Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-2

Advertisement

praveenraj

Well-known member
Member
சொல்லமுடியாத வலி, வேதனை முதலிய உணர்வுகளை எல்லாம் சுமந்து பயணிக்கிறான். வண்டி அட்டகட்டியை வந்தடைந்தது. அங்கே அவர்களுக்கு சொந்தமான பெரிய டீ எஸ்டேட் ஒன்று உள்ளது. எஸ்டேட்டை ஒட்டியபடியே ஒரு பெரிய பங்களாவும் உள்ளது. என்ன இவையாவும் அவர்களின் பரம்பரை சொத்தெல்லாம் கிடையாது. ஒருகாலத்தில் இந்த எஸ்டேட்டும் பங்களாவுக்கு வேறொருவருடையதாக இருந்தது. பின்பு இவன் அப்பாவின் காலத்தில் அதை தாங்கள் வாங்கி தங்களுடையதாக்கிக் கொண்டனர். அப்போது தூரத்தில் சிறியதாய்த் தெரியும் வீடுகள் அந்த ஊரின் அழகியல் ஆகியவை அவனுக்கு அனிச்சையாக அவளின் நினைவுகளைத் தந்து சென்றது. கூடவே அவளின் சிரிப்பு, கண்கள், முகம் என்று எல்லாம் அவன் கண் முன்னே வர இவை யாவும் அவனை மீண்டும் நடுங்கச் செய்தன. வலி உயிரை வாட்டியது. உடல் வலியில்லை அது மன வலி.
வந்திறங்கியவன் பெரிய அரண்மனை போன்ற எஸ்டேட் பங்களாவுக்குள் சென்றான். வெளியே சுமதி அம்மா, ராசப்பன் இருவரும் புன்னகையுடன்,"வாங்கய்யா! வாங்க சின்ன முதலாளி..." என்று முறையே அழைத்தும் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் அவனில்லை. வீட்டிற்குள் வந்தவன் மேலே ஏற முயன்று,"சுமதியம்மா?" என்றான்.
"சொல்லுங்க ஐயா!"
"ஒரு டீ கிடைக்குமா?"
அது அவருக்கும் ஆச்சரியம் தான். இருந்தும் அதை மறைத்து,"ஐயா ஒரு ஐந்து நிமிஷம். எஸ்டேட்ல சொல்லி புது தூள்..."
"இல்ல நீங்க வீட்டுல இருக்கறதையே போடுங்க ப்ளீஸ்..." என்றவன் கீழேயே அமர்ந்துகொண்டான்.
"சரி தம்பி..."
அவர் தரும் உணவுகளைக் கூட எல்லோரும் சுவைத்தப் பிறகு தான் அவனுக்கு தரப்படல் வேண்டுமென்று ஏற்கனவே சுமதிக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் வந்தாகி விட்டது.
அவர் கொண்டுவந்ததை வாங்கிய செக்கூரிட்டி அதைப் பருக முயல, வெடுக்கென பிடிங்கினான்.
"சார் எனக்கு வந்த உத்தரவு..." என்று அவன் தயங்க,
போதும் நிறுத்து என்பதைப் போல் அவன் கையைக் காட்ட அவன் அமைதியானான்.
"இது சுமதி அம்மா போட்டது. தாய்ப்பாலுக்கு நிகரானது .என்னை அவங்க கொல்ல மாட்டாங்க..." என்றவன் பருகிவிட்டு மாடியேறினான். ஏனோ சுமதி தான் இதற்கு மகிழ்வதா இல்லை வருந்துவதா என்று நினைத்தார்.
மேலே சென்றவன் கண்ணாடியின் ஊடே கீழே எஸ்டேட்டையும் அதில் வேலை செய்பவர்களையும் ஒருமுறை பார்த்தான். பார்த்து கண்களை மூடியதும் தலை வலிப்பதைப் போல் உணர கையிலிருந்த டேப்லெட்டை எடுத்து போட்டு உறங்கினான்.
இதையெல்லாம் வீடியோ கான்பறன்சிங் மூலமாய் அவன் பெற்றோர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியாது.
உறக்கத்திலும் அவள் வந்தாள். ஆனால் அவள் முன்னம் வந்தவள் அல்ல. இவள் வேறு. அவளிடம் பேசியது பழகியது எல்லாம் நினைவுக்கு வந்தது. திடுக்கிட்டு விழித்தான். என்ன செய்ய? தூக்கமும் வரமறுக்கிறதே? பின்னே 5 மாதங்களாய் அவன் தூங்கிக்கொண்டு மட்டுமே அல்லவா இருந்தான்? யாரைப் பற்றியும் அவனுக்கு நினைவில்லை. அவன் நினைவெல்லாம் இருவர் தான். தன் மீதே அவனுக்கு அளவில்லா கோவம், வெறுப்பு, ஆத்திரம் தோன்ற அவனின் நடவடிக்கைகளையே பார்த்துக்கொண்டிருந்தவர்கள் சில உத்தரவுகள் பிறப்பிக்க, மருத்துவர்கள் குழு மேலே வந்தனர்.
