சிதறாத முத்தங்கள் - 9

Advertisement

Sastika

Active member
Member
1775996585327.jpeg

‘எங்கு, எதைப் பார்த்தாலும் அனைத்தும் காத(லன்)லி தொடர்புடையதாக தோன்றுதல்’

நோக்குவெல்லாம் அவையே போறல்-9



ஏர்ப்போர்ட்டின் நுழைவாயிலில் கரும்பச்சை நிற இலைகளோடு நிறைந்திருந்தன பன்னீர்பூ மரங்கள். தாமே மெச்சிக் கொள்ளும் விதமாக அவ்விருட்சங்கள் பூக்களை பொக்கேகளாக மாற்றி மலரச் செய்திருந்தன.

உருவத்தில் நாதஸ்வரத்தை ஒத்த, நீண்ட நறுமணமுடைய வெள்ளை நிறத்தில் எழிலாகக் காட்சி தந்த மலர்களை அதன் மரத்தடியில் நின்று, அதன் மணத்தை நுரையீரலுக்குள் செலுத்தி மெய் சிலிர்த்துப் போனான் அமர்நாத்.

அவள் உறங்குவதை சுவாரசியமாக விழி அகலாமல் விடியற்காலை வரை கண்டவனுக்கு, அவள் எழுந்து செல்லவும் தான் விழிகள் அதன் சோர்வைக் காட்டியது. அவன் கண்களை புத்துணர்வாக்கும் வகையில் பன்னீர் பூக்கள் அமைந்தன.

ஸ்ரேயாவுக்கு முன்பு எழுந்த மாளவிகாவுக்காக காத்திருந்து, தன்னுடன் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றான் மாதவன். அவளுக்கு அவனைப் பிடித்தது, தன் அன்புத் தோழியின் வருங்காலம் என்கிற எண்ணத்தில். அவர்கள் இருவரும் வருவதைக் கண்ட அமர், தன்னைக் குனிந்து பார்த்தும், மொபைல் கேமராவில் தன் உருவத்தை மாதவனுடன் ஒப்பிட்டுப் பார்த்தான்.

‘அப்படி ஒண்ணும் நம்ம மட்டமா தெரியலையே..! இருந்தாலும் இனிமேல் மூணு வேளை ஜிம்முக்கு போறேன், ஆறு வேளை குளிக்கிறேன். மிஸ்டர் ஹேண்ட்செம்மாக மாறனும் என சங்கல்பம் எடுத்த நொடியே, யோசனைக்குத் தாவினான். ஆனாலும் அவளுக்கு நான் இப்படி இருந்தாதான் பிடிக்குமோ..? நேத்தும் சொன்னாளே.. ம்ம்மச்ச்.. பாத்துக்கலாம் என எண்ணியவனின் காரிகையே பூவின் மணம் அவளிடம் இருந்து வந்ததுப் போல் அவனைத் தாக்கியது. நடைபயிற்சி சென்றவர்களைக் கண்ட ஸ்ரேயா, அவர்களிடம் அளவளாவிவிட்டு அவளும் தனித்து வாக்கிங் செல்ல உத்தேசித்து கிளம்பினாள்.

மலரை நோக்கி நகரும் சிறு வண்டாக அவள் பின்னே சென்றான், மலரை வாடவிடாத கள்ளனாக.

விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு இருபது அடி உயரத்துக்கு காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தனர், அத்தோடு பாரஸ்ட் ஏரியா என்பதால் வாகன போக்குவரத்துக்கு சிமென்ட் சாலை அமைத்து வைத்திருந்தனர்.

காம்பவுன்ட் தாண்டி வெளியே வந்தவளுக்கு சுற்றி இருந்த குளுமையும், பசுமையும் தனி உலகத்துக்கு இழுத்துச் செல்ல, கேமராவில் புகைப்படம் எடுத்தப்படி சாலையைக் கடந்து காட்டிற்குள் சென்றாள்.

