Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்! -30

Advertisement

praveenraj

Well-known member
Member
விவானின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது. அந்த அழைப்பைப் பேசியபின் அவனுக்கு உறக்கமே வரவில்லை. என்ன செய்வான் அவன்? மனிதர்கள் ஒன்றை நினைக்க நடப்பதொன்றாகத் தானே இருக்கிறது? அவன் நினைவுகளும் எங்கெங்கோ சென்றது. 'அந்த' நாட்கள் அவன் கண்முன்னே வந்து போனது. எத்தனை எத்தனை இன்பம் மூச்சை இழுத்துவிட்டவன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டான். நிச்சயமாக இந்தப் பயணம் எல்லோருக்கும் 'மகழ்ச்சியை' மட்டுமே தரப்போவதில்லை. சிலர் கண்டிப்பாக அழுகை தீரா ஏக்கம் நிறைவேறா கனவுகளுடனே திரும்பி ஆகவேண்டியக் கட்டாயம். ஆனால் யாரவர்கள் என்பதில் தான் இருக்கிறது சஸ்பென்ஸ். அதற்கான பதில் அவனிடமே இல்லை. எல்லாப் பக்கமும் நமக்கு வேண்டியவர்களே இருந்தால் நிச்சயம் யார் தோற்றாலும்,யார் அழுதாலும், யாருக்கு வலி என்றாலும் வேதனை நிச்சயம் விவானுக்கே. சரி நடப்பது நடக்கட்டும். இனி எல்லாம் 'அவன்' கையில் தான் இருக்கிறது.

விவான் விடியற்காலையில் தான் நன்றாக உறங்க ஆரமித்தான். தியாவும் இளங்கோவும் அருகில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டு இருந்தனர். பேசாமல் எழுந்து நித்யாவின் கம்பார்ட்மென்டுக்குள் போலாமா என்று நினைத்தவன் பின் அந்த யோசனையைக் கைவிட்டான். காலையிலே தியாவுக்கு அவனுடைய ஆன்லைன் ஜர்னல் அலுவலகர் கோபியிடமிருந்து அழைப்பு வந்தது. சில ஹெட்லைன்ஸ் விஷயமாக கொஞ்சம் உரையாடவும் தியாவிற்கு தூக்கமே போனது. அவன் எழுந்து கொஞ்சம் நடக்க அங்கே அடுத்த கம்பார்ட்மெண்டில் துவாரா மட்டுமே விழித்துக்கொண்டு இருந்தான். துவாரா தியாவைப் பார்க்க அவனும் இவனைப் பார்த்தான். இருவரும் பேசிக்கொள்ள வில்லை என்றாலும் அவன் வந்து துவாராவின் அருகில் அமர்ந்தான்."துவாரா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்கக் கூடாது" என்று தியானேஷ் ஆரமிக்க, சொல்லு என்பதைப்போல் அவன் இருந்தான்.

"ஒருத்தரை இருக்கும் போது நேசி.பேசு.கோவம் வந்தா திட்டு, ஏன் அடிக்கவும் செய். ஆனால் இப்படி அவாய்ட் பண்ணாத. நாளைக்கு அவங்க இல்லாம கூட போகலாம். போகலாம் என்ன நிச்சயம் எல்லோரும் ஒருநாள் போயேதான் தீரணும். அதன்பின் என்னைக்கோ ஒரு நாள் எதேர்ச்சியாக உனக்கு எல்லாம் ஞாபகம் வரலாம். அப்போ கொஞ்சம் உட்கார்ந்து யோசித்துப் பார்த்தா, ஒருவேளை நான் இதை வேற மாதிரி ஹேண்டில் பண்ணியிருக்குமோனு தோணலாம். நிச்சயம் தோணும். அன்னைக்கு நீ செஞ்ச தப்பு உனக்குப் புரியலாம். இல்ல அவங்க செஞ்ச தப்பு உனக்குப் பெருசா படாம கூடப் போகலாம். அப்போ உனக்கு ஒரு எண்ணம் வரும், நாம அவசரப்பட்டுட்டோமோ, கொஞ்சம் பொறுமையா யோசிச்சு இருக்கலாமோனு தோணும். அப்போ தோன்றதுனால ஒன்னும் பிரயோஜனம் இல்ல. இதோ இப்ப என் அப்பா இல்ல தான். ஆனா நிறைய தடவை அவரை மிஸ் பண்ணியிருக்கேன். நான் அந்த ஜர்னல் ஆரமிக்கும் போது என் அப்பா கையால அதைத் திறக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். முடியல. இது தான் லைப். ஏன் மிருவை எடுத்துக்கோ, என்னால என் அம்மாவையும் சமாதானம் செய்ய முடியல மிருவையும்" என்று அவன் நிறுத்த, "புரியுது தப்பு என் மேல தான். நீ யாருடா இதெல்லாம் சொல்லறதுக்குனா என்னை மன்னிச்சுட . நான் வரேன்" என்று தியா எழ,

"டூ யூ ஸ்டில் லவ் மிரு?"

