Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-08

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-08


எங்க பூவாவ மறக்க முடியில, விதை மரமா உருவாகிச்சு, ஏன் மாமா மேல உயிரா இருக்கேன் தெரியில, ஒரு வேளை இப்படியும் இருக்குமோ நான் நினைச்சுப்பேன். சின்ன வயசுல அப்பாக்கு என்னைய ரொம்ப புடிக்கும், நானும் அப்பாகிட்டே இருப்பேன். என்னைய இரண்டு பேரும்தான் பொம்மிம்மா கூப்பிடுவாங்க பூவாவும்,அப்பாவும்.

அப்பா எங்க அம்மாவ விட்டு பிரிஞ்சது எனக்குத்தான் முதல் அடி, அப்பாவையே வேறுத்தேன். அப்ப மாமாவோட உணர்வுகளும் அப்படித்தான் அவரும் அப்பா இல்லாம இருந்தார் இந்த தூண்டுதல் தான் எங்க மாமாவ பாத்திரமா பாத்துக்குணும் தோணிச்சோ தெரியில சங்கரி.

மாமா உழைப்பால நல்ல முன்னேற்றம், ரைஸ் மில்லுக்கு என் பேரதான் வைச்சாரு, நான்தான் எஸ்.எஸ் வைக்க சொன்னேன், அப்பறம் லாரி டிரண்ஸ்போர்ட் ஆரம்பிச்சாரு. மாந்தோப்பு வாங்கனாரு,பைனான்ஸ் ஆரம்பிச்சாரு,இடமும் வாங்கனாரு எல்லாமே என் பேரும்,மாமா பேரும் சேர்த்து வாங்குவாரு.

அவருக்கு அதான் ராசியின் சொல்லுவார். மாசம் ஆனா கம்யூட்டர்ல கணக்கை நான்தான் ஏத்துவேன். எனக்கு எல்லா வரவு செலவு கணக்கும் தெரியும். என் அக்கா பெயர்ல பேங்கில் பணம் போடுவார், அவ கல்யாணத்திற்கு.

ஆனா பணம் விஷியத்தில கறார இருப்பார் எனக்கு பணம் கொடுக்கவே கேள்வியா கேட்கும் மாமா. அன்னிக்கு பிறந்த நாள். நான் வாங்கிக் கொடுத்த புது டிரஸ் போட்டுட்டு இருந்துச்சு.

காலை மணி ஏழு , டேய் மாப்பிள்ள ஹாப்பி பர்த்டே, டிரஸ் சூப்பரா இருக்கு ,

“எல்லாம் பொம்மி செலக்ஷ்ன் மாமா. “

“மாப்பிள்ள , நம்ம பிரன்ட்ஸ் டிரீட் கொடுக்கனும் , நம்ம கிட்ட வேலை செய்யறவங்களுக்கு இன்னிக்கு வடை, பாயசத்தோட சாப்பாடு போடனும் சீக்கிரம் வா மாப்பிள்ள வேல இருக்கு. “

“நான் வரல மாமா, இன்னும் இந்த பொம்மி என்ன பார்க்க வரல, காலையிலிருந்து போனா பண்ணறேன் போன் சுட்ச் ஆப், என்ன பன்னறா தெரியில, நானே அப்செட்டா இருக்கேன். அவ வரட்டும் சொல்லி, சோகமா உட்கார்ந்தான். “

“டேய் மாப்பிள்ளை ஊருல எங்க தேடினாலும் கிடைக்க மாட்டா ,ஏன்னா அவ நேத்தே உங்க அம்மாகூட இங்க வந்துட்டா, மேல ரூமுலதான் தங்கனா“. இப்ப உன் ரூமுல தான் இருக்கும் பெருச்சாளி. போய் தேடு. “

“இங்கியா இருக்கா“ ஓடிச்சென்று ரூமை திறந்தான். “ஹாப்பி பர்த் டே மாமா“ சொல்லி நின்றாள். ஏய் இங்க எப்படி வந்தே.

