ.அதையும் உண்மை என்று நம்பி" கொஞ்ச நாள் பழகி பார்க்கலாம்!" என்று இருந்தவர் அவளிடம் கேட்டேவிட்டார்.

"டி (D)" அவளின் செல்லப்பெயர்

"டி (D) உன்னை தேடி ஒரு ஆன்டி வந்திருக்காங்க!" என்றாள் உடன் பணிபுரியும் பெண்.

யாரென்று காண சென்றவள் அங்கே நின்றிருந்த லதாவை ஞாபகம் இருந்தாலும் இல்லாததை போல நாடகம் நடத்த.

"என்னம்மா என்ன தெரியலையா!? அன்னைக்கு மழைல..ரோட்டில... நாய்க்கு அடிபட்டு...!" என்று அவர் விட்டுவிட்டு விபரம் கூற.

புரிந்ததன் அறிகுறியாக பேச்சை வளர்த்தாள்.யாரையும் அவள் ஒதுக்கியது கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் வரை வளமான மக்களின் நட்பை வளர்க்க வேண்டும்.அது தான் அவளின் தற்போதைய முயற்சி.


அந்த வகையில் "பீஎம்டபிள்யு காரை வைத்திருக்கும் தம்பதியரை விடுவாளா என்ன!?"


"ஓ நீங்களா ஆன்டி!என்ன ஆன்டி பார்லர் வரைக்கும் வந்திருக்கீங்க!?" என்றவள்

"அன்னைக்கு நான் உங்ககிட்ட என் பார்லர் நேம் சொல்லவே இல்லையே ஆன்டி. அப்பறம் எப்படி தெரியும்!?" என்றாள்.

"இல்லம்மா அன்னைக்கு ஒரு பொண்ணை ஹாஸ்பிடல் சேர்த்த இல்ல அந்த பொண்ணுக்கிட்ட வாங்கினேன்!" என்றவர்

"ரொம்ப வேலையா இருக்கியாமா!?" என்க

"இல்ல ஆன்டி!" என்ற உடன்


"வரியா பக்கத்துல இருக்க கோவில் வரைக்கும் போகலாம் என்னை நம்பி வரலாம்மா.திரும்பி உன்னை இதே இடத்தில வந்து விட்டுடுட்றேன்!" என்றார்.


இப்படி ஏதாவது பெரும் குடும்ப நபர்களின் நட்பைத் தானே அவள் வேண்டிக் காத்திருந்தாள்.

உடனே "சரி ஆன்டி!" என உள்ளே சென்று விடுமுறை கூறி வெளியே வந்தவள் அவருடன் காரில் ஏறி பயணித்தாள்.


வாயிலில் இறங்கியதும் அன்பர்களுக்கு தானமாக கைப்பையில் இருக்கும் சில்லறைகளை கொடுத்துவிட்டு கோபுரத்தை நிமிர்ந்து வணங்கி,குனிந்து படியை தொட்டு வணங்கினாள்.

அவ்வாறு வணங்கும் பொழுது எல்லாம் அவள், "கடவுளாய் வணங்கும் நடிப்பில் வாகை சூடி ஒருநாள் பெரும் மேடைகளின் படிகளை இதே போல் வணங்கும் வாய்ப்பிற்கான முன்னோட்டமாக இதனை எண்ணிக் கொண்டே வணங்குவாள்!"
என்பதால் இன்றும் அதையே செய்ய.

அதனை 'பக்தி' என்று தவறாக புரிந்து கொண்டார் லதா.

கோவிலில் சாமியை வணங்கிவிட்டு குளத்தின் படிக்கரையில் ஓரிடத்தில் அமர.
அவளுக்கு நண்பன் ஒருவனிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது.அதனை கண்டவள் நேரம் தாழ்த்த விரும்பாது

"சொல்லுங்க ஆன்டி என்ன சொல்லணும்? என்கிட்ட.." நேரே பேச்சிற்கு தாவினாள்.

