Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-10

Advertisement

praveenraj

Well-known member
Member
ஏனோ இப்போது அவையெல்லாம் ஒரு பாஸ்ட் பார்வேடாய் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. இவனுக்கு சைக்காலாஜி மீது கொஞ்சம் அதிக நாட்டம். அதன்காரணமாக டபுள் டிகிரி படித்தவன் தான் இவன். எம்பிஏகூடவே இதற்காகவும் ஒரு ஸ்பெஷல் கோர்ஸ் போனான். இவன் ஒரு தேர்ந்த பிசினஸ்மேன். இவன் எடுக்கும் முடிவுகள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அவ்வளவு சுலபத்தில் விட்டுக்கொடுக்க மாட்டான். கடுமையானப் போராளி. அதிக கோவமும் போராட்ட குணமும் கொண்டவன். இவன் தந்தையின் தொழில்களைக் கையிலெடுத்து ஐந்து ஆண்டுகளில் இவனுக்கென்று ஒரு பெயரைச் சம்பாதித்துக்கொண்டவன் தானே இவன்? தொழிலில் இவனைக் கண்ட எல்லோரும் இவன் அப்படியே இவன் தாத்தாவை உரித்துவைத்துள்ளான் என்பார்கள். அது உண்மையும் கூட. ராஜவர்மனின் அந்தத் திறமைகளை அப்படியே கொண்டவன் தான் இந்திரன். மிகவும் கடினமானவன். இப்போது நினைக்கையில் இதெல்லாம் உண்மைதானா? இவன் ராஜவர்மனின் வாரிசு தானா? என்று இவனுக்கே சந்தேகமாக இருந்தது.
பிஸினெஸிற்கு வந்த முதலாம் ஆண்டே வளர்ந்துவரும் தொழிலதிபர் என்ற பட்டம் பெற்று இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தான் என்றால் அது மிகையாகாது. அண்ட் பார்முலா ஒன் சாம்பியன்ஷிப்ல் இந்தியாவில் இருந்து ரெப்ரெசென்ட் செய்தவர்களில் இன்றுவரை இவனின் சாதனைகளை யாரும் முறியடிக்கவில்லை என்பது இவனுடைய கூடுதல் சிறப்பு.
நாம் இறப்பதற்கு முன் அந்த கடைசி சில நிமிடங்களில் இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் மனம் நமக்கு ஓட்டிக்காட்டுமாம். இது ஒரு சைக்காலஜிகல் பேக்ட். அவனுக்கு இப்போது இதெல்லாம் தோன்றவும் ஏனோ தன் முடிவு நெருங்கிவிட்டதாகவே அவன் உணர்ந்தான்.
அவன் யோசனையில் இருக்க எங்கிருந்தோ ஒரு உறுமி கத்தி அவனை நோக்கி வரவும் அதிலிருந்து லாவகமாகவே தப்பித்தவன் அதற்குள் கால் இடறி கீழே விழுந்தான். அவனைச் சுற்றி நாளா திசையிலிருந்தும் முகமூடிகளை அணிந்த ஆட்கள் அவனைச் சூழ்ந்தனர். அவர்கள் கையில் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டிருந்தனர். இதுவரை அவனுள் இருந்த பதட்டம் பயம் எதுவும் இப்போது அவனுக்கில்லை. அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த நாள் ஏன் இன்னும் சில நிமிடங்கள் கூட அவனின் இறுதி நிமிடங்களாக இருக்கலாம். அவன் மனதில் இரண்டுவிதமான உணர்வு எழுந்தது. ஒன்று அவனுக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. லேகா சிந்துவைக் கொலைசெய்ததற்கான தண்டனை. ஆம் அவனைப் பொறுத்தமட்டில் அவன் தான் அவர்களைக் கொன்றான். அதனால் நடப்பதை மனமார ஏற்க எண்ணினான். அதே நேரம் இரண்டாவது மனநிலையோ இயலாமையுடன் கலந்த வெறுப்பு. அவ்வளவு சொல்லியும் அவன் அன்னைக் கேட்டதைச் செய்யமுடியாமல் போகப்போகிறதோ என்ற குற்றயுணர்ச்சி. அவன் ஒரு நிமிடம் கண்களை மூட ஸ்ரீ சிந்துவைக் காட்டிலும் அவன் அன்னையின் அழுத முகம் தான் அவனுக்குத் தோன்றியது. எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று ஏதோ ஒரு உணர்வுவும் உந்துதலும் எழுந்தது. உயிர் மட்டுமாவது மிஞ்ச வேண்டும்? அவன் யோசிக்கும் முன்னே அவர்கள் அவனை நெருங்கினார்கள்.
