சிதறாத முத்தங்கள் - 25

Advertisement

Sastika

Active member
Member
‘காதலர்கள் பிரியப் போவதாக சொல்லும் போது கலங்கி விடுவது’


பிரிவுரை கலங்கல்-25


‘மொட்ட வெயில்ல உட்கார வச்சுட்டு போனோமே, என்ன பண்ணுவானு யோசிச்சாங்களா? எருமைங்க.. ஆள் இருக்குனு ஆள் ஆள்க்கு ஜோடியா கிளம்பியாச்சு, சிங்கிளா இருந்தே நம்ம காலம் முடிஞ்சிரும் போல!
பசிக்குதே.. பேசாம எழுந்து போய் மெஸ்ல சாப்பிட்டு ரூமுக்கு போய் தூங்கிட்டாயென்ன?’ என புலம்பியவள் முன்னாடி தேநீர் கோப்பையும், எண்ணெயில் குளித்து வெளிவந்த முட்டை போண்டாவும் இருந்தது. அதை எடுக்க எத்தனித்தவளின் முன்
ராகுல் கம்பீரமாக அமர்ந்தான்.


அவன் உடையின் நேர்த்தியே சொல்லியது எத்தனை அழகன் என்று.. அவன் உடலின் வலிமை என்னை பாரு.. பாரு.. என அவளிடம் கும்மாளமிட்டது. ஓர் நொடி தடுமாறினாள் ஹரிதா.


“தேங்க்ஸ் ப்ரோ..” என்று நான்காக வெட்டிய முட்டை போண்டாவில் மசாலா தூவிய ஒரு மெல்லிய துண்டை எடுத்து கடிக்காமல் வாயில் சரித்தாள்.


“உனக்கு இப்படி சாப்பிட பிடிக்கும்னு சிஸ்டர் சொன்னாங்க.. சோ ஐ மேக் இட்..” அவள் ரசனையாக உண்பதை கண்டவனுக்கு அவள் உரைத்த ப்ரோ மூளையில் பதியவில்லை


“எனக்கு பிடிக்கும்ங்கிறது உங்க சிஸ்டருக்கு எப்படி தெரியும்..?”


‘முட்டை போண்டா சாப்பிட்டா உருட்டி விட்ட போண்டா மாதிரி இருப்பாங்க, இவ என்னனா நெட்டை குச்சி மாதிரில இருக்கா..! இதுல எகத்தாளமா பேச்சு...’ மனதில் ரசனையான கேலியில் மூழ்கினான்.


“ஹரி பேபி.. சிஸ்டர்னு நான் சொன்னது ஸ்ரேயாவ..”


“ஒ.. அந்த திடீர் பாசமலரா..!” தேநீர் சுவையோடு எள்ளல் பேச்சு பேசினாள்.


“காதல் மட்டும் சட்டுனு முளைக்கும், பிரதர் பாண்டிங் திடீர்னு வராதா பேபி.. எப்படி நமக்கு லவ் வந்துச்சோ அதைவிட அதிகமாவே ஸ்ரேயாவோட சிஸ்டர் ரிலேஷன் பிடிச்சிருக்கு..”


சைக்கிள் கேப்பில் தாங்கள் காதலர்கள் என பதிவு செய்தான் ராகுல் பட்.


“ஹலோ.. நாம எப்ப லவ் பண்ணோம், சைட் அடிக்கிறது எல்லாம் லவ் லிஸ்டுல வராது மேன்..” ஜென்-z இலக்கணம் தந்தாள்.


“அப்ப சைட் அடிச்சனு ஒத்துக்குறல, அதே சிக்னல் டிஸ்கனக்ட் ஆகாம பாத்துக்கோ, ஆட்டோமெடிக்கா லவ் கிரேடு போயிரலாம்..” காதல் படிகளை வகுத்தான்.


“இங்க பாரு தேவையில்லாம பேசாத.. எனக்கு பொறுமை ரொம்ப கம்மி, எனக்கு உன்ன பிடிக்கல.. ஜஸ்ட் பிசிக் அட்ராக்சன் லைப்க்கு ஒத்து வராது..” சிந்தையில் ஸ்ரேயாவின் கடந்தகால வாழ்க்கை நிழலாடியது.


