Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - விமர்சனம்

Advertisement

Ashokaa

Well-known member
Member
தேவார சந்தங்கள் 🥰🥰🥰

இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன??? அப்படீன்னு கேட்டா சொல்ல நிறைய இருக்கு. பெண் அடிமைத் தனம், பெண் கல்வி மறுப்பு, ஜாதிய வெறி, கெளரவக் கொலை, மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைன்னு ஒரு கதம்ப மாலையாவே தொடுத்துட்டாங்க எழுத்தாளர் @Devi Manogaran அந்த கதம்ப மாலைல இருக்கும் மரிக்கொழுந்து மட்டும் எப்பவும் specia. அது வாடிப் போனாலும் மணம் வாடாதது போல நாயகன் நாயகி இல்ல இல்ல சதுரங்க ராஜா ராணியின் காதலும் கதை முழுக்க மணம் வீசி, கதை முடிஞ்சாலும் இன்னும் நம்ம மனம் முழுக்க மணம் நிறைக்கிறாங்க. ஓஹோ அப்ப ரொம்ப ஆதர்ஷ தம்பதிகளான்னு கேட்டா 🤭🤭🤭🤭

கதைக்கருன்னு சொன்னது எல்லாமே ரொம்பவே சீரியஸ் விஷயம் ஆச்சேன்னு நினைச்சுப் பார்த்தா அந்த மரிக்கொழுந்து வாசத்துல மத்ததெல்லாம் மறந்துடுது. அதாங்க காதல் நம்ம கண்ணை மறச்சுடுது 😜😜😜

ராகமா ஒரு நாயகின்னு சந்தோசப்பட்டா ராகத்த விட சோகமான வாழ்க்கைல சிக்கி இருக்கா. நாயகன் வந்து எப்படி காப்பாத்துனாருங்குறது தான் கதை. காதல் தேவன்னு சொன்னாலும் சரியான கச்சேரி தேவன் 🫣🫣🫣 ஒரே பாட்டுக்கு பாட்டு தான். அதிலும் எல்லாமே அம்மணி பேர் ராகத்துல. சில பாட்டெல்லாம் இந்த எழுத்தாளர் எங்க இருந்து எடுத்தாங்கன்னே தெரியல. “அன்பே யார் என்ன சொல்ல என்னைத் தொடு நீ”ன்னு பாடும் போது தான் இந்த பாட்டெல்லாம் இவ்வளவு நாளா கேட்காம விட்டுட்டோமேன்னு தோணுச்சு.

ஆனாலும் எனக்கு மட்டும் ஒரே ஒரு குறை... இம்புட்டு பாடுன இந்த காதல் தேவன், “தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்“ அப்படின்னு என் அப்பனை பாடாம விட்டுட்டானேன்னு. அதோட பலன்; காதல் தேவனும், தேவியும்(தேவனோட தேவி, எழுத்தாளர் இல்ல 🤭) கைலாசநாதனின் கடைக்கண் பார்வை படும் முன்னர் பல சோதனைகளை கடந்து வர வச்சுட்டார் 😜😜😜 அடியவருக்கு அருளும் நாதன் கருணையால் எல்லாம் சுபம்தான்😊😊😊 சரி தப்பு பண்ணவங்களெல்லாம் திருந்தியாச்சான்னு கேட்டா 🤔🤔🤔 வருந்துயாச்சுன்னு சொல்லிட்டாங்க.

அப்பாடா எப்படியோ தேவன் இழுத்த காதல் தேர் தேரடிக்கு வந்தாச்சு முற்றுப்புள்ளி வைப்பாங்கன்னு பார்த்தா புதுசா நாலு புள்ளி வச்சு (கர்ணா, முரளி ள், திரு, விவே) தொடரும் போட்டுட்டாங்க. அதுவும் அதெல்லாம் இடைவெளி விட்டு தான் வருமாம்😏😏😏

மொத்தத்தில் சந்தத்தில் பாடிய தேவாரம் பாடாமலே தேவார சந்தங்கள் சாந்தமாக முடிவடைந்துவிட்டது. படிச்சு பாருங்க மக்கா 😊😊😊
 
Top