முதலில் அவர்களின் கவனத்தைச் சிதறடிக்க வேண்டும். அதற்கு இந்த அமைதியை எவ்வாறேனும் சீர்குலைக்க வேண்டும் என்று நினைத்தவன் சப்தம் போட்டு கத்தினான். அதில் சுற்றிருந்த பறவைகள் மிரண்டு அலற அந்த யானையின் பிளிறல் சற்று அருகில் கேட்டது. அவன் எழ தான் முயற்சிக்கிறான் பாவம் அவனால் முடியவில்லை. உடல் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. அவன் முன்னே வந்தவன் கத்தியை வீச கண்ணிமைக்கு நேரத்தில் அவனுக்கும் கத்திக்கும் இடையில் ஒரு உருவம் அதை வாங்கியது. அதில் தெறித்த குருதி அவனின் மேனியெங்கும் படற,
"ஓடிடுங்க தம்பி. வெரசா போங்க..." என்று அவர் சொல்ல அவன் எழுந்து எந்த திசையில் செல்வதென்று புரியாமல் குழம்பினான்.
"மேற்கால போங்க..." என்றார் அவர். அவனுக்கு அந்த இருட்டில் மேற்கேது என்று கூடத் தெரியவில்லை. அவனை அங்கிருந்தவர்கள் துரத்தவும்,"இடதுபக்கம் ஒடுங்க தம்பி..." என்று அவர் சொல்ல அவனுக்கோ இவரை இப்படியே விட்டுச்செல்ல மனமில்லை. இருந்தும் அவனுக்கு வேறுவழியில்லை என்பதால் அவன் ஓடினான். அவனைப் பின்தொடர்ந்த ஒருவனை லாவகமாக கீழே தள்ளியவர் குருதி சொட்ட எழுந்தார்.
அப்போது தான் இந்திரனைக் காணாது தேடிவந்த ராஜேந்திரன் இந்தச் சத்தத்தைக் கேட்டு அங்கே வர அப்போது சில நபர்கள் சித்தனை (மாதுளையின் தாத்தா) சூழ்ந்திருப்பதைக் கண்ட ராஜேந்திரன் தன்னுடன் வந்த ஆட்களை ஏவ அவர்களை ராஜேந்திரனின் ஆட்கள் புரட்டியெடுத்தனர். சித்தனின் நிலைமை கண்டு துடித்தவர், "ஐயா என்னாச்சு? இந்திரன் எங்க?" என்றார் ராஜேந்திரன்.
"மேற்காலப் போகச் சொல்லிட்டன். நீ ஓடு ராஜா. நம்ம முதலாளி பையனை காப்பாத்து..." என்று அவர் சொல்ல ராஜேந்திரனுக்கும் இவரை இப்படியே விட்டுச்செல்ல முடியவில்லை. இருந்தும் இந்திரனுக்காக அவர் ஓட ஒரு கத்தி அவரின் முதுகில் பாய்ந்தது. அதற்குள் அந்தப் பழங்குடியினர் பலர் வந்துவிட இந்திரனைத் தாக்க வந்தவர்கள் மாட்டிக்கொள்ளக் கூடாதென்று மீண்டும் காட்டுக்குள் தப்பி ஓடினார்கள். அவர்களோடே வந்த இமையவர்மன், சகுந்தலா ஆகியோர் அழ பின்னாலே வந்த மாதுளை தன் தாத்தாவைக் கண்டு அழுது கதற அவளை அருகில் அழைத்தவர் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் அவரின் மார்பில் பாய்ந்த கத்தி அவரின் உயிரைப் பறித்தது.
