Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 50 💞

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 50 💞


"இதுவரை சுவைக்கா
இன்பத்தேன் நீயன்றோ...........!!!"



அகரன் உறக்கத்தில் இருந்தான்.


மருத்துவமனை வாசம் பிரிந்து வீட்டிற்கு வந்திருந்தான்...இன்று தான் வெகு நாட்களுக்கு பிறகு கூடு சேர்ந்த உணர்வு.

"எத்தனை போராட்டம்!? எத்தனை மனவருத்தம்!? அத்தனையும் நீங்கிய உணர்வு!" ரிதம் மனதில் இன்று.


"இனி தங்கள் வாழ்வில் எந்த ஒளிவும் மறைவும் இல்லை என்ற நிம்மதியில் உறக்கம் வரவில்லை!"


ஆதலால் தன்னவன் அறைக்கதவை தட்ட...


ஏகன் கதவு தட்டும் ஓசையில் புரிந்து கொண்டான் மனைவி உறக்கம் இல்லாது 'தன்னை தேடுகிறாள்!' என்று.



"இல்லை என்றால் அம்மாவும் மகனும் அவன் ஆந்தை போல் விழித்திருந்தாலும்; கண்டுகொள்ளாது உறங்கிவிடுவரே!"


"என்னடி எதுக்கு இப்போ என் ரூம் கதவை தட்டிட்டு இருக்க!?"


"எனக்கு தூக்கம் வரலை நீங்க மட்டும் தூங்கு வீங்களா!?"


"ஏன்டி எத்தனை நாள் ஒருத்தன் வேலை பார்த்துட்டு தூங்காம இருக்கானே அவனுக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு இல்லாம, முதல் ஆளா தூங்கி இருப்ப... இன்னைக்கு உனக்கு தூக்கம் வரலைன்னதும் என்னை வந்து கேள்வி கேட்கற!?"


"அதெல்லாம் பொண்ணுங்க அப்படித்தான்! இப்போ எனக்கு தூக்கம் வரலை நீங்களும் தூங்க கூடாது வாங்க!" என்று அழைக்க


"போடி! எனக்கு தூக்கம் வருது.வந்துட்டா.. தூங்காத.. தூங்காதன்னு..!" அவன் விரட்ட


கோபம் கொண்ட கொன்றையள் திரும்பி நடக்க அவளை முந்திக் கொண்டு செல்வதற்காக ஓடிய ஏகன் ரிதமை இடித்துவிட.

அவன் இடித்ததில் அவன் மீது விழுந்து சோஃபாவில் இருவரும் சேர்ந்தே கவிழ்ந்தனர்.

சில நேரம் நாம் தயங்கும் தடுக்க நினைக்கும் சம்பவங்களை இயற்கை அதன் கைகளில் ஏந்தி ஏகாந்தம் கூட்டும்.


அப்படி ஒரு அற்புதம் தான் அங்கே நடந்தேறியது.


பவளப்பெண்ணவள் கீழே இருக்க, அப்பவளத்தை மூடிக்காக்கும் பாதுகையாய் ஆணவன் மேல் விழுக.

இதுவரை இணையா இதழ்கள் நான்கும் 'இன்ப விபத்தில்' இணைந்தன.

"தீண்டலில் இன்பம் காணுதல் காதலின் சிறப்பு தான்!"

"ஆனால் அது ஏகன் வாழ்வில் தொடரும் சாபம் அல்லவா! ரிதம் பதறி பயந்து,தன்னவன் புயத்தை பிடித்து மறுத்தளித்து விளக்க பார்க்க!"


"எங்கே விட்டான் அவன்!?"


"எங்கணம் வந்தது இவளின் இதழில் எண்ணிலா பழங்களின் சுவை!?" எனும் ஆராய்ச்சியில் அவன் மும்மரமாக.
விளக்கிய கரங்கள் இரண்டும் இப்பொழுது அவனை தன்னுள் இழுத்து விழுங்கியது.


அதில் இதுவரை ஏறாத இன்பச் சுவை ஏற 'மலரிதழ்' தொடங்கிய ஆராய்ச்சி உயிற்காற்றை வேண்டி பெரும் மூச்சுக்களில் வந்து நிறைவு பெற.

