சிதறாத முத்தங்கள் - 16

Advertisement

Sastika

Active member
Member
eiH036397777.jpg

தலைமுடி, காதணியை திருத்துவது போல் பாசாங்கு செய்து காதலர்களை பார்வையால் மொய்ப்பார்கள்’

அணிந்தவை திருத்தல் -16

அவனின் தோற்றம்.. இவள் தனக்கானவள் அல்ல என்ற நிதர்சனம் உணர்ந்து விலகி சென்றவனை இமை கொட்டாமல் பார்த்தாள். ‘நீ என்ன மிஸ் பண்ணலடா.. நான் தான்..! உன்ன மாதிரி ஓர் பையன் கிடைச்சும் தொலைச்சிட்டு இருக்கேன்..’ அங்கு இருந்து நகன்றவள் கடல் அலையின் மத்தியில் ஜம்பமாக அமர்ந்தாள்.

தலைவிதி யார் எழுதியது எனக்கு..? ஏன்??. ஒரே கருவில் ஒன்றாகவே ஜெனித்த சாஸ்ருதிக்கு அனைத்தும் நல்லதாக நடக்கும்போது தனக்கு மட்டும் ஏன்? உடன்பிறப்பின் மீது பொறாமை அல்ல இது மெல்லிய ஒப்பீடு அவ்வளவே..!

தந்தை எங்களை வெறுத்து ஒதுக்கிய போது அப்பா இல்லாத பிள்ளைங்க என்ற வார்த்தையை ஸ்ருதி அளவுக்கு பக்குவமாக என்னால் கடக்க முடியவில்லை, அதன் தாக்கத்தில் சில காலம் உழன்றேன். படிப்பு ஒன்றே குறிக்கோளாக சகோதரி ஓடிக் கொண்டு இருக்க அந்த வயதில் நான் ஏன் தடம் புரண்டேன்?.

அதற்குப் பிறகாவது
தெளிவடைந்திருக்க வேண்டாமா? கிட்டதட்ட இரண்டு ஆண்டு திருமண வாழ்வை எண்ணி தன்னையே நிந்தித்துக் கொண்டாள். ஸ்ரேயாவின் ஆதங்கம் உண்மைக் காதலை மனமார உணரும் போது தவிடு பொடியாகியிருக்கும்.

அவளின் மனம் ஊசலாடுவது போல் தேகமும் அலைகளோடு அல்லாடியது. ஸ்ரேயாவை காணாமல் தேடி வந்த இருமலர்கள் ரூமிற்கு அழைத்து வந்தார்கள். அங்கே வந்ததும் அவளது கால்கள் பால்கனியை நோக்கிச் சென்றது. இங்கு தானே அவனின் ரசனையான பார்வை தன்னை உரசும் என்ற எண்ணம் உதித்தவுடன் வறண்ட முகத்தில் விரிந்த புன்னகை ஒட்டிக் கொண்டது.

எப்படி என்னைப் பற்றிய புரிதல் அவனிடம் வந்தது. ஒற்றை வார்த்தையும் தன்னை இகழ்வாக பேசவில்லை, என்னை அவ்வளவு நம்புகிறானா..! பின் ஏன் அவனிடம் இருந்து நான் விலக வேண்டும். அமரை எதிர் பார்த்து அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அடமாக வீற்றிருக்கும் இவளுக்கு தொந்தரவு தராமல் தோழிகள் அங்கிருந்த நீள்விருக்கையில் உடலை சுருக்கிப் படுத்துக் கொண்டார்கள். நொடியும் இமை மூடாமல் ஆழ்கடலையும், கண் சிமிட்டும் நட்சத்திரங்களையும் கொண்டு தரிசான இதயத்திற்குள் ரசனையால் பூந்தோட்டமாக்க சீர் செய்ய தொடங்கினாள்.

விடியலிலும் அமர் வரவில்லை எனவும் இரவு முழுமையும் தூக்கமின்றி இருந்த பதட்டமும் சேரத் துவண்டு போய் மயங்கி சரிந்தாள்.

நண்பகலில் கண் முழித்தவள் மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருக்க, அவளின் வலது கையை பிடித்து மெல்ல நீவிக் கொண்டிருந்தாள் மாளவிகா.

