‘காதல் மயக்கத்தில், பின்விளைவுகளை யோசிக்காமல் தம் பேச்சாலும், செயலாலும் தவறு இழைத்தல்’
இரு தினங்களாக ருசி கண்ட விழிகள், இந்த இரவைக் கடத்த வழி தெரியாமல் அறையின் இருளில் தூக்கம் தொலைந்து திண்டாடி தோற்றது. இருவருக்கு இடையே ஓர் மதில் சுவர் மட்டுமே..! அதற்கு அப்பால் உள்ளவளை தேடுகிறது நேசம் கொண்ட உள்ளம்.
கொச்சினிலிருந்து கிளம்பி மாலத்தீவுக்கு வந்து இறங்கியவர்களை உற்சாகப்படுத்த இசைக் கருவிகளுக்கு ஏற்ப ஆட முடியாவிட்டாலும் கழுத்தையும், இடுப்பையும் ஆட்டி உற்சாகப்படுத்தினர் சில கார்ட்டூன் கதாபாத்திர நடன குழுவினர்.
சிறு பாலத்தில் குல்குமலே, மாலே, குல்குலே ஐலேண்ட் என மூன்று தீவுகளை ஒன்று இணைத்திருந்தது. ‘மாலே’ என்பது மாலத்தீவின் மத்திய பகுதி இங்கேயே கவர்மென்ட் வளாகங்கள் மற்றும் மருத்துவனை அமைந்திருக்கும்.
கடலுக்கு நடுவில் இடம் பெற்றிருந்தது ஏர்போர்ட். விமானம் வந்து இறங்கிய நொடியில் இருந்து அமரைக் காணவில்லை, தங்களுடன் பயணத்தில் தொற்றிக் கொண்டு வந்தவனை ப்ளைட் லேண்ட் ஆனதில் இருந்து பார்க்க முடியவில்லை அவளுக்கு. அந்த சிறிய ஏர்போர்ட் முழுவதும் அவனைக் கண்களால் துளாவினாள், ஸ்ரேயாவின் கவனத்தை தற்காலிகமாக ஈர்த்த பொம்மை வேடம் அணிந்தவன் அவளை வரவேற்கும் விதமாக கையில் பலூன்களை தந்து நல்வரவை பகிர்ந்து கொண்டான்.
மன சஞ்சலத்தில் விழுந்திருந்தாள், அவனைக் காணவில்லை என்றால் எதற்காக என் கவனம் சிதற வேண்டும் என்கிற எண்ணத்தை மறைத்து நூதன புன்னகை சிந்தியவள், மெல்லிய நூலில் அள்ளிக் கட்டிய பலூன்களை பெற்றுக்கொண்டாள். ஆனால் அவளின் தேடலை கண்டுகொண்ட விழிகள், அந்த உற்சாகத்தில் பாடலை சீட்டிகை மூலமாக ஹம் செய்ய, கண்டு கொண்டாள்...! தன் எதிரே பொம்மை உருவத்திற்குள் தன்னை மறைத்து வைத்திருக்கும் வித்தைக்காரனை. அந்த உருவத்திற்குள்ளே இருந்து தன்னை குறும்பு மின்ன பார்ப்பதை உணர்ந்தவள், அவனை பெரிதாக முறைத்து வைத்து, அவள் கையில் இருந்த பலூனை அங்கிருந்தவர்களுக்கு பகிர்ந்தாள்.
இப்போது முறைப்பது இவனின் முறையானது, அதிலும் அவள் இதழ்கள் மெல்ல பளிச்சிட, அவள் கையில் சாக்லேட்டை திணித்தான். அதையும் அருகில் இருந்த மாதவனிடம் தர, கொதித்து விட்டான். இப்பொழுது தலையில் இருந்த பொம்மை உருவத்தை கழட்டிவிட்டு, ஸ்ரேயா கையில் ரோஜாவை கொடுத்து, இதை கொடுத்து பாரு என்று நிமிர்ந்து நின்றான். அமரின் அந்த பார்வை அவளை அசையவிடவில்லை, தன்னுடனே பயண பொதிகளுடன் ஒற்றை ரோஜாவை வைத்துக் கொண்டாள், அதை விரும்பி ஒன்றும் வைத்திருக்கவில்லை என காட்டுகிறாளாம்..!
