நிறம் மாறிய நேசம் 12

Advertisement

Sarayu R

Member
Member
ஹலோ அடுத்த பதிவு இதோ. உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும். உங்கள் விமர்சனங்கள் என்னை மெருகேற்றும்.


விஷ்வா பிரியாவை கூப்பிட்டு ஷ்யாம் விஷயம் சொன்னான்.
ஏற்கனவே மீரா பற்றி சொல்லி இருந்தான்.

மீரா இப்பொழுது தன் வீட்டில் இருப்பதையும், மீரா ஷ்யாம் சின்ன சண்டை என்றும், அவளுக்கு உடம்பு முடியலை, அவ ஃபேமிலி வருகிற வரை இங்க இருப்பா.
நீ வந்து அவளுக்கு கொஞ்சம் டிரஸ் வாங்க ஹெல்ப் பண்ண வேண்டும். அன்னிக்கு ஹாஸ்டல்ல இருந்து ஒன்னும் எடுக்கலை. நேற்று ஹாஸ்பிடல்ல இருந்து நேரா இங்க வந்துட்டா.

அப்பறம் ஷ்யாம் பற்றி பேசாதே....
முடியுமா கண்ணம்மா?
யேய் உன்னை பார்க்க ஒரு சான்ஸ்.
விடுவேனா?
கழுதை!!!! எல்லாருக்கும் மன்னி நீ இப்பிடி நடந்துண்டா?.....
15 நிமிஷம் ஓகே?
நீ வரியா கண்ணா!!!!
இல்லை டா ரொம்ப டயர்டா இருக்கு.....

விஷ்வா வர அவன் அப்பா, அம்மா ஒரே மீரா புராணம் தான்.
ஒன்னுமே முடியாம இருக்கும் போதே இப்படி என்றால் அவ நார்மலா இருந்தா?.......

அண்ணா, ரொம்ப போர் அடிக்கரது.
நாளைக்கு உங்க கூட வரவா?....
என்ன ....அடி கிடி வேணுமா?
மருந்து ஒழுங்கா போட்டுண்டியா?

இப்போ ப்ரியா வருவா......
ஹை!!!!பிரியா மன்னியா?
ஆத்துக்கு கூட்டி கொண்டு வந்து சைட்டா?
சின்ன குழந்தையா லட்சணமா இரு!!!
சரி தாத்தா உங்க வயசு என்ன? 90? 100?
யேய் வாலு.....

பிரியா வர,
அப்பா, அம்மா எப்பிடி இருக்கேள்?
ஆத்துக்குள்ள நடக்கரேளா?
வந்து ஒரு அணைப்பு ரெண்டு பேருக்கும்.
திறந்த வாய் மூடாமல் அவளையே பார்த்தாள் மீரா.
விஷ்வாவுக்கு ஏற்ற ஜோடி. என்ன மெட்சூரிடி!!!!!
பிரியா மன்னி, நான் தான் மீரா.
ஹை கண்ணம்மா, ஹவ் ஆர் யூ?
என்ன ஆச்சு?.
பயப்பட வைச்சியா? எல்லாரையும்?

மன்னி நான் ஒன்னும் பண்ணலை.
அப்படியா?
அம்மாடியோ, அண்ணாக்கு என்ன கோவம் வறது?
நீங்க சீக்கிரம் உங்க கன்ட்ரோல்ல அண்ணாவை கொண்டு வாங்கோ....

சிரித்துக்கொண்டே விஷ்வா,
வாலு உனக்கு டிரஸ் வாங்க தான் மன்னி வந்து இருக்கா. போய்ட்டு வா.
பியா, நோ அவுட்சைட் புட். ஓகே.
டின்னர் சாப்பிடறையா?
No ப்பா.
மீரு வரையாடா?
பை

அவர்கள் போனதும் மீரா Friday வரை இங்க இருப்பா.
நாளைல இருந்து ஆத்துல இருந்து ஒர்க் பண்ணுவா.