மீண்டும் தன்னை பற்றிய விபரங்களை கூறியவர் மேலும் தொடர்ந்தார்.

"எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க மூத்தவன் பேரு ஏகன் சிதம்பரம்; இளையவன் கதிர் சிதம்பரம்!"

"சரிங்க ஆன்டி!" என்றாள்

"மூத்த பையனுக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கோம்.எனக்கு உன்னை பார்க்கும் போது என் பையனுக்கு சரியா இருப்பன்னு தோனுதும்மா!" என்றவர் மகனின் புகைப்படம் காண்பிக்க.

"ரோல்ஸ் ராய்ஸ் மீது சாய்ந்து சூரிய உதயம் கவனிக்கும் ஏகன் புகைப்படம் அது!"

"பார்த்ததும் இளம் மனதை பற்ற செய்யும் வத்திக் குச்சி அவன்!" தோற்றத்தில் ஒளிர.

அவன் தோற்றத்தில் மயங்கினாள் தீக்க்ஷி.
அதை விட ஒருபடி மேலே அவன் பணத்தில் மயங்கினாள்.அவள் மகன் புகைப்படத்தை ரசனையாய் காண்பதை உணர்ந்தவர் அவளிடம் விருப்பம் கேட்க.

அவளின் சிந்தனை எல்லாம் சற்று முன்பு தன் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி மீது தான் இருந்தது.

அதில் வந்த செய்தி இதுதான்....

"டி (D) நம்ம அடுத்த ஷார்ட் ஃபில்ம் பண்ண ஸ்டோரி ரெடி.ஆனா பட்ஜெட் கொஞ்சம் இடிக்குது உன்னால அரேன்ஜ் பண்ண முடியுமா!?" என்று கேட்டிருந்தான் நண்பன் ஒருவன்.

இப்பொழுது இவர் கேட்கும் போது அவளுக்கு தோன்றியது எல்லாம்,"ஆடு ஒன்று தானாய் வந்து கறிக்கடை வாயிலில் நின்று மே..மே... என்று அலறுவதாக தோன்றியது!"

அவளின் யோசனையை தவறாக புரிந்து கொண்ட லதா கூறிய அடுத்த தகவல் அவளுக்கு போதுமானதாக இருந்தது.

"நீ ஒன்னும் கவலை படாதம்மா!" என்றவர் தங்கள் மருத்துவமனையின் பெயரைக்கூறி அதன் உரிமையாளர் தாங்கள் தான் என்பதையும் கூற.

உடனே ஒப்புக்கொண்டால் சந்தேகம் வரும் என்பதால் "இல்லங்க ஆன்டி! அது..." என்று தயங்குவதாக பாவனை புரிந்தவள்

சற்று நேரத்தில்,"சரிங்க ஆன்டி.எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது ஆன்டி. எனக்காக சில ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் இருக்காங்க.உங்க பையனுக்கு ஓகே வான்னு கேட்டுகோங்க ஆன்டி!"என்று பெரும் பனி மலையை தூக்கி அவரின் தலையில் வைக்க உருகிவிட்டார் அவர்.

"சரிம்மா" என்றவர் அவளின் கைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு;தன் எண்ணை கொடுத்துவிட்டு அவளின் புகைப்படத்தை தன் எண்ணிற்கு அனுப்புமாறு கூறி இருந்தார்.

அவரிடம் விடைபெற்றவள் நண்பனுக்கு 'பணம் தன் பொறுப்பு' என்று குறுந்தகவலில் பதில் கூறினாள்.


மறுநாள் விடிந்த உடன் தோட்டத்தில் கூடிய குடும்பத்திடம் லதா தான் சேகரித்த தகவலுடன் தன் விருப்பத்தை தெரிவிக்க.
இந்த முறை மனதார பாலுவும் அவளுக்காக பேசினார்.

"இப்படி தன் பெற்றோரை இழுத்த பெண் யார்!?" என்ற கேள்வி எழ கதிர் இருவரிடமும் பெண்ணின் புகைப்படம் கேட்க.

