Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 49 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 49 ❤️‍🔥

"பேசாத மௌனம்
எல்லாம்
நெஞ்சில் வடுக்களாய்.....!!!"


தீக்ஷிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்திருந்தது.

அதில் அவள் நடித்த குறும்படம் ஒன்றுக்காக விருது வழங்க உள்ளதாக கூறப்பட...அவளுக்கு 'பெருமை' பிடிபடவில்லை.



அதே நேரம் ஏகன் தன் அலுவலகத்தில் மிகவும் முக்கியமான வேளையில் இருந்தான்.


எல்லாம் அவன் எதிர்நோக்கி காத்திருந்த மாநில அளவிலான ஆபரண வடிவமைப்பு போட்டிக்கான ஏற்பாடுகள் தான் நடந்து கொண்டிருந்தது.



கடைசி கட்ட வேலைகள் மட்டும் இருந்த நிலையில் இன்று அதுவும் நிறைவுற தன் தாத்தாவிடம் சென்று காண்பிக்க வேண்டும்.அதனால் கடைசி கட்ட வேலைகள் முடிந்த உடன் கையோடு நகையை எடுத்துக் கொண்டு வீடுவந்து சேர்ந்தான்.



தாத்தாவின் அறைக்குள் பார்க்க அவர் அங்கு இல்லாது போக,பிறகு வந்து பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.



வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிதம்பரம் தாத்தாவின் அறைக்கு சென்றாள் தீக்ஷி...

மெதுவாய் நுழைந்து பெரியவரின் அலமாரியை திறந்து ஒவ்வொன்றாக பார்க்க தொடங்க.அப்பொழுது அவள் கைபட்டு கீழே விழுந்தது ஆல்பம் ஒன்று.



அதில் சிதம்பரம் தாத்தாவின் கல்லூரி கால புகைப்படம் போல இருக்க.அவரின் அருகே அவரின் வயதை ஒத்த ஒருவர் அவரின் நண்பர் போல நின்றிருந்தார்.

தாத்தா தன் கல்லூரி காலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது.


அதனை எல்லாம் ஆராய அவளுக்கு நேரம் இல்லை.அவளது குறிக்கோள் எல்லாம் இன்றைக்கு நடக்க இருக்கும் விழாவை பற்றியே இருந்தது.

'ஆம்!'


அவள் நடித்த குறும்படம் ஒன்றிற்கான விருது வழங்கும் விழா.கொடுப்பது சிறு நிறுவனம் ஒன்றுதான் என்றாலும்; அதன் மூலம் படியேறி பலமேடைகள் கண்ட பிரபலங்கள் பலர் உண்டு.


பெரும் பெயர் பல பெற்றாலும்; அந்த நிறுவனம் இன்றும் தன் தரத்தை பணத்திற்காக குறைத்து கொண்டதில்லை.
ஆதலால் அந்நிறுவனம் அழைத்தால் பெரிய பெரிய இயக்குனர்கள் கூட பாரபட்சம் இல்லாது கலந்து கொள்வர்.


இன்று திக்ஷி எதிர்பார்த்த ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்க அதில் தன்னை மேல் தட்டு வர்கமாக காட்டிக்கொள்ள வேண்டும்.
அதற்காக உடையானது எப்பொழுதோ பல இலக்கங்கள் கொண்ட தொகையில்
லதாவை ஏமாற்றி வாங்கிக் கொண்டாள்.


"நகை தான் எதை அணிவது!?" என்று நேற்று இரவு அவள் யோசனையில் இருந்த பொழுது; சிதம்பரம் தாத்தா தன் வடிவமைப்பு பற்றிய பேச்சு வார்த்தையில் இருந்தார்.



அவரே அவர் கரத்தால் தயார் செய்த ஆபரணம் ஒன்று பல கோடிகளை பெருமானமாக கொண்டதாம்... அதன் தரம் அமைப்பு என்று ஒவ்வொன்றாக அவர் உரைக்க...


அதனை தான் இந்த ஆண்டு நகை வடிவமைப்பு போட்டிக்காக சமர்ப்பிக்க போவதாக எடுத்துக் கூறியவாறு இருந்தவர் மேலும் அந்நகை தன் அறையில் இருக்கும் தகவலை தெரிவிக்க தீக்ஷி மனதில் மின்னல் வெட்டியது.