நிமிர்ந்து மனைவி முகம் பார்த்தவன் கண்களில் தான் அத்தனை 'திருப்தி!'

"ஆத்ம திருப்தி! இரண்டு திருமணம் செய்தவன் என்று வெளி உலகம் கூறினாலும்; ஒரு பெண்ணையும் தீண்டாத ஏகன், ஒரு கட்ட பிரம்மச்சாரி தான்!"

"முதல் முறையாக பெண்ணின் வாசம், பெண்ணின் இதழ்,அது கொண்ட கனி ரசம், அனைத்தும் உணர்தல் இதுவே முதல் முறை அல்லவா!"

"அவன் மீண்டும் சுவைக்க முயல தடையிட்டாள் தடாகை!"

"என்னடி!?"

கோபம் கொப்பளிக்க வந்தது வார்த்தை.


"உங்களுக்கு ஒன்னும் இல்லையே!" என்று அவனை தன் மீது இருந்து விளக்கி உச்சி முதல் பாதம் வரை கண்களால் ஆராய்ந்தவள்.


'அவன் நலம்!'

என்று அறிந்த பிறகு தான் உணர்ந்தாள் இருவரும் இருந்த நிலையை.


அவனுக்கோ,"மோக முள் தீண்டி காயம் கண்டது உடல்!"


இத்தனை ஆண்டுகளாய் அவன் சேர்த்திருந்த ஆசைகளின் திறவுகோல் பெண்ணவளின் சிறு இதழில் இருந்ததை அறியாது போன தன் மட தனத்தை எண்ணி தன்னையே 'திட்டி தீர்த்தான்!'


பேடை குயிலோ கூச்சம் கொண்டு விலகி அவனுக்கு ஏக்கம் கூட்டிட.

"நொடி நேர பிரிவும் இனி பாவமடி கிளியே!"

வெண்ணிலாவின் விலகல் பொறுக்காது.... அவளை கரமதில் ஏந்திக் கொண்டு தன் அறைக்குள் நுழைய.

"ஐயோ தம்பி தனியா தூங்கறான்!"


மோகத்தின் பிடியில் சிக்கிய அந்த நிலையிலும் தன் மகனையே அவள் எண்ண...

"இன்னைல இருந்து என்னையும் தூங்க வைக்கலாம் தப்பில்லைடி!" என்றான் ஏகன்.

"ச்சீ.... நீங்க..!"

ஆணின் விசம பேச்சை கேட்க முடியாது ஏதோ கூற வந்த வார்த்தைகள் எல்லாம் வெளிவர இடைவெளி இல்லாது மீண்டும் தொண்டைக்குள் சென்றது.

இன்ப வேகம் அவனில் கூட, மாறன் வீட்டு
மாருதமாய் மாறி அவளை தீண்டினான்.
புயலில் சிக்கிய பூந்தளிர் தான் அவன் கொய்த புதுமையில் களைந்து,கரைந்து, இசைந்து,இசைத்து 'கேள்வனில் ஓர் அங்கமாக!' மாறிப்போனாள்.

இரவு கொண்ட நேசம் எல்லாம் பகலும் தொடர.

அகரனின் "அம்மா" எனும் முனகல் குரலில் தான் முற்று பெற்றது.

"என் புள்ள என்ன தேடுறான் போல!" என்று ஓரே ஓட்டமாய் ஓடியவள் குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள.

மீண்டும் உறக்கத்தில் புரண்டு படுத்து தூக்கத்தை தொடர்ந்தான் அகரன்.

உறக்கத்தில் கூட ரிதமை தேடும் அகரனை கண்டு பொறாமை எழுந்தது ஏகனுக்கு.
குளித்து முடித்து மகனை எழுப்பி அவனை கிளப்பி கீழே அழைத்து சென்றாள் ரிதம்.


"என்னடி ஆளு இன்னைக்கு அழகா இருக்க என்ன நல்ல தூக்கமோ நேத்து!?" என்று நிவேதா ராகம் பாட.


ஓடிச்சென்று அவளின் வாயை அடைத்தாள் ரிதம்.

எப்பொழுதும் இந்த கேள்வியை கேட்டால் "ஆமாம்! நானும் என் பட்டுகுட்டியும் ஜாலியா கதை பேசிட்டு ரைம்ஸ் பாடிட்டு தூங்கினோம்.அதுதான் இவ்வளவு ஃப்ரெஷ்நெஸ்!" என்பவள்.