கதவைத் தட்ட, எழுந்து திறந்தவன்,"எஸ்?"
"சும்மா ஒரு டெஸ்ட்..." என்றதும்
திருதிருவென விழித்தான்.
"பயம் வேணாம். என்ன பண்ணுது?"
"தலைவலி, தூக்கமில்லை. ஏதேதோ எண்ணங்கள்..."
"ஸ்லீப்பிங் டோஸ் போடலாமா?" என்று அவர் வினவ,
"இல்லை வேணாம்..."
"பின்ன?"
"நான் சைக்கிள் ஓட்டலாமா?"
"சைக்கிளா?"
"ஆமா..."
யோசித்தவர்,"சரி. ஆனா கொஞ்ச தூரம் தான். ஒரு 10 மினிட்ஸ் தான் ஓட்டணும்"
"டெய்லி?"
"ஓகே"
"இப்போ?"
"இப்போ வேணாம். ரெஸ்ட் எடுங்க. சாப்பிட்டு தூங்கி எழுந்து சாயங்காலம் போலாம்..." என்றதும்
அவன் முகமே அவன் கடுகடுப்பை உரைத்தது. இருந்தும் அவனுக்கு வேறு வழியுமில்லையே?
"ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட். உங்க ஹெல்த்துக்காக தான் இதை நாங்க சொல்றோம். ப்ளீஸ் கோ ஆப்ரேட்..."
"சரி" என்றவன் மியூசிக் ப்லயேரை ஆன் செய்து கேட்டபடியே உறங்கினான்.
அன்று மாலையே அதுபோல் சைக்கிள் ஆர்டர் செய்யப்பட, இவன் வந்திருக்கிறான் என்றதும் மரியாதை நிமித்தமாய் அவனை சந்திக்க வந்தவரைக்கூட சந்திக்கக் கூடாது என்று கார்ட்ஸ் தடுத்தனர்.
அவர்களிடம் நெருங்கியவன்,"என்ன?" என்றதும்,
"சார். நான் விக்னேஷ். எஸ்டேட் மேனேஜர்..."
"சரி. அதுக்கென்ன இப்போ?"
"நீங்க வந்திருக்கீங்கனு... அதான் பார்க்கலாம்னு... " என்று இழுக்க,
"பார்த்துடீங்க தானே? நீங்க போலாம்..."
அவர் திருதிருவென விழிக்க,
"யூ கேன் கோ நொவ்..." என்று அவன் உறுமினான்.
இப்படிப் பேசுவான் என்று எதிர்பாராதவர் திரும்பிச் சென்றார். சைக்கிளை பார்த்து, அமரப்போனவன் தனக்கு முன்பு பின்பு இருபுறம் என்று எல்லோரும் சைக்கிளில் புடைசூழ நிற்பதைக் கண்டவன் திரும்ப ஒரு காரும் பின்தொடர்ந்தது.
இதில் சைக்கிள் ஓட்டும் ஆசையே அவனுக்கு விட்டுப் போனது. இருந்தும் மூன்று மாதமாய் ஒரு வேலையும் செய்யாமல் எக்ஸ்செர்செய்ஸ்சும் செய்யாமல் படுக்கையிலே இருந்ததால் அவனுக்கு நன்றாக வெயிட் போட்டுவிட்டது. பயங்கர டயட் மற்றும் ஹெல்த் கான்ஷியஸ் உடையவனோ வேறுவழியின்றி பொதபொதவென்று ஆகியிருந்தான். அவனுக்கு தற்சமயம் இந்த சைக்கிள் பயணம் அவசியம் என்பதால் மெல்ல சைக்கிளை பெடல் செய்ய அவனால் அழுத்தவே முடியவில்லை. போதாக்குறைக்கு மேலே ட்ரோன் வேறு இருந்தது. அனைவர் மீதிருக்கும் கோவம் கடுப்பு ஆகியவற்றை சைக்கிளில் காட்ட எண்ணி அதை அழுத்தினான். கொஞ்ச தூரம் தான் அவனால் செல்ல முடிந்தது. அவனுக்கு மூச்சிழைக்க அவனைச் சுற்றியிருந்தவர்கள் விசாரிக்கவும் வேறுவழியின்றி கொஞ்சம் நடக்கிறேன் என்று நடக்க இப்போது எல்லோரும் அவனுடன் நடந்தனர். மாலை வெயில் மங்கி மஞ்சள் வானம் கருமேகங்களைத் திரட்டிக்கொண்டிருந்தது.