அதனை எடுத்து செல்லத் தான் இன்று வந்திருக்கிறாள்...

அவளும் அறையை கவிழ்த்தாத குறையாக தேடி பார்க்க எங்கும் நகை இல்லை.
பைத்தியம் பிடிக்கும் உணர்வு அவளுக்கு.


"திரையில் நாயகியாக தோன்றப்போகும் போது, தான் தோரணையாக; ஒரு ராணியின் சிருங்காரத்துடன் மேடையில் தோன்ற வேண்டும்!" என்ற அவளின் கனவில் யாரோ 'கல் எறிந்த' உணர்வு.

"ஆ..." என்று வெறிபிடித்து அலறியவள்

அங்கும் இங்குமாக அலைய கண்ணில் பட்டது அலமாரியின் இரண்டடுக்கு மேல் இருக்கும் அலமாரியின் இடைவெளியில் தெரிந்த சிறு பெட்டி ஒன்று.


அதனை எடுத்து திறந்து பார்க்க கண்களை பறித்த அதன் அழகில்,"மது உண்ட வண்டாய் மயங்கினாள் தீக்ஷி!"


அதனை எடுத்து அணிந்து கொண்டு விழாவிற்கு கிளம்பிவிட்டாள் யாரின் அனுமதியும் இல்லாது.


விழா முடிவடைய அவளுக்கே கதாநாயகி வாய்ப்பு கிடைக்க.

"இனி தன் வாழ்வில் வேண்டாத களைகளை நீக்க வேண்டும்!" என்று முடிவு செய்துதான் வீடு திரும்பினாள்.

ஏகன் இல்லம் வந்தவள் கழுத்தில் மின்னிய ஆபரணம் கூறியது ஏகனின் இன்றைய தோல்வியை....

'ஆம்!'

அது தாத்தா தயாரித்த நகை அல்ல.


மாநில அளவில் இன்றைக்கு நடக்கும் போட்டிக்காக அவன் உருவாக்கி வைத்த 'பொக்கிஷம்!'



"எப்பொழுது வடிவமைத்தாலும் தாத்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரிடம் நிறைகுறை கேட்டு பழகியவன்.இந்த நகையையும் அவரிடம் கொடுக்க வந்தவன் அறையின் அலமாரியில் நகையை வைத்துவிட்டு சென்றிருந்தான்!"



மாலை வந்து நகையை பார்க்க நகையை வைத்த இடத்தில் காணவில்லை.
கண்டிப்பாக உதவும் கரங்கள் யாரும் எடுக்க வாய்ப்பே இல்லை.

'ஏனென்றால்!?'


அவர்கள் பல ஆண்டுகளாக வீட்டில் ஒருவராக வலம் வருபவர்கள் அவர்களை சந்தேகம் கொள்ள மனம் வராது அமர்ந்த ஏகன் பெரும் தோல்வியை சந்தித்த தருணம் அவனை வாட்டியது...

"நகையை காணவில்லை எங்கே சென்றது!? தன் அறையை தலைகீழாக்கி தேடியும் கிடைக்காது போனது!"

அவன் செயலிழந்து அமர்ந்த கணம் "என்ன ஏகா என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்க!?" என்றபடி வந்தார் தாத்தா.

"தாத்தா!"என்று கண்கள் சிவக்க வெறி தலைக்கு ஏற நிமிர்ந்தவன் நடந்ததைக் கூற.

அவரோ," கண்டிப்பாக உதவும் கரங்கள் யாரும் எடுத்திருக்க மாட்டார்கள்!" என்று அடித்துக் கூறினார்.

தாத்தா கேட்டதன் பெயரில் வீட்டின் காணொளி பதிவை ஒருவர் கொண்டுவந்து கொடுக்க.

ஏகன் நுணுக்கமாக கவனிக்க... தீக்க்ஷிதாவின் கழுத்தில் மின்னியது ஏகனின் கனவு நகை.அவளின் கனவை நனவாக்க அவனின் கனவை 'அழித்திருந்தாள்' அவள்.


வீட்டினர் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர நடு கூடத்தில் என்றும் காணாத உக்ர கோலத்தில் மகன் அமர்ந்திருக்கும் தோரணை கண்டு லதா,பாலு தம்பதியர் பயம் கொள்ள.


