நிறம் மாறிய நேசம் 15

Advertisement

Sarayu R

Member
Member
ஹலோ அடுத்த பதிவு இதோ. நவராத்ரி கொலு பிஸி.

கையில் braces இருந்ததால் knife, fork வைத்து சாப்பிட முடியாத மீரா விடம்,
கண்ணா braces அவுத்து விடு இல்லாட்டா நான் ஊட்டி விடவா?....
கேட்ட ஷ்யாமிடம்
நான் ஒன்னும் பேபி இல்லை. ஊட்ட ஒன்னும் வேண்டாம்.
சாப்பிட முடியும்.
திரும்ப braces போட ஹெல்ப் பண்ணினா ஓகே

வலது கையை தூக்கும் போது வலி இருக்க இரு, நீ இங்க வா,நான் உன்னோட சீட்ல இருக்கேன். அப்போது உனக்கு வசதியா நான் ஹெல்ப் பண்ணரேன்.
மனதில்லாமல் அவன் சொன்னதை கேட்டு சீட் மாற, அவள் சாப்பிட உதவினான்.
சாப்பிட்டதும் தூக்கம் வரவில்லை...

மெதுவாக ஷ்யாம் பக்கம் திரும்பி
கொஞ்சம் பேசலாமா?
காத்துண்டு இருக்கேன்..... ஷ்யாம்

இப்போ இந்தியா போனால் எவ்வளவு சர்ப்ரைஸ் வைத்து இருக்க?.

ஏன்னா நீங்க சர்ப்ரைஸ் திலகம் ஆச்சே!!!!
சர்ப்ரைஸா எங்கேஜ்மென்ட் பண்ணுவேள்!!!!!
சர்ப்ரைஸா வேலையை விட்டு அனுப்புவேள்!!!!!
சர்ப்ரைஸா நிச்சயதார்த்த ரிங்ஐ குடுத்து கல்யாணம் கேன்சல் என்பேள்!!!
சர்ப்ரைஸா US வருவேள் !!!!!
சர்ப்ரைஸா ஃப்ளைட்ல கூட வருவேள்!!!

இப்போ அடுத்த சர்ப்ரைஸ் என்ன?
நானும் ரெடி ஆகரேன்.

நிஜமாவே ஐ ஆம் சிக் ஆப் யூவர் சர்ப்ரைஸஸ்.
அவளையே பார்த்தான்.

ஒன்னு சொல்லட்டா.
1 தடவை பண்ணினா சர்ப்ரைஸ்
2 வது தடவை ஓகே
அதுவே தான் வழக்கம் என்றால் ....

யோசிச்சு பாரு.....
எனக்கு என்னோட கணவர் அழகான வீடு வாங்கி சர்ப்ரைஸா கிஃப்ட் குடுத்தா 100 % ஹேப்பி யா இருக்குமா?
சும்மா பேருக்கு சொல்லலாம்.

ஆனா உண்மை அது இல்லை.

எனக்கும் என்னோட கனவு வீடு இப்படி இருக்கணம். கிச்சன் இப்படி, அதுல கவுன்டர் இப்படி, இந்த மாதிரி ஃபர்னிச்சர், இந்த மாதிரி பெட்ரூம், தோட்டம் இப்படி...... அப்படின்னு....
லைஃப்ல ஒரு தடவை வாங்கற வீட்டுக்கே அப்படின்னா ஒரு தடவை வாழற வாழ்க்கைக்கு.....?
எப்பவோ 1 தடவை 2 தடவை சரி
எப்பவுமே அப்படித்தான் என்றால்......

உனக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று தெரிஞ்சு அது மாதிரி மாறி, எனக்கு பிடித்த மாதிரி நீ மாறி அந்த 4 மாசம் இருந்தப்ப இருந்த சந்தோஷம் அதுக்கு எதுவுமே நிகர் கிடையாது.
எனக்கு அப்படி தோணறது!!!!

