சிதறாத முத்தங்கள் - 14

Advertisement

Sastika

Active member
Member

eiH036397777.jpg
காதலரின் விழி வீச்சு தாங்காமல் பதட்டத்திலும், பயத்திலும் எழும் வியர்வை’
பொறி நுதல் வியர்த்தல்-14

விடியலை ஏங்கி வரவேற்றது ஆழ்கடல் அமைதி. பகல் முழுவதும் ஓயாமல் நச்சரிக்கும் அலைகளும் அதன் சலசலப்பும், கதிர்வீச்சின் ஸ்பரிசத்தில் தயங்கி, மயங்கி அமைதி காத்து நிற்கும் கடலைகள் எத்தனை அழகு..! கடற் பெண்ணின் வெட்கம் அத்தனை அழகு..!


அந்த பேரழகை இருளின் நிசப்தத்தில் பூல் சேரில் ரசித்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு இந்த பேரழகும் தன்னவளின் முன் மட்டுப்பட்டே இருந்தது. முந்திய இரவு அவளை நெருங்கி இருக்கக் கூடாது, காதலித்த மனம் பலகீனத்தை காட்டி விட்டது.


அம்முத்தத்திற்கு பிறகும் அவளை அணைத்துக் கொள்ள ஏங்கியவன், ஸ்ரேயா கண்ணில் தெரிந்த அச்சம் அவனை விலக வைத்திருந்தது. ஆனால் மலங்க மலங்க விழித்துக் கொண்டும், படபடக்கும் இமைகளோடும் நின்றவளின் விழி வீச்சுக்கு அடிமையானான்.


அந்நிகழ்வு அவனை திக்கு முக்காட வைக்க, கடத்த முடியாத இரவை கடற் பெண்ணைக் கொண்டு கடத்த முயன்றான்.


“உனக்கு சூப்பர்வைசர் வேலை கொடுத்தது ரிசப்சன்ல, ஆனா எப்ப பாரு கிச்சன்லயே இருக்க..?” நீளமான கவுண்டர்டாப்பில் அமர்ந்து வாய் அளந்து கொண்டு இருந்த ரஞ்சினியை கடிந்தான் அமர்நாத்.


“இன்னும் இரண்டு நாள்ல எனக்கு ரிஷப்சன்னு உனக்கு ஞபாகத்துல இருக்கா..? எனக்கு டிரஸ் அரேன்ஜ் பண்றேன்னு சொன்னல்ல.. அது என்னாச்சு..?” தன்னைக் கண்டிக்க வந்தவனை இவள் கண்டித்துக் கொண்டு இருந்தாள்.


“அமர், காலையிலிருந்து இருக்கிற காய், பழங்கள் எல்லாம் பேசியல் போடனும்னு காலி பண்ணிக்கிட்டு இருக்கா..!” என ராகுல் பட் தோழியை கம்ப்ளைன்ட் பண்ணினான்.


“இங்க பாரு, என்னை பகைச்சுக்கிட்ட, அப்புறம் ஹரிதாகிட்ட உன்ன பத்தி கேரக்டர் அஷசினேட் பண்ண வேண்டியது வரும்..”


“என்னடி மிரட்டுற..?” ராகுல் கேட்க,


“இந்த டிராக் வேறயா? நடக்கட்டும்.. அந்த கேங்க மொத்தமா இங்கே அரெஸ்ட் பண்ணிருவோம்..” குதூகலமான குரலைத் தந்தான் அமர்.


“ரஞ்சி, உனக்கான அடையர் வந்திருச்சு, அதோட கொஞ்சம் மெட்டீரியலும் வந்திருக்கு, எது வேணுமோ எடுத்துக்கோ.. உன்னோட ஹெல்புக்கு ஸ்ரேயா வருவா கூடவே அந்த துவாரபாலிகளும் வரும், ஆல்ரெடி மாதவன்கிட்ட சொல்லி அனுப்பிச்சிட்டேன், சீக்கிரம் வா..”


“அப்ப.. நானும் வருவேன்..” என ராகுல் செஃப் தொப்பியை கழற்றி கிளம்ப தயாராகினான்.


“டேய்.. சும்மா.. சும்மா போய் வழிஞ்சுகிட்டு நிக்காத.. வாலன்டியரா போய் நின்னா பொருக்கி மாதிரி பொண்ணுங்க ஃபீல் பண்ணுவாங்க டா..” ராகுலுக்கு புத்திமதி கூறினாள்.