அதுவா ,“ நீ பொம்மி சீக்கீரம் போன் பண்ணுடி, ஓவரா சிலுத்துக்கிறா எரும , மற்ற நாள்ல சும்மா போன் பேசுவா சொல்லி செல்லையே பார்த்துட்டு இருந்தியே அப்பவே கட்டில் அடியில புகுந்திட்டேன். “

“அப்பறம் உன் சட்டையை கழுட்டி என் போட்டோ மேல போட்டு போடி சொல்லிட்டு குளிக்க போனியே. “

பூவரசன் முறைக்க, “ மாமா சத்திம்மா நான் நீ டிரஸ் மாத்த சொல்ல பாக்கல. “

“நம்பறேன் உன்ன “

மாமா கட்டிலுக்கு அடியில் இருந்து பார்த்தா ஒண்ணும் தெரியில. “அறிவில்லடி உனக்கு ஒரு ஆம்பள ரூமுக்குள்ள வரலாமா, அதுவும் என்னை ஆஞ்சிநேயர் என்ன நினைப்பாரு. “

“டேய் சாமியாரே நேத்து நைட்டு நீயும், பரதாவும் HBO சேனல்ல ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்தியே, அந்த சீனை வாய பிளந்து, அப்ப உன் சாமி எங்க போச்சு. “

“மாப்பிள்ளை நீ தண்ணி கேட்டியா அப்பதான் இவ கிச்சன்ல இருந்ததை பார்த்தேன் சொல்ல கூடாதுன்னு மிரட்னா, பொம்பள ரௌடி. “ நான் வண்டியை ஸ்டார்ட் செய்யறேன்.

சீ பே, “மாமா கையை நீட்டு“ அவன் ரைட் ஹாண்டை நீட்ட , பிரேஸ்லேட் போட்டு விட்டாள், இதுவாங்க ஏது பணம்.

“எல்லாம் உன் ஏ.டி.எம் கார்டுதான். “ ஏன்னடி இதுயென்ன உங்க அப்பாவீட்டு பணம்மா.

“இல்ல மாமாவீட்டு பணம், நல்லாயிருக்கா மாமா. “

“சூப்பர் பொம்மிம்மா, உனக்கு என்ன வேனும் மாமாகிட்ட இருந்து. “

“வழக்கமா இன்னிக்கு மதியம் வரைக்கும் உன்கூட தான் டைம் ஸ்பேண்ட் பன்னனும். . முதல்ல கோவிலுக்கு போவோம். “அழகாக பட்டுத்தாவனி அணிந்திருந்தா, பொம்மி திரும்பு, இந்த ஜாக்கெட் நாட்ட கட்ட மாட்டியா திட்டிக்கு கொண்டே நாட்டை கட்டிவிட்டான் அப்பறம் ஏன் இப்படி தைக்கற,எல்லாம் என் பூவா போடறதுக்கு தான். தலையில் கொட்டினான்

சரி வா. கோவிலில் நுழைந்தார்கள் , பெருமாள் சன்னிதானத்தில் பூவரசன் பெயரில் அர்ச்சனை செய்ய சொல்லி பூசாரிடம் தட்டை கொடுத்தாள்.

இ“ப்பதான் உன் மாமா பெயரில அர்ச்சனை பண்ணாரு உங்க அப்பா. “

நிமிர்ந்து பார்க்க ரொம்ப நாள் சென்று தன் பெண்ணை கண் இமைக்காமல் பார்த்தார் சண்முகவேலு. சுந்தரி முஞ்சிய திருப்பிக்கொள்ள. பொம்மி ,அப்பாவ மன்னிக்க மாட்டியாடா பொம்மிம்மா. நீ டாக்டருக்கு படிக்கறத கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷம்டா.

“மாமா வா போலாம்“ திரும்பி நடக்க, அவர்களை பின் தொடர்ந்து வந்த சண்முகவேலு, பொம்மி அப்பா மூஞ்சிக்கூட பார்க்க மாட்டியா. நான் உன் அப்பாடா.

