HERE WE GO WITH THE 11TH EPISODE HAPPY READING IN UR LEISURE FRIENDS THANK U ALL FOR UR GENUINE SUPPORT
அத்தியாயம் 11
அறையின் மூலையில் தயங்கி நிற்கும சுதாவைப் பார்த்தும் பாராதது .போல ஷ¨வின் லேஸ்களை சேர்த்து முடிச்சிட்டான் ஹரி. பின் நிமிர்ந்து கழுத்தை இறுக்கிய டையின் முடிச்சை சற்றே தளர்த்தியவன் ப்ரீப் கேஸை எடுத்துக் கொண்டு வர்றேன் என்ற ஒற்றை வார்த்தையுடன் கிளம்ப சுதாவின் கண்கள் கண்ணீரில் பளபளத்தன.
முன்னெல்லாம் ஹரிபிரசாத் சாமான்யமாய் அலுவலகத்திற்கு கிளம்பி விட மாட்டான். சுதாவையே சுற்றி சுற்றி வருவான் அடுக்களையில் வேலை செய்து கொண்டிருப்பவளை எதாவது ஒரு காரணத்திற்காக படுக்கையறைக்கு வரவழைப்பான்.
சுதா என்ன பண்ணிட்டிருக்கே அங்கே? என் ஷர்ட்டில் பட்டனில்லை. வா வந்து ஸ்டிச் பண்ணிக் கொடு.....
அவள் அவசரமாக கைவேலையைப் போட்டுவிட்டு ஓடி வருவதைப் பார்ப்பதில் அவனுக்கு ஒரு தனி கிக்
என்ன ஹரி இது? காலையில் ஆபீஸ் போற நேரத்தில் என்ன கலாட்டா? ஷர்ட்ல பட்டனில்லைன்னா வேற ஷர்ட் பொட்டுட்டுப் போங்களேன் எனக்கு கிச்சனல வேலையிருக்கு ஹரி ப்ளீஸ்..
நோ.......நான் இந்த ஷர்ட் தான் போட்டுக்கனும்..
சின்னக்குழந்தையாய் அடம் பிடிப்பவனைப் பார்த்து சலித்துக் கொள்வாள் சுதா
வார்ட்ரோப் நிறைய வரிசையாத் தொங்கறதில் எதாவதொரு ஷர்ட்டை எடுத்துப் போட்டுக்காமல் இதைத் தான் போடுவேன்னு என்ன அடம்டா சாமி....வர வர ரொம்பப் படுத்தறிங்க ஹரி சரி சரி சட்டையைக் கழட்டிக் கொடுங்க ஸ்டிச் பண்ணித் தரேன்.
ந்த்திங் டூயிங் இந்தக் கதையெல்லாம் வேண்டாம். நான் போட்டுட்டிருக்கறப்பவே ஸ்டிச் பண்ணிடு ம் வா.......
குறும்பாய் கணவன் கண்சிமிட்டும் பொழுது தான் சுதாவிற்கு அவன் வம்பு தெரியும்
அடுக்களை காரியத்தைக் கெடுத்துக் கூப்பிட்டது இதற்குத் தானா? சீ ரொம்ப மோசம் நீங்க...
செல்லமாய் சிணுங்குவாள் சுதா.
ஹரி என்னை ஒழுங்காத் தைக்க விடனும் ஏதாவது விஷமம் பண்ணினிங்க கையில் ஊசி தானிருக்கு ஜாக்கிரதை..
எச்சரிக்கையுடன் நெருங்குபவளை கோபத்துடன் தள்ளி விடுவான் அவன்.
எனக்கொண்ணும் நீ பட்டன் தைக்க வேணாம் போ.........
அப்பா பொழச்சேன் நான் அப்போ நான் போகட்டுமா? நிஜமாகவே போய்டுவேன்
போய்டுவியா நீ? இப்பல்லாம் ரொம்ப நழுவ அரம்பிச்சுட்டேயில்லே உன்னை என்ன பண்ணா தேவலை?
சுதா பெரும்பாலும் அவன் விஷமங்களுக்கெல்லாம் ஈடு கொடுப்பாளென்றாலும் சமயங்களில் சலித்துக் கொள்வாள்.
உங்களுக்கு நேரம் காலமே கிடையாதா ஹரி? அப்பா ஆபீஸ்னு ஒண்ணு இருக்றதால தான் நான் கொஞ்ச நேரமாவது ப்ரீயா மூச்சு விட முடியுது இல்லேன்னா உங்களோட கஷ்டம் தான்
அதற்கும் நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன் சுதா. உன்னோட மாஸ்டர் டிகிரி வீணாகாமல் உன்னையே என்னோட பிஏவாக நியமிச்சுட்டா வேலைக்கும் கம்பெனி கொடுப்பாய் மற்ற எல்லா விஷயத்திற்கும் கூட... ஹரி குறும்பாய் கண் சிமிட்டுவான்
ஆஹா நீங்க வீட்ல படுத்தறது போதாதா? இன்னும் ஆபீஸ்ல வேற வந்து நான் அவஸ்தை படனுமாக்கும்? வேணாம் சாமி..........
