Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 56

Advertisement

praveenraj

Well-known member
Member
அறைக்குச் சென்ற செபாவும் ஜெஸ்ஸியும் சற்று உரையாடினார்கள். அனேஷியாவைப் பற்றி அவள் அறிந்ததை எல்லாம் ஜெஸ்ஸி எடுத்துரைத்தாள்.
"அவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேலையில ரொம்ப பொறுப்பு. என்ன எங்க டீம்ல இருக்க லோகேஷுக்கு அவரைக் கண்டா ஆகாது"
"ஏன் ஆகாது?"

"ஈகோ தான். எங்க கம்பெனில அவன் கொஞ்சம் சீனியர். ப்ராஜெக்ட் ஹெட்டா அடுத்து அவன் தான் வருவான்னு நினைக்கும் போது அனி என்ட்ரி தந்தது தான் காரணம். ஒரு சாதாரண பொறாமை, ஈகோ தான்" என்றாள்.

"துவாரா ஏன் இப்படி இருக்கானு நாங்க அடிக்கடி நெனப்போம். காலேஜ் படிக்கும் போதெல்லாம் எல்லோரையும் போல ஜாலியா தான் இருப்பான். என்னமோ நடந்திருக்கு அதுக்கப்புறோம். சரி நமக்கெதுக்கு அது? அவன் பழைய படி நார்மல் ஆனாலே போதும்"

"ஆனா நீங்க செம ஃப்ரண்ட்ஸ் தெரியுமா? எல்லோரும் இப்போவும் ஒருத்தரை ஒருத்தர் கலாய்ச்சி, சிரிச்சு, எனக்கு உங்க கேங்கை பார்த்தாலே பொறாமையா இருக்கு. என் பெஸ்ட் ஃப்ரண்ட் இன்னைக்கு போன் பண்ணா கூட எடுக்கறதில்லை. இதுல எங்க அவங்க கூட டூர் எல்லாம்?" என்று உச் கொட்டினாள்.

"நாங்களும் ஒன்னும் டெயிலி வாட்ஸ் அப்ல பேசிக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இல்லை ஆனா எங்களுக்குள்ள அந்த புரிதல் இருக்கு. கண்டிப்பா வாரம் ஒருநாள் யாருக்காவது பர்த் டே பங்க்சன் இப்படி ஏதாவதுனா எல்லோரும் அந்த வாட்ஸ் அப் குரூப்ல ஒன்னாகிடுவோம். அப்படிப் பேச எதுவும் இல்லைனா கூட இந்த இளங்கோ இல்ல ஹேமா எங்க காலேஜ் போட்டோஸ் எதாவது போட்டுடுவான். அதைப் பார்த்து அப்படியே பேச ஆரமிப்போம். அண்ட் நாங்க எல்லோரும் ஒரே கேங்கா இருந்தாலும் எங்களுக்குள்ள நிறைய சின்ன சின்ன கேங் இருக்கு. சண்டை எல்லாம் இல்ல, ஆனா இந்த கேபினெட் (மந்திரிசபை) மாதிரி. எல்லா ஃப்ரெண்ட்ஸும் பேச முடியாடியும் நாங்க அடிக்கடி டச்ல இருப்போம். விவான்-துவாரா, ஹேமா-ஜிட்டு- நான், இளங்கோ- தியா இப்படி பல கேங். அண்ட் எல்லாத்துக்கும் மேல ஒரு புரிதல். ஆளுக்கொரு திசையிலே இருக்கோம். ஏதாவது விஷேசம்னா உடனே ஒன்னு கூடிப்போம். நீ எங்களைப் பார்த்து ஆச்சரியப்படுற நாங்க எல்லோரும் துவாரா துஷி அவங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஷிப்பை நினைத்து ஆச்சரியப்படுறோம். ஒரு ஃப்ரெண்டுக்காக அவன் வாழ்க்கைக்காக இங்க இத்தனை பேரை ஒன்று திரட்டி அவனவன் வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காங்க. விவான் எல்லோரையும் ஏமாற்றிட்டானு நீங்க சொல்லலாம். ஆனா இது அப்படியில்ல. துவாரா ஒருதனுக்காக எங்க எல்லோரையும் திரும்ப இப்படி ஒன்னு சேர்த்திருக்கான். எல்லோருக்கும் அவங்கவங்க கமிட்மெண்ட்ஸ் இருக்கு.அண்ட் எனக்கு இது ரொம்ப ஸ்பெஷல்" என்று அவளைப் பார்த்தான் செபா.

"அதுக்கு நீங்க ஹேமாகும் மௌனிக்கும் தான் தேங்க்ஸ் சொல்லணும்"

**************

ஜிட்டு அங்கே அவன் அறைக்குச் செல்ல எப்போதும் போல் இதி அவனை கீழே படுக்கச் சொன்னாள்."ஏன் இதி நம்ம கல்யாணத்துக்கு அப்புறோமாச்சும் நான் மேல படுக்கலாமா? இல்லை அப்பயும் கீழ தான் படுக்கணுமா?" என்று கேட்டதில் உண்மையில் சிரித்தவள்,"அது என் மூடை பொறுத்து" என்றதும் அவன்,"வாட்?" என்று அதிர,

"ஹே சீ! நீ எப்படி நடந்துக்கற அதனால எனக்கு உன் மேல என்ன அபிப்ராயம் வருதுன்னு பொறுத்து. ஏதாவது குரங்கு சேஷ்டை செஞ்சி என்னை வெறுப்பேத்துனா உனக்கு தரை தான்" என்றாள்.