ராஜேந்திரனைக் காப்பற்ற அவரைத் தூக்கிக்கொண்டு அவர் ஆட்கள் ஓட, ராஜேந்திரனோ ஒருநிமிடம் நிற்கச் சொல்லி, இமையவர்மனைக் கூப்பிட்டு,"மன்னிச்சிடுங்க ஐயா..." என்று சொல்லி அந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டும் அவன் மீது இமையவர்மனுக்குச் சொல்லமுடியாத உணர்வு வந்தது.
"நீ எனக்கு உயிரோட வேணும் ராஜா..." என்றவர்,"சீக்கிரம் தூக்கிட்டுப் போங்க" என்று அவர்களுக்கு கட்டளையிட்டு காட்டுக்குள் போக அங்கே இந்திரன் மயங்கி சரிந்திருந்தான். சகுந்தலா அழ அவனைத் தூக்கியவர்கள்,"ஒன்னு இல்ல அம்மா. தம்பி சோர்வாகியிருப்பாரு..." என்று அவனையும் தூக்கிச்சென்றனர்.
இங்கே தன் தாத்தாவை இழந்த மாதுளை வாய்விட்டு கத்திஅழக்கூட முடியாமல் துடித்தாள். அப்போது அங்கிருந்த ராசப்பன் மாதுளையைச் சுட்டி,"இந்தப் பொண்ணுதான் அன்னைக்கு தம்பியைக் காப்பாத்துச்சு..." என்று சொல்ல இமையவர்மனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.'யாரிவர்கள்? எதற்காக என் குடும்பத்துக்காக இவ்வளவு செய்யணும்?' என்று யோசித்தவர், இதெல்லாம் யாருடைய வேலையாக இருக்குமென்று யோசித்தவர் கடும் சினம் கொண்டு விரைந்தார்.
சகுந்தலா தான் அந்தப் பெண்ணைப் பற்றி சுமதியிடம் விசாரிக்க,"சித்தனுடைய பேத்தி. அவளுக்கு தாத்தா பாட்டி தான் எல்லாமே. அப்பன் ஆத்தா இல்ல..." என்றதும் அவள் மீது ஒரு கரிசனம் வந்தது. ஏதோ நினைத்து தனக்குள் ஒரு முடிவெடுத்தார். அவருக்கு இந்திரன் மீண்டுவிட வேண்டும் என்று கண்களில் கண்ணீர் வந்தது கூடவே அவளின் நிலையை நினைத்தும் வருந்தினார். அவளோ இதையாவும் உணரும் நிலையில் இல்லாமல் தன் தாத்தாவையே பார்த்து அழுதாள்.
தன் கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு கிட்டத்தட்ட பித்துப்பிடித்தவர் போல வந்து சேர்ந்தார் சித்தனின் மனைவி. அங்கே அவர் முன்னே அழும் தன் பேத்தியைக் கூடக் காணாதவர் என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே மயங்க என்ன செய்வதென்று புரியாமல் எழுந்தவள் அங்கிருப்பவர்களை அழைக்க அப்போது தான் அவரும் தன்னை இப்படி நிராதரவாய் விட்டுச் சென்றுவிட்டார் என்று தெரிந்தது. அவளுக்கு ஒரு மாதிரி தோன்ற அழுகை நின்றது ஆனால் உடல் இறுகியது. செய்தியறிந்து அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவளுக்காக அனுதாபம் மட்டுமே பட்டனர்.
அங்கே இந்திரனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு ஒன்றுமில்லை என்றும் அதிகபடியான பதற்றம் அடைந்ததால் மயங்கிவிட்டான் என்று சொல்ல அப்போது தான் அந்தத் துயரச் செய்தி அங்கு வந்து சேர்ந்தது. அதைக் கேட்டதும் சகுந்தலாவிற்குத் தான் என்னவோ போல் ஆகிவிட்டது. 'இப்படி யாரு என்னன்னே தெரியாம அநியாயமா ரெண்டு உயிர் போயிடுச்சே? அதும் ராஜேந்திரன் மட்டும் இன்னும் தீவிரக் கண்காணிப்பில் இருக்கிறான்' என்றெண்ணிய சகுந்தலா உடனே அப்பெண்ணைத் தேடிச் சென்றார். அழுதுகொண்டிருந்த அவளின் தோளை ஆதரவாகத் தொட அவரைக் கட்டிக்கொண்டு மாதுளை கேவினாள்.
