Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 48 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 48 ❤️‍🔥

"ஏகாந்த பொழுதுகள்
எல்லாம்
உன் கண்ணோடு தான்....!!!"



ஏகன் பேசிவிட்டு சென்றதில் இருந்து நவநீக்கு சிந்தனை மொத்தமும் அவனாக மாறியது.

தன் ஆராய்ச்சி,முடிவுகள்,கட்டுரைகள் இவை அனைத்தையும் தாண்டி கண்முன் ஏகன் அனுபவித்த துன்பங்களை கண்டவன் அல்லவா அவன்.

பள்ளி பருவம் கண்முன் விரிந்தது அவனுக்கு.....

அனைவரும் விளையாட்டு மைதானத்தில் கூடி விளையாட.

விளையாடும் போது தன் வித்தை மொத்தமும் காண்பித்து முட்டி பேந்து நால்வரால் அழைத்துவரப்பட்ட நவநீ அங்கிருக்கும் வேடிக்கை பார்க்க அமைக்கபட்ட மேடையில் அமர்த்தபட.

அவனை அவ்விடம் விட்டுவிட்டு விளையாட ஓடிவிட்டனர் மற்ற மாணவர்கள்.

அப்பொழுது தான் தன் அருகில் புத்தகமும் கையுமாக இருந்த ஒரு மாணவனைக் கண்டவன்.

" நீ ஸ்கூலுக்கு புதுசா!?" என்ற கேள்வியுடன் நெருங்கினான் நவநீ.

தன்னை நெருங்கும் மாணவனை விட்டு வெடுக்கென்று விலகினான் ஏகன்.

"ஹேய் ஏன் விலகுற? நான் உன் பக்கம் வரல ஓகே....இப்போ சொல்லு நீ ஸ்கூலுக்கு புதுசா!?"மீண்டும் அதையே கேட்க

'ஆம்!' என்று தலை அசைத்தவன் தன் புத்தக பைக்குள் இருந்து ஒரு சிறு முதல் உதவி பெட்டியை எடுத்து நவநீ புறம் நகர்த்த.

"நீ என்னடா நடமாடும் மெடிக்கல் ஷாப்பா. பேக்ல இதெல்லாம் வச்சுட்டு சுத்துற!?" என்றான்.

அவன் பேசுவதை கேட்டாலும் அதற்கு பதில் ஒன்றும் கூறாதவன் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்ட.

"நன்றி!" கூறி பெற்று கொண்டவன் முதல்உதவி பெட்டியை பயன்படுத்திவிட்டு அவனிடமே திருப்பி கொடுக்க.

பெட்டியை பெற்று கொண்டவன் டெட்டால் விட்டு கையை சுத்தம் செய்து பெட்டியை சுத்தம் செய்து பையில் வைத்தவன் தண்ணீர் பாட்டிலை தொட்டு கூட பார்க்காது படிக்க தொடங்க.

"டேய் நான் என்ன தீண்டத் தகாதவனாடா இப்படி பண்ற!?நீயா தானடா இதெல்லாம் குடுத்த!" என்று புலம்பினாலும் அவனை விட்டு விலகவில்லை நவநீ.

"சரி என்ன இருந்தாலும் கேட்காம உதவி பண்ணிட்ட. அதுனால இனிமே நீ என் நண்பன் புரியுதா!? எந்த உதவினாலும் என்னை தேடிவா நம்ம சேர்ந்து பார்த்துக்கலாம் புரியுதா.என் பேரு நவநீத் குமார்!" என்றான்.

"இனி நீ என் நண்பன்!" என்பதை கேட்க எப்படி இருக்கும் அந்த பிஞ்சிற்கு.....
கண்கள் மின்ன 'சரி!' எனும் விதமாக தலை அசைத்தவன் "நான் ஏகன் சிதம்பரம்!" என்றான்.

"சரிடா ஏகா நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'சி' செக்சன்.நீ எந்த க்ளாஸ்!?" என்க.

"நான் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் 'ஏ' " என்றதோடு பள்ளி மணி ஓசை கேட்க இருவரும் அங்கிருந்து சென்றனர்.

அன்றில் இருந்து தொடரும் இவர்களின் நட்பின் பிணைப்பு நீண்டு கொண்டே செல்கிறது.

"உனக்கு ஒன்று என்றால் என்னை தேடி வா!" என்ற நண்பனின் வாசகத்தை இன்றும் மறக்காது செல்லும் ஏகனும் சரி.