"சரி எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?" என்றான் ஜிட்டு. 'அடப்பாவி இப்படிப் போட்டு வாங்கிட்டானே?' என்று எண்ணி எம்பேரஸ் ஆனாள் இதி. "அப்போ என்னை சும்மா சும்மா வெறுப்பேத்த தான் என்னை கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்லியிருக்க?" என்று எழுந்து அமர்ந்தான்.

"அது...ஓப்பனா ப்ரீயா பேசுறவங்களைக் கூட நம்பிடலாம். ஆனா உன்னை மாதிரி அம்மாஞ்சியா இருக்கானுக பாரு அவங்களை மட்டும் நம்பவே கூடாதுனு சொல்லியிருக்காங்க" என்றாள்.

"அடிப்பாவி யாருடி சொன்னது?"

"அதும் ஒரே ரூம்ல தங்குனாலும் கொஞ்சம் டிஸ்டேன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுனு பார்வதி தான்..." என்று இழுக்க,

"அடிப்பாவி. அண்ணா அண்ணான்னு சொல்லி நல்லா வெச்சி செஞ்சிடியே" என்று பார்வதியை கருவினான்.

"சரி எப்போ எங்க வீட்டுல வந்து பேசப் போற? நீ சொல்றியா நான் சொல்லட்டா? இனிமேலும் லேட் பண்ண வேண்டாம். என்ன சொல்ற?" என்றாள் இதித்ரி.

"ஏய் என்னை ஒரு நிமிஷம் கிள்ளு"

"ஏன் ஜிட்டு?"

"இல்லை இது கனவு தானே? நீ இப்படி எல்லாம் என்கிட்ட பேசவே மாட்ட?" என்றான்.

"உன்னை?" என்று கடுப்பானவள் அவன் மண்டையில் ரெண்டு கொட்டு வைக்க,"ஏ நிஜமாலுமே நீ தான் பேசுனியா? அப்போ நீ சொன்னதெல்லாம் உண்மையா? ஹே அப்போ எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதா? ஜாலி ஜாலி" என்றான்.

"ஏன்டா இப்படி அலையுற வெட்கமா இல்ல?" என்றாள் இதி.

"என்ன அலையுறேனா? ஒரு நாள் ஒரே ஒரு நாள் நீ 90ஸ் கிட்டா இருந்து பாரு அப்போ தெரியும் என் நிலைமை. என் ஆபிஸ்ல இருக்க அக்கௌன்டன்ட் அண்ணா 80ஸ் கிட். இன்சூரன்ஸ் ஏஜெண்டா புதுசா ரெண்டு பசங்க சேர்ந்திருக்காங்க அவங்க 2k கிட்ஸ். இதுங்க ரெண்டும் பண்ற அழிச்சாட்டியதுக்கு மத்தியில ஒரு 90ஸ் கிட்டா இருந்திருந்தா அப்போ தெரியும் என்னோட கஷ்டம். கல்யாணம் பண்ணி முத்தம் கொடுத்தாலே குழந்தை பொறக்கும்னு நெனச்சவங்க நாங்க, ஏதாவது ஒரு பிரச்சனைனா சக்திமான் வந்து காப்பாத்துவாருனு நெனப்போம். ஜீ பூம் பா பென்சில்லு உண்மையிலே ஒன்னு இருக்கானு கடையில போய் எல்லா பென்சிலையும் வாங்கி சீவி செக் பண்ணவங்க நாங்க. அண்டர் டேக்கருக்கு உண்மையிலே ஏழு லைப்புனு நெனச்சி மிரண்டவங்க நாங்க. நைட் ஆனா மர்ம தேசம் சீரியல் பார்த்து உண்மையிலே கருப்பு வருமோனு பயந்தவங்க நாங்க, எதாவது குறும்பு பண்ணா அப்புறோம் வீரப்பன் உன்னைப் பிடிச்சிட்டு போயிடுவானுங்கற மிரட்டலுக்கும் பயந்தவங்க நாங்க, இப்படி இன்னமும் வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்புற எங்களைப் பார்த்தா அலையிறோம்னு சொல்ற? எங்களை விட பெட்டரா , இன்னொசெண்டா, நேர்மையான இன்னொரு ஜெனெரேசன் பசங்களை கண்டிப்பா நீங்க யாரும் பார்க்கவே முடியாதுனு" மூச்சிரைக்கப் பேசினான் ஜிட்டன்.