கோவமாகச் சென்ற இமையவர்மன் தன் அலைப்பேசியை எடுத்து அவருக்குத் தொடர்புகொள்ள மறுபுறம் எடுத்ததுமே,
"டேய், நான் பொறுமையா இருக்கேனு ரொம்பவும் ஆடாத. உனக்கு எதிராக எல்லா எவிடென்சும் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன். ஒருவேளை நீதானானு முடிவாச்சு இதுவரை பார்க்காத இமையவர்மனை நீ பார்ப்ப..." என்று கர்ஜித்தார்.
"ஐயோ நான் சொல்றதைக் கேளு..." என்று மறுபுறம் பேசும் முன்னே,
"வாயைமூடு. அதுதான் உன் சவகாசமே வேணாம்னு விலகி வந்துட்டோம்ல? அப்புறோம் என்ன உனக்கு? அண்ட் நல்லா கேட்டுக்கோ, இப்போ சொல்றேன் நான் திரும்ப கம்பெனிய எடுக்கப் போறேன். உனக்கு போட்டியா நான் இதுவரை வந்ததில்லை. ஆனா இப்போ உனக்கு முதல் போட்டி, எதிரி எல்லாமே நானாகத் தான் இருப்பேன். நீ இந்த இமைய வர்மனை ஒரு இண்டஸ்ட்ரியலிஸ்ட்டா (industrialist) தானே பார்த்திருக்க? இப்போ ஒரு பக்கா பிசினஸ்மேனா பார்க்க தயாரா இருந்துக்கோ..." என்று முடித்தார்.
(industrialist - டாடா குழுமம் போல் ஒரு பொருளை உருவாக்குபவர். பிசினஸ்மேன் - அம்பானி போல வியாபாரம் மட்டுமே அவர்களின் பிரதானம். வியாபாரம் செய்யும் போது லாபம் மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். ஆனால் உருவாக்கும் போது அவர்கள் சேவையைத் தான் பிரதானமாகக் கொள்வார்கள்)
"ஐயோ நான் சொல்றதைக் கொஞ்சம்..." என்று மறுபடியும் அவர் முடிக்கும் முன்னே,
"நீயா நானானு பார்த்துக்கலாம். யுவர் டேஸ் ஆர் கவுன்டிங்..." என்று அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
அந்தப் பக்கம் பேசியவரின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது. ஏற்கனவே அவரின் தொழில்கள் பலவும் சரிவில் இருக்கிறது. இதில் இப்படி ஒரு போட்டியை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதும் தன் உடன்பிறந்த 'சகோதரனே' தனக்கு எதிராக அதும் இவ்வளவு ஆக்ரோஷமாகக் கிளம்புவான் என்று சந்திரவர்மன் துளியும் எதிர்பார்க்கவில்லை.
