சிதறாத முத்தங்கள் - 20

Advertisement

Sastika

Active member
Member
eiH036397777.jpg
‘காதலர்கள் மனத்தினால் உரிமை கொண்ட பிறகு மறுக்காமல் அவர்களிடம் இருந்து பொருளை பெற்றுக் கொள்வது’

கொடுப்பவை கோடல் -20

“ஏன்டி மூஞ்சிய இப்படி வச்சுருக்க..?”
“மம்.. என் முகரயே இப்படிதான்..!”
“இத பாத்தா அந்த மேடி லவ் பண்ணான்.. சோ சேட்..” என ஹரிதா பரிதாபம் காட்ட,
“அது இருக்கட்டும், அந்த பட் விவரம் என்னாச்சு.. ஏதோ பாவ மன்னிப்பெல்லாம் கேட்ட மாதிரி தெரிஞ்சுச்சு..?” என மாளவிகா இவளை வம்பு பண்ணினாள்.
“கேட்டான்..! ப்ரெண்ட் மேல உள்ள அக்கரையில பேசிட்டானாம், என்னை ரொம்ப பிடிக்குமாம்.. லவ் புரபோஸ் பண்ணான்..” எவ்வித உணர்வுமின்றி பதிலளித்தாள்.
“நீ என்ன சொன்ன..? ஜிம் பாய மன்னிச்சிட்டியா..!” மன்னித்து விடுவாளோ என்கிற ஆவேசம் வெளிப்பட்டது மாளவிகாவிடம்.
“சாரி சொன்னான், அத டீல்ல விட்டுட்டேன்” பட்டும் படாமலும் சொன்னாள் ஹரிதா.
“லாஸ்ட்டா என்ன சொல்றான்..?” அறிந்து கொள்ளும் ஆர்வம் மாளவிகாவிடம்,
“என்னோட ஃப்ரெண்டுக்காக நான் ஸ்டாண்ட் பண்ணது சரினா, அவன் பண்ணதும் சரின்னு சொல்றான். அது சின்ன விஷயமில்லனாலும் நீ என்ன மன்னிக்க முயற்சி பண்ணுனு சொன்னான்.! என்னோட மன மாற்றத்துக்காக வெயிட் பண்றானாம். சரிதான் போடானு.. நான் வந்துட்டேன்..”
“ராகுல் சொல்றது நியாயமா இருந்தாலும், அவன் பேசுனது நம்ம ரே..ய. சோ வெயிட் பண்ண வைப்போம். பட்-க்கு பட்னு ஒகே சொல்லிறக் கூடாது” பொறுமையை இன்னும் பொறுமையாக கையாளுவதை மேலோட்டமாக சொல்லி முடித்தாள் ஹரிதா.
“அப்படி பார்த்தா நானும் அமர பேசி இருக்கேனே..!” ஆராய்ந்த்தாள் மாளவிகா.
“நீயும் மன்னிப்பு கேட்டிரு..!”
“எத.. நம்ம ரே-வ அவனுக்கு விட்டுக்கொடுத்ததே பெருசு, இதுல சாரி வேற கேக்கணுமா..? கேக்..கணுமோ..!” மன்னிப்பு கேட்பதில் விருப்பம் இல்லாவிட்டிலும், ஸ்ரேயாக்காக கேட்க வேண்டுமோ என்கிற எண்ணமும் மாளவிகாவுக்கு பிறந்தது. முன்பே குவிந்து கிடந்த அந்த முகம், இப்போதோ சோர்ந்து சுருங்கி போயிருந்தது.
“என்ன கைஸ்.. சாப்பிட வராம இங்க இருக்கீங்க..?” என மாதவன் அங்கு வந்தான். அவனிற்கு பதில் சொல்லாமல் முறைத்துவிட்டு முகத்தை தூக்கி வைக்க, “என்னவாம்..?!” என ஹரிதாவிடம் கேட்டான். விழியசைவிலே ஸ்ரேயா அறையை காண்பித்து பதிலை பகிர்ந்தாள் அவளும்.
“இங்க பாரு மாளு.. லவ்வர்ஸ் கையை பிடிக்கக் கூடாதா..!” ஸ்ரேயாவும், அமரும் வந்ததிலிருந்து பிரியாமல் கை கோர்த்தபடியே இருந்தது சிறு கடுப்பை உண்டாகியது.
