இல் வலியுறுத்தல் -17
பரவி இருந்த இருளின் இடையே தென்னை மரங்களின் சலசலப்போ, அலை ஓசையின் மெனக்கெடலோ அவளை துளியும் பாதிக்கவில்லை. ஆனாலும் அவள் மனம் சஞ்சலமடைகிறது, பின்னே இருந்து அவன் அடிக்கும் சீட்டிகையால்..!
ஏதோவொரு மரத்தின் வேரோ இல்லை ஏதேனும் தாவரத்தின் கொடியிலோ பின்னப்பட்டிருந்த அரை வட்ட ஊஞ்சலில் ஒய்யாரமாக முழு உடலையும் சாய்த்து கைகளை மடித்து தலைக்கு மேலே மடித்து தலையணையாக்கி படுத்திருந்தான். அவன் பார்வையும், பேச்சும் ஒரு புறம் கிறங்கவைக்க, அவன் பாடலோ தன்னை மயங்க வைக்கிறதே..! அவனிடம் துவள துடிக்கும் தேகத்தை மறைக்க வேண்டி, விலகி நின்று கைகளை தன்னுடலோடு அணைத்து நின்றாள்.
“ஒய்..! பயர் ப்ளை..! இல்லாத நிலாவ எங்கிருந்து ரசிக்கிறடி, அதுக்கு கண் முன்னருக்க என்ன ரசிக்கலாமே..!” என கையசைத்து அருகில் அழைத்தான்.
துவண்ட தேகத்தை இழுத்துக் கொண்டு அவன் அருகில் வந்தவளை, நுனி விரல் இழுத்து வெற்றிடையில் கை பதித்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.
அமர் தோளில் மெய்மறந்து மழலையாக தஞ்சமடைந்தவளை தலை வருடி தன்னுள் இறுக்கிக் கொண்டான்.
“அமரா...!”
“ம்.. சொல்லுடி..” ஸ்ரேயாவின் அருகாமையால் தேங்கியே வந்தது அவனின் குரல்.
“டேய்..”
“சொல்லுமா..” என்றவனின் அதரம் கீற்று புன்னகையை காட்டியது.
“இந்த சூழல பிளசண்டா ஆக்குற மாதிரி பாட்டு வேணும்..” தவிப்பாய் அவள் கேட்க,
“பாட்டு மட்டும் போதுமாடி..?” தாபமாய் காதோரம் முணுமுணுத்தான்.
“இப்போதைக்கு போதும்.. பாடு..” அவளின் அணைப்பில் இருந்து விலகவில்லை, வார்த்தையில் மட்டும் வெளிப்பட்டது.
‘கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா...
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி
செல்லம்மா
அடி நீதான் என சந்தோசம்
பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்செல்லாம்
நான் கேட்கும் சங்கீதம்
உன் புன்னகை
நான் சேமிக்கின்ற செல்வமடி...”
பாடலை முடித்தவன், “நல்லா பாடுறேனா..?”
“ம்.. பேசிகலி யூ பார்ன் பார் மீ, தென் ஃப்போர்ஸ் டூ சிங்கர் டா..”
“அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது...!” புருவம் உயர்த்தி கண் விரித்து கேட்டான்.
“ரொ...ரொம்ப..”
தன்பால் சொக்கிப் போய் இருப்பவளை மனக்கிடங்கில் சேமித்து வைத்து, அவள் இதழை நெருங்கினான். உதடு வழியாக ஆரம்பித்த இதழ் தீண்டல் கழுத்து வழியாக பயணித்து மீண்டும் இதழை நாடினான். இவன் சரியான ஊர் சுத்தி போல், அவளை எப்போது தீண்டினாலும் ஊர் வலம் அழைத்து செல்கிறான்.
கனமான போர்வையை விலக்கி எழுந்தவளின் கன்னம் தொட்டு காது வரை சிவந்து போய் இருந்தது.
“எழுந்திட்டியா ரே.. என்னாச்சு, இன்னைக்கு இவ்வளவு நேரம் தூங்கிகிட்டு இருக்க..” என்றாள் ஹரிதா அவளின் சிவப்புயேறி இருந்த வதனத்தைக் கண்டு,
“வாட் ஹேப்பன்ட் ரே.. நைட் சாப்புட்ட ஃபுட் எதுவும் ஒத்துக்கலையா..?” பயத்தில் படபடத்தாள் மாளவிகா.
