Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-59(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஆமா மச்சான் ஹரிணிக்கு அலைன்ஸ் செட் ஆகிடுச்சாம். அம்மா வேற நீ வந்தாப் பார்த்துப் பேசணும்னு சொல்லிட்டே இருக்காங்க. எல்லோரையும் இன்வைட் பண்றேன். கண்டிப்பா எல்லோரும் வரணும்" என்றான் ஹேமா.

"பிரியாணி போடுறேனு சொல்லு நான் வரேன்" என்றான் ஜிட்டு.

"இரு இரு உன் வீட்ல போட்டுக் கொடுக்குறேன். மச்சான் தியா அந்த வீடியோவை கொஞ்சம் எடு" என்றான் ஹேமா.

"என்னடா வீடியோ?"

"பாரு" என்று அவனுக்குக் காட்டப்பட அன்று ட்ரெயினில் பார்வதிக்கு சிக்கனை எப்படிக் கடிப்பது என்று டெமோ காட்டினானே அந்த வீடியோ இருந்தது.

"அடப் பாவிங்களா எப்போடா எடுத்தீங்க?"

எல்லோரும் சிரிக்க,"அதுக்குனே மூணு பேர் கொண்ட ஒரு குழு தயாரா இருந்தது. இதுமட்டுமில்லை ட்ரைன்ல இதுவரை நம்ம டூர்ல நடந்த பல ருசிகர சம்பவங்கள் எல்லாம் பக்கவா இருக்கு" என்றான் ஹேமா.

"யாருடா எடுத்தது? எப்போடா பண்ணீங்க இதெல்லாம்? நீங்க இன்னும் மாறவேயில்லை?"என்று ஜிட்டு சொல்ல, பின்னே கல்லூரி முதலே இதுபோல் ஜிட்டுவின் பல ரகசியங்கள் (அந்த ஹாஸ்டெல் அடல்ட் கதை சம்பவம் உட்பட) ஜிட்டு என்று மட்டும் இல்லை கிட்டத்தட்ட எல்லோருடைய லீலைகளை எப்போதும் அவர்களிடம் தயாராக இருக்கும்.

"இதி உனக்கொரு போட்டோ காட்டுவேன், உன் ஆளு கோவா பீச்சல காத்துவாங்க வந்த பாரினர்ஸ் கூட அதும் குறிப்பாப் பெண்கள் கூட நெருக்கமா எடுத்த போட்டோஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு" என்றான் ஹேமா.

"டேய் எதையும் முழுசா சொல்லுடா. இந்தப் பத்திரிகையில் வர கிசுகிசு மாதிரியும் பிளாக்மெயில் பண்ணி பணம் வாங்கும் கூட்டம் மாதிரியும் பத்த வெச்சிடாதீங்கடா" என்றவன் இதியிடம் திரும்பி,"ஜஸ்ட் போட்டோஸ் தான். மத்தபடி ஒன்னுமில்லை" என்றான்.

"கரெக்ட் கரெக்ட் ஆனா என்ன அவங்க எல்லாம் என்ன மாதிரி டிரஸ்..." என்று சொல்ல வந்த ஹேமாவை முறைத்தான்.

இதி முறைக்க,"டேய் ஹேமா நீ கூட பாண்டிசேரி பீச்ல அந்தப் பாறை மேல கையில" என்று சொல்லவர அவன் வாயை மூடினான் ஹேமா.

"காலேஜ் கல்சுரல்ஸ்ல நீங்க எல்லோரும் பண்ண அந்த டேன்ஸ் (?!) கலாட்டா எல்லாம் என்கிட்ட இருக்கு" என்றாள் மிரு.

"டேய் நிறுத்துங்கடா. நமக்கு வெளியில இருந்து யாரும் ஆப்பு வெக்க வேண்டாம். 'நமக்கு நாமே' வெச்சுக்குறோம்" என்று சொன்னான் இளங்கோ. பெண்கள் எல்லோரும் அவர்களை முறைப்பதைக் கண்டு விழித்தனர்.