“ரே.. எழுந்தாச்சுல, இப்பவாச்சும் அவ கையை விடு மாளு..” என அதட்டினான் மாதவன்.

“உங்களுக்கு என்ன..? எப்படி பயந்துட்டேன் தெரியுமா..?” என ஸ்ரேயா தோளில் சாய்ந்தாள் மாளவிகா.

“தப்பு நம்ம மேலதான் மாளு.. அவள தொந்தரவு பண்ண வேண்டாம்னு கடல்ல முங்கி எழுந்தவளுக்கு துணிய மாத்திவிடாம விட்டுட்டோம்.. அத்தோடு மன உளைச்சல் எல்லாம் சேரவும் சோர்வுல மயங்கிட்டா..” சொல்லிக் கொண்டே ஸ்ரேயாவின் கையில் பழச்சாறை கொடுத்தாள்.

அதை வாங்கி வாய் அருகே எடுத்த சென்றவள், “அமர் எங்க? வந்துட்டானா? என்னை வந்து பார்த்தானா?” அவளுக்குள் சலசலப்பும் படபடப்பும் ஒன்றாய் எழுந்தது.

“இல்ல ரே.. அவன் நேத்தே ஏதோ தனி தீவு பக்கத்துல இருக்காம்.. அங்க போயிட்டான், ரஞ்சி வந்து பார்த்துட்டு போயிட்டா.. இன்னைக்கு காலையில அவ பியான்சி தீபக் அப்புறம் ரிலேட்டிவ்ஸ் வந்துட்டாங்க.. சோ தே ஆர் பிஸி..” ஹரிதா சொல்ல,

“ஒ..” என்றவள், ‘அவன் வருவான்..! என்னை விட்டு எங்கு சென்று விடுவான்’ என்றது மனம். சோர்விலும் அவனின் நினைவு எட்டி பார்த்து விடுகிறதே..!

மற்றொரு நினைவுவந்து துளிர் விடத் தொடங்கியது, ‘அவனுக்கு டிவோர்சி வேண்டாம்னு போயிட்டானோ..!’

வாய்மொழியாக பகிராமல் சிந்தையிலே உழன்றதின் பலனும், சோர்வும் அது தந்த மயக்கம் பற்றாமல்போக, மீண்டும் மன போராட்டத்திலே புழுங்கினாள்.

அந்நேரம் அகிலன் வீடியோ காலில் வர, போனை ஆன் செய்து ஸ்ரேயா கையில் கொடுத்தாள் மாளவிகா. அவர்களுக்கும் நிலைமை கடத்தப்பட்டிருப்பது புரிந்தது.

“ஸ்ரேயா.. இப்ப எப்படி இருக்கு?” என பதட்டமடைந்தாள் சாஸ்ருதி.

“ம்..” தலையாட்டல் மட்டுமே தந்தாள்.

“டேக் கேர் ஸ்ரேயா.. நாங்க வேணா வரவா..?” அகிலன் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள்.

“வாயைத் தொறந்து பேசுடி..” பதட்டம் தெரிந்தது உடன்பிறப்பிடம் இருந்து.

“நான் நல்லா இருக்கேன் ஸ்ருதி..” ஸ்ரேயா சொல்ல, அந்த பக்கம் இருந்து குரல் வந்து, “அதான்.. நல்லா இருக்கேன்னு சொல்லிட்டால, என்கிட்ட போன கொடுடா..” அப்ஸரா போனை அகிலனிடம் இருந்து பறித்தாள்.

“ஸ்ரே.. யுவர் ஐஸ் ஆர் லுக்கிங் டெஸ்லிங்..” காதல் பிரவாகம் கொட்டிக்கிடக்கும் கண்களில் வெட்கம் சூழ வர்ணித்தாள் அபி.

அப்ஸராவைக் கண்டவுடன் அனைத்து உணர்வுகளும் வெடித்துச்சிதற, “அபி.. ஐம் இன் லவ். இவ்வளவு வலிக்குமா..! அவனுக்கு வலிக்குதுனு நினைக்கிறப்ப எனக்கு வலிக்குது அபி. அவன் வெளிபடுத்திய புரிதல்ல தெரிஞ்சது அவனோட காதல். ஆனா போயிட்டான் டிவோர்சி வேண்டாம்னு போயிட்டான்..” இறுதியில் குழந்தையாக வதனத்தை கோணி சொன்னாள்.