“அந்த வார்த்தையோட அர்த்தம் தெரியுமா, எல்லா உறவுகளையும் எங்க மாமா மூஞ்சிலியே பார்க்கிறேன். இப்போதான் கண்ணு தெரியுதா எங்கள பார்க்க, வந்துட்டாரு பொம்மி, அம்மிட்டு வா மாமா போலாம். “

காரில் ஏறி அமர்ந்தவுடன் அழ ஆரம்பித்தாள். “இப்ப ஏண்டி கண்ண கசக்கிற ஓ உங்க அப்பாரு மேல அவ்வளவு பாசம், வண்டிய நிறுத்திறன் போய் கொஞ்சி கொலவிட்டு வா. “

சுந்தரி பூவரசனை பார்க்க, “கொண்ணே போட்டுருவேன் அந்த ஆள்கிட்ட பேசினா, “

“அய்யோ உனக்கு ஏன் அவ்வளவு ரோஷம் வருது. “

“என் அக்காவ வேணாமா அந்த பெரிய மனுஷணுக்கு பொண்ணு மட்டும் புடிக்குமா. கூட்டிட்டு வந்தானே உங்க அப்பன், அவ கைக்காலு விளங்காம போயிட்டா, பிள்ளைக்குட்டியில்ல, அதான் இந்த பக்கம் காத்தடிக்குது. “

“மாமா அந்த ஆளப்பத்தி பேசறத விடு. உன் பர்த்டே செலேபிரேட் பண்ணு, “

“ம்ம் பொம்மி இன்னிக்கு நைட் பிரண்ட்ஸ் எல்லாம் தண்ணிப்பார்ட்டி கேட்கிறாங்கடா. “

“யாரு உன் பிரண்டு இந்த பரதாவா, அவன் மட்டும் கல்யாணம் கட்டிக்கிட்டான், உன்ன அவன்தான ஆஞ்சிநேயர் சாமிய கும்பிடு மாப்பிள்ள சொன்னான். இப்ப அவன் பிள்ளையே பெத்துக்க போறான். நீயும் இருக்கியே. சுந்தரியை முறைக்க,சரி விடு பார்ட்டி கொடுத்திட்டு ஒழுங்கா வீடு வந்து சேரு, வயசுப்பையன வளர்க்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு, மடியில நெருப்பில்ல கட்டிட்டு இருக்கேன். “

“யாரு நீ என்னைய வளர்க்கிற, நேரம்டி, “

ஒரு நாள் மாமா என்னைய கூட்டிட்டு போக ஹாஸ்டல் வந்தாரு சங்கரி அன்னிக்குதான் நான் மாமாவிட்டு விலக ஆரம்பிச்சேன் மனசளவில.

“என்ன மாமா தீடிர் வந்து கூட்டுட்டு போற என்ன விஷியம்“ சொல்லி வண்டியில் அமர்ந்தாள். “ஏ ராயலு பார்த்து ரொம்ப நாளாச்சில்ல. “

ஊருக்கு போகும் வழியில், பொம்மி நான் சொல்லறத கேட்டு கோவப்பட கூடாது. கண்ணாடியில் அவன் முகம் பார்த்த சுந்தரி ஏன் மாமா இப்படி முகத்தை வச்சிருக்கு. வண்டியை நிறுத்திவிட்டு கொஞ்சம் கீழே இறங்கு பொம்மி நான் பேசணும்.

“அது வந்து பொம்மி, நாளைக்கு எனக்கு பவிக்கும் பரிசம் போடாறங்க மூணு நாள் கழிச்சு கல்யாணம். “

“என்ன மாமா சொல்லற, “

“ம்ம் அவளும் என்னை மாதிரி பத்தாவது வரைக்கும் தானே படிச்சா, அதனால எங்களுக்குள்ள எந்த பிரச்சனை வராதுப்பாரு, பவி, பூவி எப்படி ரைம்மிங். “

அவன் சொல்ல சொல்ல கண்களில் கண்ணீராக வழிந்துக்கொண்டே இருந்தது சுந்தரிக்கு, அக்கா ஓகே சொன்னாலா மாமா. அவதான் மொதல்ல கல்யாணம் பண்ணிக்கோ கேட்டா.

