நிறம் மாறிய நேசம் 17

Advertisement

Sarayu R

Member
Member
நிறம் மாறிய நேசம் 17

ஹலோ அடுத்த பதிவு இதோ.
நவராத்ரி கொலு பிஸி. கொலுவிற்கு வீட்டிற்கு வந்த கூட்டம் , விசிட் செய்த வீடுகள் நேரமே இல்லை . மன்னித்து கொள்ளவும்.
உங்களுக்கு பிடித்து இருந்தால் நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளவும்.


டேலஸ், அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் முக்கிய நகரம்.

இந்தியர் விரும்பும் சீதோஷணம்.



வந்து இறங்கிய மீராவுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல நிலை.

ஹரி, விஷ்வாவின் ப்ரெண்ட் ஏர் போர்ட் வந்து அழைத்து போய் அவள் தங்கும் அபார்ட்மென்டில் விட்டு ஒரு பெரிய பையையும் குடுத்தார்.

சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன். ( US இல் இந்தியா சென்று வரும் நண்பர்களை கூப்பிட வருபவர்கள் வரும் போதே சாப்பாடு, தோசை மாவு, பால், பிரெட், ஏதேனும் காய் முதலியவற்றை கொண்டு வருவார்கள்).

இங்க 2 யூனிட் இந்த மாதிரி ஆஃன் சைட் வரவாளுக்கு வைத்து இருக்கோம்.

இது ஃபுல் பர்நிஷ்டு யூனிட். 1 பெட் ரூம்.



நான் போர்வை, தலைகாணி, கொண்டு வந்து இருக்கேன்.

ரெப்ரேஷ் பண்ணிக்கோ.

இன்டர்நெட், வைஃபை இருக்கு.

பாஸ்வேர்ட் இது, நீ மாத்திக்கோ.



இது என்னோட நம்பர். ஈவ்னிங் கூப்பிடு. பேசிக் திங்ஸ் வாங்கலாம்.



ஒரு கருடா வேகா பார்சல் வந்தது. வைத்து இருக்கேன். என்ன இருக்கு என்று தெரியாது. விஷ்வா அனுப்பி இருந்தார்.

நானும் , என் ஒய்ஃப் கூட வரேன், ஷாப்பிங் போக.

திங்கள் கிழமை நான் ஆபீஸ் கூட்டிண்டு போறேன்.வாக் பண்ணி போகலாம்.

விஷ்வா, ஷ்யாம் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். என்னை விட சின்னவா தான். ஆனாலும் நான் மரியாதையா தான் கூப்பிடுவேன். திட்டும் வாங்கிப்பேன்.



என்ன வேணும் என்றாலும் கூச்ச படாம கேளு. வரட்டா....

வந்து சேர்ந்த விபரத்தை வீட்டிற்கும், விஷ்வாவுக்கும் சொன்னாள்.

பிரியா அவளிடம், அந்த கருடா வேகா பார்சலில் இருக்கும் திங்க்ஸ், வாங்க வேண்டிய பேசிக் திங்க்ஸ் சொல்லி ரெஸ்ட் எடு.

ஹரி, அவர் ஒய்ஃப் அனு பற்றி சொல்லி நல்ல டைப். நல்ல மனுஷா. என்ன உதவி வேணும்னாலும் கேளு. ஆல் த பெஸ்ட் என்னோட குட்டி நாத்தனார்.

மன்னி உனக்கும் அண்ணாவுக்கும் எப்பிடி தேங்க்ஸ் சொல்ல?. பார்த்து பார்த்து சாமான் அனுப்பி...... ஐ லவ் யூ..... போத்.....



குளித்து, தான் கொண்டு வந்த சாமான்கள், பார்சலில் இருந்த சாமான்களை பார்த்து வாங்க வேண்டிய லிஸ்ட் போட்டாள்.



ஹரி குடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு .....

ஹரி, அனு ஹெல்ப் செய்ய சாமான் வாங்கி,எடுத்து வைத்து, புதிய வாழ்வுக்கு தயாரானாள்........



ஹரி, அனு அவர்கள் 3 வயது குழந்தை ஜிட்டுவுடன் Sunday ஹனுமார் கோயில் போய் விட்டு வந்து அங்கேயே சாப்பிட வாங்கி கொண்டு .........

மீரா இன்னொரு ஜிட்டுவாக விளையாடி ......

நேரம் போனதே தெரிய வில்லை.



சாதாரணமாக US ல், குளோபல் கம்பெனியில், நேர வித்யாசத்தினால்

காலை 6 அல்லது 7 மணிக்கு வேலை ஆரம்பித்து விடும்.