அன்று என்னவோ சுதா வேடிக்கையாய் தான் அலுத்துக்கொண்டாள். ஆனால் அன்றே அவன் யோசனையை ஏற்றுக் கொண்டிருந்தால் இன்று ஸ்வப்னாவைப் பற்றி சந்தேகப்பட்டு சஞ்சலப்படும் சந்தர்ப்பம் வந்திருக்காதோ?
ஒரு நீண்ட பெருமூச்சில் சுதாவின் நாசி விடைத்துக் கொண்டது.
அன்று கணவன் குழந்தை குடும்பம் போன்றவை தான் முக்கியமாகத் தெரிந்தன. ஆனால் இன்று குழந்தை என்ற பேச்சுக்கே அவள் வாழ்க்கையில் இடமில்லை என்றான பின் கணவனையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் முன்பே தற்காப்பு நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்ற யோசனையும் எடுக்காமல் விட்டு விட்டோமே என்ற தவிப்பும் மனசை அலைபாய வைக்கின்றன. ம் எல்லாம் காலம் செய்யும் கோலம்.
சுதா அவசரமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தாள். தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த ஹரியின் புருவங்கள் மனைவி அருகே வரவும் என்ன என்று கேட்கும் பாவனையில் உயர்ந்தன.
என் சினேகிதி ரேணுவோட வெட்டிங் அனிவர்சரி இன்னிக்கு. ஈவ்னிங் பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கா
போய்ட்டு வாயேன்.....இரத்தினச்சுருக்கமாய் பதில் வந்தது அவனிடமிருந்து.
நான் ஒண்ணும் பார்ட்டிக்குப் போக உங்களிடம் பர்மிஷன் கேட்டு வரலை. அனிவர்சரி விழாங்கறதால் எல்லோரும் ஜோடியாத் தான் வருவாங்க. நான் மட்டும் நீங்க இல்லாமல் தனியா எப்படி போறது?
யூ ஆர் ரைட். பார்ட்டிக்கு கணவனும் மனைவியுமா சேர்ந்து போனாத் தான் பார்க்க நல்லாயிருக்கும். ஆனால் நாம ரெண்டு பேரும் உண்மையிலேயே கணவன் மனைவியாகவா வாழ்ந்துட்டிருக்கோம்?
சவுக்காலடித்தாற் போல் உணர்ந்தாள் சுதா. ஹரியின் முகமோ உணற்ச்சியற்ற கல்லாய் இறுகிப் போயிருந்தது. பொங்கிக் கொண்டு வந்த அழுகையை அடக்க முயன்றாள் சுதா.
எனக்குத் தெரியும். அன்னிக்கு நைட் நான் உங்களை ஏமாற்றியதால் இப்ப என்னைப் பழி வாங்கறிங்க அப்படித் தானே?
திக்கித் திணறி சுதா இதைச் சொல்ல ஹரி கோபத்துடன் வெடித்தான்.
ஸ்டாப் தெட் நான்செனஸ் சுதா அந்த மாதிரி பழி வாங்கற மூன்றாம் தரமான ஐடியாவெல்லாம் எனக்குக் கிடையாது. உண்மையிலேயே இன்னிக்கு ஈவ்னிங் எனக்கு முக்கியமான மீட்டிங் ஒண்ணு இருக்கு. வீட்டுக்கு வரவே லேட்டாயிடும். அப்புறம் பார்ட்டிக்கு எப்படி வர்றது? ஐ ஆம் சாரி நீ மட்டும் போய்ட்டு வா..
வீட்டுக்கும் கூட நீங்க எதற்காக வரனும்? ஆபீஸ்லயே தங்கிக்கலாமே. அதான் ஸ்வப்னா துணையிருக்காளே
வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் டாக்கிங் திஸ் ரப்பிஷ் அன்ட் கெட் அவுட்....
கோபத்தில் கண்கள் சிவக்க கத்திய ஹரி, சுதாவின் அழுகையையும் பொருட்படுத்தாமல் அவசரமாய் வெளியேறினான். அறைக்கு வெளியே அக்காவிடம் ஏதோ கேட்பதற்காக வந்த அனு உள்ளேயிருந்து வந்த விசும்பல் சத்தத்தில் ஹரியைப் பார்வையாலேயே கேள்வி கேட்க ஹரிபிரசாத் பதிலே சொல்லாமல் மௌனமாய் நகர்ந்து விட்டான்.