"ஆஸ் ஆல்வேஸ்"

"இன்னமும் உனக்கு என் மேல கோவம் இருக்கா தியா?"

சிரித்தவன்,"அப்படிக் கோவம் இருந்தா நான் உன்கூட இப்படிப் பேசியிருக்கவே மாட்டேன்"

"மிரு கூட உன்னைத் தான் விருப்பறானு நெனைக்கிறேன்.நிஜமா.ஆனா உன் அம்மாவை நெனச்சா தான்..."

"பார்த்துக்கலாம். எல்லாத்தையும் சமாளித்துத் தானே தீரவேண்டும்"

"சரி நான் கொஞ்சம் தனியா இருக்கனும் தியா"

"ஓ சாரி. கேரி ஆன்" என்று அவன் சென்றுவிட்டான்.

துவாராவுக்கு மிருவை முதன்முதலில் பார்த்ததும் பின்பு மீண்டும் பார்த்ததும் எல்லாம் நினைவுக்கு வந்தது.

............................................................

அன்றையப் பொழுது விடிய எல்லோரும் எழுந்து ரெஃப்ரெஷாக போக கொஞ்சம் கிண்டல் கேலி என்று பேச்சுச் சென்றது. துஷியை அங்கே படுக்கவைத்துவிட்டு யாழ் ரெஃப்ரெஷ் ஆக கொஞ்ச நேரம் உறங்கும் ஜெஸியின் தலை முடியைக் கோதிக்கொண்டிந்த ரேஷாவின் எண்ணமெல்லாம் இரண்டு விஷயத்தில் இருந்தது. 'நேற்று அவசரப்பட்டு அவன் மூக்கில் குத்திவிட்டோமே' என்று தோன்ற மறுபுறம் அவனுக்கு அது தேவை தான் என்று நினைத்துக்கொண்டாள் ரேஷு பேபி. 'துஷ்யந்த் தானே அவன் பேரு. பரவாயில்லையே இன்னமும் ஞாபகம் வெச்சு இருக்கியே' என்று ரேஷா நினைக்க, 'அவனை யாரு ஞாபகம் வெச்சு இருக்கா? ச்சீ சீ அவன் மாறவேயில்லை. அவனாவது மாறுறதாவது' என்று இவள் முணுமுணுக்க அந்த போனை பார்த்தவுடன் ஏனோ இம்முறை அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் ஆவலைக் காட்டிலும் அவன் இவனாக இருக்கக்கூடாதா?' என்று ஒருநிமிடம் மனம் நினைக்க, 'அட கூறுகெட்ட மனசே உனக்கு இன்னுமா புத்தி இல்ல? அவனைப் போய் இன்னமும் நெனச்சிட்டு இருக்க பாரு' என்று திட்ட, 'இந்த நாயி ஒழுங்கா இருந்திருந்தா நான் உன்னை எப்போவோ காதலித்து கரம்பிடித்திருப்பேனடா' என்று நினைத்தவள், 'ஆமா இவனுக்கு எப்படி நாம இந்த ட்ரைன்ல போறது தெரியும்? ஒருவேளை தற்செயலாக இருக்குமோ? இல்லையே இதுல ஏதோ உள்குத்து இருப்பதைப் போல தெரியுது' என்று நினைத்தவள் அந்தப் படத்தை பார்க்க, சந்தோசமா சோகமா இல்லை இரண்டுமேவா இல்லை இரண்டுமே இல்லையா என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. கூடவே இன்னொன்று புரிந்தது.'அப்போ எல்லாம் இவன் பிளான் பண்ணி வந்து இருக்கான். யாரு சொல்லியிருப்பா? ஆமா இவன் பெரிய கலெக்டர் வேலை பார்க்கிறான் பாரு? இன்னமும் பொண்ணுங்கப் பின்னாடியே சுத்துறது தான் அவன் பொழப்பு. நாயி நாயி' என்று திட்ட, 'இவன் எப்பிடி என் அம்மா அப்பா கிட்ட பேசியிருப்பான்? இது எல்லாம் தற்செயலா இல்லை பக்கா பிளான்டா? தற்செயல் மாதிரி தெரியலையே,இப்படி காலங்காலையில புலம்ப விட்டுட்டியேடா நாயே'

அப்போது தான் அவன் வாங்கிய குத்தும் அதில் வழிந்த ரத்தமும் ஞாபகம் வர, ஒருகணம் மனம் வருந்தியது. எழுந்தவள் அவனின் இடத்திற்குப் போக எதிரே அவளை முறைத்துக்கொண்டே வந்தாள் யாழ். "ஹேய் இப்போ எதுக்கு அங்கப் போற?"