“வாவ்.. செம்மையா இருக்குல்ல அபி.. உனக்கு பிடிக்கும்னு தெரியும். இன்னும் நிறைய போட்டோஸ் அனுப்புறேன். ஆமா விஸ்வா இன்னுமா உன்ன கேரளா கூப்பிட்டு வராம இருக்கான்?” அப்ஸ்ராவிடம் அளவளாவிப்படியே சென்றாள்.

“சரி.. சரி.. செகண்ட் ஹனி மூன் ப்ளான் வேணா இங்க போட்டுக்கோங்க, இப்ப என்னவாம்?” எதிர்முனையில் என்ன கூறினாளோ அதற்கு ஸ்ரேயாவின் பேச்சு இப்படியே இருந்தது.

‘வாக்கிங் போற அழக பாரு.. இதுக்கு பேர் சைட் சீயிங்..’ என அவள் செய்கை அனைத்திற்கும் தனக்குள்ளேயே ரன்னிங் கமெண்டரி கொடுத்தான்.

“ஹா..ஹா.. சீரியஸ்லி இந்த ட்ரிப் நல்லா இருக்கு அபி.. ஐ என்ஜாய் திஸ் மொமன்ட்.. ஐ மிஸ் யூ..”

‘பாருடா இயற்கையை ரசிச்சு அத உடனே ஷேர் பண்றா.. உனக்கு இயற்கைய அவ்வளவு பிடிக்குமா.. இதுவரைக்கும் மாலத்தீவுல யாரும் பார்த்திராத உலக உனக்கே உனக்குனு இந்த ட்ரிப்புல காட்டுறேன்.. ஆழ்கடல் அதிசயங்கள் பார்க்கிறப்ப உன் கண்ணுல தெரியும் பாரு மின்னல்.. அப்..பப்..ப்பா நினைக்கிறப்பவே..’ சிலிர்த்துக் கொண்ட தன் உடலை பெருமூச்சை வெளிவிட்டு மீட்டெடுத்தான்.

‘எங்க.. அதுக்குல்ல அங்க போயிட்ட.. அப்ப.. அப்படி சுத்தி போய் அவ முன்னாடி நின்னா.. கண்டிப்பா ஷாக் ரியாக்சன் கொடுப்பா.. அதையும் மிஸ் பண்ணாம பார்க்கணும். அந்த விழி காட்டுற உணர்வுகள் அனைத்தையும் மனசுக்குல்ல பூட்டி வைக்கணும் மை ஃபயர் ப்ளை’ அவர்கள் நடக்கும் மண் பாதைக்கு வலது புறம் மண் மேடு பத்து அடிக்கு சற்று உயர்ந்து, அந்த இடம் இன்னும் அதிக மரங்களாகக் காட்சி தந்தது. இடது புறமும் இயற்கை அன்னையே வீற்றிருந்தாள், ஆனால் அது மண் சாலைக்கு சமமாகவே இருந்தது.

அவள் நடக்கும் தொலைவில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் கரடி ஒன்று தன் முதுகில் இரண்டு கரடி குட்டிகளை தூக்கிச் சென்றதைப் பார்த்து கேமராவில் படம் பிடித்தாள். ‘எப்படி குட்டியை தூக்கி முதுகில வச்சுருக்கும்..’ ஆகபெரும் சந்தேகம் அவளுக்கு வந்தது. தீர்த்து வைக்கதான் எவரும் அருகில் இல்லையே.!

அதன் மீது கவனம் வைத்து இருந்தவளுக்கு அதன் பின்னே வந்த மற்றொரு கரடியை கவனிக்கத் தவறினாள். அவளை வைத்த கண் எடுக்காமல் பின்னே வந்த மற்றொரு கரடி நோட்டம் விட்டது, மொபைல் கேமராவை மெல்ல நகட்ட அந்த கரடி அவள் கண்ணில் பட்டது. பயத்தில் ஓர் நொடி உறைந்து நின்றவள், மெல்ல பின்னே இரண்டு எட்டு வைத்து நகர்ந்தாள், அடுத்து நகர்வதற்கு பொறுமை இன்றி கத்தியபடி ஓடத் துவங்கினாள். அவளின் செயல் கரடிக்கு ஓட்ட பந்தயத்திற்கான அழைப்பாக தோன்றி இருக்குமோ.. அதுவும் வேகம் எடுத்து அவளைத் துரத்தத் துவங்கியது. ஸ்ரேயா எழுப்பிய ஒலியில் பாய்ந்து வந்தவன், மேட்டில் இருந்தே கைக்கொடுத்து தூக்கினான்.

