Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 59 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 59 ❤️‍🔥

"வாழ்வெனும் போரில்
சமர் செய்வோம்
பொல்லா எண்ணங்களை.......!!!"




"ஹலோ பாஸ் நாங்க வந்துட்டோம் மாயன் நம்ம கஸ்டடில இருக்கான்.என்ன செய்யட்டும்!?"


"இக்னேஷ் பிளானை எக்ஷிக்கியூட் பண்ணுங்க!"


"பாஸ் அப்ப தீக்ஷியை...!?"

"அவளை கதிரும், நவியும் பார்த்துப்பாங்க..நீயும் பிரபாவும் இதை பார்த்துக்கோங்க, நம்ம ஆளுங்களையும் கூப்பிட்டுக்கோங்க....இதுல ஒருத்தரும் தப்பிக்கவே கூடாது!" என்ற அறிவிப்பை இக்னேஷிற்கி வழங்கியவன் அடுத்ததாக நவநீக்கு அழைத்தான்.



"நவி" என்று ஆரம்பித்து அவன் செய்யவேண்டிய செயல்களை வரிசை படுத்த.



முன்பே அதற்கு தயாராக இருந்த கதிரும் நவநீயும் ஏகன் சொன்ன மறுகணம் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட தோட்டாவாக விரைந்து செயலாப்பட்டனர்.


ஒவ்வொருவரும் விரைந்து செயல்பட.
"ஏகனின் படை எந்த பக்கத்தில் இருந்து தாக்குதல் தொடங்குவர்!? என்பதை எதிரி அறிவதற்கு முன்பே தன் தாக்குதலை முடித்து இருந்தான் அவன்!"


ஆழியின் அலையாய் எதிரியர் கூட்டத்தை கொத்தாக வாரி சுருட்டி இருந்தான் ஒருவனாக உயர்ந்த ஏகன்.


அவன் செயலால் நீதிமன்றத்தில் தீக்ஷி, மதி,மாயன் மற்றும் பாண்டியன் நிறுத்தப்பட்டனர்.

எவ்வளவு விசாரித்தும் கூட... யாரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாது நிற்க


ஏகன் வழக்கறிஞர் தீக்ஷி மற்றும் மதி இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படமும்..... அதனுடன் மதிவாணனை தன் செல்வாக்கில் பெயிலில் எடுத்த தீக்ஷியின் அறிவார்ந்த செயலையும் நீதிக்கு முன் நிரூபிக்க தீக்ஷி மாட்டிக் கொண்டாள்.


அதுமட்டுமல்லாது ரிதம் முதல்முறை கடத்தப்பட்ட அன்று......


ஓய்வு விழாவில் கலந்து கொள்ள சென்ற போது இரவு எதிர் எதிர் புறம் இருந்து அவளை கடத்த முயன்ற இருகுழுக்களின் மத்தியில் 'மதிவாணன்' முகம் பதிவான காணொளி காட்சி பதிவு அனைத்தும் நீதிபதி முன்பு சமர்ப்பணம் செய்யபட்டு அவனின் குற்றமும் நிரூபிக்கபட்டது.



அத்தோடு சேர்த்து தீக்ஷி பேரில் பதிவான இன்னும் சில வழக்குகள் தூசி தட்டபட்டு அதற்கும் சேர்த்து அவளுக்கு தண்டனை வழங்கப்பட்டு 'ஆயுள் தண்டனை' விதிக்கப்பட.


ஏற்கனவே பெயிலில் வந்திருந்த மதிவாணன் மீது மீண்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்...அவனுக்கும் ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்.


இப்பொழுது பாண்டியன் மீது நீதிபதி கவனம் திரும்ப.


பாண்டியன்," தன் மீது தவறில்லை!" என்று அழுத்தமாக நின்று சாதித்தார்.


பாண்டியன் இருக்கும் தைரியத்தில் தானும் அழுத்தமாக நின்றிருந்தான் மாயன்.


