Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை!-8

Advertisement

praveenraj

Well-known member
Member
ஏதேதோ எண்ணச் சுழலில் சிக்கித்தவித்தவன் என்ன செய்வதென்று புரியாமல் விழித்து கீழே வந்தான். இப்போது அவனுக்கு சிந்து ஸ்ரீ இருவரை நினைத்தால் கண்ணீர் வரவில்லை. எப்படி வரும்? முடிந்த மட்டிலும் அவர்களுக்காக அழுது கரைந்து விட்டானே?
அன்று வீட்டில் கண்முழித்தவனிடம் சிந்து, ஸ்ரீ இருவரின் இழப்பைப் பற்றிச் சொன்ன சகுந்தலா முன் செய்வதறியாது துடித்தான் இந்திரன். அவர்கள் இருவரும் இனி அவன் வாழ்வில் இல்லை என்பது இரண்டாம் பட்சம் தான். ஆனால் அவர்கள் இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மேலும் யாராயினும் இறுதியாக ஒரே ஒரு முறை அவர்களை முடிந்தவரை பார்த்து அவர்களின் பிம்பத்தை மனதில் நிறைத்துகொள்ள விரும்புவார்கள் தானே? அந்த ஒரு பாக்கியம் கூட தனக்கு கிட்டவில்லையே என்று கதறி அழுதான். அவனின் இந்த நிலையைக் காணத் துடிக்காது எழில் வேந்தனிடம் அவனை மீண்டும் தூக்கத்திற்கு அனுப்பிவைக்க சொன்னார் சகுந்தலா. அந்த நொடி அவன் மெல்ல மெல்ல கண்களை மூடும் முன் இருவரின் முகத்தையும் மீண்டும் நினைத்தவன் அப்படியே கரைந்து அழுதான். மேலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அவன் கோமாவில் இருந்திருக்கிறான். அவனைப் பொறுத்தவரை,'நான் ஏன் பிழைத்தேன்?' என்று வெதும்பிக்கொண்டிருக்கிறான். அவனைப் பிழைக்கவைக்க எவ்வளவோ முயன்றார்கள் என்று பாவம் அவனுக்குத் தெரியாது. கிட்டத்தட்ட சாவின் விளிம்பு வரை அல்லவா சென்று மீண்டு வந்திருக்கிறான்?
இந்த உலகத்தில் மிகவும் கொடியது எது? மரணமா? இல்லை. இல்லவேயில்லை. நாம் அதிகம் நேசித்த, நேசிக்கின்ற நபர்களை நம் கண்முன்னாலே பறிகொடுத்து அதற்காகத் துடித்து அழுது பின் அவர்கள் இல்லாமல் ஆனால் அவர்களின் நினைவுகள் நம்மை விடாமல் அவர்களுடன் நாம் செலவழித்த நொடியை ஒவ்வொரு செய்கையிலும் ஒவ்வொரு நொடியும் நமக்கு அவர்களின் ஞாபகங்களை மீண்டும் மீண்டும் தந்து சென்று அவர்களின் இந்த நிலைக்கு நாம் தானே காரணம் என்னும் குற்றயுணர்ச்சியுடன் வாழ்வது கொடிய மரணத்தை விட மிகவும் கொடியது. எங்கே உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் நேசிக்கும் ஒருவரை இழந்து அந்த இழப்பிற்கு நீங்களே காரணமாக இருந்து நீங்கள் மட்டும் எவ்வித சேதாரமும் இன்றி பிழைத்து மீண்டு வந்தப் பிறகு அவர்கள் நினைவுகள் உங்களை வாட்டினால் எப்படி இருக்கும்? என்று நீங்கள் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.
ஆசை முகம் மறந்து போச்சே
இதை ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் –
எனில் நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரி யுதொரு தோற்றம் –
அதில் கண்ண னழகு முழிதில்லை;
நண்ணு முகவடிவு கானில் –
அந்த நல்ல மலர்ச்சிரிப்பை காணோம்.