நைட் என்னம்மா?
மீரா கூட்டும், சாம்பாரும் பண்ணிட்டா. சாதம் மட்டும் வைக்கணம்.

விளக்கு ஏத்தி ஸ்லோகம் சொல்லி, இப்பொ தான் ஶ்ரீ விஷ்வநாதம் பஜேஹம்.... பாடினா. சாக்ஷாத் அம்பாள் பாடற மாதிரி இருந்தது.

யாருக்கு குடுத்து வைத்து இருக்கோ?
சுமித்ராக்கு ஆசை இருக்கு.....
நடக்க நடக்க பார்ப்போம்.

ஆமாம் இந்த அம்பாளை சுற்றி எத்தனை ப்ராப்ளம்..... எந்த ஸ்வாமி வந்து காப்பாத்த போறார்?.

சாதம் வைத்தாச்ச்சு.
ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன்.

மீரா அப்பாவிடம் மற்ற விஷயம் பேசினான்.
வெள்ளி கிழமை ஈவ்னிங் எங்கேஜ்மென்ட் பற்றி சொல்ல வேண்டும்.
ஞாயிறு சித்தப்பா வந்து தங்க ஏற்பாடு பண்ண வேண்டும்.....

ஹோட்டல்ல ரூம்ல போடவா அல்லது சர்வீஸ் அபார்ட்மெண்ட்?
ஒன்னும் வேண்டாம். 3 பெட் ரூம் பெண்ட் ஹவுஸ் ஏட்ரியம்ல இருக்கு.
அங்க ஸ்டே பண்ணிக்கரோம்

Tuesday பாட்டி, தாத்தா வருவா.
புதன் மற்றவா வருவோம்.
புதன் மெஹந்தி நாங்க மட்டும்.
Thursday பர்சேஸ். நைட் அடையார் பத்மநாபஸ்வாமி கோயில் சின்ன மண்டபம் தருவா.
சொந்தகாரா நேர அங்க வருவா.வெள்ளி ஈவ்னிங் பங்ஷன். Sunday திரும்பணம்.
அந்த ஏட்ரியம் அட்ரஸ் மெஸேஜ் பண்ணுங்கோ...
மீரா எங்க?

மீரா, என்னோட வருங்காலம் கூட வெளில போய் இருக்கா!!!!
ரொம்ப சந்தோஷம் .

கல்யாணம் எப்போ? இனிமேல் தான் நாள் பார்க்கணம்.....
சுபஸ்ய சீக்கிரம் விஷ்வா......
********
பிரியாவும் மீராவும் வர ஓகே நான் கிளம்பறேன் என்ற பிரியா கிட்ட,
பியா மீரா சமைத்து இருக்களாம். என்னை காப்பாத்து....
மன்னி உங்களுக்கு சாப்பாடு உண்டு. அண்ணாக்கு இல்லை.
ஜஸ்ட் டேஸ்ட் பார்க்கறேன்......

கண்ணா சமையல் தூள்.
விஷுப்பா சரண்டர் ஆயிடு. இல்லாட்டா விட மாட்டா....

நான் ட்ராப் பண்ணவா?
அப்பறம் என்னோட 2 வீலர்?......

ஐய்யோ, பியா மன்னி அண்ணாவோட ரொமான்டிக் ஆசையை இப்பிடி தடுக்கரேளே!!!!

பிரியா பார்த்து போய்ட்டு மெஸேஜ் பண்ணும்மா!!!!!
குட் நைட் அப்பா, அம்மா, மீரும்மா.
அண்ணாக்கு ........?

அது தனியா வரும்டி வாலு ... நம்ம முன்னாடி டிராமா.....
ஒன்னுமே தெரியலை குட்டி பொண்ணுக்கு....

பை பியா!!!
சாப்பிடலாம் வாங்கோ!!!!
சுவாமி என்னை காப்பாத்து.....