“இப்ப காதல எப்படி ஃபீல் பண்ற...? நான் சொன்னது சரியா.. காதலின் புரிதலோடு நேசம் வெளிப்படும். உனக்குள் நான், எனக்குள் நீ அப்படின்னு வாழ சொல்லிக் கொடுக்கும், இஸ் இட் ரைட்..” அபியின் வினாவுக்கு விழியால் ஆமென ஒப்புக் கொண்டாள்.

“மோர் ஓவர். நீ டிவோர்சினு அந்த பையனுக்குத் தெரியுமா? நீ சொன்ன பொய்யை நம்பி வெளிநடப்பு செஞ்சதுக்கு எல்லாம் அமர ப்ளேம் பண்ணாத.. நான் சொல்ற மாதிரி செய்..” அப்ஸராவின் ஆலோசனையின் பேரில் மாதவனை அமர் தங்கி இருக்கும் தீவுக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
******

அன்றைக்கு ஸ்ரேயாவிடம் பேசிவிட்டு கிளம்பியவன் முப்பத்தி ஆறு மணி நேரங்கள் கடந்தும் இன்னும் திரும்பவில்லை. ரிசார்ட்டிலிருந்து சிறு தொலைவில் தனி தீவு உள்ளது, நேற்றைய இரவு மாதவுனுடன் தீபக், ராகுல் அங்கே சென்று அமரை பார்த்துவிட்டு வந்தனர்.

இவர்களைக் கண்டதும் விரக்தியான பாவனை காட்டியவனை கண்டவர்களுக்கு நெஞ்சம் விம்மி விட்டது. மாதவனுக்கோ ஆள் மாற்றம் நிகழ்ந்து விட்டதோ என்னும் வகையில் ஓர் நாளில் மாறிப்போய் இருந்து அமர்நாத்தின் தோற்றம். அவனது உருவமே சொன்னது எத்தனை அழுதிருக்கிறான், எவ்வளவு துயரத்தில் மூழ்கி இருப்பான் என்று..!

புன்னகையும் துடுக்குத் தனமும் கலந்து இருக்கும் அவனின் பொழிவான முகம் வேறுபட்டு அகதியின் தோற்றத்தை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

“டேய் சாப்பிட்டியா இல்லையா..?” தீபக் கேட்க,

மறுமொழி இல்லை அவனிடம், “கிளம்பு போகலாம்.. இப்ப என்ன நடந்திருச்சு.. ஸ்ரேயா இல்லனா ஸ்ரீநிதினு போவியா..” குனிந்த தலை நிமிரவில்லை அமர்.

நண்பர்களின் பேச்சு காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை, அனைத்திற்கும் மெளனம் மட்டுமே பதிலாக இருந்தது.

“மச்சான்..” என்ற மாதவனின் அழைப்பிலே அமர் வெடுக்கென தலையை நிமர்த்தி விரக்தியான புன்னகையை உதிர்த்தான்.

அமரின் வதங்கிய முகம் வேதனை தந்தாலும், அவன் சொல்ல வந்த விவரத்தை பரப்பினான், “ஸ்ரேயா சொன்னது உண்மைதான், ஆனா சொன்ன எல்லாமே இல்ல..!”

“அவளுக்கு இருபத்தி ஓர் வயசுல கல்யாணமாகி இருக்கு, அடுத்த இரண்டு வருஷத்துல டிவோர்சும் நடந்திருக்கு, அப்புறம் குழந்தையும், ஸ்ரேயாவும் அவங்க அம்மாவோட பெங்களுர்ல இருந்திருக்காங்க, அவங்க அம்மா இறந்ததுக்கு பிறகு சென்னை வந்திருக்கா, இப்ப குழந்தைய அவங்க சிஸ்டர் பேமிலி கூப்பிட்டு போய் பார்த்துக்குறாங்க..” என சொல்லி முடிக்க, அமரிடம் அதிர்வோடு பதட்டமும் இடம் பெயர்ந்தது.

