Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா

Advertisement

Aviraa

Well-known member
Member
அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு எனது நாவலை,,, வாசித்து நிறை - குறைகளை கூறுமாறு க்கேட்டுக் கொள்கிறேன்.. இத்தளத்தில் கதை பதிவிட திரி அமைத்துக் கொடுத்த மேம் அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவிரா
 
தீராப் பகை தீராக் காதல் - அவிரா
பகுதி - 1


தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
ஏ.....
தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் தும்.....
ஏ.....
எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்கமாகி போச்சு கணக்கு

பள்ளிக்கூட போகையில பல்ல பட்டி ஓடையில
கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு
இத குத்தமினு சொன்னா அவன் கிறுக்கு .....

பாடல் வரிகள் அந்த ஹாலின் நான்கு மூலையிலும் பட்டு எதிரொளிக்க, ஹாலின் நடுவே, போடப்பட்டிருந்த ஷோபாவில் ...வேங்கை புலியென கம்பீரமாக அமர்ந்திருந்தவனின், பக்கத்திற்கு ஒன்றாக இரு யுவதிகள் அவனின் , தோளை உரசியப் படி அமர்ந்திருக்க .... அவன் பின்புறம் ஒரு அழகி .... அவனின் கழுத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க ....

. உடலை மட்டும் அவ்வழகிகளுக்கு கொடுத்து விட்டு, அவனின் ... "கூரியப் பார்வையை தனக்கு எதிரே நின்றிருந்தவளின் மீது வீசி.... அவளை தலை முதல் பாதம் வரை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள், சற்று நேரம் .. . பெண்ணவளின் விழிகளில் தேக்கி பின் அவளை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்தன......வேங்கை விழியானின் விழிகள்..

அவ்விழியானின் துகில் உரிக்கும்பார்வையிலும், இன்னும் ஒலித்துக் கொண்டிருந்த ... பாடல் வரிகளினாலும்,... இளம் யுவதிகளின் செயல்களினாலும் .... சீற்றம் கொண்ட மங்கையவள், "ஆளையும், பாட்டையும் பாரு பொறுக்கி .." என மனதில் தீட்டிக் கொண்டே....வேங்கைக்கு இணையாக தன் கோபத்தை..... தன் வீழிகளின் மூலம் வேங்கைக்கு கடத்திக் கொண்டிருந்தாள்..

அவளின் கோபம்... வேங்ைகக்கு மகிழ்ச்சியளிக்க .. மேலும் அவளின் கோபத்தை தூண்டும் பொருட்டு ; எழுந்து நின்றவன்.... இச்சமயம் ஒலித்த பாடல் வரிகளுக்கு ஏற்ப .... அழகிகளை சுழற்றி வேகமாக ஆட ஆரம்பித்தான் ....


"வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொள்ளை இல்லை
வாழ்க்கையில இன்பம் கண்டு ஜெய்ப்போம்

சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்லே
இப்படியே எல்லா நாளும் இருப்போம்

எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி
எக்கச்சக்க மாரி போச்சே கணக்கு."...
பாடலின் வேகத்திற்கு ஏற்ப மூவரையும் மாற்றி, மாற்றி சுழற்றி ஆடிக்கொண்டிருந்தவன்... அவ்வப்போது..... அடுத்ததாக நீதான் என்பது போல் தன் கூரியப் பார்வையை .....தனித்து நின்று முறைத்துக் கொண்டிருந்தவளின் ... முகத்தில் வீச...

அவனின் 'விழி' பாஷையின் அர்த்தத்தை சரியாகப் புரிந்துக் கொண்ட ..... அடுத்த நொடி..

"நிறுத்துங்க" ..... என கத்தி இருந்தாள் .... மங்கையவள்..

"எவ அவ".. என் வீட்டில
எனக்கே ஆர்டர் போடுறவ" என.,,தெனாவெட்டாக; கேட்டுக் கொண்டேபெண்ணவளின் முன்
சென்று நின்றவன்.. பின்னால்.. திரும்பி அழகிகளைப் போக சொல்லி விரல் அசைக்கவும், சடுதியில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள்...
அடுத்ததாக, பாடலும் தாம் மென நிறுத்தப்பட ....

இப்போ சொல்லுடி.... என்பது போல் அவளின் விழிகளை வேங்கை நோக்க...