அவர் ராஜ வர்மன்.அவருடைய பெயர் என்னவோ வெறும் வர்மன் தான். சுதந்திர இந்தியாவுக்கு முன்னால் இருந்த நிறைய ஜமீன்தாரி சமஸ்தானங்கள் அல்லது மன்னர் அரசு என்று சொல்லக்கூடிய பகுதிகளை ஆண்டவர்கள் தான் இந்த ராஜாக்கள். இன்னும் புரியுமாறு சொல்லவேண்டுமென்றால், ஹைதராபாத் நிஜாம், ராமநாதபுரம் சமஸ்தானம், திருநெல்வேலி சமஸ்தானம் போன்ற ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயர்களின் ஆளுகையில் இல்லாமல் நேரடி ஆங்கிலேய கட்டுப்பாட்டிற்குக் கீழ் சுயமாக இயங்கியது. அப்படிப்பட்ட சமஸ்தாங்களை ஆண்டவர்கள் திவான் என்று அழைக்கப்பட்டனர். அப்படிப்பட்டவர் தான் ராஜவர்மன். பின்னர் சுதந்திர இந்தியாவில் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட அவர்கள் தங்களின் நிலங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டனர். தங்களுக்கென்று வைத்திருந்ததில் அவர்கள் பல்வேறு தொழில்களைத் துவங்கினர். அந்தக்காலத்திலே புதிய புதிய கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் கொண்ட ராஜவர்மன் நிறைய தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவினார். அவரை மிகப்பெரிய வள்ளல் என்றும் சொல்லிவிட முடியாது அதற்காக சுயநலவாதி என்றும் சொல்ல முடியாது. அப்படி தான் நிறுவிய தொழில்கள் அனைத்தும் அவர் எதிர்பார்த்தத்தைக் காட்டிலும் அதிகமாகவே வளர்ந்தது. 70களில் ஒரு ஜமீன்தாரி என்ற எண்ணம் பிம்பம் அழிந்து பல தொழில்களின் நிறுவனர் என்னும் நிலையை அடைந்தார்.
பூர்விகம் அன்றைய மெட்றாஸ் ப்ரெசிடென்ஷி தான் என்றாலும் தொழில் நிமித்தமாய் பலவூர்களுக்குச் சென்றவர் தொழிலுக்கு என்று மும்பையில் குடிபுகுந்தார். அவர் எதிர்பார்த்தத்தைக் காட்டிலும் அதிக லாபமும் மக்கள் செல்வாக்கும் ஏன் அரசாங்க செல்வாக்கும் கூடக் கிட்டியது. ஆரம்பகாலத்தில் லாபத்தையே தன்னுடைய பிரதானமாக கொண்டவர் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சேவையில் மனம் போக அதற்குள் அவர் இயற்கை எய்தினார். அவருக்கு நான்கு பிள்ளைகள். மூன்று மகன்கள் ஒரு மகள். அவரின் காலத்திலே மூத்தமகன் சில தவறான பழக்கங்களால் இறந்துவிட அவருக்குப் பிறகு பிறந்தவர்கள் தான் இப்போது பேசிக்கொண்ட இமையவர்மனும் சந்திரவர்மனும்.
சந்திரவர்மனுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆகவேண்டும் என்று விருப்பம். அந்தக் காலத்தில் தன் தந்தையும் அதே கொள்கைகளைக் கொண்டதால் இவரின் சொல்லுக்கே அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இமையவர்மன் அப்படியில்லை. எதிலும் அதிக நேர்மையுடன் கொஞ்சம் சோசியலிசம் தாக்கம் உடையவர். அதனாலே இருவருக்கும் அடிக்கடி தொழில் ரீதியாக நிறைய மாற்றுக்கருத்துக்கள் வரும். ஆனால் எதுவென்றாலும் தங்கள் தந்தை எடுப்பது தான் இறுதி முடிவு என்பதால் இருவரும் அமைதியாகவே இருக்க பெரும்பாலும் அவரும் சந்திரவர்மன் பக்கமே நிற்பார்.
இருவருக்கும் திருமணம் முடிந்ததும் அடுத்த ஆண்டே சந்திரவர்மனுக்கு முதலில் ஒரு பெண் பிறக்க அடுத்ததாக பையனும் பிறந்தான். பாவம் இமையவர்மனுக்கு அந்த பாக்கியம் அப்போது கிடைக்கவில்லை. இதனாலே வீட்டிலும் நிர்வாகத்திலும் நிறைய குழப்பங்கள் ஏற்பட அப்போதைக்கு நிலைமையைச் சரிசெய்ய எண்ணிய ராஜவர்மன் சென்னையில் ஒரு கிளையைத் தொடங்கினார். அதை நிர்வகிக்கும் பொருட்டு இங்கே வந்தவர்களுக்குத் தான் சென்னை அடுத்தடுத்து மூன்று குழந்தைகளும் கூடவே லேகாவையும் கொடுத்தது. அதனால் இமையவர்மனும் சகுந்தலாவும் அன்றைய மெட்ராஸையே தங்கள் வசிப்பிடமாக்கிக்கொண்டார்கள்.
