Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீயாய் தீரா காதல்

Advertisement

Thirumathi surendhar

New member
Member
வெண்பா தமிழரசி அறைக்கு எழுந்து சென்றாள்.

அதைப் பார்த்த சுதா காவியாவிடம் " பாத்திங்களா மேடம் இந்த வெண்பா எடிட்டர்க்கு ஐஸ் வைக்க போய்ட்டா இங்க வந்து அவங்க உங்கள மட்டும் தான் திட்டுனாங்க அவள எதா சொன்னாங்களா பாத்திங்களா
அதுவும் அவ அந்த அல்லக்கை சுவேதாவ பேசவிட்டு நம்மள அசிங்கப்படுத்துறா விடக்கூடாது மேடம் அவள விடவே கூடாது " என்று கூற

காவியாவின் முகம் கோவத்தில் ரத்த சிவப்பாக மாறியது‌.

வெண்பா தமிழரசின் அறை கதவை திறந்து " excuse me மேடம்" என்று கேட்க

தமிழரசி " உள்ளே வா வெண்பா " என்று பாசமாக அழைத்தாள்.

வெண்பா " நீங்க வரச் சொன்னாதா சுவேதா சொன்னா " என்று சொல்ல

அவள் தொலைபேசி ஒலித்தது தமிழரசி ஒரு நிமிஷம் என்று சொல்லி தொலைபேசியை எடுத்தாள்

" ஆமாம் சார் இன்னைக்கு தான் எனக்கே பத்து நிமிஷம் முன்னாடி தான் ஃபோன் பன்னாங்க சரி சார் கண்டிப்பா " என்று பேசிவிட்டு போனை கட் செய்தாள்.

“ வெண்பா “ என்று தமிழரசி பேச வரும் போது வெண்பா இடைமறித்து

" பரவாயில்ல நீங்க எனக்கு ஆறுதல் எதுவும் சொல்ல வேணாம் எனக்கு தெரியும்" என்று சொல்ல

தமிழரசி" என்ன தெரியும் " என்று கேட்டாள்

வெண்பா " காவியா என்ன விட சினியர் அது மட்டும் இல்லாமல் என்னால இன்டர்வியூ பண்ண முடியல அதுனால அவளோட ஆர்டீக்கல் இந்த மாசம் முதல் பக்கம் வரப்போது நீ ட்ரை பண்ணு அடுத்த மாசம் பாத்துக்கலாம் அதான " என்று கேட்க

தமிழரசி அவளை பாதம் முதல் நெற்றி வரை பார்த்தாள் பின் எழுந்து அவள் அருகே வந்து " என்ன இன்னைக்கு ரொம்ப அழகான இருக்க " என்று கேட்க

வெண்பாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

" அது இன்னைக்கு என் பாய் ஃப்ரண்டோட பர்த் டே அதான் ஈவினிங் டீன்னர் போறோம் " என்றாள் வெட்கத்துடன் வெண்பா .

தமிழரசி சற்று பதட்டமாக " அய்யோ அய்யோ" என்று சொல்ல

வெண்பா அதிர்ச்சியுடன் " என்ன ஆச்சு மேடம்" என்று கேட்க

தமிழரசி " ஈவினிங் மிஸ்டர் கவின் இன்டர்வியூ எடுக்க அப்பாய்ன்மண்ட் குடுத்து இருக்காரு இப்ப தான் பத்து நிமிஷம் முன்னாடி அவரு அசிஸ்டன்ட் ஃபோன் பண்ணாரு " என்று சொல்ல

வெண்பா " செம மேடம் இதுவரைக்கும் அவரு ஒரு இன்டர்வியூ கூட கொடுத்து இல்ல நம்ம பத்திரிகைக்கு கொடுத்தா செம ரீச் கிடைக்கும்" என்று சொல்ல

தமிழரசி " அதுமட்டும் இல்ல அவங்க பர்சனலா உன்ன கூப்பிட்டு இருக்காங்க உன் ரைட்டீங் ஸ்டைல் புடிச்சு போய் நீ தான் வரனும்னு சொல்லி இருக்காங்க " என்று சொல்ல

வெண்பா ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தாள்.

தமிழரசி " நீ இவ்வளோ நாளாக கஷ்டப்பட்டது வீணாப் போல இனிமே நீ சினியர் ரிப்போர்ட்டர் இனி எல்லா இன்டர்வியூம் தனியாவே போய் எடுக்கலாம் " என்று சொல்ல

வெண்பா ஒரு நிமிடம் சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆகிவிட்டாள்.