“நீ சொல்றதை கேட்டா வாழ்க்கை முழுக்க ஒன்டிக்கட்டையாதான் வாழணும்.. போடி..” அவளின் அறிவுரையை மதிக்காமல் பேசினான்.


“எனக்கு என்ன.. நீயா போய் பேசினாலோ, பார்த்தாளோ வழிஞ்சானா தெரிவடா.. பொண்ணுங்கள எதிர்பார்க்க வச்சு, ஏங்க வைக்கணும். அப்புறம் நீ என்ன லவ்வ சொல்றது, அவங்களே வருவாங்க..”


“காதலிக்கிற பொண்ண ஏன்டி காக்க வைக்கணும்..?”


“நீ கேட்டா கேளு.. கேக்காட்டி போ..” இருவரின் பேச்சுகளும் காதில் விழுந்தாலும் குறுக்கே வராமல், உணவுகளை மேற் பார்வை செய்து கொண்டிருந்தான் அமர்நாத்.


இவர்களுக்கு முன்பு ஸ்ரேயாவின் கூட்டம் அங்கே நிறைந்திருந்தது.


“ஹேய்.. ரஞ்சி வா, உனக்காக டிரஸ் கடை திறந்து வச்சிருக்கான் பாரு உன்னோட ஃப்ரென்ட்..” என ஸ்ரேயா மகிழ்ச்சியை பகிர்ந்தாள்.


ஹரிதா, “ரஞ்சிக்கு செலக்ட் பண்றல்ல அப்படியே எங்களுக்கும்..” என ஹரிதாவுடன், மாளவிகா சேர்ந்து கொண்டாள்.


“அதுக்கு முதல்ல அமர்கிட்ட பெர்மிஷன் வாங்கணும், அவனோட ஷோரூம்ல இருந்து ஸ்பெஷலா இவளுக்காக செலக்ட்டிவா கொண்டு வந்திருக்காங்க..”


“அப்படினா.. இது நமக்கு வேண்டாம் ரே, ரஞ்சிக்கு மட்டும் பாரு..” என மாளவிகா முரண்டு பிடித்தாள்.


“அப்படிலாம் சொல்லக்கூடாது.. ஹரி பேபிக்கு பிடிச்சு இருக்குல்ல தாராளமா எடுக்கலாம், நோ அப்ஜக்சன்..” எவரின் அனுமதியும் தேவையில்லை என ராகுல் சொல்ல,


“இல்ல..” என அவனது பேபியில் வெட்கம் சூழ்ந்தது ஹரிதாவுக்கு.


அவர்களது பேச்சைக் கேட்டு வந்த அமர், தன்னிடம் அட்டையர் வாங்கினால் உரிமை எடுத்துக் கொள்வேன் என்ற துவாரபாலகிகள் எண்ணத்தை புரிந்து கொண்டான். ஆனால் மனதில் தன்னவளின் உரிமை தன்னிடம் தானே என முரண்டு பிடிக்கவும் செய்தது.


“பயர் ஃப்ளை, நோ இஸ்யூஸ். உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கலாம், அப்படியும் ஃபார்மாலிட்டி பார்க்கிறவங்க, என்கிட்ட உரிமை வேண்டாம்னு நினைக்கிறவங்க, பே பண்ணிருங்க..


கேர்ள்ஸ்க்கு மட்டும் இல்ல, பசங்களுக்கும் நிறைய கலெக்சன் இருக்கு, சோ உங்க பாய் ப்ரெண்ட்டுக்கும் தாரளமா எடுத்துக்கலாம்..” தலை கோதி ஸ்ரேயாவை ஓரப் பார்வை பார்த்தவன், மாளவிகா மறுப்பதால் அவளுக்கு கொட்டு வைக்கும் எண்ணத்தில் சொன்னான்.


“அப்புறம் பேபி, எனக்கும் நீ செலக்ட் பண்ணிரு..” கையோடு ஹரிதாவை இழுத்துச் சென்றான் ராகுல்.


“இவன பாரு.. நம்மளவிட ஃபாஸ்ட்டா இருக்கான்..” அமர் காதில் மாதவன் கடித்தான்.