"அடப்பாவிங்களா நீங்க எல்லோரும் கூட்டுக் களவாணிங்களா?" என்று முறைத்தாள் யாழ்.

"சீ அது ஜஸ்ட் பார் ஜாலிக்கு செஞ்சது. எல்லோரும் அந்த அந்த வயசுல அப்படித்தான் இருந்திருப்போம். ஏன் யாழ் நீ ஒரு முறை ரேஸ் டிரைவிங் பண்ணி போலீஸ் கிட்ட மாட்டலையா? இட்ஸ் காமன்" என்றான் துஷி.

"கரெக்ட் மச்சான் நம்ம ஸ்கூல் வார்டன் ரூமை அவர் பூட்டினத்துக்கு மேல நீயொரு பூட்டு போட்டு பூட்டுவியே அது போல தான்" என்றான் துவாரா.

"ஒருமுறை எக்ஸ்சாம்ல விவானுக்குக் காட்ட நீ பிட் பேப்பர் எழுதி தூக்கிப் போட்டு சஸ்பெண்ட் ஆனாது போல" தான் என்றான் துஷி.

"காலேஜ்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் நம்ம பாலாஜியைக் குழப்ப நீ விவானுக்கு பிராக்சி போட்டு அதைச் சரிபண்ண அவர் மீண்டும் கௌண்ட் பண்ணும் போது கீழ குனிஞ்சு உன்னை அவர் கண்டு பிடிச்சு மாட்டியது போல தான் துவாரா" என்றான் ஹேமா.

"டேய் செபா உன்கூட மஹிமானு ஒரு பொண்ணு காலேஜ் படிக்கும் போது மூணு மாசம் சேட் பண்ணுசே அது வேற யாருமில்லை நம்ம தியாவும் ஹேமாவும் தான்" என்றான் ஜிட்டு.

எல்லோரும் செபாவின் அந்த அஷ்டக்கோணல் முகத்தைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர்.சீ" என்றான் செபா.

"அதே தான் ஒருமுறை ஜிட்டுவை மாட்டி விட லைப்ரரில ஜிட்டு எடுத்த புக்கை நீ எடுத்து ஒளித்துவைத்து அவனை பைன் கட்ட வெச்சியே அதுபோல தான் ஹேமா" என்றான் தியா.

"அட கல்ப்ரிட் நாயே? நீதானா அவன்? உன்னை..." என்று ஹேமாவை வெறிக்கொண்டு துரத்தினான் ஜிட்டு.

"உங்களை இன்னும் அரைமணிநேரம் பேசவிட்டா உங்க மொத்த வண்டவாளமும் வெளிய வந்திடும் போலயே?" என்றாள் நித்யா.

எல்லோரும் ஒன்றுபோல மருதமலையில் வடிவேல் ஹாஸ்பிடலில் திருடிச் சாப்பிட்டுச் சிரிப்பதைப் போல் அசடு வழிந்து தலையைச் சொரிந்தனர்.

அப்போது தான் ஹேமா, ஜிட்டு இருவரும் வந்து அமர்ந்தனர்."நிஜமா சொல்றேன் நீங்க எவனுமே இன்னும் வளரவே இல்லைடா. அதே குறும்பு ஜாலியாவே இன்னும் இருக்கீங்க எப்படி?" என்றாள் நித்யா ஆச்சரியமாக...

"இந்த உலகத்துல எத்தனை ரிலேஷன்ஷிப் இருந்தாலும் ஒன்னாப் படிச்ச இந்தப் பசங்கப் போல யாரும் இருக்கமுடியாது .நாலு வருஷம் இன்ஜினியரிங் எங்களுக்கு எப்படி ஒரு என்ஜினீயர் ஆகணும்னு கத்துக்கொடுத்துச்சோ இல்லையோ இந்த உலகத்துல எந்த மாதிரி மனிதர்கள் இருக்காங்க, எப்படி அவங்களோடு வாழனும்னு நிறைய சொல்லிக்கொடுத்துச்சு. உங்களை மாதிரி எல்லாம் நான் ஹாஸ்ட்டல்ல வளர்த்தவன் கிடையாது" என்றான் ஹேமா."ஆனா ஹாஸ்டெல் வாழ்க்கை நினைத்து அவ்வளவு பயந்தேன். நிச்சயமா நீங்க இல்லைனா நான் பாதியிலே கூட டிஷ்கண்டினு பண்ணியிருப்பேன்" என்றான்.