‘திருமணம் நடந்து விவாகரத்தும் முடிந்தது எனில், அவனுடன் அன்றைய வீடியோ காலில் மாமா.. மாமா.. கெஞ்சல் பேச்சு எதற்கு? ஒருவேளை மீண்டும் குழந்தைக்காக விவாகரத்தை ரத்து செய்துவிட்டு சேர இருக்கிறார்களோ..?’ என மனம் பந்தய குதிரையாக ஓடத் தொடங்கியது. அடுத்த வினாடியே, ‘சை.. எவ்வளவு கேவலமா யோசிக்கிறேன்.. ஓர் குடும்பத்த பிரிக்க நினைக்கிறேனா..? அவள பார்த்ததுல இருந்து எங்க தெளிவா சிந்திக்க முடியுது..! எல்லாம் தலை கீழாதான் இருக்கேன்...!’ தன்னையே கடிந்து கொண்டான்.

மாதவன் மீண்டும் தொடர்ந்தான், “நம்மகிட்ட காண்பிச்ச போட்டோல இருக்கிறது ஸ்ரேயாவோட ட்வின் சிஸ்டர் அண்ட் அவங்க ஹஸ்பண்ட்..”

”இரண்டு பேரும்.. டிவின்ஸா..??!” அமரின் அகவினாவை நண்பர்கள் கேட்டனர்.

“ம்.. அவங்களோட தான் கண்ணா இருக்கான். கண்ணா ஸ்ரேயா பையனோடு பேர், அப்புறம் எதுக்கு டிவோர்ஸ் ஆச்சுன்னு ஹரி, மாளுவுக்கும் தெரியாது..” மாதவன் முடிக்க,

“அது எதுக்காக வேணா இருந்துட்டு போட்டும்.. நீங்க டிரிப்ப முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்புங்க..” என ராகுல் பட்டென வார்த்தை விட,

“அதுக்கு வாய்ப்பு இல்ல ப்ரோ.. ரே டிரிப்ப எக்ஸ்டென்ட் பண்ண சொல்லிட்டா.. சோ மத்த கொலிக்ஸ் எல்லோரும் கிளம்புறாங்க..”

“ஓ.. அந்த த்ரி இடியட்ஸ்யோட ஓர் அரை வேக்காடு மட்டும் கிளம்பாம இருக்க போறீங்க..” இளக்காரம் குடி கொண்டது ராகுலின் குரலில்,

“அஃப்கோர்ஸ்.. ரே சொல்லி கேக்காம..!” மிக இயல்பாக சொன்னான் மாதவன். அந்த வார்த்தைக்கு மட்டும் அமர் புருவம் வளைந்தது. ‘அவ சொல்றத கேக்க நான் இருக்கேனே மனம் கெஞ்சியது.. எந்த உரிமையில்..!’

“அவ எதுக்கு தேவையில்லாத வேலை பார்க்கிறா, கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு கழுத்துல தாலி இருக்கிற மாதிரி, விவாகரத்து ஆன பொண்ணுங்களுக்கு காதுல, மூக்குல எதையாவது மாட்டிவிட சொல்லணும்..” ராகுல் புது விதிமுறை சொல்ல,

அருகில் இருந்த தேநீர் நிரம்பிய கப்பை பட்டென எடுத்து ராகுல் முகத்தில் ஊற்றினான் அமர்நாத்.

‘நல்லவேளை.. நம்ம வாய தொறக்கல..’ என தீபக் மனதில் ஓட,

“பரவாயில்ல ப்ரோ.. மச்சான் கோவப்பட்டாலும் ஆறிப்போன கோவமாதான் இருக்கு..” என மாதவன் அவனை வாரினான்.

தலையில் இருந்து வடிந்த தேநீரை வழித்தவன், “ஏன்டா.. இப்படி?”

“பின்னே... பொண்ணுங்களுக்கு சீர்திருத்த முறை கொண்டு வாரியோ.! ஆக்சுவலி நீ கிரேட் எஸ்கேப், பொண்ணுங்கனு பொதுவா சொன்னதுக்காக தான் இது.. நீ ரே பேர சொல்லி இருந்தா இன்னேரம் கடல்ல மிதந்துகிட்டு இருப்ப ப்ரோ...” என அமரின் காதலை புரிந்தவனாக மாதவன் சொல்ல கேட்டவர்கள் அமரைக் காண, சிலநொடிகள் போராடி தன்னை மீட்டுக் கொண்டான் அமர்..!