தமிழரசி தீடீர் என்று " ஆனா இதுல ஒரு பிரச்சினை இருக்கு " என்று சொல்ல

வெண்பா பத்தட்டமாக " என்ன மேடம் அது " என்று கேட்க

தமிழரசி " இன்னைக்கு உன் பாய் பிரண்ட் பர்த் டே நீ போலனா அவரு கோச்சிக்க மாட்டாரா? " என்று கேட்க

வெண்பா தீர்க்கமாக" அதலாம் அவன் கோசிக்க மாட்டான் மேடம் நாங்க அஞ்சு வருஷமா லவ் பண்றோம் இது வரைக்கும் ஒரு சன்டை கூட வந்தது இல்ல எங்களுக்குள்ள அவன் அவ்ளோ அண்டெர்ஸ்டண்டஇங் " என்று சொல்ல

தமிழரசி" ஓஓஓஓ" என்று சொல்ல

வெண்பா " நா சொன்னா அவன் புரிஞ்சுப்பான் மேடம் " என்று சொல்ல

தமிழரசி " அப்ப ஈவினிங் போய்ட்டு வந்துடு ஆல் தீ பெஸ்ட் " என்றாள்.

கவின் சம்மதம் தெரிவித்து வெண்பாவை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது.

ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் உறைந்து போனால் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவளை ஒரு உலுக்கி " வெண்பா " என்று அழைத்தாள் தமிழரசி

வெண்பா " மேடம் என்ன சொல்லுறதுனே தெரியல அய்யோ ரொம்ப சந்தோஷமா இருக்கு சரி நா பொய் அவுட் லைன் ரெடி பண்ணணும் வரன் மேடம்" என்று சொல்ல

தமிழரசி " வெண்பா சீரியஸாக சொல்லுரியா " என்று கேட்க

வெண்பா " என்ன கேட்குரிங்கனு புரியல" என்றாள்.

தமிழரசி " நா திரும்பி கேட்குறேன் நினைக்காத இன்னைக்கு உன் பாய் பிரண்ட் பர்த் டே நீ போலனா அவரு கோச்சிக்க மாட்டாரா" என்று கேட்க

வெண்பா " மேடம் பர்த் டே வருஷம் வருஷம் தான் வரும் ஆனா கவின் இன்டர்வியூ எடுக்க அப்பாய்ன்மண்ட் கிடைக்குமா அவன் கண்டிப்பா புரிஞ்சுப்பான் " என்றாள்

தமிழரசி " அப்ப ஓகே 7 மணிக்கு ரெடியா இரு மிஸ்டர் கவின் அசிஸ்டன்ட் உனக்கு கால் பண்ணி மத்த விவரம்லாம் சொல்லுவார் " என்று கூற

சந்தோஷத்தில் பறக்கும் பட்டாம்பூச்சி போல பறந்து சென்றாள் வெண்பா .

அவளை சிரித்துக்கொண்டே ரசித்தவள் " வெண்பா வெண்பா தான்" என்று முனுமுனுத்து விட்டு அவள் இருக்கையில் அமர்ந்து அவள் வேலைகளை செய்ய தொடங்கினாள்.

வெண்பா பரவசமாக அவள் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அவளை கவனித்த‌ சுவேதா " என்னடி மூஞ்சுல பல்ப் எரியுது உள்ள என்ன ஆச்சு " என்று கேட்க

சுற்றி முற்றிப் பார்த்தவள் மெதுவாக " என்ன ஆச்சு தெரியுமா 7 மணிக்கு இன்டர்வியூ எடுக்க அப்பாய்ன்மண்ட் கிடைச்சு இருக்கு " என்று சொல்ல

சுவேதா" வாட்..! செமடி உன் நம்பிக்கை வின் போல நல்லா பண்ணு அந்த காவியா மூஞ்சுல கரிய பூசனும் " என்றாள்

வெண்பா " இங்க பாரு சுவேதா நம்ம உயரத்துக்கு போறத்துக்காக உழைக்கனும் அடுத்தவங்கள கிழ இறக்கி விட இல்ல நா அவள எப்பவும் ஜெய்கனும்னு நினைக்கல என்னொட போன ஆர்ட்டிக்கல் விட அடுத்த ஆர்ட்டிக்கல் பெஸ்டா இருக்கனும் நினைக்கிறேன் அவ்ளோதான் " என்று சொல்ல

