“சம்பாதிக்கிறது எல்லாத்தையும் இப்படி ஷாப்பிங் பண்ணா எப்படி..?” என குறைபட்டாள் ஸ்ரேயா.
“நானாச்சு ஒரு மெமரி கிரியேட் பண்ற மாதிரி பொருளா வாங்குறேன்.. அவளப் பாரு திண்ணுக்கிட்டே இருக்கா..” வாயில் ஏதோ கிழங்கை உதப்பிக் கொண்டு இருப்பவளை சுட்டிக் காட்டினாள் ஹரிதா.
“நீ மெமரி கிரியேட் பண்ணுறேன்னு சொல்லுவ, அவ விதவிதமான உணவை எக்ஸ்பீரியன்ஸ் பண்றேன்னு சொல்லுவா.. ஆளுக்கு ஓர் காரணம் சொல்லுவீங்க, உங்கள வச்சுகிட்டு..” என அங்கலாய்த்து இதழ் விரிய புன்னகை தந்தாள் ஸ்ரேயா.
“இப்படி சிரிச்சுக்கிட்டே இரு ரே.. எவ்வளவு அழகா இருக்க தெரியுமா..?” என கன்னம் கிள்ளி செல்லம் கொஞ்சினாள். அதை ஆமோதிக்கும் விதமாக இன்னும் இதழ்கள் விரிய படிந்த ரேகைகள் படீரென பிரகாசித்தது.
“இந்த அழகை பாக்கிறதுக்காச்சும் அடிக்கடி ட்ரிப் வரணும்..” என ஸ்ரேயாக்காக பேசினாள் ஹரிதா.
“வரலாம், ஆனா இந்த மேடியை கவனிச்சியா..? அடிக்கடி மாளுவ மட்டும் நைசா நம்மகிட்ட இருந்து பிரிச்சு கூப்பிட்டு போற மாதிரி இல்ல..” தொலைவில் இருவரும் கடைத்தெருவில் அலைவதை பார்த்தபடி சொன்னாள் ஸ்ரேயா.
“ம்.. நாங்க ஒண்ணு நினைச்சோம், பட் நடக்குறது வேற ஒன்னால இருக்கு, எப்படியோ.. என்ன தவிர எல்லோருக்கும் ஜோடி சேர்ந்தா சரி..!” வருத்தப்பட்டவளாகப் பேசினாள் ஹரிதா.
“இதுல நான் என்னமோ ஜோடியா திரியுற மாதிரியும், நீ மட்டும் அப்பாவியா தனியா சுத்துற மாதிரியும் பேசுற..? உனக்கே ஓவரா தெரியல.. ஹரிமா..”
“தெரியல..! உன்னோட ஜோடி போட ஆளு இல்லாமலா இருக்கு..” தோழியைப் பார்த்து அமர்த்தலாகக் கேட்டாள்.
“ஏய்.. அமர் எனக்கு..” பட்டென பேச்சை நிறுத்தி கொண்டாள்.
“ம்.. அமர் ஆளு இல்லையா..? ஒன் மோர் திங்க் அவன் பெயர சொல்லவே இல்லையே..!” சிறு தூண்டில் விட்டாள்.
“ஆளு தான்.. ஆனா எனக்கான ஆளு இல்ல...” மனசாட்சி இன்றி பதிலளித்தாள்.
“பார்க்கிற எங்களுக்கு அப்படி தெரியல ரே..”
“இன்னைக்கு நைட்டு ஃபிஸ்ஸிங் போறோமா..?” என சந்தேகம் கேட்பது போல் பேச்சை திசை திரும்பினாள் ஸ்ரேயா.
அடுத்து மூவரும் சேர்ந்து ஷாப்பிங் செல்ல, ஸ்ரேயா மனமோ வெறுமையைத் தத்தெடுத்தது.
ஒரு கடையில் கடல் சங்குகள் அடுக்கப்பட்டிருந்தது, அந்த கடைக்குள் நுழைந்த மூவரும் அதிர்ந்தே விட்டனர். அத்தனை விதங்கள், அத்தனை உருவத்தில் இதுவரை பார்த்திராத விதங்களில் காட்சியளித்தது பல வண்ண நிற சங்குகள். அதில் ஸ்ரேயாவின் கவனத்தை ஈர்த்தது மையத்தில் தலைமை தாங்கியிருந்த சிப்பிக்குள் ஒளிந்திருந்த நிலவைப் போன்ற முத்து. இதுவரை பார்த்திராத அளவில் பெரிய சைஸ் முத்து இருந்தது.