நீ என்ஜாய் பண்ணினியா தெரியாது. நான் ஒவ்வொரு துளியையும் அனுபவித்தேன்...
நான் சொன்ன மாதிரி நிச்சியத்துக்கு அப்பறம் திகட்ட திகட்ட லவ் பண்ணினேன்.

எனக்கு என் லைஃப்ல கிடைத்த பொக்கிஷம் அது. சாகர வரை அந்த நினைப்பே போறும்.
ஏன், எதுக்கு என்றே தெரியாம அதை என் கிட்ட இருந்து எடுத்துண்டாச்சு.
இனிமேல் என்ன இருக்கு?

என்னவெல்லாம் எதிர்பார்க்கணம் என்று சொல்லிடுப்பா!!!

கண்ணம்மா, உனக்கு சந்தோஷம் தரணம் என்று தான் அப்படி எல்லாம் செய்தேன்.
அதுக்கு அடுத்த சைடு இப்பிடி இருக்கும் என்று தோணலை.

உனக்காக, நான் தர சந்தோஷம் மட்டும் தான் எனக்கு தெரியும். அதோட பிளஸ், மைனஸ் தெரியாது.

எத்தனை தடவை நான், விஷ்வா, உன்கிட்ட நடந்ததை சொல்ல வந்தோம். அப்போ நீ என்ன பண்ணினை?

ஆனா ஒன்னு நிச்சியம். உனக்கு என் மேல் அன்பு, ஆசை இருக்கு. ஆனா இல்லாத மாதிரி நடிக்கறை.
எனக்கு உடம்பு சரி இல்லாதப்போ, அப்படி கவனித்து, லீவ் போட்டு, ஒரு அம்மாக்கு மேல பார்த்து கொண்டியே ஏன்?
சும்மா யாரா இருந்தாலும் அப்படி தான் செய்வேன் என்றால் நம்ப நான் முட்டாள் இல்லை.

அம்மா என்று ஏன் சொன்னேன்னா,
104 டிகிரி காய்ச்சல்ல, ஒரே வாமிட் பண்ணினப்போ உடம்பை பூரா துடைத்து, டிரஸ் ஃபுல்லா மாத்தி, ஃபுல்லா என்றால் ஃபுல்லா தான் ஒரு குழந்தையை பார்த்துக்கற மாதிரி கவனிச்சியே ஏன்?

ஏண்டி...... .....? சொல்லு.
மூணு நாள் நான் தூங்கினதே உன்னோட மடில தானே. ஏன் அப்படிச் செய்தாய்?.
காய்ச்சல்ல ஏதாவது தப்பா நடந்து கொண்டேனா என்று கூட தெரியாது.

3 வாரம் கம்ப்ளீட்டா ஒவ்வொரு வேளைக்கும் என்ன பண்ணனும், என்ன சாப்பிடணம், என்று பார்த்து பார்த்து பண்ணினையே ஏன்?

நீ ஒன்னும் நர்ஸ் அல்லது டாக்டர் இல்லை இந்த மாதிரி நடந்துக்க. பெரிய மதர் தெரசா என்று நினைப்பா?

என் மேல அன்பு இல்லை என்று சொல்லு ஒரேடியா போயிடரேன்.
சொல்லு.......சொல்லுடி......

மௌனம்.....
உன்னால முடியாது.
ஏன்னா யூ லவ் மீ. எனக்கு தெரியும்.

என்ன நடந்தது, என்ன பண்ணினா உனக்கு சேஃப்டி, ஏன் சூழ்நிலை கைதியா இருந்தேன், எதுவுமே தெரியாம, உன்னோட ஈகோ, திமிரு, தப்பான கண்ணோட்டம் இதிலேயே இருந்தா உண்மை எப்பிடி தெரியும்.

உன்னை சுற்றி இருக்கற ஷெல்ல இருந்து வெளில வா.
மத்தவா சொல்லரதை கொஞ்சம் காது குடுத்து கேளு.