லதா தன் கைபேசியில் இருந்து காண்பித்தார்.

அன்னையின் கைபேசியில் இருக்கும் பெண்ணை பார்த்தவன்," அம்மா இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுமா...
பேண்டமிக் பீரியட் அப்போ ஒரு டாகுமெண்டரி பிலிம் பண்ண முடியுமான்னு கேட்ட உடனே வந்து நடிச்சாங்க!" என்று தானும் தன் பங்கிற்கு அவளை பற்றி பெருமை பேசினான்.

சிதம்பரம் தாத்தாவிற்கும் அவளின் முகத்தில் உள்ள 'கள்ளம்' தெரியாது போக; நால்வரும் பேசிய பேச்சை கேட்டிருந்த ஏகன் அமைதியாக இருந்தான்.

"நீ என்ன சொல்ற ஏகா!?" தாத்தா கேட்க

"நான் இந்த பொண்ணை பத்தி நல்லா விசாரிச்ச அப்பறம் தான் தாத்தா முடிவை சொல்லுவேன்!" என்றவன் நேரே சென்றது நவநியை காணத்தான்.

"என்ன ஏகா ஏன்டா ஒருமாதிரி இருக்க!?"

"நவி எனக்கு கல்யாணம் பண்ண எங்க அம்மா பொண்ணு பார்த்திருக்காங்கடா!" என்றான்

"இது நல்லது தானடா!"

"இல்லடா நவி எனக்கு இது சரி கிடையாது என்னால ஒரு பொண்ணு கூடன்னு இல்லடா.யாரையுமே டச் பண்ண முடியாத சூழ்நிலையில எப்படிடா ஒரு பொண்ணை கல்யாணம் பண்றது.அந்த பொண்ணுக்குன்னு சில டெம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கலாம் இல்லையாடா!?" ஏகன் வருத்தமாக கூறினான்.

"மச்சான் நீ வொரி பண்ற அளவுக்கு ஒன்னுமே இல்லடா! ஒருவேளை அந்த பொண்ணு கூட உனக்கு உண்மையா அஃப்பைர் வந்தா நல்லது தானே!"

"மச்சான் நீ என்ன பேசுற உனக்கு புரியுதா!? எனக்கு அப்படி ஒன்னுமே வரப்போறது கிடையாதுடா.அது உனக்கும் தெரியும்!"வாதம் புரிய.

"சரி மச்சான்! நீ முதல்ல அந்த பொண்ணை பத்தி நல்லா விசாரி. நம்ம அதுக்கு அப்பறம் இதைப்பத்தி பேசலாம்!"

அந்நேரம் நண்பனுக்கு விடை கொடுத்தாலும் "ஏகன் வாழ்வை சரி செய்ய வேண்டும்!" என்ற நண்பனின் ஆழ்மனம் வேண்டியது.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆளைப் பாத்து காரியம் செய்யாதடா ஊதுகாமாலையான்னு எங்கூரு பக்கம் ஒரு சொலவாடை உண்டு. விசாரிக்காம நாடகக்காரிய கோத்து வுட்டுட்டாங்களே.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆளைப் பாத்து காரியம் செய்யாதடா ஊதுகாமாலையான்னு எங்கூரு பக்கம் ஒரு சொலவாடை உண்டு. விசாரிக்காம நாடகக்காரிய கோத்து வுட்டுட்டாங்களே.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
அதேதான் 🤣🤣🤣
 
படிச்சவங்களுக்கும் நடைமுறை ஏமாற்றுகள் புரியாமல் போய்விடுகிறது...
அப்படி புரிந்தால் இங்கே பாதிக்கு மேல் குற்றங்கள் குறையுமே... யார் நல்லவர் கெட்டவர் என்பதை சந்தேகம் அடைவதற்குள் அனைத்துமே நடந்து நிர்மூலமாக மாறிவிடுகிறது இதில் யாரை குற்றம் சொல்ல😥😥😥
 
Top