ஸ்ரேயாவின் இதழில் படிந்திருந்த சிரிப்பும், கண்ணில் எட்டிய வெட்கமும் இருமலர்களை நிதானத்துக்கு வர செய்திருந்தது.
“ஹேய்.. நாட்டி, செம்ம ரொமான்ஸ் போல கனவுல..!” என தோழிகளின் சீண்டலில் மீண்டும் வெட்கம் சூழ நங்கையவள் போர்வைக்குள் முகத்தை மறைத்து வைத்துக் கொண்டாள்.
இருமலர்களின் காதை துளைத்தது ஸ்ரேயாவின் சினுங்கல். சட்டென போர்வையை விலக்கியவள்,
“இன்னைக்கு கண்டிப்பா வந்துருவான்ல..?” பரிதவிப்பாய் கேட்டவளிடம்,
“அவனுக்கு வேற சாய்ஸ் இல்ல ரே..” என்றாள் மாளவிகா.
“இன்னைக்கு அவனோட ப்ரெண்ட் என்கேஜ்மென்ட் சோ கண்டிப்பா வருவான்..” இரு தோழிகளும் ஆமோதிப்பாக ஏற்றுக்கொண்டனர்.
வெயில் குறைந்து குளிர் பரவியிருக்க, பெண்கள் மூவரும் ரஞ்சனி, தீபக் நிச்சயதார்த்தத்திற்கு ஆயத்தமானர்கள்.
அவர்களுக்கு முன் ஸ்ரேயா சிலீவ்லெஸ் ப்ளவுசில் பூக்கள் பின்னலிடப்பட்ட டிசைனர் புடவையின் ஒற்றை மடிப்பு தோளில் சரிய மீப்பெரும் அழகாய் தயார் ஆனாள்.
“நீங்க இரண்டு பேரும் பாஸ்டா ரெடியாகி பங்ஷன் ஸ்பாட் வந்துருங்க, நான் போய் ரஞ்சிக்கு ஹெல்ப் பண்றேன்..” அகன்று ரஞ்சி அறையை நோக்கிச் சென்றாள்.
உறவினர்கள் சூழ்ந்து இருக்க, ரஞ்சினி புன்னகையில் அமர்ந்திருந்தாள். ஸ்ரேயாவைக் கண்டவளின் வதனம் ஓர் வினாடி சூம்பி மீள,
“நவ் ஆர் யூ ஓகே..?” என்றவளின் குரலில் முன்பிருந்த இணக்கம் இல்லை, அதை உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “பர்ஃபெக்ட்.. யூ நீட் எனி ஹெல்ப்..” மறுப்பு வெளிப்படும் என அறிந்தே கேட்டாள்.
“தேங்க்ஸ், இவங்க பாத்துக்குவாங்க..” என்றவளின் பதிலால், எதிர் பார்த்தேன் என்பது போல் சிறு நகையுடன் நகன்று இருந்தாள் அமர்மீது வைத்த நம்பிக்கை அவளின் சிரிப்பில் மெளனமாக பிரதிபலித்தது. ஸ்ரேயா சிரிப்பிற்கு பின் மறைந்திருந்தது வலி அல்ல பெருமிதமே.! வெளியேறிவளின் விழியோ எதிரில் வலம் வரும் காதல் ஜோடிகளில் பதிய, அவள் பார்வையில் சுவாரஸ்யம் நீராடியது.
“ரே...! அமர் வந்துட்டான், ஸ்டேஜ் அரேன்ஜ்மென்ட் பார்த்துகிட்டு இருக்கான், சீக்கிரம் போ..” அவளை விரட்டினான் மாதவன்.
ஓட்டமும், நடையுமாக சென்றவள், அவனின் பார்வையை தரிசிக்க நின்றாள். அவனோ அவளைக் கண்டு கொண்டதாக தெரியவில்லை, இயல்பாக ஸ்ரேயாவைக் கடந்து சென்றான்.
தன்னை கடந்து சென்றவனை உதடு சுழித்து, ‘மாட்டுவ ராசா.. அப்ப பார்த்துக்குறேன்..!’ என்றவளின் பாதம் இருமலர்களை நோக்கி நகன்றது.