"சார்! இட் சீம்ஸ் தட் இட் வில் ரெயின்(மழை வரும் போல் தெரிகிறது) நாம வீட்டுக்குப் போலாம்..." என்று கிட்டத்தட்ட கட்டளையாகவே அவனிடம் தெரிவிக்கப்பட அந்த தொனியே அவனுக்கு எரிச்சல் மூண்டது.
அதற்குள் முதல் துளி அவன் மேல் விழுந்துவிட குடையும் ரெயின் கோட்டும் அவனைத் தேடி வந்தது. மறுத்தவன் காரிலிருந்து டாக்ட்டரை கெஞ்சலாய்ப் பார்த்தான். அவர் தலையாட்ட அந்தத் தூறலில் மெல்ல நனைந்தான். 2 நிமிடங்களில் அவனுக்கான டைம் முடிந்தது. காரில் எறியவன் வேடிக்கை பார்த்தபடியே வர, தூரமாய் ஒரு பெண் (பெண்ணா? அப்சரஸா? வண்ணமயிலோ?) கைகளை விரித்து மழை குழந்தையைத் தாயாய் வரவேற்க, அவளுக்காகவோ என்று மழைக்குழந்தை அவள் மீது தாவி விழுந்தது.
அவன் கண்கள் அவளையே தான் ரசித்துக்கொண்டிருந்தது. வண்ண மயிலாய் அவள் நனைந்து துள்ளி ஆடினாள். அவள் மறுபுறமாகவே திரும்பியிருந்ததால் அவளின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. அவளின் இந்த மகிழ்ச்சி, உற்சாகம் எல்லாம் அவனுக்குள்ளும் தொற்றிக்கொள்ள,"அங்கிள் நானும் மழையில் நனையலாமா?" என்று மீண்டும் அந்த மருத்துவரிடம் வினவினான்.
ஏனோ இறுக்கங்கள் தளர்த்து, இப்படி ஒரு கேள்வி கேட்டவனை வியந்தவர்,'ஆம்' என்பதைப் போல் தலையாட்ட அவனும் உடனே இறங்கினான் .
"இந்திரா! கொஞ்ச நேரம் தான்..."
"சரி அங்கிள்..."
கைகளை விரித்தவன் முகத்தைத் தூக்கி வானத்தைப் பார்த்தபடி இருக்க முகத்தில் மழைத்துளி விழுந்ததும் மனம் லேசானதாய் ஒரு உணர்வு அவனுள் ஏற்பட்டது. ஏனோ இதை அவனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தவர் இமயவர்மனுக்கு அனுப்பினார். கூடவே இருந்த சகுந்தலாவும் அதைக் கண்டு களித்தார்.
அவன் வருவதைப் போல் அறிகுறியே இல்லாததால், டாக்டர் அவனை அழைக்க மனமில்லாமல் அவன் காரினுள் ஏறினான். வண்டி அவர்களின் எஸ்டேட் பங்களாவுக்குள் சென்றது. தொப்புற நனைந்து வீட்டிற்குள் வருவனைக் கண்டு ஒரு நிமிடம் பதறிய சுமதி அம்மா பின் அவன் முகத்தின் தேஜஸை கண்டு,"ஐயா சீக்கிரம் தலை துவட்டுங்க... ஜலதோஷம் பிடிச்சிக்கும்!" என்றதும்,
திரும்பியவன்,"சுமதி அம்மா..."
"சொல்லுங்க ஐயா"
"என்னைப் பேர் சொல்லியே கூப்பிடுங்க ப்ளீஸ்..."
"ஐயோ தம்பி அது..."
"இதுவே சிந்துஜா இருந்தா நீங்க என்ன பண்ணியிருப்பீங்க?" என்றதும் அவர் தயங்க, அதன் பொருள் உணர்ந்தவன்,
"அவதான் இல்லையே?" என்றவனுக்கு குரல் கம்மியது.
"சரி இந்திரா போ போய் வெந்நீர்ல குளிச்சிட்டு வா..." .
"அப்போ எனக்கு நல்ல சூடா ஒரு கொத்தமல்லி காபி வேணும்..."
"சரி போட்டு வெக்கிறேன் போ..."