"ஏன் இந்த டிரைனையே நீ வாங்கிட்டியா என்ன? நான் எங்கவேணுனாலும் போவேன்"

"என்கிட்டயே உன் கொழுப்பைக் காட்டுறியா? நேத்து நீ அவனை அடிக்கும் போதே உன்ன எதாவது பண்ணியிருக்கணும்..."

அவள் யாழைக் கண்டுக்கொள்ளாமல் முன்னே செல்ல விரைந்து வந்து அவளைத் தடுத்தவள்,"மரியாதையா போயிடு" என்று எச்சரிக்கவும்,

"ஓ நீதான் அவனோட இப்போதைய கேர்ள் ஃப்ரண்டோ?"-ரேஷா

"ஆமான்னா என்ன செய்யப் போற?"

'ஹேய் அவன் தான் எனக்குப் பார்த்த மாப்பிள்ளை' என்று வாய்வரை வந்த வார்த்தையை நிறுத்திவிட்டு கோவமாய்த் திரும்பிப் போனாள். யாழ் திரும்ப அப்போது தான் எழுந்த துஷி,"ஹே ரேஷா நில்லு நில்லு, என்னடி பண்ண அவளை?"

"அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உன் மூக்கைக் குத்துவா அது தான் அவ மூக்கை உடைச்சேன்"

"எருமை மாடே! எதுக்குடி அடிச்ச அவளை?"

"நான் எங்க அடிச்சேன்?"

"மூக்கை உடைச்சேனு சொன்ன?"

"அது அந்த உடைப்பு இல்ல. நோஸ் கட்"

"என்னத்த உளறி தொலச்ச?"

"நான் ஒண்ணுமே பண்ணல துஷி" என்று குழந்தையாய்ச் சிணுங்கினாள் யாழ்.

"என்னடி பண்ண? கொஞ்சம் சொல்லு ப்ளீஸ்"

"நீதான் அவனோட இப்போதைய கேர்ள் ப்ரெண்டானு கேட்டா?"

"அதுக்கு நீ என்னடி சொன்ன?"

"ஆமா. அதுக்கு இப்போ என்ன பண்ணப் போறேன்னு மட்டும் தான் துஷி சொன்னேன், வேற ஒன்னும் சொல்லல.பிலீவ் மீ மதர் ப்ராமிஸ்"

"எருமை மாடே. கழுதை, ஹேம்" என்று அழுத துஷி,"நீ என் கேர்ள் ப்ரெண்டாடி?"

"ஆமா துஷி. நான் ஒரு பொண்ணு அதனால கேர்ள், சின்ன வயசுல இருந்து உன் ஃப்ரண்ட் தானே? அப்போ நான் கேர்ள் பிரென்ட் தானே?"

"எருமை மாடே எருமை மாடே, பூனையை மடியில கட்டிட்டு வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்"

"எந்த பூனைடா? கொடு நான் பார்க்கறேன்"

"நான் செம கோவத்துல இருக்கேன். ஓடிடு.ஐயோ மூக்கு வேற வலிக்குதே"

"பிளாஸ்திரி ஒட்டுன என்னைவிட உனக்கு மூக்கை உடைச்ச அவ தான் முக்கியமில்லை?"

"உன்னால தான்டி அவ என் மூக்கை உடைச்சா.நான் கூட தெரியாம உடைச்சி இருக்கானு நெனச்சேன். ஆனா பிளான் பண்ணி உடைச்சியிருக்கா அந்த குள்ளச்சி"

"ஆமாண்டா சரியான குள்ள கத்திரிக்கா"

"உன்ன... போயிடு என் மூஞ்சில முழிக்காத" என்று தலையில் கைவைத்து அமர்ந்தான் துஷி. "அப்போ இவ்வளவு நாள் போட்ட பிளான் எல்லாம் ஸ்பாயிலா?"