அதில் உண்மையில் சற்று மிரண்டவள் முழிக்க,

"பயணம் படத்துல ஒரு டைலாக் வரும்,'வயசு பெண்ணையும் வாழைத்தாரையும் ரொம்ப நாள் வீட்டுல வெக்கkக் கூடாதுனு சொல்லிட்டு எவ்வளவு நாள் வெக்கலாம்னு கூட எனக்குத் தெரியாதுன்னு' அந்த ஆள் டைலாக் பேசுவான் பாரு உண்மையில அப்படிப்பட்ட ஆளுங்க தான் நாங்க. சின்னத்தம்பி படத்துல தாலினா என்னனே தெரியாத பிரபு மாதிரி அக்மார்க் கோல்ட் நாங்க" என்றான் ஜிட்டு.

"எப்பா சாமி! தெரியாம பேசிட்டேன். மன்னிச்சு" என்றாள் இதி."குட் நைட்"

"ஏ இதி நிஜமாலும் தானே சொன்ன? நாம கல்யாணம் பண்ணிப்போம் தானே?" என்றான் ஜிட்டு. அவனின் இந்த இன்னொசென்ஸ் தான் இதிக்கு ரொம்ப பிடிக்கும். "பிராமிசா ஊருக்குப் போறோம் என் அப்பா கிட்டப் பேசுறோம் சீக்கிரம் மேரேஜ் பண்றோம். ஓகே?"

"ஓகே குட் நைட்" என்றான். ஏதோ யோசித்தவள்,"ஜிட்டு இப்பவும் நீ அதெல்லாம் நம்புறியா?"

"எதெல்லாம்?"

"சக்திமான், அண்டர்டேகேர் இதெல்லாம்?"

"ச்சே ச்சே இப்போ இல்ல"

"அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டாள்.

"ஏன் கேட்ட?"

"நீ முதல ஒன்னு சொன்னப் பார்த்தியா? அதை நெனச்சு பயந்துட்டேன்"

"எது?"

"நல்லா யோசி"

"முதல என்னத்தை சொல்லியிருப்போம்? மர்மதேசமா தான் இருக்கும் அதான் பயந்துட்டா!" என்னும் போது வெளியே நாய் குறைக்க,"ஐயோ பைரவன்!" என்று போர்வை இழுத்துப் போர்த்தினான் ஜிட்டன்.

ஜிட்டு சொன்னதை நினைத்து சிரித்துக்கொண்டாள் இதித்ரி.

......................................................................

மறுநாள் காலை அழகாய்ப் புலர்ந்தது.தூக்கத்திலிருந்து விழித்த இளவேனில் 'எங்கிருக்கிறோம்?' என்று தேட அருகே மிருவைக் கண்டதும் அவளை எழுப்பினாள். மணி ஒன்பதை நெருங்கியது. இரவு எல்லோரும் படுக்க வரும் போதே மூன்றை கடந்திருந்தது.

"என்னடா குட்டிமா? குட் மார்னிங்" என்றாள் மிரு.

"அம்மா எங்க? நாம் எப்போ இங்க வந்தோம்?" என்று கேட்டாள் இளவேனில்.

"நைட் அங்க பயங்கரமா குளுருச்சா அதான் இங்க வந்துட்டோம் . வாங்க ப்ரெஷ் ஆகலாமா?" என்று அவளை ப்ரெஷ் செய்தாள் மிரு. இளாவை ரெடி செய்துவிட்டு வெளியே வர அப்போது தான் தூரத்தில் சரித்திரா அவளுடைய தாத்தாவுடன் வந்தாள். "ஐ அத்தை" என்ற இளாவைத் தூக்கியவள் சரித்திராவிடம் பேச்சுக் கொடுத்தாள். "துவாராவுக்கு போன் பண்ணேன் எடுக்கவேயில்லை" என்றதும் தயங்கியவள் அது என்று இழுக்க சரித்திரா சரியாக யூகித்திருந்தாள். "அனேஷியாவை மீட் பண்ணிட்டாரா?"என்றதும் மிரு அதிர,"ஓகே ஒன்னும் பிரச்சனை இல்லையே?" என்று கூலாக கேட்டவள் மிருவின் அதிர்ச்சியைக் கண்டு,"நான் உங்களுடன் கொஞ்சம் பேசணும். அதுக்கு முன்னாடி எனக்கொரு ரூம் வேண்டும்" என்றாள். ரிசெப்ஷனில் ரூம் வாங்கிக்கொண்டு அவள் தாத்தாவை ரெஸ்ட் எடுக்கச் சொன்னவள் சுருக்கமாக எல்லாத்தையும் மிருவுக்கு தெரியப் படுத்தினாள்.

பிறகு அவர்கள் இருவரும் ரெடி ஆகிவர இளாவைத் தூக்கிக்கொண்டு அவளை சாப்பிடவைத்து சருவின் தாத்தாவுக்கும் உணவைக் கொடுத்துப் பேச அமர்ந்தனர்.

தானும் கீர்த்தியும் தோழியென்றும் துவாராவை தான் விரும்பியது முதல் இந்தப் பயணம் வரை அனைத்தும் தெரியப்படுத்தினாள். மிருவிற்கு ஓரளவுக்குப் புரிந்தது. அப்போது தான் துஷி, திவேஷ், ஹேமா -மௌனி, இளங்கோ- பார்வதி, நித்யா -விவான், ஜிட்டு- இதி என்று அனைவரும் ஆஜரானார்கள். துவாராவை இன்னும் காணாததால் விவான் அங்கே செல்ல நித்யாவை கேள்வியாகப் பார்த்த மிருவிற்கு தலையாட்டி சிரித்து அவள் பதிலைச் சொன்னாள்.