"மிஸ்டர் ... பாண்டியன் உங்களுக்கும், எனக்கும், பிஸினஸ் ப்ராளபம் தானே தவிர, மற்றது எதுவும் நமக்குள்ள இல்லை, .அதுவும் முதல் தடவை என்னைப் பார்க்கிற உங்கப்பார்வை எதுவும், சரியில்ல.. என்னோட நிலை இப்போ சரியில்ல; இல்லனா என்னை கேவலமாக பார்த்த உன் கண்ணை நோண்டியிருப்பேன்.. அதை தற்போது செய்ய முடியாத தன் நிலையை எண்ணி .....

"ப்ச்' ... என சலித்தவள் .... எங்க பிசினஸ்ல நீங்க தலையீடாம... இருக்க என்ன டிமாண்டுனு சொன்னா.. முடியும், முடியாதுனுட்டு போயிட்டே இருப்பேன்.."
எனக் கூறி முடித்தவள் ... அவன் அருகாமையில் உடல் கூச; அவனை விட்டு ஒரு அடி பின் வைத்து நகர்ந்து நின்றாள்.

"என்னைப் பார்த்த அடுத்த நொடியே ... பின் வாங்குற... மிஸ். வானதி நாச்சியார் ... மருதவேல் .. நீ.. பொறுக்கி னு, சொல்லுற.... ச்சி''.னு வேற மூகம் சூழிக்கிற... ஸோ.. இதிலிருந்து என்ன புரியுதுனா ?... உனக்கு என்னைப் பிடிக்கலைனு தெரியுது.. அதனால என் டிமெண்ட்டு.. அதுதான் ... உங்கப்பன் கஷ்டப்பட்டு, கட்டி வளர்த்த உங்க பிஸினஸில் நான் ஏற்படுத்தி இருக்கும் சிக்கலை .. நானே சரியாக்கும்னா.. நீ எனக்கு "xxxx" வந்துடு.. ஆல் ப்ராபளம் ஜ கீளியர் " என்று அவன் முடிப்பதற்குள்,


"அவன் கூறிய xxxx வார்த்தை வானதியின் இதயத்தில் அமிலத்தை ஊற்றி ேகாபத்தின் உச்சிக்குச் சென்றவள். மேசையில் அலங்கரத்திற்காக வைக்கப்பட்டு இருந்த நடுத்தர அளவுள்ள வெண்கல சிங்கத்தை நொடியில், கையில் எடுத்தவள்,முன்னவனின் தலையில் தாக்க முற்பட, அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன்; அவளின் கைகளைப் பற்றி தாக்குதலைத் தடுத்தவன்.... அவள் கையிலிருந்து சிங்கத்தைப் பிடுக்கி வீசியெறிந்திருந்தான்...

அது சுவரில் பட்டு
"டொய் .... என்ற சப்தம் ஹாலில் எதிரொளிக்க, அச்சத்ததில் தன்னிலை மீண்டவள்.... அவன் கைகளை உதறி"


"போட பொறுக்கி, பிஸினஸ் தானே, முழுசும் போனா கூட எங்க பரம்பரை சொத்து , வீடு இருக்கு, மேலும் நான் எம்.பி.ர படிச்சு இருக்கேன்.. வேலைக்கு போயி என்னோட பெத்தவங்களை காப்பாத்துவேன் ... உன் கூட படுத்து கோடீஸ்வரியா வாழணும்னு இல்ல.. இன்னொரு தடவ அந்த வார்த்தையை என்கிட்ட சொன்ன °.. உன்னைய
கொன்னுடுவேன்டா பொறுக்கி .. உன்னால ஆனதை பாருடா என்றவள்.,, வேகமாக வெளியேற ... பாண்டியன் கூறிய வார்த்தையில், அப்படியே நின்றாள் உள்ளம் நடுங்க...
தொடரும் ..
 
அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு எனது நாவலை,,, வாசித்து நிறை - குறைகளை கூறுமாறு க்கேட்டுக் கொள்கிறேன்.. இத்தளத்தில் கதை பதிவிட திரி அமைத்துக் கொடுத்த மேம் அவர்களுக்கு எனது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவிரா
Nirmala vandhachu ???
Best wishes for your new story pa
Nalla start pa
 
Last edited:
Nice start. Best wishes. Thudakkam romba interesting ah irruku. Mathiyathil vittu pogakudathu seriya penne.
I'll criticise your presentation.
 
Top