சிறு மேஜையில் துணிகளை பரப்பி, “ரஞ்சி, உனக்கு லெகங்கா வேண்டாம், பியூசன் சேரிஸ் டிரை பண்ணு..” என தன் எதிரில் அமர்ந்து இருப்பவளுக்கு ஆலோசனை வழங்கினாள்.


“என்னோட ஸ்ட்ரக்சருக்கு அந்த மாடல் நல்லா இருக்குமா..?” கொஞ்சம் பூசின உடல் வாகு ரஞ்சனிக்கு, அதனால் கவலை தோய்ந்த பாவத்துடன் கேட்டாள்.


“யூ ஆர் லுக்கிங் சோ ப்ரட்டி.. ஆக்சுவ்லி லெகங்காவ விட பியூசன் சேரி ஷேப் எடுத்துக் காட்டும்.. கான்ஃபிடன்ட்டா டிரை பண்ணு..”


“ஒகே.. நீ இவ்வளவு சொல்ற.. டிரை பண்ணி பாக்குறேன். பட் என்கேஜ்மென்ட்டுக்கு உன்னோட சப்போர்ட் கண்டிப்பா இருக்கணும்..”


“டபுள் ஓகே.. இந்த இரண்டு கலர் சூஸ் பண்ணிக்கலாம், இதுக்கு மேட்சிங்கா இல்லாம கொஞ்சம் கான்ட்ரஸ்ட் கலர் தீபக்கு சூஸ் பண்ணா கரெக்ட்டா இருக்கும்” போட்டாவில் காட்டிய ரஞ்சியின் ஃபியான்சிக்கும் உடை தேர்வு செய்தாள்.


“இது நல்லா இருக்கு..” என ஸ்ரேயா கையில் நிற பொருத்தத்தை பாராட்ட,


“ஆமா, ரொம்ப நல்லாவே இருக்கு, தள்ளிட்டுப் போகலாம்னு இருக்கே..” அருகில் நின்று அமர் சொல்ல, அவனை தீ பார்வை பார்த்தாள் ஸ்ரேயா.


“என்ன சொன்ன..?” குரலை உயர்த்தினாள்,


“தள்ளி உட்கார்ந்தா எனக்கும் இடம் கிடைக்கும்..” ஸ்ரேயாவிடம் இறைஞ்சலாக கேட்டான்.


“ஏன்.. ரஞ்சி பக்கத்துல இடம் இருக்கே..” அவள் பேச்சிற்கு மறுப்பு இல்லாமல் ரஞ்சனி அருகில் போய் அமர்ந்தவன், பார்வையாலே அவளுக்கு குறுகுறுப்பு தந்தவனை, கீழ் கண்ணால் முறைத்துப் பார்த்தாள்.


அப்பார்வையும் அவனுக்கு காதலாக தோன்ற, “பயர் ஃப்ளை காலையில பொட்டு வைக்கும் போது ஏதும் பீல் பண்ணியா..?” நேற்று தந்த நெற்றி முத்தத்தை நினைவு படுத்தினான்.



அக்கேள்வியில் மைக்ரோ வினாடி முகம் சிவப்பேறி மீண்டது. அதை துளியும் வீணாக்காமல் இதயத்திற்குள் சேமித்துக் கொண்டான்.


“எனக்கு ஓர் டவுட், நீ ஏன் இவள பயர் ஃப்ளைனு கூப்பிடற?” ரஞ்சனி சந்தேகம் எழுப்ப, ஸ்ரேயாவுக்கும் அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்தது. கூகுள் வாயிலாக அறிந்து இருந்தாலும், அவன் மூலமாக தெரிந்து கொள்ள நோக்கினாள்.


“ஹவ் டு ஐ சே..? யூ டோன்ட் நோ இங்கிலிஸ்”


“தேவையான அளவு தெரியும், நீ காரணத்த சொல்லு மேன்..” எள்ளலாக சொன்னாள் ரஞ்சி.


“அந்த கண் இருக்குல கண்ணு.. அதுல வானத்து நட்சத்திரமே தோத்து போற மாதிரி, கூட்டமா திரியூற மின்மினி பூச்சியோட ஸ்பார்க் இருக்கும், அது இவ கண்ணுல ஓவர் லோடா தெரியும்.. அப்படியே அந்த பார்வையில இவள அள்ளிக்கிட்டா என்னனு தோணும்..” அவனின் கண்கள் முழுதாய் அவளை வாரிக்கொள்ள, ஆகப்பெரும் குற்ற உணர்வொன்று ஸ்ரேயாவை தொத்திக் கொண்டது.