சாப்பிட தொடங்கியதும்,
யேய் சாம்பார் சான்ஸே இல்லைடி தூள்!!!
கூட்டு வித்தியாசமா இருக்கு.

எப்பிடி சமையல் தெரியும்?
ஆத்துல குக் உண்டு. ஆனா வீகெண்ட் நாங்க தான் சமைக்கணம்.
கேரளா, பெங்கால் சமையல் தெரியும்.

அண்ணா நான் கொஞ்சம் காய் வாங்கிண்டு வந்து இருக்கேன். நாளைக்கு என்ன வேணும்?

அம்மா தாயே ரெஸ்ட் எடு.
நீ நாளைல இருந்து ஒர்க் ஃப்ரம் ஹோம்.
இந்த வீக் எண்ட் தான் ஹாஸ்டல்.
ஓகே?

மெடிசின் போட்டுக்கோ.
நான் இவளுக்கு ஆபீஸ் அக்சஸ் செட் பண்ணரேன்
மீரா தூங்கரதுக்கு முன்னாடி செக் பண்ணிடுவோம்.

கொஞ்ச நேரம் கழித்து குட் நைட் மாமா, மாமி.
நான் அண்ணாவை பார்த்த்துட்டு வரேன்.

********
லாகின் பண்ணி பாரு!!!

அப்பறம் காலேஜ் லைஃப் சொல்லு? உன்னோட ஃப்ரெண்ட்ஸ் இங்க இருக்களா?
லவ் மேட்டர்?... ஏதாவது...?
இன்டரெஸ்டிங் டூ ஷேர்?

பிரெண்ட்ஸ் இருக்கா, கண்டாக்ட் இல்லை.
எல்லாரும் என்னோட ஃபேமிலி பற்றி தெரியும் போது கொஞ்சம் டிஸ்டன்ஸ்ல போய் விடுவா.
லவ், கொவ்வு ஒன்னும் இல்லை.
ஆனா நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ணினா.
நான் க்ளியரா சொல்லிட்டேன்
வெஜிடேரியன், பிராமின், எங்க வீட்டில பார்க்கற பையன் தான், கொஞ்சம் என்னோட டேஸ்ட்க்கு ஒத்து வரணம்
அப்படியே எல்லாரும் பேக் அடிச்சா....
பாக்கணமே!!!!!!
இங்க ஆபீஸ்ல எத்தனை பேர்?

யா கொஞ்சம் பேர் கேட்டா. நான் என்னோட சைடு சொல்லிட்டேன்.

கதிர்ன்னு ஒருத்தன் ரொம்ப கடுப்படிச்சான். நல்ல வேளை US போயிட்டான்.
எவ்வளவு இருக்கு?. பிராமின்,
நான்- பிராமின், வெஜிடேரியன்,
நான் - வெஜிடேரியன், வெங்காயம், பூண்டு.......oh my
அடுத்தது ஷ்யாம். அதுவும் போயாச்சு
ஏன்? திடீர்னு?

சும்மா தான். நீ ஏதாவது ஷ்யாம் மேல இன்ட்ரெஸ்ட் என்று ஆத்துல சொன்னியா?

ம் ஹுஹூம்....
ஒரு மேனேஜர் அவ்வளவு தான், சின்ன வயசுல நீங்க ரெண்டு பேரும் மேனேஜ் பண்ணும் அழகை சொன்னேன்.

ஆனா, எனக்கு ஷ்யாம் பார்வைல இருந்த வித்யாசம் தெரிந்தது.
என் கிட்ட தனியா பேசும் போது அவனோட சாரி அவரோட கண்ணுல தெரிஞ்ச காதல், ஆசை, தாபம் ( டான்சர் என்பதால்) புரிஞ்சுது.
எனக்கு எங்காத்துல லவ்வை எப்பிடி எடுத்துப்பா என்று தெரியாது.
அப்பறம் நானும் ஃபேமிலி சொல்லறது தான் முடிவு என்று இருந்தேன்.