அனு ஹாலில் அமர்ந்து எகனாமிக் டைம்ஸைப் பரட்டிக் கொண்டிருந்தாள். சுதா சற்று நேரம் முன்பு தான் அவள் தோழியின் பார்ட்டிக்கு கிளம்பிச் சென்றிருந்தாள். சுவர் கடிகாரம் ஆறு முறை அடித்து ஓய்ந்த அடுத்த நிமிடமே போர்டிக்கோவில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
அதைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த ஹரியைக் கண்டவுடன் அனு ஆச்சரியப்பட்டாள்.
என்ன ஹரி சீக்கிரம் வந்துட்டிங்க நீங்க எதோ கான்பெரன்ஸ் போறதா அக்கா சொன்னா.
அந்த கன்பெரன்ஸ் கடைசி நிமிஷத்தில் கான்சல் ஆயிடுச்சு அனு
ஷ¨வின் லேஸ் முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டே ஹரி சொல்ல, அனு வருத்தப்பட்டாள்.
பாவம் அக்கா இவ்வளவு நேரமா நீங்க வருவிங்கன்னு காத்திருந்து இப்பத் தான் பத்து நிமிஷம் முன்னால புறப்பட்டுப் போனாள் ம்.....அவளுக்கு அதிர்ஷ்டமில்லை எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைச்சிருக்கு.
அனுவின் பதிலில் ஹரி சட்டென்று திரும்பிப் பார்க்க அவளோ குறும்பாய் சிரித்தாள்
உங்களோட கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே. அதைச் சொன்னேன்..
ஹரிபிரசாத் முறுவலுடன் தன் அறைக்குள் நுழைந்து அலுப்புத் தீர குளித்து உடை மாற்றவும். அனு கதவைத் தட்டி விட்டு உள்ளே காபிகோப்பையுடன் வரவும் சரியாகயிருந்தது.
தாங்க்ஸ் அனு..... உன்னை சிரமப்படுத்திட்டேனா?
நீங்க இப்படி கேட்கறது தான் சிரமமாயிருக்கு ஹரி நான் என்ன அசலா இல்லே அந்நியமா? என்னை வர வர நீங்க அவாய்ட் பண்றிங்களோன்னு தோணுது.......
ஐயோ அப்படியெல்லாம் இல்லை அனு இன்னும் சொல்லப் போனால் இந்த பத்து நாட்களாய் நான் ஓரளவிற்காவது கலகலப்பாய் இருக்கிறேனென்றால் அது உன்னால் தான் அனு அந்த அளவிறகு எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது என்றால் நீ நம்புவாயா அனு? ஹரியின் குரல் விரக்தியில் சுருதி குறைந்த ஸ்வரமாய் தடுமாறுகிறது.
உங்கள் வேதனை எனக்குப் புரியுது ஹரி. ஆனால் இதற்காக வருத்தப்பட்டு ஆகப் போறது ஒன்றுமில்லை உங்களுக்குத் தெரியாததா? ஏன் ஹரி ஸ்வப்னா உங்க பி ஏ வாக இருப்பதால் தானே அக்கா சந்தேகப்படுகிறாள். பேசாமல் ஸ்வப்னாவிற்கு வேறு எதாவது கம்பெனியில் உங்க செல்வாக்கைப் பயன்படுத்தி வேலை வாங்கிக் கொடுத்து விடுங்களேன்..
சாமர்த்தியமாகப் பேசுகிறாய் அனு.............ஹரிபிரசாத் முறுவலித்தான்.
ஆனால் ஒரு விஷயம் நீ புரிஞ்சுக்கனும் அனு, சுதாவிற்கு பொசஸ்ஸிவ்நெஸ் ஜாஸ்தி. அவளுக்கு குழந்தை பிறக்காததாலே எங்கே நான் அவளை விட்டு விலகிடுவேனோன்ற தாழ்வு மனப்பான்மையில் தவிச்சுப் போயிருக்கா. பைத்தியக்காரி கனவில கூட என்னால அவளைப் பிரிய முடியாதுங்கற உண்மையை அவ இன்னும் தெரிஞ்சுக்கலே. அனு உங்கக்காவை விட்டு விலக முடியாதது போலவே அவ சந்தேகத்தை என்னால சகிச்சுக்க முடியலேன்றதும் உண்மை. ஐ ஆம் ஃபெட் அப் டோட்டலி ஃபெட் அப் வித் ஆல் தீஸ் திங்ஸ். சலித்துப் போனது மட்டுமில்லே சமயங்களில் அவ சந்தேகத்தை நிஜமாக்கினா என்னன்னு வெறியே வருது. அந்த வெறியில் இன்னிக்கு கூட ஒரு நிமிஷம் சலனப்பட்டுட்டேன். ஆனால் நல்லவேளை சுதாரிச்சுகிட்டேன். இல்லேன்னா இன்னிக்கு ஏற்பட்ட சலனத்தில் ஸ்வப்னாவிற்கு என் மீதிருந்த மேலதிகாரின்ற மதிப்பே மாறிப் போயிருக்கும்
ஹரி..............என்ன சொல்றிங்க நீங்க? நிஜமாகவா?....