ஒய்வு மொழிதலுமில் லாமல் –
அவன் உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் -
அந்த மாயன் புகழினை யெப்போதும்
.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் –
உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே-
ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் -
ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்
-இந்த வைய முழுதுமில்லை தோழி
கண்ணன் முகமறந்து போனால் -
இந்தக் கண்க ளிருந்துபய னுண்டோ ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்
இனி வாழும் வழியென்னடி தோழி

கண்ணன் என் காதலன் என்னும் தலைப்பில் நாயகன் நாயகி பாவத்தில் புரட்சிக் கவி பாரதியால் எழுதப்பட்ட இந்தக் கவிதையை ஆழ்ந்து உணர்ந்து படியுங்கள். (நாயகன் நாயகி பாவம் என்பது எழுதும் ஒரு யுக்தி ஆகும். இதில் கடவுளை நாயகனாக நினைத்து அவரை நினைத்து உருகி தவிக்கும் காதலியாக கவிஞர்கள் எழுதுவது. இதில் கண்ணனை காதலனாக நினைத்து பாரதி அவரின் காதலியாக நினைத்து உருகி எழுதியதாகும். இதில் இன்னொரு கதையும் சொல்லுவார்கள், இறந்த தன் தாயின் நினைவாக அவரின் முகமே மறந்துவிட்டதாக நினைத்து பாரதி இதை எழுதியதாகவும் சொல்லுவார்கள். நான் இங்கு இரண்டாவதாகச் சொன்ன முறையில் இதைப் பதிவிடுகிறேன்)
உருகுகிறான், மருகுகிறான். அவன் ஏதேதோ நினைவில் இருக்க சுமதியம்மா தான் அவனைத் தேடி அவனின் அறைக்கு வந்து கதவைத் தட்டினார். அந்த ஓசையில் நினைவு பெற்றவனாக கதவைத் திறக்க,
"இந்திரா உன்னைப் பார்க்க என் குலத் தலைவர் வந்திருக்கிறார். கொஞ்சம் வந்து பார்க்கறீங்களா?" என்றார் சுமதியம்மா.
அவனுக்குப் புரியவேயில்லை.'யாரு வந்திருப்பது?' என்று யோசிக்க,
"தம்பி அவரு பேரு ஆண்டியப்பன். எங்க மலைவாழ் குழுத் தலைவர் என்றதும் தான் அவனுக்குக் கொஞ்சம் விளங்கியது.
"சரி சுமதியம்மா. நான் பிரெஷ் ஆகிட்டு வரேன். அவங்களை உட்கார வைங்க. அவங்களுக்குக் குடிக்க எதாவது கொடுங்க..." என்றவன் யோசனையில் சென்று முகம் கழுவி கீழே வர அந்த பிரமாண்ட மாளிகையில் தரையில் அமர்ந்திருந்தனர் ஒரு கூட்டம். அதைக்கண்டதும் கோவம் வந்தவனாய்,
"சுமதியம்மா உங்க கிட்ட என்ன சொன்னேன்? அவங்களை மேல உட்கார நீங்க சொல்லலையா?" என்று கத்த,
"ஐயோ முதலாளி அவ சொன்னா தான். நாங்க தான் இங்கேயே உட்காந்திட்டோம். நீங்க மேல உட்காருங்க..." என்றார் ஒருவர்.
அவனுக்கு இது பெரிய எம்பரசிங்கா இருக்க யோசித்தவன் அவர்களுடனே கீழே அமர்ந்தான். அவர்கள் மறுத்தும் இவன் அவர்களிடம் வந்த விஷத்தைக் கேட்க,
"அது எங்க குல வழக்கப்படி இன்னைக்கு ராத்திரி என் குலசாமி கோவிலில் என் பொண்ணுக்கு கல்யாணம் வெச்சியிருக்கோம். நீங்க இங்க வந்திருக்கிறதா ராஜேந்திரன் சொன்னான். சரி உங்களை எங்க சடங்குக்கு அழைக்க வந்திருக்கோம்..." என்று சொன்னார் அந்தப் பெரியவர் .
(ஊட்டியில் இருக்கும் மலைவாழ் மக்களில் பலரின் வழக்கப்படி திருமணம் எப்போதும் இரவு தான் நடைபெறும். மாலை 7 மணி போலவே அங்கு திருமணம் செய்வார்கள். இது அவர்களின் பழக்கவழக்கம். ஆனால் அட்டகட்டியில் வாழும் ட்ரைப்ஸ் அப்படித் தான் செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. நானும் எவ்வளவோ முயற்சித்தும் அந்தத் தரவு கிடைக்காததால் நானே ஊட்டியில் நடைபெறும் நிகழ்வை இங்கே நடப்பதாகச் சித்தரித்துள்ளேன். சோ உண்மையில் இதைப்பற்றித் தெரிந்தவர்கள் ஏன் இப்படி தவறாக எழுதியுள்ளாய் என்று என்னை கடிந்துகொள்ள வேண்டாம். கதையின் போக்கிற்காக இதை எழுதுகிறேன். சாரி!ஆனால் பெரும்பாலும் ட்ரைப்ஸ் சுபநிகழ்வுகளை இரவில் தான் நடத்துவார்கள். உங்களுக்கு எல்லாம் தெரிந்த ஒரு சிறந்த உதாரணம் என்னவென்றால் சூரியன் படத்தில் கவுண்டமணி இரவில் பூமிதிக்க செல்வாரே? அதை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள்.)