நடப்பது அறியாது தன் ஆசையை நிறைவேற்ற தன் திட்டத்தின் அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராக வந்தாள் தீக்க்ஷி.


உள்ளே நுழைந்ததும் லதாவை கண்டு அன்பாய் ஓடிவருவதை போல வந்தவள்
தன் முதல் விருதை அவரிடம் காண்பித்து பெருமை கொண்டாள்.

"அத்தை இங்க பார்த்தீங்களா என்னோட முதல் விருது அத்தை!" என்றவள் கூற

அப்பொழுது தான் மகன் இன்று சமர்ப்பிக்க வேண்டிய நகை என்று அவன் காட்டிய வரைபட அமைப்பில் இருந்த நகை அவளின் உள்ளங்கழுத்தில் மின்னுவதை கண்டார்.

"இந்த நகை...!" என்றவர் ஆரம்பிக்க

"இந்த நகைக்கு என்ன அத்தை!?" ஒன்றும் அறியா பிள்ளை போல கேட்க

"இது ஏகன் ஸ்டேட் லெவல் காம்படீஷன்காக டிசைன் பண்ணது!" என்றிட

தீக்ஷி நெஞ்சே வெடிக்கும் போல் இருந்தது. "அது அவன் கனவு என்பதை அறிவாளே அவளும்...அதிலா தான் கை வைத்தோம்?" என்ற பயமும்.

"ஒன்றும் இல்லா தானே தன் கனவை நனவாக்க எந்த எல்லைக்கும் செல்லும் போது... எல்லாம் படைத்த அவனின் கனவை கானலாய் மாற்றிய தன்னை அவன் என்ன செய்வானோ!?"என்ற பதட்டமும் அதிகரிக்க நின்றிருந்தாள்.

ஏகன் ஒன்றும் பேசவில்லை அமைதியாக வெளியே சென்றுவிட்டான்.

"அவன் திரும்பி வருவதற்குள் வெளியே சென்றுவிடலாம்!" என்று நினைத்த தீக்க்ஷியை வீட்டுக்காவலில் வைத்துவிட்டு அவன் சென்றது அறியாது.கைக்கு கிடைக்கும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தாள் அவள்.


நவநியை தேடி சென்றான் ஏகன். நவநீ நடந்த சம்பவத்தை கதிர் மூலம் முன்பே அறிந்ததால் நண்பன் வருகையை அறிந்தவன்

"ஏகா என்னடா செய்யலாம்னு இருக்க!?" நேரிடையாக விசயத்திற்கு வந்தான்.

"அவ என்னோட கனவை கலாச்சா இல்ல. நான் அவளோட கனவை கலைக்க போறேன் நவி!" என்றவன் தன் திட்டத்தை கூறி தெளிவு பெற்ற பின்பே இல்லம் திரும்பினான்.


அங்கே அறைக்குள் இருந்த பாதி பொருட்களை அள்ளி பதுக்கிய பையுடன் நின்ற தீக்ஷி அவனுக்கு பெரும் 'கொள்ளைக்காரியாகவே' தெரிந்தாள்.


"என்ன எல்லாத்தையும் பேக் பண்ணிட்ட போல... ஓகே அப்போ நீ கிளம்ப விரும்பற இல்லையா!?"


"ஆமாம் நான் கிளம்ப விரும்பறேன் ஏகன்!" என்றாள் தயக்கம் ஏதும் இன்றி.


"சரி அப்போ கிளம்பு நான் உனக்கு விவாகரத்து மட்டும் கொடுக்கவே மாட்டேன்!" என்றான்


தன் திரைத்துறை கனவில் 'மண்ணைவாரி வீசிவிடுவான் போலவே!' திக்கென்று ஆனது அவளுக்கு.


இப்போது அவன் வழியில் சென்று அவனை சம்மதிக்க வைப்பதே வழி என்று புரிய

"எனக்கு டைவர்ஸ் வேணும்!" விடாப்பிடியாக தீக்ஷி நிற்க

"அப்போ எனக்கு பேபி வேணும்!" என்றான் இவன்.


"இது என்னடா இது வரலாறு திரும்புதா!?"


அவள் கூறியதை இப்பொழுது அவன் திரும்ப கூறக்கேட்ட தீக்ஷியின் எண்ணம் இதுவாக தான் இருந்தது.

