Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-05

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-05



“என்ன பரதா மாமா போன்ல வர“ வீடியோ காலில் பேசினாள் சுந்தரி.

“உனக்கு என்னிக்காவது மரியாத தெரியுது ,நீ என்னத்த டாக்டர் படிச்சே“

“சரி என்ன விஷியம் சொல்லு பரதா, மாமா போன் வந்தவுடனே மாமா பேசுதோ நினைச்சேன். “

“சரி நீ பூவரசுக்கு முத்தம் கொடுத்தியா“

“என்ன உளற யாரு சொன்னது, “

“உன் புத்திசாலி மாமன் சொன்னான், அவன் டென்சனா இருக்க சொல்ல தொந்தரவு செய்யறீயாம்“.

“மாமா எங்க“

“தோ இருக்கான் பாரு“ என்று கேமிராவை அவன் முன்னாடி நீட்டிக் காட்ட,மாமா கையில என்ன வச்சிருக்கே.

“ஏய் லூஸு, என்ன பண்ணறடா “போன ஆப் செய் பூவரசன் புடிங்கி நிறுத்தினான்.

“கூறுக்கெட்ட மாமா நம்ம குடிக்கிறது தெரியும். “

திரும்ப போன் அடித்தாள் சுந்தரி ,போனை பூவரசு எடுத்து , என்ன உனக்கு

என்று கேட்டான்.

நான் முத்தம் கொடுத்ததை நீ உணரியா மாமா, பூவரசன் முறைக்க, என்ன மாமா கையில ,

அது லேமன் டீ தொண்ட கரகரப்பா இருந்ததுன்னு.

உன் மடியில உட்கார வச்சித்தான் காது குத்துனாங்க எனக்கு.

இப்ப என்னடி உனக்கு நான் சரக்குதான் அடிக்கிறேன்,என்னைய கஷ்டப்படுத்திட்டான் அவன்.

எவன் மாமா உன்னை பேசியது.

போதும் என்மேல உள்ள அக்கறை தூங்குடி போய் சொல்லி போனை கட் செய்தான்.

கதவை திறந்து உள்ளே வந்த சங்கரி ,இப்ப சொல்லு சுந்தரி உன் பிளாஷ் பேக்க, உங்க மாமா போய் உங்க அப்பார திட்டிட்டாரு பிறகு என்னாச்சு.

அன்னிக்கு நைட் வீட்டில யாரும் சரியா சாப்பிடல, படுக்க போன எங்க தாத்தா அடுத்த நாள் காலையில எழுந்துக்கவே இல்ல, தூக்கத்தில இறந்துட்டாரு.

எங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சி, இந்த இழப்ப தாங்கவே முடியல எங்க மாமாவால,அவருடைய இறுதி ஊர்வலம் முடிஞ்சவுடன், அன்னைக்கு நைட் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.நான் எங்க மாமா ரூமுக்கு போனேன்.

“மாமா,மாமா“ தொட்டு பூவரசனை எழுப்பினாள். “என்ன பொம்மிம்மா. “

“மாமா எனக்கு ரொம்ப பசிக்குது“ என்று அழ ஆரம்பித்தாள்.

“என்னடா சாப்பிடலையா நீ அக்கா,அக்கா“ தன் அக்காவை அழைத்தான்.

ஒரு தட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்தாள். “ அவ சாப்பிட மாட்டேன் சொல்லறா ,நீயே கேளு என்னனு , நான் போய் அம்மாவ பார்க்கிறேன்“.

“ஏன் பொம்மிம்மா சாப்பிடல , பசிக்குது சொல்லற. “

“நீயும் நேத்து இருந்து சாப்பிடல நான்தான் பார்த்தேனே. நீ சாப்பிட்டாதான் நானும் சாப்பிடுவேன். “

“கிட்டவா, ஆ சொல்லு“ என்று கையில் சாதத்தை எடுத்து ஊட்ட வந்தான். “மாமா முதல்ல நீங்க சாப்பிடுங்க பிறகு நானு“.