இந்திரனுக்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. அவனிருக்கும் மனநிலையில் இவ்வாறு விழாக்களைச் சிறப்பிக்கும் நிலையில் இல்லை. சோ அவன் மறுக்கலாம் என்றிருக்க வந்திருந்த அந்தப் பெரியவருக்கு எப்படியும் 80 வயதாவது இருக்கும். மேலும் அவர்கள் குலமே போற்றும் அவரை, அதும் தன்னை இப்படி வீடு வரை தேடிவந்து அழைப்பவரிடம் இந்திரனால் மறுக்கவும் முடியவில்லை. அவரோ மிகவும் வேண்டி விரும்பி அழைக்க வேண்டா வெறுப்பாகவே அவன் அவர்களுக்கு சம்மதம் சொன்னான். பிறகு வந்திருந்த அனைவர்க்கும் சாப்பிட எதவாது கொடுக்கும் படி சொல்லிவிட்டுஅவன் விடைபெற்றுக்கொண்டான்.
ஏற்கனவே நிறைய குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் இந்திரனுக்கு இப்போது சொன்ன விஷயம் அவனை மேலும் வலிக்கச்செய்தது. அவனுக்கு அவன் வாழ்வில் மறக்க நினைக்கும் சில கசப்பான நினைவுகள் இப்போது அழைத்தாரே அதுபோன்ற ஒரு நிகழ்வில் நடந்தது தான். அவனுக்கு தலையெல்லாம் விண்ணென்று இருந்தது. சென்று அறையில் முடங்கிக்கொண்டான். அவனின் மனநிலை இப்போது ரொம்ப மோசமாக இருந்தது. அந்த அலறல் அந்த வலி அந்தக் கதறல் அவனுக்கு நரகத்தையே காட்டியது. அவனுக்கு இப்போது மீண்டும் மன்னிப்பு வேண்டும். ஆனால் மன்னிப்பை வழங்கவேண்டியவர் இப்போது இல்லை. அவரின் இல்லாமைக்கும் இவனே தான் காரணம். அப்போது அவனின் குற்றயுணர்ச்சி தலைதூக்கியது. அவன் உடல் அப்படியே நடுங்கியது. பதற்றத்தில் மயங்கி அப்படியே சரிந்தான். அவன் இப்படி மயங்கி விழுவதைக் கண்ட அவனின் பெற்றோர்கள் உடனே அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்தவர்கள் அவனை சரிபார்த்து,"ஒன்னுமில்லை கொஞ்சம் அதிகமா யோசித்து குழம்பி ஸ்ட்ரெஸ் ஆகியிருக்காரு..." என்று சொல்ல சகுந்தலா இமையவர்மன் இருவரும் அவர்களின் நிலையை எண்ணி அவர்களே கழிவிரக்கம் கொண்டனர்.
"கடவுளே அப்படி உனக்கு என்னதான் என் குடும்பம் மேல கோவம்? மூணு பிள்ளைங்களைக் கொடுக்கற மாதிரி கொடுத்து ஒன்னைப் பறித்துக்கிட்ட. இன்னொன்னும் இப்படி தினம்தினம் அணுவணுவா துடிக்குது. இதுக்கு நீ எனக்கு குழந்தைகளே கொடுக்காம இருந்திருக்கலாமே? பசியில இருப்பவனுக்கு நல்லா சாப்பாட்டை அவன் கண்முன்னே சமைத்து கொடுப்பதைப் போல் செய்து இப்படிப் பிடுங்கிக்கொள்ள தான் இந்த ஏற்பாடா? பிள்ளை இல்லையென கஷ்டப்பட்டு தவமிருந்து மூன்று பேரை பெற்று ஆசையாக நான்கு பேரை வளர்க்கும் பாக்கியத்தைத் தந்த நீ ஏற்கனவே இரண்டை என்னிடமிருந்து பறித்துக்கொண்ட... இன்னும் இருக்கும் இரண்டில் இப்படி ஒருவனை அதும் எனக்கு முதன்முதலில் அம்மா என்னும் அங்கீகாரம் கிடைக்க செய்தவனை இப்படி என் கண்முன்னே துடிதுடிக்க வைக்கிறாயே?" என்று வாய்விட்டே கதறிய சகுந்தலா அப்படியே மயங்க இமையவர்மன் அவரைத் தாங்கினார்.
