சிதறாத முத்தங்கள் - 12

Advertisement

Sastika

Active member
Member


eiH036397777.jpg

‘காதல் கைகூடாமல் போயின் தன் உயிரை துச்சமாக எண்ணி சோர்வடைதல்’
சாக்காடு - 12

கடற்கரையை பார்த்தபடி ரிசார்ட்டின் ஃபுட் கோர்ட் அமைந்திருந்தது. அங்கு வந்தவுடன் நம்மை ஈர்க்கும் முதல் வியூவான கடல் அலைகளின் அழகும், இதமாக வருடும் அதன் ஓசையும் மனதிற்கு முழு நிறைவைத் தரும்.

முதல் பார்வையில் கடலின் அழகை புது மனைவியைப் போல ஆஹா.. ஒஹோவென புகழ்வது என்ன... விமர்சிப்பது என்ன
? அதுவே இரண்டு நாட்கள் கடந்துவிட கடலா.. போரிங் கைஸ், ஒரே சால்ட் வாட்டர் தவிர அதுல என்ன இருக்கு. உவ்வாக்.. என முகத்தை அஸ்டகோனங்களாக மாற்றுவதும் இயல்பாக நடப்பதே..! எங்கே செல்லப் போகிறது? இதைத் தவிர வேறு என்ன இருக்கு.. என்கிற உதாசீனம் அவர்களின் அழகுணர்ச்சியை சிதைத்து விடுகிறது.


காலை வெயில் இத்தனை சுளீரென உடலைத் தாக்கியும்
, அதன் தாக்கம் குறைவாகவே இருந்ததற்கு காரணம் கடலின் குளிர் தென்றல். மாளவிகா, ஸ்ரேயா, மாதவன், பிரசன்னா என நால்வரும் காலை உணவுக்கு ஃபுட் கோர்ட்டில் ஆஜராகினர்.

பின்னே வந்த ஹரிதாவை சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமருடன் அமர்ந்திருந்த ரஞ்சனி, “ஹேய்.. ஹரி, எங்களோட ஜாயின் பண்ணிக்கோ..” என்ற அழைப்பை உதாசீனப்படுத்தாமல் அவர்களுடன் காலை உணவைத் தொடர்ந்தாள்.


சற்று நேரத்தில் மாளவிகா சிணுங்குவதும்
, கத்துவதும் கேட்டது. கழுத்தை உயர்த்தி எக்கிப் பார்த்தவளுக்கு புரிந்தது, இது ஸ்ரேயாவின் ஓவர் லோடு பாசம் என்று. ஹரிதா கமுக்கமாக அமர்ந்து கொண்டாள்.

இதை கவனித்த ரஞ்சனி, “என்னாச்சு.. ஹரி..?”


“நத்திங்பா.. ரே பேஷன் ஷோக்கு சம்டைம்ஸ் அவளே மாடல்லா போவா
, அதனால டயட் கண்டிப்பா ஃபாலோ பண்ணனும், அவளுக்கு சாப்பிட முடியலனா எங்க தலையில கட்டிருவா.

இவ்வளவு வெரைட்டி வேற இருக்கு, சோ மாளு அன்லிமிடேடா ஆல்ரெடி சாப்பிட்டுருப்பா, இப்ப ரே அவ சாப்பாட்டை சாப்பிட சொல்லவும் பதறி போய் கத்துறா
, அதான் இப்படி..” ஹரிதா நடப்பவற்றை சொல்ல,


“எப்படிப்பா.. அங்க என்ன நடக்குதுன்னு இங்க இருந்தே சொல்ற..” ரஞ்சனி கேட்டாள்.


“இதுதான் அடிக்கடி நடக்குதே.. ரேக்கு ஃபுட் வேஸ்ட் பண்ண பிடிக்காது... சோ..”


“பாரேன் ரஞ்சி.. என்ன மாதிரியே இருக்கா..!” அமைதியாக இருந்தவன்
, தன்னவள் பற்றிய பேச்சில் உயிர்த்தெழுந்தவனாக பேசினான்.


‘யாரு.. நீ..! நைட் கூட ப்ளேட்டிங் சரியில்லனு அவ்வளவு சாப்பாட்டையும் டஸ்ட்பின்னுல கொட்ட சொன்னியேடா.. ஏன்டானு கேட்டா? ரசனை, மணக்க மணக்க ரசம்னு தத்துவம் பேசுவ.. போடா டேய்..’

மனதில் அவனை கழுவி ஊற்றினாலும் வெளியே ஆமா ஜால்ரா போட்டாள்.


“ஆமா.. ஆமா.. உன்ன மாதிரியே இருக்கா... குஸ்டம்..” என்றவளை,


“உன் மைன்ட் வாய்ஸ் கேட்டுச்சு.. இந்த மாசம் சேலரி சீக்கிரம் தரலாம்னு பாத்தேன்..”