அனுவின் குரல் நடுங்கியது அதிர்ச்சியில்.
நிஜம் தான் அனு. ப்ளீஸ் அப்படிப் பார்க்காதயேன் சலனப்பட்டேன்னு தான் சொன்னேனே தவிர என்னை இழந்துட்டதா சொல்லலியே. ஆனால் இன்னும் கொஞ்ச நாள் இதே நிலைமை நீடிச்சா என்னை முழுசா இழந்துடுவேனோன்னு பயமாயிருக்கு அனு உன்னிடம் சொல்லக் கூடிய விஷயமில்லை தான். ஆனாலும் என் மனபாரத்தை யாரிடமாவது இறக்கி வைத்தால் தேவலை என்று தோன்றுகிறது அனு. நான் சலனப்பட்டேன்னா அதற்கு காரணம் இல்லாமலில்லை. நானும் சுதாவும் பெயரளவிற்கு தான் தம்பதிகளாய் இருக்கிறோம்.
மற்றபடி நான் அவள் அருகில் நெருங்கியே மாதக் கணக்காகிவிட்டது என்றால் நீ நம்புவாயா அனு?
மனதிலிருந்த புழுக்கத்தையும் துக்கத்தையும் வெளிப்படையாக கொட்டி விட்ட திருப்தியில் ஹரி கண்களை மூடிக் கொள்ள, அனு சிவந்து போன தன் முகத்தை மறைக்க தலை குனிந்து கொண்டாள்.
அக்கா அசட்டு சந்தேகத்தால் அனபான புருஷனை இழக்கிறாயே...... என்று மனசு ஆற்றாமையில் புலம்பியது
ஹரி என்னை எந்த அளவிற்கு நெருக்கமாய் நினைத்திருந்தால் அக்கா அவரை விலக்கி வைத்திருப்பதைக்கூட என்னிடம் சொல்லுவார்? இதற்காக நான் என் உயிரைக் கூட கொடுக்கலாமே?
உணர்ச்சி வசப்பட்ட அனு கண்களை மூடி தலையில் கை வைத்து படுத்திருந்த ஹரியிடம் சென்று குனிந்து இதமாக அவன் தலையைக் கோதி விட்டாள்.
அனு..........அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்த ஹரியின் விழிகள் ஏகத்திற்கு சிவந்திருந்தன.
அக்கா வேணா அவளோட அசட்டுத் தனமான சந்தேகத்தால உங்களை இழக்கலாம் ஹரி. ஆனால் நான் உங்களை ஸ்வப்னாவிடம் இழக்க விரும்பலே. ஐ லவ் யூ ஹரி...
கொஞ்சும் குரலில் அனு அவன் காதருகில் கிசுகிசுக்க, வெகு நாட்களாய் ஹரியினுள் உறங்கிக் கொண்டிருந்த ஆண்மை இன்று அனுவின் அண்மையில் விழித்துக் கொண்டது.
அனுவின் மேனியிலிருந்து வந்த சந்தனத்தின் நறுமணம் அவன் சிந்தையை மயக்கியது. என்றால் பட்டுப் போன்ற அவள் சருமத்தின் மென்மையில் கிறுகிறுத்துப் போனான்.
அனுவிற்கு இது புது அனுபவமானதால் வெகு சீக்கிரமே அவனுடைய அணைப்பில் தன்னையும் சூழ்நிலையையும் மறந்து ஒன்றிப் போனாள்.
ஐ லவ் யூ அனு.............ஹரியும் தன்னை மறந்து கொண்டிருந்தான் கொஞ்சம் கொஞ்சமாக.
அவன் ஆசையும் எதிர்பார்ப்பும் நன்கு புரிய, ஹரி அவள் இதழ்களை தன் உதட்டால் அழுத்தி தாபத்துடன் நீயாவது என் மனசைப் புரிஞ்சுக்கிட்டியே அனு என்று முனகிய அந்தப் பொழுதில் அனுவால் அவனை மறுக்க முடியவில்லை என்பதோடு பின் விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அறவே இல்லை.