"தேங்க்ஸ் மிரு. நேத்தும் நீ தானே பாப்பாவை ரெடி பண்ண?" என்றதும்,"நோ ப்ரோப்லேம். ஆக்சுவல்லி நான் தான் தேங்க்ஸ் சொல்லணும். இளா செம சமத்து" என்று செல்லம் கொஞ்சினாள். "எனக்கு நேத்து நைட் எல்லாம் பயமே, எங்க நாங்க எல்லோரும் உங்க ஜோடியை கண்ணு வெச்சதால் தான் உங்களுக்குள்ள சண்டையோனு. இப்போ தான் நிம்மதியா இருக்கு"

"சரி எங்க பிரச்சனை எல்லாம் இருக்கட்டும். நீ என்ன தான் முடிவெடுத்திருக்க? தியாவும் ரெண்டு நாளா உன்னையே பாவமாய்ப் பார்க்கிறான். நீயும் செட்டில் ஆகணும் தானே? என்ன முடிவு?"

"எனக்கு தியாவைப் பிடிக்கும். ஆனா அவனோட கான்பிடென்ஸ் இல்லாத குணம் தான் எனக்கு பயமா இருக்கு நித்யா. நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறோம் திரும்ப இந்த மாதிரி ஏதாவது ஆச்சுன்னா அந்த லைஃப் நகரமாகிடும் நித்யா. அண்ட் எதுனாலும் அவன் குடும்பத்தோட வந்து எங்க வீட்டுல பேசணும். எனக்குத் தெரிந்து இதெதுக்கும் அவன் அம்மா ஒத்துக்க மாட்டாங்க" பெரு மூச்சை இழுத்து விட்டாள். மிருவிற்கு பின்னால் தான் தியா இருந்தான். அவள் சொன்ன அனைத்தையும் கேட்டவன் யோசனையில் இருந்தான்.

"சரி மிரு ஒருவேளை தியா உங்க வீட்டுல பேசினா உனக்கு ஓகே தானே?"

"அவன் இன்னும் என்கிட்டயே பேசல நித்யா" என்றதும் இன்று எப்படியாவது மிருவுடன் பேசிவிட வேண்டும் என்று சென்றான் தியா.

ஜிட்டு நேத்து இதி சொன்னதை எல்லாம் மைண்டில் வைத்துக்கொண்டு, இளங்கோ ஹேமா இருவரிடமும் கெத்தாகப் பேசிக்கொண்டிருந்தான்.

"டேய் ஹேமா? இன்னைக்கு இவன் பேச்சுலையே ஒரு திமிர் தெரியுதே. என்னவா இருக்கும்டா?"

"எனக்கும் அது தான் ஆச்சரியமா இருக்கு. ஒரு வேளை...?" என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,"ச்சே ச்சே ஜிட்டு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான்."

"என்ன ஜிட்டா ஒரே ஜாலியா இருக்கப் போல? என்ன இதி சம்மதம் சொல்லிட்டாளா?" என்று போட்டு வாங்க முயற்சித்தான் ஹேமா.

"உங்களுக்கு எப்படித் தெரியும்? நாங்க ரெண்டு பேரும் இப்போ அன்றில் பறவை போல. அன்று + இல் தான் அன்றில் பறவை. தன்னோட துணை இல்லைனா இன்னொன்னும் வாழாதாம். நாங்களும் இப்போ அன்றில் பறவை மாதிரி தெரியுமா?" என்று சொன்னவனை இருவரும் மாறிமாறிப் பார்த்தனர்.

"என்னடா இப்படி ஆடு திருடனவங்க மாதிரி முழிக்கறீங்க? இனிமேல் உங்க பருப்பு எல்லாம் வேகாது. வசி மெஹ்ஹ... இனிமேலாச்சும் என்னை சீண்டுறதை விட்டுட்டு போய் உங்க புள்ளைகுட்டிய படிக்க வைங்கடா ஸ்டுபிட்ஸ்"

"காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை?

நியூட்ரான் எலெக்ட்ரான் உன் நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை?

இதி இதி இவனுங்க இனிமேல் பண்ணமாட்டாங்க சதி சதி

அழகின் மொத்தம் நீயா?"


என்று அவன் போக்கில் பாடிக்கொண்டே சென்றான்.

