Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!-61(2)

Advertisement

praveenraj

Well-known member
Member
செபாவுக்கு இங்கே மனமெல்லாம் அடித்துக்கொண்டது. பின்னே நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்? இந்தப் பயணத்தில் வரும் வரை அவன் வாழ்வில் நடந்த ஒரு மீளாத்துயரம் என்றால் அது அவனது திருமணம் என்று அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தான். ஆனால் அந்த மூன்று நாள் ரயில் பயணத்திலே ஜெஸ்ஸியை தனக்குப் பிடித்திருக்கிறது என்றும் அவளைத்தான் காதலிக்கிறான் என்றும் நம்பியவன் கௌஹாத்தியில் ஜெஸ்ஸியோடு செலவழித்த அந்த மூன்று நாட்களும் அவன் வாழ்வின் பொக்கிஷங்கள். பின்னே ஜெஸ்ஸி எப்படிப்பட்டப் பெண் என்பதைக் கூட அவன் அறியாமல் இருந்துவிட்டானே? அவனைப் பொறுத்தவரையில் அவள் அவன் தந்தையின் பெண்வடிவம் என்று எண்ணியவனுக்கு அவளுடைய மறுபக்கத்தை, சொல்லப்போனால் அவளுடைய இயல்பு குணங்களை நன்கு உணர்த்திவிட்டாள். அது மட்டுமா? செபாவின் தாழ்வு மனப்பான்மை அவன் தந்தை மீதிருக்கும் தவறான எண்ணம் என்று அனைத்தையும் அவனுக்குப் புரியவைத்து விட்டாள். யாரை தன் வாழ்வின் சாபமென எண்ணினானோ அவளே அவன் வாழ்வின் வரமாக மாறியிருந்தாள். உண்மையில் இந்த விஷயத்தில் அவனுக்கு அவன் நண்பர்கள் மீது சொல்ல முடியாத கர்வம் தான் தோன்றியது. தன்னிடம் தான் செய்த தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, சொல்லப்போனால் குற்றம் சுமத்திய அதே நண்பர்கள் தானே ஜெஸ்ஸியிடம் தன்னைப் பற்றி எடுத்துரைத்தனர். எல்லோரும் குறிப்பாக விவான், ஹேமா, ஜிட்டு, மௌனி ஆகியோர் அவனுக்காக இதைச் செய்வார்கள் என்று துளியும் நினைத்ததில்லை. தனித்தனியாக அவர்களிடம் நன்றி சொல்லலாம் என்று கூட நினைத்தான் தான் ஆனால் அப்படிச் செய்திருந்தால்,"சீ போடா நாயே" என்று மூன்றே வார்த்தைகளில் அதை ஒன்றுமில்லாமல் செய்திருப்பார்கள். அதனால் சொல்லாமல் மனதிலே அவர்களுக்கு நன்றியுரைத்தான்.
அன்றே அவன் அத்தையைத் தொடர்புக்கொண்டவன் தனக்கும் ஜெஸ்ஸிக்குமான எல்லா மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கும் களையப்பட்டது என்று உரைத்ததும் அவர் வார்த்தையில் விவரிக்கமுடியாத ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தான். பின்னே திருமணம் ஆகி இத்தனை மாதங்கள் கடந்த போதும் எப்போதாவது அவனை அழைத்து அவர்கள் வாழ்வைப் பற்றி அறிந்துக்கொள்வார். ஆனால் அதையெதையும் உணராதவன் வழக்கம் போல், தனக்கு இந்தத் திருமணம் பிடிக்கவில்லை ஜெஸ்ஸியைப் பிடிக்கவில்லை என்று சொல்பவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவதென்று புரியாமல் தவித்தார். ஒருவேளை இவர்கள் தற்போது ராசியாகமல் இருந்திருந்தாலும் இன்னும் பத்து நாட்களில் இவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துப் பேசலாம் என்றும் எண்ணியிருந்தார். நல்லவேளையாக அவருக்கு அந்தச் சுமையை இவர்கள் வைக்கவில்லை. அன்று கெளஹாத்தியில் ஜெஸ்ஸி-செபா இருவருமாக அவரை வீடியோ காலில் அழைத்து பேசும் போதே அனைத்தையும் விளங்கிக்கொண்டார். கடந்த பத்து பதினோரு மாதங்களாக செபாவின் அத்தையை அரித்துக்கொண்டிருந்த விஷயம் இப்போது சுமுகமான முடிந்திருந்தது.
லீவ் மட்டும் இருந்திருந்தால் செபா இன்று பயணப்பட்டிருக்கவே மாட்டான் தான். என்ன செய்ய அவன் ஆபிசில் அவனுக்கு ஒரு ப்ரோமோஷன் இன்றோ நாளையோ என்று காத்துக்கொண்டிருக்கிறது. அநாவிஷயமாக விடுமுறை எடுத்து அதைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஏதோ கோவத்தில் அவளை விட்டு தனியாகப் புறப்பட்டவன் இன்று அதேபோல் தனியாகப் பயணிக்கிறான்.
விவானோ இதுவரை அவனை வாட்டிக்கொண்டிருந்த கவலைகள் எல்லாம் நீங்கி பழைய விவானாக மாறியிருந்தான். இனி எவ்வளவு பணிகள் இருந்தாலும் வாரத்தில் ஒருநாளேனும் குடும்பத்துடன் முழுவதும் செலவழிக்க வேண்டும் என்று சூளுரைத்துக்கொண்டான். தன் மடியில் உறங்கும் இளாவையும் தன் தோளில் சாய்ந்திருக்கும் நித்யாவையும் பார்த்தவன் இளாவை முத்தமிட்டு நித்யாவுக்கும் அதைக் கடத்தியிருந்தான். இது மட்டுமில்லாமல் துவாராவின் வாழ்விலிருந்தச் சிக்கல்கள் எல்லாம் நீங்கியதிலும் மீண்டும் நண்பர்களோடு இத்தனை நாட்கள் கழித்ததையும் எண்ணி ஆனந்தம் கொண்டான்.