“கை பிடிக்கிறது தப்புல்ல.. கை பிடிச்சுக்கிட்டே இருக்கிறது ரொம்ப தப்பு.! என்கிட்ட உட்கார்ந்து பேசக் கூட இல்ல தெரியுமா, லவ் பண்ணா ப்ரெண்ட் மறந்திருமா..! என்னமோ உலக அழகன லவ் பண்ற மாதிரி பிடிச்சுக்கிட்டே திரியுறா..?” என மன உளைச்சலில் பிதற்றினாள்.
“அமர் அழகன் இல்லைனா சொல்ற..? பொய்யா தெரியல..!” என மாதவன் சீண்டினான்.
“அவ கண்ணுக்கு உன்ன தவிர யாரும் ஸ்மார்ட்டா இருக்க மாதிரி தெரியல போல..!” அவ்வுளைச்சலிலும் சிறு வெட்கம் மாளுவை பிடித்துக் கொண்டது.
“ரே.. இன்னும் ரெஃப்ரெஷ் ஆகலையா..?” மாதவன் கேட்க,
“இல்ல.. இப்ப வந்துருவானு நினைக்கிறேன்”
“அவ வந்தா நீங்க போங்க, நான் வரமாட்டேன்..” முரண்டு பண்ணினாள் மாளவிகா.
வெளீர் மஞ்சள் நிறத்தில் டிரைபல் சித்திரங்கள் சிவுப்பும், கருப்புமாக சிதறியிருக்க கழுத்தை மறைத்து ஒபன் ஷோல்ட்ரான சிலீவ்லெஸ் சல்வரில் வெளியே வந்தவள், “ஹைய் செல்லுஸ்.. ஹைய் மேடி.. அமரா எங்க போனான்?” கேட்டாளே தவிர பதிலை எதிர்பார்த்து அங்கு நிற்கவில்லை. இப்பொழுது மாளவிகாவுடன், ஹரிதாவுக்கும் தோழியின் செயலால் கோபம் மேலிட்டது.
“அமரா.. அம்..” அவனின் அலுவல் அறை கதவை திறக்க, உள்ளே அவனுக்கு எதிரே தம்பதியர் வீற்றிருந்தனர்.
“வா..வா..” ஸ்ரேயாவை அழைத்தவன், “இவங்க தமிழ் கபுல்ஸ், பேபி மூன் செலிபிரேட் பண்ண வந்திருக்காங்க..” இளம் தம்பதியரின் அறிமுகபடலத்தை முடித்து, ஸ்ரேயாவை தோளோடு அணைத்து, ”மை வைஃப்..“ அறிமுகம் செய்ய, ஓர் நொடி அவள் தேகம் சிலாகித்து அடங்கியது. அதை உணர்ந்தவன் அணைத்தபடியே நாற்காலி விடுத்து, நீள்விருக்கையில் அமர செய்து அவனும் அருகில் அமர்ந்து கொண்டான்.
“ஆக்சுவலி ப்ரோ.. ஹாஸ்பிட்டல் வசதி இருக்கிற மாதிரி ரெசார்ட் ஆல்ரெடி புக் பண்ணியிருந்தேன், ஆனா இவளுக்கு அந்த ஹோட்டல் பிடிக்கல, இஃப் எனி எமர்ஜென்சி ஹாஸ்பிட்டல் போற மாதிரி ரோட் ஃபெசிலிட்டிஸ் வேணும், இவ ஆசைப்படுற மாதிரி சுத்திலும் பீச் வியூவும் இருக்கிறதால, அங்க.. இங்க சுத்தி லாஸ்ட்டா இப்ப உங்க முன்னாடி இருக்கோம்” என தங்களது வேண்டுக்கோளையும், தேடலையும் எடுத்து வைத்தான்.
“நீங்க கரெக்ட்டா சூஸ் பண்ணிருக்கீங்க ப்ரோ.. நீங்க கேக்குற எல்லா ஃபெசிலிட்டிஸூம் செஞ்சு தர சொல்றேன், டோன்ட் ஓரி..” நம்பிக்கை தந்தான்.
“நவ் ஐ ஆம் கேரிங் எய்ட் மந்த் பேபி, எங்க இரண்டு பேர் வீட்டுலேயும் பேபி மூனுக்கு அலோவ் பண்ணல, ரொம்ப அடம்பிடிச்சு வந்திருக்கோம், சோ ஐ வான்ட் சம் திங் ஸ்பெஷல் டேஸ் பார் அவர்ஸ்..” மேடிட்டிறிருந்த வயிற்றில் கைகளை தாங்கிக் கொண்டே தனது எதிர்பார்ப்பை சொன்னாள்.