“கிளம்புங்க..” என்ற ஒற்றை வார்த்தையில் அப்புறப்படுத்தினான். அமர் மற்ற இருவருக்கும் நண்பன் என்றாலும், முதலாளி என்கிற வரையரையோடு மட்டுமே பழகிவிட்டனர். ஆனால் மாதவனுக்கு எந்த எல்லைக்கோடும் அமரிடம் தேவைப்படவில்லை.

இழப்பின் வலியில் இருந்தவனிடம், சில உந்துதல் வார்த்தைகளை தந்தான் மாதவன், “ரே.. இஸ் வெயிட்டிங் ஃபார் யூ..” என அமரை தனித்து விடுத்து கிளம்பி இருந்தார்கள்.

ஓர் பெண்ணைக் கண்ட நொடி மொத்த உலகையும் கைக்குள் அடக்கியது போல் காதலில் மெய்யுருகி நின்றேனே..! அவளது விழி எனது தேகத்தில் அடங்கிய மொத்த அணுவிலும் காதலை சேமித்ததே எப்படி..!?

எதிர்பார்த்து வந்த காதல் அல்லவே..! அவனை எதிர்நோக்கி தேடி வந்த அளப்பரிய காதல் ஸ்பரிசம் ஆயிற்றே, அதை தொலைக்க விரும்பாமல் தனக்குள் சிறை செய்தான். இதில் அவனது பிழை சிறு அளவும் இல்லையே..! இருப்பினும் குற்றம் செய்தவனாக நேற்றைய இரவிலிருந்து குற்றவுணர்வில் துவண்டிருந்தான்.

தன்னிடம் நேசத்தைப் பகிர்ந்த பெண்களின் கர்ம வினையே என்ற எண்ணமும் எழவே செய்தது. பெண்கள் காதலை உரைக்கும் விதம் பேரழகு, தன்னிடம் காதலை வெளிப்படுத்திய சமயம் அந்த பெண்களிடம் நன்முறையில் மறுத்து இருக்கலாம். ஆனால் நானோ அந்த பெண்களின் நேசத்தை அவமதித்த தருணத்தை கால மாற்றத்தில் உள்வாங்கிக் கொண்டான். ஏதோ தேக இச்சையில் மட்டுமே காதல் துளிர்க்கும் என எத்தனை மடத்தனமாக நேசங்களை கையாண்டு இருக்கிறேன் என உணர்வின்றி வெறித்தான்.

தன் நேசத்தின் ஒவ்வொரு அணுவாக அவளை செதுக்கிவிட்ட பின், உனக்கானவள் இல்லை என்றால் சில்லுசில்லாக உடைந்த இதயத்தை இணைக்க இயலாமல் தொய்ந்து போனான்.

அவளை நெருங்கும் போதெல்லாம் நிறைவில்லா உணர்வை அவள் விழிமொழி நிதர்சனம் தாமதமாக உரைத்துத் தொலைத்தது. தனக்கானவள் இல்லையா..! ஏற்கனவே மணம் முடித்தவளிடமா நெஞ்சம் நெகிழும். அத்தனை சுலபத்தில் அவளை தூக்கி கொடுக்கவும் மனம் ஒப்பவில்லை.

தூக்கம் தொலைத்து பசி மறந்து இருந்தவன், மாதவனின் ஒற்றை சொல்லில் தெளிவடைந்தான். ‘என்னிடம் சொல்லிவிட்டு செல்ல காத்து இருக்கிறாளோ..? மன்னிப்பு கேட்பதற்காக இருக்குமோ..? அவள் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்..! கள்ளமில்லா வதனம்... அவள் முகம் பிம்பமாக அங்கங்கு பளிச்சிட, காதலில் இளகும் நெஞ்சை கசக்கி எடுப்பது போல் பெரும்வலி எழுந்தது.

தன் வாழ்வில் ஸ்ரேயாவை அகற்றும் சிந்தையை முடிக்க இயலாமல், அவளை தன் வாழ்வில் இணைத்துக் கொள்ள வேண்டும் என முடிவை எடுத்த பின்னே இயல்பான மூச்சு வெளிவந்தது.

தன் காதலை தாங்கிக் கொள்வாள் என்கிற மமதையில் அடுத்த நாள் பயர் ஃப்ளைக்காக தயாராக தொடங்கினான்.

