சுட்டும் விழிச் சுடரே அத்தியாயம் 17

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 17 TH EPISODE ENJOY READING IN UR LEISURE FRIENDS :love: 🙏



அத்தியாயம் 17

சுதா அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள்

எ....எதறகாக இவர் இப்படிக் கோபப்படுகிறார்? நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்தக் கோபம்? நான் அனுவையும் அவளைக் கெடுத்தவனையும் தானே திட்டினேன். 17என்னவோ இவரையே திட்டிவிட்டாற் போல் இவருக்கு எதற்காக கோபம் வருகிறது?

ஒருவேளை இவரே தான்..........

மின்னல் வேகத்தில் சந்தேகம் ஆயிரம் வாட் பல்புகளாய் மனதில் மின்னலிட, சுதா பதட்டத்துடன் ஹரியை நெருங்கினாள்.

நான் அனுவையும் அவனையும் திட்டினால் உங்களுக்கு ஏன் ஹரி கோபம் வருது? சொல்லுங்க.....வாட் மேட் யூ பர்ஸ்ட் லைக் தெட்?

தலையை கைகளால் தாங்கிக் கொண்டிருந்த ஹரிபிரசாத்திற்கு அப்பொழுது தான் தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது புரிந்தது. இனி சுதாவின் சந்தேகத்தை சமாளிப்பது சாமான்யமான வேலையில்லை எனபது புரிந்த பொழுது உள்ளுக்குள ஏதோ ஒன்று உதறியது

வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்ட நிலையிலும் ஹரியின் ஸ்பாவமான பத்திசாலித்தனமும் சமயோஜிதமும் அவனைக் காப்பாற்ற முன் வந்தன இயல்பாய் சிரித்துக் கொண்டே மனைவியின் கை பற்றி அழுத்தினான் அவன்.

எனக்கு ஆபீஸ்லயும் எக்கச்சக்கமாய் பிரச்னை சுதா அதை நினைத்து ஏற்கெனவே நான் சஞ்சலப்பட்டுட்டிருந்தேனா நீ வேற இப்போ அனுவைப் பற்றி சொன்னாயா? ஏற்கெனவே நமக்கு குழந்தை பிறக்கலேன்னு மாமாவும் அத்தையும் கவலைப்பட்டுட்டிருக்கற இந்த சமயத்தில் அனுவின் மூலமாய் வேற புதுப் பிரச்னைன்னா நானே டென்ஷன் தாங்காமல் கத்திட்டேன். பாவம் அத்தையும் மாமாவும் ரொம்ப அப்செட் ஆகியிருப்பாங்க இல்லையா சுதா?

எப்பேர்பட்ட இக்கட்டான சமயத்திலும் இயல்பாய் இருக்க ஹரிக்கு சொல்லியா தர வேண்டும்? புத்தி கொஞ்சம் மந்தமாய் உள்ள மனைவியை எப்படியும் சமாளித்து விடலாம். ஆனால் சுண்டு விரல் அசைவைக் கூட துல்லியமாய் கண்டு கொள்ளும் சுதாவைப் போன்ற பெண்ணிடம சர்வ ஜாக்கிரதையாக இருக்கவில்லை என்றால் அதோகதி தான் கடந்த சில நாட்களாகவே கணவன் இரவுகளில் இயல்பையும் மீறி இறுக்கமாய் இருப்பதை சுதா உணர்ந்து தானிருந்தாள். ஏற்கெனவே குழம்பியிருந்த குட்டையில் இப்பொழுது மீன் தானாகவே வந்து மாட்டிக் கொண்டது கடுகையே மலையாக்கும் சுதா இப்பொழுது மலையே வந்து மாட்டிக் கொண்டால் சும்மா விடுவாளா?

எதற்காக ஹரி இவ்வளவு கஷ்டப்பட்டு பொய் சொல்றிங்க?