"மச்சி நீ யாரோ ஒரு பொண்ணை லவ் பன்றேன்னு சொன்னியே யாரு மச்சி அவ? சொல்லு காதலுக்கு மரியாதை செஞ்சிடுலாம்" என்ற யாழுக்கு,

"ஏன் நீ இதுவரை உடைச்சதெல்லாம் பத்தாதா? உன்ன..." என்று அவன் அவளைத் துரத்த அவளோ வேகமாய்ப் பின்னால் பார்த்துக் கொண்டே ஓட ஒரு லேம்ப் போஸ்டின் மீது இடித்த பீல் அவளுக்கு...

..................................................

"சீக்கிரம் எழுந்து ரெடி ஆகு மௌனி. அப்புறோம் இன்னைக்கும் சோறு வாங்கிக்கொடுக்காம டைரெக்ட்டா லன்ச் வாங்கி தரப் போறானுங்க" என்றாள் நித்யா.

"அதுக்கென்ன பல்லு மட்டும் விளக்கினாப் போச்சு"

"இப்போ புரியுதுடி எதுக்கு ஹேமா உன்னை அழுக்கு மூட்டைனு சொல்லுறான்னு"

"போங்கக்கா" அவள் மீண்டும் இழுத்துப் போர்த்த,"உன்னையெல்லாம் வெச்சிக்கிட்டு எப்படி அந்த ஹேமந்த் பையன் குப்பகொட்டப் போறானோ தெரியில?"

இப்போது மிரு,இதித்ரி,பாரு எல்லோரும் ஹைப்பை கொடுத்தனர். அனேஷியா ரெடி ஆக சென்று இருந்தாள்.

"அக்கா தியாவுக்கு போன் பண்ணுங்க. அப்புறோம் பூவா கட் பண்ணிடப் போறானுங்க"

"தியா?"

"சொல்லு நித்யா"

"டிபன் ஆர்டர் பண்ணிடு மறக்காம"

"டன்"

"அப்புறோம் ஹேமா பையனை கொஞ்சம் அனுப்பி வை"

"ஓகே.என்ன மேட்டரு?"

"அனுப்பிவைடா"

அதற்குள் இளவேனில் எழுந்துவிட,"ஏண்டி என் பொண்ணே எழுந்துட்டா நீ இன்னும் தூங்குற" என்று திட்டி இளவேனிலைக் குளிக்க வைக்க தூக்கிச் சென்றாள் நித்யா.

"என்ன மௌனி அண்ணா வந்து ரொமான்ஸ் பண்ணா தான் எழுந்துருப்பியா?"

"சீ போ பாரு"

"வாங்க ஹேமந்த் அண்ணா. நாங்கவேணுனா அந்தப்பக்கம் போயிடாட்டா?"

வாரிச்சுருட்டி எழுந்தாள் மௌனி. அங்கே மிரு,பாரு,இதித்ரி,அனேஷியா நால்வரும் அவள் எதிரில் நின்று அவளை ஓட்டிக்கொண்டு இருந்தனர்.

..........................

யாழ் சொன்ன 'ஆமான்னா என்ன பண்ணப் போற?' என்ற வார்த்தை ஏனோ அவளுக்கு வலித்தது.'நீ மாறவே இல்லைடா. உனக்கு கூட சுத்த அடிக்கடி ஒரு பொண்ணுவேனும்' அவள் வாய் துஷியை அர்ச்சித்துக்கொண்டே வர எதிரில் வந்த பெனாசிர் இவள் இப்படி தனியாக புலம்பிக்கொண்டு வருவதைப் பார்த்து,'ரேஷு பேபி என்ன ஆச்சு? ஏன் இப்படி விடியற்காலையில தனியா புலம்பிட்டு வர?"

அவள் கோவமாய்ப் பார்க்க,

"என்னடி?"

"ரேஷா ரெடியா? வா போய் ஒரு அப்போலஜி கேட்டுட்டு வந்திடலாம்" என்று அழைத்தான் இஸ்மாயில்.

"யாருகிட்ட?"

"யாருகிட்டயா? ஏன் நேத்து நீ பண்ணதெல்லாம் மறந்திடுச்சா? நீ ஒருத்தருடைய மூக்கை உடைச்சியே அவருகிட்ட"

"அவன்கிட்டலாம் சாரி கேட்க முடியாது"

"ஏன் இருந்தாலும் உனக்கு இவ்வளவு கோவம் கூடாதுடி. ரொம்பதான் அநியாயத்தைக் கண்டு பொங்குற"

அவள் குளிக்க போக,"ரேஷா நில்லு நில்லு" என்று குரல் கேட்காமல் அவள் சென்றாள். பின்னாலே வந்த துஷியைப் பார்த்த இஸ்மாயில் பெனாசிர் திருதிருவென முழித்து, "அது சாரி ப்ரோ. அவ நேத்து தெரியாம அடிச்சிட்டா. வி அப்போலஜய்ஸ் ஃபார் ஹெர்"

"யாரு அவ தெரியாம உடைச்சாளா? இதை நான் நம்பணுமா?"