“சுயூர் சிஸ்டர்.. ஈவ்னிங் ஸ்டேன்ட் அப் காமெடி ப்ரோக்ராமுக்கு ஆன் டைம் வந்திருங்க, ஸ்டே ஹேபி.. யூ வில் ரியலி என்ஜாய் திஸ் பிளேஸ்..” என இருவரையும் வழி அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்று வெகு நேராமாகியும் ஸ்ரேயா பார்வை அந்த கர்ப்பிணி பெண்ணின் மீதே இருந்தது. அவளை தூக்கி தன் மடியில் அமர்த்தியும் சிந்தனை என்னவோ கர்ப்பிணி பெண்ணை தாங்கி இருந்தது. “என்ன யோசனை..?” காதோரத்தில் கிசுகிசுத்தான்.
“அவங்க வயிறு எவ்வளவு பெருசா இருக்குல்ல..! வயித்துக்குள்ள ஓர் பேபி இருக்குற பீல் அந்த ஸ்ட்ரக்சர்ல தெரியுது தெரியுமா..! குண்டா, பாடி ஸ்ட்ரக்சர் இல்லனாலும் செம்ம அழகா இருக்காங்க, ஓர் மாதிரி கண்ணுக்கு நிறைவா..” அப்பெண்ணை பற்றிய பேச்சில் தயக்கமும், ஏக்கமும் ஸ்ரேயாவிடம் வெளிப்பட்டது.
“ம்..ம்..” என்றவன் அவளது ஓப்பன் சோல்டரில் இதழ் பதித்து முன்னேற, கூச்சம் ஏற்பட்டவள், “அம.ரா.. சாப்பிட போலாம், நீ மார்னிங் சரியாவே சாப்பிடல..”
“ஆமா சக்கரக்கட்டி.. அதிக பசில இருக்கேன். முதல்ல பசிய போக்கிடுவோமா..!” என்றவன், அவள் சுதாரிக்கும் முன் அவள் இதழில் பசியாறினான்.
கர்ப்பிணி பெண்ணுடனே அன்றைய பொழுதை அளவளாவி கழித்தாள் ஸ்ரேயா, ‘உங்களுக்கு அடிகடி வாந்தி வருமா? ரெகுலர் செக்கப்புக்கு போறீங்கிளா? பாப்பா உதைக்குமா? உங்களுக்கு எந்த மாதிரி சாப்பிட பிடிக்குது? உங்க ஹஸ்பன்ட் ரொம்ப கேரிங் போல, அடிக்கடி கிப்ட்ஸ் கொடுப்பாரா? கலர்புல்லா இருக்கு உங்க வளையல், அதுவும் அந்த சவுண்ட்ஸ் சோ குட்ல.. தப்பா நினைக்காதீங்க உங்க வயித்துல கை வச்சு பாத்துக்கவா..?’ என்று நச்சரித்தவளை விநோதமாக பார்த்தான் அமர்நாத்.
மாலை அமர் ஏற்பாடு செய்திருந்த ஸ்டாண்ட் அப் காமெடி பார்வையாளரின் கலகலப்புடன் ஆரவாரமாக நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.
“அங்க என்ன பாக்குற? இந்த என் கையை பிடிச்சுக்கோ..” என குழந்தையாக வம்பு பண்ணினாள் மாளவிகா. இருமலர்களுக்கு மத்தியில் அமர்ந்தவள் இருவரின் கையையும் மென்மையாக பிடித்துக் கொண்டாள். ஸ்ரேயாவின் பூ முகம் மலர்ந்து நிரந்தரமாய் இதழ்களில் புன்னகை வீற்றிருந்தது.
“ரே.. ரொம்ப அழகா இருக்க.. பேஸ் செம்ம குளோயிங் வேற.. அழகி..!” என ரசித்தும், ஆராய்ந்தும் ஹரிதா கூறினாள்.
“எங்க.. நான் பாக்குறேன்..” ஸ்ரேயா முகவாயை பிடித்து தன் புறம் திருப்பி ஆராய்ந்தாள் மாளவிகா.