மீரா ஹரியுடன் காலையிலே சென்று ID, பேட்ஜ், அக்சஸ், லேப் டாப்....., HR ஃபார்மாலிடீஸ் முடிக்கும் போது மணி 11.

சில ஆன்லைன் ட்ரெயினிங் முடிக்க ஜெட்லேக் (jetlag) கண்ணை சுழற்ற ஹரியிடம் சொல்லி கிளம்பினாள்.



ரூமுக்கு வந்து அப்படியே தூங்கி விட்டாள். திரும்ப எழுந்து கொள்ளும் போது இரவு 11 மணி. ஒர்க் ப்ரம் ஹோம் பண்ண, வேண்டிய செட் அப் செய்து, எதையோ சாப்பிட்டு , அடுத்த நாளைக்கு எதையோ சமைத்து ஊருக்கு பேசி, லாகின் செய்தால் விஷ்வா மெஸேஜ். என்ன தூக்கம் வரலையா?

ம்ம்.......

ஆன்லைன்ல இருந்த ஷ்யாம், நந்திதா யாருடனும் பேச வில்லை.

டோன்ட் டிஸ்டர்ஃப் ஆப்ஷன் போட்டு ஏதோ செய்து முடித்து குளித்து ரெடி ஆகி ஆபீஸ் கிளம்பி விட்டாள்.

2 நாளில் நார்மல் ஆகி,

அங்கே பாட்டு, டான்ஸ் தொடர கிடைக்கும் வாய்ப்பை தேடினாள்.



ஆனால், எப்படி போக?

டிரைவிங், கார்...

இந்தியாவில் கார் ஓட்டிய பழக்கம் உண்டு.

ஹரி மூலமாக 2 கிளாஸ் டிரைவிங், பர்மிட், ரோட் டெஸ்ட்.....ஜெட் வேகம்

வந்த 2 வது வாரம் லைசென்ஸ் வாங்கி விட்டாள்.

விஷ்வாவிடம், ஆபீஸ் முடிந்து தனியாக வீட்டில் இருப்பதையும், அது ரொம்ப போர் அடிப்பதால் பாட்டு, டான்ஸ் கிளாஸ் சேர வசதியாக லைசென்ஸ் வாங்கி, இப்போ 2nd ஹேன்ட் கார் வாங்க ஐடியா கேட்டாள்.

விஷ்வாவுக்கு ஒரே ஆச்சர்யம்.

லீஸ் ல வாங்கவா எப்படி.....?

என்ன பண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.



கூட வேலை பார்த்த 2 பேருடன் போய் கார் வாங்கி வாரத்தில் 2 நாள் பாட்டு, 2 நாள் டான்ஸ் போக ஆரம்பித்தாள்.

ஃப்ரீ வே டிரைவிங் அசரவே இல்லை.



தினமும் கௌரி, சங்கர், மோஹன், அம்ரு, வாரத்தில் ஒரு நாள் தாத்தா பாட்டி ( தாத்தா பேச மாட்டார்), தேவையான பொழுது விஷ்வா, பிரியா என்று பேசி மனதை அலை பாய விடவே இல்லை.

பாட்டு, டான்ஸ் அவள் கற்றுக்கொண்ட பாணி என்பதால் இடையில் விட்டது பெரிய இடைவெளியாக இல்லை.



ரெண்டு மாசம் ஓடி விட, விஷ்வா 10 நாட்கள் வருவதாக பிளான்.

ஏர் போர்ட்டில் விஷ்வாவை பார்த்து, தன்னுடைய அபார்ட்மெண்ட்க்கு காரில் அழைத்து வந்த மீராவிடம்

டேய்!!!! என்ன அழகா டிரைவ் பண்ணி ...... வாவ்

இது என் தங்கச்சியா?..



இந்தியாவில் இருந்து அவள் ஃபேமிலி குடுத்து விட்ட டிரஸ், ஸ்நாக்ஸ், பிரியா குடுத்து கிட்ட டெர்ராகோட்டா செட்.... ஒரே குஷி.



அவனுக்கு பிடித்தது சமைத்து...

பிரியா, தன்னுடைய ஃபேமிலிக்கு கிஃப்ட்ஸ் என்று வாங்கி, பாட்டு, டான்ஸ் என்று தன்னுடைய பாஷன் படி நடக்கும் மீராவை பார்த்து நிஜமாகவே அதிசயப்பட்ட விஷ்வா....

மீரா 2 மாதத்தில் என்ன நடந்தது?

டோட்டல் சேஞ்ச்........

2 மாசம் இல்லை....அது கூட 3 வாரமும் ..