தவாரி சாட்சியை அழைக்க

பாண்டியன்,மாயன் இருவரின் அழுத்தத்தை போக்கும் அதிர்ச்சி மருந்தாக சாட்சிக் கூண்டில் ஏறினான் இக்னேஷ்.


'ஆம்!'


இக்னேஷ் எனும் இக்னேஷ்வர் தான்....
ரிதமின் அத்தை மகன் 'ஈஸ்வர்'... தங்கையாக எண்ணி அவளின் தேவைகளை தீர்த்தவன்.



விபத்து நடந்த அன்று தன் கண்முன் கண்டதை கூறத் தொடங்கினான்.



குல தெய்வ கோவில் செல்வதற்காக ஜானகி,கண்ணன்,துர்கா,அவர் கணவன் மற்றும் மகன் இக்னேஷ்வர் உடன் வேல் தாத்தா,ராணி பாட்டி, ரிதம் அனைவரும் புறப்பட.


பாண்டியன் தன் மனைவி சசியின் குடும்பத்தில் உறவினர் வீட்டு விழாவிற்கு செல்வதாக கூறி மனைவி மகனுடன் தன் மாமனார் இல்லம் சென்றுவிட.



"டேய் என்னடா எல்லாம் தயாரா!? யாரும் தப்பிக்க கூடாது பார்த்துக்க!"




"அண்ணே நீங்க சொன்ன மாதிரி நான் அவங்க வேன் பின்னாடி தாண்ணே போய்ட்டே இருக்கேன்.சரியா பெரியாஸ்பத்திரி தாண்டி பாலம் ஏறி இறங்கின உடனே சிம்மக்கல் வளைவுல வச்சு தட்டிட்டு போய்டலாம்ன்னே!" என்றான் பாண்டியனால் ரிதம் குடும்பம் செல்லும் வாகனத்தை பின் தொடர ஏவபட்ட ஆள்.



அவன் கூற்றை கேட்டு,"கண்டிப்பா சிம்மக்கல் வளைவை வண்டி தாண்டக்கூடாது....அப்படி தாண்டுச்சு..!" என்று பேசிக்கொண்டே தன் வாகனத்தை இயக்கிக் கொண்டு சென்ற பாண்டியன் தன் பின்னால் நின்ற மனைவியை கவனிக்க தவறி இருந்தார்.



குடும்பமாக கண்ணன் குல தெய்வக் கோவிலான பெரியார் நிலையம் அருகே இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு செல்ல ஒரு வேனை பிடித்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் கிளம்ப.


முன்னால் வேன் செல்ல பின்னால் அவர்களை தொடர்ந்து வந்தது இருசக்கர வாகனம் ஒன்று.


அதில் அமர்ந்திருந்த இருவர் வேன் பயணிக்கும் பாதையை கணித்து துல்லியமாக கைபேசி மூலம் வேறு ஒருவருக்கு தகவல் கொடுக்க.


அங்கிருந்த லாரி ஓட்டுனர் அதற்கு ஏற்றவாறு லாரியை படுவேகமாக இயக்க ஆரம்பித்தான்.


சரியாக சிம்மக்கல் வளைவில் வைத்து அந்த வேனை இடித்துத் தூக்கி எறிந்துவிட்டு நகர்ந்தது லாரி.


அவ்வளவு தான் நடந்த கோர விபத்தில் அனைவரும் உயிர் இழக்க.தாத்தாவும், ரிதமும் மட்டுமே பிழைத்தனர்.


குப்பை தொட்டியை தான்டி விழுந்து கிடந்த 'இக்னேஷை' யாரும் கவனிக்காது போயினர்.



விபத்து நடந்த உடன் தகவலை அறிந்த பாண்டியன் சம்பவம் நடந்த இடத்திற்கே வந்து பார்த்துவிட்டு சென்ற சிறிது நேரத்தில் தாத்தா,ரிதம் இருவரும் ஆம்புலன்சில் ஏற்றப்பட.