தூக்கி விட்டதோடு இல்லாமல் அவள் கையை விடாது, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு ஓடினான். அவன் வேகத்திற்கு செல்ல இயலாமல் தடுமாறி, அவனின் இடது கை மணிக்கட்டை அவளின் இரண்டு கைகளால் பிடித்து ஓட்டத்தை நிறுத்தனாள். பக்கவாட்டில் திரும்பி பார்க்க அவளோ குனிந்து நின்று மூச்சு வாங்கினாள்.

“இன்னும் கொஞ்ச தூரம்தான், அங்க போயிட்டா சேப் ப்ளேஸ் இருக்கும்.. வா” என துரிதபடுத்தினான்.

“அய்யோ.. முடியல, நம்ம மேட்டு மேலதான இருக்கோம், கரடி எப்படி வரும்?” என கேட்டாள்.

“கரடி உயரம் சுலபமா ஏறும், கூடவே அதுக்கு ஸ்விமிங் வேற நல்லாவே தெரியும்..”

“அத யாரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்க சொன்னா.. வேணா இப்படி செய்வோமா..? மூச்ச இழுத்து பிடிச்சுக்கிட்டு குப்புற படுத்துட்டா ஸ்மெல் பண்ணிப் பார்த்துட்டு போயிரும்ல..”

“ம்ம்.. உயிருக்கு பங்கம் வராதுதான்.. ஆனா உன்னோட முதுகுல புள்ளி வச்சு கோலம் போட்டுரும், பரவயில்லையா..” அவன் சுதாரிக்கும் முன் இப்பொழுது அவனை இழுத்து கொண்டு இவள் ஓடினாள்.

“வாவ்.. இதுகூட நல்லா இருக்கு..!” அவள் இழுப்பிற்கு செல்வதும், அவனுக்கு அத்தனை உயிர்ப்பாக இருந்தது.

“எங்க போகணும்? முடியல. சீக்கிரம் எதாச்சு பண்ணு..”,

“என்னமா நீ இவ்வளவு பாஸ்ட்டா இருக்க, இந்த ரணகளத்துலேயும் ரொமான்ஸ் மூடுல இருக்க போல..” பல்லை இழித்துக் கேட்டான்.

“அடேய்..!” என பல்லை கடித்தாள்.

சட்டென சுதாரித்த அவன் மூக்கு எதையோ கண்டு கொண்டது. கரடியோ இவர்களை நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டவன், அவளை முழு வேகத்தில் இழுத்துக்கொண்டு திசை மாற்றி சென்றான். அவன் சுதாரித்த இடம் வந்துவிட, அவளை விடுத்து தாவி மரக் கிளையை பிடித்து முறித்தான். முறிந்த கொப்பை தூக்கி கரடி வரும் திசையில் எறிந்தான். அதன் பின் சுவாரசியாமாகக் கரடியை பார்க்க துவங்கினான்.

“கரடி மேல தூக்கி போட்டிருந்தாலும் பரவாயில்ல.. இப்படி பொத்தாம் பொதுவா எரிஞ்சுட்டு பயில்வான் மாதிரி போஸ பாரு..” அவனை பரிகாசம் செய்தாள்.

சன்னமான முறுவலுடன், “வெயிட் அண்ட் வாட்ச் மை டியர்..”

“இப்படி பேசாத.. நீ இருந்து ரசிச்சுட்டு மெதுவா வா.. நான் போறேன்..” என எட்டு வைத்தவளின் இடையை விடுத்து பின் கழுத்தைப் பிடித்து நிறுத்தினான்.

“ஏய்.. விடுடா.. தனியா இருக்க பொண்ணுக்கிட்ட மிஸ் பிகேவ் பண்றயா..” என அவனிடம் இருந்து முறுக்கி கொண்டு விடுபட முயற்சி செய்தாள்.