“உனக்கு என்னைய பிடிக்கும், ஆனா தடுக்கிறது என்ன? ஸ்ரேயாவ நான் பேசினதுக்கு தான இந்த கோபம், அந்த டைம் அமரோட நிலமையை பாத்ததுக்கு அப்புறம் என்ன பண்ண சொல்ற..? அது தெரியாம பேசிட்டேன், தப்புதான் இல்லனு சொல்லல, ரியலி சாரி..” பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு நின்றான்.


“நீ தெரியாம பேசிருக்கலாம், ஆனா பேசுனது என்னோட ஸ்ரேயாவ. அவள பத்தி உனக்கு என்ன தெரியும்? நமக்கு அறிமுகம் இல்லாதவங்கள பத்தி ஜட்ஜ்மென்ட்டலா பேசுறது தப்பு ராகுல். சப்போஸ் நமக்கு மேரேஜாகி நாளைக்கு உங்க பேரண்ட்ஸோட சண்டை வந்தா அப்ப பொண்ணுதானங்கிற தாட்டுல மட்டமா பேசமாட்டேன்னு நான் எப்படி நம்புறது. காதலுக்கு அடிப்படையே நம்பிக்கைதான். அது உன்மேல எனக்கு வரல, வருமானு தெரியுல, ஸோ டோன்ட் போர்ஸ் மீ.. நீங்க உங்க வழிய பாருங்க ப்ரோ..” அவன் மரமண்டையில் பதிய அழுத்தி சொன்னாள்.


“நீ மன்னிக்காட்டி போ.. அது உன்னோட விருப்பம், ஆனா வெறுப்பு ஏத்தி பாக்கக்கூட ப்ரோனு சொல்லாத. இப்படி வீம்பா நீ இருந்தா நம்ம குழந்தைங்க என்ன பண்ணுவாங்கனு யோசிச்சியா?”


“வாட்..!” என அதிர்ந்தவள், தெளிந்து, “கனவா..! அது உங்க ப்ராப்ளம் ப்ரோ..”


“நான் டிசைட் பண்ணிட்டேன், என் குழந்தைக்கு நீ மட்டும் தான் அம்மா..” அவளின் ப்ரோ என்ற அழைப்பை மதிக்காமல் பேசினான். அவளின் வேக மூச்சை கவனித்தவன்,


“ரசனைக்கு.. ரசனை.. சீண்டலுக்கு.. சீண்டல்! நம்ம செம்ம பேர்-ல..” அவள் வெறுப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.


“போடா லூசு..” ஹரிதாவின் உதாசினம் ராகுலை சோர்வடைய செய்ய,


“ஏதோ தெரியாம பேசிட்டேன், இனி ஜென்டர் டாமினேஷன் பேச மட்டும் இல்ல பாக்கவும் மாட்டேன்.. உனக்கு இன்னும் நம்பிக்கை வரலனா சொல்லு நான் வேணா ஆபரேஷன் பண்ணி பொண்ணா மாறி வந்துறேன்.. உன்னோட லெஸ்பியன் லைப்னாலும் எனக்கு ஓகேதான்.. நீ யோசிச்சு சொல்லு, ஆனா, குழந்தை..” என நிறுத்தியவனின் பேச்சை வெறுத்து, எழுந்து செல்ல துவங்கியவளின் பார்வையில் பட்டது, ரெசார்ட்டை நோக்கி வரும் அமரின் அன்னை.


திரிபுரசுந்தரியை கண்டவள், “ஹைய் ஆன்ட்டி.. எப்படி இருக்கீங்க?”


“ம்.. நல்லா இருக்கேன்மா, ஸ்ரேயா எங்க?”


“வந்தவுடனே, அமர விசாரிக்காம ரேவ தேடுறீங்க.. என்ன விஷயம் ஆன்ட்டி உங்களையும் மயக்கிட்டாளா?”


ராகுலிடம் திரும்பி, “அமர் எங்க? நான் பாக்கணும்” என்றார்.


“அதோ.. வந்துட்டாங்க ஆன்ட்டி..” என அவள் காட்டிய திசையில் அமரா, ஸ்ரேயாவும் இருவரின் கைகளும் கோர்த்துக் கொண்டு வந்தனர்.


அமர் அன்னைய கண்டவனுடன் உற்சாகமாய் வர, அருகில் வந்தவர்களின் முகத்தை பார்க்காமல் அவர்களின் பிணைந்து இருந்த கைகளை பார்த்தபடி இருந்தார்.