அங்கே அனேஷியாவுடன் விழித்த யாழ் அவளை ரெடி ஆகச் சொல்லிவிட்டு தன்னுடைய உடைகளை எல்லாம் துஷியை எடுத்துவரச் சொல்லி அவளும் தயார் ஆனாள். இன்றைக்கு தங்களின் வேலை நிமித்தமாக வெளியே செல்ல வேண்டும் என்றாலும் தற்போதைய மனநிலையில் கண்டிப்பாக அவளால் வெளியே செல்ல முடியாது என்று உணர்ந்து பெனாசிரை அழைத்து இன்று விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் நாளை முதல் மீண்டும் பணி செய்யலாம் என்று தெரிவிக்க யோசித்தவள், பிறகு வேறொரு முடிவெடுத்தவளாக அவளுடைய ப்ராஜெக்ட் ஹெட்டுக்கு அழைத்து தான் இனிமேல் இங்கு இருக்க முடியாதென்றும் இனி லோகேஷின் தலைமையில் தன் குழுவே இங்கிருந்து மீதி வேலையை முடித்து வருவார்கள் என்று சொல்ல நினைத்து அழைக்க அதற்குள் வெளியே வந்த யாழ் அவள் அலைபேசியைப் பிடுங்கி கட் செய்து அனேஷியாவின் எண்ணத்தை அறிந்துகொண்டாள்.

"இப்போ ஊருக்கு போய் என்ன பண்ணப் போற? அப்போ எதுக்காக நீ இங்க வந்த?" என்று அனிக்கு சரமாரி கேள்விகளைத் தொடுக்க,

"வேண்டாம் யாழ். இனியும் நான் இங்க இருக்கறது சரியில்லை. என்னால துவாரா கஷ்டப்படுவான். அவனால் விவானும் மொத்த கூட்டமும் கஷ்ட படும். நான் கிளம்பறேன்" என்று சொல்ல,

"அனேஷியா நில்லு. நான் நேத்து என்ன சொன்னேன்? துவாராவை உன்னோடப் பேச வெக்கறேன்னு சொன்னேனா இல்லையா? கண்டிப்பா அவன் பேசுவான். எங்களுக்கு அவன் பேசணும். அப்போ தான் அவன் இதுல இருந்து முழுசா வெளிவர முடியும். சரி லீவ் போட்டதும் போட்டாச்சு எங்களோட நீங்களும் வெளிய வாங்க" என்றாள் யாழ்.

"இல்ல நான் வந்தா..." என்று இழுத்த அனேஷியாவைத் தடுத்தவள்,"இன்னைக்கு நாம எல்லோரும் ஒன்னாப் போறோம். ஓகே? ரெடி ஆகு" என்று சொல்லிவிட்டு விவானை அழைத்தாள் யாழ்.

.........................................

காலையில் விழித்த துவாராக்கு நேற்று நடந்ததெல்லாம் மீண்டும் கண்முன் வந்து சென்றது. அவன் யோசனையாக இருக்க, அப்போது தான் விவி குளித்து முடித்து வெளியே வந்து அவனை ரெடி ஆகச் சொன்னான். துவாரா குளிக்கசசென்றதும் தான் விவான் அவர்கள் அறைக்குள் பிரவேசித்தான்.

சமிக்ஞையாலே துவாராவைப் பற்றி வினவிய விவான் எல்லாம் கேட்டுக்கொண்டதும் விவியை சாப்பிட அனுப்பி தான் துவாராவோடு வருவதாகச் சொல்லிவிட்டு கதவைப் பூட்டினான் விவான்.

குளித்து வெளியேறிய துவாரா விவானைப் பார்த்து பெரியதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் ரெடி ஆக,"டேய் டைம் ஆச்சு கிளம்பு" என்றான்.

"இல்ல விவான், நான் ஊருக்குப் போலாம்னு இருக்கேன். நீங்க இருந்து எல்லாம் பார்த்துட்டு வாங்க" என்றதும் வந்த கோவத்தையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஆமாம் அன்னைக்கு இளாக்கு ஏதோ கதை சொன்னியாமே? ஆஹ் பிஷெர்மேன் பூதம் கதை. அதுல பூதத்திற்கு பயந்து அந்த பிஷெர்மேன் ஒன்னும் கடல்ல குதிக்கவில்லையே? பதிலுக்கு பூதத்தை தானே ஜாடியில் அடைச்சான் அந்த பிஷெர்மேன். அதாவது தப்பு பண்ணவங்க தானே ஓடி ஒளியனும். தப்பை அனுபவிச்சவங்க இல்லையே?" என்று சொல்லி கண்ணாடியில் தலை சீவிய துவாராவின் பிம்பத்தைப் பார்த்தபடி நின்றான்.

"இல்ல நான்..." என்று துவாரா ஆரமிக்க,

"சரித்திராவும் அவ தாத்தாவும் வந்திருக்காங்க. ஏதோ உன் புண்ணியத்துல அவளாச்சும் கொஞ்சம் ஊர் சுத்தலாம்னு நெனச்சிட்டு இருக்கா" என்றதும் துவாரா யோசித்தான்.