“வாவ்.. எவ்வளவு அழகா இருக்கு..!” அந்த முத்தின் அழகில் மயங்கியவளாக கடைகாரனிடம் விலை கேட்க, விற்பதுக்கு இல்லையெனவும் ஸ்ரேயா முகம் சோர்வை வரவழைக்க, “அப்புறம் எதுக்குயா பகுமானமாக கொண்டு வந்து வச்சுருக்க..?”
மாளவிகா ஏக வசனத்தில் திட்ட ஆரம்பிக்கவும், அங்கு கவுரமாக தொழில் நடத்தி வரும் கடைக்காரனுக்கு சிறு பெண் பேசவும் ரோஷம் எல்லை கடந்தது.
“அந்த முத்து பல தலைமுறையா எங்க குடும்பத்துக்கு சொந்தமானது, கடையில வச்சா அதிர்ஷ்டம்னு வச்சுருக்கேன்.. உங்களுக்கு என்னமா? பார்க்கிற எல்லாத்தையும் விலைக்கு வாங்கிற முடியுமா? அதுக்குனு ராசி வேணாம், எது தனக்கு அமையுமோ, அத வச்சு திருப்திபட்டுக்கனும்.. பெருசா பேச வந்துட்டாங்க..” மீண்டும் தோழிகள் சண்டைக்கு செல்ல, ஸ்ரேயா அவர்களை சமாதானம் செய்ய இயலாமல் இழுத்து வந்தாள்.
“ரே.. அந்தமாதிரி பிரியாஸ் முத்தை கொடுத்து புரபோஸ் செஞ்சா நீ என்ன பண்ணுவ..?” என ஹரிதா கேட்க,
“அப்படி.. அந்த கடைக்காரன் சொன்னத கேட்டல்ல, அதுக்கெல்லாம் முகராசி வேணும்..” யோசித்துவிட்டு, சிரித்த முகமாக சொன்னவளின் இதயமோ சமாதானம் செய்து கொள்ள முயன்றது.
“எனக்கு எல்லாம் இப்படி வேணாம்பா.. எனக்கு பெரிய கிரவுட் முன்னாடி ப்ளாஸ் மாஃப் பண்ணி புரபோஸ் பண்ணனும்..” சொன்னவளின் கனவு புரிந்தது மாதவனுக்கு, உடன் ஸ்ரேயாவின் ஆசையையும்.
.......
“டேய் எங்கடா.. இழுத்துட்டுப் போற..? கொஞ்சமாச்சும் என்னை பொம்பள பிள்ள மாதிரி டிரீட் பண்ணுங்க டா..” என கழுத்தைப் பிடித்து இழுத்து சென்றவனிடம் ஆதங்கப்பட்டாள் ரஞ்சனி.
“அப்படி தீபக் கண்ணுக்கு மட்டும் தான் தெரிவ.. எங்களுக்கு வாய்ப்பு இல்ல ராசா.. வாய்ப்பு இல்ல..” என ராகுல் நக்கல் செய்ய,
அவனது கேலியை மதிக்காமல், “உன் நொள்ள கண்ணுக்கு தெரியாட்டி போடா.. எங்க கூப்பிட்டு போறேன்னாச்சு சொல்லித் தொல..” அவனிடம் இருந்து விடுபட்டாள்.
“நம்ம அமர் லவ் பண்ற பொண்ண முதல்ல காட்டி தொல..” என கடற் மணலில் கூட்டத்திற்கு மத்தியில் இருக்கும் பெண்களை சுட்டிக் காட்டினான்.
“உனக்கு எப்படி தெரியும்? அவன் லவ் பண்றது?” ரஞ்சனி சந்தேகம் கேட்க,
“கிச்சன் முழுக்க அந்த டாப்பிக் தான் போயிக்கிட்டிருக்கு, என்கிட்ட வந்து சொல்லணும்னு உனக்கு தோணுச்சா..?”
“எனக்கே முழுசா தெரியாததை, என்னத்த உன்கிட்ட சொல்ல சொல்ற..?”
