Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தனிமை புறா அத்தியாயம் 1:

Advertisement


ஓம் முருகா சரணம்:

"கொக்கரக்கோ...... கோ........கொக்கரக்கோ........கோ........"

"ஏலேய், எதுக்குல இப்ப இப்புடி கத்துரவைங்க", சூரியன் உதிச்ச மறு நிமிசம் துரைங்கள அவுத்து விட்டுரணுமாக்கும். என நொடித்தப்படியே கோழிகளை அடைத்து வைத்திருக்கும் கூடையின் அருகில் சென்றவர் அதை திறந்து விட,

அடுத்த நிமிடம் ஆளுக்கொரு திசையில் சிதறி அடித்துக் கொண்டு தெறித்து ஓடியவைகளில் ஒன்றை துரத்திப் பிடித்தவர்,

ஏண்டி, செவப்பி இரண்டு நாளா நடக்க முடியாமா இருந்தவ, இன்னைக்கு இந்த ஓட்டம் ஓடுற என்றவாறு செவப்பியை தூக்கி பிடித்து அதன் கால்களை ஆரய,

இரண்டு நாள்களுக்கு முன், செவப்பி தன் கூட்டாளிகளுடன் பறந்து பறந்து விளையாடி அங்கிருந்த முள் வேலியில் சிக்கிக் கொண்டதில் அதன் கால்களை காட்டு முற்கள் நன்றாகவே பதம் பார்த்திருந்தது.

அதன் காயம் இன்று மட்டுப்பட்டு இருந்ததில் திருப்தி அடைந்தவர், அடியே! செவப்பி இனியாச்சும் மேச்சலுக்கு போனோமா,வந்தோமான்னு ஒழுங்கா இருக்கணும்,அத விட்டுட்டு திரும்பவும் உன் கூட்டாளிகளோட சேர்ந்து துள்ளிக்கிட்டு திரும்பவும் அடிபட்டுக்கிட்டு வந்த?

மவளே! அடுத்த நாள் வீட்டுல கோழி கொழம்புல நீதான் கொதிச்சிக்கிட்டு இருப்ப பாத்துக்க, என்றவர் செவப்பியை இறக்கி விட,

ம்ம்ம்ம்ம்மமமமமமமமா..............என்ற கத்தலில் திரும்பியவர்,

அடேய், கருப்பா இருடா வரேன் என்றவாரு மாட்டு தொழுகையை நோக்கி சென்றார் பிச்சை என்ற பிச்சையம்மாள் எழுபது வயதை கடந்திருப்பவர்.

ஏண்டா, கருப்பா எனக்கு என்ன ஏழு கையால இருக்கு ஒவ்வொன்னாத்தான பாத்துக்கிட்டு வர முடியும்.

செத்த நேரம் பொறுக்க மாட்டியளா அதுக்குள்ள ம்ம்மா ம்ம்ம்மான்னு ஊரக் கூட்டுற என்றவர் மாட்டுக் கொட்டகையை திறந்து அங்கிருந்த மாடுகளை அவிழ்த்து விட,

அனைத்தும் நான், நீ என முண்டி அடித்துக் கொண்டு தண்ணீர் தொட்டிகளை நோக்கி சென்றவைகள் அதும் ஏதும் இல்லாது கண்டு, திரும்பி பிச்சையை நோக்கி ம்ம்ம்மா.......என்று கத்தி அழைக்க,

மாட்டுக் கொட்டகையை கூட்டி சாணிகளை அள்ளிக் கொண்டிருந்தவர் ,மாடுகளின் கத்தலில்

என்னங்கடா திரும்பவும் கத்துறீங்க அங்க ஏதும் இல்லையா என சப்தமிட,

இல்லை எனும் விதமாக மாடுகள் வித்தியாசமாக ஒலி எழுப்பியது.

