கதை அருமை. எழிலன் வரலாற்று பேராசிரியர். அப்பா பிரின்ஸ்சிபல் அம்மாவும் பேராசிரியர் . தாத்தா டிபார்ட்மெண்ட் ஷாப் வைத்து இருக்கிறார்.நல்ல ஆசிரியர் எழிலன் பாடகன் என்று பெயர் வாங்கியவன் . அவன் மாணவி மணிமேகலை பிரச்சினை வர அதை தீர்வு காண்கிறான். ஹீரோ மட்டும் இருக்கிறாரே ஹீரோயின் எங்கே தேடும் போது அதிர்ச்சி நமக்கு குழந்தை வேறு இருக்கிறது அவனுக்கு. அவன் மனைவியை கைப்பற்ற சென்னை கல்லூரியில் சேர்ந்து இன்னொரு டாக்டர் பட்டம் வாங்க வந்திருக்கிறான். நிலவழகி அண்ணா தான் எல்லாம் அவளுக்கு அண்ணா அப்படித்தான் இருக்கிறான். மஞ்சரி கியூட். நிலவலகி எழிலன் பிரிவு எப்படி ஏற்பட்டது என்று அழகாக கதையை நகர்த்துவது சூப்பர். எழிலன் அழகி இருவரின் உணர்வு செம. நிலவன் உணர்வு சூப்பர். தேன்மொழி சூப்பர். அதியமான் யதார்த்தம். மலர் செழியன் நல்ல அப்பா அம்மா. தாத்தா இருவர் பாட்டி அனைவரும் சூப்பர். நட்பு ஆதிரா செம. வந்தனாவைப் போல் சிலர் இருக்கிறாங்க.எழிலன் அழகி விசயத்தில் முதலில் தடுமாறினாலும் கடைசியில் புரிந்து நடந்து கொள்வது அழகு. நிலவனை புரிந்து கொள்வது சூப்பர். தாத்தா ஓய்வு கொடுப்பது எல்லோரும் கிராமத்தில் அவ்வப்போது போவது சூப்பர். எஸ்பிபி பாடல் வருவது அழகு.முடிவு அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.