“வாயை குறை.. எந்த பொண்ணுனு காட்டு..” என கடுப்படித்தவளை கண்டித்தான்.
“இருடா.. நானும் அவள தான் தேடிக்கிட்டு இருக்கேன்..” கூட்டத்தை மேய்ந்தபடி சொன்னாள்.
அவளுக்கு முன்பாக ஆஜரானான், “அந்த பொண்ணா..!” என்றவன்,
அவளுக்கு முன்பாக, “டீ-சர்ட், ஜீன்ஸ்ல இருக்கா பாரு..” என்றவன் அவளை மெய் மறந்து பார்த்தான்.
“அந்த நெட்ட கொக்கு எப்படி டா.. அமருக்கு மேட்சா இருப்பா, அவள இங்க காணாம், இது அவ ப்ரெண்ட் ஹரிதா..”
“அப்பனா எனக்கு மேட்சா இருப்பால்ல..” பூரிப்போடு கூறி சிரித்தான் ராகுல்.
“உனக்கா.. ம்.. ஜிம் பாடிக்கு ஒகே தான், அப்பனா நீயும் கமிட் ஆயிருவ..” சிந்தித்துவிட்டு நண்பனுக்கு பொருத்தம் பார்த்தாள்.
அங்கு ரஞ்சனியும், ஆடவனும் தன்னை குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து அவர்கள் நிற்கும் இடம் சென்றாள் ஹரிதா. ஏனோ அருகில் சென்ற பின் சிக்ஸ் பேக் தேகத்துடன் சிலீவ்லெஸ் பனியனுடன் நிற்பவன், அவளது பார்வைக்கு கூச்சத்தோடு, வெட்கத்தையும் பரிசளித்தான்.
“ஹேய்.. ஹரி, இது நம்ம ரெசார்ட்டோட டாப் செஃப் ராகுல் பட், அப்புறம் உங்க கேங் மாதிரி இல்லனாலும், எங்களுக்கும் சுமாரான நட்பு இருக்கு..” அறிமுகபடுத்தியவளை முறைத்துப் பார்த்தான்,
“அப்படி எல்லாம் இல்லைங்க, எங்களோடது டியர் புரூப் ஃப்ரெண்ட்ஷிப், என்ன ஓர் பிரச்சனை..? எங்க கேங்க்ல பெண் குரங்கோட அட்ராசிட்டி ரொம்ப அதிகமா இருக்கும், டோன்ட் பேனிக்..” நெகிழ்ச்சியாகவே சொல்பவனை ஹரிதா ரசிக்கவே செய்தாள்.
அவர்களின் நட்பை கேலிக்காக கூட விட்டுக் கொடுக்காத அவனின் மீது மதிப்பு கூடியது. புன்னகையுடனே, “அது என்னங்க, வாட்டர் புரூப் மாதிரி டியர் புரூப்..?”
“எங்க நட்புல இணைஞ்சவங்கள கண்ணீர் சிந்தாம பாத்துக்குவோம்.. அதை தான் இவ்வளவு பில்டப்போட சொல்லி தொலையுறான்..” அவர்களது ஆழமன நட்பை அசால்டாக சொல்லி விட்டாள்.
“நட்புல மட்டும் இல்லங்க.. வாழ்க்கை துணையா வர பொண்ணையும் கண்ணீர் வரவைக்காம பாத்துக்குவோம்..” என மறைபொருளாக காதலை சொன்னவனை ரஞ்சனி அதிர்ந்து பார்த்தாள்.
‘ஓவர் ஸ்பீடா போறானே.. ஸ்பீட் ப்ரேக் போடு..’ மனதில் எண்ணிய படி அந்த பேச்சிற்கு கடிவாளம் இட்டாள்.
“டேய்.. ராகுல், மறந்தேபோயிட்டேன் பாரு, தீபக் இரண்டு நாள்ல ரிலேட்டிவ்ஸ் கூட்டிட்டி வந்துருவான். ஆனா எங்கேஜ்மென்ட்டுக்கு இன்னும் எனக்கு டிரஸ், மேக்அப் ஆர்ட்டிஸ்ட், ஸ்டேஜ் டெகரேஷன் எதுவும் ரெடி பண்ணல.. கொஞ்சம் அமர்கிட்ட சொல்லி ப்ளான் பண்ண சொல்லுடா..” இருவருக்கு இடையே ஓடும் அலைவரிசையை குறுக்கே புகுந்து தடுத்தாள்.