ஏல மாரி, இன்னும் புள்ளைகளுக்கு தொட்டியில கலக்காமா என்னல செய்யிற??என வீட்டின் வேலையாளை நோக்கி சத்தமிட,

இதோ, வந்துட்டேன் ஆத்தா, என்றவன் வாளியில் இருந்த புண்ணாக்கு மற்றும் வைகோல் கலந்த கலவையை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் கொட்டி கலக்கியவன், வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இராமல் தொழுவத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்த பிச்சையை நோக்கி,

ஏன் ஆத்தா?? நீ இந்த வேலை எல்லாம் செய்யிற மாமியார இருந்து மருமவப் புள்ளைகள வேலை வாங்குறத விட்டுபுட்டு இப்புடி வயசான காலத்துல ஓடி அடி வேலை செச்சிட்டு திரியிரியே!!! கீழ விழுந்து ஒண்ணுக் கெடக்க ஒண்ணு ஆச்சுன்ன, என்ன செய்வ, என்றவனின் பேச்சில் சிலிர்த்தெழுத்த பிச்சை,

அடேய், எடுப்பட்ட பயலே "யாரப் பாத்துல வயசானவ கீழ விழுந்திடுவேன்னு" சொல்லுற என்றவர், தனது அருகே கிடந்த ஒலக்கையை தூக்கி அவனை நோக்கி எறிய!!!

ஆஆஆஆ................என அலறியவன் துள்ளிக் குதித்து மறுபுறம் நின்ற நொடி, ஒலக்கை சரியாக சற்று முன் அவன் நின்றிருந்த இடத்தில் விழந்ததில்,

ஆத்தாடி...... கொஞ்சம் நகரலைன்ன இன்னேரம் நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும், எத்தாதாதா........தண்டி ஒலக்கககக........ என நினைத்தவன்,

ஏன்?? ஆத்தா உனக்கு இந்த கொலைவெறி என்க,

போடா..... போக்கத்தவனே...... கஞ்சிக்கு செத்தப் பயலேலேலே........
தூக்கிப் போட்ட ஒலக்கைய பிடிக்கிறத விட்டுட்டு இப்புடி துள்ளிக்கிட்டு நகருறா....... என்னல சண்டியருருரு......... நீருரு...........

இதே, எம்ம பேரன் இருந்திருக்கணும்ல இந்நேரம் ஒலக்கையை ஒத்த கையால தூசு மாரி புடிச்சு தூக்கிப் போட்டுட்டு போயிருப்பான்ல நீயும் தான் இருக்கியே........

ஆமா......ஆமா.... ஒம்ம பேரன் பிடிப்பாரு மனுசரு கையா அது....., அதுவே ஒலக்க மாதிரி இருக்கும், ஒம்ம பேரனுக்கு மட்டும் இரும்பால உடம்பு செஞ்சி அனுப்பிட்டாரு போல அந்தக் கடவுள்.

என்னல அங்க முணுமுணுக்குறவன்,

ஈஈஈஈஈ.......... ஒண்ணும் இல்ல ஆத்தா ஒண்ணுமே இல்ல..........,

அதுக்கு ஏன்ல இப்புடி டன்டூச் கிட்ட பல்ல காட்டுறவன் மாதிரி என்றகிட்ட காட்டுற???

என்ன!!!!! டன்டூச்சசசா.......?????

ஆமால, இந்த பல் டாக்டருக்கு இங்கிலுசுல அதான பேரு,

அட ராமா, ஆத்தா அது டன்டூச் இல்ல டென்டிஸ்.........

அதத் தாம்ப்ல நானும் சொன்னேன் கூறுக் கெட்டவனே......,

ஆத்தா......... ஆத்தா..............
வெளியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்க,

ஏலேய் மாரி, பால் வாங்க ஆளுங்க வந்துட்டாங்க, நீ நம்ம ராசாத்தி கலவைய குடிச்சதும் நம்மளுக்கு வேணுங்குற அளவுக்கு மட்டும் பால கறந்துட்டு கொண்டு வால........

மறக்காமா... அந்தக் குட்டிய பால் குடிக்க விட்டுறு, இல்லன்னா ராசாத்தி முறச்சிக்கிட்டு திரியிவா.......

சீக்காரம் வாடா, சும்மா நானும் வேலை செய்யுறேன்னு மேம்போக்கா சுத்திட்டு திரியாத,

யாரு நானா மேம்போக்காத் திரியிறேன் ,எல்லாம் என் நேரம் என்றவன் அவனுக்கு இட்ட வேலைகளை செய்யலானான்.

வெளியில் வந்த பிச்சை அங்கிருந்த பெண்மணியைக் கண்டு,

ஏண்டி, செவ்வந்தி என்ன ரெண்டு நாளா ஆளக் காணோம் இன்னைக்கு வர்றவ,

அந்த கொடுமை ஏன் ஆத்தா கேட்குற பட்டணத்துல இருந்து என் கொழுந்தனும் ஓரகத்தியும் வந்திருகாங்க,

யாரு டி ,அந்த நசுங்கிப் போன சோப்பு டப்பா மாரி மூஞ்சி இருக்குமே அவளா!!!!