அங்கே இருந்து அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று இருக்க, சிறிது நேரத்தில் மாதவன் சத்தம் செவிப்பறையை கிழித்தது.
“பிளான் பண்ண மாதிரி வரலனு தெரியும்ல, ஆபீஸ் ட்ரிப் பேமிலி வெககேஷனா மாறியிருக்கப்ப, அதுக்கு ஏத்த மாதிரி ரூம் புக் பண்ணனும்னு கூட தெரியாமலா, ஹோட்டல் அரேஞ்ச்மென்ட் நீ பண்றேன்னு வந்து நின்ன இடியட், இதுல டூ டேஸ் தண்டமா கொச்சின்ல இருந்தோமே அப்பவாச்சும் ஹோட்டல் பத்தி என்ன ஏதுனு பேசிருக்கலாமே...” என மாதவன் தனக்கு கீழ் வேலை செய்யும் நபரை திட்டினான். மாளவிகா முன் வந்து, “விடுங்க மேடி.. அவர் குழந்தைங்க கூட இருக்கவும் மறந்திருப்பார். வேணும்னு யாராச்சும் செய்வாங்களா, அவரோட பேமிலி அங்க இருந்து பார்க்குறாங்க, லீவ்இட் ப்ளிஸ்..” என தாழ்ந்த குரலில் சொல்லி சமாதானப்படுத்தினாள்.
“இப்ப என்ன பண்றது? ஹோட்டல் ரூம் ஃபுல்லா புக் ஆயிருச்சுனு சொல்லிட்டாங்க, நைட் டைம் வேற..” மாதவன் புலம்ப,
ஹரிதா, “இப்போதைக்கு பேமிலி மெம்பர்ஸ் ஸ்டே பண்ண சொல்லுங்க, இன்னும் இரண்டு ரூம் இருந்தா போதும், வேற எங்கேயாச்சும் டிரை பண்ணி பார்ப்போம். ஸ்டே காம்..”
“நீ நினைக்கிற மாதிரி கிடையாது ஹரி.. நானும், பிரசன்னாவும் அவுட் சைட் பெஞ்சுல கூட படுத்துக்குவோம், பட் மூணு கேர்ள்ஸ் எப்படி முடியும்? இது உங்களுக்கு சேப் இல்ல..?” பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசவும், சிந்திக்கவும் ஆரம்பித்தனர்.
இங்கே நடந்த விவாதம் அறிந்த அமர், அந்த ஹோட்டல் மேனேஜரிடம் பேசி, அவனது ரிசார்ட்டில் தங்க வைத்து கொள்வதாக சொல்லி அனுப்பினான். இவனாக வழிய சென்று உதவுவதாக கூறினால் கண்டிப்பா ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என எண்ணினான். அவன் எண்ணியதை நிரூபிக்கும் விதமாக அவர்களும் மறுக்கவே செய்தனர். அமர் சம்மந்தப்பட்ட ரிசார்ட் என்பதால் ஆணித்தரமாக மறுத்தனர்.
“இங்க பாருங்க. கிட்டத்தட்ட இரண்டு நாள் ஏர்போர்ட்ல ஸ்டே பண்ணி சரியான தூக்கமும் இல்ல, எதையும் யோசிக்காம வந்து ஸ்டே பண்ணுங்க.. வேணும்னா லோக்கல் போலிஸ் வர சொல்றேன் ஐடென்டிட்டி கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க..” என்றவனை அந்த ஹோட்டல் மேனேஜர் அதிர்ந்தே பார்த்தார்.
‘இவ்வளவு இறங்கி போய் இவர் எதுக்கு கேக்கணும்..!’ என கருதினார். வந்திருக்கும் பெண்கள் மூவரும் அமரின் அந்தஸ்தும், செல்வாக்கும் அறியாதவர்கள் ஆயிற்றே.
“ஆமா.. கசாப்பு கடைக்காரன் வந்து அஹிம்சை பத்தி பேசணுமாக்கும்..!” மாளவிகா சத்தமாகவே முணுமுணுக்க, அமரின் முகம் இறுகிப் போனது. இந்த அவநம்பிக்கை அவனுக்கு அவமானமாக தோன்றியது. பெண்களிடம் எத்தனை நேர்மையை கடைப்பிடிப்பவன், தன் மனம் கவர்ந்த காரிகைக்காக இத்தனை இறங்கி செல்லும் நிலையிலும் தன்னவள் முகம் பார்த்து நின்றான்.