இமையவர்மன் தான் இன்னும் பாவம். தன் மனைவியாவது எல்லாத்தையும் வாய்விட்டுச் சொல்லி சற்று கதறிவிட்டார். தானோ? விஷயம் அதற்குள் டெல்லியில் இருக்கும் தன் மகன் கமலேஷிற்குத் தெரிய அவன் உடனே அழைத்துவிட்டான்.
"அப்பா அம்மாக்கு என்ன ஆச்சு?"
என்ன சொல்வார் அவர்? நடந்ததை எல்லாம் சொன்னார். கமலேஷ் முகம் கண்ணீரால் நனைந்தது. அவன் மனம் சொல்லமுடியாத வலிகளில் இருந்தது. உடனே வந்து அன்னையைப் பார்க்க வேண்டும் என்று துடித்தது. ஆனால் அவனால் முடியாதே. பின்னே நாளை ஒரு முக்கியமானவரை தொழில்நிமித்தமாய்ச் சந்திக்க காத்திருக்கிறான்.
"அப்பா ஒன்னு பண்றீங்களா?"
"சொல்லு கமலா?"
"இன்னைக்கு சாயுங்காலமே நீங்க அம்மா ரெண்டு பேரும் அட்டகட்டிக்குப் போங்க. அம்மாக்கு இப்போ தேவையெல்லாம் அண்ணன் கூட அவங்க இருக்கனும். எனக்கென்னவோ அண்ணனுக்கும் அதுதான் சரினு படுது..."
"இதைத்தான் நானும் நேற்றே யோசித்தேன். ஆனா அவன் தான் யாரும் வரக்கூடாதுனு அடம்பிடிக்கிறான். இப்போ நான் என்ன செய்ய?"
"அண்ணாகிட்ட இப்போ எதையுமே சொல்லாதீங்க. அம்மாவும் நீங்களும் அங்க போறீங்க. அது தான் இப்போ சரி..."
"சரி கமலா அப்போ நீயும் வாயேண்டா?"
"அப்பா உங்களுக்கே புரியும். பிசினெஸ் இப்போ கொஞ்சம் டல் அடிக்கிற நிலைமையில இருக்கு. நான்..."
"இல்ல கமலா அது..."
"ப்ளீஸ் அப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போங்க..."
அவருக்கும் அதுவே சரியென பட்டது. ராஜேந்திரனை அழைத்தவர் மாலையே தானும் சகுந்தலாவும் அங்கே வரவிருப்பதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தார். தன் பெர்சனல் செக்ரெட்டரி தாமு என்கின்ற தாமோதிரனை அழைத்தவர் தாங்கள் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.
அங்கே இன்று இந்திரன் விழாவிற்கு வருவதாகச் சொன்னதும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்றது. மதியம் போல் கண்ணை விழித்தவன் சுற்றி நின்ற சுமதி, ராசப்பன், ராஜேந்திரன் எல்லோரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்து ஒரு பொய்ச் சிரிப்பை உதிர்த்தான்.
*******************
இமையவர்மன் சகுந்தலா இருவரும் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க எல்லா வருடமும் தவறாமல் அட்டகட்டிக்கு வருவார்கள். சொல்லப்போனால் அந்த இரண்டு மாதங்கள் அவர்களின் இருப்பிடமே அட்டகட்டியாகத் தான் இருக்கும். என்ன தான் சகுந்தலா பெற்றது மூன்று பிள்ளைகள் என்றாலும் அவருக்கு எப்போதுமே நான்கு பிள்ளைகள் தான். அதிலும் அவருக்கு அந்த நான்காவது பிள்ளை மீது கொள்ளைப் பிரியம். எப்போதும் அவரின் பர்ஸ்ட் ப்ரிபெரென்ஸ் அவளுக்குத் தான். அவள் தான் ஸ்ரீலேகா. இமையனின் குடும்பம் மிகப் பெரியது. இருந்தும் சில காரணங்களால் ஒன்றாக இருந்த அக்குடும்பம் பிரிந்து வந்து தனியே இருந்தது. அவர்களின் பூர்விகம் தமிழ்நாடு தான் என்றாலும் அவர்கள் தங்களை ஒரு தொழிலதிபர்களாய் அடையாளப் படுத்திக்கொள்ள அவர்கள் மும்பையில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.