அவன் மாடியேற உடனுக்குடன் தகவல் சகுந்தலாவிற்கும், இமைய வர்மனுக்கும் சென்றது.
அவனை இங்கு அனுப்பும் வரை மனமே இல்லாமல் அனுப்பியவர்கள் இப்போது சற்று தெளிந்தனர். கடவுளிடம் அவர்களின் பிரார்த்தனை சென்றது.
**********************
அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் (laboratory) நிறைய மருத்துவர்கள் ஒன்றிணைத்து அந்த ஆராய்ச்சியில் மூழ்கி இருந்தனர். அவர்கள் எல்லோரையும் முடுக்கிவிட்டுக் கொண்டிருந்தான் அவன். அப்போது அங்கிருந்த தலைமை மருத்துவர் அவனிடம் வந்து சில தகவல்களைச் சொல்லிவிட்டுச் செல்ல அவர்களுக்கு பதிலுரைத்தவன் அந்த ஆய்வகத்தை மீண்டுமொரு முறை நன்கு அளந்துவிட்டு தன்னுடைய இருக்கைக்குச் சென்றான். சென்றவன் அந்தப் பிரபலமான மருத்துவமனையின் சில முக்கிய கோப்புகளைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் அந்த மருத்துவமனையின் தற்போதைய பொறுப்பு தலைமை பணியாளன்(acting md). அவன் பெயர் திருக்குமரன். முப்பது வயதே நிரம்பிய இளமைக்கு ஏதுவாய்த் தோற்றத்தில் மிளிர்ந்தான். ஏதேதோ யோசனையில் மூழ்கியவன் எதேர்சையாக அங்கே மாட்டப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான். கடந்த சில நாட்களாய் அவனுக்கு ஏனோ மனமே சரியில்லை. அவர் இந்த மருத்துவமனையின் நிறுவனர். மருத்துவத் துறையில் நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எல்லோருக்கும் மருத்துவம் சென்று சேரவேண்டும் என்றும் கூடவே மருந்துகளை எல்லாம் குறைந்த விலையில் தயார்படுத்தி அதை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் இந்த மருத்துவமனையை நிறுவி இதில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தைக் கட்டி அதை செவ்வனே செய்துகொண்டு வந்தார். மூன்று மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் இதன் நிறுவனர் டாக்டர் சந்தான பாரதியும் அவரின் மனைவியும் தவறிவிட அதன் பின் இந்த மருத்துவமனையின் நிர்வாகம் சற்று ஆட்டம்காணும் முன்னே அவரின் மகள் என்று சொல்லப்படுபவர் திருக்குமரனுக்கு முன்னால் வீடியோ கான்பெரென்சிங்கில் தோன்றினார். இனி இந்த மொத்த நிர்வாகமும் தான் எடுத்து நடத்துவதாகச் சொன்னாள். ஏனோ அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் எல்லோரும் இதில் உடன் படாமல் இருப்பதாய் உணர்ந்தவள்,"என்னால இந்த நிர்வாகத்துல எந்த வித குழப்பமும் வராது. அப்பா இருந்த போது என்ன என்ன எப்படி எப்படி நடந்ததோ அதெல்லாம் அப்படியே நடக்கும். மிஸ்டர் திருக்குமரன் நீங்க என்ன பார்க்காமல் இருந்திருக்கலாம் ஆனால் நான் உங்களை ஒருமுறை பார்த்திருக்கிறேன். என் அப்பா உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நீங்கள் தாராளமாக இந்தப் பணியைத் தொடரலாம். இடைக்காலத் தலைவராக இல்லாம முழுநேர தலைவராகவே தொடரலாம்" என்று சொல்ல திருக்குமரன் அந்த நாளின் நினைவில் மூழ்கினான்.