“அம்மே.. எவட இவ்வளவு தூரம்.. என்ன பாக்கவா இல்ல..” ஸ்ரேயாவின் பக்கம் கண் அசைத்து அவளையா? என்ற தொனியில் கேட்டான்.


அவன் பேசியது எதுவும் அவர் காதில் விழாமல் போக, ஸ்ரேயா அவரின் தோள் தாங்கி, “அ..ம்மா..” என்றாள்,


அவளை நேர் கொண்டு பார்த்தவர், ‘சின்ன பொண்ணா இருக்கா.. இவளுக்கா கல்யாணம் முடிஞ்சு குழந்தை இருக்கு, என் மகன் வாழ்க்கையில இப்படி ஒருத்தி வர தேவையில்லை..!’ என எண்ணினார்.


“அமர்.. ரூம்க்கு போறேன், டயர்ட்டா இருக்கு..” என்றவர் ஸ்ரேயா, ஹரிதாவை கண்டு இதழ் விரியா புன்னகை தந்து விடைபெற்றார்.


நாளை தீவில் இருந்து கிளம்புவதற்கு இருமலர்கள் பேக்கிங் செய்தப்படி இருக்க, ஸ்ரேயா வதனம் சோம்பலில் தொய்ந்திருந்தது.


“என்னவாம்.. எப்படியும் நாளைக்கு அமர் இவகூடவே கிளம்பி வரப்போறான், அப்புறம் பிரிஞ்சு போறமாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்கா.. ஒருவேளை கூடவே அமர் அம்மாவும் வர போறாங்கனு வருத்தப்படுறாளோ..” மாளவிகா சீண்டினால் தன் தோழியை,


“அவங்க நேர்ல வந்ததே கையோடு கூப்பிட்டு போய் கல்யாணத்தை முடிக்கவாயிருக்கும்..” தோழியுடன் சேர்ந்து ஸ்ரேயாவை கடுப்பேத்த இறங்கினாள்.


“ஏய்.. ஒரு ரெசார்ட் ஒனர் கல்யாணம் அவ்வளவு சிம்பிளா பண்ணிருவாங்களா என்ன?” மாளவிகா சொல்ல,


“ரீசார்ட் ஒனர் அமர்..ஆ..”


“எஸ்பா.. எனக்கே மேடி தான் சொன்னான். அன்னைக்கு ரீசார்ட் அவனோடதுன்னு சொன்னா நாம தங்க வந்திருக்க மாட்டோமில்ல, அதுக்காக மேனேஜர்னு சொல்லி ஏமாத்திருக்கான், ப்ராடு..”
மாளவிகாவை முறைத்தாள் ஸ்ரேயா,

“எனக்கே இன்னைக்கு தான் தெரியும் ரே, முதல்ல தெரிஞ்சிருந்தா நானே சொல்லிருப்பேனே..” அமரின் ரகசியம் மறைக்கப்பட்டதுக்கு கோபப்படுக்கிறாள் போல என்றே நினைத்தார்கள்.


“ம்ச்சச்.. அவன் எதுக்கு வேணா ஒனரா இருந்துட்டு போறான், அவன ப்ராடுனு எதுக்குடி சொன்ன?” சிறுபிள்ளையாக சீண்டத் தோன்றியது.


“அடிப்பாவி..!” மாளவிகா ஆச்சரியமாக அவளை கண்டாள்.


“எங்க மாமா நாங்க எப்படி வேணா கூப்பிடுவோம்.. நீ இதுல தலையிட்டா பஞ்சாயத்து கூட்டி போடுவோம் பார்த்துக்கோ..!” தோழியின் வழியிலே ஹரிதாவும் வம்பு செய்தாள்.


“பாத்தைல.. அவன்தான் உனக்கு முக்கியமா போயிட்டான்.. போடீஈ..” என அறையைவிட்டு வெளியேறினாள் ஸ்ரேயா.


“இவ என்னடி.. அங்கிட்டு போனா முட்டுறா, இங்கிட்டு வந்த உதைக்கிறா..”

“எல்லாம் காதல் மாயை..!”

அறைக்கு வந்த திரிபுரசுந்தரி, அன்றைய நிகழ்வுகளை மனவோட்டத்தில் இருந்து மீட்டார்.