"டேய் துவாரா இங்க எல்லோரும் தான் கீழ விழறாங்க. ஆனா யார் திரும்ப மேல எழறாங்களோ அவங்களைத் தான் இந்த உலகம் கொண்டாடும். நீ விழுந்தவனாவே இருக்கப் போறியா இல்ல எழ முயற்சி செய்வியா? முடிவு உன் கையில தான். யாருடா அவ? யாரோ ஒருத்தி என்னைக்கோ ஒருநாள் உனக்குச் செஞ்சதுக்கு நீ இத்தனை வருஷம் கஷ்டம் அனுபவிச்சதெல்லாம் போதும். நான் ஒன்னும் நீ பதிலுக்கு அவளையும் பழிவாங்குனு சொல்லல. நீ திரும்ப உன் வேலையைப் பார்க்கத் தொடங்கு. நீ எந்த தப்பும் பண்ணலடா. நீயேன் தண்டனையை அனுபவிக்கனும்?உனக்காக பல வருஷமா காத்திருக்கா ஒருத்தி. நீயே உலகம்னு நம்பியிருக்கா இன்னொருத்தி. நம்ப பையன் நம்ம கிட்டப் பேசமாட்டான்னு தவிக்கிறார் ஒருத்தர். என் துவாரா பழையபடி மாறமாட்டானான்னு நாங்க எல்லாம் காத்திருக்கோம். இப்போ நீ தான் முடிவெடுக்கணும். எங்களுக்காகவாது திரும்ப பழைய துவாராவா வெளிய வருவியா இல்லை அவ உன்னை அவமானப்படுத்திட்டான்னு இன்னும் முடங்கிப் போகப்போறியா? எவ்வளவு பெரிய இரவா இருந்தாலும் அதும் ஒரு நேரத்துல விடிஞ்சி தான் தீரணும். நீ கிளப்புனா நாங்க எல்லோரும் எப்படி நிம்மதியா இந்த டூரை கண்டினு பண்ண முடியும் சொல்லு?" மணி பார்த்தவன்,"எதுனாலும் உன் முடிவு. ஊருக்குப் போறதுனாலும் ஓகே இல்ல எங்க கூட ஊர் சுத்த வரதுனாலும் ஓகே. யோசி" என்றவன் வெளியே சென்றுவிட்டான்.

விவான் மட்டும் தனியாக வருவதைக் கண்டு எல்லோரும் குழம்பினார்கள். சற்று நேரத்தில் துவாராவும் வெளியே வந்தான். வந்தவன் விவானுடன் சென்று சாப்பிட யாழும் அங்கே வந்தாள். யாழ் அனேஷியாவும் தங்களோடு வருவதை திவேஷிடம் சொல்ல அதை ஒட்டுக்கேட்ட துஷி தாம்தூம் என்று குதித்தான்."ஏன்டி இப்படிப் பண்ண? என்னைத் தான் எப்போப்பாரு சிக்கல்ல மாட்டி விடுவனா இன்னைக்கு ஏன் எல்லோரையும் சேர்த்து மாட்டி விடப் போற?" என்று கத்த, துவாராவும் விவானும் சாப்பிட்டு முடிக்க இளா சரியாக அப்போது துவாராவிடம் வந்து,"மாமா அம்மா உன்கிட்டப் பேசணுமாம்" என்றாள். அவர்கள் இருவரையும் பார்த்த விவான் எதையும் பேசாமல் எழ துவாரா வாஞ்சையாக அவளைத் தூக்கி முத்தம் வைத்தவன் கைக்கழுவிவிட்டு நித்யாவை நோக்கிச் சென்றான்.

"என்ன நித்யா என்ன விஷயம்?" என்று சாதரணமாக துவாரா ஆரமிக்க, நித்யாவும் லைட்டாக உணர்ந்து,"இல்ல துவாரா அது... சாரி. நான் நேத்து அப்படி நடந்திருக்கக் கூடாது" என்றாள்.

"உன் மேல எந்த தப்பும் இல்ல நித்யா. யூ ஆர் ரைட் . எந்த வைஃப்க்கும் அவங்க ஹஸ்பண்டை யாராச்சும் அடிச்சா கோவம் வரத் தான் செய்யும். இட்ஸ் குய்ட் நார்மல். ஐ டோன்ட் மைண்ட். அண்ட் சாரி என்னால உனக்கும் அவனுக்கு இடையில சண்டை வந்திடுச்சு. நான் அவனை அடிச்சிருக்கக் கூடாது" என்றான்.

"எனக்குத் தெரிஞ்சு நீ கோவமே பட்டதில்லையே துவாரா. அப்புறோம் ஏன்?" என்று இழுத்தாள்,

அவள் கேட்டதும் அவனுக்கு ஒரு விஷயம் நன்கு விளங்கியது. சொல்லப்போனால் இந்தக் கேள்வி அவனுக்குள் மாற்றம் தந்தது."கரெக்ட் நித்யா, அப்போ நான் நேற்று அப்னார்மலா நடந்திருக்கேன். ஆள் மேல இருக்கும் கோவத்தை அம்பு மேல காட்டிட்டேன். இருந்தாலும் சாரி" என்றான்.

"என்கிட்ட சாரி எல்லாம் சொல்ல வேண்டாம் துவாரா. நீயாச்சு அவனாச்சு. சரி" என்றவள் அவனை நெருங்கி ஒரு ஹக் தர, அவனும் புன்னகைத்து விலகினான். பின்பு அங்கிருந்த சரித்திராவின் தாத்தாவிடம் சென்றவன் சிறிது உரையாட அந்த நேரத்தில் அனேஷியாவும் அங்கே வந்தாள். அவளும் தங்களோடு வரவிருப்பது விவானுக்குத் தெரியவர,"இது ஒர்க் அவுட் ஆகுமா யாழ்?" என்றான்.