மும்பையில் தான் கூட்டாக இருந்தனர். கொஞ்சம் கசப்புகளின் காரணமாய் அவர்கள் ஒதுங்கிக்கொள்ள நினைக்க அதே நேரம் அவர்களின் தொழிலின் மற்றொரு தலைமையகமாக சென்னையைத் தேர்ந்தெடுக்கவும் இமையவர்மன் சகுந்தலாவோடு சென்னையில் குடிவந்தனர். அப்போது அவர்கள் அங்கே தங்க வாங்கிய இடத்தின் பக்கத்தில் இருந்தவர் தான் கார்மேகம். அவர்கள் அங்கே குடிவந்து கொஞ்சம் பழகிக்கொண்டனர். அதுவரை இமையவர்மன் சகுந்தலாவிற்கு குழந்தையில்லை. அதன் பின் அவர்களுக்குப் பிறந்தவன் தான் இந்திரன் என்றழைக்கப்படும் இந்திரஜித் வர்மன். ராவணனுடைய மகனின் பெயர் தான் இந்திரஜித்.மேகநாதன் என்றும் அழைக்கப்பட்டவன் தான் ராவணனின் மகன் . அப்பேற்பட்ட இந்திரனையே வென்றதால் இந்திரஜித் என்று அழைக்கப்பட்டான். மிகவும் பலம்பொருந்தியவன். அந்தப் பெயருக்கு இந்த இந்திரஜித்தும் பொருத்தமானவன் தான். சில வருடங்கள் கழித்து செல்வச்செழிப்பான அக்குடும்பத்தில் மூத்த மகனாய்ப் பிறந்தவன் தான் இந்திரன். அதனாலே அவனுக்கு வீட்டில் அதிக செல்லம். அவன் வேண்டியதெல்லாம் உடனே அவனுக்குக் கிடைக்கும். அவன் பின் மூன்று வருடங்கள் கழித்து பிறந்தவன் தான் கமலேஷ். அவனுக்கு ஒருவருடம் சிறியவள் தான் சிந்துஜா. சிந்துஜா அவ்வீட்டின் இளவரசி என்று சொன்னால் மிகையாகாது.
சின்ன வயதிலிருந்தே அதிக பிடிவாத குணமும் கூடவே கொஞ்சம் முரட்டு குணம் கொண்டவன் தான் இந்திரன். எவரையும் அவ்வளவு சுலபத்தில் எடுத்தெறிந்து பேசிவிடக்கூடியவன். சிந்துஜா பிறந்து இரண்டு மாதங்கள் கழித்து கார்மேகத்திற்குப் பிறந்தவள் தான் லேகா. தாயில்லாமல் தவித்த அந்தப் பிஞ்சை தன் மகளாய் நினைத்து வளர்த்தியவர் தான் சகுந்தலா. பின்னே குழந்தையின் அருமையை அவர் நன்கு உணர்ந்தவர் ஆயிற்றே?ஆனால் கார்மேகத்திற்குத் தான் இதில் அதிக நெருடல் இருந்தது. பின்னே அவரின் வசதி என்ன இவர்கள் வசதி என்ன? இந்த ஜென்மம் முழுதும் தான் அயராது உழைத்தாலும் அவர்கள் சொத்தில் ஒருசதவீதம் கூட சம்பாதிக்க முடியாதே? ஆனால் சகுந்தலா ஒருநாளும் அப்படி பாகுபாடாய் நினைக்கவில்லை. ஏனோ ஸ்ரீயைப் பார்த்த மாத்திரமே அவருக்கு ரொம்ப பிடித்தது. பின்னே பளிங்கு சிலைபோல தன் பொக்கைவாயை அடிக்கடி காட்டிச் சிரிக்கும் லேகா என்றால் அவருக்கு அதிக பிரியம். அவளையும் தன் பிள்ளையோடே சேர்த்து வளர்த்தினார். சகுந்தலாவின் ஆசைக்கு இமையவர்மன் என்றும் தடையாய் இருந்ததில்லை. அதனால் அவரும் சம்மதம் சொல்ல அவள் எப்பொழுதும் இங்கேயே சிந்துவுடன் தான் வளர்வாள். சிறுவயதிலிருந்தே அவளின் பொறுமை, அடக்கம் எதையும் சிரித்த முகத்தோடு அணுகும் விதம் என்று ஸ்ரீயை அவர் அடிக்கடி மெச்சிக்கொள்வார்.