கணவன் தகிடு தத்தம் அறிந்து சசி வருவதற்குள் விபத்து நடந்தேறி இருந்தது.
விபத்தை தடுப்பதற்காக வந்த சசி அங்கேயே கதறிக் கொண்டு நிற்க.



வலியில் முணங்கும் 'உயிரின் ஓலம்' அருகே எங்கோ கேட்க ஓடினார்... சத்தம் வந்த திசையை நோக்கி.


அங்கே உயிருக்கு போராடிய நிலையில் இக்னேஷ் இரத்த வெள்ளத்தில் கிடக்க.


அவனை காத்தவர் கணவன் உண்மை அறிந்தால் இவனையும் கொல்லும் அபாயம் உள்ளதால் காப்பகம் ஒன்றில் சேர்த்து வளர்த்து வந்தார்.


கல்லூரியில் சௌந்தர்,இக்னேஷுடன் வந்து சேர்ந்துகொண்டான்.


முதல் முறையாக ரிதம் மீது நடத்தப்பட்ட விபத்தின் போதுதான்


தங்கள் 'பாப்பு' தான் இந்த 'ரிதம்' என்பதை அறிந்ததாகவும், அவளை காக்கவே சௌந்தர் அங்கே வந்ததாகவும் கூறினான் இக்னேஷ்.


ரிதமை சௌந்தர் பார்த்தது 'தெய்வ செயல் தான்!'



"கணவன் கொலையாளி என்பதை அறிந்த சசி மகனுக்கு வீட்டில் கணவன் இல்லாத போது நல்லது சொல்லி கொடுத்தவர். மகனை பள்ளி விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார்.கணவனின் உண்மை நிறத்தை மகனுக்கு புரியவைத்து வளர்த்தார்.
அன்னையும் பிள்ளையும் இக்னேஷை இத்தனை காலம் பாண்டியன் கண்களில் படாது பாதுகாத்தது தான் சாமர்த்தியம்!"


சிறுவயதில் பார்த்த முகங்கள் நிழலாய் தெரிய... வேல் தாத்தாவின் முகம் நினைவில் இல்லாத இக்னேஷிற்கு சௌந்தர் மூலமே ஏகன் மனைவி ரிதம் தான் தங்கள் பாப்பு என்ற உண்மையும்... தெரிய வந்தது.



சௌந்தர் மூலம் அறிந்தவை பாதியும்... ரிதம் வாழ்வை பற்றி தங்கள் பிள்ளை பருவம் பற்றிய அனைத்தும் ஏகனுக்கு அன்று கூறியதும் இக்னேஷ் தான்.


சௌந்தர்,இக்னேஷ்,ஏகன் மூவரும் ஒன்றாக இணைந்து தான் களத்தில் இறங்க முடிவு செய்தனர்.


தீக்ஷி மற்றும் மதியை தொடரும் பொறுப்பை நவநீ ஏற்றுக் கொண்டான்.


அவனும்,கதிரும் இணைந்து தான் இருவரின் குற்றங்கள் அனைத்தையும் அம்பலமாக்கினர்.


ரிதம் அன்றைக்கு 'பள்ளி செல்வாள்' என்று ஏகன் எதிர்பார்க்கவில்லை... என்பதே நிதர்சனம்.


'அவசர வேலை' என்று இவன் வெளியில் சென்ற கொஞ்ச நேரத்தில் மகனை அழைக்க சென்றவள் மாட்டிக் கொண்டாள்.


அப்படி மாட்டியும் அவளை காப்பதற்காக வந்த சௌந்தரை தவறாக புரிந்து கொண்டு அவனை தாக்கிவிட்டு.... அகரனோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பி ஓடிவந்தாள்.



இதில் நீதிபதி முன் நின்று கூற வேண்டிய தகவலைக் கூறியவன் சாட்சி கூண்டில் இருந்து இறங்க.


இக்னேஷை தொடர்ந்து சௌந்தர் கூண்டில் ஏறி மாயன் மூலம் தந்தை ரிதமை கடத்த முயற்சி செய்தது மற்றும் கொலை செய்ய முயன்றது என்று ஒன்றுவிடாது கூற.


காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பாண்டியனின் ,'நான்' எனும் ஆணவத்தை அடியோடு அழிக்கும் சக்தியாக வந்தது அவருக்கான இரட்டை ஆயுள் தண்டனை....
மாயனுக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்க.


கணவனுக்கு தண்டனை கிடைத்த கையோடு மகனுடன் மருத்துவமனை வந்திருந்தார் சசி.

"பாப்பு எங்களை மன்னிச்சுடுடா...!" கண்களில் கண்ணீர் பல்கி பெருக நின்றார் பெரியவர்.


இருவரும் ரிதமிடம் மன்னிப்பை வேண்ட.


இது மன்னிப்பு என்பதே இல்லாத தவறு.
இதை எங்கிருந்து அவள் மன்னிப்பாள்.
ஆனால் இருவரையும் ஏற்றுக் கொண்டாள் உறவாக.


தன்னை காக்கும் முயற்சியில் சௌந்தர் எடுத்த முயற்சிகளுக்கு 'நன்றி'கூறினாள்.


சௌந்தர் ரிதமின் சொத்துக்கள் அனைத்தையும் அவளிடம் ஒப்படைக்க.


அந்த சொத்தினால் தான் இழந்தது அதிகம் என்பதால் அது 'வேண்டாம்!' என்று மறுத்தவள்.

அடிக்கடி வந்து தன்னை பார்த்து செல்லுமாறு அன்பாய் வேண்டுதல் விடுத்தாள் சசியிடம்.

அவர்களும் அவளின் மனம் புரிந்து அவளின் சொத்துக்களை
பாதுகாப்பதாகவும்.

"அவளுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது அவற்றை திரும்பப் பெற்றுக்
கொள்ளுமாறு!" கூறி இருந்தனர்.


பிள்ளையை பார்த்தவர்கள் அவர்களுக்கு ஊரில் வேலை இருப்பதாக கூறி அங்கிருந்து ரிதமிடம் விடைபெற்று செல்ல.



அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அறைக்குள் மொதுமொதுவென்று நுழைந்தனர் நம்மவர் கூட்டம்.


குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை யாரையும் தன் வீட்டில் இருந்து நகரவிடாது 'வீட்டுச்சிறை' வைத்திருந்தான் ஏகன்.


"எங்கே எதிரிகளின் இடம் இவர்களில் யாரேனும் ஒருவர் சிக்கினால் அதன் பிறகு அவன் திட்டம் என்ன ஆவது!?"



"இரண்டு நாட்களாக மனைவி மகன்களுடன் மருத்துவமனையை தன் கட்டுபாட்டில் வைத்திருந்தவன்.இன்று காலை தான் நீதிமன்றம் செல்வதற்காக மருத்துவமனையை நீங்கினான்"


அகிலாண்டம் தான் தன் வெண்கலத் தொண்டையை திறந்து கொண்டே அறைக்குள் நுழைந்தார்.

"அப்பா பிள்ளையார் பட்டி கற்பக விநாயகா! குன்றக்குடி முருகா! வளர் ஒளி நாதா...!" என்ற கடவுளரின் பெயர்களை வரிசைபடுத்திக் கொண்டே அறைக்குள் வந்தார்.


"அடி என் தங்கமே ராசாத்தி...!"

என்றவாறு வந்தவர் ரிதமின் முகத்தைக் கண்டு அவள் நலனையும் அறிந்த பிறகு தான் குழந்தையை கண்டார்.

ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தையை தூக்க.
பிள்ளை உடல் சூட்டால் அழுக தொடங்கிய பிறகுதான் தொட்டி சென்று சேர்ந்தான்.


அன்பிற்கு அங்கே 'பஞ்சம்' என்பதே இல்லாது போக...நீதிமன்ற வேலைகள் எல்லாம் முடிந்து அறைக்குள் நுழைந்தான் இக்னேஷ்.