"பார்ப்போம்" என்ற யாழை முறைத்த துஷி,"எதை நான் அடிவாங்குறதையா? ஏன் நேத்து பார்த்ததெல்லாம் போதாதா? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு?" என்றான் துஷி.

"என்னடா நட்புக்காக இது கூடச் செய்ய மாட்டியா?" என்ற திவேஷை முறைத்தவன், "அப்படியா? துரை நட்புக்காக இதுவரை எத்தனை அடி வாங்கியிருக்கீங்க? சொல்லு" என்றான் நக்கலாக.

"இங்கே பாருடா, கன்னமெல்லாம் எப்படி செவந்திருக்குனு? நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில் கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்னு பாட்டு கேட்டிருப்பீங்க ஆனா நெஞ்சில் திக் திக் திக் திக் காதில் கொய்ங் கொய்ங் கொய்ங் கொய்ங் கன்னத்தில் அறை வாங்கினால் நீ கன்னத்தில் அறை வாங்கினால்னு பாட்டு கேட்டிருக்கீங்கா? நானே எழுதுன பாட்டுடா. போதும் என்னால முடியல. ஊராமூட்டு லவ்வை ஊட்டி வளர்த்தா நம்ம லவ் தானா வளரும்னு இவ சொன்னப் பேச்சைக் கேட்டு நான் இங்க வந்தேன் பாரு என்னை..." என்று புலம்பினான் துஷி.

"இப்போ என்ன அந்த குட்டச்சி (ரேஷா) உன்னிடம் பேசணும்? அவ்வளவு தானே? டன். இன்னைக்கே அவளைப் பார்த்துப் பேசறேன் போதுமா?" என்றாள் யாழ்.

"உன்னை நம்பலாமா?" என்றான் துஷி,

"டேய் எதை பேச வேண்டிய நேரத்துல எதைப் பேசுறீங்க? அனேஷியா வரதுனால் துவாராக்கு..." என்ற திவேஷை கையமர்த்தி தடுத்த யாழ்,"அந்த வெங்காயத்தையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க கொஞ்சம்" என்று அவள் கையைக் கொண்டு வாயைப் பொத்தி சைகை செய்தவள் எழுந்து துவாராவை நோக்கிச் சென்றாள்.

அங்கே துவாரா சரித்திராவின் தாத்தாவிடம் சற்று உரையாடிவிட்டு சரித்திராவை நோக்கி விரைந்தான். அவன் முகத்தை வைத்தே ஏதோ யூகித்தவள்,"என்ன சாருக்கு என்னை மறந்தே போயிடுச்சா?" என்றாள் நக்கலாக,

அவளை முறைத்தவன்,"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை" என்று சொல்லி நீண்ட அமைதி காத்தான்.

"நான் சொன்னது சரி தானே?" என்று கேட்டாள் சரு.

"அவ விவான் கிட்ட எதையுமே சொல்லாம கூட்டிவந்திருக்கா" என்றான் துவாரா.

"அப்பயும் ஃப்ரண்டை விட்டுக் கொடுக்க மாட்டிங்க?"

"அவன் எதுவும் என் நல்லதுக்குத் தான் செய்வான். ஏன் அவன் உனக்கும் தானே ஹெல்ப் பண்ணியிருக்கான்? அவனால தானே என் கம்பார்ட்மென்டுக்கு நீ வந்த" என்று அவளை மடக்கினான்."என்னால எதையும் மறக்க முடியல சரு" என்று வேதனை நிரம்பிய குரலில் அவன் சொல்ல அவனை அணைத்தாள் சரித்திரா. "உங்க லைஃப்ல இனி அனேஷியா இல்லைனு எனக்கு எப்போவோ தெரியும். ஆனா அனேஷியாவை மன்னிக்கிறதும் தண்டிக்கிறதும் உங்க கையில தான் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு ஒரு முடிவு தெரியாம அனேஷியாவும் இங்கிருந்துப் போகப்போறதில்லை" என்றாள் சரித்திரா.

"ஆமா உனக்கு யாரிந்த பேர் வெச்சா? சரித்திரானு... என்ன சரித்திரம் எழுதியிருக்க நீ?" என்றான் அவன்.

"என் அம்மா, நான் ஏதாவது சரித்திரம் படைக்கணும்னு நெனச்சு எனக்கிந்தப் பேரை வெச்சாங்களாம்"

அப்போது அவர்களை நோக்கி யாழ் வர சரித்திரா அவனை விட்டு விலகினாள்."சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ், துவா உன்கிட்ட நான் பேசணும்" என்றதும் சரித்திரா அந்த இடத்திலிருந்து நகர்ந்தாள்.