இது வளர வளரவும் தொடர சிந்துவுக்கோ இல்லை கமலேஷ்க்கோ இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்திரனுக்கு?
****************

இத்தனை வருடங்கள் தன் கணவர், இந்திரன், கமலேஷ், ஸ்ரீ, சிந்து என்றே குடும்பமாய் அட்டகட்டிக்கு வந்து பழக்கப்பட்டவர் இன்று தானும் தன் கணவர் மாத்திரம் அதும் இப்படி இருக்கும் இந்திரனை அதும் ஸ்ரீயும் இல்லாமல் சிந்துவும் இல்லாமல் வருவதை நினைக்கையிலே ஏனோ அவருக்கு கண்ணீர் தாரைதாரையாய்க் கொட்டியது. வெளியுலகத்தில் இருப்பவர்களுக்கு இவர்களின் குடும்பத்தைப் பற்றிக்கண்டால், "அவங்களுக்கென்னப்பா குறை? 10 தலைமுறைக்கு மேல உட்கார்ந்து சாப்பிட சொத்துக்கிடக்கு. நம்மள மாதிரி அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படணுமா?" என்று தான் நினைப்பார்கள். அவரவர் நிலையில் இருந்து யோசித்தால் தான் எல்லாமும் உணரமுடியும்!
எத்தனையோ முறை இங்கே வந்திருக்கிறார்கள், ஆனால் இப்பொழுது இங்கே வருவது ஏனோ இமையவர்மன் சகுந்தலா இருவருக்கும் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் பெற்றவர்களுக்கு கொள்ளியிடுவது ஒரு கடமை ஆனால் அதையே பெற்றவர் பிள்ளைக்குச் செய்வது? கொடுமை. அதையும் செய்தாகிவிட்டது. எப்பாடு பட்டாவது இந்திரன் மீண்டுவந்திட வேண்டும் என்று பிரார்த்தித்தார். தன்னால் இந்திரனை உடலால் மட்டுமே மீட்க முடிந்தது. உணர்வால் மீட்க யார் வருவாரோ?
அவர்ளுக்கு இப்போது பல பதில்கள் கிடைத்துவிட்டது. அவனின் பிடிவாதத்தை அறியாதவர்களோ அவர்கள். அவனுக்கும் ஸ்ரீக்கும் இடையில் இருந்ததை என்னதான் தெரியாதது போல இருவரும் இருந்தாலும் அனைத்தையும் அறிந்தவர்கள் தானே இவர்கள்? முதலில் இந்திரன் ஸ்ரீயை விரும்புகிறான் என்று சிந்து மூலமாகத் தெரிந்ததுமே ஏனோ மகளைப் பெற்றவர்களாக நினைத்து ஸ்ரீகாக அதற்கு மறுப்பு தெரிவித்தவர்கள் தானே இருவரும். ஆனால் எல்லாம் சுமுகமாகவே சென்று கைசேரும் நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே? அவர்கள் ஆசைப்பட்ட இந்திரன். அவர்களின் கனவு மகனாகிய அந்த இந்திரனை தந்தவள் ஸ்ரீ தானே? இப்போது சில நாட்களாவே மீண்டும் பழைய இந்திரன் வெளியே வருவதைப் போல் அவர்களுக்கு ஒரு பிரமை. இப்போது ஸ்ரீ இல்லாமல் எப்படி அவனை மீட்க போகிறார்கள்? இது அவர்களுக்கே விடை தெரியாதக் கேள்வி.
தான் சென்று பிசினெஸ் பார்த்துக்கொள்வதாக கதிரவனிடம் இந்திரன் சொன்னதைக் கேட்க இமையனுக்கு இன்பமாய் இருந்தது. ஆனால் பழைய இந்திரனாக அவன் சென்றால்? அதை நினைக்கையிலே அவருக்கு மனம் பதைபதைக்கிறது. சிறுவயதில் பிள்ளைகளைக் கண்டித்து சொல்பேச்சு கேட்க வளர்த்த வேண்டும் என்று சும்மாவா சொன்னார்கள்? இப்போது அவனை மீட்க வேண்டும். பிறகு பழையபடி மாற்றவேண்டும். நினைக்கவே இருவருக்கும் கண்ணைக் கட்டியது.
அதற்குள் அவர்கள் அட்டகட்டி வந்தடைந்து விட்டார்கள். அவர்களின் வாகனம் வருவதைக்கண்ட ராஜேந்திரன் மிகவும் பவ்வியமாக அவரின் கார் கதவைத் திறந்துவிட வெளியேறியவரைப் பார்த்து எப்போதும் போல்,
"வணக்கம் ஐயா! வணக்கம் அம்மா!" என்று பணிவாக வணக்கம் வைத்தார்.