10 மாசமா இதை நினைத்து நினைத்து BP தான் ஜாஸ்தி ஆச்சு.
ஸ்ட்ரெஸ்ல வேற.......
இந்த 10 மாசத்துல ஒரு தடவை இப்பிடி பேசி இருந்தா எவ்வளவு நன்னா இருந்து இருக்கும்?....

நீயும் மனசால கஷ்டப்பட்டு, நானும் உன்னைப் பார்த்து அதே மாதிரி இருக்க, BP, ஸ்ட்ரெஸ் என்று ஃபேஸ் பண்ண, நம்ம ரெண்டு பேர் பேமிலியும் நம்மளை பத்தி வருத்தப்பட......

அட்லீஸ்ட் உன் ஃபேமிலில யாரும் உன்னை மாதிரி மடத்தனமா புரிஞ்சுக்காம இல்லை. நிஜமாவே அவா எல்லாரும் கிரேட்.

போடி........ போ
சென்னைல நான் உன் கூடத்தான் இருப்பேன். நீ ஹோட்டல், சர்வீஸ் அபார்ட்மெண்ட், எங்க இருந்தாலும் உன் கூடத்தான் இருப்பேன். உன்னோட சேஃப்டி தான் முக்கியம்.
இல்லாட்டா எங்க கூட நம்மாத்துல இரு.
என்ன ....? மொறைக்காதே.....

சென்னை போன உடனே எனக்கு உன்கூட பேச கொஞ்சம் டைம் குடு.

குடுப்பியா?.....
இன்னம் கெஞ்சிண்டு இருக்கேன் பாரு..... என்னை சொல்லணம்,!!!!

நீ legally, சட்டப்படி என்னோட பொண்டாட்டி ஞாபகம் இருக்கா?

ம்ம்.......
இதுக்கு குறைச்சல் இல்லை...என்ன ம்ம் .... வாய திறந்தா முத்து உதிருமா?

ஏன் ரெஜிஸ்டர் பண்ணினோம் தெரியுமா? உங்க அப்பா தானே சாட்சி கேக்க வேண்டியது தானே!!!!

நான் உன்கிட்ட எப்பிடி நடந்து இருந்தாலும் யாரும் ஒன்னும் சொல்ல முடியாது..... தெரியும் தானே....
என் நகம் கூட உன் மேல பட்டுதா?
சொல்லேண்டி.....
அறிவுன்னு இருந்தா use பண்ணு.

ஸ்.....மெதுவா பேசு ஷ்யாம்....

இப்பவாவது என்ன நடந்தது என்று கேளேன்....
எல்லாம் உன் அண்ணன் , உங்க அப்பாக்கு தெரியும்....

ஷ்யாம் கை வலி, தூங்காதது, ஸ்ட்ரெஸ், இப்போ இந்தியா போனால் என்ன பிராப்ளம் வருமோ நான் ஒரு நிலைல இல்லை. தூங்கிக்கவா?

அப்பறமா பேசலாமா?. எப்படியும்
நீங்க நினைத்ததை பண்ண போரேள்.

இப்போ எதுவும் மூளைல ஏறாது!!!
அப்படியே தூங்கி விட்டாள்.
வலியோடு தூங்கும் அவள் கையை தன் கையில் எடுத்து தடவிக் கொண்டே இருந்தான்.

திரும்ப பழைய நினைவுகள் .....

நிச்சியம் முடிந்து மீரா தம்பி,தங்கை பட்டாளத்துடன் பீச், மால் என்று சுற்ற,
கோயில் போன கூட்டம் தனி, கெளரி, சுமித்ரா இரு பக்க உறவு கூட்டம் என்று சமாளிக்க, சங்கர், கிருஷ்ணா இருவரிடமும் விஷ்வா, ஷ்யாம் வந்து,

கதிர் விஷயம், அரசியல் புலம், எல்லாம் சொல்லி, ஒரு பாதுகாப்பிற்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி விடலாம்.
கேட்டால், நாளைக்கு ஆஃன் சைட் சேர்ந்து போக என்று சொல்லலாம்.
வேற யாருக்கும் தெரியாமல், திங்கள் கிழமை செய்து விடலாம் என்று முடிவு செய்தனர்.