தனி தீவுக்கு சென்று அமரை சந்தித்த விவரத்தை மட்டும் கூறினான் மாதவன். எப்படி? அமரின் சோர்ந்த தோற்றத்தை வெளிபடுத்துவான், ஸ்ரேயாவின் நிலையைக் கண்டு தயங்கினான். ஆனால் ஸ்ரேயா தூர இருப்பவனின் வலியை இங்கிருந்தே கிரகித்தாள்.

“ரொம்..பா..வ.. சோர்ந்து போய் இருக்கானா?” என்றாள் மாதவனை பார்த்து,

“அப்ப..டி இல்ல...” பேச்சை இடை மறைத்து, “நான் வரலாம்னு நினைச்சேன், பட் அவனோட ப்ரெண்ட்ஸ் என்கிட்ட பேசுறதேயில்ல.. வர தயக்கமா இருந்துச்சு, ப்ளிஸ் உண்மைய சொல்லு மேடி..” என கெஞ்சினாள்.

“ம்.. அதிகமாவே. ஆனா கண்டிப்பா ரீசார்ஜ் பண்ண மாதிரி வந்து நிப்பான் பாரு..” என்றவன், ராகுல் வாங்கிய தேநீர் அபிஷேகம் முதற்கொண்டு பகிர்ந்து இருந்தான்.

ஹரிதா ஸ்ரேயாவை அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு சென்றாள். அங்கு வந்த சப்ளையரிடம், “எங்களுக்கு ஸ்பெஷல் மெனு வேணும், சோ கால் செஃப் ராகுல்” என்றாள் ஹரிதா. இங்கு வரும் விருந்தினருக்கு விருப்பமான உணவை தயார் செய்து தருவார்கள், அதற்கு கூடுதல் கட்டணமும் வசுலிக்கப்படும்.

இவளின் தோரனையை வைத்தே கண்டு கொண்டாள் ஸ்ரேயா, ராகுலுக்கு ராகு நேரம் ஸ்டார்ட் என்று..!

“ஹேய் ஹரி பேபி..” என்று ஆசையாக அருகில் வந்தவனை, பார்வையாலே எட்ட நிறுத்தினாள்.

“மிஸ்டர் பட்.. இங்க காருடியா ஸ்பெசல்னு கேள்விப்பட்டேன், சோ மேக் இட் ரிச் டேஸ்ட் வித் வொயிட் ரைஸ் அண்ட் ப்ரை ஃபிஷ் ஆல்சோ, மேக் இட்.. பாஸ்ட்..” என்றவளின் பேச்சு விந்தையாகத் தெரிய நகராமல் அங்கேயே நின்றான் ராகுல்.

“என்னாச்சு செஃப் பட், பொண்ணுங்க ஆர்டர் கொடுக்கக்கூட மேரேஜ் சர்டிபிக்கேட் காட்ட சொல்வீங்க போல..” என்றவளின் அழுத்தம் எதற்கு என பிடிப்பட்டது.

“அஃப்கோர்ஸ்.. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வருதுனா பாலோ பண்ணா தப்பு இல்லன்னு சொல்வேன். கல்யாணம் ஆன பொண்ணோ, டிவோர்ஸ் ஆன பொண்ணோ பார்க்கிறவங்களுக்கு தெரிய வேண்டாமா..! சில பொண்ணுங்களால பசங்க பாதிக்கப்படுறாங்கலே..!” ஸ்ரேயாவின் மீது பார்வை பதித்து எகத்தாளமாகப் பேசினான்.

“ஏய்.. என்ன ஓவரா பேசுற..?” ஹரிதா எகிறிக் கொண்டு வந்தாள்.

“நீ மட்டும் என்ன? கம்மியாவா பேசுன..? போடீஈ..” ஸ்ரேயா தோழியை இழுத்துக் கொண்டு செல்லும் போது திரும்பி அவனை இதழ் விரியா புன்னகையுடன் கடந்து சென்றாள். அந்த நகையில் என்ன குடியிருந்தது என அறிய முடியவில்லை ராகுலால்..!

அவள் சிரிப்பின் மெல்லிய நிழலுக்குள் அமர் மீது வைத்த நம்பிக்கை திகழ்ந்தது.



 

Advertisement

Advertisement

Back
Top