“ஆமா.. ஐ லேஸ் போடலியே.. அப்புறம் எப்படி கண் ஜொலிக்குது.. இல்ல இவ கண் சிரிக்குது, இந்த மெளன சிரிப்பு யாருக்கு..?” என்றவள், சுற்றுப்புறம் பார்த்துவிட்டு, “அதோ நிக்குறானே அவனுக்காகவா..!” என்றவள் ஸ்ரேயா விரலோடு விரலாக கோர்த்து இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். தன் தோழியின் சிறு பிள்ளைத்தனமான பொறாமையில், இதழ் சுருக்கி இருவரின் கன்னத்திலும் முத்தம் பதித்தாள். தொலைவிலிருந்து பார்த்தவனுக்கு மூக்கு விடைக்க தன்னருகில் கூப்பிட்டான்.
எங்கு செல்வது இவள்? இருமலர்களின் பிடியில் சுண்டெலியாக சிக்கிக் கொண்டு அல்லவா இருக்கிறாள். அவள் வர மறுக்க மேடையேறியவன், பாட்டின் முன்பாகத்தை ரேப் பாடகனிடம் ஒப்பித்துவிட்டு, பின்பாதியை இவன் தொடர்ந்தான்.
‘பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா..
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா..
பெண்ணே எந்தன் கண்ணே பார் உள்ளே லட்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும் லட்சங்கள் கோடியாய் மாருதம்மா..
பெண்ணே பார் ஓர் முத்தம் தா
இந்த பக்கம் வா, என்னை அணைத்திடவா
பெண்ணே ஒற்றை முத்தம் போதுமா?
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா?
அடி என்னவென்று சொல்லம்மா
என நெஞ்சம் துடுக்குது..’ அமரின் காதல் வரியில் ஸ்ரேயாவிற்கு வெட்கம் பிச்சு திண்ண, தோழியின் தோள்களில் வெட்கத்தை மறைத்து புதைந்தாள்.
“கண்ண மையமா வச்சு இத்தனை தமிழ் சாங் இருக்கா என்ன..? அப்படி உன் கண்ணுல எத மறைச்சு வச்சுருக்கனு எப்ப பாரு கண்ணே.. விழியேனு.. பாடிக்கிட்டு இருக்கான். சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்..” இருமலர்களின் சந்தேகத்துக்கு பதில் அளிக்க இயலாமல் சங்கோஜத்தில் ஓடி ஒளிந்துக் கொண்டாள் ஸ்ரேயா.
மூவரின் தனிமையில் இடைபுகுந்தான் ராகுல், “சாரி சிஸ்டர் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா, உங்களுக்காக ஸ்பெஷல் டிஷ் பண்ணேன்..” என ஸ்ரேயா முன்பு சில உணவு பதார்த்தங்களை அடுக்கினான்.
“தீடீர்னு எதுக்கு இதெல்லாம், சம்திங் ஃபிஷ்ஷி..” மாளவிகா சந்தேகமாக கேட்க, ஹரிதாவோ எனக்கு எதுவும் தெரியாதுப்பா..! உதாசீனத்தை தோள்களில் காட்டினாள்.
“மாளு.. நோ வென்ஜன்ஸ்” அதட்டினாள் ஸ்ரேயா.
“சாப்பாட்டுக்கு வெஞ்சனமா ஃபிஷ் இல்லனு சொன்னா.. இதுக்குப் போய் அவள திட்டுறது டூ மச், அடுத்தவங்களுக்காக எங்கள கார்னர் பண்ணாத சொல்லிட்டேன்..”
“ஒ.. அப்படியா..! யாரு அந்த தேர்ட் பேர்ஷன், எனக்கு அப்படி இங்க யாரையும் தெரியுல..! நம்ம மூணு பேர், அப்புறம் ராகுல் பிரதர் இருக்காங்க, உங்கள பிரதர்னு சொல்லலாம்ல..?” என இருமலர்களுக்கும் பதிலளித்து, ராகுலிடம் சந்தேகமும் கேட்டாள்.
“கண்டிப்பா, தேங்க்ஸ் சிஸ்டர்..” தன்னை மன்னித்ததோடு, நண்பிகளிடம் தனக்கு சாதமாக பேசவும், குற்றவுணர்வில் உணர்வு பூர்வமாக கண் கலங்கிப் பேசினான்.