அவனின் கசங்கிய முகம் ஸ்ரேயாவை ஏதோ செய்ய, “சரி..சரி.. வாங்க போகலாம்..” டிராலியை இழுத்தபடி அமரின் அருகே சென்றாள்.
“அந்த ரிசார்ட் எங்க இருக்கு? உனக்கு அங்க என்ன வேலை..? நீ சொன்னா ரூம் கிடைக்குமா..?” கேள்விகளை மென்மேலும் அடுக்கி அவனை புனரமைக்க முயற்சி செய்தாள்.
தனக்காக மெனக்கெடும் அவளுக்கு பதில் தராமல் பார்த்து வசீகரப் புன்னகை தந்தான். அதில் தாவி குதிக்க இருந்த இதயத்தை இழுத்து வைத்து, பின்பக்கமாக திரும்பி, “எதுக்கு நின்னுக்கிட்டு இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க பா..” என தன்தோழிகளை வேகப்படுத்தினாள்.
அவள் செய்கையால் சத்தமாக சிரிப்பவனை கண்கள் இடுங்கிப் பார்த்து, “சிரிச்சது போதும், ஒழுங்கா பார்த்து நட..”
“பார்த்துகிட்டே நடக்கணுமா..” அவளை அங்குலம் அங்குலமாக பார்த்து வைத்தான். இப்படி பார்த்தா போதுமா என தன் கண்களை சிமிட்டிக் காட்டினான்.
போட்டுக்கு அழைத்துச் செல்லும் பாலத்தின் மீது நடந்து சென்றவளுக்கு அடிக்கும் கடல் காற்றில் ஏற்கனவே உடல் குளிர்ந்து போய் இருக்க, அமரின் பேச்சிலும்ம், கண் சிமிட்டலிலும் உறைந்து போய் நின்றாள்.
பின்னே வந்த இருமலர்கள் அவளை விநோதமாக பார்த்து தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் எதிர் பார்த்திராத வகையில் அந்த ரிசார்ட் அத்தனை பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. பெண்களுக்கு தன் அறையை ஒட்டிய விஐபி ரூமை தந்தவன். இரு ஆண்களுக்கும் மறு திசையில் அறையை ஒதுக்கி வைத்திருந்தான். மாதவன் தன் மனதை அமருக்கு புரிய வைக்க முயற்சிக்காமல் சிரித்தபடி சாவியை வாங்கிச் சென்றான்.
எப்படியோ இரவைக் கடத்தி காலையில் பால்கனி அறையை திறந்து வந்தான். காலைக் கதிரவன் அவளை எழுப்பி அழைத்து வந்து விடுமே என்கிற நம்பிக்கை. ஆனால் அவளின் இருமலர்களின் வருகை இருந்ததே தவிர, அவளின் தரிசனம் கிட்டவில்லை அமர்நாதனுக்கு.
அமரின் நண்பியாகவும் பற்றாக்குறைக்கு ரிசார்டின் சூப்பர்வைசராகவும் பணி புரிந்து கொண்டிருக்கும் ரஞ்சினி, அமரை தேடி வந்தவள், “ஏன்டா.. லீவு போட்டது பத்தலையா, சீக்கிரம் எழுந்து வந்தோமா வேலையா பாத்தோமானு இல்லாம புதுசா இப்பதான் கடல பார்க்கிற மாதிரி வெறுச்சு பாத்துக்கிட்டு இருக்க..”
அவளின் பேச்சில் மெத்தனமாக திரும்பியவன், அடிக்குரலில், “நான்தான் ரிசார்ட் ஓனர்னு உனக்கு மறந்து போயிருச்சா..?”
“மே பீ.. பட் முதலாளி நீங்கிறத யாருக்கும் தெரியாம பாத்துக்க சொன்ன.. இப்ப என்னவாம்” சன்னமான முறுவலுடன் கேட்டாள்.