"நீ..." என்று ஆரமித்தவன்,"நீங்க வேணுனா என்னைப் பார்க்காமல் இருந்திருக்கலாம் மிஸ்..." என்று சொல்ல வந்து,"மேடம். ஆனால் நான் அப்படியில்லை. உங்களைப் பார்த்திருக்கேன். அதைவிட உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். பாரதி சார் என்கிட்ட நிறைய சொல்லியிருக்காரு. நான் கூடக் கேட்டிருக்கேன்,"ஏன் சார் இப்படி ஒரே பெண்ணை வெச்சிக்கிட்டு அவங்களை மெடிசின் பண்ண வைக்காம இப்படி பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிக்க வெச்சி இருக்கீங்கனு?" அதற்கு அவர் சொன்ன பதிலோ இன்றுவரை அவன் செவிகளில் அப்படியே இருக்கிறது."குமரா... அவ இன்னாரோட பொண்ணு இந்த சொத்துக்கு அதிபதி இதெல்லாம் இரண்டாம் பட்சம் தான். அவ மேல என் நிழல் எப்பயும் விழவே கூடாது. நான் அதுல ரொம்ப உறுதியா இருக்கேன். இது ஒன்னும் காய்கறி வியாபாரம் இல்ல எனக்குப் பிறகு என் பொண்ணு எடுத்து நடத்த. இது மருத்துவம். அண்ட் இது ஒரு சேவை மாதிரி. நான் ஒத்துக்கறேன் "அப்றோம் நீங்க ஃபீஸ் வாங்குறீங்களேன்னு?" கேட்டா "ஆமாம்" ஆனால் நான் எல்லோர் கிட்டயும் வாங்குறதில்லை குமரா. இருக்கறவங்க கிட்ட அப்படியே வாங்குறேன். இல்லாதவங்க கிட்ட குறைத்து வாங்குறேன். இந்த ஹாஸ்பிடல்ல இருக்க ஒவ்வொரு செங்கல்லும் மண்ணும் எல்லாம் என்னுடைய உழைப்பு மட்டுமில்ல நான் இந்த மாதிரி ஆரமிக்கறேன்னு சொன்னதுமே எனக்கு டொனேஷன் கொடுத்தவங்க ஏராளம். அதுல ரொம்ப முக்கியமான நபர் ஒருத்தர் இருக்காரு. விதியைப் பாரு? அம்பது ரூபாய்க்கு ஒரு டம்ளர் வாங்கி கொடுத்தாலே அதில் அவனோட பேரைப் போடுற ஊருல இந்த ஹாஸ்பிடல் இன்னைக்கு இவ்வளவு பெருசா வளர்ந்திருக்குனா அதுக்கு ஒரு பெரிய மனுஷன் ரொம்ப முக்கியமான காரணம்..." என்றவர் அமைதியாகி அடுத்த பேச்சை மாற்றினார்."சரி சரி மஹேந்திரன் எங்க காணோம்?" என்று கேட்க,"தெரியில சார் இனிமேல் தான் வருவான்." என்றான் குமரன்.
"சரி அவன் வந்தா நீ என் ரூம்க்கு அனுப்பு..." என்றவர் அவரின் அறைக்குச் சென்றுவிட, ஏனோ கடந்த கால நினைவுகளுக்குச் சென்று வந்தான் திருக்குமரன். அப்படிப்பட்டவரின் ஹாஸ்பிடல் இன்று அவர் கொடுத்த அதே தரமான சேவையை முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு குமரனின் பொறுமை ஒரு முக்கியக் காரணம்.
(வானிலை மாறும் ...)
 
சோகமாகவும்,புதிராகவும் நகர்கிறது.......
Bro, இப்பவும் கதை latest post la தான் வருகிறது... Latest episode la வரல.....
Admin கிட்ட கேளுங்க....
அது என்னாகும் ன story link la இல்லையென ,புதுசா யாருக்கும் தெரியாது....
கொஞ்சம் பாருங்கள்.... (y)
 
படிக்கும்.எனக்கே கடுப்பாகுது....
பாவம் இந்திரா....
எதுக்கு அவனுக்கு இவ்வளவு பாதுகாப்பு வளையம்...?
டாக்டர்,பாரதியோட ஆக்ஸிடெண்டும், இவனுக்கு நேர்ந்த
விபத்திற்கும் எதாவது கனெக்‌ஷன் இருக்கா...? அஅதாவது ஒரே எதிரி...?
 
சோகமாகவும்,புதிராகவும் நகர்கிறது.......
Bro, இப்பவும் கதை latest post la தான் வருகிறது... Latest episode la வரல.....
Admin கிட்ட கேளுங்க....
அது என்னாகும் ன story link la இல்லையென ,புதுசா யாருக்கும் தெரியாது....
கொஞ்சம் பாருங்கள்.... (y)
நன்றி? அட்மின் கிட்டப் பேசிட்டேன். இனிமேல் இப்படி ஆகாதாம்... நன்றி சில அத்தியாயங்கள் சோகமாகத் தான் நகரும்...
 
ஹீரோக்கு நடந்தது ஆக்சிடண்ட்டா இல்ல கொலை முயற்சியா.... ரொம்ப ப்ரொடக்ட் பண்றாங்க :unsure: :unsure:
அது சீக்கிரம் தெரியும். ஹீரோவை ஏன் ப்ரொடெக்ட் பண்றங்கனு காரணம் சீக்கிரமே புரியும்... நன்றி?�
 
Top