“இப்படி சொல்லியே இரண்டு மாசம் சம்மளம் பாக்கி இருக்கு பாஸ்..” பேச்சில் பவ்வியத்தைக் காட்டினாள்.


“அப்ப போனஸ் சேர்த்து கொடுக்க வேண்டாமா..?” மேனேஜர் என்கிற தோரணை மட்டும் தெரிந்தது.


“அப்படி சொல்ல எனக்கென்ன பைத்தியமா பிடிச்சுருக்கு.. இந்த மாசமாச்சு சேலரிய கொடுங்க கருணைப் பிரபுவே..” என்றவளின் இழுவை பேச்சாலும்
, செய்கையாலும் ஹரிதாவும், அமரும் சிரித்து விட்டனர்.


அங்கோ மாளவிகா எழுந்து ஓடவே துவங்கி விட்டாள். அவளை விரட்டி சென்று கண்ணாவுக்கு ஊட்டுவது போல, வம்பாக இரண்டு வாயை திணித்தவள், ஹரிதாவை நோக்கி வந்தாள். ஸ்ரேயா எதுவும் சொல்லாமல் அவள் வருவதைப் பார்த்தவள் ஆவென.. வாயை திறந்து காட்டினாள் ஹரிதா.


“உன்னால சாப்பிட முடியாதுனா எதுக்கு..டீ இவ்வளவு சாப்பாடு வச்ச..?” இதோ தீர்ந்து விடுமமென ஊட்ட ஊட்ட சாப்பிட்டவள், சாப்பிட்டபடியே கேட்டாள்.


“நானா வச்சா இவ்வளவு சர்வ் பண்ணுவேனா, அந்த மாளு லூசு தான்.. டேஸ்ட்டா இருக்குனு அள்ளி வச்சுட்டு வந்துட்டா..” ஊட்டுவதில் கவனம் காட்டியபடியே பதில் அளித்தாள் ஸ்ரேயா.


“எனக்கு போதும் ரே
, ரஞ்சி பாவம்.. வாய பார்த்துகிட்டே உட்கார்ந்திருக்கா.. அவளுக்கும் கொடு..” ஹரிதா அவளையும் இந்த அவஸ்தைக்குள் இழுக்க,


“அடி பாவி.. உனக்கு கஷ்டமா இருக்குனு எவ்வளவு நேக்கா தள்ளிவிடுற, பரவாயில்ல.. நமக்கும் எருமை வயசு ஆச்சு, இந்த வயசுல யார் ஊட்டி விடுவா.. ம்ம்ம்..” என வாயைத் திறந்து ஸ்ரேயா ஊட்டும் உணவை வாங்கினாள் ரஞ்சினி.


“ஃபயர் ப்ளை, அப்ப எனக்கு.. நானும் வாய பாத்துட்டு உட்கார்ந்திருக்கேன்.. ஆ..” மறுத்து விடுவாள் என தெரிந்தும் வாயைத் திறந்து காட்டினான்.


“எந்த வாய பார்த்துட்டு..?” கேட்டது ரஞ்சனி.


“சிவப்பா.. கோவைப் பழம் மாதிரி
, அப்படியே செம்பவழமா ஜொலிக்கிற...” அவன் வர்ணனையைவிட உச்சரிப்பு அதிக போதை ஏற்றியது அவளுக்கு, ஸ்ரேயாவின் தவிப்பை ரசித்துவிட்டு, வர்ணனையை நிறுத்துவது போல் இருமல் செய்து போக்கு காட்டினான்.


சற்று நேரத்தில் சபை களைந்த பின்னே கையில் டிஸ்யூவை சுற்றி அமரிடம் தந்தாள் ஸ்ரேயா. என்னவென்று பிரித்துப் பார்க்க
, உள்ளே பளீரென சின்ன கியூப் சைஸ் ஸ்வீட் எட்டிப் பார்த்தது.


ஒருமுறை உணவை ருசி பார்க்க டிஸ்யூவில் சுத்தி தந்ததற்காக ரஞ்சினியை ஒருவாரம் ப்ளேட் கழுவ விட்டான். அதை பார்த்த ரஞ்சினி பதறிப் போய் ஸ்ரேயாவை தடுக்க வந்தாள். அவளின் நோக்கம் புரிந்த அமர்நாத் பின்னந்தலையை பிடித்து வெளியே தள்ளினான்.


அவனாக கேட்கும் முன், “அ..து நீ சாப்பிட கேட்டு, உனக்கு எதுவும் கொடுக்கல அதான்..”

“கஷ்டமா ஃபீல் பண்ணியா பயர் ப்ளை..” அவளின் கரிசனம் பித்தாக்கியது அவனை.