முதலில் சிந்தித்து பின் ஜீவனாம்சத்தை முன்னிறுத்தி"ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்ற கணக்கில் 'சரி' என்று ஒப்புக்கொண்டாள்.ஆனால் அவன் அடுத்து கூறியது தான் புதியது.

"நம்ம இன்டிமேட்டா இருக்க போறது இல்ல 'டெஸ்ட் டியூப் பேபி' தான் வேணும் எனக்கு!" என்றான்

அவள் 'மாட்டேன்!' என்று மறுக்கும் நிலையில் இல்லாததால் அதற்கும் 'சரி' என்று ஒப்புக்கொண்டாள்.


தீக்ஷியின் உண்மை நிறம் அறிந்து வீட்டினர் கவலை கொள்ள.


லதாவோ குற்ற உணர்வோடு வருத்தமுற.
தன்னை காணும் போது எல்லாம் வீட்டினர் கவலை கொள்ளவது பிடிக்காது சிதம்பரம் தாத்தாவின் வீட்டிற்குள் குடியேறினான் ஏகன்.



ஏகனிடம் விவாகரத்து பெறவேண்டி தீக்ஷி எத்தனை எத்தனை வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.


இதில் குழந்தை உருவானது தொடங்கி சரவணம்பட்டி தோப்பு வீட்டில் தான் பிள்ளை பிறக்கும் வரை ஒருவரை துணைக்கு வைத்து அவளால் பிள்ளைக்கு ஏதும் நேராது காத்துவந்தான்.

நல்ல வேளையாக தன் திருமணம் ஆன செய்தியை மட்டும் வெளியிட்ட ஏகன் "மனைவி யார்!?" என்பதை அறிவிக்காது போனான்.

அதுவும்,"தன் மாநில அளவிலான ஆபரண போட்டியில் வென்ற பிறகே அறிவிக்க வேண்டும்!" என்று வைராக்கியத்துடன் காத்திருந்தான்.


ஆனால் அதற்குள் இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்து, நரியின் சாயம் வெளுத்து போனது.

பத்து மாதம் பிள்ளையை சுமப்பதை பாரம் சுமப்பதாக எண்ணி சுமந்தவள் பத்தாம் மாத முடிவில் மருத்துவர் குறித்து கொடுத்த தேதியில் அகரனை பெற்றெடுக்க.


அகரன் பிறந்த அன்றே அவனை பார்க்க விரும்பாது வேறு மருத்துவமனை சென்று சேர்ந்து கொண்டாள் தீக்ஷிதா எனும் 'தெய்வ தாய்!'


எது பெரும் நிம்மதி எனில் பரம்பரையாக வரும் ஒவ்வாமை பற்றிய தகவல்கள் எதுவும் அவள் அறியாது போனதும்...அகரனும் அதே ஒவ்வாமை தன்மை கொண்ட மரபியல் மாறுபாடுகளோடு பிறந்ததையும் அறியாது போனதும் தான்!" இதில் பெரும் நிம்மதி.

சிதம்பரம் தாத்தா, ஏகன் இருவரை விட ஒவ்வாமையால் அதிக பாதிப்புகளை கொண்டு பிறந்தான் அகரன்.


அகரன் பிறந்தது முதல் அவன் வளர்ப்பில் பெரும் மெனக்கிடல் தேவையாக இருந்தது.சிதம்பரம் தாத்தா,ஏகன் இருவரும் கூட அடுத்தவரின் தீண்டலில் தான் ஒவ்வாமை கொண்டனர்.


ஆனால்,"அகரன் அடுத்தவரின் மூச்சுக்காற்று நெருங்கி பட்டாலும் ஒவ்வாமை கொண்டவனாக பிறந்திருந்தான்!"


"பிள்ளையை வளர்ப்பதை சவாலாக மாற்றி; சிதம்பரம் தாத்தாவை வளர்த்த செவ்வந்தி பாட்டியின் வழியில் வந்த ஏகன் மட்டும் சடுதியில் விட்டுவிடுவானா என்ன!?"


"கிடையாது! மகனை காக்க தனிக் குழுவும், தனிப்படையும் நியமித்து அல்லவா பாதுகாத்தான்!"


இத்தனை இடர்பாடுகள் கொண்ட அகரன் ரிதமின் கரத்தில் தஞ்சம் அடைந்த அதிசயத்தை கண்ட பின்தான்.