"என்ன நீங்க அவ இவனு பேசுறீங்க?"

"ஏன் அந்த குள்ளச்சி என்னைப் பத்தி எதையும் சொல்லய்யா?"

"மிஸ்டர் மைண்ட் யுவர் ஒர்டஸ்" - பெனாசிர்

"ஐ மைண்ட் வாட் ஐ அம் ஸ்பீக்கிங். எனக்கு அவளைத் தெரியுங்க. அவளுக்கும் என்னைத் தெரியுங்க"

"என்ன சொல்றீங்க?"

"ரேஷாவும் நானும் ஒரே கைட் கிட்ட தாங்க ஒர்க் பண்ணோம்"

"காலேஜ் மேட்ஸா?"

"இல்ல நாங்க வேற வேற காலேஜ்ல எம்.பி.ஏபடிச்சோம்"

"என்ன சொல்றீங்க?"

"நானும் அவளும் ஒருகாலத்துல நகமும் சதையும் மாதிரி..."

"ஒருகாலத்துல?"

"ப்ளீஸ் கேள்வி மேல கேள்வி கேட்டு என்னைக் கொல்லாதீங்க. நான் அவளை அர்ஜெண்டா சமாதானம் செய்யணும் ப்ளீஸ்"

நம்பாமலே இஸ்மாயில் பார்க்க,

"ஏங்க நேத்து நான் அங்க வரும்போதே என் மூஞ்சி தெரிஞ்சது தானே?"

"ஆமா"

"அதுனால தாங்க நேத்து குத்து விட்டா. அண்ட் யாராவது இப்படி குத்துவாங்கிட்டு சும்மா போவாங்களா?"

"இல்ல"

"நான் போகும் போதே தெரியில்லையா? விடுங்க நான் போகணும்"

"மிஸ்டர்"

"இப்போ என்னங்க?"

"அவ குளிக்க போயிருக்கா?"

"ஏங்க ஏதாவது தெரியணும்னா கேளுங்க. இப்படி குறுகுறுன்னு சந்தேகமா பார்க்காதீங்க.அவ mba எங்க படிச்சானு கேளுங்க?"

"புவனேஷ்வர்ல"

"நான் 6 வருஷமா அங்க தாங்க இருக்கேன். ப்ளீஸ் பிலீவ் மீ"

"ஆனா உங்களைப் பத்தி அவ என் கிட்ட சொன்னதேயில்லையே?"

"ஓகே அவ யாரையாவது லவ் பண்ணியிருக்காளா?"

"இல்ல"

"அவளுக்கு யாராவது ப்ரொபோஸ் பண்ணி அக்செப்ட் பண்ணியிருக்காளா?"

"இல்ல"

"வீட்டுல பார்க்குற அலைன்ஸ்க்கு கூட ஓகே சொல்லியிருக்காளா?"

"......."

"சொல்லியிருக்கமாட்டா"

"அப்போ உங்களுக்கு உண்மையிலே அவளை?..."

"ஐயோ ராமா இதையே இப்போதான் நம்பறீங்களா?"

............................................................

எல்லோரும் சென்று ரெடி ஆகிவிட பெனசிரும் இஸ்மாயிலும் அனேஷியாவைப் பார்க்க வந்தனர். ஜெசி அங்கேயே இருந்தாள்.அவளுக்கு செபாவின் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க அத்தை. சாரி அத்தை நேத்து நான் கூப்பிட முடியல"

"பரவாயில்லடா. அப்புறோம் செபா கிட்ட பேசுனேன் அவனும் அசாம் போறானாம். நீயும் அவன்கூடவே போயிருக்கலாமில்ல? ரெண்டுபேரும் கல்யாணத்துக்கு அப்புறோம் தனியா எங்கேயும் போகவேயில்ல. என்னால தானே?" என்று வருத்தப்பட,

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை. ரெண்டுபேருக்கும் வேலை..." கொஞ்சம் விசாரித்துவிட்டு வைக்க அவளுக்கு இப்போது தான் புரிந்தது. இரண்டுமாதம் கழித்து திடீரென ஒருநாள் "நாம எங்கேயாவது போலாமா?" என்று கேட்க இவளும் துள்ளிகுதித்துக்கொண்டு லாங் ட்ரைவ் சென்று விட்டு வந்து "ஓகே வா?" என்றாள். அவன் கேட்டதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது.