"இருவரும் இணைந்து பிரச்சனைகளை தீர்க்கலாம்!" என்ற நவநீயும் 'சரி' மாறவே கிடையாது.


அவர்களின் நட்பு இன்று வரை மாறாது
தொடர்கிறது தேவ பந்தமாய்.

ஒருமுறை ஆசிரியர் ஒருவர் ஏகன் திறமையை பாராட்டி பரிசு வழங்கியவர் அவன் தலையில் கை வைத்து மனதார ஆசீர்வதிக்க.


அவர் சென்ற ஐந்தே நிமிடத்தில் காய்ச்சல் கண்டது உடம்பு.அடுத்த நொடியே உடல் தூக்கி தூக்கி போட.அவனை காப்பாற்றி கொண்டு வர பெரும் பாடுபட்டனர்.அதில் இருந்து பள்ளியில் ஆசிரியர் யாரும் அவனை நெருங்குவது கிடையாது.


அன்றில் இருந்து ஏகனின் அரண் வீட்டில் சிதம்பரம் தாத்தா என்றால்; பள்ளியில் 'நவநீ' என்றானது.

மாணவர்களும் முதுகிற்கு பின்னால் கிண்டலாய் பேசினாலும்; நவநீ இருப்பதால் முகத்திற்கு முன் பேச தயங்கினர்.

ஏகன் கண்ட அசௌகரியங்கள் சொல்லில் அடங்காது.பல முறை பள்ளி பருவத்தில் கண்ணீர் விட்டு கதறிய நேரங்களும் உண்டு அதற்கு சாட்சி நவநீ மட்டுமே.

சில நேரங்கள் வருத்தமாக வேதனையாக வார்த்தைகள் பேசிடும்....ஆனால் சில நேரங்களில் 'அழுத்தமான மௌனம்' மட்டுமே அவனிடம் பதிலாய் இருக்கும்.


இக்னேஷ் ஸ்பான்சரில் படிக்க வாய்ப்பு கிடைக்க,ஏகன் பயின்ற அதே கல்லூரியில் தான் தன் கல்லூரிப் படிப்பை தொடர்ந்தான்.

கல்லூரியில் மற்றவர்களில் இருந்து ஏகன் தனித்துவமாக தெரிய;அவன் செயல்களை பார்த்து பின்னால் வந்தவன் தான்.அவன் இயல்பு புரிந்து தூர நின்று பார்ப்பவன் அவனை நெருங்கியது கிடையாது.

அதன்பின் ஏகன் தொழில் தொடங்க 'அவன் உதவியாளன்' எனும் பதவிக்கு விண்ணப்பித்து ஏகன் எனும் இளைஞன் மீது ரசிகனாக வந்தவன் தான் இக்னேஷ்.

இன்று.....

நவநிக்கோ நண்பன் மனதில் ஆசையை விதைத்தால்; அது தூபமிட்டு அவனை 'வாழ வேண்டும்!' என்ற ஆவலைத் தூண்டும் என்ற நம்பிக்கை.

'ஏனென்றால்!?'

"ஆசை செய்யாத மாயை இல்லை அல்லவா!"

நவநீயும் பெண் அவளை பற்றி விசாரிக்க...

அவள் அன்னதானம் கொடுப்பதும்.சிறு சிறு விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் நடிப்பதும் தெரியவர. அவளிடம் தவறு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை அவனுக்கு.

ஆனால், அவள் அன்னதானம் கொடுப்பது எல்லாம் அந்த குறும்படத்தில் வரும் காட்சிகள் என்று யாருமே குறிப்பிடாது போனதுதான் 'அந்தோ பரிதாபம்!'

வீட்டினருக்காக திருமணம் என்று வந்தாயிற்று; அனைவருக்கும் பிடித்த இவளையே ஒத்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தான் ஏகன்.

"ஆனால்! லதா தம்பதி செய்த பெரும் நல்ல காரியம் எது என்றால்!? ஏகன் உடல்நிலை பற்றி அவளிடம் கூறாதது தான்!"

அவளிடம் விருப்பம் கேட்க மட்டும் ஒரு முறை ஏகன் பேசினான்.அதன் பின் அவளை அவன் தொடர்பு கொள்ளவில்லை. அவளும் அதனை கண்டுகொள்ளவில்லை.


ஒருவழியாக திருமணம் நடந்தேற. அவளுக்கு ஏகன் இட்ட ஒரே கட்டளை "தன்னை நெருங்க கூடாது!" என்பது தான்.

ஒரே அறையில் அவன் சோஃபாவில் படுக்க அவள் படுக்கையை ஆக்ரமித்து உறங்கினாள்.