“ரொம்ப துள்ளுனா.. அப்புறம் கட்டிப் பிடிச்சு நிறுத்த வேண்டி இருக்கும்” என்று அவன் கூறியதும், அவள் அமைதியாக நின்றாள். அவன் எறிந்த மரக்கிளையில் இருந்த பூக்களை உண்டுவிட்டு கரடி, கண்கள் சொருகிய நிலையில் ஆடத் துவங்கியது.

“இங்க என்ன நடக்குது.. இவ்வளவு நேரம் டேஞ்சரஸ் பெல்லோவா இருந்த கரடி, எப்படி அத சாப்பிடவும் டான்சிங் கரடியா மாறிருச்சு?” அதிசியத்துடன் கேட்டாள்.

“அது.. மஹுவா பூக்கள், கிட்டத்தட்ட மதுபானத்துக்குச் சமம். இந்த பூ கரடி இனத்துக்கு ரொம்ப பிடிக்கும்.”

“ஒ.. அது எப்படி உனக்கு தெரியும்?”

“ம்.. போர் அடிக்கிறப்ப எல்லாம் இங்க வந்து கரடிக்கும் கொடுத்துட்டு நானும் போதையை ஏத்திட்டுப் போவேன்.”

“ம்ச்ச.. அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல.”

“என்மேல் அவ்வளவு நம்பிக்கையா மை ஃபயர் ப்ளை.”

“அப்படியெல்லாம் இல்ல.. அதுக்கு நீ ஒர்த் இல்ல.. அவ்வளவுதான், அத ஓர் வீடியோ எடுத்துக்கவா?” கேட்டப்படியே குர்தி பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்தாள்.

“இவ்வளவு பதட்டத்திலும் மொபைல கீழ போடல.. நான் நினைச்சதவிட உனக்கு தில்லு ஜாஸ்தி தான்.” அவனது குரலில் பாராட்டே இருந்தது.

“இது அகி மாமா எனக்காக வாங்கி கொடுத்தது.. எப்படி தவற விடுவேன்.. இம்பாசிபல்..”.

ஸ்ரேயா பேசியதை அவன் மூளை உதாசீனப்படுத்த, “நான் அமர்நாத்.. ப்ரெண்ட்ஸ் கால் மீ அமர்.. நீ யுனிக்கா நாத்னு வேணா கூப்பிட்டுக்கோ” கைகள் நீட்டி தன்னை அறிமுகப்படுத்தினான்.

“ஏன்.. வயல்ல இறங்கி நாத்து எதுவும் நட போறியா..? சரி நான் போறேன்..” என பேச்சை விடுத்து நடையைத் தொடங்க, அவள் பின்னேயே சென்றான்.

“நீ செல்லமா என்னைய எப்படி வேணா கூப்பட்டுக்கோ.. உன் பெயர் சொல்ல மாட்டியா?” பதில் இல்லை அவளிடம். மறுப்பாள், மறைப்பாள் என தெரிந்தே கேட்டான். அதற்காக விட்டுவிடுவானா? இவன்தான் நவீன யுக வேதாளம் ஆயிற்றே..!



‘சின்ன சின்ன கண் அசைவில்

உன் அடிமையாகவா..

செல்ல செல்ல முத்தங்களில்

உன் உயிரே வாங்கவா..

மெல்ல மெல்ல என் உயிரில்

உன் உயிரும் அசையுதே

துள்ள துள்ள என் இதயம்

நம் உயிரில் நனையுதே..!




அவனது குத்து ஈட்டியான பார்வையும், பாடலும், மனதிற்குள் உள்ளே சென்று உள்ளுணர்வைத் தூண்டியது. “நீ முன்னாடி போ..” என தன் பின்னே இரு கைகளை கோர்த்துக் கொண்டாள்.

“ஹலோ.. ஐ ஆம் வெரி டீசன்ட் கை யூ நோ.. எந்த எண்ணமும் இல்லாதவன, இப்படி ஆக்சன் பண்ணி எடக்கு மடக்கா யோசிக்க வச்சுராத..” அவளது செய்கை அவனை ரோஷம் கொள்ள வைத்தது.