“அப்படி எல்லாம் இல்ல.. அது.. அப்போ.. எல்லோரும் எச்சில் பண்ணியது..”


“ஒ.. அதான் கொடுக்கல.. இல்லையா..! உன்னோட எச்சினா கொடுத்திருப்பியா..?”

“வாட்..”

“தப்பா இல்லமா.. எச்சில் பண்ண சாப்பாட்ட சொன்னேன்..”


“ப்ளீஸ்.. இப்படி பேசாத. எனக்கு தப்பு பண்ற மாதிரி இருக்கு..”


“இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் போகல.. வேணா சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு தப்பே இல்லாத எச்சில் சாப்பாட்டை சாப்பிடலாம்..” இவனுக்கு சுலபமா காதலை சொல்லவும் வருது
, திருமண பேச்சிற்கும் எந்த வரைகோடும் தேவைப்படவில்லை..!


“போடா.. பொறுக்கி.. பாவம்னு பார்த்தா அதிகமா பேசுற, தொலைச்சுருவேன்..” விரல் நீட்டி மிரட்டினாள்.

அந்த வார்த்தை ஒன்றும் அவனை சீண்டவில்லை
, அவன் பேசிய பேச்சுக்கு இது கூட இல்லனா எப்படி?


அவன் பேசுற ஷணம் ஒரு மாதிரி பிடிச்சும் போகுது, அதே சமயம் நெருடலாவும் இருக்கு.

வாழ்க்கையை இழந்து நிக்கிற என்கிட்ட பிரவாகமா நேசத்தைக் கொட்டுறான். அந்த அன்பை என்னால் மறுக்கவோ, உதாசீனமோ படுத்த முடியலயே..!


அவன்கிட்ட மனச குழப்புற பசப்பு வார்த்தையில்ல தான். அந்த கண் என்னோட காயத்துக்கு மருந்தா உருமாறப்ப, என்னோட காயத்தை குணப்படுத்திக்க தோணுதே தவிர விலக தோணல..!


அவன்கிட்ட பேசுறப்ப மனசு அவஸ்தையா
இருக்கு. கடந்த காதல்ல இதலாம் தெரியலயே.. அபி சொன்ன மாதிரி அது காதல் இல்லையோ..! காதல் இல்லாமலா அத்தனை பொறுத்து போனேன். இப்ப தோணுதே.. இவன்மேல் இதுதான் காதலா இல்ல..! ஏதோ கவர்ச்சி, பேசியே மயக்கிறானா?. அவனை யோசிக்கையில் இதயம் மேகமா மிதக்குது, அத்தோடு பாட்டு வேற.. சுயம் தொலைஞ்சு அவன மட்டுமே நினைக்க வைக்குது அந்த குரல்.


இப்படி முன்னுக்கு பின் முரணாக யோசித்து குழம்பியவள், இறுதியில்
, அவனோட நேசம் பொய்யில்ல, காட்டுற அக்கறையில வேசமும் இல்ல, காத..ல் நிஜமா இருக்கலாம்.


அவனை காயப்படுத்தாம என்னோட நிலைமையை சொல்லி புரிய வைத்து விலகி போயிடறது அவனுக்கு நல்லது என்று பலவிதமாக சிந்தித்தே ஓய்ந்தாள்.

ஆனால் அவள் இதை சொல்வதற்கான சந்தர்ப்பத்தைதான் தரமாட்டான், அந்த வித்தை கற்றவன்.


மாலத்தீவுக்கு வருகை தந்திருந்த இளம் தம்பதிகளுக்கு வழிகாட்டி, ஓர் டூரிஸ்ட் கைடும் ஏற்பாடு செய்து அனுப்பிவைத்த அமரை கண்டவன்
, அவர்கள் செல்லவும், “பாஸ்.. நீங்க ஏன் எங்ககிட்ட மேனேஜர்னு பொய் சொன்னீங்க..?” மாதவன் கேள்வியில் ஜெர்கானாலும், அதை வெளிப்படுத்தாமல் அலட்சியமாக திரும்பி நடக்கத் தொடங்கினான்.
மீண்டும்
, “நான் நினைச்சது சரிதான்..” என்றான் மாதவன்.


“நீங்க என்ன பத்தி நினைக்க என்ன இருக்கு
?” சுருக்கென கோபம் மேலிட்டது.


“இருக்கே..! எங்க கூட வந்த பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு வேணாமா? அதனால எல்லாத்துலயும் முன்னெச்சரிக்கையா இருந்துக்கிறது நல்லது இல்லையா பாஸ்..”