அங்கே யாழ் மற்றும் துஷி இருவரும் விமானம் பிடித்திருந்தனர். வெளியில் ஜாலியாக இருந்தாலும் உள்ளுக்குள் தன் மீது கோவமாக இருக்கும் துஷியை நாளை சமாதானம் செய்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தாள். எப்படியேனும் நாளை பிரவினை துஷிக்கு இன்றோ கொடுத்துவிட வேண்டும். இதில் இன்னொரு சுயநலமும் இருக்கிறது. அது தன்னைக் காட்டிலும் தன் அன்னை அதிகம் நம்புவது என்னவோ துஷியைத் தான். சோ அவனை வைத்துக்கொண்டு தான் வீட்டில் பேச முடியும் என்று யாழ் நன்கு அறிவாள். எல்லோருக்கும் ஒரு செண்டிமெண்ட் இருக்கும் தானே? எவ்வளவு போல்டாகவும் இண்டிபென்டெண்டாகவும் இருந்தாலும் அவளின் பலவீனம் அவள் அன்னை தான். முன்பு சொன்னது போல் பெரியவர்களிடம் எப்படி எல்லாம் பேச வேண்டும் (அதாவது அந்த நெளிவு சுழிவுகள் எல்லாம் துஷிக்கு அத்துப்படி. பின்னே யாழ் எப்போதும் ஸ்ட்ரெய்ட்பார்வேர்ட் தான். வளைந்து குழைந்து எல்லாம் பேச அவளுக்குத் தெரியாது) என்று துஷி நன்கு அறிவான். சோ அவனை வைத்து தான் தன்னுடைய அன்னையை சமாளிக்கவே முடியும் என்பதால் துஷியை சமாதானம் செய்ய யோசித்தாள்.
ஒன்பது மணிக்குள்ளே ஒடிஷா சென்று இறங்கியவர்கள் திவேஷுக்கும் அனேஷியாவுக்கும் சொல்லிவிட்டு விவானுக்கும் துவாராவுக்கும் மெசேஜ் தட்டிவிட்டனர். அங்கிருந்து அவர்கள் வீடு சென்றனர்.
.............................................
இத்தனை நாட்கள் அவளோடு இருந்த பாரம் அனைத்தும் இறங்கி தன்னுடைய டீமுக்கு இந்த நான்கைந்து நாட்களாய் புது அனேஷியாவாகவே காட்சியளித்தாள். அன்று இரவு யாருக்கும் பசியெடுக்காததால் பால் மட்டும் பருகிவிட்டு உறங்கச் சென்றனர்.பின்னே இரண்டு நாட்கள் முன்ன பின்ன ஆகும் என்று அவர்கள் ஏற்கனவே கணித்திருந்தாலும் இதை எதிர்பார்க்காத அவர்களின் ப்ராஜெக்ட் ஹெட் சற்று சிடுசிடுவென எரிந்துவிழுந்தது தான் காரணம். மேலும் ஜெஸ்ஸி இல்லாமல் இரண்டு நாட்கள் வேலைசெய்ததும் அவர்கள் வேலையைக் கூட்டியிருந்தது. நாளை வழக்கத்தை விட முன்னமே செல்ல முடிவெடுத்திருந்தனர்.
ரேஷா ஜெஸ்ஸி இருவரும் அவரவர் ஜோடிகளை எண்ணி வருந்த அனேஷியாவோ மாலை விவான் மற்றும் யாழ் பேசியதில் தீவிரமாக இருந்தாள். என்ன இதுவரை திவேஷை அப்படியொரு இடத்தில் வைத்துப்பார்த்ததே இல்லை. சொல்லப்போனால் ஸ்கூல் முடிந்ததிலிருந்து இன்றுவரை மற்றவர்களைக் காட்டிலும் திவேவுடன் தான் அதிக பழக்கத்தில் இருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை திவேஷ் ஒரு நல்ல நண்பன். ஏன் துவாராவைப் பற்றியும் 'அந்த' சம்பவம் பற்றியும் அவளின் இந்தப் பயணத்தின் நோக்கம் வரை எல்லாவற்றையும் திவேஷுடன் தெரியப்படுத்தியும் இருக்கிறாள். இப்போது நினைக்கையில் அதெல்லாம் அவனுக்கு எவ்வளவு எம்பேரேசிங்காக இருந்திருக்கும் என்று எண்ணி வருந்துகிறாள். துவாரா மீது அவளுக்கு காதலெல்லாம் இல்லை. சொல்லப்போனால் அவளுக்கு யார்மீதும் காதல் என்று ஓர் உணர்வு தோன்றியதே இல்லை. அதற்கு அவளின் வாழ்க்கை சூழலும் ஒரு காரணம். கல்லூரி படிக்கும் போதும் சரி வேலையில் இருக்கும் போதும் ஏன் தற்போது வரை அவளது கவலைகள் எண்ணங்கள் அனைத்தும் இரண்டு நபர்களையே சுற்றியிருந்தது. ஒன்று துவாரா. மற்றொன்று அவள் அன்னை. அவர்கள் இருவரும் அவளுக்குக் கொடுத்த வலிகளுக்கு மருந்தில்லாமல் தவித்துக்கொண்டே இருந்தாள். இந்த நான்கைந்து நாட்களாய் ரொம்பவும் ரிலேக்ஸ்டாக உணருகிறாள். ஆனாலும் இப்போது புதியதாக திவேவின் காதல் அவளை வாட்டுகிறது.
தந்தையிடம் எதையுமே மறைக்காதவள் இதையும் மறைக்காமல் சொல்லிவிட்டாள். அவருக்கும் திவேஷை நன்கு தெரியும். உண்மையில் திவேஷ் மீது அவருக்கொரு நல்ல மரியாதையே இருக்கிறது. இந்த இளம் வயதில் படித்து நல்ல வேலையில் இருக்கும் அவனை யாருக்குத் தான் பிடிக்காது? கூடவே சின்ன வயதிலிருந்து அவனையும் அவன் குடும்பத்தையும் நட்பு ரீதியாகவும் தெரியுமே? மாப்பிள்ளை பார்க்கும் வேலை அவருக்கு மிச்சம் என்று தான் நினைக்கிறார். ஆனால் இதில் இறுதி முடிவு அனேஷியாவுடையதாகத் தான் இருக்க வேண்டும் என்றும் யோசிக்கிறார். கூடவே தற்போது அவருக்கு இருக்கும் முக்கியக் கடமை என்றால் அனேஷியா வந்ததும் அவளுடன் சென்று துவாராவின் தந்தையிடம் பேச வேண்டும். கீர்த்தியையும் சமாதானம் செய்ய வேண்டும். தங்களை அவர்கள் மனதார ஏற்க வேண்டும். அதன் பிறகு தான் மகளின் திருமணம் எல்லாம்.
.......................
மணி ஒன்பதே முக்காலை நெருங்க, விமானம் சென்னை விமான நிலையத்தில் இன்னும் சற்று நேரத்தில் தரையிறங்கப் போவதாகவும் பயணிகள் அனைவரும் ஷீட் பெல்டை போட்டுக்கொள்ளவும் அறிவிக்கப்பட்டது. தூக்கத்திலிருந்தவர்கள் எழுந்தனர். அஃபிஷியல்லி அவர்களின் இந்தப் பயணம் முடிவுக்கு வந்தது. (பயணங்கள் முடிவதில்லை!) இனி எபிலாக் மட்டும் தான்!
 