அப்படி இருக்கும் வேளையில் தான் ராஜவர்மன் தவறிவிட சொத்துக்கள் தொழில்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு அவர் அங்கேயும் இவர் இங்கேயும் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இதில் தான் சிக்கலும் ஆரமித்தது. சந்திரவர்மன் பிசினெஸ்மேனாகவே நடந்துகொள்ள அவரின் சொத்துக்கள் அதிவேகமாக உயர்ந்தது.சொல்லப்போனால் இந்தியாவின் டாப் பணக்கார்களின் பெயர்களில் அவரும் இருந்தார். இமையவர்மனுக்கு அப்படி ஒன்றும் பெரிய மோகம் இல்லாததால் தொழிலாளர் நலன் கருதியே தன்னுடைய சாம்ராஜ்யத்தை நடத்தினார்.
சிந்துஜா, கமலேஷ் இருவரும் அப்படியே தங்கள் தந்தையின் ஜெராக்ஸ் காப்பிகள். அவர்களுக்கு தாங்கள் பணக்காரர்கள் என்ற கர்வமும் எண்ணமும் இல்லாமல் தான் வளர்த்தனர். இன்னும் குறிப்பாகச் சொன்னால் சகுந்தலா அவர்களை அப்படித் தான் வளர்த்தார். ஆனால் இந்திரன் அப்படியில்லை. அவன் அப்படியே அவன் தாத்தாவைப் போல இருந்தான். சிறுவயதிலே அவன் தாத்தா சித்தப்பா இருவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அவனின் நடவடிக்கைகள் இருக்கும். யாரையும் அவ்வளவாக மதிக்க மாட்டான். குறிப்பாக யாருக்கும் அடங்கவே மாட்டான். கூடவே பலவருடங்கள் கழித்துப் பிறந்ததால் நேரிடையாகவே தன் தாத்தாவின் வளர்ப்பில் சிறிது காலம் வளர்ந்தால் எவரையும் எளிதில் எடுத்தெறிந்து பேசிவிடுவான்.
ஆனாலும் அவனுக்கு சிந்து மற்றும் கமலேஷ் இருவர் மீதும் அதிக பாசம் இருந்தது. அவ்விருவர் மீது மட்டும் தான் இருந்தது. சம்மந்தமே இல்லாமல் அந்தப் பாசத்தில் பங்குபோட்டுக்கொள்கிறாளே என்று ஸ்ரீலேகாவின் மீது அவனுக்கு தீராத வன்மம் பிறந்தது.

இமையவர்மனிடம் பேசியபிறகு சந்திர வர்மனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எதற்கும் அவ்வளவாக இமையவர்மன் கோவப்படமாட்டார். ஆனால் கோவம் கொண்டால் அவ்வளவு தான். இதை அறியாதவரா சந்திரவர்மன்? ஆனாலும் அவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலையில் அவரில்லை. என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.
அன்றே குடும்பம் சகிதமாய் சென்னை சென்றுவிட முடிவெடுத்திருந்தார் இமையவர்மன். சகுந்தலா தான் அங்கே சென்று மாதுளையைப் பார்த்து ஆறுதல் படுத்திவிட்டு வந்தாலும் ஏனோ அவள் நிலை மீது ஒரு சொல்லமுடியாத கழிவிரக்கம் வந்தது. விசாரித்ததில் அவளுக்கு இப்போது யாருமில்லை என்று மட்டும் நன்கு உணர்ந்துகொண்டார். இப்போது என்ன செய்ய என்று யோசித்தவர் ஒரு முடிவு எடுத்தவராக வீட்டிற்கு வந்தார்.