“யாருக்கு ரஞ்சி, எங்கேஜ்மென்ட்..?” சந்தேகம் எழுப்பினாள் ஹரிதா.
“யாருக்கா..! எனக்குதான் ஹரி. எங்க லவ்வ சொன்னவுடனே தீபக் ஃபேமிலி சம்மதிச்சிட்டாங்க, எங்க ஃபேமிலிகிட்ட பெரிய போராட்டம் பண்ணி சம்மதிக்க வச்சுதோடு, நிச்சயதார்த்தத்தையும் இங்கேயே பிளான் பண்ணது சத்தியமா நான் இல்ல.. இவன் தான்..” என ராகுலை கைகாட்டினாள்.
‘அதுக்கு பரிகாரம் ரொம்ப நல்லாவே பண்றடி..!’ மனதில் தோழியை நிந்தித்துவிட்டு, சுயவிளக்கம் தந்தான்.
“உதவினு.. எங்கயாச்சும் வார்த்தை கேட்டுட்டா போதும், அங்க நிச்சயம் ராகுல் நிற்பான், உதவிகரம் கொடுப்பான்..”
“ஒ.. அவ்வளவு பெரிய வீராதி வீரரா..! அதுக்காகதான் ஜிம் பாடியா..! அதெல்லாம் சரி, அது என்ன பெயருக்கு பின்னாடி பட்னு?”
“வெங்கடேஷ் பட் என்னோட குருநாதர்.. அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமா அவரோட பாதி பெயரை எனக்காக தூக்கிட்டேன்..” தொழில் விசுவாசம் வெளிபட்டது.
“அப்ப உங்களுக்கு நான் வெஜ் சமைக்க தெரியாதா..?” பெரும் கேள்வி எழும்பியது ஹரிதாவுக்கு.
“ஏங்க, வெஜ்க்கு தாங்க அவர் குருநாதர், நான்-வெஜ்லாம் என்னோட ப்ளட்லயே கலந்திருக்கு, சோ நத்திங் ஓரி.. ரொம்ப அருமையா சமைப்பேன்..” தன் பயோ டேட்டாவை தெரியப்படுத்தினான்.
இங்கு இரு மனங்களும் கண்ணுக்கு புலப்படாத கயிற்றால் இணையத் தொடங்கியது.
...........
‘இங்கீதம் இல்லாதவன் எல்லாம் கடை நடத்துறேன், வடை சுடுறேன்னு வந்துறாங்கே..! ராசி வேணுமா.. ராசி.. யாருக்கு வேணும், அந்த ராசி இருந்தா முத்து கிடைச்சிருமா? எதுவும் வேண்டாம். ராசியும் வேணாம், முத்தும் தேவையில்ல.. போங்கடா..’ என இரவின் தனிமையில் நடந்தவாரே தன் மன ஆதங்கத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள் ஸ்ரேயா.
அவள் ஆதங்கத்தை குளிர்விக்கும் விதமாக அவள் முழங்கையைப் பிடித்து சுவரில் சாய்த்து நிற்க வைத்து, அவளின் இரு பக்கமும் அணைக் கட்டி நிற்க வைத்தான். அவளுடன் உணர்வுகள் ஒட்டிக் கொள்ள, உடல் ஒட்டாமல் நின்றான் அமர்.
“நீயா?” சலிப்பாகக் கேட்டாள்.
“நானே..” மெய் மறக்க மன்மதனாக நின்றான். மற்ற பெண்கள் இவனைக் கண்டிருந்தால் சொக்கி போய் அவனிடம் தஞ்சம் அடைந்திருப்பார்கள். ஆனால் இவளோ அசட்டையாக,
“எங்க போன..?” பகல் பொழுது முழுதும் கண்ணில் படாமல் இருந்தவனைக் கேட்டாள்.
“என்ன தேடுனியா, பயர் ஃப்ளை?” கேட்ட விதமே அவன் தோள் சாயத் தூண்டியது.
“ஆ..ங்.. தேடுறாங்க உன்ன..! தேடுறதுக்கு நீ என்ன தொலைஞ்சா போயிட்ட?” அவனை துச்சப்படுத்தி பேசினாள்.