அவனைக் கண்ட ரிதம் "ஈஸ்வரா!" என்று உணர்வுப் பூர்வமாக அழைத்தாள்.


அவள் அழைப்பில் பிள்ளையாய் மாறியவன் அவளின் கரத்தை பிடித்துக் கொண்டான் இறுக்கமாக.


இக்னேஷை கண்ட ரிதம் கண்களில் முட்டிக்கொண்டு வந்தது அம்பக நீர்.

"ஈஸ்வரா!" என்றாள் பல ஆண்டுகளுக்கு பிறகு.

அவளுக்கு அவனை 'மாமா' என்று அழைப்பதை விட 'ஈஸ்வரா' என்பது தான் பிடிக்கும்.

'ஆனால்'

அன்னையின் முன்பு மட்டும் மரியாதை கொடுக்கும் ஆம்பல் தனியே இருந்தால் 'ஈஸ்வரா!' என்று தான் அழைப்பாள்.


கையில் இருக்கும் அனைத்தையும் இவளுக்காக அள்ளிக் கொடுத்த வள்ளல் அல்லவா அவன்.

அவனைக் கண்டு சகோதர பாசம் பெருகும் இவளுக்கு.


'பாப்பு' என்றால் அவனுக்கும் பாசம் அதிகம் தான்.

"கடந்தது கடந்ததாக இருக்கட்டும்; நடப்பது நல்லவைகாக நடக்கட்டும்!" என்று தத்துவம் ஆயிரம் கூறினாலும்.



"மனம் அந்நேரம் படும் வலி மட்டும் குறைவதே கிடையாது! வலி எல்லாம் ஆறி காயம் கண்ட இடம் வடுவான பிறகுதான் தத்துவக் குப்பை எல்லாம் ஒவ்வொன்றாக நெஞ்சை விட்டு வெளிவரும் போல!"


"ஈஸ்வரா ஏன் என்கிட்ட நீ சொல்லவே இல்லை!?ஹா...!"என்றவள் தேம்ப.
லதா தான் அதட்டினார் மருமகளை.


"ரிதம் இப்போ சந்தோஷமா இருக்கணும். இப்படி தேம்பி அழுதா உடம்பு என்ன ஆகறது!?" என்றதும்.

அவளின் தலை மீது கைகளை வைத்து மெதுவாக தடவி அவளை அசுவாசப்படுத்தினான் இக்னேஷ்.

நவநீயோ மகப்பேறு மருத்துவரான தன் அன்னையை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

வெளியூரில் அரசாங்க மருத்துவராக வேலை பார்த்தவர் இப்பொழுது ஓய்வு பெற்று வந்திருக்க.

ரிதம் சுற்றி நின்ற கூட்டத்தைக் கண்டு அவர்களின் அன்பு புரிந்தாலும் அனைவரையும் துரத்திவிட்டார்.

இதில் லதாவிற்கும்,பாலுவிற்கும் சிறப்பு அர்ச்சனைகளும் கதிருக்கு கண்டன பார்வையும் கொடுத்தவர்.


நம் மக்களை பார்த்து இப்பொழுது
இல்லம் நோக்கி செல்லுமாறும் நாளை வீடு வந்த பிறகு வந்து பார்க்குமாறும் அறிவுரை கூற.

ஏகன் கூட ஒன்றும் பேசாது அமைதியாக வெளியேற கண்ட அனைவரும் அமைதி காக்க.


ரிதமின் உடல் நிலை பற்றிய அறிக்கையை பார்த்துவிட்டு மீண்டும் லட்சார்ச்சனை ஒன்றை லதா பாலுவிற்கு வழங்கிய பிறகே வெளியேறினார் அவர்.


வளையல் இடும் விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இந்த சம்பவம் நடந்தது என்பதால் வளைகாப்பு நடைபெறாது போக.


மூத்தவன் பெயர் அகர மகிழ்வன் என்பதால் ரிதம் இளையவனுக்கு விதுர மகிழ்வன் என்று பெயரிட்டு அழகு பார்க்க.