சுதாவின் நிதானமான கேள்வி ஹரியின் வயிற்றில் பயவண்டுகளை பறக்க விட்டது

ஆபீஸ்ல பிரச்னையே வராத அளவிற்கு உங்க நிர்வாகம் சிறப்பா இருக்கறதா அப்பா பலமுறை உங்களைப் புகழ்ந்து நான் கேட்டிருக்கேன்.
அப்படியே தப்பித் தவறி பிரச்னை இருந்துட்டாலும் அதை வீடு வரை கொண்டு வர்ற ஆளில்லே நீங்க. நமக்கு குழந்தையில்லேனு அப்பா அம்மாவுக்கு ஏன் எனக்கே கூட இன்னிக்கு வரைக்கும் கவலை இருந்துட்டு தானிருக்கு ஆனால் நீங்க அதற்காக கவலைப்படற ஆளா? அதை நான் நம்பனுமா?

உன் சந்தேகப்படற ஸ்பாவமெல்லாம் போய்டுச்சுன்னு நினைச்சேனே சுதா. இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை வரலையா? மனுஷன் எப்பவும் ஒரே மாதிரியா இருக்கமுடியும்? ஆபீஸ்ல ஆயிரத்தெட்டுப் பிரச்னை. நீ வேற புதுசா அனுவோட பிரச்னையைச் சொல்லவும் ஏதோ கிட்டிநெஸ்ல கத்திட்டேன் சுதா நம்பு

டென்ஷன் கிட்டிநெஸ் என்று ஹரி மீண்டும் மீண்டும் சாதித்தாலும் சுதா நம்பத் தயாராயில்லை. என்பதோடு பொறுமையையும் இழந்து விட்டாள்.

நோ......நீங்க கோபப்பட்டதற்கு காரணம் கிட்டிநெஸ் இல்லே கில்டிநெஸ். குற்ற உணர்ச்சி அப்படித்தானே....

மிகச் சரியாய் பிரச்னையின் மையத்தைக் கண்டுபிடித்து புள்ளி குத்தி விட்டாள் சுதா

சுதா..............அதிர்ச்சியில் ஹரிக்கு மேற்கொண்டு பேச்சே வரவில்லை.

இனியும் என்னிடம் மறைக்கப் பார்க்காதிங்க ஹரி. சொல்லுங்க என்ன நடந்தது?

அவனை நெருங்கி அவனுடைய சட்டை காலரைப் பிடித்து உலுக்கியவள், அதற்கு மேலும் தாங்க முடியாமல் அவன் மார்பிலேயே முகம் புதைத்து கதறினாள் ஹரியின் கரங்கள் அவள் முதுகில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தன

ரிலேக்ஸ் டார்லிங் நீ நினைக்கற மாதிரி எதுவும் நடக்கலே. ஏன் வீணா சந்தேகப்படறே?

நோ......சரேலென்று அவன் பிடியிலிருந்து விலகினாள் சுதா

ஏதோ நடந்திருக்கு என்னிடம் மறைக்கிறிங்க ப்ளீஸ் சொல்லிடுங்க ஹரி அது எப்பேர்பட்ட உண்மையாயிருந்தாலும் நான் தாங்கிப்பேன். மனசிலே சந்தேகம் வந்தாத் தான் தாங்கறது கஷ்டம் திஸ் வெய்ட்டிங் இஸ் சம்திங் கில்லிங் ஹரி உங்க வாயிலிருந்து வரப் போற உண்மை எதுவாயிருக்குமோனு நான் துடிச்சிட்டிருக்கேன் சொல்லிடுங்க ப்ளீஸ்

ஹரி உதட்டைக் கடித்துக் கொண்டு மௌனமாய் நிற்கவும், ஆவேசமாய் அவன் தோளைப் பற்றி உலுக்கியவள், தன்னைத் தானே அறைந்து கொள்ளத் தொடங்கினாள். ஹரி என்ன செய்வதென்று புரியாமல் தவித்தவன் முடிவில் அவளை நெருங்கினான் ஒரு தீர்மானத்துடன்

ஒகே சுதா யூ ஆஸ்க்ட் பார் இட் அதனால நடந்ததை சொல்லிட்றேன். நானும் அனுவும்......