ஆமா ஆத்தா அவளே தான்,

அவிங்க எல்லாம் காலையில டீத் தண்ணி குடிக்க மாட்டாங்களாம்.கெலட்ராலோ, கலட்ராலோ........ என்னவோ அத குறைக்க கிரின்னு டீ ன்னு ஒன்னதான் குடிப்பாங்களாம். என் ஓரகத்திய பத்தி உனக்கு தெரியாதா........,

ஏண்டி, அவ சீம சித்தரங்கி ஆச்சே, அந்த சிலுப்பு சிலுப்புவாளே...........,

ம்ம்ம்ம்ம்........... அவ வரும் போதே அந்த பொடியையும் வாங்கிட்டு வந்துட்டா, அதக் குடிச்சி தான் அவ கலட்ராலு குறச்சிடுச்சாம்.

அப்போது, அங்கே பாலை கொண்டு வந்து வைக்க வந்த மாரியின் காதில் இவ் வார்த்தைகள் விழ,

என்னதுதுதுது................ கலட்ராலலலலலா.......... என அதிர

அட, ஆமான்டா மாரி இந்த கொழுப்புக்கு இங்கிலுசுல அதான் போராம், பட்டணத்துல எல்லாம் இப்புடி தான் சொல்லுவாங்களாம் என செவ்வந்தி தனக்கும் ஒரு ஆங்கில வார்த்தை தெரிந்திருப்பதில் பூரித்து போய் அங்காலய்க்க,

அட ஆண்டவா, அதுக்குப் பேரு கொலஸ்ட்ரால் செவ்வந்தி அக்கா, கெலட்ரால் இல்ல,

டேய், பால மூத்த மருமவக்கிட்ட குடுத்திட்டியா என பேச்சி அதட்ட,

அதெல்லாம் குடுத்தாச்சு... குடுத்தாச்சு.......,

அப்பறம் என்னடா, டீ தண்ணிய குடிச்சிட்டு கருப்பன மேச்சலுக்கு கூட்டிட்டி போ இங்க நின்னு அரட்ட அடிக்காமா கிளம்புடா என அவனை விரட்டியடித்தவர்,

செவ்வந்தியிடம் திரும்பி, அப்பறம் என்க,

அப்பறம் என்ன ஆத்தா அவ கலந்துக் குடிக்கிறத பாத்துட்டு என்ன கட்டுன மனுஷரும், எல்லாரும் அதையே குடிப்போம் ஒரு வாரத்துக்கு டீ தண்ணி ஏதும் வேணாம்னு சொல்லிட்டாரு,

அதும், காலையில வெறும் வயித்துல தான் குடிக்கணுமா,!!!நானும் ஆசப்பட்டு குடுச்சேன்,

ஏண்டி, எப்புடி இருந்துச்சு என பிச்சை ஆர்வமாக கேட்டார். வேறு எதற்கு தன் பேரனிடம் அதை வாங்கி வரச் சொல்வதற்காகத் தான்.

அய்யோ, நீ வேற ஆத்தா பச்ச கலருல கசாயம் மாதிரி ஒன்னக் குடுத்தா உள்ள இருக்குறது எல்லாம் வெளிய வந்துரும் போல அப்புடி இருந்துச்சு அதக் குடிச்சதும் என்ற மனசரு மூஞ்சி போன போக்கப் பாக்கணுமே,

ஹா ஹா ஹா ஹா.............. முடியல ரெண்டு நாளு குடிச்சவரு இன்னைக்கு விடிச்சதும் முதல் வேலைய பாத்திரத்த கையில குடுத்து, பால வாங்கி வரச் சொல்லிட்டாரு.

சரி சரி பால ஊத்து ஆத்தா மனுசரு பாவம் சீக்கிரம் போய் டீ தண்ணிய போட்டுக் கொடுக்கணும் என்றவர் பாலை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்.