சுவேதா" சரி சரி உன்ன பத்தி தெரியாதா எனக்கு தெரியாம சொல்லிட்டேன் விட்டுட்டு " என்றாள்

வெண்பா " ம்.. அது " என்று சொல்லி அவள் சிஸ்டமை ஆன் செய்தாள்

சுவேதா " ஏன் வெண்பா இதுவரைக்கும் எவ்வளோ பேர நீ இன்டர்வியூ பண்ணி இருக்க இந்த கவின் என்ன ஸ்பெஷல் இவ்வளோ ஆர்வமா இருக்க " என்று கேட்க

வெண்பா " கவின் ஒன்னும் சாதரன ஆல் இல்ல க்ளோபல் ஃபண்டிங் ஓட ஓனர் மூர்த்தி சாரோட ஒரே பையன் " என்று சொல்ல

சுவேதா" அது எவ்ளோ பெரிய கம்பெனி அவரோட பையனா இவரு " என்று ஆச்சரியமாக கேட்க

வெண்பா " ஆமா அதுமட்டும் இல்ல அப்பா சொத்துல காலர் தூக்கி விட்டுட்டு வேலை பாக்காம தனியா கம்பெனி ஆரமிச்சு இன்னைக்கு டி.எம். இன்வெஸ்ட்மென்ட் தெரியாத ஆலே இல்லாத அளவுக்கு வளர்ந்து இருக்காரு "என்றாள்

சுவேதா " செம டி அவரு உன்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டார் போல விட்டா ஆனந்துக்கு டாட்டா தான் போல " என்று கேட்க

வெண்பா " ச்சீ வாய மூடு அப்படி லாம் ஒன்னும் இல்ல " என்று சொல்ல

சுவேதா" சரி அவரு பார்க்க எப்படி இருக்காரு ஸ்மார்டா ஹேன்சமா " என்று கேட்டாள்

வெண்பா " யாருக்கு தெரியும் " என்று சொல்ல

சுவேதா " ஏன்டி ஒரு மாசமா அந்த ஆஃபிஸ்ல போனியே ஒரு தாட்டி கூடவா பாக்கல" என்று கேட்டாள்

வெண்பா " இல்லடி ட்ரை பண்ணன் பட் பார்க்க முடியல அவங்க வெப்சைட்டில கூட இல்ல கூகிளில பார்த்தா வேறும் கண் மட்டும் இல்ல பின் போஸ் தான் இருக்கு " என்றாள்

சுவேதா" எதுக்கு இப்படி பன்றாரு ஆல் பாக்க நல்லா இருக்க மாட்டாரோ " என்று கேட்க

வெண்பா " எனக்கு தெரிஞ்சு அப்படி இருக்காது சில பேருக்கு அவங்க பர்சனல் டிஸ்டர்ப் அயிடகூடாதுனு கூட இப்படி பண்ணுவாங்க " என்றாள்

சுவேதா" சரி சரி நீ உன் ஆல் விட்டுக்கொடுப்பியா " என்று கேட்க

" யாரு என் ஆளு ஓத வாங்க போற நீ என்கிட்ட இதே மாறி பேசிட்டு இருந்தேனா... என்றாள் வெண்பா

சுவேதா " சரி சரி சமாதானம் " என்று இருவரும் அவர் அவர் வேலைகளை பார்த்தார்கள்.

வெண்பா எழுந்து ஆனந்த்க்கு கால் செய்தாள்

ஆனந்த் " ஹாய் செல்லக்குட்டி என்ன பன்ற" என்று கேட்டான்

வெண்பா " ஆனந்த்.... " கொஞ்சினாள்

ஆனந்த் " என்ன வேணும் கூப்பிடுறதே ஒரு மார்க்கமா இருக்கு" என்று கேட்க

வெண்பா " ஈவினிங் பார்ட்டிக்கு ...." என்று பேசும் போதே ஆனந்த்

" என்ன டிரஸ் போடணும் யார் யார் வராங்க அதான கேட்க போற" என்று கேட்டான்

வெண்பா " இல்ல அது வந்து..." என்று சொல்ல

ஆனந்த் " என்னனு சொல்லு" என்று கேட்டான்

வெண்பா " நா சொன்னா நீ கோவப்பட கூடாது" என்றாள்

ஆனந்த் " என்னனு சொல்லு உன் மேல நா எப்ப கோபப்பட்டு இருக்கேன் " என்று சொல்ல

வெண்பா " நா ஈவினிங் பார்ட்டிக்கு வரல " என்றாள்

ஆனந்த் " ஏன் என்ன ஆச்சு " என்று கேட்க

வெண்பா " நா உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல கவின் பத்தி " என்று சொல்ல