'எவ்வளவு மிஸ்கம்யூனிகேஷன்ஸ் எங்க ரெண்டுபேருக்கும்?' எழுந்து மீண்டும் போனைப் பார்க்க அவனிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் வரவில்லை என்றதும் முகம் தன்னாலே சுருங்கியது.

இவளே அழைக்க முயல பின்பு யோசித்தவள் 'இது ட்ரெயின் ஒருவேளை அவன் கோவிச்சுகிட்டா?' என்று இவள் அமைதி காத்தாள்.

"வேர் ஆர் யூ?" என்று அவனிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

மேலே நோட்டிபிகேஷன் வெளியே காட்ட உடனே நெட்டை ஆப் செய்து அதை க்ளிக் செய்தாள். அவனிடமிருந்து வந்த மெசேஜ் தான் என்றாலும் அவளுக்கு 'இப்போது இவனுக்கு என்ன ரிப்ளை கொடுக்குறது? இல்ல நானும் ட்ரைன்ல தான் இருக்கேனு சொல்லலாமா இல்லை வேணாமா?' என்று யோசித்தவள் மீண்டும் மௌனிக்கு அழைக்க அவள் போன் எடுக்கப்படாமல் இருக்க உடனே ஹேமாக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல அவனோ "கொஞ்சம் பொறுங்க ஜெசி. இப்போதைக்கு அவனுக்கு நீங்க ரிப்ளை பண்ண வேணாம். நான் போய் அவனை பார்க்குறேன். ஐ வில் லெட் யூ நோ" என்றவன் நேராக செபாவின் கம்பார்ட்மெண்ட் போக அங்கே அவனோ கையில் போனை வைத்துக்கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தான்.

என்ன தான் செபா எதையும் சொல்லவில்லை என்றாலும் அவனின் எண்ணவோட்டம் ஹேமந்த், விவான், ஏன் இந்த விஷயம் தெரியாத தியா இளங்கோக்குக் கூட புரிந்தது. 'அவன் வருந்துகிறான் என்றும் எல்லோரையும் போல அவனும் இல்லை என்று நினைப்பது' அவர்களுக்கு நன்றாக புரிந்தது. காலேஜ் டைமில் இருந்தே செபா இப்படித்தான் திடீரென கோவித்துக்கொள்வான். அவன் ஏன் எதற்கு கோவித்துக்கொண்டான் என்று அறிந்து சமாதானம் செய்வதற்குள்ளே பெரும் பாடாகும்.

ஹேமந்த் செபாவின் எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர அவர்களுக்கு மறுபுறம் தான் விவியன் உறங்கிக்கொண்டு இருந்தான்."என்னடா?" என்று ஆதரவாய்க் கேட்டான் ஹேமந்த்,

"ஒன்னுமில்லை"

"செபா நீ என்ன நெனைக்கிறங்கறது வெளிய சொன்னா தான் தெரியும். இப்படி மனசுலே வெச்சிக்கிட்டு இருந்தா எங்களுக்கு எப்படித் தெரியும் சொல்லு?"

"இல்லடா"

"மச்சான், நான் உன் ஃபிரண்டுங்கறது எல்லாம் விடு. ஒரு வெல் விஷரா கேட்கறேன் என்ன தான் பிரச்சனை உனக்கும் ஜெசிக்கும்? நீ காலேஜ்ல இருந்து ஓரளவுக்கு ஜாலியானவன் தான். என்ன உங்க அப்பா மேல மட்டும் உனக்கு வருத்தம். இப்போ என்னடா ஆச்சு?" என்று எல்லாம் தெரிந்தும் தெரியாததுப் போல் கேட்டான்.

அவனும் சொல்லலானான்,"எனக்கு கல்யாணம்னு சொன்னதுமே எங்க என் அப்பா மாதிரி ஒரு பொண்ணு சிக்கிடுவாளோனு ஒரு பயம். நான் அவளை அங்க ரெஸ்ட்டாரெண்ட்ல பைக்கை நிறுத்தும் போதே வெளிய பார்த்தேன். இந்த மாதிரி ஒரு பொண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சிட்டு தான் உள்ள போனேன் பார்த்தா அதே பொண்ணு ஆனா" என்று எல்லாம் சொன்னான்.

"நீ எல்லாமும் தெளிவா பேசியிருக்கணுமில்ல?"