ரஞ்சினி, தீபக் நிச்சயதார்த்த விழா தொடங்க, கடல்காற்றின் இசையில் கலந்த அவளது மனம், அவன் வரவை எதிர்பார்த்து விழிகள் சுழன்றன. அவள் தேர்ந்தெடுத்த ஆடையில் அவனை காணும் ஆசை மட்டுமே ஸ்ரேயா உள்ளத்தை நிரப்பியது.
அவளது எதிர் பார்ப்பை ஒதுக்கி படு கேசுவலாய் டி-சர்டில் வந்தவனை கண்டு சோர்ந்து போனாள். விழாவின் இடையில் அமரை பாட அழைக்க, பேராவலுடன், சிறு சலிப்பும் எழுந்தது ஸ்ரேயாவுக்கு, ‘கண்ணே.. மணியே..னு பார்வையோடு ஒப்பிட்டு பாட போகிறான்’ என நினைக்க,
ரஞ்சிதமே.. ரஞ்சிதமே.. என்று தளபதி பாடலை பாடியவனைக் கண்டு முறைத்து வைத்தாள். ஸ்ரேயாவை கண்ட இருமலர்கள் குறுநகை தர, அதில் அவளின் முறைப்பு இவர்கள் பக்கம் நகல, சிரிப்பொலி பன்மடங்காக உயர்ந்தது.
அதன்பின் மிரளும் இசையில் குழு நடனம் தொடங்கியது, ஸ்ரேயா விருப்பமின்றி அமர்ந்திருக்க, அவள் காதுகளை அடைந்தது அந்த சீட்டிகை சத்தம். ‘இது.. எனக்காக பாடியது..’
‘கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே..’ அவனது சீட்டிகைக்கு, இவள் பாடல் வரிகளை சொல்லிப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அமரை தேடி தனித்து வந்தவளுக்கு அவன் உருவம் கண்ணில் படுவதாக தெரியவில்லை. ‘இங்க சத்தம் கேக்கல.. ஒருவேளை பிரம்மையா இருக்குமோ..! ம்..மச்.. அவன் வந்ததிலிருந்து கொஞ்சமும் கண்டுக்கவே இல்ல, அவன் பார்வை கூட என்மேல பட்டமாதிரி தெரியல..!’ என தேங்கி நின்றவள், அசெளகரியம் தந்த புடவையை மடித்து மூன்றாக தோள்கள் மீது சரியவிட்டிருந்தவளின் வெற்றிடையை பிடித்து தன் பக்கமாக நிறுத்தியிருந்தான்.
தடைபட்ட மின்சாரம் மீண்டது போல் பிரகாசம் முகத்தில் ஒளிர, “கோபம் போயிருச்சாடா...” என்றவளின் விழியில் அடைக்கலம் தேடியவன் மேலும் இடையை அழுத்தி தன்னருகில் நெருக்கி உணரத் தொடங்கினான்.
அவனது கைகளின் அழுத்தம் தாங்காமல், “கையை எடு..” என்றவள் மீட்டாத வீணையாக நெளிந்து அவன் பிடியில் இருந்து நகன்றாள்.
ஸ்ரேயா விலகல் அமருக்கு அவஸ்தை தர அவள் தலையோடு தலை முட்டி நின்றவன், “ப்ளீஸ்..” அவனின் மூச்சு அவளின் ஸ்பரிசத்தில் தஞ்சம் அடைய நிதானித்தவன், “ஏன்டி.. அவ்வளவு அவசரம்.. உனக்காக நான் காத்துக்கிட்டு இருக்கப்ப.. உன்ன நான் பார்த்துக்க மாட்டேனா..!?” அவளின் முடிந்த திருமணத்தைக் குறித்து கேட்டான்.
கண்கள் மூடி முகத்தோடு முகம் ஒட்டிய ஆண் குரல் வேதனையை விழுங்கி வர, பட்டென விழி வழி அவனிடம் மன்னிப்போ, மறுப்போ பகிராமல் தன்னுடன் அவனை அணைத்துக் கொண்டாள். அவனுக்கும் அது இன்றியமையாததாக மாற, அவளின் முதுகை ஆதூரமாக வருடினான்.
“அது..” விளக்கம் அளிக்க வந்தவளின் இதழ் மேல் ஒற்றை விரல் வைத்து மறைத்தான்.
“துவாரபாலகிகளுக்கே தெரியாத உன்னோட பாஸ்ட், எனக்கும் தெரிஞ்சுகணும்னு அவசியமில்ல..”
“யாரு.. துவாரபாலகி..?”