அதற்கு அடுத்த ஒரு மணி நேரமும் பேச்சிக்கு பால் வியாபாரத்தில் கழிய, இடையில் மூத்த மருமகள் கொடுத்த டீத் தண்ணியையும் குடித்து விட்டு அக்காடவென தூணில் சாய்ந்து கால்களை நீண்டி திண்ணையில் அமர்ந்திருந்தவரின் செவிகளில்,

பாட்டிடிடிடிடி.............. என்னோட தோசை இந்த கிரிஷ் பிச்சிட்டான்........ என்ற ஹரிஸ்ஸின் குரல்,

அம்மமமமமமமமா............. என்னோட ஷூ எங்கம்மா வேன் வந்திடும் என்ற ஆறு வயது வாண்டின் கத்தல்.........,

பாரு.............. லன்ஜ் பேக் ரெடி பண்ணிட்டியா.......என்ற தீலிப்பின் குரல்.........,

சித்தப்பா காலேஜ் பீஸ் கட்ட இன்னைக்கு தான் கடைசி நாள் என அவசரப்படுத்தும் யாதவ்வின் குரல்........,

என்று இன்னும் இன்னும் பல குரல்கள் வீட்டினுள் ஒலித்து இவரின் செவிகளை வந்து தஞ்சமடைந்தன,

ஆகமொத்தம் வீட்டினுள் ஒரு குட்டி போர்க்களமே நடந்துக் கொண்டிருந்தது.

அவரவர் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்லியும், அவர்களின் பொருட்களை தேடிக் கொடுப்பதிலும் அவ்வீட்டு பெண்கள் ஓய்ந்துப் போயினர்.

இதில் ஆளுக்கொரு உணவு ஐட்டம் சொல்ல, ஒருவர் சொல்வது மற்றவருக்கு பிடிக்காமல் போக, இன்னும் இன்னும் சத்தம் அதிகரித்தது.

தேவகி "அடியே, இன்னைக்கு ஒரு நாள் தோசை சாப்பிடக் கூடாதாடி, "
தமயந்தி, 'முடியாதும்மா, எனக்கு இட்லி தான் வேணும்!!

ஒருவழியாக அவளை சரிகட்டி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகவிட்டது,

அப்பாடி இனி பிரச்சனை இல்லை என வீட்டுப் பெண்கள் நினைத்த நொடி சட்னி பிரச்சனை ஆரம்பித்து விட்டது.

இவர்கள் படுத்தும் பாட்டில் வீட்டுப் பெண்களின் இரத்தம் அழுத்தம் தாறுமாறாக எகிறி எந்நேரமும் வெடிக்கும் நிலையில் இருந்தனர்.

இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பிச்சையின் உதடுகளில் அழகிய முறுவல் ஒன்று தோன்றிற்று,

அதிலும் தங்கள் வீட்டு வாண்டுகளின் அழிச்சாட்டியங்களை நினைத்துப் பார்த்தவரின் புன்னகை விரித்திருந்தது.

இப்படி போர்க்களமாய் இருக்கும் வீடு பெரியப் பேரனின் வண்டிச் சத்தத்தில் கப்சிப் என அடங்கி புயலாய் இருக்கும் வீடு அமைதி பூங்காவாய் மாறி விடும் விந்தையைய் தான் அவர் பார்த்திருக்கிறாரே.,

அவரின் யோசனையை கலைக்கும் விதமாக "கிளிங்.........கிளிங்.......," என்ற மணியோசை கேட்க, அவ்வூரின் போஸ்ட் மேன் மணி நின்றிருந்தார்.

அட, நம்ம தாபாலு வால வால என்னல இங்கிட்டு துரைய பாக்க வந்தியாலே?????

இல்ல ஆத்தா நம்ம தம்பி பேருக்கு கடுதாசி வந்திருக்கு!!!!

எம்பேரனுக்கா கடுதாசி?????

ஆமா ஆத்தா,

எங்கிருந்து வந்திருக்கு?

பட்டணத்துல இருந்து வந்துருக்கு,

ஓஓஓஓ..........என்றவரின் முகம் யோசனையை தத்தெடுத்தது.

ஆத்தா, யாரையாச்சும் கூப்பிடுங்க, கையெழுத்து போட்டுட்டா குடுத்துட்டு போயிடுவேன்.

வீட்டினுள் திரும்பியவர்,

தமயா தமயா...... எனக் குரல் கொடுக்க,

அடுத்த நிமிடம் ஆஜராகியிருந்தாள்.

என்ன அப்பத்தா எதுக்கு கூப்பிட்ட??