கௌரி நான் மீரா கூட 2 நாள் இருந்து விட்டு வரேன். நீங்க எல்லாரும் போங்கோ என்று சங்கர் சொல்ல,
திங்கள் கிழமை சங்கர் , விஷ்வா, கிருஷ்ணா, நந்திதா சாட்சி கையெழுத்து போட சட்டப்படி தம்பதி ஆயினர் மீராவும், ஷ்யாமும்.

அப்பா எதுக்கு இப்போ அவசரமா ரெஜிஸ்டர் பண்ணனும்? 6 மாசம் இருக்கேப்பா!!!!
இல்லடா கண்ணா, ஆஃன் சைட் ஷ்யாம் தனியா போக வேண்டாமே. நீயும் கூட போகலாமே!!!!
ஆஃன் சைட் போக கல்யாணம் எதுக்கு?
நான் என் விசா ல போகலாமே!!!!!

ராட்சஸி பிடிச்சா பாரு..... விஷ்வா மனசுக்குள்....
இல்லைம்மா, மேரேஜ் ஆயாச்சு என்று ப்ரூஃப் குடுத்தா கார்பொரேட் ஆபீஸ்ல தனியா போக விட மாட்டா இல்லையா?

பிரின்சிபால் நல்ல சமாளிக்கறார்....

அடுத்து வந்த நாட்கள் ஷ்யாம் விஷ்வா ஒரே டிராவல்.

விஷ்வா மீரா அறியாமல் ஒரு செக்யூரிட்டி ஏற்பாடு செய்திருந்தான்

மீரா ஒரு வாரம் ஊருக்கு, 1 வாரம் சென்னை.
ஷ்யாம் அவள் சென்னையில் இருக்கும் வாரம் வெள்ளிகிழமை வந்து, சனி, ஞாயிறு அவளுடனும், பெற்றோருடனும் கழிக்க,....

ஆஃபீஸ் ரூல்ஸ் படி
கணவனும், மனைவியும் அல்லது ஊர்ஜிதப்படுத்தப்பட்ட காதலர்கள் ஒரே இடத்தில் வேலையில் இருக்க முடியாததால் மீரா வேறு ஒரு டிபார்ட்மென்ட்க்கு மாறினாள்.

காலம் ஓடுவது காதலர்களுக்கு தெரியவே இல்லை. கொஞ்சல், கெஞ்சல், சிரிப்பு, செல்ல சிணுங்கல், பாட்டு, மற்றவர் காதில் விழாத பேச்சு, மெஸேஜ், அர்த்தம் இல்லாத சிரிப்பு, தூக்கம் இல்லாத இரவுகள்,......
தன்னவனுக்கு பிடித்தது போல் பெண்ணவள் மாற, மன்னவனும் அதையே செய்ய......
அந்த உலகத்தில் அவர்கள் இருவர் மட்டும் தான்.

ஒரு ஆணின் மனதில் ஒரு பெண் நுழைய முதல் வாயில் அவன் வாய், நாக்கு, வயிறு.
பிடித்த உணவு வகைகளை பிடித்த நேரத்தில் பிடித்த விதமாக குடுக்க ....
முதல் சரணாகதி.
முதலில் அடங்கு, பின் அடக்கு ( யார் என்பது அவர்கள் முடிவு).

விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை.......
பாட்டியின் அறிவுரை.... நன்கு பிடித்துக்கொண்டாள்....