"சொல்லு யாழ்"

"நான் சுத்தி வளைத்துப் பேச விரும்பல, நேராவே கேட்கறேன், அனேஷியா உன்னைப் பார்த்து ஒரே ஒருமுறை பேசணும்னு நினைக்கிறா. அதுக்காக தான் அவ இங்க வந்ததேவாம் . இப்போ அவ இங்க இருக்கிறதுனால் அது நடக்குமா இல்லை அவ இங்கேயிருந்து கிளம்பறது தான் சரியான்னு நான் உன்கிட்டக் கேட்கறேன். சொல்லு துவாரா"

அவன் யோசிக்க,

"பட் கொலை செஞ்சவன் கூட ஏன் நம்ம நாட்டுல திட்டமிட்டு கற்பழிச்சு கொன்னவனுக்கும் கூட அவன் தரப்பு நியாயத்தைச் சொல்லவும் மேல்முறையீடு செய்யவும் கருணை மனு அனுப்பவும் உரிமை இருக்கு. இருந்தது. அப்போ அவளுக்கும் அவ தரப்பு நியாயத்தைச் சொல்ல ஒரு சான்ஸ் இருக்கு தானே? நான் இதை அவளுக்காகப் பேசறேன்னு நினைக்காத துவாரா. இதனால் அவளுக்கு மட்டும் லாபமில்லை. உனக்கும் தான். நீயும் உனக்குள்ள இருக்கும் அந்த வலி, வேதனை எல்லாம் வெளிய தள்ளிடலாம். நீயும் இனிமேல் சகஜமா இருக்கலாம். உன் வாழ்க்கை இந்த சரித்திராவோடனு எங்க எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி. சோ ஒன் லாஸ்ட் மீட்?(ஒரு கடைசி சந்திப்பு)" என்று நிறுத்த,

யோசித்தவன்,"ஓகே இன்னைக்கு ஈவினிங் மீட் பன்றேன்னு சொல்லு. பட் ஒன் திங். இது தான் எனக்கும் அவளுக்குமான கடைசி சந்திப்பா இருக்கனும். ஓகே?"

"ஓகே. அண்ட் அவளும் நம்மளோட இப்போ வெளிய வருகிறாள்..." என்று யாழ் இழுக்க,

"இங்க யாரையும் வரக் கூடாதுனு சொல்ற உரிமை என்கிட்ட இல்ல. நானும் உங்க ஃப்ரண்ட் அவளும் உங்க ஃப்ரண்ட். சோ எனக்கெந்த பிரச்சனையும் இல்ல" என்றான்.

அவனை நெருங்கி ஹக் செய்தவள்,"இந்த மெட்சூரிட்டி, பக்குவம் தான்டா இன்னைக்கு நமக்குள்ள இந்த நட்பு உருவாகவே காரணமா இருந்தது. எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏழு வயசுலயே எங்களை மன்னிக்கிற அந்த மனசு உன்கிட்ட இருந்ததுனா இருபத்தி ஏழு வயசுல அதில்லாமல் போயிடுமா என்ன?" என்று சொல்லி அவனை விட்டு விலகினாள். (பயணங்கள் முடிவதில்லை...)
 
யாழ் இந்த எபில ஸ்கோர் பண்ணிட்டா....
எல்லோரையும் சமாளித்து,
டைரக்ட்டா துவாவிடம் பேசி, ஒரு கடைசி சந்திப்புக்கும் அரேஞ்ச் பண்ணிட்டாள்.. ?
 
மறப்போம் மன்னிப்போம்ன்னு இல்லான்னாலும் இந்த சந்திப்பின் மூலம் நிச்சயம் துவா மனபாரம் நீங்கும்ன்னு நினைக்கிறேன் ?
யாழ் சூப்பர் போ ??
மர்ம தேசம் மறக்க முடியாத சீரியல் ?ஜிட்டு ஆனாலும் இன்னும் இவ்ளோ பயமா?? கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்ட, நீ அசத்து ராசா ??
Nice update.
 
யாழ் இந்த எபில ஸ்கோர் பண்ணிட்டா....
எல்லோரையும் சமாளித்து,
டைரக்ட்டா துவாவிடம் பேசி, ஒரு கடைசி சந்திப்புக்கும் அரேஞ்ச் பண்ணிட்டாள்.. ?
யாழுக்கு சுத்தி வளைத்து பேசுறதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. அதான். நன்றி?�
 
யாழ் க்கு நீங்கள் கொடுத்த அறிமுகமும், இப்ப தெளிவாக பேசுறதும் நல்லா இருக்கு......ஜிட்டு :love: :love:
that is yazh! thankyou??
 
மறப்போம் மன்னிப்போம்ன்னு இல்லான்னாலும் இந்த சந்திப்பின் மூலம் நிச்சயம் துவா மனபாரம் நீங்கும்ன்னு நினைக்கிறேன் ?
யாழ் சூப்பர் போ ??
மர்ம தேசம் மறக்க முடியாத சீரியல் ?ஜிட்டு ஆனாலும் இன்னும் இவ்ளோ பயமா?? கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்ட, நீ அசத்து ராசா ??
Nice update.
கண்டிப்பா நீங்கும். ஜிட்டு இன்னொசென்ட் இல்லையா அதான் பயப்படுறான்... எஸ் புது மாப்பிள்ளை ஆகப்போறான் ஜிட்டு??� நன்றி?
 
Top