"நான் பேசுனேனே"

"கிழிச்ச, டேய் அந்தப் பொண்ணு என்ன பலவருஷமா உன்னைப்பத்தித் தெரிந்தவளா? எங்களுக்கே நீ எப்போ கோவிச்சுப்ப எப்ப நார்மலா இருப்பேன்னு தெரியாது. இதுல நீ பேசுறதுல இருக்கும் 'உள்ளுறை உவமையெல்லாம்' அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கணும்னு நெனச்சா எப்படிடா?"

அவன் பார்க்க,

"எல்லோருமே இங்க பிரஜூடிஸ் (முன் அபிப்ராயம்) செய்யுறவங்க தான். ஏன் நான் கூட மௌனியை அப்படித்தான் நெனச்சேன். பட் ஏதோ ஒரு பாய்ண்ட்ல நீ அதை கரெக்ட் பண்ணியிருக்கணும். நீ சொல்லவும் மாட்டயாம் ஆனா அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கனும்னா எப்படிடா?"

"சரி பிபோர் மேரேஜ் தான் அந்த கன்பூசன் ஆப்டர் மேரேஜ் என்ன பண்ண?"

இறுதி வாக்குவாதம் வரை அவன் சொன்னான்.

"பைத்தியமாடா நீ? அப்படி ஏன் பேசுன?அந்தப் பொண்ணு மனசு எப்படி உடஞ்சியிருக்கும்?"

அவனிடம் பதிலில்லை.

"சரி நீ அதுக்கப்புறோம் சாரியாவது கேட்டியா இல்லையா?"

"இல்லடா"

"கரெக்ட் நீயென் சாரி கேட்கணும்? உனக்குத் தான் அந்தப் பொண்ண பிடிக்காதே? அவ எக்கேடோ கெட்டுப் போனா என்ன?"

"டேய் ஹேமா ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதடா. எனக்கும் அவளைப் பிடிக்கும்"

"@#$%^. டேய் லூசு பிடிக்கிறவன் தான் இப்படி ரெண்டு நாளா எங்க இருக்கா என்ன பண்றானு கூட தெரிஞ்சிக்காம இருப்பானா? சும்மா ரீல் உடாத. அன்னைக்கே நீ முடியாதுனு சொல்லியிருந்தா இந்த கல்யாணமே நடந்திருக்காது. அவளாவது யாரையாவது கல்யாணம் பண்ணி நிம்மதியா இருந்திருப்பா. ஏன் கல்யாணமே பண்ணாம கூட நிம்மதியா இருந்திருப்பா..."

"ப்ளீஸ்டா இப்படி எல்லாம் பேசாதடா. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..."

"ஏன்டா அவ நிம்மதியா இருந்திருப்பானு சொல்றது கூட உனக்கு கஷ்டமா இருக்கா? ஏன் இவ்வளவு வெறுப்பு, வன்மம்" என்னும் போது அவனை அறைந்திருந்தான் செபா.

அந்த சப்தத்தில் துள்ளி எழுந்தான் விவி.

"நானும் மனுஷன் தான். அடுத்தவங்களை கஷ்டப்டுத்தி அதுல சந்தோச பட நான் ஒன்னும் சேடிஸ்ட் இல்ல. அன்ட் அதுவும் என் ஜெசியை, போடா..."

"என்னது உன் ஜெசியா? அந்த நெனப்பெல்லாம் கூட இருக்கா உனக்கு?"

"வேண்டாம் ஹேமா என்ன தயவு செய்து ஹர்ட் பண்ணாத. நானே அவகிட்ட இருந்து எந்த தகவலும் வரலைன்னு பயத்துல இருக்கேன். என்னை மேலும் கஷ்டப்படுத்தாத"

"அவ்வளவு அக்கறை இருக்குற நாயி போன் பண்ண வேண்டியது தானே?"

இப்போது அவன் பேசவில்லை.

"என்ன 'மேல் சாவுணிசமா?' (ஆணாதிக்கம்) அப்புறோம் உனக்கும் உங்க அப்பாகும் என்ன வித்தியாசம்? அவருகூட உன் நல்லதுக்குனு நெனச்சு தான் பண்றாரு.ஆனா நீ சரியான செல்பிஷ்"

செபா இதற்கு மேல் இங்கே இருக்கப்பிடிக்காமல் அடுத்திருக்கும் விவானின் கம்பார்ட்மென்டுக்குச் சென்றான்.

எதிரே இருந்த விவி தான்,"ஏன் ஹேமா இப்படி? அவனே கஷ்டப்படுறான். நீ வேற?..."