வந்தவரிடம் என்றைக்கும் இல்லாமல் இமையவர்மன் கோவமாக,"நாம உடனே சென்னை கிளம்பறோம்..." என்று சொல்ல அவரோ உடனே வேண்டாம் என்று மறுக்க பின்பு ஒருவாறு பேசி இரண்டுநாளில் செல்வதென்று முடிவானது. ரெப்பிரேஷ் ஆகிவந்தவர் நேராக இந்திரனின் அறைக்குச் செல்ல அங்கே இன்னமும் மயக்கத்திலே இருந்தவனைக் கண்டு வருந்தியவர் வெளியே வந்து இமயவர்மனிடம் பேசத் தொடங்கினார்.
"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..." என்று தயங்கிய சகுந்தலாவைக் கண்டு சற்று சாந்தமடைந்த இமையன்,
"என்ன சகு இது புதுசா பர்மிசன் எல்லாம் கேட்கற?"
"அப்போ நானே முடிவை எடுக்கலாமா?"
"இதென்ன கேள்வி? ஏன் இதுவரை நீயா எந்த முடிவும் எடுத்ததில்லையா? இல்ல நீ எடுத்த முடிவுக்கு நான் தான் என்னைக்காவது குறுக்க நின்றிருக்கேனா?" என்றார். (லேகாவை நாமே வளர்த்தலாம் என்று முடிவெடுத்தவரும் இவரே. அதற்கும்இமையவர்மன் மறுக்கவில்லை)
"சரி. அப்போ ஊருக்குப் போகப் போறது நாம மூணு பேரில்ல..."
அவர் புரியாமல் பார்க்க,
"நம்ம கூட அந்தப் பொண்ணும் வரணும்..."
"எந்த பொண்ணு?"
"சித்தன் பேத்தி. அவ பேரு மாதுளையாம்..."
ஏனோ இமையவர்மன் யோசிக்க,
"ஏன் இதுல உங்களுக்கு விருப்பமில்லையா?"
"அப்படியில்ல சகு. நாம அந்தப் பொண்ணுக்கு நிறைய கடமை பட்டிருக்கோம் தான். நானும் ஒத்துக்குறேன். அதுக்கு எதுக்கு நம்ம கூடவே கூட்டிட்டுப் போகணும்? வேணுனா ஒரு நல்ல வேலையும் தங்குமிடமும் ஏன் நம்ம தொழிலையே கூட..." என்று இமையன் முடிக்கும் முன்னே,
"அதெல்லாம் வேணாம். எனக்கு அவளைப் பார்க்கும் போது ஏனோ என் பொண்ணுங்க ஞாபகம் தான் வருது. அவங்க இல்லாம நான் கஷ்டப்படுறேன். பெத்தவங்க இல்லாம அந்தப் பொண்ணு கஷ்டப்படுது. அதும் நம்ம குடும்பத்துக்கு நல்லது பண்ணப் போய் இந்த நிலைனு நினைக்கும் போது மனசு உறுத்துது..."
"சரி இதுக்கு அந்தப் பொண்ணு ஓகே சொல்லிட்டாளா?"
"இல்ல. ஆனா சொல்லுவா. சொல்லவெப்பேன்..."
அவர் எதுவும் சொல்லாமல் அங்கேயே அமர,
"ஏன் எந்த பதிலும் காணோம்?"
கொஞ்சம் சிரித்தவாறு,"நீ எடுக்கற முடிவுக்கு நான் என்னைக்கு குறுக்க நின்றுயிருக்கேன்? ஏதோ செய். நல்லது நடந்தா சரி..."
"இன்னும் ஏன் கவலை? அது தான் இந்திரன் பிசினஸ் பார்க்க வரேன்னு சொல்லிட்டானே?" என்றார் சகுந்தலா.
இவ்வளவு பாதுகாப்பு வளையம் இருந்தும் இன்று எப்படி இது நிகழ்ந்தது என்பதை நினைத்தே தன் கணவர் வருந்துகிறார் என்று அவருக்கும் தெரிந்தது. அதனாலே பேச்சை மாற்றுகிறார். யாரோ தன் குடும்பத்தை இந்தச் சமயத்தை உபயோகித்து (ஏற்கனவே இருவர் இறந்து போனதை) அழிக்கப் பார்க்கிறார்கள் என்று நினைக்க அவருக்கும் ஏனோ மனமெல்லாம் நெருடலாகவே இருந்தது.