“அதக்கபட்டது பயர் ஃப்ளை மீன்ஸ்..” ரஞ்சனி தொடங்க, இடையிட்ட அமர்,


“மின்மினி.. என்னோட மின்மினி..” தொடர்ந்த அவனின் சிணுங்கல் பார்வை அவளை இம்சிக்க,


“முதல்ல எந்திரி, இங்கே வந்து உட்காரு..” நேர் எதிரே அமர்ந்து கொண்டு தன்னை இம்சிப்பவனை கடிந்தாள்.


“நீயாதான் உன்கிட்ட கூப்பிடுற.. அப்புறம் என்னைய தப்பு சொல்லக் கூடாது..” என சில்மிஷ வார்த்தையைக் கையாண்டான்.


“மரமண்டை.. இப்படி பேசுறதை நிறுத்தி தொல.. மறுபடியும் இப்படி பேசுன வாய உடைச்சிருவேன்..” பல் இடுக்கில் அவன் காதுக்கு மட்டும் எட்டுமாறு திட்டிவிட்டாள்.


“பேச வேண்டாமா சரி, எனக்கு சூட் ஆகுற மாதிரி டிரஸ் செலக்ட் பண்ணிக் கொடு.. வாய திறக்கல..” என வாய் பொத்தி காண்பித்தான்.


“அதலாம் முடியாது..” அவளது மறுப்பை பொருட்படுத்தாமல்,


“முடியாதுனு சொல்ற அளவுக்கு அப்படி என்ன? முத்தமா கேட்டுட்டேன்..”


“ஐய்யோ.. என்னடா உனக்கு வேணும்..!!” அவனது தொடர்ச்சியான இத்தகைய பேச்சு சலிப்போடு, பயத்தையும் தந்தது.


“ஏன்டி இப்படி கேக்குற.. என..க்கு நிறைய வேணும், ஆனா அதலாம் கேட்டா, கண்டிப்பா இங்க கொலை கன்பார்ம்..” அவனது மயக்கும் வார்த்தையை விட்டு விட்டு, “எதுக்கு இப்ப டி போடுற..” கண்களை உருட்டி மிரட்டினாள்.


“ஓ.. ஆம்பள பையன டா போட்டா தப்புல்ல.. நாங்க ஒரே ஒரு டி போட்டது குத்தமா போச்சா... ஆண்கள் சுதந்திரமா பேசறதுக்கும் பேரிகேட் போட்டா எப்படி..?”


அவனது பேதம் இல்லா பேச்சை தவறாகப் புரிந்து கொண்டதாக கருதி, “நீ கூப்பிட்டது ஏதோ உரிமையில ஹஸ்பன்ட் மாதிரி பீல் ஆயிருச்சு..”


“கரெட்டா தான ஃபீல் பண்ணிருக்க..” தனக்குள்ள கிசுகிசுத்துவிட்டு,


“நீ கூப்பிட்டா எனக்கு பொண்டாட்டி ஃபீ..ல்லு வராதா..? வருதே..” உரிமை பேச்சை கிரகித்தவள், அதை உள்வாங்கிக் கொள்ள இயலாமல் தலை கவிழ்ந்தாள்.


“அ..து சாரி.. தப்புதான்!! நான் அப்படி யாரையும் சொன்னது கிடையாது, உன்ன எப்படி..? அப்படி கூப்பிட்டத ரியலைஸ் பண்ணவே இல்ல.. சாரி..”


“நான் தப்புன்னு சொல்லவே இல்லயே.. தாராளமா கூப்பிடு, உனக்கு இல்லாத உரிமையா...” என்றவன்,


குனிந்து இருந்த அவள் தலையைப் பிடித்து நிமிர்த்தி, “எதுக்கு தலை குனியுற.. என்னோட லைப் டைம் ஆசை, குறிக்கோள் எது தெரியுமா..?”