“நோட் இட்.. தெரியாம பாத்துக்க சொன்னேன். என்னைய வேலை வாங்க சொல்லலயே..”
“போடா.. டேய்..” ரஞ்சினி பேச வர, அவளை நகற்றி விட்டு பக்கத்து அறையின் டெக் ஏரியாவை பார்த்தான்.
அறையின் பக்க கதவை திறந்து வந்தால், கிரவுண்ட் ப்ளோரில் கடலை ஒட்டியபடி டெக் ஏரியா அமைந்திருக்க, இரண்டு அறைக்கும் தாவி செல்லும் அளவிலேயே பக்க சுவர் போன்ற தடுப்பும் அமைந்திருந்தது.
குளித்து வெகு நேரமாகியும் தலையில் கட்டிய ஈரத்துண்டை கழற்றாமலேயே அங்கு வந்து அமர்ந்தாள் ஸ்ரேயா. அவள் ஓர் ஸ்டூலை எடுத்துப் போட்டு அமரவும் அவளின் கையில் காபியை கலந்து கொடுத்தாள் மாளவிகா. ஸ்ரேயாவின் முகமோ ஆசை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகளை பல் இடுக்கில் கடித்து அதை மறுப்பவளாக இறுக்கிப் பிடித்து அமர்ந்திருந்தாள். அவளின் ஓர் பக்க முகமே தெரிந்தது அவனுக்கு, இருப்பினும் அவளின் மன உணர்வை உணர்ந்து அமைதியாக நின்றான்.
ஹரிதா உள்ளே இருந்து ஹேர் டிரையருடன் வந்து அவளின் ஈர கூந்தலை காய வைக்க முயற்சி செய்தாள். அமர் ஆச்சயரிப்படவில்லை இதுபோல் மூவரும் மாற்றி மாற்றி உதவி கொள்வார்கள் தானே. ஆனால் ரஞ்சினி அதிசயத்தைக் கண்டவள் போல் வாய் பிளந்து பார்த்துவிட்டு, “இதுக்கு தான் பொண்ணுங்க கூட நட்பு வளர்த்து இருக்கணும், அதவிட்டு மொட்ட பசங்களோட சேர்ந்தா, ஒண்ணுத்துக்கும் வழியில்லாமதான் போகும்..” என சடைத்தவளை பின்னந்தலையிலே ஒரு போடு போட்டான்.
ஸ்ரேயாவின் வளர்பிறையாக இருக்கும் பாதி முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு அறைக்குள் திரும்பியவனை, தடுத்தவள், “டேய்.. அந்த பக்கம் இறங்க ஹெல்ப் பண்ணிட்டு போடா..” என்ற ரஞ்சினியை கை பிடித்து அவர்கள் பக்கம் இறங்குவதற்கு உதவி செய்து விட்டு கிளம்பி விட்டான்.
“ஹாய் பெண்களே..!” என்று அவர்களுடன் ஐக்கியமானாள் ரஞ்சனி.
அன்றைய பகல் பொழுதை தூங்கியே கடத்திவிட்டு, மாலை அந்த ரிசார்ட்டில் நடக்கும் இரவு பார்ட்டிக்கு அழைப்பு வர, அதற்கு ஸ்ரேயா தவிர்த்து இருவரும் கிளம்பினார்கள், அவளின் கட்டாயத்தினால். அவர்கள் பார்ட்டிக்கு செல்லவும் ஸ்ரேயா கடற்மணலில் கால் பதியாமல் மடக்கி மரயிருக்கையில் அமர்ந்திருந்தாள். நேரம் கடந்து செல்ல ஸ்லீவ்லெஸ் அணிந்திருந்தவளுக்கு குளிரத் தொடங்க, கைகளை குறுக்காக மடித்து உடை இல்லாத மேல் கைகளை அழுந்த தேய்த்துவிட்டாள்.
அவள் அறையைவிட்டு வெளி வரத் தொடங்கியது முதல் அவளை தன் பார்வையில் வைத்திருந்தான். அவளின் குளிருக்கு இதம் அளிக்க விரும்பியவன் சால்வையும், ஹாட் சாக்லேட்டு கேக்கையும் எடுத்து ரஞ்சினிடம் கொடுத்து அனுப்பினான்.