ஷ்யாமுக்கு பிடித்த உணவு பார்த்து பார்த்து செய்தாள்.
மித்தும்மா, கிருஷ்ப்பா என்று சுற்றி சுற்றி வந்தாள்.
பழகும் விதம், வேலை செய்யும் பாங்கு ....... சான்ஸே இல்லை
சுமித்ராவும் கிருஷ்ணாவும் அவர்களுக்கு நிறைய தனிமையை குடுத்தனர்.

சில சமயம் மீராவுக்கு தெரியாமல் அவள் வரும் முன் அவள் வீட்டுக்கு போய் சர்ப்ரைஸ் குடுப்பதும் ஷ்யாம் வழக்கம்.

4 மாதம் போனதே தெரிய வில்லை.
இடையில் விஷ்வா திருமணம்.
ஷ்யாமும் மீராவும் எடுத்து செய்தனர்.

சங்கீத் விஷ்வா பிரியா ஜோடிக்கா அல்லது ஷ்யாம் மீரா ஜோடிக்கா?
இந்த முறை ஷ்யாம் முகம் பார்த்து, உணர்ச்சிகளை கொட்டி பாடினாள் மீரா.
இந்த முறை" இதழில் கதை எழுதும் நேரம் இது..... பாடல்
மீராவை வெட்கத்தில் குளிக்க வைத்து ........
பெரிய கமல் என்று நினைப்பு.....

விஷ்வாவின் பெற்றோர் ஆசைப்படி
கண்ணன் ஒரு கை குழந்தை......இருவரும் பாட
அதில்
"ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தம்மம்மா....
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சம்மம்மா...."

இருவரும் அது அவர்களுக்கான நேரம், பாட்டு, வரிகள் என்று உருக

டேய் போறும் டா
கல்யாணம் எங்களுக்கு..... உனக்கு இல்லை.....
ஒரே ஜொள்ளு தாங்கலை.... என்று விஷ்வா கலாய்க்க.....

மீராவின் பெற்றோரும் வந்து கலந்து கொள்ள....
தனியாக இருக்கும் நேரத்தில் மீராவை சீண்டிக்கொண்டே இருந்தான் ஷ்யாம்.
அதை ரசித்து, அவனிடம் இருந்து விலகி பட்டாம் பூச்சி போல ......அங்கும் இங்கும் ஒடிக் கொண்டு இருந்தாள் மீரா.

பட்டு வேஷ்டியில் கம்பீரமாக இருந்த ஷ்யாம் மீது இருந்த கண்களை எடுக்கவே இல்லை மீரா.

யேய், மீரா ரொம்ப அழகா இருக்கடி. ஒரே ஒரு ..கிஸ் குடுடி....என்று ஷ்யாம் அவளை துரத்திக்கொண்டே சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தான்.

கடைசியில் ஏதோ சாமான் எடுக்க வந்த மீராவின் பின் வந்து கதவை மூடி
அவன் கை அணைப்புக்குள் அவளையும் அவன் இதழுக்குள் அவள் இதழையும் சிறை பிடித்து.....

மூச்சு விட முடியாமல் இருவரும் திண்டாட,
ஒரு முறை விட்டு, திரும்ப சிறை எடுத்தான்.
வெட்கத்தில் சிவந்த மீராவால், அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை.....

எதிர் பார்த்தோ, இல்லை பாராமலோ கிடைத்தாலும் கொடுத்தாலும் முதல் முத்தம் ஸ்பெஷல் தான்.

ஏதோ சாதித்த சந்தோஷத்தில் வெளியே வந்த ஷ்யாம் முகத்தை பார்த்த விஷ்வா யூகித்து விட்டான் என்ன நடந்து இருக்கும் என்பதை.....

சந்தோஷம் மட்டும் தான் வாழ்க்கையா....
விதி தான் வலிமையை காட்ட சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்தது.......
 
Meera outlet for surprise is correct. It would have been better if they tell the truth as she’s a grown woman.
 

Advertisement

Advertisement

Back
Top