அதற்கு மேல் வார்த்தை வராமல் ஹரிபிரசாத் தவிக்க, சுதா உலுக்கினாள்.

சொல்லுங்க ஹரி என்ன நடந்தது?

எல்லாமே நடந்து முடிஞ்சு போச்சு சுதா ஒண்ணும் பாக்கியில்லை நத்திங் இஸ் லெப்ட் பேக்

குற்ற உணர்வுடன் தலைகுனிந்து கொண்டான் ஹரி. ஐ ஆம் சாரி டார்லிங் என்னை மன்னிச்சிடு. என்று புலம்பினான். அவனை நிமிர்ந்து பார்த்த சுதாவின் விழிகளில் அதிர்ச்சி

அடுத்த நிமிஷமே புயலாய் சீறினாள் சுதா.

யூ பீல் சாரி பார் இட்........ சாரி சொன்னால் மன்னித்து மறந்து விடக் கூடிய குற்றத்தையா நீங்க பண்ணியிருக்கிங்க? சாரினு எவ்வளவு சுலபமா சொல்லிட்டிங்க. என்ன தப்பு பண்ணினால் என்ன? இருக்கவே இருக்கு சாரிங்கற ஒற்றை வார்த்தை. ஹரி.......நீங்க கொலையே பண்ணிட்டு சாரினு சொன்னாலும் என்னால அதை மன்னிக்க முடியும் ஆனால் இதை...........கடவுளே இந்த சாரிக்கு என்னால சரினு சொல்லமுடியலையே இட்ஸ் ஆல்ரைட்னு மறக்க முடியலையே
புலி வருது புலி வருதுனு இத்தனை நாளும் சும்மா தான் பயந்துட்டிருந்தேன். ஆனால் இப்போ நிஜமாவே புலி வந்திருச்சே நான் என்ன பண்ணுவேன்...........

அப்படியே தரையில் சரிந்து உயிரே போய்விட்டாற் போல கதறி அழுதவளை தேற்றும் வழி தெரியாமல் தவித்தான் ஹரி

லெட் தி ஸ்லீப்பிங் டாக்ஸ் லை ஹரி வீணே அவற்றை உசுப்பி விட்டு நம்மை நாமே ஏன் காயப்படுத்திக் கொள்ள வேண்டும்?

எச்சரித்த அனுவின் குரல் இன்னும் காதருகில் ஒலித்தாலும் அதையும் மீறிக் கொண்டு விஷயங்கள் நடந்து விட்டன. ஹரியே அவற்றை உசுப்பி விட்டான். அவற்றின் சீறல்களையும் அவன் தானே தாங்கிக் கொள்ள வேண்டும் அடுத்து வந்த நாட்களில் சுதா அவனை சரமாரியாக சாடத் தொடங்கினாள்.

எப்படி ஹரி இந்த மாதிரி ஒரு காரியத்தை பண்ணத் துணிஞ்சிங்க? எனக்கு துரோகம் பண்ண எப்படி உங்களுக்கு மனசு வந்தது? கடவுளே இது அத்தனையும் கனவாயிருக்கக் கூடாதா? ஐயோ இப்படி ஏமாத்திட்டிங்களே......