“ஹேய் ரே.. இங்க தனியா என்ன பண்றீங்க..? பார்ட்டி அட்டன் பண்ணலையா?”
“எனக்கு இன்னைக்கு இன்ட்ரெஸ்ட் வரவே இல்ல பா..”
“முதல்ல இந்த சால்வையை பிடிங்க..” என்றவள், அவள் தன் உடலை சுற்றி கொள்ளவும் அடுத்து கேக்கை எடுத்துக் கொடுத்தாள்.
“வாவ்.. தேங்க்ஸ்பா.. ஒரே ஸ்டோமக் பெயின், ஸ்ட்ரெஸா வேற இருக்கவும் சாக்லேட் சாப்பிடனும்னு தோணுச்சு.. தேங்க் காட்..” என பேசி முடிப்பதற்குள் அவளது துண்டு கேக்கை உண்டு முடித்துவிட்டாள்.
இதை கவனித்த ரஞ்சினி அவளது பங்கையும் எடுத்துக் கொடுத்தாள், “எனக்கு இப்ப சாக்லேட் சாப்பிடற மூடே இல்லப்பா.. இதையும் நீயே எடுத்து சாப்பிடு..”
“ஸ்யூர்..” என கேட்டபடி அதையும் எடுத்து சாப்பிட்டாள்.
“உனக்கு மென்சஸ்ஸா..? வயிறு வலிக்குமா என்ன..?” பெண்களின் வலி புரிந்ததும், அதை வருத்தம் மேலிடும் குரலில் கேட்கவும் செய்தாள் ரஞ்சனி.
“ரொம்ப... அதிகமா..” என சொல்லிவிட்டு கண்கள் சிமிட்டி சிரித்தாள்.
“ஒ.. வேற எதுவும் வேணுமா, டேப்லெட் கூட வேணும்னா சொல்லு ரே, வாங்கிட்டு வர சொல்றேன்..?”
“இல்லபா.. அது எப்பவும் ஹேன் பேக்ல இருக்கும்.. சோ தேவைப்படாது..” என்றாள்.
“நீயும், அமர்நாத்தும் காலேஜ் மேட்ஸா..?” ஏதோ ஆர்வ மிகுதியால் காலையில் இருவரும் தோழமையுடன் பேசியதை வைத்து கேட்டாள்.
“இல்ல.. இங்க வேலைக்கு சேர்ந்த கடந்த மூணு வருஷமா தான் அவனை எனக்குத் தெரியும், அவன் மட்டும் இல்ல. இங்க ஹோட்டல்ல செஃப் ராகுல்னு ஒரு அரை லூசு இருக்கான், அப்புறம் மேனேஜர் தீபக்னு ஒரரு முழு லூசும் இருக்கு, அந்த முழு லூசுதான் என்னோட ஆளு, நாங்க எல்லோருமே இங்க வந்ததுல இருந்து ப்ரெண்ட்ஸ்..”
ரஞ்சனி உரைத்தவற்றை மறந்து அமரைப் பற்றி பேச்சே பிடிபட்டது போல் அவளுக்கு, “மேனேஜர் அமர்நாத்னு சொன்னாங்க..! நீ தீபக்னு சொல்ற..?”
“அ..து அமரும் மேனேஜர் தான், பெரிய ஸ்கொயர் பீட்ல ரிசார்ட் இருக்குல்ல, பெரிய ஏரியா, நிறைய கமிட்மென்ட்ஸ்.. அதனால ரெண்டு பேரும் பாத்துக்குவாங்க..” என திக்கித்திணறாமல் பொய் சொல்லி விட்டாள். அது இவளுக்கு சகஜமாகவே வரும் போல்..!
“ஒ..” என இவள் முடிக்க, ரஞ்சனி ஆரம்பித்தாள். “மத்த இரண்டு பசங்களையும் லூசுனு சொல்லிட்டு, அமர மட்டும் நான் சேர்க்கலனு அவன தெளிவுனு நினைச்சுறாத, அவன மாதிரி கிரிஞ்சா ஒருத்தனை பாக்கவே முடியாது”
அவனைப் பற்றி தவறாக கூறப் போகிறாளோ என புருவ நெறிப்புடன் ரஞ்சினியை பார்த்தாள்.