அவளுக்கு தேவை பணம் என்பதால் மட்டுமல்ல; அவள் சிந்தனை முழுவதும் வெள்ளித் திரை மீதே தீரா மோகம் சூழ இதனை கண்டுகொள்ளவில்லை அவள்.

"காலம் அவ்வாறே செல்லுமா என்ன!?"

ஒருமுறை பிரபல நடிகை ஒருவரை காணும் வாய்ப்பு கிடைக்க.... அவர் கூறிய செய்தி இவளுக்கு நம்பிக்கை ஒளியை கொடுத்தது.அந்த அறிவுரைப்படி ஏகன் உடன் வாழ ஆசை கொண்டாள் தீக்க்ஷி.


அதனால் ஒரு முறை ஏகன் உறக்கத்தில் இருந்த போது அவனை ஆசையாக நெருங்க.


அவள் தன்னை நெருங்கியதும் விழிப்பு தட்ட எழுந்த ஏகனை கண்டு உண்மையாக பயந்து விலகினாள் அவள்.

"தீக்க்ஷி என்ன இது!?" என்றான் உக்ர மூர்த்தியான ஏகன்.

"என்ன எது!?ஐம் யுவர் வைஃப் எனக்கு இல்லாத ரைட்ஸ்ஸா!?" என்று பெத்தனமாக பேச.

"இதனை நாள் கேட்காத,தேடாத உரிமை இன்னைக்கு என்ன!?" என்றான் அவன்.

"எனக்கு பேபி வேணும்!" என்றாள் இவள்

அதற்கு இவன் 'முடியாது' என்று கூறினால் அவளின் நகர்வு கண்டிப்பாக வேறாக இருக்கும் என்பதால்; இவனே கூறத் தொடங்கினான்

"எனக்கும் கூட பேபி வேணும்.என்ன பேபி பிறந்தா நடிகைகளின் அழகு கெட்டு போய்டுமாம்.... பாடி ஷேப் மாறி ஹார்மோனல் சேன்ஜஸ் வருமாம் அப்பறம்.....!" என்று தொடங்கி பத்து பக்கத்திற்கு பேசி அவளை குழந்தை பற்றி 'சிந்திக்கவிடாது' செய்துவிட்டான்.

அவனுக்கு ஏனோ அவளிடம் பேச கூட நெருங்க விருப்பம் இல்லாது போனது.

சில நாட்கள் அமைதியாக இருந்தவள் இப்பொழுது தன் நோக்கத்தை வெளிபடுத்த தொடங்கினாள்.

"எனக்கு பே...பி... வேணும்...!" என்று பிடிவாதம் பிடிக்க

"அவ்வளவு அவசரம் என்ன உனக்கு!? இன்னும் வயசு இருக்கே!" என்க

"எனக்கு டிவோர்ஸ் வேணும்!" என்றாள்

"என்ன வேணும். ஒன்ன ஒழுங்கா சொல்லு உனக்கு பேபி வேணுமா!? இல்ல டிவோர்ஸ் வேணுமா!?" ஏகன் கூர்மையாக கேட்க

"எனக்கு பேபி தான் வேணும்!" எனும் போதே அவளுக்கு விடாது அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

அதனை ஏகன் ஏற்கும் நிலை வர..

அந்தப்பக்கம் இருந்த தோழி தான் பேசினாள்

"டி (D) பேபி மேட்டர் என்னடி ஆச்சு!? சீக்கிரமா முடிவு பண்ணு! அப்போ தான் இன்னும் கொஞ்ச நாள்ல நீ டிவர்ஸ் வாங்கும் போது லம்ப் அமௌண்ட் கிடைக்கும்.லீனா மேம் சொன்னாங்க இல்ல.அந்த டைரக்டர் இன்னும் ஒன் இயர்ல மூவி ஒன்னு பண்ண போறாரு.
அதுக்குள்ள உன் வேலை எல்லாம் முடிச்சுட்டா உனக்கு கண்டிப்பா வாய்ப்பு இருக்குன்னு.அதும் ஹீரோயின் புரியுதா!?" என்றவள்

"சரி டி நீ நல்லா யோசிச்சு முடிவெடு!" என்றதோடு;

"யார் அழைப்பை ஏற்றது!?" என்பதை கூட அறியாது அனைத்தையும் கொட்டி கவிழ்த்தி இருந்தாள்.