"நானெல்லாம் சின்ன வயசுல இருந்து ரொம்ப கட்டுக்கோப்பா அதும் எப்பயும் சூதானமா இருக்கணும்னு இல்லைனா இந்த உலகம் உன்னை ஏமாற்றிடும்ன்னு சொல்லிச் சொல்லியே வளர்த்தப்பட்டவன். அதனால தான் ஆரம்பத்துல உங்களோட எல்லாம் ஒழுங்கா ஒட்ட முடியாம போச்சு" என்றான் ஜிட்டு.

"விடு விடு இப்போ உன்னைப் பார்த்துத் தான் எல்லோரும் சூதானமா இருக்கனும்" என்றான் செபா.

"டேய் சேட் பண்றது ஆம்பளையா பொம்பளையானு தெரியாம வழிஞ்சவன் கூடலாம் நான் பேசுறதில்லை" என்றான் ஜிட்டு.

அருகிலிருந்த ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான் செபா.

"ஆனா ஜிட்டு செபா என்னைக்கும்,"நீங்க எப்படி வேணுனாலும் போங்கடா, ஆனா என்னை மட்டும் எஸ்கேப் பண்ணிவிடுங்க டானு" செலஃபீஸா இருந்ததில்லை" என்றான் விவான்.

சிரித்தவர்களைப் பார்த்து,"இன்னும் அதை மறக்கவில்லையா?" என்ற ஜிட்டுவுக்கு

"என்ன மச்சான் அதான் அப்போவே முடிவு பண்ணியாச்சே இனி ஜிட்டனை அதைச் சொல்லி கலாய்க்கறது இல்லனு. பச்சப் பிள்ளைகிட்ட இருந்து சிப்ஸ் திருடித் தின்னவன் தானே நீ?" என்றான் தியா.

"ஏய் புள்ள எல்லாம் உன்னால தான். உன்னை யாருடி அழச் சொன்னா?" என்று இளவேனிலை மிரட்டினான் ஜிட்டு.

அவளோ எல்லோரும் சிரிப்பதால் அவளும் சிரித்தாள்.

"இப்போ மட்டும் சிரி. உன்னை..." என்றான் ஜிட்டு.

"நிறைய பேசிட்டோம்ல கைஸ். ஓகே மறக்காம எல்லோரும் என்னோட மேரேஜ்க்கு வரணும். நான் இன்வைட் செய்யுறேன்" என்றான் துஷி.

"அடப்பாவி?" என்ற யாழுக்கு,"நேத்தே வீட்ல சொல்லிட்டேன். அவளும் சொல்லிட்டாளாம். சீக்கிரம் டும்டும்டும்" என்று கண்ணடித்தான் துஷி.

"ஏன்டா ஆளு வந்ததும் பெஸ்டியை கழட்டிவிட்டுட்டத் தானே?" என்றாள் யாழ் பொய்க்கோபத்தில்.

"சரி அதெல்லாம் இருக்கட்டும். நீ என்ன பிளான்ல இருக்க யாழ்?" என்றான் விவான்.

"ஓகே. இட்ஸ் டைம். நான் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்" என்றாள் யாழ். அதைக் கேட்டு எல்லோரும் அதிர, துஷி அவளை முறைத்தான்.

"ஆக்சுவல்லி துஷி உனக்குத் தெரியும் ஆனா தெரியாது"

"புரியல?"

"இப்போ ஆறு மாசமா... சென்னை பையன். அவன் ஒரு நாவல் எழுத என்னை அப்ரோச் பண்ணான்" என்றாள் யாழ்.

"நீ நாவல் எழுதுகிறாயா?"