அவளுக்கு சிந்திக்கும் அவகாசம் இல்லாமல் அவனே, “இந்த கண்ணுல எல்லா உணர்வுகளையும் தரிசிச்சுக்கிட்டே இருக்கணும், ஆனா இப்ப குற்றவுணர்வ காட்டுது பாரு.. இந்த கண் ஐ டோன்ட் லைக் திஸ்.. நீ எந்த தப்பும் பண்ணல.. பண்ணவும் மாட்ட..!” அவனது பேச்சில் கசிந்த மனம் எதற்கு இந்த நம்பிக்கை என பார்த்தாள்.


“உன்ன நம்பாம..!! சில்.. இப்படியே உன் பக்கத்துல இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா.. ஐ வில் லாஸ் மை கன்ட்ரோல்.. நேத்து மாதிரி கண்ணோட நிக்காது..” என நகன்றான்.


அவனது நம்பிக்கை ஸ்ரேயாவை அசைத்துப் பார்த்தது, அவனது ஏக்கத்தை இவள் மேல் கொட்டி விட்டு செல்ல, பெண்ணவளுக்கும் சிறு ஸ்பரிசம் தேவைப்பட்டது.


அவளை விட்டு அமர் விலகவும் கண்களை மூடி பெருமூச்சை இழுத்து விட அவள் முயற்சிக்கும் நொடி, அழுத்தமாக, ஆழமாக மூச்சு காற்றைவிட விரைவாக நெற்றியில் இதழொற்றி நகன்றான்.


அமர் நகரவும் அங்கே வந்த இருமலர்கள், “செலக்சன் முடிஞ்சுச்சா பா.. இந்த ராகுல் என்னமோ சொல்லி வெளியே கூட்டிட்டு போயிட்டான்..” விருப்பமற்றவளாக பேசினாள் ஹரிதா.


“பிடிக்காம போன மாதிரி தெரியலயே, அவனவிட இவதான் ஓவரா வலிஞ்சா ரே.. இங்க வந்து இஷ்டமே இல்லாம போன மாதிரி பேசுறா.. இவள நம்பாத ரே..” உடன் சென்று வந்தவளுக்கு தோழியின் மனம் புரிந்தது.


“அப்படியெல்லாம் இல்ல ரே.. இவள நம்பாத..” வெட்கம் சிந்தியவளாக மாளவிகா சொல்ல,


“லைவ்வா பார்த்துமா நம்ப வேண்டாம்னு சொல்ற..” ஸ்ரேயா கேட்க,


“ஜிம் பாடி பார்த்து மொத்தமா கவுந்துட்டா..” என மாளவிகா கிண்டல் செய்தாள்.


அவளது வார்த்தை ஆழ்மன காயத்தை கீறிவிட, “ஹரிமா.. அவசரப்படாத, மனச அலட்டிக்காம வைக்க பாரு.. வாலான்டியரா லவ்னு சிக்கிக்காத..” என எச்சரிக்கை செய்தாள்.


ஏன்..? என மாளவிகா கேட்க வர, ஹரிதா அவளைத் தடுத்தாள். ஸ்ரேயாவின் முகம் சற்று நேரத்தில் சோர்வை அப்பிக் கொண்டது.


அவளது மன சஞ்சலத்தை மாயம் செய்யும் சிரிப்பொலி ஸ்ரேயா செவியை அடைய, அமரை தேடிய கண்கள் அவள் அறியாமல் காதலைக் காட்டியது.


அவனுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள், அதை கண்டு கொண்டானோ என்கிற சங்கடத்தில் அவன் கேட்டவுடன் மறுக்கவும் செய்திருந்தாள். இப்போது தந்துவிடும் மன உந்துதலில் எடுத்துக் கொண்டு சென்றாள்.


ஸ்ரேயா வருவதை தூரத்திலேயே கண்டு கொண்டவன் அவளை நோக்கி வசீகர புன்னகை சிந்தியபடி நகர்ந்தான்.


“இந்தா.. நீ கேட்டது.. சைனீஸ் காலர் சர்ட், டிரடிஷனல் அன்ட் மார்டன் இரண்டுக்கும் மேட்சா இருக்கும்”


“உனக்கு எப்படி வரணும், டிரடிஷன் ஆர் மார்டன்.?”


அவனை மேல் இருந்து கீழாக பார்த்தவள், “இரண்டுமே உனக்கு சுமாரா தான் இருக்கும்..”