அமர்நாத் மனசோம்பலில் தனி தீவுக்கு சென்றிருந்த போது அவனது எண்ணிற்கு அழைத்தவருக்கு மறுமொழி இன்றி போக, அடுத்த நாளும் மகனிடம் இருந்து அழைப்பு வராமல் போகவும் ரஞ்சினிக்கு கூப்பிட்டார். அவளோ அமரின் காதல், ஸ்ரேயாவின் திருமணம், குழந்தையுடன் இருக்கும் அவளை பற்றி அறிந்து தனி தீவுக்கு சென்றதை கூறினாள்.


திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற ஒருத்தியின் மேலா இவனுக்கு மீளக்காதல் வரவேண்டும் என தாயாக நொடித்தார். அதன் பின்பு அமரின் காதலை ஸ்ரேயா ஏற்றுக்கொண்டது வரை ரஞ்சினி வாயிலாக பகிரப்பட்டிருந்தது.


இதை தடுக்கவென கங்கனம் கட்டி கடல் கடந்து வந்தார்.


ஸ்ரேயாவை தனியாக வரவைத்து தன் மகனை விட்டு விலகி சென்று விடுமாறு கூறினார். புரியாத பாவனையில் பார்த்தவளிடம், “அமரோட அப்பாவுக்கு நான் இரண்டாம் தாரம். அவனோட அம்மா உத்ரா. பெரும் சங்கீத குடும்பத்துல இருந்து வந்தவங்க, ஓர் நிகழ்ச்சில உத்ரா குரல்லையும், அழகுலையும் மயங்கியே கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.

ஆனா விதி கேன்சர் மூலமா வந்து பிரிச்சிருச்சு, உத்ரா இறப்புக்கு அப்புறம் கொச்சினுக்கு வந்தவர பிடிச்சு போய் நான் தான் தேடி போய் கல்யாணம் பண்ணேன். குழந்தையா இருந்த அமரையும் என் பிள்ளையா நினைச்சு ஏத்துக்கிட்டேன்.


ஆனா குடும்ப வாழ்க்கை சந்தோஷத்த மட்டும் கொடுக்கல, சில காயத்தையும் கொடுத்துச்சு. என்னோட தனிபட்ட ஆசை, விருப்பம், தனித்துவம் எல்லாம் உத்ராவா நீ மாறுனு தொறத்திக்கிட்டே இருந்துச்சு.


இத்தன வருஷத்துல உத்ரா பத்தின நினைவுகள அவர்கிட்ட இருந்து எடுக்க முடியல. எதுலையும் அவரோட ஒப்பீடு இருந்துக்கிட்டே இருக்கும், அது தனித்து நாங்க இருக்க நேரத்துலையும், எனக்கு என்னவோ உத்ராவோட நிழல் எங்க அறையை எட்டி பாத்துக்கிட்டே இருக்க மாதிரி கற்பனையா தோணும்.
பொதுவா ஓர் பொண்ணு இரண்டாம் திருமணத்தை சுலபமா கடந்து போக

சமூகம் மூலமா பழகிருப்பா, அந்த பழக்கங்கள அறிந்து இருந்தும் என்னால ஒப்பீட்டை ஜீரணிச்சு வாழ முடியல.


இன்னைக்கு இந்த சூழல்ல உன்னை அமர் பெருந்தன்மையா இப்ப ஏத்துக்கிட்டாலும், ஆம்பள குணம் முன்னுக்குபின் முரணா மாறும். அது இரண்டு பேர் வாழ்க்கையும் சீரழிஞ்சிரும். புரிஞ்சு நடந்துக்கோ மோலே..” தனக்கு தெரிந்த மலையாளம் அல்லாத மொழியில் பேசி புரிய வைத்திருந்தார் திரிபுரசுந்தரி.



அவர் உரைத்ததை நேரமெடுத்து உள்வாங்கி கொண்டவள். “புரியுது மா.. நீங்க பேஸ் பண்ண இஸ்யூஸ் உங்க பையனுக்கு நடக்க வேணாம்னு நினைக்கிறீங்க, தப்புல்ல..”