ஆனாலும் தடுமாறிட்டேன்.
அந்த karaoke பிராக்டீஸ், சாங்ஸ், அதோட லிரிக்ஸ், ஹிஸ் இமோஷன்ஸ், என்கிட்ட உருகினது, அவா ஆத்துல பேசினது, கேட்டது,...... என் மேல ஒரே பொசசிவ்வா இருந்தது, கோவப் பட்டது.........
நான் ஒன்னும் ஜடம் இல்லையே!!!!
அப்பறம் புரோகிராம் முடிஞ்சதும் என்னை கொண்டு விட வந்து, எனக்காக எல்லாம் பண்ணினது, திரும்ப வரும் போது நான் சொல்லாமலே எனக்காக ஏர் போர்டில் காத்து இருந்தது, நான் மூடு அவுட் ஆகி நின்னப்போ அரவணைத்து என்னை சாந்த படுத்தி, ஆத்துல பேச வைத்தது, எங்க அப்பா எப்பிடி சமாளிப்பரோ அப்படி பண்ணினது....
ஹூம்......
ஆனா கோயில் போய்ட்டு வந்து எதுக்காக அவாய்ட் பண்ணினார் புரியலை.
பெங்களூர், டெல்லி போனப்ப ஐ மிஸ்டு ஹிம்.
கால்ல பண்ணி Thursday வருவேன் என்று சொன்னப்ப ஒவ்வொரு நிமிஷமும் எதிர் பார்த்தேன்.
ஆனா நினைக்கிறது நடக்காதே.

ஒன்னு தெரியுமா? முதல் பாட்டு நாங்க சேர்ந்து பாடினது
எனக்கு பிடித்த சஹானா ராகம்.
அபிமன்யு என்ற பேர் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாட்டு அந்த சினிமாவில்

பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

சஹானா என்று சொன்னதும் யோசிக்கவே இல்லை பாடிட்டேன், அப்பறம் தான் அர்த்தம் புரிஞ்சு ஃபீல் பண்ணினேன்.

சாரி போர் அடிச்சேனா!!!!!
அண்ணா தேங்க்ஸ் எனக்கு ஒரு
அவுட்லெட் குடுத்ததற்கு.

இல்லைம்மா!!!! யேய் இது என்ன பார்மாலிடி......
இதை கேட்டு கொண்டிருந்த ஷ்யாம் (விஷ்வா ஃபோனை மீரா அறியாமல் ஸ்பீக்கர்ல போட்டு இருந்தான்) தாங்க முடியாமல் இந்த தேவதையை நான் அழ வைத்து விட்டேனே!!!!! என்று உருக,

இப்போ புரியறது!!! எனக்கு நட்பு, உறவு எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்று.

அப்பா சொல்லுவார் ஏதோ பொண்ணு சாபம். அது தான் 2 தலைமுறையாக பொண்ணு இல்லை. அதுக்கு கொஞ்சம் முன்னால் இருந்தவா சின்ன வயசுல செத்து போறது, கஷ்டமான திருமண வாழ்க்கை, உடம்பு முடியாம போனது.....
நான் தான் முதல் பொண்ணு, 2 தலைமுறைக்கு அப்பறம்.
எல்லாம் சரி ஆகிடுத்து என்று நினைத்தோம். இல்லை போல இருக்கு.

பகவானே இதெல்லாம் என்னோட முடியட்டும். என் தங்கை, என்
கசின்ஸ்க்கு ஒன்னும் ஆக கூடாது.
இதுதான் என்னோட பிரேயர்.

சொல்லி முடித்த மீராவை கட்டி, அரவணைத்து விஷ்வா உனக்கு ஒன்னும் ஆகாது. அண்ணா ஆக விட மாட்டேன்.
நான் பார்த்துப்பேன் .......
மீராவுக்கு மனசு லேசா ஆனது
விஷ்வா, ஷ்யாம் மனசு வருந்தியது.
*****""
 

Advertisement

Advertisement

Back
Top