"இன்று பாய்ந்து வந்து வாயை அடைக்க காரணம் ஒன்று மட்டுமே இருக்க இயலும்!" என்று சந்தேகமாக அவளை காண.

புரிந்து கொண்டாள் நிவேதாவிற்கு மனம் 'அப்பாடி!' எனும் நிம்மதியில் நிறைந்தது.

"தன் வாழ்வு மலர்ந்தது போல இவளின் வாழ்வு மலர்வது எப்பொழுது!?" என்று எண்ணாத நாளில்லை.

இன்று தான் அந்த 'நன்னாள்' என்பதை தோழியின் புதுவெட்கம் பார்த்து புரிந்து கொண்டவள் காதோடு கதை பேச.

ரிதம் மீட்டியதோ 'சிணுங்கல்' எனும் மெல்லிசை தான்.

"ஏய் அவளை விடு!"என்ற அதிகார குரலில் வீடு ஒருமுறை அதிர்ந்தது

எல்லாம் ஏகன் தான். கைபிடித்து ரிதமை இழுத்தவன் அன்னை முன் சென்று நிறுத்தினான்.

மகன்,மருமகள் இருவரும் கைகள் கோர்த்து நிற்கும் அழகே அழகாய் கொள்ளை அழகாய் தோன்ற மகனை தொடாது திருஷ்டி கழிக்க.

ஏகன் மெதுவாக அன்னையின் கரம் பிடித்து தன் தலையில் வைக்க அவ்வளவு தான் வற்றாத ஊற்று பெற்றவளின் கண்களில்.

அவன் பிறந்த பொழுது தொடங்கி....முதல் முறையாக இன்று தான் ஓர் தாய் மகனை தீண்டினாள் என்றால்;அவளின் மனம் இத்தனை ஆண்டுகள் எத்தனை பாடு பட்டிருக்கும்....

கண்முன்னே மகன்,"அழுது புரண்டு, அமுதுண்டு,சிரித்து,குழைந்து,பிரண்டு,
தவழ்ந்து,அடிவைத்து,நடைபழகி, பேசி, பாடம் படித்து,எழுத பழகி பிள்ளை வளர உடன் சேர்ந்து பெற்றோரும் வளர" என்று.
வரமாய் பெற்ற மூத்த பிள்ளையிடம் இருந்து,"இதுவரை கிடைக்கா அமுது முத்தங்கள் தான் எத்தனை!?"

"அந்த தருணங்கள் எல்லாம் இன்று மகன் கன்னம் தீண்டிய கணம் கண்ணீராய் பெருக 'ஏகா' என்ற அழைப்புடன் மகனை கட்டிக் கொண்டார்!"


பாலு,கதிர் என்று மொத்தமாக அவனை அணைத்து அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பாது சிறு கைகுலுக்களில் தங்கள் அன்பின் ஆழத்தை உணர்த்தினர்.

வேல் தாத்தா கூட அவனை தலையில் கைவைத்து வாழ்த்த ஏகன் விழிகளும் கூட கலங்கியது.


கூடத்தில் அமர்ந்திருந்த அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீரின் சாயல் தெரிந்தது.


சிதம்பரம் தாத்தாவிற்கு தான் நான்கு தலைமுறையாக தொடரும் இந்த சாபத்தில் இருந்து விடுதலை கிடைத்த உணர்வு அவருக்கு.


நண்பன் தோளில் சிறு குச்சியால் தட்டினார் வேல் தாத்தா.


இக்னேஷ் தான்,"பாஸ் என்னை ஒரு தடவை...!" என்றவன் தயங்க

அவன் கூற வருவது புரிந்தாலும்; "வெளிய போகணும் இக்னேஷ் வரியா!?" என்றான்.

அவன் பேச்சில் முகம் சுருங்க நின்ற கணவனை கண்டு நிவேதாவிற்கு கோபம் வந்தது.

"இங்க பாரு ஆங்கிரி சாமியார்!" என்று தொடங்கியவள்...

"இனி உன்னை சாமியாருன்னு சொல்லமுடியாது.... அதுனால ஆங்கிரி பேர்டுனு சொல்லிக்கிறேன்.அவரு உன்கிட்ட என்ன கேட்க வந்தாருன்னு கூட காது குடுத்து கேட்காம பேசிட்டு இருக்க ரொம்ப பண்ற மேன் நீ!"என்றவள்


"நீ வாடா குடுமி நம்ம போகலாம்!" என்று கோபமாய் கிளம்ப இருந்த நேரம்


"நீ வீட்டுக்கு போடி நான் பாஸ் கூட போய்ட்டு வாரேன்!" என்றவாறு காரினை இயக்க சென்றுவிட்டான் நிவேயின் குடுமி.


அங்கிருந்த சூழலில் ஒரு 'சங்கடம்' தோன்ற; நிவேதா கோபமாக தன் இல்லம் செல்ல போக.


ரிதம் தான் தடுத்து நிறுத்தினாள் கணவனை பற்றி அறிந்தவளாக.

"ஏய்! கொஞ்சம் பொறுமையா இருடி. உடனே குதிச்சுட்டு கிளம்புவா உட்காரு. அவரு வந்ததும் உன் வீட்டுகாருக்கு நியாயம் கேட்டுட்டு அப்பறம் போ.இப்ப இந்த கேரட் ஜூசை குடி!" என்று கொடுக்க.

"நீ சொல்றதும் சரி தான்டி ரிதம்.அந்த ஆங்ரி பேர்ட் வரட்டும் இருக்கு இன்னைக்கு!" என்றவள் சட்டமாய் அமர்ந்து கொண்டு ரிதம் கொடுத்த பழரசத்தை அருந்தத் தொடங்கினாள்.


மருமகளின் சாமர்த்தியம் கண்டு லதாவிற்கு பூரிப்பு தாங்கவில்லை.


சூழலை ஒரு நொடியில் மாற்றிய அண்ணன் மனைவிக்கு 'அருமை' என்று கையால் சைகை காண்பித்த கதிரை பார்த்த நிவேதா

"டேய் போலி நீ இன்னும் ஹாஸ்பிடல் போகலையாடா!?" என்று வினவ.

"அம்மாடி ராசாத்தி! உனக்கு என்ன வேணும்னாலும் கேளு வாங்கிதர்றேன்... ஆனா போலின்னு மட்டும் சொல்லாத" கெஞ்சலில் இறங்க.

"இவ்வளவு ஆசையா பாசமா கேட்கறதால உன் மனசை நோகடிக்க விரும்பலை நானு. அதுனால எனக்கு..." என்றவள்..

"மனோ ரஞ்சிதம் செடி வாங்கி தர்றியா? கூடவே பெங்களூர் மல்லியும்!" என்றிட

அவள் உணவு, தீனி என்று எதையாவது கேட்பாள் என்று எதிர்பார்க்க அவளோ செடி வகைகளை கேட்க "சரி" என்று முழு மனதாக ஒப்புக் கொண்டான் கதிர்.


"நவி" என்ற அழைப்பில் வீட்டின் சமையல் அறையில் இருந்து வியர்வை வடிய காபி கோப்பை ஏந்தி வந்தான் நவநீ.

"தன் வீட்டின் நடு கூடத்தில் நிற்பது ஏகன் தானா!?" என்ற சந்தேகம் பிறக்க

"டேய் சடையா இங்க நிக்கிறது யாருடா!?" என்க

"சோடா... சோடா.." என்றவனால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.

"நண்பனை பாய்ந்து சென்று அணைத்துக் கொண்டான்!" ஏகன்.

"டேய் ஏகா மச்சான்..மச்சான்..நீயா டா இது? இந்த அதிசயம் எப்போடா நடந்துச்சு!?" என்று புலம்பலில் இறங்க.

நண்பனை அணைத்து அவனோடு நின்றவாறு கை நீட்டி அழைத்தான் இக்னேஷை.

"நீங்கள் இருவரும் என் கண்ணை போன்றவர்கள். ஒன்றை விட்டு மற்றொன்றை என்னால் பாரபட்சம் பார்க்க முடியாது!"என்பதை சொல்லாமல் செயலில் நிரூபித்துவிட்டான் அல்லவா.

இக்னேஷிற்கு 'நெக்குருகி' போனது.