"யாரு அவன் கஷ்டப்படுறான்? விட்டா எல்லோரையும் சேர்த்து கஷ்டப்படுத்திவிட்டு போயிடுவான்"

"எனக்கு என்னமோ செபாக்கும் அந்தப் பொண்ணு மேல இன்ட்ரஸ்ட் இருக்குனு தோணுது"

சிரித்தான் ஹேமா.

"அப்போ இருக்கு தானே? அப்புறோம் எதுக்கு ஈகோ?"

அங்கே சென்றவன் தூங்கிக்கொண்டிருந்த இளங்கோவை எழுப்ப,

"என்னடா?"

"ஒழுங்கா இனிமேல் அந்த ஹேமந்த் பையனை என்கூட பேசவேணாம்னு சொல்லு. அப்புறோம் நடக்குறதே வேற..."

"இவன் என்ன லூசா? தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி இதைச் சொல்றான்? டேய் இதை நீ அவன்கிட்டயே சொல்ல வேண்டியது தானே?"

"நான் தான் இனிமேல் அவன்கிட்ட பேசமாட்டேனே. அதுக்கு தான் உன்கிட்ட சொல்றேன்"

"ஏன்டா அதுக்குன்னு தூங்கிட்டு இருக்கறவனை எழுப்பிவிட்டு தான் சொல்லுவியா? நல்லா வருவடா நீ" மீண்டும் இளங்கோ போர்வையை இழுத்து மூட,

"டேய் நான் ஜெசியைப் பிடிக்கலைனு என்னைக்காவது உங்ககிட்ட சொல்லியிருக்கேனா?"

"ஆஹா இன்னைக்கு நம்மள இவன் தூங்கவிடமாட்டான் போலயே" என்றவன்,

"கரெக்ட் மச்சி. இருந்தும் இதெல்லாம் நீ என்கிட்ட சொல்றதைவிட இதோ பாரு நம்ம நீதிமான் மச்சான் படுத்திருக்கான் (விவான்) அவனை எழுப்பிச் சொல்லு. என்னை தூங்கவிடு"

"ஏன்டா அப்போ உனக்கு என் வாழ்க்கை மேல அக்கறையே இல்லையா?"

"மச்சி உன் வாழ்க்கை மேல உனக்கே அக்கறை இல்லைங்கற போது நாங்க ஏன் அக்கறை படணும்?" என்றவன் போர்வையை இழுத்து மூட செபா கோவத்தில் சென்றான்.

"இளங்கோ அடிகளே ஒரே வாசகம்னாலும் திருவாசகமா சொன்னீங்க அடிகளே" என்று போர்வைக்குள் இருந்து விவான் குரல் வரவும்,

"அட கிராதகா! அப்போ இவ்வளவு நேரம் முழிச்சிட்டு தான் இருந்தியா?"

"குட் மார்னிங்" என்று போர்வையை விலக்கினானான் விவான்.(பயணங்கள் முடிவதில்லை) அல்மோஸ்ட் இன்டெர்வல் கிட்ட வந்துட்டோம் ,, இதுவரைக்குமான கமெண்ட்ஸ் ப்ளீஸ் (இதுவரை கமெண்ட் செய்யாதவர்கள் செய்தால் நன்றாக இருக்கும்)
 
யாழி மோதிய லேம் போஸ்ட்...லோகேஷா...?
துவா,தியா,மிரு.....மூணு பேருக்குமிடையே ஏதோ நடந்துருக்கு... :unsure: :unsure: :unsure:
விவான் மர்மா ஏதோ பண்றான் துவாவை சரிப்பண்ண...
ஸோ.....எல்லோருக்கும் ஹேப்பி எண்டிங் இல்லை....
யார்...யாரோ...?????
 
யாழி மோதிய லேம் போஸ்ட்...லோகேஷா...?
துவா,தியா,மிரு.....மூணு பேருக்குமிடையே ஏதோ நடந்துருக்கு... :unsure: :unsure: :unsure:
விவான் மர்மா ஏதோ பண்றான் துவாவை சரிப்பண்ண...
ஸோ.....எல்லோருக்கும் ஹேப்பி எண்டிங் இல்லை....
யார்...யாரோ...?????
ஆமாம் மூணு பேருக்கும் இடையே சில கதைகள் இருக்கு. எஸ் அதான் ட்விஸ்ட்.சீக்கிரம் சொல்லிடுறேன்.இன்னும் முப்பது அல்லது முப்பத்தியொன்று அத்தியாயங்கள் வரும்.நன்றி?
 
Top