‘போடா..’. அவன் கூடவும் இல்லாமல், பின்னேயும் இல்லாமல் சென்றாள். அவன் பின்னே செல்ல நான் என்ன அவனுக்கு மனைவியா? என விதிர வைக்கும் எண்ணம் அவளுள் எழுந்தது. டிரன்சிட் ஹோட்டலுக்கு சென்றவளை இருமலர்கள் ஓடிச் சென்று கட்டிக் கொண்டனர்.

“எங்கடி போன..?”

“அதுவா.. இயற்கையோடு கொஞ்சி விளையாட போனாங்க.. ஜஸ்ட் மிஸ்.. அப்படிதான..?” என ஸ்ரேயாவைப் பார்த்து புருவம் உயர்த்தி கேட்டான் அமர்.

மென்னகையோடு இதழை சுழித்து பாசாங்கு காட்டினாள். அதில் சிரித்தவனை மாளவிகா கண்டு முறைத்து வைத்தாள்.

“செம்ம த்ரிலிங்கா இருந்துச்சு தெரியுமா..?” என கரடி துரத்தி வந்ததையும், அதிலிருந்து தப்பித்ததையும் சொல்லி முடிக்க. ஸ்ரேயா வதனத்தில் உற்சாகமே பிரதிபலித்தது. அவளின் உணர்வை குறிப்பெடுத்தாள் ஹரிதா.

“ஒகே.. நீ மேடி கூட போ..” என அனுப்பி வைத்து, “ஹரிமா அவள பார்த்துக்கோ” என அவளுக்கும் வேலை பணித்தாள் மாளவிகா. தனித்து நின்ற அமரிடம் வந்தவள்.

“எதுக்கு அவள அப்படி பாக்குறிங்க..?”

“எப்படி பார்த்தேன்..?” அறியாத சிறுவனாகக் கேட்டான்.

“இது என்ன பேச்சு..?” மாளவிகா பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரேயா குறுக்கே வந்து, “நீ இங்க என்ன பண்ற..? வா..”

“ஒய்ய்.. பயர் ப்ளை, உன் ப்ரெண்ட கூப்பிட்டு போற சாக்குல, என்னை பாக்கதான வந்த..” அவனிடம் சொல்லாமல் விடைபெற்றவளுக்கு மனம் காந்தியது. அதை அமர் கணித்துக் கேட்கவும் மழுப்பினாள்.

“நினைப்புதான்.. நீ வாடி..” அவளது பேச்சில் முரல்கள் மின்னியது அவனுக்கு.

இருவரும் முன்னே நகர்வதை ரசித்தவன். விரைந்து சென்று இருவருக்கும் நடுவில் புகுந்து ஸ்ரேயாவை தன்னுடன் பாதி தூரம் கைபிடித்து நடத்தி சென்றுவிட்டு, அதன்பின் அவளை விட்டுவிட்டு கண்டுக்காமல் சென்றான்.

அவனது செய்கையை கண்ட மாளவிகா, “சரியான பைத்தியமா இருப்பான் போல”

“ம்..கூம்.. சரி பண்ண வேண்டிய பைத்தியம்..” அவள் அறியாமல் இளநகை உதித்தது. ஸ்ரேயாவின் மன சலசலப்புக்கு என்ன தீர்வு காண போகிறாளோ..?

கடந்த வாழ்வில் தன் தந்தை, கணவன் என்கிற உருவில் வந்த பொறுப்பற்ற மிருகங்களைப் போல மற்ற ஆண்களையும் எடை போடவில்லை. தவறு தன் மீதே.. சரியான துணையை தேர்ந்தேடுக்காமல் இடறியது நானே..! என நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டாள்.

பழைய கசடை மனதில் சுமக்காமல் அழித்துவிட்டு, மனதை திறந்தே வைத்து விட்டாள். இப்போது அதில் உல்லாசமாக தன் நேத்திரம் வழியே இதயத்தை ஸ்ட்ரா போட்டு ஊறிஞ்ச ஆரம்பித்துவிட்டான் வித்தைக்காரன்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top