ஆனந்த் " இப்ப எதுக்கு தேவையில்லாம யார் யாரோ பத்தி பேசிட்டு இருக்க " என்றான்

வெண்பா " அவர நான் இன்னைக்கு இன்டர்வியூ எடுக்க போறேன் " என்று சொல்ல

ஆனந்த் சற்று எரிச்சலோடு " ஆனா வெண்பா " என்று சொல்லும் போதே

வெண்பா " நான் சொல்லி முடிச்சிடறேன் ஃபர்ஸ்ட் ப்ளீஸ் உனக்கே தெரியும் நான் ரெண்டு மாசமா இதுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அவங்க நான்தான் வரணும்னு கேட்கும் போது நான் போக முடியாதுன்னு சொல்ல முடியாது உனக்கு தெரியும் இல்ல அவரு எவ்ளோ பெரிய ஆளுன்னு இதுவரைக்கும் அவளுக்கு எந்த பத்திரிகை இன்டர்வியூ கொடுத்ததே இல்ல இது எனக்கு கிடைச்சிருக்கு பெரிய சான்ஸ் நீ புரிஞ்ப்பனு நினைக்கிறேன் " என்று சொல்ல

ஆனந்த் " ஆனா வெண்பா இன்னிக்கு என் பர்த்டே இன்னிக்கும் இதல்லாம் சொல்லிட்டு இருந்தா எப்படி? நான் உன்னை அதிகமாக வெளியே கூப்பிடறது கூட கிடையாது என் பர்த்டே அப்ப கூட உன்னால என் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதா " என்று கேட்டான்

வெண்பா " எனக்கு புரியுது ஆனந்த் பட் இந்த ஆப்பர்சூனிட்டிய நான் மிஸ் பண்ணிட்டேனா திருப்பி அது கிடைக்குமா கிடைக்காதானு எனக்கு தெரியாது நெக்ஸ்ட் வீக் உன் நட்சத்திர பிறந்த நாள் வருதில்ல அப்ப நீ நான் அம்மா எல்லாரும் சேர்ந்து கிராண்டா வீட்ல கொண்டாடுறோம் ஓகேயா " என்றாள்

ஆனந்த் " சரி ஓகே எனக்கு புரியுது நீயும் வேணும்னே பண்ணல சிட்டுவேஷன் அப்படி அமைஞ்சிருச்சு சரி வர்க் முடிச்சுட்டு சொல்லு நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன் " என்றான்

வெண்பா " எனக்கு தெரியும் ஆனந்த் நீ இப்படி தான் சொல்லுவனு யூ ஆர் தி பெஸ்ட் ஐ ஆம் சோ லக்கி டு ஹேவ் யூ லவ் யூ ஆனந்த் " என்று சொல்ல

ஆனந்த் " லவ் யூ டூ!!! ஓகே பாய்" என்று ஏமாற்றுத்துடன் போனை துண்டித்தான்

ஆனந்த் அவன் நண்பர்களுக்கு கால் செய்து பார்ட்டியை கேன்சல் செய்தான் அப்போது அவன் போன் ஒலித்தது.

அதில் ஒரு பெண் கவர்ச்சியான குரலில் " ஆனந்த் பார்ட்டி கேன்சல் பண்ணிட்டியாமே " என்று கேட்டாள்

ஆனந்த் " ஆமா வெண்பா க்கு ஏதோ வேலை இருக்கா அதான் " என்றான்

அந்த பெண் அதற்கு " சி யு அட் செவன் இன் " என்று ஒரு ஆடம்பரமான ஹோட்டலின் பெயரை குறிப்பிட்டாள்

ஆனந்த் " இல்லை "என்று மறுப்பதற்குள் "ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ" என்று சொல்லி போனை கட் செய்தாள்

வெண்பா மிகவும் ஆர்வத்துடன் இன்டர்வியூகான அவுட்லைனை தயார் செய்தாள்.




-தொடரும்

மறக்காமல் இந்த சேப்டர் பற்றிய கருத்துக்களை கமெண்டீல் பதிவிட்டால் அது என்னை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.....

இந்த கதை பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 
Top