ஏமாற்றம் கோபம் அதிர்ச்சி அத்தனையும் சுதாவின் புலம்பலில் வெளிப்பட்டது ஹரி அவளை தேடிச் சென்று சமாதானம் செய்த பொழுதெல்லாம் இடியாய் முழங்கினாள்

யூ....யூ..ப்ளடி ரோக்.......ஐ ஹேட் யூ என் கிட்ட வராதிங்க என்னைத் தொடாதிங்க இப்ப எந்த முகத்தோட என்கிட்ட சமாதானம் பேச வர்றிங்க? உங்களுக்கு வெட்கமாவே இல்லையா? போய்டுங்க.....என் முன்னால நிற்காதிங்க.....கெட் அவுட் ஆப் மை சைட்

சுதா படித்த படிப்பெல்லாம் இப்பொழுது ஹரியைச் சரளமான ஆங்கில வார்த்தைகளால் திட்டுவதற்கே பயன்பட்டது என்று சொன்னால் அது பொய்யில்லை சத்தியமான உண்மை

சுதாவின் பார்வையிலிருந்தாலே அவள் கோபம் அதிகரிப்பதைப் புரிந்து கொண்ட ஹரி அலுவலகமே கதி என்று கிடக்க ஆரம்பித்தான். வீட்டிலிருந்தாலும் அவள் முன் இருப்பதை தவிர்த்தான் ஆனாலும் ஒரே வீட்டிற்குள் எத்தனை நாள் தான் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட முடியும்?

எத்தனை நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குது?

உச்சகட்டமான ஒரு நாளில் சுதா இப்படியரு கேள்வியை கேட்க, ஏற்கெனவே நொந்து போயிருந்த ஹரி அவளுடைய இந்தக் கேள்வியில் மிகவும் அடிபட்டுப் போனான்

ப்ளீஸ் சுதா உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் நான் தப்பு பண்ணியதென்னவோ உண்மை தான். ஆனால் அதற்காக அனுவை நான் செட்டப் பண்ணி வெச்சிருக்க மாதிரி பேசாதே இட் வாஸ் எ மொமென்ட்ஸ் மிஸ்டேக் ஒரே ஓரு முறை க்ஷண நேரம் நான் தடுமாறிட்டதால ஆயுசுக்கும் நான் தண்டனை அனுபவிக்கனுமா?

ஒரு நாள் உறவிலேயே அனு கர்ப்பமாகி விட்டாளா?

சுதாவின் குரலில் ஆத்திரம் கொப்பளிக்க ஹரி விரக்தியுடன் பதில் சொன்னான்

நீ நம்பினாலும் நம்பலேன்னாலும் உண்மை அது தான் சுதா

அந்த உண்மை சுதாவிற்கு கசந்தது. தாயும் மகளுமானாலும் வாயும் வயிறும் வேறு தான் என்று பழமொழியே இருக்க சகோதரிகள் இருவருக்கிடையில் மட்டும் அந்நியோன்னியம் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

சநா மனதில் கனன்ற கோபத் தீக்கு கணவனை இரையாக்கிய சுதா அவனுக்கும் கோபம் வரலாம் என்பதையே மறந்து போனாள். எத்தனை நாள் தான் அவனும் பொறுமையுடன் இருப்பான்? சுதாவின் கோபம் எல்லை மீறிய ஒரு நாளில் ஹரியின் பொறுமையும் பறந்து போனது.

லுக் சுதா நான் இவ்வளவு நாளா பணிஞ்சு போனதற்கு காரணமே தப்பு என் மேல இருக்குன்றதால தான். ஆனால் இனியும் நான் பணிஞ்சு போறதாயில்லை. நான் தப்பு பண்ணியது உண்மை தான் ஒத்துக்கறேன். ஆனால் என்னை அந்த தப்பு பண்ண விரட்டி அடிச்சது நீ நீ தான் என்னோட தப்புக்கு முழு காரணம். என்னோட பலகீனம் தெரிஞ்சும் நீ என்னை பட்டினி போட்டே அனுவோ விருந்தே கொடுத்தாள். அதனால தான் அவளிடம் போனேன் உன் மனசுல சதா என்னைப் பற்றி சந்தேகம் தான் இருந்ததே தவிர நீ என்னை சந்தோஷப்படுத்தனும்னே நினைக்கலே அனு என்னை சந்தோஷப் படுத்தினாள் ஸோ நான் அவளிடம் போனேன். அதில் என்ன தப்பு? அப்படியே தப்பிருந்தாலும் அதற்கு காரணம் நீ தான் நீ என்னை ஒழுங்கா கவனிச்சிருந்தேன்னா நான் ஏன் அவ கிட்ட போறேன்? என்னை இந்த தப்பை பண்ணத் தூண்டியது நீ தான். ஸோ ப்ளேம் யுவர்செல்ப் பார் எவ்ரிதிங் தெட் ஹாட் ஹாப்பன் டோன்ட் எவர் ப்ளேம் மீ ரைட்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று சும்மாவா சொன்னார்கள்?