“அஹான்..” அமர் ஏதோ சொல்ல வர, மாதவனை இழுத்துக் கொண்டு மாளவிகா வந்தாள்.


“ரே.. மேடிக்கும் நீயே டிரஸ் சூஸ் பண்ணிக்கொடு..” என அமரை முறைத்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.


அவள் எண்ணமோ ஸ்ரேயா, மாதவனை ஜோடி சேர்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. அவள் ஆசையை மறைத்து வைத்து அல்லவா தன் தோழிக்கு இணை சேர்க்க எண்ணினாள்.


அதில் சிறிதும் மாற்றம் வரக் கூடாதென்று துளிர்க்கும் ஆசையை கட்டுப்படுத்தினாள். மாளவிகாவின் எண்ணத்திற்கு முரணாக ஸ்ரேயாவுடன் அமரின் காதல் பேச்சு எரிச்சலைத் தர, அதை முறிக்க வேண்டி மாதவனை அழைத்து வந்தாள்.


ஸ்ரேயாவின் கவனம் முழுவதும் ஷர்ட்டை தூக்கிப் பிடித்து பொருத்தம் பார்க்கும் அமர்நாத் மீதே இருந்தது.


“ரே.. மேடிக்கு சூஸ் பண்ணிக் கொடு..” என மாளவிகா அடம்பிடிக்க,


“டேய், இந்த கொசு தொல்ல தாங்க முடியல.. இருந்து இருந்து இப்பதான் மனசு இறங்கி வந்தா, அது பொறுக்கலயா..!” என அமர், மாதவனிடம் புகார் படித்தான்.


“விடு மச்சான்.. சின்ன பிள்ளதனமா நடந்துக்குறா, ஆனா பாரேன் இதுவும் கியூட்டா இருக்கு..”


“அடுத்தவன் லவ்வ கெடுத்துக்கிட்டு இருக்கா இது உனக்கு கியூட்டா இருக்கா..? பேசாம கூப்பிட்டு கிளம்பிரு செம்ம கடியாகுது..” என பல்லைக் கடித்தான்.


“அப்ப எனக்கு சட்டை..” மாதவனுக்கு இவனை கடுப்பேத்தி பார்ப்பது சுவாரசியத்தைக் கொடுத்தது.


“உனக்கெல்லாம் இல்ல போடா..” சிறுபிள்ளையாக சிடுசிடுத்தான்.


“பொறாமைபடாத மச்சான், அப்படி பார்த்தா நீ ஊருக்குல்ல எவனையும் சட்டை போட விடமாட்ட போல..! ஸ்ரேயாவோட புரஃபஷனே இதுதான்..”


“இருந்தாலும் நீ ப்ளாக் லிஸ்ட்ல தான் இருக்க, உன்னையெல்லாம் நம்பமுடியாது..” என அமர் சொல்லி முடிக்க, ஹரிதா வந்தாள்.


“இந்தா அடுத்த துவாரபாலகி வந்தாச்சு..” சலித்துக் கொண்டவனை பார்த்து நக்கலாக சிரித்தான் மாதவன்.


“ரே.. உன்னோட ஃபோன எங்க வச்ச? அகி மாமா கால் பண்ணிக்கிட்டே இருந்திருக்கார், நீ எடுக்கலங்கவும் எனக்கு கூப்பிட்டார்..” என ஹரிதா ஃபோனைக் கொடுக்க,


“மாமா.. மாமா.. சாரி.. ஃபோன் ரூம்ல மறந்து வச்சுட்டேன்..” ஸ்ரேயா போனை பறித்த விதத்தையும் அவளின் கெஞ்சல் மொழியையும் அமர் ரசித்துக் கொண்டு இருக்க,


“ம்..மச்சான்.. ஆப்பு என் பக்கம் இருந்து இல்ல, ஆல்ரெடி அது உனக்கு வச்சாச்சுனு நினைக்குறேன்..” மாதவன் சொல்ல,


“இதுக்கெல்லாம் பயந்தா எப்படி? பொண்ணு அழகா இருந்தா போட்டி இருக்க தான் செய்யும்” அமர்நாத் கம்பீரமாக வார்த்தை பிரயோகித்தாலும் ஆழ்மனதுக்குள் பட்சி வார்னிங் கொடுக்கவே செய்தது.


 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top