தன் திருமணம் அகரன் பிறப்பு... மனைவி வளைகாப்பு... என்று எதையும் கொண்டாடாத ஏகன் இரண்டாம் மகனின் பெயற்சூட்டு விழாவில் மொத்தமாக கொண்டாடிவிட்டான்.


முகத்தில் ஏக்கத்தை தேக்கி மனைவியை பார்த்தான் ஏகன்.


"உன் ஆசை பலித்தது அல்லவா!அதுபோல் என் ஆசை பலிக்க ஒரு பெண் குழந்தை!?" என்று மனைவி முகத்தை பாவமாக பார்க்க.


"வாய்ப்பில்லை ராஜா!வாய்ப்பில்லை!! நீ என்ன குட்டிக்கரணம் போட்டாலும் உனக்கு கண்டிப்பா அடுத்து பொண்ணு பிறக்காதுடா.ரெண்டு மகனுங்களோட சுத்து.....!"என்றான் நவி.

நண்பனின் வார்த்தையை கேட்டு அவனிடம் பாய்ந்தான் ஏகன்.


அகரன் பிறந்த போது அனுபவிக்காது போன 'இன்பங்கள் எத்தனையோ!?' அத்தனைக்கும் இணை கூட்ட மனைவி மற்றும் இரு மகன்களுடன் இன்பமாய் இணைந்து நின்று குடும்ப புகைப்படம் எடுத்து தள்ளினான் ஏகன்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாண்டி நாடக்காரிக்கு சரியான தண்டனை சட்டப்படி கிடைச்சிருச்சு.
எந்த நாட்டுல நாம இருக்கோம்?. நம்ம நாட்டுல இம்பூட்டு சீக்கிரமா தண்டனை குடுக்கறாங்களா சட்டப்படி?. ஆச்சரியம் அதிசயம் தான்.
ஏன்டா ஏகா அடுத்ததுக்கு வாய்ப்பில்லை ன்னு நவநீ சொல்லறான் 🤭🤭🤭🤭🤭🤭.
ரிதமோட சொந்தங்கள் கிடைச்சிட்டாங்க. இந்த சௌந்தர் சின்ன வயசுல ரிதமை மெரட்டாம இருந்திருந்தா இப்ப மண்டைல கொண்டை ரிதமால மொளைக்காம தப்பிச்சிருக்கலாம். இதைய ஏகன் முன்னாடியே ரிதம் கிட்ட சொல்லி இருந்தா கடத்தல் நடந்திருக்காது. ஏன்டா ஏகா எப்பதான் டா பொண்டாட்டி கிட்ட மறைக்காம மொதவே சொல்லிப்பழகுவே.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
பாண்டி நாடக்காரிக்கு சரியான தண்டனை சட்டப்படி கிடைச்சிருச்சு.
எந்த நாட்டுல நாம இருக்கோம்?. நம்ம நாட்டுல இம்பூட்டு சீக்கிரமா தண்டனை குடுக்கறாங்களா சட்டப்படி?. ஆச்சரியம் அதிசயம் தான்.
ஏன்டா ஏகா அடுத்ததுக்கு வாய்ப்பில்லை ன்னு நவநீ சொல்லறான் 🤭🤭🤭🤭🤭🤭.
ரிதமோட சொந்தங்கள் கிடைச்சிட்டாங்க. இந்த சௌந்தர் சின்ன வயசுல ரிதமை மெரட்டாம இருந்திருந்தா இப்ப மண்டைல கொண்டை ரிதமால மொளைக்காம தப்பிச்சிருக்கலாம். இதைய ஏகன் முன்னாடியே ரிதம் கிட்ட சொல்லி இருந்தா கடத்தல் நடந்திருக்காது. ஏன்டா ஏகா எப்பதான் டா பொண்டாட்டி கிட்ட மறைக்காம மொதவே சொல்லிப்பழகுவே.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அதுதாங்க நம்ம பயலுக புத்தின்றது 😁😁😁😁😁
 
Top