பெரியவன் பேருக்கு கடுதாசி வந்திருக்கு, கையெழுத்து போட்டு வாங்கு,

ம்ம்ம்ம்ம்ம் சரி என்றவள், கையெழுத்து போட்டு விட்டு போஸ்டை வாங்கிக் கொண்டவள், வீட்டினுள் செல்ல முயல,

தமயா.......... என்ற பேச்சியின் குரலில் நின்றவள்,

'என்ன' என்பது போல் அவரைப் பார்க்க,

கடுதாசிய பிரிச்சு என்ன இருக்குண்ணு எனக்குப் படிச்சு சொல்லு,

அப்பத்தா.......... அண்ணனுக்கு
தெரிஞ்சா.......... என அவள் இழுக்க,

நா சொல்றேன்ல பிரிச்சுப் படி............,

அவரின் வார்த்தைக்கு இணங்கி போஸ்ட்டை பிரிக்க போனவளின் கண்களில் அகப்பட்டது, மேலுறையில் இருந்த ஊரின் பெயர்.

அதைக் கண்டு அதிர்ந்தவள், தன் அப்பத்தாவிற்கு இவ்விடயம் தெரியாது என நினைத்தவள்,

அப்பத்தா ஆஆ............ இது மதினிகிட்ட இருந்து வந்துருக்கு!!!

தெரியும்....................!

அப்பத்தா ஆ ஆ..!!!!!!!!!!!!!!!!

படின்னு சொன்னேன்....

வேறு வழியின்றி போஸ்ட்டை பிரித்தவள், அதைப் படிக்க படிக்க அவளின் முகம் துயரத்தில் கசங்கியது.

அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பேச்சியோ,

என்ன தாயி, எதுக்கு இப்புட்டு சங்கடம் அதுல அப்புடி என்ன இருக்கு?? என்க,

அப்பத்தா...... ஆஆ.. அது........வந்...........வந்து என அவள் தடுமாற,

ம்ம்ம் சொல்லு தமயா!

அப்பத்தா... மதினிகிட்ட இருந்து வக்கீல் நோட்டிஸ் வந்திருக்கு..,

என்ன வக்கீலு நோட்டிசு தாயி,

அது வந்து, அண்ணணோட வாழ இஷ்டமில்லன்னு சொல்லி மதினி விடுதலைப் பத்திரம்(டிவோர்ஸ்) நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க..,

அவளின் பதிலில் ஒரு நொடி திகைத்தவர் பின் தன்னை சமாளித்துக் கொண்டார்.

தமயந்தி வெளியே சென்று இன்னும் வரததால் அவளை தேடி கொண்டு வந்த மரகதத்தின் காதுகளில் இவ்வார்த்தைகள் விழ,

ஓஓஓஓஓ.............. அவ இந்த அளவுக்கு வந்துட்டால இதுவும் நல்லதுக்குத் தான், என்றபடி அவள் வெளியே வர,

அவளை எதிர்பார்க்காத தமயந்தியும், பேச்சியும் அதிர்ந்து விட்டனர்.அவர்கள் சற்று நிதானிப்பதற்குள் தமயாவின் கைகளில் இருந்த போஸ்ட்டை பறித்தவள்,

இத முதல வீட்டுல இருக்கவங்க கிட்ட சொல்லணுமஎ இன்னும் அந்த ஓடுகா............,

மரகதததததததததா........!!!!! என்ற பிச்சையின் கோபக் குரலில் தான் சொல்ல வந்ததை பாதியில் விழுங்கியவள்,

ஆமா... இதுக்கொண்ணும் கொறச்சலில்ல, உண்மையாத்தான சொல்ல வந்தேன்.

ஆமா எங்களுக்கு தெரியாதா உண்மையை இவ சொல்ல வந்துட்டா..., சரீ தான் போடிடி....

இவ்வளவும் நடந்தும் இந்த கிழவி அடங்குதான் பாரு....., என நினைத்த மரகதம்,

எல்லாம் உங்களால தான் அப்பத்தா, பெரிய ரதின்னு தான இவள கட்டிவச்சிங்க,

ஏன் அப்பத்தா போயும் போயும் அவள கட்டி வச்சிங்க, அவப் புத்திய காட்டிட்டால......,

பேச்சியை குற்றம் சொல்வதை தாங்காத தமயா,

போதும்ம்..., மரகதா அப்பத்தாவ பேசுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா????

இது அண்ணனுக்கு வந்த லெட்டர், அவரு பாத்துக்குவாரு இந்த பிரச்சனைய நீ இதுல தலையிடாத என்க,

ஓஹோ...., அப்ப எனக்கு இந்த வீட்டுல உரிமையில்லன்னு சொல்லுறியா........!