அதற்குள் போலீஸ் வந்துவிட என்ன நடந்தது? எப்படி என்றெல்லாம் விசாரணை நடைபெற்றது. இமையவர்மன் ராஜேந்திரனைப் பார்க்க வேண்டி சென்றுவிட சகுந்தலா அந்தப் பெண் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தார்.
மாதுளையைப் பார்த்துவிட்டு ஆறுதல் படுத்தியவர் அவளிடம்,"நீ என்கூடவே வந்திடுறையா?" என்று கேட்க அவளோ அழுதுகொண்டே மறுத்து பேசாமல் உள்ளே சென்று பூட்டிக்கொண்டாள். காத்திருந்து காத்திருந்து அவள் வராததால் புறப்படும் முன்,"நீ என் கூடத் தான் வரனும். உனக்கு நானிருக்கேன்..." என்று சொல்லிவிட்டுத் தான் வந்தார். அவள் வருவாளா? என்று சகுந்தலா ஐயம் கொண்டார்.
என்னவோ தோன்ற டெல்லியில் இருக்கும் இளைய மகனைத் தொடர்புகொண்டவர் அவனிடம் நடந்ததைக் கூறினார். அவனோ கோவமாகவும் ஆத்திரமாகவும் பேசினான்.
நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு கதிரவனும் கொஞ்சம் வருத்தம் நிறைய மகிழ்ச்சியில் இருந்தான். (வானிலை மாறும்!)
 
ஆனாலும் கொஞ்சம் நிறையவே suspense ah தரிங்க bro ....:):) (y) (y) (y)
வேற வழி இல்லையே? கதையின் ஜானர் அந்த மாதிரியே... என்ன பண்ண? மிக்க நன்றி? இன்னொன்னு இங்க நான் சொல்லியே ஆகணும். இது என்னுடைய பாணி கிடையாது. அதாவது எனக்கு சஸ்பென்ஸ் மிஸ்டரி த்ரில் கதைகள் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் பெரும்பாலும் ருசி, புலராதக் காதல் மாதிரி feel good மென்மையான கதைகளை தான் எழுதுவேன். அப்படியே எழுதும் நான் எடுத்த ஒரு பரீட்சய முயற்சி தான் இந்த 'சட்டென மாறுது வானிலை' ஒருவேளை இந்தக் கதை முடிவில் உங்களை disappoint பண்ண சாரி...( அதுக்காக கதையில் காம்ப்ரமைஸ் எல்லாம் இருக்காது. இறுதி அத்தியாயத்தில் தான் இதெல்லாம் யார் எதுக்கு செய்றங்கனு தெரியவரும்...?) நன்றி...
 
No ...நான் அந்த மாதிரி mean பண்ணலை...
கதை அருமையா போகுது..
Just ஓர் ஆர்வ கோளாறு தான் , don't mistake ..
:D :D :D :D
 
No ...நான் அந்த மாதிரி mean பண்ணலை...
கதை அருமையா போகுது..
Just ஓர் ஆர்வ கோளாறு தான் , don't mistake ..
:D :D :D :D
நான் எதையும் தவறாகவே எடுத்துகொள்ளல... அண்ட் நீங்களும் எதையும் தப்பா சொன்ன மாதிரி தெரியில chill? உண்மையிலே இந்தக் கதை சஸ்பென்ஸா இருக்கானு எனக்கு எழுதும் போதெல்லாம் சந்தேகம் வரும்... ஆனா நீங்க சொன்னது எனக்கு மகிழ்ச்சி?� நான் வேற வழியில்லைனு சொன்னது கதை சஸ்பென்ஸ் கதைங்கறதுனால இப்படித் தான் கொண்டுபோகணும்னு சொன்னேன்... நான் சட்டுனு கோவிக்கும் அல்லது தப்பா எடுத்துக்கும் ஆளலெல்லாம் கிடையாது... no worries...?
 
இந்திரனோட பிளாஷ்பேக் பார்ட்1 ....வந்தாச்சு.
பார்ட்2 வெயிட்டீங்...
 
Top