சின்ன வயதில் ஸ்கூல்ல படித்தோமே

" டிரான்ஸ்பார்மேஷன்". தண்ணீர் ஆவி யாக, ஐஸ் கட்டி யாக.....மாறுவது போல,

கொதிக்கும் தண்ணீரில் போட்ட

கெட்டியான உருளை கிழங்கு சாப்ட் ஆக மாற,

டீ, காஃபி பவுடர் தண்ணீரை தன் நிறத்தில் மாற்ற,

தொட்டால், உடைந்து போகும் முட்டை கடினமாக மாறுவது போல

நான் சாப்ட் ஆகவோ,

இல்லை என்னுடைய இஷ்டத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவோ ஆசைப்படலை.

ஆனா மனசால உடைத்து போற நிலையில இருந்த நான் இப்போ கொதிக்கற தண்ணீர்ல போட்ட முட்டை மாதிரி 3 மடங்கு கடினமா ஆயிட்டேன்.

மனதால், பழகுவதில், பேசுவதில்... எனக்கு என்று ஒரு பாணி....

என்னை சுற்றி ஒரு ஷெல், ஓடு....

சாத்திக்கணம் என்ற வெறி....

யாரையும் சார்ந்து இருக்க கூடாது என்ற வைராக்கியம்....



தேங்க்ஸ் அண்ணா இந்த சான்ஸ் குடுத்ததுக்கு.....

இல்லாட்டா உங்களை, அல்லது அப்பாவை, வேற யாரையாவது டிபெண்ட் பண்ணிண்டு இருந்திருப்பேன்.



ஷ்யாம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசலை. அவள் பெட்ரூமில் ஷ்யாம் கழற்றி கொடுத்த ரிங்.

இது தான் என்னோட கேடலிஸ்ட் ( catalyst). இதை பார்க்க பார்க்க வெறி. நானும் ஜெயித்து விட்டேன் என்று கத்த வேண்டும்.

அது தான் கண் முன்னால் வைத்து இருக்கேன்.

மீரா, நீ போன அப்பறம் என்ன நடந்தது தெரியுமா?....



எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.......

எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்......



ஷ்யாம் எப்படி இருக்.... விஷ்வா தொடங்க,



இந்த உலகத்துல எவ்வளவு மனிதர்கள் இருக்கா!!!!

அவா எல்லாரையும் பற்றி எல்லாருக்கும் தெரியுமா? தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?.

எனக்கு, நான், என்னோட வேலை,என்னோட பாட்டு, டான்ஸ், என்னோட ஃபேமிலி, என்கிட்ட அன்பு காட்டற நீங்க போறும்.



அவளின் மாற்றத்தை பார்த்த விஷ்வா சந்தோஷப்பட்டாலும்,

நூல் இழையில் அது சைக்கலாஜிகல் ப்ராப்ளம் ஆகும் சாத்தியத்தை உணர்ந்தான்.

ஆபீஸ்ல மேனேஜர்ஸ், டீம் லீட் எல்லாரும் மீராவின் ஆளுமை, திறமை, தைரியம்.... புகழ அடுத்த வாரிசு உருவாகிறாள்..... என்ற நிலமை.



சந்தோஷம் என்றாலும் ஒரு கவலை.

இதை இப்படி விடக் கூடாது.....



விஷ்வாவை ஏர் போர்ட்ல கொண்டு விட்டு, பிளைட் ஏற்றி விட்டு வீடு வந்த மீரா திரும்ப தனிமையை உணர்ந்தாள்.

ஹரி, அனு வீட்டுக்கு போய் ஜிட்டுவுடன் விளையாடி விட்டு வந்தாள்.



நாட்கள் வேகமாக ஓட,

அடுத்த ப்ராஜக்ட் தானே லீட் பண்ணுவதாக வாலண்டீர் பண்ணினாள்.

அந்த புது புராஜக்ட் விஷயமாக இந்தியாவில் இருந்து யாரோ வருவதாக பேச்சு.



விஷ்வா மீராவுக்கு ஃபோன் பண்ணி அந்த நபரை கூட்டி வந்து, பக்கத்து யூனிட் ( அதுவும் இது போல் ஆஃன் சைட் வருபவர்க்காக உள்ளது) இல் செட்டில் பண்ண ஹெல்ப் பண்ண சொன்னான்.

ஃப்ளைட் விவரம் அனுப்புவதாக சொல்லி விட்டான்.

வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு ஃப்ளைட் லேன்டிங்.

பெயர்: கிருஷ்ணா ,(கிருஷ்)..

வியாழன் கிருஷ்ணாவுக்கும் சேர்த்து சமைத்து, தனக்கு ஹரி செய்தது போல் வாங்கி வைத்து, ஏர் போர்ட் போய் காத்து இருந்தாள்.

வந்தது யார்? எப்படி வந்தான்?

மீரா எப்படி எதிர் கொண்டாள்?....



இது எப்படி முடியும்?
 

Advertisement

Advertisement

Back
Top