“நீ நம்பல தான.. கேர்ள்ஸ்னா சுமாரா பழகுவான். ஆனா யாரும் அவன்கிட்ட லவ்வுன்னு சொல்லிறக் கூடாது. சொல்லிட்டா அவ்வளவுதான்..! பெருசா எல்லாம் ஒண்ணும் செய்ய மாட்டான், சிம்பிளா போய் மொட்டை போட்டுட்டு வந்துருவான்.. அது மட்டும் இல்ல தாடி, மீசை எதுவும் வைக்கமாட்டான். அழகா இருந்தா தான லவ் சொல்வாங்க, ஆண்களுக்கு அழகுனா.. உடம்புல இருக்க சிக்ஸ் பேக்கும், இந்த ம..ம்னு சொல்லி, டோட்டலா வேற மாதிரி வந்து நிப்பான்.” இப்படி ஒருவனா என்று அதிர்ந்து கேட்டவள், மெல்ல சிரிக்கத் தொடங்கி.. நொடிகளில் அவனது செய்கையை மனக் கண் முன் கொண்டு வந்து வெடித்து சிரித்தாள் ஸ்ரேயா.
ஸ்ரேயாவுக்கு இவளது பேச்சு பிடித்து போயிற்று, தோழிகள் வருகை தெரிந்து அறைக்கு பாதி தூரம் நடந்தவளுக்கு, ஏனோ அமரை பார்க்க வேண்டும் போல் ஓர் உந்துதல். ரஞ்சினி அவனைக் காண சென்று இருப்பதை உணர்ந்தவள், அவளைப் பார்க்க செல்வது போல் அமரை தேடி சென்றாள்.
அங்கு ரஞ்சனி அவனை ஆராயும் நோக்குடன் பார்த்தாள். அவனோ கடமையே கண்ணாக காட்டிக் கொண்டான். தனது ஃபயர் பளை பற்றி ஏதும் சொல்வாள் என காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே. அவளை நிமிர்ந்து நோக்கி,
“என்ன..?”
“உனக்கு பதில் வேணுமா.. விளக்கம் வேணுமா..?”
எதற்கு இப்படி உன்னை பார்க்கிறேன் என்பதற்கு பதில் வேண்டுமா, இல்ல ஸ்ரேயா தனியா அங்க இருந்ததுக்கு விளக்கம் சொல்லவா..? என்பதை சுருங்க கேட்டாள்.
அதை புரிந்தவனோ.. “இரண்டும் தேவையில்ல.. இடத்தை காலி பண்ணு”
“ஆனா எனக்கு இரண்டுமே வேணும்.. பதில் ப்ளஸ் விளக்கம்..” வக்கீல் போல் கேள்வி கேட்டு நின்றாள்.
“அவளுக்கு குளிருச்சு சால்வை கொடுத்து விட்ட ஒகே.. சாக்லேட் எதுக்கு கொடுத்து விட்ட..?”
“அவ ஸ்ட்ரெசா இருந்தா..” தன்னவளைப் பற்றி உரைக்க எதற்கு தயக்கம் என்ற இறுமாப்பு அவனுக்கு.
“அவளுக்கு வயிறு வலின்னு உனக்கு எப்படி தெரியும்?”
“காலையில் இருந்து வயிற்றை சுருக்கிப் புடிச்சு நடக்குறா தெரியாதா..” தன் மூச்சாக கலந்தவளை தனக்குத் தெரியாதா என்றது அவனது பதில்.
“இதெல்லாமா தெரியுது.. எனக்கு ஒரு நாளாச்சும் ஸ்ட்ரெஸ் இருக்கப்ப ஹாட் சாக்லேட் வேணாம், ஜஸ்ட் ஒரு ரூபா மிட்டாய் வாங்கி கொடுத்துருக்கியா டா..” தோழியாக ஆதங்கம் வெளிபட்டது.
“அத உன் ஆளு தீவெட்டி தீபக்கிட்ட போய் கேக்க வேண்டியது தான லூசு..”
இவர்களது பேச்சு வார்த்தை ஸ்ரேயா காதில் விழ அவஸ்தையாக உணர்ந்தவள் வந்த வேகத்தில் திரும்பியும் சென்றுவிட்டாள்.
மயக்கம் -11

Last edited: