சுட்டும் விழிச் சுடரே அத்தியாயம் 7

Advertisement

parvathi

Active member
Member
HAI EVERYONE HOPE THIS NEW YEAR 2026 BRINGS PEACE N HAPPINESS IN ALL OUR LIFE SORRY FOR THE DELAY IN POSTNG EPISODES FRIENDS KINDLY BEAR WITH ME FOR THE INCONVENIENCE NOW HERE WE GO WITH THE 7TH EPISODE HAPPY READING IN YOUR LEISURE THANKS TO ALL READERS :love: 🙏 🙏



அத்தியாயம் 7

அன்று பௌர்ணமியானதால் வெண்ணிலவு பால் வண்ணத்தில் முழு நிலவாக பவனி வந்தது. தென்றல் காற்று சுமந்து கொண்டு வந்த தோட்டத்து முல்லையின் இனிய நறுமணத்தை ஆழ்ந்து அனுபவித்த வண்ணம் பால்கனியில் கூடை நாறகாலியில் சாய்ந்திருந்தான் ஹரிபிரசாத்.

முன்னிரவு நேரத்தில் பால்கனியில் சுதாவின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு பௌர்ணமி நிலவைப் பார்த்து ரசிப்பதென்றால் ஹரிக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அப்படி ரசித்தும் இருக்கிறான். ஆனால் இப்பொழுது?

ஐரிபிரசாத் ஏக்கத்துடன் திரும்பிப் பார்த்தான். படுக்கையில் சுதாவும் தூக்கமின்றி புரண்டு கொண்டிருப்பது தெரிந்தது.

என்ன சுதா தூக்கம் வரலையா?

கட்டில் விளிம்பில் வந்தமர்ந்து கேட்டவனின் குரலில் திடுக்கிட்டவளாகத் திரும்பினாள் சுதா. அவள் கன்னங்களில் கண்ணீர் கோடிட்டிருப்பதைக் கண்ட ஹரி மெதுவாக கேட்டான்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே அழுது கொண்டிருப்பதாக உத்தேசம்?

அவனை நிமிர்ந்து பார்த்த சுதா பதிலேதும் சொல்லவில்லை.. உதட்டை அழுந்தக் கடித்து அழுகையை அடக்கப் பார்த்தாள். ரோஜா இதழ்களில் வெண்முத்துக்களாய் பதிந்திருந்த வரிசைபற்களை ரசனையுடன் கவனித்த ஹரி சட்டென்று மனைவியை தன் அருகில் இழுத்துக் கொண்டான் அவன் மார்பில் முகம் பதித்த சுதா மெதுவாக கேட்டாள்.

எனக்கு குழந்தை பிறக்க வழியில்லை என்று தான் இப்பல்லாம் நீங்க என்னைத் தேடறதில்லையா ஹரி?

மை காட் அப்படியரு தாழ்வு மனப்பான்மையா உனக்கு? ஏன் டார்லிங் குழந்தை வேண்டும் என்று நீ தானே ஆசைப்பட்டாய். குழந்தை முக்கியமாக எனக்கு என்றைக்காவது தோன்றியிருக்கிறதா?

குழந்தைக்காக இல்லையென்றால் ஒருவேளை நான் உங்களுக்கு அலுத்துவிட்டேனா?

கடவுளே......ஏன் சுதா உன் கற்பனை இவ்வளவு மட்டமாகப் போகிறது? டாக்டர் உனக்கு நல்ல ஓயவு வேண்டும் என்று சொல்லியிருந்ததால் தான் நான் உன்னை தொந்தரவு செய்யவில்லை. பிஸிக்கலாக மட்டுமின்றி மென்டலாகவும் நீ அப்செட் ஆகியிருந்தாய். உனக்காக நான் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டிருந்தால், நீயானால் என்னையே சந்தேகப்படுகிறாயே. ம்......நான் விலகியிருந்ததை நீ இப்படி விபரீதமாக அர்த்தம் பண்ணிப்பேனு எனக்கு முன்னாலேயே தெரிஞ்சிருந்தால் நான் இத்தனை நாட்களை வேஸ்ட் பண்ணியிருக்கவே மாட்டேன்.

வெகு தீவிரமாகச் சொன்னவன் சட்டென்று சுதாவின் காதருகில் குனிந்து கொஞ்சலாக கிசுகிசுத்தான்.

இன்னிக்குப் பாரேன் நீ போதும் போதும்னு கெஞ்சினாலும் உன்னை விடப் போறதில்லை.

சீ....... சுதாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

நிஜம் தான் டாரலிங். இத்தனை நாளும் நீ குழந்தையை நினைச்சே கவலைப்பட்டுட்டிருந்தே. என்னை கவனிக்கவேயில்லை. நாலு மாசமா நான் தவிச்ச தவிப்பு போதும் சுதா. இனியும் என்னைத் தவிக்க விட்டுடாதே. ப்ளீஸ். என் பலகீனம் உனக்குத் தெரியாதா சுதா? ஐ மிஸ்ட் யூ எ லாட் ஹனி.........என்று ஹரி அவள் தோளில் முகம் பதித்து புலம்பிய பொழுது, அவள் முகமெங்கும் தன முத்திரையைப் பதித்த பொழுது, ஆர்வமாய் அவள் இதழ்களை தன் இதழ்களால் அழுத்திய பொழுது, ஆசையுடன் அவள் இடையைச் சுற்றி தன் கைகளால் வளைத்துக் கொண்டு ஐ லவ் யூ டார்லிங் என்று கொஞ்சிய பொழுது, எனக்கு நீ தான் சுதா வேணும் குழந்தையெல்லாம் வேண்டாம் என்று தாபத்துடன் கெஞ்சிய பொழுது, சுதா கணவனின் வேகத்தையும் மோகத்தையும் சமாளிக்க முடியாமல் திணறிப் போனாள்.

கடவுளே..........என்னை இந்த அளவிற்கா மிஸ் பண்ணியிருக்கிறார் ஹரி? என்மீது இவ்வளவு ஆசையா? நான் இந்த வகையிலாவது அதிர்ஷ்டம் உடையவளாக இருக்கிறேன் என்றால் ஆண்டவனே உனக்கு என் கோடி நன்றிகள்

சுதா நெகிழ்ந்து போனாள். ஹரி இத்தனை வேகத்துடன் அவளை இதுவரையில் அணைத்ததேயில்லை. மென்மையாக மெதுவாக வீணையை மீட்டுவது போல், பூவைத் தொடுவதைப் போல்,ஒரு நளினத்துடன் தான் அவளை நெருங்குவான். ஆனால் இன்று?

இவன் பழைய ஹரியில்லை. புது ஹரி இத்தனை நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை, நாலு மாதங்களாக அடக்கி வைத்திருந்த தாபத்தை, ஒரே நாளில் மடை திறந்த வெள்ளமெனக் கொட்டி, அந்த சங்கமத்தில் தானும் கரைந்து அவளையும் மூழ்கடிக்க நினைக்கும் ஹரி

மெய்மறந்திருந்த சுதாவை தொலைபேசி மணியடித்து அழைத்தது.. கணவனை விலக்கி விட்டு எழ முயன்றவளை ஹரி விடாமல் பற்றி இழுத்தான்.

ஐயோ....டெலிபோன் மணியடிக்குதுங்க. போய் பேசிட்டு வர்றேன். நான் எங்கே ஓடிடப் போறேன்?

வேண்டாம் நானே பேசறேன் .இதற்குத் தான் பெட்ரூமில் போன் கனெக்ஷன் வேண்டாம்னு சொன்னேன். நீ கேட்டாயா? ஸ்டுபிட்....நேரங்காலம் இல்லாமல் தொந்தரவு பண்றது யாருன்னு தெரியலை.

கோபத்துடன் எழுந்து சென்றவன் தொலைபேசியில் வந்த செய்தியில் மனம் இளகி, புன்னகையுடன் திரும்பி வரவும், சுதா வியப்புடன் பார்த்தாள்.

யாருங்க இந்த நேரத்தில்?

ஸ்வப்னா தான் சுதா. அவ அக்காவுக்கு சீரியஸ்னு ஊருக்கு கிளம்பிட்டிருக்கா. நாளைக்கு ஆபீஃஸ்க்கு வரமுடியாதுன்னு சொல்லத் தான் போன் பண்ணியிருக்கா.

ஒரு லீவ் லெட்டர் அனுப்பக் கூடாதா? அர்த்த ராத்திரியில் சொல்லனும்னு அப்படி என்ன அவசியம்?

அவசியம் தான் சுதா. நாளைக்கு மகாபலிபுரத்தில் நடக்கப் போற டைரக்டர்ஸ் மீட்டிங்ல முக்கியமான நோட்ஸ் அவ தான் எடுக்கனும். இப்ப அவ வரலேன்னா, நான் வேறு ஆள் ஏறபாடு பண்ணனுமில்லையா? லீவ்லெட்டர் எழுதினா எனக்கு தாமதமா தான் விஷயம் தெரியும் அதான் லேட் நைட்னாலும் பரவாயில்லைன்னு போன்ல தகவல் சொல்லியிருக்கா. அவளோட கடமை உணர்ச்சி முதலாளியான எனக்கே இருக்கறதில்லேன்னா பார்த்துக்கயேன். சும்மா சொல்லக் கூடாது சுதா. ஷி இஸ் ஸ்மார்ட் இன எவ்ரிதிங்...

தப்பு ஹரி இப்பொழுது இதை சொல்லியிருக்க வேண்டாம் அதுவும் சுதாவிடம். ஒரு மேலதிகாரியாக தன்னிடம் பணிபுரியும் ஊழியரின் பொறுப்புணர்ச்சி அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது இயற்கை தான் .ஆனால் அந்த ஊழியர் ஒரு அழகான பெண்ணாக, மனைவியின் வெறுப்புக்குப் பாத்திரமான நபராக இருந்தால் அவனுடைய பாராட்டு மனைவியின் கோபத்தைத் தூண்டி விடுவதும் இயற்கை தான்

மனைவியானவள் கணவன் தன்னிடம் வேறொரு பெண்ணைப் பற்றி பாராட்டிப் பேசுவதை விரும்ப மாட்டாள் என்ற சாதாரண மனோதத்துவம் ஹரிபிரசாத்திற்குத் தெரியாமல் போனது.

விளைவு..........இயல்பாக வந்து அவளை அணைத்தவனின் கைகளை விலக்கி விட்டாள் சுதா.

எ.....என்ன சுதா?

புரியாமல் பார்த்தவனை கோபத்துடன் முறைத்தாள் சுதா.

உங்க செகரெட்ரி அதான் மாஜி காதலி ஸ்வப்னா எல்லாத்துலயும் ஸ்மார்ட்னா, இதற்கும் அவளிடமே போங்களேன், யார் வேண்டான்னா?

சுதா.........ஹரிபிரசாத்தின் குரல் ஓங்கி ஒலித்தது. அடுத்த நிமிடமே தன் குரலைத் தழைத்துக் கொண்டான் அவன்.

மைண்ட் யுவர் வொர்ட்ஸ் சுதா. நான் ஸ்வப்னாவோட பாஸ். அவளோட பொறுப்புணர்ச்சி எனக்கு சந்தோஷத்தை தந்தது. அந்த சந்தோஷத்தை மனைவியான உன்னிடம் பகிர்ந்துக்க நினைச்சது தப்பா?

ஆஹா.......தப்பேயில்லை. நீங்க பேசறது செய்யறது எதுவுமே தப்பில்லை. நாளைக்கு நீங்களும் அவளும் மகாபலிபுரம் போறதா இருந்திருக்கிங்க. அதைப் பற்றி ஒரு வார்த்தை என்னிடம் சொன்னிங்களா?

நான் ஆபீஸ் விஷயமா எங்கெங்கே போறேன்னு உனக்கு லிஸ்ட் போட்டு ஒப்பிக்கச் சொல்றியா? வாட் நானசெனஸ் ஆர் யூ டாக்கிங் சுதா?

நான் பேசினால் உங்களுக்கு நான்சென்ஸாத் தானிருக்கும். ஏன்னா நான் உங்க செகரெட்ரி அளவிற்கு ஸ்மார்ட் இல்லையே?

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி விட்டது. ஹரி அருகில் நெருங்கி சமாதானப்படுத்தப் பார்த்தான்

சாரி டார்லிங் நான் தான் தப்பாப் பேசிட்டேன். என்னை மன்னிச்சிடும்மா ப்ளீஸ்

நீங்க இப்ப எதற்காகக் குழையறிங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் குழைவையெல்லாம் அவளிடமே வைத்துக் கொள்ளுங்கள். என் கிட்ட வராதிங்க.

சவுக்காலடித்தாற் போல் உணர்ந்தான் ஹரிபிரசாத். சற்று முன் வரை அவன் கையணைப்பில் மல்லிகையாய் மலர்ந்தவள், இப்பொழுது நெருப்பாய் சுடும் விந்தை தான் என்ன?

எங்கோ எப்பொழுதோ படித்த முரண்பாடே உன் பெயர் தான் பெண்மையா? என்ற கவிதை நினைவிற்கு வர, ஹரி தலையணையில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

என் கிட்ட வராதிங்க.......

அவளுடைய வார்த்தைகள் மனதை வலிக்க வலிக்க அறைந்தன.

வேற யார் கிட்டடீ நான் போவேன்?

ஏமாற்றத்தில் மனம் எரிமலையாய் கொதித்தது.. முன்னிரவில் துளிர் விட்ட நெருக்கம் மலராமலேயே வாடி விட்டது பின்னிரவு நேரத்தில்.
 

Advertisement

Advertisement

Back
Top