ஆச்சரியமாக பார்த்தான் இந்த குட்டிபெண் நம்மை இவ்வளவு கவனிக்குதா, சரி நான் சாப்பிடுறேன், இவன் சாப்பிட்டு சுந்தரிக்கு ஊட்டினான். தானாவே அவன் கண்களில் கண்ணீர் சுறந்தது.

பூவரசனின் கண்ணீரை தன் பிஞ்சு விரலால் துடைத்தாள், “மாமா ஏன் அழறீங்க , தாத்தா இல்லைன்னா, நான் உன் கூடவே இருக்கேன் மாமா.

எப்பயும் உன் விட்டு பிரிய மாட்டேன் மாமா. “

“என் செல்லம் சொல்லி“, அவள் நேற்றியில் முத்தமிட்டான் பூவரசன்.

“ச்சீ எச்சி மாமா“ சொல்லி தன் நேற்றியை துடைத்தாள்.

“ஏய் வாயாடி, மாமா எச்சியா உனக்கு, அப்பறம் எப்படி மாமாவதான் கட்டிப்பேன் பாட்டிக்கிட்ட சொன்ன. “

“அதுவா பூவா, பக்கத்து வீட்டு பாட்டிதான் நீ மாமா கூடவே இருக்குனும்னா மாமாவே கட்டிக்க ,அதான் நாணும் ஓகே சொன்ன. “

“பொம்மிம்மா, நீ சின்ன பொண்ணு , இப்படியேல்லாம் பேச கூடாது“.

“அப்ப பெரிய பொண்ணு ஆனா கட்டிக்குவியா பூவா“.

“ம்ம் இல்ல நீ நல்லா படிக்கனும், என்னால இனிமே படிக்க முடியாது ,நீ நான் என்ன படிக்க ஆசைப்பட்டோனோ அதை படிக்கணும் ,மாமா பேச்ச கேப்பியாடா“

“சரி மாமா. “

“நீ போய் தூங்கு“

“நான் இங்கே தூங்கவா மாமா“

சரி நீ கட்டில்ல படுத்துக்கோ , நான் கீழே படுத்துக்கிறேன்.

அடுத்த மூணு நாளும் சுந்தரி பூவசரனின் ரூமிலே படுத்தாள். சுந்தரி தூங்கியவுடன் தூக்கிச்சென்று அக்காவின் ரூமில் படுக்க வைத்தான். சேலத்தில் சுந்தரியை ஆறாம் வகுப்பு சேர்த்துவிட்டான்.அவன் படித்த பள்ளியில் பூவரசன் டிசி வாங்கினான்.

தலைமை ஆசிரியர், அவனுக்கு டிசி வழங்க மாட்டேன் என்றார்.

“பூவரசு, நீ நல்ல படிக்கும் மாணவன் , நான் எப்படி உனக்கு தரது“.

“சார் , வீட்டல பெரியவங்க அம்மா, அக்காதான் ஆனா அவங்களால மில்லோ, தோப்பு, தோட்டமோ பார்க்க தெரியாது , நான்தான் இனிமே பார்க்கனும். என்னுடைய அக்கா பொண்ணனைத்தான் இங்கே சேர்த்திருக்கேன்,பீளிஸ் கீவ் மை டிசி,அண்டர்ஸெண்ட் மை சிட்டுவேஷன். சார். “

எங்க மாமா நல்லா படிப்பாங்க,பத்தாவது வரை ஊட்டி கான்வேன்ட்ல சேர்த்தாரு எங்க தாத்தா. இன்னும் எங்க ஊருக்கு டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் வரது எங்க மாமாவுக்கு மட்டும்தான். செமையா இங்கிலிஷ் பேசும், கிராம்மத்துல எந்தவொரு விஷியமானலும் மாமாவ கேட்டுதான் செய்வாங்க.

அக்கா பவி சுமார படிப்பா ,அவள ஊருல உள்ள ஸ்கூல சேர்த்தான்.

அன்னிக்கு வயல்வேலை இருந்துதால வீட்டுக்கு வராமல் பூவரசன் பண்னைவீட்டிலே தங்கிட்டான்.இரவு 11.00 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு யாரு இந்த நேரத்தில, கதவை திறந்தான்.

ஆனந்தவல்லி கையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் சுந்தரி,

“ஏய் பொம்மி ஏன் அழுவுற, அக்கா என்னாச்சு,இந்த நேரத்தில. “

“பூவரசு,இவ உன்னையை பார்க்கணும் ஓரே அடம்“ .

கோபம் வந்துவிட்டது பூவரசணுக்கு, “என்ன பொம்மி சின்ன பொண்ணா நீ,அறிவில்ல நாளைக்கு வரபோறேன் எதுக்கு இப்படி பண்ணறவ. “

“விடுடா இவ இப்படிதான் நான் போய் ரூமுல படுக்குறேன். “

சிறிது நேரம் கழிச்சு மெல்ல கதவை திறந்து வெளியே வந்தாள் சுந்தரி. இவள் போவதை பார்த்த ஆனந்தவல்லி எங்கே போறா இவ நினைத்து பின்னே சென்றாள்.

பூவரசன் கால் வலியால் புரண்டி புரண்டி படுத்தான்.உள்ளே சென்ற சுந்தரி தன் கையால் தையலத்தை எடுத்து கால்களில் தடவி விட்டாள். திடுக்கிட்டு எழுந்தான் பூவரசன் , “பொம்மி என்ன பண்ணுற“ என்று காலை மடக்கினான்.

“மாமா நீ காலையிலிருந்து வயல்ல நின்னுட்டே இருந்தே உனக்கு கால் வலிக்கும் தான் நான் வந்தேன்“.

“பாருடா, என் பொண்ணு பாசத்த இதுல ஓரு பங்குக்கூட எனக்கில்ல நான் எல்லாம அக்கா சொல்ல கூடாதுடா இந்த சின்ன வயசுல குடும்ப பாரமே உன் தலையில ஏத்திவிட்டேன்“.

“நான் கால பிடிச்சுவிடவா பூவரசு, “

ஐய்யோ அக்கா, என்ன இது என் குடும்பத்துக்கு நான் செய்யாம யாரு செய்வா. போக்கா போய் தூங்கு.

மாமா நான் இங்கே படுத்துக்கவா ,

அவன் முறைக்க, பீளீஸ் கீழ படுத்துக்கிறேன்.

இவ கவனம் முழுசா நம்ம மேல இருக்கு, படிப்பு கவனம் குறையும் என்று பூவரசு யோசிக்க ஆரம்பித்தான்.

அடுத்த நாள் தன் அக்கா பொம்மியிடம் பேச ஆரம்பித்தான், பொம்மிம்மா நீ ஸ்கூல் போய் வர சிரமம்மா இருக்கு, இனி ஹாஸ்ட்டல் சேர்த்துவிட போறேன் .

இல்ல நான் உன்னைய விட்டு போக மாட்டேன் பூவா.

சரி ஆனா நேத்து பண்ண மாதிரி செய்ய கூடாது. அப்பறம் அக்கா நான் பண்னை வீட்டிலே தங்கிக்கிறேன் பவி பெரியவள ஆயிடா, பத்தாத பொம்மி தினமும் என் ரூமுலே தூங்கறா.

இவளுக்கு பயந்து நீயேன்டா உன் வீட்ட விட்டு போறே.

இல்லக்கா இது சரி வராது, இங்க பாரு பொம்மி ,வாரத்துல ஞாயிற்று கிழமை மட்டும் உன் பார்க்க வரேன்.எட்டாவது மேல ஹாஸ்ட்டல் தான் நீ புரிஞ்சிக்கோ.







 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top