“முடியாது..! இவங்க ஓட்டுற பாசமலர் படத்த என்னால பாக்க முடியாது, நான் கிளம்புறேன்..” என வெளியேறிவள், நின்று, “நீயும் வா.. அவங்க அண்ணன், தங்கச்சி உறவை உரம் போட்டு வளர்க்கட்டும்..” ஹரிதாவையும் சேர்த்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
“ரியலி சாரிங்க.. நான் அப்படி பேசியிருக்கக் கூடாது, ஆக்சுவலி பல நாடுகள்ல இருந்து பெண்கள் இங்க வருவாங்க, அவங்கள்ல யாருக்கும் மயங்காதவன் உங்க பின்னாடி சுத்தி திரிஞ்சான். நீங்க ரிஜக்ட் பண்ற சிட்சுவேஷன் வரவும் அவன் ரொம்ப உடைஞ்சுட்டான், அதான் உங்க மேல கோபத்துல சிடுசிடுனு நடந்துக்கிட்டேன்..” அடுத்து பேச தயங்கியவனாக, ஸ்ரேயா முகம் பார்த்து நின்றான்.
“புரியுது.. உங்க நட்பதிகாரம் என்னை புல்லரிக்க வைக்குது..” குற்றவுணர்வில் இருந்தவனை கேலி செய்து மீட்டெடுத்தாள்.
“சிஸ்டர், நீங்க இரண்டு பேரும் பக்கா மேட்ச்.. ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்ததா சொல்வாங்கள்ள அப்படி இருக்கீங்க..” ஸ்ரேயா, அமர் மனப்பொருத்தத்தை சுட்டிக் காட்டினான்.
“தெரியும்..” என்றவளின் வதனம் தன்னவனின் பேச்சில் செம்மையை அப்பிக்கொண்டது.
“ஹரிதா சமாதானம் ஆகவும், உங்கள புரிஞ்சுக்கவும் கொஞ்சம்டைம் கொடுங்க ப்ரோ.. ஷீ வான்ட் டு ரியலைஸ் ஹெர்செல்ப்..” தனக்காக பார்த்து தோழி வாழ்வை கெடுத்துக் கொள்வாளோ என ஸ்ரேயா பேசினாள்.
“நிச்சயமா..! சாப்பாடு உங்களுக்காகதான் குக் பண்ணேன், டேஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருந்துச்சுனு..” இருவருக்கும் இடையில் இருந்த மனஸ்தாபம் விலகி புதிய உறவுக்கு தொடக்க புள்ளியாக இருந்தது. ஸ்ரேயா இதழில் புன்னகை வீற்றிருக்க, ராகுல் சிரிப்பும் கலங்கமற்று பரவியது. இருவரின் சிரிப்பும் ஒரு புதிய உறவின் நிமிடக் கையெழுத்தாக மாறியது. ஹரிதாவுடன் உறவை சுமுகமாக, மனமார கையாளவேண்டும் என ராகுல் தீர்மானித்தான்.
அறையை விட்டு வெளியேறி இருந்த துவாரபாலகிகள், “எனக்கு இப்ப சாப்பிடணும்.. பசிக்குது” ஹரிதா சிணுங்க,
“அதலாம் வேண்டாம், காபி குடிப்போம்..” மறுப்பு தெரிவித்தாள்.
மாளவிகா சூட்சமம் புரிய, ”அடியேய்.. ரூம்க்கு இல்ல, கேன்டின் போய் சாப்பிடுவோம்..”
“ஒகே..” ஹரிதா கைகளை இறுக்கமாக பற்றினாள் மாளவிகா.
அவளிடம் இருந்த கைகளை விடுவித்து தனது இடையோடு அரவணைத்துக் கொண்டு, “உனக்கு இருந்தாலும் இந்த கெட்ட எண்ணம் ஆகாதுடீ.. அங்க போனா என்ன கடிச்சு சாப்பிடவா போறான்..”
“பின்ன.. நீயும் ரே மாதிரி உன் ஆளோட சுத்தக் கிளம்பிட்டா நான் என்ன பண்றது..?”
“அப்படி நடக்கயெல்லாம் வாய்ப்பில்ல.. இப்ப இருக்கிறதுல நான்தான் சிங்கிளா சுத்திக்கிட்டு இருக்கேன். நோ சான்ஸ்..” நிலைமையை விளக்கினாள் ஹரிதா.
“நீங்க இரண்டு பேர் மட்டும் தான் எனக்குனு இருக்கீங்க, உங்கள யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.. புரிஞ்சதா..” அன்பு தொல்லையை அழகாக காட்டினாள் மாளவிகா.
 

Advertisement

Advertisement

Back
Top