"மகனுக்காக மட்டுமே ரிதமை மணந்தான்!"


அவளும்," எங்கே தீக்ஷி போல் இருந்தால் என்ன செய்வது!?" என்ற எண்ணத்தில் தான் அவளை தள்ளி நிறுத்தி வார்த்தையால் வதைத்து சென்றது எல்லாம்.


"அப்படி பாதுகாத்த மகனை இன்று இந்த நிலைக்கு தள்ளிய நபரை வேலையை விட்டு தூக்கியது மட்டும் போதாது!" என்று தோன்றியது அவனுக்கு.

ஆனால் அவரை அனுப்பிய பின்புதான் அறிந்தான் திக்ஷியின் வேலைதான் இவை எல்லாம் என்பதை.

ரிதமின் மனதில் கோபம் கனன்றாலும்; "பிள்ளையை பெற்ற யாருக்கும். பிள்ளையின் பாதுகாப்பு முக்கியம் அல்லவா!?"

"ஏகன் சுடுகண்ட பூனை அதனால் தான் தன்னிடம் ரகசியம் மறைத்துள்ளான்!

மறைத்த உண்மையை கூற முடியாது தான் நிவேதாவின் திருமண விழாவிற்கு செல்ல மகனை அனுமதிக்கவும் முடியாது;
தன்னிலை விளக்கம் முடியாது தவித்துள்ளான்.

இதே காரணத்தால் தான் தாத்தாவும் அகரனை தன்னுட
ன் கோவிலுக்கு அனுப்பவில்லை என்பதை யாரும் விளக்க வேண்டிய அவசியமில்லாது அவளாகவே புரிந்து கொண்டாள் ரிதம்.

"எப்படியேனும் மகனையும், கணவனையும், தாத்தாவையும் மாற்றியே ஆகவேண்டும்!" என்ற விந்தையும் சவாலும் நிறைந்த சபதத்தை தனக்குள் ஏற்றாள் 'பெண்' எனும் பொற்பேழை.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரிதம் கையால மட்டும் அகரனுக்கு எதுவும் ஆகலையே அப்ப அகரனோட மனசுக்கு ரிதமை புடிச்சதால அந்த நோயோட தன்மை வெளியாகலை போல.
அந்த நாடகத்தோட கொட்டத்தை அடக்கோனும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரிதம் கையால மட்டும் அகரனுக்கு எதுவும் ஆகலையே அப்ப அகரனோட மனசுக்கு ரிதமை புடிச்சதால அந்த நோயோட தன்மை வெளியாகலை போல.
ரிதமை முதல்முறை பார்க்கும் போது அவகிட்ட தான் அம்மாவின் பாதுகாப்பை உணர்ந்தான் அகரன்... அதுதான் படிப்படியாக வளர்ந்து இப்போ இங்க வரை வந்திருக்கு
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ரிதம் கையால மட்டும் அகரனுக்கு எதுவும் ஆகலையே அப்ப அகரனோட மனசுக்கு ரிதமை புடிச்சதால அந்த நோயோட தன்மை வெளியாகலை போல.
அந்த நாடகத்தோட கொட்டத்தை அடக்கோனும்.
அதெல்லாம் அவளுக்கு இருக்கு😎😎😎
 
இந்த தீஷிய சும்மா விடாத ஏகா........
ஆளும் மண்டையும் .......... பிறந்தப்ப பிள்ளையை பார்க்காதவ இப்ப வந்து.....😡😡😡😡😡😡😡
 
இந்த தீஷிய சும்மா விடாத ஏகா........
ஆளும் மண்டையும் .......... பிறந்தப்ப பிள்ளையை பார்க்காதவ இப்ப வந்து.....😡😡😡😡😡😡😡
கண்டிப்பா அவளுக்கு இருக்கு💣💣💣
 
"நம்ம இன்டிமேட்டா இருக்க போறது இல்ல 'டெஸ்ட் டியூப் பேபி' தான் வேணும் எனக்கு!" என்றான்

அவள் 'மாட்டேன்!' என்று மறுக்கும் நிலையில் இல்லாததால் அதற்கும் 'சரி' என்று ஒப்புக்கொண்டாள்.

அடடே..... என்னாங்கடா நடக்குது இங்க....? :sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep::sleep:
 
Top