பேசுவது உண்மையிலேயே தன் கணவன் தானா என்று சுதாவே மிரண்டு போகும் அளவிற்கு ஹரிபிரசாத் ஆவேசமாய் அவளையே வார்த்தைகளால் திருப்பி அடிக்கவும் சுதாவிற்கு அதிர்ச்சியில் இதயமே ஒரு நிமிடம் நின்று துடித்தது.

தப்பையும் செய்து விட்டு அதற்கான பழியையும் அவள்மீதே போடுகிறாரே என்ற ஆத்திரமும் அவள் தான் புத்தியில்லாமல் நடந்து கொண்டாள் என்றால் அவருமா பதிலுக்கு புத்தி கெட்டுப் போய் இப்படி ஒரு காரியம் பண்ணுவார் என்ற வேதனையும் சேர்ந்து அழுகையாக கொப்பளித்துக் கொண்டு வர, மடிந்து உட்கார்ந்து அழுதாள்.

அவன் அத்தனை பேசி விட்ட பின்னும் அவனுடன் சேர்ந்து வாழ்வது முடியாத காரியமாய் அவள் மனசுக்கு தோன்றி விட, அடுத்த நிமிடமே வீட்டை விட்டு வெளியேற எத்தனித்தாள்

இப்படியரு அதிரடி முடிவை அவளிடம் எதிரபார்க்காத ஹரிபிரசாத் துடித்துப் போனான்

ஐ ஆம் சாரி டார்லிங்... நான் பண்ணியது தப்பு தான் ஆனால் .....ஆனால் அதற்காக என்னை விட்டுப் போயிடாதே சுதா ப்ளீஸ் சுதா ஐ பெக் யூ என்னை தவிக்க விட்டுப் போயிடாதே நீ வீட்டிலேயே இருந்து என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு நான் ஏத்துக்கறேன் ஆனால் என்னைப் பிரிஞ்சு போற இந்த தண்டனை மட்டும் வேண்டாம் சுதா ப்ளீஸ் நான் தாங்க மாட்டேன்

குழந்தை போல் புலம்பியவனின் கெஞ்சலைக் கொஞ்சம்கூட லட்சியம் செய்யாமல் சுதா நகரவும் முரட்டுத்தனமாய் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் ஹரிபிரசாத்

அவள் முகமெங்கும் தன் உதடுகளை அழுத்திய வேகத்தில் ஐ லவ் யூ டார்லிங் என்று உருகிய உருகலில் என்னை விட்டுப் போயிடாதே சுதா என்று புலம்பிய புலம்பலில் ஒரு கணம் பெண்மைக்கே உரிய பலகீனத்தில் பரிவில் நெகிழ்ந்து போன சுதா மறு கணமே மனதில் தோன்றிய மற்றொரு எண்ணத்தால் மனம் இறுகினாள்.

என் மீது உண்மையிலேயே அன்பிருந்தால் இவர் இப்படியரு காரியத்தைப் பண்ணுவாரா?

இப்பொழுது என்னிடம் கொஞ்சியது போல் தானே அனுவிடமும்...........கடவுளே....

நினைக்கவே உடலெல்லாம் எரிய சரேலென்று விலகி வேகமாய் சுதா வெளியேற ஹரிபிரசாத் செயலற்றுப் போனவனாய் சோபாவில் சரிந்தான்
 

Advertisement

Advertisement

Back
Top