வணக்கம் மக்களே,
முகப்புத்தகத்தில் வந்த வாசகர் விமர்சனம்
------------------------------------------------------
'கோட்டையின் கொடிநிலா' -- சரோ
---------------------------------------------------
சமீபத்திய குடும்ப நாவல்கள் பல , எனக்கு S.A ராஜ்குமார் பாடல்களைத்தான் ஞாபகப்படுத்தும் [ ஒரே மாதிரியான டெம்ப்லேட் பாடல்கள், 'லா லா லா' -வில் மட்டும் கொஞ்சம் வேறுபாடு
]
நான் பார்த்தவரை ,reccuring குடும்ப நாவல் தீம்கள் :
1.திடீர் கல்யாணத்தில் முடிந்த ,நேரெதிர் குணம் கொண்ட 'நாயகன் -நாயகி'
2.Dad 's லிட்டில் பிரின்சஸ் -- உரிமை கொண்டாடும் அப்பா & கணவன் .
3.ஒரு தென்றல் புயலாகி ... (அ ) அவள் ஒரு தொடர்கதை - AI வெர்ஷன்
4.பிரிந்து போன தம்பதியர் சந்திக்கையில்.... (பெரும்பாலும் , தங்களுக்கு ஒரு குழந்தை இருப்பது, இணையில் ஒருவருக்கு தெரியாது )
[மிக அதிகமாக எழுதப்படும் 'ஆன்டி -ஹீரோ' கடோத்கஜன் டைப் நாவல்களை , நான் 'மரணகாமெடி' ஜானர் Folder-இல் சேகரித்து , பிறகு படிக்காமல் ,மொத்தமாய் டெலீட் செய்துவிடுவது
.]
சற்றே இந்த டெம்ப்லேட் காவியங்களில் இருந்து விலகி, ஒரு கதை கண்ணில்பட்டது - 'கோட்டையின் கொடிநிலா' ('மெளனத்தின் மறுபக்கம்' நாவல் வழி ஈர்த்தவர் சரோ).அதிகம் கையாளப்படாத அரசியல் சதுரங்கத்தில் ஒரு பெண்ணை 'அரசி'யாக மையப்படுத்தி ! அசிரத்தையாக தான் படிக்க ஆரம்பித்தேன் . ஆனால் , எழுத்தின் elite நடை ,கொஞ்சம் கொஞ்சமாய் என்னை உள்ளிழுத்து கொண்டது . கெளதம் வாசுதேவ் மேனன்(GVM) படங்கள் மாதிரியான ஸ்டைலிஷ் narrative சுவாரசியம் கொடுக்க , முழு நாவலும் ,ஒரே மூச்சில் முழுதாய் என்னை விழுங்கிவிட்டது ! ரொம்பவே refreshing-ஆக இருந்தது .பரபரவென போகும் திரைக்கதை .முக்கியமாக ,எடிட்டிங்கே தேவைப்படாத 'கன'கச்சிதமான வசனங்கள்--மிகாமல் , குறையாமல் crisp & crunchy !
'அரசியல்' என்பது அதிகாரத்தின் மொழி .'காதல்' என்பது இதயத்தின் மொழி.
இந்த இருமொழி கொள்கை எனும் டெலிகேட் சப்ஜெக்ட் -ஐ , மிக நேர்த்தியாய் ,நளினமாக அதே சமயத்தில் emotional quotiont -உம் குன்றாமல் இருக்கக்கண்டேன் .
இதுபோன்ற ,'தேசிய அரசியல்' பின்னணியை மையப்படுத்தி எழுதப்படும் நாவல்களுக்கு ,சூழலின் authenticity-தான் கதைத்தேரின் அச்சாணியே. மாநில,தேசிய ,சர்வதேச அரசியல் உலகின் முதுகுப்பக்கங்களின் பின்னணி detailing-இல் அசரஅடிக்கிறார் சரோ - Devil is in the details .
ஸ்டைலிஷ் -ஆக படைக்கப்படும் கதைகளில் , தன்னையறியாமல் ஒரு விபத்து நடந்து விடுவதுண்டு -- அது உணர்வுபூர்வமான,எதார்த்த அம்சங்கள் அடிபட்டு போவது ;அப்படி ஆகாமல் , 'இருமுனை' நேசத்தின் அழுத்தங்கள் ,மனதின் நுண்ணிய தடுமாற்றங்கள், 'அறிவு -மனதின்' எதிர்திசை தேரோட்டங்கள் ,அன்புமிகுதியின் நெகிழ்வுப்பகுதிகள் என கலவையான உணர்வு ரங்கோலியை வரைந்துபோகிறது ,சரோ -வின் தூரிகை .
'கோட்டையின் கொடிநிலா ',ஒரு பெண் நாட்டின் உட்சபட்ச அதிகாரத்தை எங்கனம் அடைந்தாள் என்பதின் 'திரைக்கதை' அல்ல ; செங்கோட்டையில் ஒரு நிலா, எங்கனம் மேன்மையும் ,நேசமும் ,வலிவும் ,வலியும் ,உயிர்ப்புமாய் பொன்னொளி வீச முடியும் என்பதின் 'வழித்தடம்' !! கடமையும் , காதலும் ,பாசமுமென உணர்வுகளின் முக்கூடல் . அரியணையில் 'சிங்கமுகம்' காட்டினாலும் , தனிமையில் சன்னமாய் ஒலிக்கும் ரத்தமும் சதையுமான ஓர் இதயத்தின் உயிர்த்துடிப்பு ...
வாழ்த்துகள் சரோ ! உங்கள் தூரிகை வழி இன்னும் பல புதுவண்ண எழுத்துஜாலங்களை எதிர்நோக்கி ...
ஆவலுடன் ,
இனியவன் .