“ம்.. இரண்டு அட்டபூச்சிங்க உன்ன ஒட்டிக்கிட்டே திரியுமே..” என்றவனிடம் சிறு பொறாமை புலப்பட்டதோ.
மாலையில் தன்னைக் காண மூச்சு வாங்க வந்தவளின் பேரழகில் திக்கு முக்காடி போனான். இப்பொழுது நெருங்கினால் இவளை அள்ளிக் கொள்ளும் விதமாய் வேரிட்டு இருந்த தாபத்தை தவிர்க்க அவளை தவிர்த்து இருந்தான். ஆனால் அவளின் வடிவம் பிம்பமாக, நிழலாக கற்பனையில் உலா வர, அவள் மீதுள்ள காதலில் துவண்டு போனான்.
'அவளின் அழகு.. புடவையின்
ஒவ்வொரு மடலிலும் ஒளிர,
புடவையில் அற்புதமாய் பூத்திருந்தாள் அவள்,
கண்டவன் நிமிடமேனும் மூச்சு மறந்து நிற்க,
அழகு என்பது சொல்லாகக் கேள்விப்பட்டவனுக்கு,
அவள் உருவம் கொடுத்து நின்றாள்.'
பல இரவுகளை தனிமையின் துயரில் கழித்தவள், இன்று அதே தனிமையில் மெய்யுருகி அவன் தீண்டிய இடையை அவளின் குளிர்ந்த கரங்களால் அந்த வெம்மையை விரட்ட, அந்த வெம்மை நகன்று இதயத்தில் குடி பெயர்ந்திருந்தது.
இரண்டு தினங்களாக ஸ்ரேயாவிடம் பாராமுகம் காட்டினான் அமர்நாத். அவர்கள் செல்லும் இடத்திற்கு எல்லாம் இவனும் உடன் செல்வான் என்ற எதிர் பார்ப்பை உடைத்தான். ஸ்கூபா டைவிங், ஸ்னோர்கெலிங், பேராசைலிங் போன்ற சாகச நடவடிக்கை அவர்கள் செல்லும் நேரம், வேலை பளு இருப்பது போல் காட்டிக் கொண்டான்.
“ஏன் மச்சான்.. அங்க வந்தா மனசு தடுமாறி ஸ்ரேயா கால்ல விழுந்துடுவேனு பயமா இருக்கா.?” என மாதவனும் எள்ளல் பேச்சில் கேட்டு விட்டான், அமரிடம் பதில் இல்ல மெளனமே.
ஸ்ரேயாவும் எளிதில் விடவில்லை, எங்கு சென்றாலும் அவனை சீண்டிக் கொண்டும், அவனின் நேசத்தை தூர் வாரிக்
கொண்டிருந்தாள்.
ஹரிதா கிச்சனுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, “ரே.. இங்க இருக்கான்..” என சமிக்கை தர,
“எக்ஸ்கியூஸ் மீ..” என்றாள் ஸ்ரேயா.
ஓர் நொடி முகத்தில் பொலிவு வந்தாலும் உடனே திருத்தி அசட்டையாக, “எஸ்..” என்றான் அமர்.
“எங்களுக்கு வொயிட் ரைஸ், காருடியா ஃபிஷ் அண்ட் ஃப்ரைட் ஃபிஷ் ஃப்ரை ஸ்பெஷலா வேணும்..” ராகுலை பார்த்துக் கொண்டே ஹரிதா மெனு சொல்லி முடிக்க,
“ம்.. ராகுல் மேக் இட் பாஸ்ட்..” என்றான் அமர்நாத்.
“அவரா...!” என ஆச்சரியமாய் கேட்டாள் ஸ்ரேயா.
“ஏன்..? ஹீ இஸ் பெஸ்ட் இன் ஃபிஷ் குக்கிங்..” அமர் சொன்னான்.
“அதுக்கில்ல..” ஹரிதா இழுக்க,
“செஃப் ராகுல் குக் பண்றதா இருந்தா மேரேஜ் சர்ட்டிபிக்கேட், இல்லனா டிவோர்ஸ் ப்ரூஃப் கேப்பாரு..” என ஸ்ரேயா முடிக்க, என்ன நடந்திருக்கும் என யூகித்தவன் பாத்திரத்தில் இருந்த மைதா மாவை ராகுல் தலை மீது கொட்டி விட்டு,
“இன்னும் இருபது நிமிஷத்துல அவங்க கேட்ட ஆர்டர் வித் ஸ்பெஷல் ஸ்வீட் அவங்க ரூம்ல இருக்கணும்..” என்று அங்கிருந்து அகன்றான்.