"தன் பாஸ் தன் மீதும், நவி மீது வைத்த அதே பாசத்தை அல்லவா வைத்துள்ளான்!" என்று.


"டேய் ஏகா எப்போடா சரியாச்சு!?" என்றவன் நண்பன் கழுத்தில் இருக்கும் அழகிய சுவடைக் கண்டு புரிந்து கொண்டான்.

"ஏகா ஒருவழியா உன் லவ்வ சக்சஸ் பண்ணிட்ட வாழ்த்துக்கள்டா!"

சூழல் புரிந்து அவனை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாது வாழ்த்தி உற்சாகம் கொடுக்க.


இக்னேஷ் தன் கைபேசியில் சுயமிகளை கிலுக்கினான் மூவரும் கட்டி அணைத்து இருக்கும் புகைப்படத்தை. பலர் பார்க்க தன் ஸ்டேடஸில் வைத்தவன் மனைவிக்கும் அனுப்பி இருந்தான்.

இப்பொழுது ரிதம் நிவேதாவை பார்த்து "பார்த்தியாடி! என் வீட்டுக்காரரை.. என் நண்பனும், நீயும் ஒன்னு அப்படின்னு சொல்லாம சொல்லிட்டாரு! இன்னும் கொஞ்ச நேரத்துல என் வீட்டுக்காரர் வருவாரு அவர்கிட்ட சாரி அண்ணான்னு மன்னிப்பு கேட்கனும் புரியுதாடி!" என்று அவளின் தவறுக்கு மன்னிப்பும் கேட்ககூற.


"இங்க பாருடி ரிதம் மன்னிப்பு வேணா கேட்பேன் ஆனா அண்ணான்னு எல்லாம் சொல்ல முடியாது!"வீம்பாக உரைக்க.


"அது உன்பாடு!" என்று அத்தோடு விட்டுவிட சிறிது நேரத்தில் வந்த ஏகன் முன் சென்று நின்றவள்


"சாரி நான் தெரியாம பேசிட்டேன் மச்சிடு ஆங்ரி..." எனத் தொடங்கி "..அண்ணா!" என முடித்தாள் நிவேதா.

அவளின் அண்ணாவில் அவளை அதிசயமாக பார்த்தவன் அவள் தலையில் கைவைத்து சிறு அழுத்தம் கொடுத்து ஆட்டிவிட்டு சென்றான்.அன்றைய தின
ம் வீட்டினர் முதல் அடிமட்ட உதவும் கரங்கள் அவரை அனைவரின் வங்கி கணக்கிலும் பணவரவு தான்.


இந்த முறை தாத்தாவின் ஆணையின் பெயரில் கொடுக்கப்பட்டது.

"அள்ளிக்கொடுக்க வேண்டாம்! நம்மிடம் இருப்பதை பிறருக்கு கிள்ளியாவது கொடுத்து நாமும் வாழ்ந்து! பிறரையும் வாழ வைப்போம்!!!"
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
உலகத்தோட எட்டாவது அதிசயம் எப்படி ஏகன் வூட்டுக்கு வந்துச்சு🥳🥳🥳🥳🥳
எல்லாம் நம்ம இருக்கோம் இல்லையா... நம்மால தான் வந்துச்சு🤣🤣😂😂
 
சூப்பர் ஜி 🥳🥳🥳🥳🥳ஒரு வழியா ஏகன் வாழ்க்கையில் ஒளி வந்துவிட்டது......... இதற்கு தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா......🤣🤣🤣🤣🤣🤣
 
சூப்பர் ஜி 🥳🥳🥳🥳🥳ஒரு வழியா ஏகன் வாழ்க்கையில் ஒளி வந்துவிட்டது......... இதற்கு தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா......🤣🤣🤣🤣🤣🤣
அங்க ஒளி வந்ததோ இல்லையோ நம்ம லாலீஸ் முகங்கள்ல வந்துருச்சு 😂😂😂😂
 
"அள்ளிக்கொடுக்க வேண்டாம்! நம்மிடம் இருப்பதை பிறருக்கு கிள்ளியாவது கொடுத்து நாமும் வாழ்ந்து! பிறரையும் வாழ வைப்போம்!!!"

Superb.....
 
Top