சகுந்தலா எதுவுமே சொல்லாமல் உள்ளே சென்றுவிட, ராஜேந்திரன் முகம் தான் கவலையில் வாடியது. எப்படிப்பட்ட புண்ணியவதி? எங்கே பார்த்தாலும் வசதி முதலாளி என்ற கர்வம் துளியும் இல்லாமல் மிகவும் பணிவாய்,"சொல்லுங்க அண்ணா..." என்று பேசுபவரா இப்படிப் பார்க்காமல் கூடச் சென்றது? முகத்திலிருக்கும் அந்தக் களை, அந்தச் சாந்தம் எதுவுமே இப்போது இல்லையே? கவலையிலும் வலியிலும் அல்லவா இருக்கிறார்? போகும் சகுந்தலாவையே பார்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரனை தோள் தட்டி,"ராஜா..." என்றார் இமையன்.
"சொல்லுங்க ஐயா..."
"வாடா போலாம்..."
"நீங்க போங்க நான் பெட்டியெல்லாம்..."
"அதெல்லாம் வேறுயாரையாவது எடுத்து வரச்சொல்லு..." என்றவர் ராஜேந்திரன் மீது கையைப் போட்டு உள்ளே சென்றார்.
முன்னே விரைந்த சகுந்தலாவைக் கண்ட சுமதியம்மா ராசப்பன் இருவரும் கைகூப்பி வரவேற்க அவர்கள் யாரையமே பார்க்கும் நிலையில் அவரில்லை. நேராக இந்திரன் அறைக்குச் சென்றவர் அங்கே படுத்தவாறு கண்களை மூடியிருக்கும் மகனின் தோற்றத்தை அளந்தார். தாடியுடன் சதைப்போட்டு உற்சாகமின்றி ஒரு பிணம்போல் இருபவனைக் கண்டதுமே ஏனோ கண்களில் கண்ணீர் முட்ட சென்று அவன் தலை கோதி அவன் அருகில் அமர்ந்து அவனையே கொஞ்சநேரம் வெறித்துக்கொண்டிருந்தார். தாயின் ஸ்பரிசத்தை உணர்ந்தாலோ என்னவோ கண்களைத் திறந்தவன் முதலில் தாயைக் கண்டு நிம்மதி கொண்டவன், பிறகு,'ஏன்டா படுபாவி உன்னை நம்பி தானே என் பொண்ணுங்க ரெண்டு பேரையும் அனுப்பிவெச்சேன்? அவங்களைக் கொன்னு புதைச்சிட்டு நீ மட்டும் இப்படி ஒன்னுமே ஆகாம குத்து கல்லாட்டம் இருக்கியே?' என்று அவனின் சட்டையைப் பிடித்து சகுந்தலா கேட்பதைப் போல் உணர்ந்தவனுக்கு ஆற்றாமை, கோவம், வெறுப்பு எல்லாம் ஒருசேர,
"இப்போ எதுக்கு இங்க வந்தீங்க? இன்னும் உயிரோட தான் இருக்கானா இல்லை செத்துட்டானு பார்கவா? நான் தான் யாரையும் வரவே கூடாதுனு சொன்னேனே? என் நிம்மதியைக் கெடுக்கவே தான் இப்படி வந்து சேருறீங்களா? போங்க... இங்கிருந்து போங்க..." என்று கத்தவும் பாவம் சகுந்தலா அழுதார். அவர் அழுவது ஏனோ இவனுக்கு இன்னும் தன்மீதே கோவம் வர, அருகிலிருந்ததைத் தூக்கி வீச அது அவரின் மீதே பட்டுவிட அவர் வலியில் அலறினார். அவ்வளவு தான் திடுக்கிட்டு எழுந்தவன் அவரை கட்டி அணைத்து தாய்மடியை நாடிச் சென்றான்.
"என்னை மன்னிச்சிடும்மா. என்னை மன்னிச்சிடும்மா... நான் நான் நானே குட்டிம்மா என் பேபி ரெண்டு பேரையும் கொன்னுட்டேன்..." என்று குற்றயுணர்ச்சியில் துடிக்க அதற்குள் உள்ளே வந்த இமையவர்மன் அவனின் அழுகையைக் கண்டு என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்.