"ச்சே ச்சே. அவன் இல்ல அவர்" என்றதும் எல்லோரும் யாழுக்கு ஒரு 'ஓ' போட,"சொல்ல விடுங்கடா. ஒரு நாவல் எழுத ஆசைபட்டாராம். அது ஒரு டேன்சரை மையமா வெச்சக் கதை. சோ கிளாசிக்கல் டேன்ஸ் எல்லாத்தையும் பற்றி எழுத என்னோட மாஸ்டர் மூலமா என்னை அப்ரோச் பண்ணார்"

"நல்லா கேளு விவா 'பண்ணார்'. மரியாதை மரியாதை" என்றான் துவாரா.

"சரி பண்ணான் போதுமா? ஆக்சுவல்லி ஆறு மாசமா நாங்க ஒன்னா ஒர்க் பண்றோம். அவனோட நாவலுக்குத் தேவையான கன்டென்ட் எல்லாம் சேகரிச்சாச்சு. இனி எழுத வேண்டியது தான் பாக்கி. ஏற்கனவே தேட்டர்ஸ் (நாடகம்) பற்றி முதல் நாவல் எழுதியிருக்காங்க. (நாடகம் என்பது தெருக்கூத்து, பொம்முக்கோனிதா முதலியவை) எனக்கு முதல அவன் ரசனை பிடிச்சது. ஆக்சுவல்லி இந்த ட்ராவெளுக்கு முன்னாடி தான் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணான். நான் கொஞ்சம் டைம் கேட்டேன்"

"அப்போ இன்னும்?"

"எஸ் இன்னும் கன்பஸ் பண்ணல. பட் ஐ பீல் லைக் இன் எ ரிலேஷன்ஷிப்" (நான் காதலில் இருப்பதைப் போன்றே உணருகிறேன்)

"போடி என்கிட்ட இருந்து இவ்வளவு மறைச்சிட்ட தானே?" என்றான் துஷி கோவமாய், "நான் நம்ம ரிலேஷன் தொடரணும்னு..." என்று பேச,"நான் ஏற்கனவே உன்னைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன். கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்"

"அப்போ பேர் என்ன?"

"பிரவின்.(பாருங்க அவனுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை! ஜஸ்ட் ஒரு நேம்ஷேக் தான் வெச்சியிருக்கேன் !!! ஏன்னா நான் ஒரு சின்ன நல்ல பையன்னு உங்க எல்லோருக்கும் நல்லாவே தெரியும்!) (பயணங்கள் முடிவதில்லை...)
 
அஸ்ஸாம் சுத்தி பார்த்த feel கொடுத்தது...
பிரண்ட்ஸ் , அவர்களின் ஜாலியான அரட்டை...
ஸ்கூல் நட்பு, காலேஜ் நட்பு..
ரயில் ஸ்நேகம் போல இறங்கும் இடம் வந்ததும்
மறைந்து விடாமல்
ரயில் பயணம் போல முடிவில்லா பயணமாக தொடருகின்றது....
கலவையான உணர்வுகளோடு பயணித்த கதை...
நன்றி ப்ரவீன்...வாழ்த்துக்கள்....
அடுத்த கதைக்காக வெயீட்டீங்...

யாழோட ஜோடி யாரா இருக்கும் னு யோசித்து கொண்டே இருந்தேன்..
ம்கூம்...ஒரு டான்ஸருக்கு, ஒரு ரைட்டர்......நைஸ் ப்ரவீன் ...;)
 
ம்ம்.. இந்த எபி ல பிரவீன் என்கிற எழுத்தாளர் டான்சருக்கு என்ன சொல்ல வரார்ன்னு புரியலையே ??
நிறைய தகவல்களுடன் ஜாலியா போச்சி எபி ??Nice update.
 
Last edited:
ம்ம்.. இந்த எபி ல பிரவீன் என்கிற எழுத்தாளர் டான்சருக்கு என்ன சொல்ல வரார்ன்னு புரியலையே ??
நிறைய தகவல்களுடன் ஜாலியா போச்சி எபி ??Nice update.
அது நீங்க சம்மந்தப்பட்ட அந்த 'பிரவினை' கேட்டால் தான் தெரியும். நன்றி??�
 
Top