“அதுக்கும் என்ன விசாரிக்கிறதுக்கும், என்ன சம்பந்தம் இருக்கு..? என்னைய பார்த்தா மன்மதன் மாதிரி இருக்கா..? எந்த பொண்ணுக்கு இப்ப பாதுகாப்பு இல்லாம போயிருச்சு..? வாட் த ஹெல் இஸ் ராங் வித் யூ..” அக்னியாக சினம் மேல் எழும்பியது.


“ஏன் இல்ல.. ஸ்ரேயா சிஸ்டர் பின்னாடியே போய்..” மாதவன் முடிக்க கூடவில்லை,


“மச்சான்..” என கட்டி கொண்டு
, “உங்க தங்கச்சிய பத்திரமா பாத்துக்குவேன்.. யூ டோன்ட் ஒரி அபோட் ஹெர்..” அவனை அணைத்து புது நட்புக்கு தோள் கொடுத்தான்.


அமர் செய்கையில் சிரித்துவிட்டான், “எப்படி..? இப்படி தடாலடியா இருக்கீங்க நீங்க..!”


“என்ன தடாலடியா இருக்கேன்..? புரியல..!”


“அன்னைக்கு பேசிக்கிட்டு இருக்கப்பே பட்டுனு எப்படி லவ் சொல்ல முடிஞ்சது..?” அன்றைய மாதவனின் சந்தேகம் அது.


“லவ் சொன்னதுக்கேவா.. காலையில மேரேஜ் பத்தியும்
, அப்புறம் அது.. இதுவும்.. மஜாவா பேசிட்டு வந்துட்டேனே..!”


“என்னது, அது இதுவுமா மஜாவா.. ஒ.எம்.ஜி, எனக்கு இந்த தில்லு வரமாட்டேங்குதே..” என புலம்பினான்.


“சொல்லு மச்சான்.. உன் ஆளு யாருன்னு ஒத்த விரலைக் காட்டு, தூக்கிட்டு வந்து முன்னாடி நிறுத்துறேன்..”

அதவிட சிம்பிளா வேற வழி இருக்கு..”


“அது என்னது
?


“அவள பார்த்துக்கிட்டே இருக்க மாதிரி பக்கத்துல ரூம் கொடுத்தா போதும்..”


“எந்த ரூம்
, யாரு அந்த பொண்ணு?” புருவம் உயர்த்தி சந்தேகமாக கேட்டான் அமர்நாத்.


“அச்சோ.. தப்பா நினைக்காதீங்க பாஸ். மாளுவ லவ் பண்றேன்.” என காதலை வெளிபடுத்தினான்.


“அந்த அரை லூசா.. சாரி. அந்த பொண்ணு மனசுல வேற மாதிரி கற்பனை பண்ணி வச்சுருக்கு
, ஆக்சுவலி உங்க மேல் கோபம் வரவே மாளவிகா காரணம்னு கூட சொல்வேன்..” அமர் கேட்டு அறிந்த இரு தோழிகளின் எண்ணங்களை பகிர்ந்தான்.


“ஷீ இஸ் இன்னசன்ட் கேர்ள்.. ரொம்ப எல்லாம் யோசிக்க தெரியாது. சச்ச கைன்ட்நெஸ் ஹார்ட்.. அவ லூசு எல்லாம் இல்ல.. செம்ம பிரில்லியன்ட், இல்லாட்டி எப்படி இந்த வயசுல பேங்க்ல எக்ஸாம் எழுதி போயிருக்க முடியும்..” அவளை மனத்தில் கவ்விப் பிடித்து, தன் மனம் விரும்புவளை உயர்த்திப் பேசினான்.


“ஒகே மச்சான்.. தப்பு தான், அவங்க ஆளு அவங்களுக்கு எப்பவும் கிரேட்டா தான் இருப்பாங்க.. நைட்டே உங்க ரூம்ம ஷிப்ட் பண்ணிடறேன்..” கட்டை விரல் உயர்த்தி சன்னமான முறுவலுடன் சொன்னான்.


அமர்நாத்துக்கு பெரிய மனபாரம் இறங்கியது
, தனக்கு போட்டியாக எண்ணியவன் தோள் கொடுக்கும் நண்பனாக மாற்றம் பெற்றது. அவன் காதலை ஒளிரவைத்தது போல் மனம் ஆரவாரமாய் துள்ளியது.

பார்த்த ஒரு சில தினங்களிலே அந்த பெண் தன்னை மாற்றி விட்டாளா..! அவளின் மீது உண்டான அலாதியான நேசம் அவன் நெஞ்சை நிறைத்தது. அவள் மீது பித்தாக இருப்பவனுக்கு
, அவளின் கடந்த கால வாழ்க்கை தெரிந்தால்..!?


 

Attachments

  • eiH036397777.jpg
    eiH036397777.jpg
    471.7 KB · Views: 2
Last edited:

Advertisement

Advertisement

Back
Top