நா எப்ப அப்புடி சொன்னேன்......, என்ற தமயாவை இடைவெட்டியவள்,

இதோ......., இப்ப சொன்னல தலையிடாதன்னு அதுக்கு என்ன அர்த்தம் நீங்க எல்லாம் ஒரு குடும்பம், நாங்க வேறன்னு தான சொல்லுற,

அப்ப நீங்க எல்லாம் எங்கள குடும்பமா நினைக்கல, நாங்க தான் மானங்கெட்டுப் போய் இங்க இருக்கோம்னு சொல்ல வர, அப்புடி தான???

அவளின் குற்றச்சாட்டில் தமயந்தி ஆடிப் போய்விட்டாள்..........!!!!!!!!!!!!
எதற்கு எதை இணைக் கூட்டுகிறாள் இவள்,

இவளின் குணம் தெரிந்து தான் வாய் விட்டதை எண்ணி தன்னையே நொந்துக் கொண்டவள்,

ச்ச்ச்சே......, உங்கிட்ட எல்லாம் பேச முடியாது மரகதா என்க,

பேசாத போ..., நீ இங்க பேசலன்னு யாரும் ஏங்கிகிட்டு திரியல, என்றவள் வேகமாக வீட்டினுள் சென்று விட்டாள்.

அடியே, அடியே........., மரகதா நில்லுடி!!!!!!!

என்ற பிச்சையின் பேச்சியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் சென்று விட்டாள்.

போச்சுடடடா......, இனி அந்த பாண்டவ பூமிங்காரங்க வந்து ஒரு படம் ஓட்டுவாங்களே..........

அவிங்கல எப்புடி சமாளிக்கிறது என பிச்சை தலையை குனிந்துக் கொண்டு தீவிரமாக யோசிக்க,

அவரின் நிலையை கண்ட தமயா, பிச்சை வருதப் படுவதாக எண்ணி,

அப்பத்தா..., என்று அழைத்து அவரின் அருகில் செல்ல முற்பட,

அவளின் முன் வந்து நின்றார் லக்ஷ்மி மரகதத்தின் அம்மா, அவ்வீட்டின் மூத்த மருமகள்.அவரின் பின் மொத்த குடும்பமும் நின்றிருந்தது.

தோ......, வந்துட்டாங்கள பாண்டவ பூமிக்காரங்க, என்று முணுமுணுத்த பிச்சை மறந்தும் யாரையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.

லக்ஷ்மி, 'மரகதம் என்னென்னமோ சொல்லுறாலே அதெல்லாம் உண்மையா தமயா என கலங்கிய குரலில் கேட்க,

அவரின் குரலை கேட்ட பிச்சைக்கு "சுள்" என்று மனதில் தைக்க ஒரு நொடி கலங்கியவர், பின் சமாளித்துக் கொண்டு அனைவரையும் பாவமாக பார்த்தவர்,

தலையை குனிந்துக் கொண்டு லேசாக மூக்கை உறிஞ்சி வராதக் கண்ணீரை துடைக்க....,

அதனை கண்ட தமயந்தி, பதறியவளாக...

அப்பத்தா என கூவியவள், அவரின் அருகில் சென்று தோளை தொட...., இன்னும் மூக்கை உறிஞ்சினார்.

மொத்த குடும்பமும் அவரின் அருகில் செல்ல முற்பட,

அய்யோ........, வராங்களே வராங்களே இன்னைக்கு நம்ம சிக்குனோம் பிரிச்சி மேச்சிருவாங்களே கருப்பா என்ன காப்பாத்து..., என்ற அவசர வேண்டுதலை வைத்த பிச்சை புடவை முந்தானையால் மூகத்தை மூடிக் கொள்ள,

ச்ச்சல்லங்............ச்ச்சல்ல்ங்ங்......... என்று மாட்டு வண்டியின் சத்தம் கேட்டு,

பிச்சையின் அருகில் செல்ல முற்பட்ட அனைவரது கால்களும் பிரேக் அடித்தாற் போல் நின்று விட்டனர்.

வண்டிச் சத்தத்தையும் , குடும்பத்தினரையும் சேலையின் ஊடே கவனித்த பிச்சை, அவர்களிடம் இருந்து தப்பித்ததாய் எண்ணி நிம்மதி பெரூமூச்சு விட்டார்.
 
உங்களுடைய "கூட்டத்திலே
ஒரு தனிமைப் புறா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யாசெழியன் டியர்
 
Last edited:
உங்களுடைய "கூட்டத்திலே
ஒரு தனிமைப் புறா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சௌந்தர்யா செழியன் டியர்
Thank u sis
 
Top