“ம்.. உனக்குள்ள, அதுவும் கொஞ்சம்.. கொஞ்சமா.. தொலையுறேன். இது பத்தல, உன்கிட்ட மொத்தமா தொலையனுமா..” மயங்கிப் போய் சொன்னான்.
“என்னடா உன் பிரச்சனை? இதுமாதிரி பேசுறத விட்டுட்டு, நான் சொல்றதை கேட்க டிரை பண்ணு” எத்தனை மயக்கும் வார்த்தைகளைப் பிரயோகித்தாலும் கிறங்குவேனா என அடமாகப் பேசினாள்.
“உன் பேச்சை கேட்காமலா கண்டிப்பா கேக்குறேன். அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொடுக்கணுமே..” என்றவன் பேண்ட் பாக்கெட்டை துளாவினான்.
அவன் பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுக்கப் போகிறான் என எண்ணி, இடது கையை நீட்டி, “கொடு..” என்றாள்.
“அவ்வளவு ஏங்கி போயிருக்கியா? பயர் ஃப்ளை..” அமர் பேச்சில் புரியாமல் விழிக்க, உணரும் முன் அசுரவேகத்தில் அவளின் இருகண்களின் புருவ மத்தியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
அவளின் புருவ மத்தியும், அவன் இதழும் ஈர்க்கும் சக்தியாக மாறி இருவரையும் நகராமல் அம்முத்ததில் லயிக்க வைத்திருந்தது. அம்முத்தம் உடலை சூடேற்ற, அதை தணிப்பதற்கும் அவளின் இமைகளைத் தேடினான்.
இடைவிடாத முத்தம் ஊர்வலமாக இரு கண்களையும் சுற்றி வளைத்து புள்ளி வைத்த இடத்திலேயே முற்றும் பெற்றது.
பகல் முழுவதும் அவளைப் பார்க்க முடியாமல் வேலை அவனை இழுத்துக் கொண்டது. இந்த இரவில் ஸ்ரேயாவை கண்டவனுக்கு தனக்குள் அவளை கடத்தி விடும் உத்வேகம் எழுந்தது.
மெல்ல விலகி அவளை பார்க்க, கைகள் பக்கவாற்று சுவற்றில் பரப்பி, கண்கள் மூடி நின்றாள். முழிப்பதற்கு அஞ்சியவளாக கண்களை சுருக்கி நின்று இருந்தாள். அவளின் லயிப்பில் மெச்சியவனாக முரல் விரிய, “சொல்லு..” என கிறக்கமாக சொல் வடித்தான்.
பட்டென நேத்திரம் படபடக்க திறந்தவளை, அவள் கருமணிகள் சொல்லியது, அவளின் பயத்தையும், பிடித்ததையும்.
என்னதான் செய்வாள் இவளும்..! இளவயதில் ஈர்ப்பு வருவது சுலபம் தானே. வழிநடத்தவோ, வழிகாட்டும் நபரும் இல்லாமல் போக, மனம் போன போக்கில் சென்று விட்டால், இது அவள் கடந்த வந்த முள் படர்ந்த பாதை.
நடந்ததை மனதில் சுமக்காமல் வலியை மறந்து, நினைவுகளை சொப்பனமாக கருதி அழித்துவிட்டாள். இப்போது மனத்தை திறந்தே வைத்திருந்தாள். அது அவனுக்கு சுலபமாக போயிற்று, உள் நுழைவதற்கு..!
ஸ்ரேயா தன் மனதை எவ்வித சஞ்சலத்திற்கும் ஆட்படாமல் யோக நிலையிலேயே வைத்திருந்தாள் அமரை காணும் வரை..! அவன் கண்ணில் தெரியும் நேசத்தை அவளால் விரட்ட முடியவில்லை, அவனிடம் தோன்றும் உணர்வுகளை விட்டு விலக தோணவில்லை..!
‘அதுக்காக.. சில நாள் சந்திப்பிற்காக எனது கடந்த வாழ்க்கையை அவனிடம் சொல்லவா முடியும்..? முதல நான் தெளிவாகனும்.. அப்பதான் அவன தூர நிறுத்த முடியும்.’ மனம் குரங்காக தாவியது அவளுக்கு..!

Last edited: