Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-04

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-04



பன்னை வீட்டில் வெளியே தாவரத்தில் கயிறு கட்டிலில் பூவரசன் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்துக் யோசித்து கொண்டிருந்தான்.

“டேய் மாப்பிள்ளை என்னடா யோசனை பலமா இருக்கு, எந்த கோட்டையை பிடிக்க இம்பூட்டு யோசனை“.

“வா மாமா எப்ப வந்தே ஊரிலிருந்து“ ,பரதன் பூவரசனின் அம்மா வழி சொந்தம் பூவரசோடு ஐந்து வயது பெரியவன்,

என்னடா சாப்பிடாத படுத்துட்டு இருக்க

“பசிக்கல மாமா, பொம்மிய அடிச்சிட்டேன், அப்படியே நிக்கிறா மாமா எனக்கு கோவத்தில என்ன செய்யறேன் தெரியில. “

“ஆமாமடா அக்கா சொன்ன, ஏதோ வீடியோ போட்டாளாமே, அதுல நீ என்னமா முடிச்சு போட்டியாமே உன் அக்காவுக்கு அத போட தெரியாதாம், எவ்வளவு அழகாக போட்டான் என் தம்பி எல்லாருக்கும் சொல்லி பெருமையில்ல பட்டுட்டு இருக்கு“.

“இந்த அக்காவுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாது, அதவிடு மாமா , நேற்று தியேட்டருக்கு கூட்டிட்டு போனா , எல்லாம் தள்ளிட்டு வந்த கேஸா இருக்கு, இவ ஏதோ பிளான் பண்ணிட்டா மாமா, நான் எஸ் ஆயிட்டேன் “.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு மாமா, என்னைய கல்யாணம் பண்ணிப்பா நினைக்கிறேன். “

“நீ ஏண்டா மாப்பிள்ளை பயப்படுற, அந்த புள்ள உசிறே வச்சிட்டு இருக்கு, “

“இருக்குட்டும் மாமா, நாளை கல்யாணம் செஞ்சிட்டு மாமா படிக்காதவன் பிறகு யோசிட்டா, வாழ்க்கை நல்லா இருக்காது மாமா, டாக்டர் படிக்க வைச்சிருக்கேன் அவளுக்கு டாக்டர் மாப்பிள்ள தான் சூட் ஆகும். “

“அவதான் ஒத்துக்க மாட்டாளே“

“மாமா இந்த ராக்காயி கிழவி சொல்லுது, நீ சுந்தரியை படிக்க வைக்கற மாதிரி படிக்க வச்சி அந்த புள்ளயே கட்டிக்போறே சொல்லுது. “

“மாப்பு, அவன் பேரனை வண்டி விஷியத்துல அடிச்சோம் தெரியுமா, அந்த காண்டுல பேசுது, அதுயெல்லாம் ஒரு ஆளு போடா. “

“சரி நான் கேட்கிறேன் , நீ ஏன் டாக்டர் படிக்க வச்சே. இப்ப அதுதான இடிக்குது. “

“அவ ரொம்ப புத்திசாலி மாமா, அந்தப்புள்ள அறிவ வீனடிக்கலாமா, ஐந்தாவது படிக்க சொல்லே சொல்லிட்டா , இந்த உலகத்தில உன்னைய தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்“.

“அண்ணே சொல்லி லோகு ஓடிவர“ ,

“என்னடா இப்புட்டு விரசா வர“

“அண்ணே நம்ம வாய்க்கால போற தண்ணிய அவங்க பக்கம் திருப்பிவிட்டானே இந்த துரைப்பாண்டி. “

“இவன் அடங்க மாட்டானா மாமா, கிளம்பவோம் வாங்க, டேய் வண்டியை எடு. “

----------------------

“என்னடி ஆச்சு , மாமா கூட போனியே“-சங்கரி.

“போடி சங்கரி ,நேத்து நம்ம போட்ட பிளான் வேஸ்டுடி, மாமா உஷாராயிட்டாரு என்னடி பண்ணறது“.

“நீ வேணும் சொல்லற, உன் மாமா வேணா சொல்லறாங்க , என்னடி உங்களுக்குள்ள நடந்தது. “

சில வருடங்கள் பின்பு, பூவரசன் பதிரொன்றாம் வகுப்பு படிக்கும்போது , டேய் எங்கடா கிளம்புற மேட்ச் விளையாட வரேன் சொன்னே கூட படிக்கும் தோழர்கள் கேட்க.

“இல்லடா மச்சான், என் பொம்மி ஊருலிருந்து வந்திருக்கா, நான் போனோம் வீட்டுக்கு வெளியே நிற்பாடா நான் வருவேன் நினைச்சு வரனேடா சொல்லி வண்டியை எடுத்து கிளம்பினான். “.

“யாருடா பொம்மி“, ஒருவன் கேட்க,மற்றோருவன் , “அவன் அக்கா பொண்ணுடா“,

“என்னடா சொல்லுற வியப்பா கேட்க“

“ம்ம் பிப்த் படிக்குறா போதுமா, போடா“.

சின்ன பிராக் போட்டு பார்க்க கொஞ்சம் குண்டா , இரட்டை பக்கம் குடும்மி போட்டு ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள் சுந்தரி. மாமாவின் வண்டியை பார்த்து மாமா சொல்லி ஓடி வந்தாள், அவளை தூக்கி பொம்மி செல்லம் கொஞ்சிக் கொண்டு சுற்றினான். அவளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் செல்ல அவன் அப்பா மடியில் பவி உட்கார்ந்திருந்தாள். பொம்மிம்மா கீழே இறங்கு, ஏன் அக்கா அழறா.

ஆனந்தவல்லி தன் அப்பா, அம்மாவிடம் அழுதுக் கொண்டிருந்தாள், “பூவரசன் எண்ணாச்சு அக்கா“ என்று கேட்க, அக்காவால் சொல்ல முடியவில்லை தன் தம்பியிடம்.

“மாமா வா நான் சொல்லேறேன்“ தனியே அழைத்துச்சென்றாள் சுந்தரி.

“எண்ணடா ஆச்சி, அம்மா ஏன் அழுது. “

“அது மாமா அப்பா இன்னோரு அம்மாவ கூட்டிட்டு வந்தாங்க அதான் அம்மா சண்டையை போட்டு வந்துடுச்சி. “

“அக்கா அக்கா கத்திக்கொண்டே உள்ளே வந்தான் , பொம்மி சொல்றது உண்மையா அக்கா“, ஆனந்தவல்லி அமைதியாக இருக்க.

“அப்பா போய் கேட்டாருடா அப்பாவ அசிங்கபடுத்திட்டாங்க, இனிமே நான் அந்த மனுஷனோடு வாழ மாட்டேன். இரண்டு பெண்ணை பெத்தவன் செய்யற காரியமா இது , நான் இங்கியே இருந்திறேன். என்னைய உன்கூடவே வச்சிக்கப்பா அழ ஆரம்பித்தாள்“.

பக்கத்து ஊரு நல்ல வசதியான குடும்பம் ,தன் மூத்த பெண்ணை கொடுத்தார். பண்ணிரன்டு வயசு வித்தியாசத்தில் இன்னோரு பெண்ணை வைத்திருப்பாரு மாப்பிள்ளை சண்முகவேலு.( அதாங்க நம்ம ஹீரோவுக்கு கோவம் பெயரை கேட்டாவே அடிப்பான்).

வண்டி எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்.நேரே மாமாவிட்டினுள் நிறுத்தினான், “மாமா வெளிய வா, “

“யாருடா இங்க வந்து சத்தம் போடறது“- பாக்கியம்,

“ஓ நீதான் எங்க மாமனை மயக்கி வச்சிருக்கியோ, அசிங்கமாயில்ல நீ யாரு எங்க அக்கா இடத்துல வெளியே போ, இல்ல கொண்ணேபுடுவேன் மரியாதையா வெளியே போடி“.

“நீ யாருடா எங்க அக்காவ வெளியே போக சொல்லறது“ முறைத்துக்கொண்டு வந்தான் சரவணபாண்டி, பாக்கியத்தோட முதல் தம்பி தன் இரு தம்பிகளை கூட்டிக்கிட்டு கணக்கு எழுதும் வேலைக்கு வந்தாள். சன்முகவேலுவிடம் பழக்கம் ஏற்பட்டது.

அதற்குள் வெளியே வந்த சண்முகவேலு, “ சின்ன பையன் நீ எதுக்கு பேச வர“.

“சின்னத்தனமான வேலை செஞ்சா , சின்னபையன் தான் பேச வருவான். இப்ப இவளை வீட்டை விட்டு அனுப்ப போறீயா இல்லையா. “

“என்னடா மரியாதை கெடுது, உங்க ஐயா செய்யாதையா நான் செஞ்சிட்டேன் இப்படி குதிக்கிறவ. “

“எங்க ஐயா முதல் பொண்டாட்டி இறந்த பிறகு கல்யாணம் பண்ணாரு, உசிறோடு இருக்கயில்ல“.

“அதுக்கு நான் என்ன செய்ய உன் அக்கா உசிரோடு இருக்கா“

“மாமா வாய அடக்குங்க, நீங்க அனுபவிப்பிங்க , எல்லாமே இருக்கும் ஆனா நீ கஷ்டபடுவிங்க, எங்க அக்காவ ஏமாத்திட்டிங்க இல்ல நீங்க நல்லா இருக்க மாட்டிங்க. “

சங்கரி செல் அடிக்க, ஏய் அப்பா போன்ல கொஞ்ச நேரத்தில வந்திடுறேன் சுந்தரி.

-----------

ஏய் துரைபாண்டி , எங்க வாய்க்கால ஏன்னடா வெட்டி விட்ட, போன மாசம் தான அடிவாங்கன , நீ அடங்க மாட்டியா.

என்னடா ஓவரா பேசற,இந்த வாய்க்கால நானா வெட்டிவிட்டேன் நீ பார்த்தியா, இது எங்க மாமா நிலம்.

எதுடா உங்க நிலம், எங்க ஐயாவோடது கல்யாணத்துக்கு சீதனமா கொடுத்ததுடா உன் அப்பனதுதா இது, ஓடிவந்தவ தான உங்க அக்கா.

எப்படி கல்யாணத்துக்கு மூணுநாள் இருக்கப்ப உன்ன கட்டிக்க மாட்டேன் சொல்லி ஓடிபோனாளே கல்யாணப்பொண்ணு அந்தமாதிரியா-.

டேய் சொல்லி அவன் சட்டையை கொத்தாக பிடித்து கண்ணுமண்ணு தெரியாமல் அடி கொடுத்தான். பரதன்,லோகு தடுத்து பூவரசனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார்கள்.

மாப்பிள்ளை சுந்தரி பார்த்தா திட்டுவாடா, இன்னிக்கு நேத்தா செய்யறாங்க விடுடா.

மனசு சரியில்ல மாமா , இருவரும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்.

.ஹாஸ்டலில் சுந்தரி தன் மாமாவின் போட்டோவை பார்த்து, கியூட் மாமா நீ ,என் செல்லம் சொல்லி முத்தமிட்டாள்.

பொம்மிய அடிச்சேதே மனசு சரியில்ல, இதுல இவன்வேற ரணமாக்கறான்

இவ வேற முத்தம் கொடுக்கறா மாமா.

டேய் மாப்பு யாருடா, பேய், பிசாசு ஏதாவது இருக்கா,நான் உன் மதனிய ஊருல விட்டுவந்தேன், வீட்டுல யாருமில்லையே இங்கேயே தங்கலாம் நினைச்சா .

மாமா, சுந்தரி மாமா,கண்ணத்தில தரா நேரங்காலம் தெரியாத நான் எவ்வளவு வெஜனத்தில இருக்கேன்.

டேய் உனக்கு மப்பு ஏறிப்போச்சு,நீ தூங்கு

ஐயோ மாமா நான் நிசாமாதான் சொன்னேன், நீ வேணா போன்போட்டு கேளு.

போனை எடுத்து சுந்தரிக்கு போட்டான்,

அவள கல்யாணம் பண்ணிக்க மாட்டானாம், டிஸ்பிலேல அவ போட்டாவ போட்டுப்பான் கேட்டா என் பொம்மி மாமா சொல்லுவான்.

---------------------











 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அடப்பாவி சண்முகவேலு
அருமையான ஆனந்தவல்லியை துரத்தி விட்டுட்டு எவளோ ஒரு (அ)பாக்கியத்தை சேர்த்துக்கிட்டானா?
துரைபாண்டியும் பாக்கியத்தின் தம்பியா?
வேணும்னே பூவரசனிடம் வம்புக்கு வர்ற மாதிரி தோணுதே
பதினொன்றாம் வகுப்புக்கு மேல் பூவரசன் படிக்கவில்லையா?
ஏன்? என்ன காரணம்?
படிக்காததால்தான் தன்னை விட்டுட்டு பூவு சுந்தரிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறானா?
ஆனால் பூவரசனைத் தவிர வேற யாரையும் சுந்தரி கல்யாணம் பண்ண மாட்டாள் போலிருக்கே
 
Last edited:
அக்கா புருஷன் தப்பு பண்ணிட்டு
தெனாவட்டு பேசுறான்
சுந்தரி மாமன விட மாட்டா போல
 
அக்கா புருஷன் தப்பு பண்ணிட்டு
தெனாவட்டு பேசுறான்
சுந்தரி மாமன விட மாட்டா போல
Thk u sis for ur support
 
Top