“சரி உனக்கு சந்தோஸம்ண்ணா நீ எங்க அக்காவே கட்டிக்கோ மாமா. “

“ஹய்யோ, நீ அழுது ஆர்பாட்டாம் பண்ணுவியோ நினைச்சேன். “

“எதுக்கு மாமா, ஒரு பொருள் தன்னுடையதா இருந்தா எவ்வளவு போராடி, ஆர்பாட்டம் செஞ்சி நம்மிக்கிட்டயே வைச்சிக்கலாம். அந்த பொருள் தனது இல்லைன்னா. “

“பொம்மிம்மா“

“சொல்லு மாமா, நான் வந்து உன்கிட்ட கெஞ்சனமா என்னைய கட்டிக்கோ சொல்லி, மாட்டேன் அன்பு, பாசம், காதல் வர்புறுத்தி வர கூடாது. நீ முடிவு எடுத்துட்டு சொல்லற. நான் உன் பின்னாடியே அலைஞ்சதால என்னுடைய அருமை தெரியில, பரவாயில்ல மாமா என் அக்காவதான கட்டிக்கிற எனக்கு ஓகேதான், ஆல் த பெஸ்ட். “

பூவரசன் முகம் சுருங்கி “பொம்மிம்மா.. “.

“எனக்கு ஒண்ணுமட்டும் தெரியில மாமா, படிப்புக்கும், குடும்பம் நடத்திறத்துக்கும் என்ன சம்மந்தம் மாமா. “

பொம்மி

சுந்தரின்னு கூப்பிடு மாமா. பூவரசன் அவளை கூர்ந்து கவனிக்க, என்ன மாமா இப்படி பார்க்கிற, நான் பத்தாவது படிக்க சொல்லே அடிச்சி தெளிவா சொல்லிட்டயில்ல, நான்தான் புரிஞ்சிக்கில மாமா. உன்வீட்டு மகாராணி , எங்க அப்பாவீட்டு செல்லபொண்ணு எனக்கு கவியரசனோ, கலையரசனோ கிடைக்கமாட்டான்.

“நீ போட்ட பிச்சைதான் மாமா இந்த டாக்டர் படிப்பு, அதுமட்டும் போது இனிமே எதுவும் எனக்கு செய்ய தேவையில்ல. நான் டாக்டர் ஆயிட்டு சம்பாரிச்சு அந்த பணத்தில என் வாழ்க்கைய ஆரம்பிச்சிக்கிறேன். உனக்கு பாரமா இருக்க விரும்பல“,

இந்த வார்த்தை கேட்டவுடன் பூவரசன் ப்ளாரு அடிச்சான் சுந்தரியின் கண்ணத்தில். “என்னடி ஓவரா பேசுற“

“நீ யாருடா என்னைய அடிக்க போடா எனக்கு வர தெரியும் உன் கல்யாணத்திற்கு, “ரோட்டில் போற பஸ்ஸ கையை காட்டி நிறுத்திவிட்டு அதில் ஏறி அமர்ந்தாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சுந்தரியின் பூவரசன்.........






.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா லக்ஷும்மா
அடப்பாவி பூவரசன்
சுந்தரி மனசுல ஆசையைக் காட்டிட்டு அவங்கக்காளை கல்யாணம் பண்ணப் போறியா?
போடா டேய் பூவரசன் பேடு பாய்
 
Last edited:
என்ன பூ இப்படி செய்றான்
சுந்தரி நல்லா பேசறா
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா லக்ஷும்மா
அடப்பாவி பூவரசன்
சுந்தரி மனசுல ஆசையைக் காட்டிட்டு அவங்கக்காளை கல்யாணம் பண்ணப் போறியா?
போடா டேய் பூவரசன் பேடு பாய்
Banu mam ethu flash back, story la poo arasan marriage stop than first epiye start aguum pa arisam potathu sundariku
 
Banu mam ethu flash back, story la poo arasan marriage stop than first epiye start aguum pa arisam potathu sundariku
அப்படியா, லக்ஷு டியர்?
இருங்க திரும்பவும் போய் first அப்டேட் படிச்சுட்டு வர்றேன்
 
Top