பயணங்களின் முடிவில் ஒவ்வொருவருக்கும்
ஒரு விதமான அனுபவம்....பிரச்சினைகளின் தீர்வு கிட்டியது,,
நல்லதை நினைத்து செய்த பிளான் எல்லோருக்கும நல்லதகவே முடிந்தது..
அனைவருக்கும் சந்தோஷத்தையும் திருப்தியைய்யும் கொடுத்த பயணம்
ஒரு butterfly effect தான்.
வாழ்த்துக்கள் ரைட்டரே.....(y):)
 
பயணங்களின் முடிவில் ஒவ்வொருவருக்கும்
ஒரு விதமான அனுபவம்....பிரச்சினைகளின் தீர்வு கிட்டியது,,
நல்லதை நினைத்து செய்த பிளான் எல்லோருக்கும நல்லதகவே முடிந்தது..
அனைவருக்கும் சந்தோஷத்தையும் திருப்தியைய்யும் கொடுத்த பயணம்
ஒரு butterfly effect தான்.
வாழ்த்துக்கள் ரைட்டரே.....(y):)
YES! இதொரு வெற்றிப்பயணமே! ஹா ஹா உங்களுக்கும் பட்டர்ஃபிலை எபக்ட்டா? ?நன்றி??�
 
எந்த ஒரு பயணமும் தொடங்கும் போது இருக்கும் உற்சாகம் திரும்பும் போது இருக்காது....... ஆனால் இந்த பயணம் நண்பர்களை பிரிகிறோம் என்ற வருத்தம் மட்டும் தான்.....:(

இப்படி ஒரு இனிமையான பயணத்தின் மூலம் நண்பர்கள் அனைவரின் வாழ்வும் சீராகி விட்டது...... இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும் ? ? ?

அற்புதமான பயணம்...... வாழ்த்துக்கள் சகோ ???
 
Top