“நீங்க சொல்ற ஒப்பீடு எந்த
ஜென்டருக்கு வந்தாலும், அது குடும்ப வாழ்க்கையில தொற்று நோய் மாதிரி, ஒன்னு தொட்டு ஒன்னு அடுத்ததுக்கு பரவும். உள்ளம் பாலினம் காணாது. குணமே மனிதனை வரையறுக்கும். அந்த குணம் அமராகிட்ட இருக்குனு எனக்கு தெரியும். உங்களோட பயத்துக்காக அவன என்னால விட்டுக்கொடுக்க முடியாது, சாரி..”


“இல்லமா.. நீ..” சொல்ல முன்வந்தவரை,



“இதுவரைக்கும் நீங்க என்னோட கடந்த காலத்தை கேட்கல, நானா சொல்ற வரைக்கும் அவனும் கேட்டதுல்ல, உங்க வளர்ப்புல..! பிறகு எப்படி இருப்பான்! உங்களுக்கு டைம் இருந்து கேட்கணும்னு தோணுச்சுன்னா அவன்கிட்ட கேளுங்க..”


“தீடீர்னு ஓர் பொண்ண பார்த்து மகன் சைட் அடிக்கிறான்னு தெரிஞ்சு, கோவப்படாம அந்த பொண்ண பார்க்க ஏர்போர்ட் ஓடி வந்தீங்கள்ல அந்த குணம் பேரழகு.. உங்க பயத்தால அந்த அழக தொலைச்சுறாதீங்க மா.. உங்களுக்காக ஓர் டீலிங் போடுவோம், ஐ வில் கிவ் சம் டைம், அந்த நேரம் உங்களுக்கானது. அமரா மனச மாத்த முடியும்னு தோணுச்சுனா நீங்க மாத்திக்கோங்க..”


“கண்டிப்பா.. உன்ன பாக்காம இருந்தா கண்டிப்பா உன்மேல் இருக்க ஈர்ப்பு குறைச்சுரும்..” சமார்த்தியமாக பயன்படுத்த வேண்டும் என தாயுள்ளம் திட்டம் தீட்டியது.


“அவ்வளவு நம்பிக்கை..! சரி எத்தனை நாள்னு நீங்கசொல்லுங்க.. அதுவரைக்கும் நாங்க பார்த்துக்க மாட்டோம்..”


“ஒரு மாசம் போதும்.. ஒரு மாசத்துல அவன் மனச மாத்திருவேன். ஆனா அவனுக்கு இத பத்தி தெரியக் கூடாது”


திரிபுரசுந்தரி ஒன்றை மறந்துவிட்டார். தன் கணவன், தன் மகன் லிங்கா உட்பட உத்ரா பற்றிய பேச்சை வீட்டில் பேசுவார்களே தவிர, அமராக தன் தாயின் பெயரை எடுத்ததில்லை.


சிற்றன்னைகே யோசிப்பவன், தன் இணையாளுக்கு சிந்திக்காமலா போவான்!


ஸ்ரேயா உரைத்தது போல் பாலினம் சார்ந்து அல்ல மனம் சார்ந்த குணங்களின் வெளிப்பாடே.


“உங்க மகன் மேல இருக்க நம்பிக்கையில முப்பது நாள் போதும்னு சொல்றீங்க.. எங்க காதல் மேல இருக்க நம்பிக்கையில நூறு நாளா எடுத்துக்கலாம் மா..?” இதற்கு மையமாக இருக்க வேண்டியவனை தவிர்த்து ஒப்பந்தம் பேசினார்கள்.
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
திரிபுரசுந்தரி.... அம்மாவாக இருந்த வரை ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க 😊😊 மாமியாராக பிரமோட் ஆனதும் வில்லியாகிட்டாங்களே 😧😧😧
என்ன செய்ய அந்த போஸ்ட் அப்படி 😊😊
 
அருமையான பதிவு 🤩 🤩
திரிபுரசுந்தரி.... அம்மாவாக இருந்த வரை ரொம்ப நல்லவங்களா இருந்தாங்க 😊😊 மாமியாராக பிரமோட் ஆனதும் வில்லியாகிட்டாங்களே 😧😧😧
என்ன செய்ய அந்த போஸ்ட் அப்படி 😊😊
அந்த பயம் எனக்கே இருக்குமா, 🙄🙄 பதவியா பாக்காம உறவா treat பண்ணா maybe 😁😁 no issues😍😍 thank u dear❤️❤️
 

Advertisement

Advertisement

Back
Top