"ஆம்! லீனா தான் அந்த நடிகை.ஒரு இரண்டு வருடத்தில் பிரபல ஆஸ்கார் விருது இயக்குனர் ஒருவரின் படபிடிப்பு தொடங்க உள்ளதாகவும்.அதற்காக புதுமுகம் தேவை என்றும்.. அதுவரை உடலை பேணி பாதுகாக்க.இன்னும் சில, ஆடம்பர தேவைகளுக்கு பணம் வேண்டும்!"

"ஆனால் அதற்கு குடும்பம் இருந்தால் சரிவராது!" என்று கூறி இருக்க.

"நிலையாக இவளுக்கு என்று ஒரு தொகை வரவேண்டும் என்றால்; குழந்தை எனும் 'பகடை' வேண்டும்!" என்று படுபயங்கரமான ஊழல் அறிவுரை கூற.

"பிள்ளை வைத்திருந்தால் பிள்ளைக்கு என்று மாதமாதம் ஒரு தொகையை ஏகன் தலையில் கட்டி விடலாம் ஜீவனாம்சத்தில்!" என்ற எண்ணத்தில் இருந்தவள் தான்.

அந்த நடிகையை கண்டு வந்ததில் இருந்து குழந்தை மீது உண்மை நேசம் கொண்டவள் போல நாடகம் ஆடித் தீர்த்தாள்.


"சோ... இதுதான் உன்னோட திட்டம் இல்லையா!?" என்றான்.

மனதில் ஏனோ பெரிதாய் வலி என்ற உணர்வு தோன்றவில்லை.அதற்கு மாறாக 'வெறி' தான் தோன்றியது....தன்னை தைரியமாக ஏமாற்றிய அவளின் சாமர்த்தியம் அவனை வியப்பில் ஆழ்த்தியது.

"பெற்றோர் இல்லாது அவள் வளர்ந்தது மட்டும் தான் அவள் கூறிய உண்மை!" என்பதும் அப்பொழுது தான் புரிந்தது.

"சோ உனக்கு பேபியும் வேணும் டிவர்சும் வேணும் ஐ'ம் ரைட்..? ஓகே பட் என் முடிவை ஒரு வாரத்துக்கு அப்பறம் சொல்றேன்!" என்றவன் அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அன்றில் இருந்து ஏகன் சிதம்பரம் தாத்தா இருக்கும் வீட்டில் தங்க தொடங்கி இருந்தான்.

அவனாக தீக்ஷி பற்றி வீட்டில் கூறவில்லை.


அவர்களாக தெரிந்து கொள்ளும் நாளும் வந்தது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிதம்பரம் தாத்தாவின் அறைக்கு அனுமதி இல்லாமல் சென்றவள்.அவரின் அலமாரியை திறந்து ஒவ்வொன்றாக பார்க்க.

அப்பொழுது அவள் கைபட்டு கீழே விழுந்தது 'ஆல்பம்' ஒன்று அதில் வேல் தாத்தா,சிதம்பரம் தாத்தா இரு
வரும் கல்லூரி காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.

அதனை எல்லாம் ஆராய அவளுக்கு நேரம் இல்லை.அவளது குறிக்கோள் எல்லாம் இன்றைக்கு நடக்க இருக்கும் விழாவை பற்றியே இருந்தது.
 
இந்த தீஷி நாடகக்காரி எல்லாரையும் ஏமாத்திட்டா....... ஏகா எப்படி அவகிட்ட இருந்து தப்பிச்சான் ????? அப்ப அகரன்...........🤔🤔🤔🤔🤔🤔
 
இந்த தீஷி நாடகக்காரி எல்லாரையும் ஏமாத்திட்டா....... ஏகா எப்படி அவகிட்ட இருந்து தப்பிச்சான் ????? அப்ப அகரன்...........🤔🤔🤔🤔🤔🤔
இரவு பதிவு வரும் வரை.... நல்லா சிந்திங்கோ நல்லதையே சிந்திங்கோ🔊🔊🔊🔊💤💤💤💤😁😁😁
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்கு தானாம். இந்த நாடகத்தோட குட்டு வெளியாகிடுச்சு.
தாத்தாவோட அலமாரில என்னத்தை தேடறா?. அப்ப அகரன் 🙄🙄🙄🙄🙄🙄
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளைக்கு தானாம். இந்த நாடகத்தோட குட்டு வெளியாகிடுச்சு.
தாத்தாவோட அலமாரில என்னத்தை தேடறா?. அப்ப அகரன் 🙄🙄🙄🙄🙄🙄
அகரன் இஸ் ஆன் தி வே🤓🤓🤓🤓🤓
 
Top