அவனின் நிலையை நன்கு உணர்ந்த சகுந்தலா வேறுவழியின்றி பேசலானார்,
"இங்க பாரு இந்திரா. ஆமா நீ தான் கொன்ன. நீ தான் கொலைகாரன்..." என்று சொல்ல அவரின் இந்தச் சொல்லில் இமையவர்மன் உட்பட அனைவரும் திடுக்கிட,
தலை நிமிர்ந்தவன் முகத்தில் அத்தனை குற்றயுணர்ச்சி தாண்டவமாடியது.
"என் பையனை நீ தான் இப்போ கொன்னுட்டு இருக்க. எனக்கு என் பையன் வேணும். என் இந்திரன். என்னையே சுற்றிச்சுற்றி வட்டமடிக்கும் அந்த சின்ன இந்திரன் வேணும். ஏற்கனவே நான் ரெண்டு பேரை இழந்துட்டேன். அவங்க இனி திரும்ப கிடைக்க மாட்டாங்க. எனக்கு அதில்ல கவலை. இப்படி கண்ணனுக்கு முன்னாடியே என் பையனை இழந்திட்டு இருக்கேனே அது தான் என் கவலை. சிந்து, ஸ்ரீ போனது ஒரு ஆக்சிடென்ட். அதுக்கு நீ எப்படி இந்திரா காரணமாவ? அவங்க விதி முடிஞ்சது. அவ்வளவுதான். எனக்கு வேண்டியதெல்லாம் இப்போ ஒன்னே ஒன்னு தான். எனக்கு என் பையன் வேணும். ப்ளீஸ்..." என்று அவனின் முகம் பார்த்து சகுந்தலா இரைஞ்ச ஏனோ அது அவனுக்கு வலித்தது.
"இங்க பாரு என் குட்டிபையனில்ல? அம்மா சொன்னா நீ கேட்ப தானே? ப்ளீஸ் நீ மீண்டும் பிசினெஸ் பார்க்க வரணும். என்கூடவே இருக்கனும்..." என்று கேட்க அவனையும் அறியாமல் தலையாட்டினான்.
அப்படியே அவரின் மடியில் படுத்துக்கொண்டு இந்திரனின் தலை கோதிக் கொண்டே இருக்க அப்போது அவனுக்கு சாப்பாடு கொண்டுவந்த சுமத்தியம்மாவிடம் இருந்து வாங்கி ஊட்டிவிட்டார் சகுந்தலா. அவர்கள் இருவருக்கும் ப்ரைவஸி கொடுத்து இமையவர்மன் உட்பட எல்லோரும் வெளியே சென்றனர். அவருக்கு இப்போது ராஜேந்திரனிடம் பேசிட நிறைய இருந்தது.
இமையவர்மன் வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அந்தப் பழங்குடியினத் தலைவர் மீண்டும் அவரைப் பார்க்க வந்துவிட்டார். அவரையும் சகுந்தலாவையும் சேர்ந்து அழைக்க இமையவர்மனால் அதை மறுக்கவும் முடியவில்லை. சரி என்று சொல்லிவிட இப்போது இவர்களும் வருகிறார்கள் என்றதும் விழா ஏற்பாடு இன்னும் தடபுடலாக நடக்கத் தொடங்கியது.
..................................................
இமையவர்மனும் சகுந்தலாவும் அட்டகட்டிக்குச் சென்று விட்டார்கள் என்ற செய்தியை அறிந்துகொண்ட உடனே தனக்கு அழைக்கும் அந்த நபருக்கு அழைத்து தெரியப்படுத்திவிட்டான் கதிரவன். இது அவர் எதிர்பார்க்கவே இல்லை. இப்படி திடீரென இவர்களும் புறப்பட்டு அங்கே செல்வார்கள் என்று தெரியாதவர் குழப்பத்தில் உழன்றார். கதிரவனுக்கு பயமும் குற்றயுணர்வும் சேர்ந்து ஆட்கொண்டது. (வானிலை மாறும்!)
 
nice. it feels story moves slowly compared to your other stories?
கதையின் களம் அட்டகட்டியிலிருந்து மும்பைக்குச் செல்லும் வரை இதுபோல் மெதுவாகவே பயணிக்கும். நன்றி?? இன்னும் ரெண்டு மூணு அத்தியாயங்களில் கதை மும்பைக்குச் சென்றுவிடும்...
 
கதிரவன் எதோ சைடு வில்லன் மாதிரி தெரியுது.... மெயின் வில்லன் யாருனு தெரியல.... பார்ப்போம் :unsure: :unsure:
you will know it sooner... thank you??
 
Top