“கோபப்பட வேண்டிய அமரே புரிஞ்சுகிட்டு நடந்துக்கிறப்ப, சில தொடுப்பு எல்லாம் ஓவரா பேசிக்கிட்டு இருக்கு..” முகம் முழுவதும் மாவோடு நின்ற ராகுலை சாடினாள் ஹரிதா.
“ப்ரெண்டுக்கு சப்போட்டா இருக்கறது தப்பில்ல.. ஆனா எந்த விளக்கமும் கேக்காம ஓர் பொண்ண குத்தம் சொல்றது சரியில்ல ப்ரதர்..” என்றவள் அன்று உதிர்த்த சிரிப்பை இன்றும் தந்துவிட்டு செல்ல, அப்போதே ராகுல் உணர்ந்தான்.
‘அமர் எப்போதும் ஸ்ரேயாவை தவறாக நினைக்க மாட்டான்னு, அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கு.. பட் பட்டுக்கு தெரியாம போச்சே..’ எண்ணியவன், ஸ்ரேயாவின் சிரிப்பை உணர்ந்து, மன்னிப்பு கேட்டான்.
அமரும், மாதவனும் அளவளாவிக் கொண்டிருக்க, அங்கே உணவு தட்டுடன் சென்றாள் ஸ்ரேயா.
“மேடி..! மாளு எங்க..?” என்றவளின் பார்வை அமரை துளைக்க, அவளின் விழியை ரசித்தானே தவிர பேசிக் கொள்ளவில்லை.
“அவ இங்க வரல ரே..” மாதவன் பொறுப்பாக பதில் சொன்னான்.
‘அவ எப்படி இங்க வருவா.. மூணு நேர சாப்பாட்டையும் சேத்துல்ல சாப்பிட வச்சுருக்கேன், மலைப் பாம்பு மாதிரி சுருண்டு கிடப்பா, திண்ண தீனி அப்படி..!’ செய்த குறும்பை நினைத்து மனதிற்குள் சிரித்தாள்.
“ஒ..” என்றவளை, தாண்டி சென்றான் அமர்.
“ஆஸ் யூசுவல் மேடி, நிறைய சாப்பிட்டேன். ஃபுட் வேஸ்ட் பண்ணக் கூடாதுல்ல.. அதான் அவள தேடிக்கிட்டு இருக்கேன். ஹரிமா கோட்டா ஓவர்.. நெக்ஸ்ட் அவதான்..” செல்பவனுக்கு கேட்கும் படி சத்தமாக சொல்ல, அவனின் நடை நிதானத்துக்கு வந்தது.
“மாளு இங்க வரலப்பா.. இன்பேக்ட் மார்னிங் இருந்து அவள பாக்கவும் இல்ல..”
“மேடி..! நீ ஃபுட் சேர் பண்ணிக்கிறியா..?” என்றவளின் பேச்சு, அமரின் முதுகை துளைத்தது.
“ஸ்யூர்.. இதுல என்ன இருக்கு? ஆக்சுவலி எனக்கும் சாப்பாட்ட வேஸ்ட் பண்றது பிடிக்காது..” மேடி சொல்ல,
“தேங்க்யூ மேடி.. நான் சாப்பிட்டதுல இந்த ஸ்வீட் செம்மையா இருந்துச்சு.. நீயும் டேஸ்ட் பண்ணு..” என ஸ்பூன் மூலமாக எடுத்து அவன் வாய் அருகே எடுத்து செல்ல, பின்பக்கமிருந்து மாதவன் வாயை அடைத்தான் அமர்.
“எவ்வளவு நேரமா கூப்பிட்டுகிட்டு இருக்கிறது.. பாரு விடிஞ்சே போச்சு..” என அவனை இழுத்துக் கொண்டு சென்றான் அமர்.
“என்ன..! அவ்வளவு நேரமா ஆச்சு..!” என அப்பாவியாக கேட்டான் மாதவன்.
அவனின் செய்கையால் தன் முதுகிற்கு பின்னே இருப்பவளின் சிறகடிக்கும் புன்னகையை உணர்ந்த அமரின் ஆண்மையில் வெட்கப் புன்னகை துளிர்த்தது.
Last edited:
