நிறம் மாறிய நேசம் 23.2

Advertisement

Sarayu R

Member
Member
அடுத்த பதிவு.
இரு பகுதிகளாக குடுத்து இருக்கிறேன்.

உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.



அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சேர்ந்தே போய் விட்டு, புராஜக்ட், மீட்டிங், நேரம் போனதே தெரிய வில்லை.
லஞ்ச்க்கு அவள் வருவாள் என்று காத்திருக்க பஞ்ச பாண்டவர் கூட போய் விட்டாள். அதே போல் ஆபீஸில் மீட்டிங் மற்றும் புது ப்ராடக்ட் மைகரேஷன், அதன் டிடெயில்ஸ், ட்ரைனிங் மீராவின் மறுபக்கம் லீடர்ஷிப் தெரிந்தது.....
பஞ்ச பாண்டவர்களுக்கு வாங்கிய கிஃப்ட் காரில் இருக்க கார் கீ வாங்க வரும்போது ஷ்யாம் கோபத்தில் இருந்தான்...

என்ன வேணும்?
கார் கீ?
எதுக்கு? எங்க போகணம்?
உனக்கு அபிசியல் டிரைவர் நான் இருக்கேனே!!!!!
நீ தனியா போனா உங்க மாமனார், மாமியாருக்கு என்னால பதில் சொல்ல முடியாது. ....

என்ன ஆச்சு உனக்கு? எங்கேயாவது போகணம் என்று சொன்னேனா?
கிஃப்ட் எடுக்கணம்.

இங்க ஒரு ஆளு இருக்கற ஞாபகம் இருக்கா?...
எல்லாம் இருக்கு.
நான் என்ன சொன்னேன்? உன்கிட்ட,?
ஆபீஸ்ல திரும்பி பார்க்க மாட்டேன்னு....
படுத்தினா ஆத்துலயும் என்னோட மாமனார், மாமியார் பின்னாடி போவேன். தவிக்க விடவா?

ராட்சஸி, பண்ணினாலும் பண்ணுவ.
மவளே இருடி.... . இன்னும் ஒரு மாசம் கழித்து என் கிட்ட தானே வரணம்.
பார்த்துக்கறேன் அப்போ.

ஷ்... .... ஷ்
என்ன ?
உன்னை எப்படி சமாதானப்படுத்தணம் என்று எனக்கு தெரியும்.....
கீயை குடுடா....
இந்தா....
ஆபீஸ்ல இப்போ நிறைய செக்யூரிட்டி கேமரா இருக்கு.....ஒன்னும் பண்ண முடியாது....
ஆமாம்...... பேசு.....
நந்திதா வர,
நந்திதா நீ ஆச்சு, உன் பாஸ் ஆச்சு...

கை வலி இருக்கா மீரா?
பரவாயில்லை....
உங்க பாஸ்சை ரெண்டு போட்டா சரியாகுமாம்.... எப்பிடி போடவா,?...

ஐய்யோ இது யாருப்பா?....
சமத்தா இருந்த மீரா பொண்ணா? பாட்டு பாடும்போது கண்ணை மூடி ஒரு ஆள உருக வைத்த மீரா வா?
மவனே உனக்கு ஆப்பு தான்.... என்ஜாய்.....

வெள்ளி கிழமை பிளைட்க்கு போகும் போது மீரா புடவை கட்டிக்கோ... என்று ரெண்டு நாளாக மெஸேஜ்....
ஜீன்ஸ் அல்லது சுடி .....தான்.

முடியாது saree தான் எனக்கு வசதி....
நோ.....முடியாது....
போடி....

மீராம்மா, புடவை கட்டிக்கோ.
உங்க அம்மா ஆரத்தி எடுப்பா....
சரிம்மா....

ஏண்டி என்ன பார்த்தா கிறுக்கனா தெரியறதா? நான் சொன்னா மகாராணி கேட்க மாட்டீங்க...எங்க அம்மா கிட்ட சரிம்மா வா...
கொழுப்புடி....
வா ஃப்ளைட்ல இருக்கு கச்சேரி.....

ஃப்ளைட் ஏற போகும் போது அம்மா உங்க பக்கத்துல நான் உட்காரவா? கிருஷ்ணா முகம் போன போக்கை பார்த்து, மீரா நானும், அப்பாவும் இந்த ரிசப்ஷன் பத்தி பேசணம்.
நீ ஷ்யாம் கூட வா.
அவன் பாவம் காத்துண்டு இருக்கான்.

யேய் ..நீ விண்டோ சீட்ல உட்காரு.....
மாட்டேன்.....
.ஷ் ....சொன்னா கேளு. அதுதான் வசதி....
என்ன வசதி?
லூசு, அங்க பாரு அம்மா விண்டோ சீட்.
அப்பா கை எங்க இருக்கு பாரு. அம்மா இடுப்புல....மாத்தி உட்கார்ந்தா மத்தவாளுக்கு தெரியும். இது சேஃப் புரிந்ததா தத்தி.....
முகம் சிவக்க, அவன் சொன்னபடி உட்கார, அங்க பாக்கதே.... அம்மா உன்னோட முகத்தை பார்த்தா கண்டு பிடிப்பா....
அவள் இடுப்பில் தன் கையை படரவிட்டு, அணைத்து, கால் ஷூ அவிழ்த்து அவள் காலுடன் தன் காலை சேர்த்து....
மீரா உணர்ச்சியுடன் விளையாடினான்.
இப்போ தெரியறதா saree கட்டிக்கோன்னு நான் ஏன் சொன்னேன் என்று....
ரெண்டு பேரும் இந்த உலகில் இல்லை.

மனதின் அன்பு, ஆசை, காதல், ஒரு உரசல், ஒரு தீண்டல், ஒரு தொடுதல், ஒரு அணைப்பு, அருகாமை, காதோடு பேசும் மெல்லிய ரகசியம் இவற்றால் உணர்வுகளை தூண்டி வேறு உலகிற்கு அழைத்துப் போகுமா?.

அறியாத வயது ஒன்றும் இல்லை இருவருக்கும்.
அனுபவித்தது இல்லை. அவ்வளவுதான்....

காலம் அறியாமல், கட்டுப்பாடு இல்லாமல் இளம் வயதில் காதலுக்கும் காமத்துக்கும், வித்தியாசம் தெரியாமல் பாதை தவறுவதற்கும் இந்த உணர்வு தான் காரணமா?....

சிறிது நேரம் கழித்து,
ஷ்யாம் மீராவிடம் எவ்வளவு அருமையான சான்ஸ் நாம US ல இருந்து வந்த ஃப்ளைட்ல. ரெண்டு பேரும் மிஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி விட்டோம்...

அவன் முகத்தை பார்க்கும் தெம்பு கூட இல்லாமல் மீரா மெதுவாக....
கண்ணா, தப்பு பண்ணற மாதிரி இருக்கு. இன்னும் 1 மாசம் தானே.
பொறுத்துக்கலாமா?
ரெண்டு பேருக்கும் இப்படி .....பிடிச்சு இருக்கு. ஆனா பயம்மா இருக்கு....

ஃபோகஸ் பண்ணி ஆபீஸில் இருக்க முடியலை. என்ன பண்ண என்று தெரியலை.
நான் உனக்கு தானே.... நீயும் எனக்கு தானே...

கண்ணம்மா கிஸ், ஹக் பண்ணறது தப்பா? நான் உன்னை விட்டுவிடுவேன்னு நினைக்கறையா?...
மௌனம்.....

இன்னும் நீ என்னை நம்பலை ரைட்?
சரி ..... நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணலை.

அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு அப்பறமாவது நான் உன்னை தொடலாமா?. இல்லை சன்யாசியாய் இருக்கணமா. நீயே சொல்லு.
உன்னை உயிரா நினைத்து கொண்டு இருக்கறதுக்கு இது தான் என்றால் ஓகே கண்ணா....
வெடுக்கென்று கையை எடுத்து கண்ணை மூடிக்கொண்டான்......

பொங்கி வந்த கண்ணீரை அடக்கி கொண்டு, மெதுவாக அவன் கையை எடுத்து தன் கையில் வைத்து எல்லாம் நல்லபடியா நடந்து உன்னோட எப்போ சேரப்போரேன்னு காத்துண்டு இருக்கேன்.....
உனக்குள்ளே நானும் எனக்குள்ள நீயும் என்று.
மெச்சூரிட்டி இல்லை. நான் லூசு தான்,தத்தி தான்.
என்னோட இண்டுவிஜுவாலிடி, கான்ஃபீடன்ஸ் எல்லாம் போய் உன்னை பார்த்தாலே உருகி நிக்கறேன். தெரியுமா?


இப்போ ரெண்டு தாத்தாவும் என்ன கூத்து பண்ணப்போறா தெரியலை.
US ல இருந்து டெய்லி மெஸேஜ் போடுவேன். பதில் கிடையாது.
கால் பண்ணினா பாட்டி தான் பேசுவா.
இப்போ அவாளை ஃபேஸ் பண்ணனும்.

இந்த டென்ஷன்ல உன்னை எப்படி கண்ணா என்ஜாய் பண்ணுவேன்?......

போடி எப்போதும் என்னை மூட் அவுட் ஆக்கறது தான் உன் வேலை.

நம்ம லைஃப். நம்ம ரெண்டு பேரும் தான் முக்கியம். வேற யாரும் இல்லை. புரிஞ்சுக்க......
நான் கோவமா இருக்கேன். உனக்கு மத்த எல்லாரும் முக்கியம். நான் இல்லை கரெக்ட்...?

கண்ணா....கொஞ்சம் கீழ குனி. என்று மீரா சொல்ல,
ஏதோ என்று ஷ்யாம் குனிய மீராவும் குனிந்து அவன் கன்னத்தில் அழுந்த அழுந்த முத்தமிட்டு, ஐ லவ் யூ ராஜா.... என்றாள்.
இதுவரை ஷ்யாம் தான் குடுத்து வழக்கம். திகைத்து தடுமாறி விட்டான்.
ராஜா, கிஸ்..... கிறங்கி விட்டான்.....

மெதுவாக அவன் காதில் சர்ப்ரைஸ் என்றாள்.
நீயா தத்தி?. மஹா கெட்டிக்காரி....
சான்ஸே இல்லைடி கண்ணம்மா.....

நான் தாத்தாவை பார்த்துக்கறேன்.
அப்ப என்ன தருவ?....
பண்ணு, அப்பறமா யோசிக்கிறேன்....

இப்போ லேசா ஹக் பண்ணிக்கலாமா?

திருந்தவே மாட்டியா நீ?...
அவன் கையை பிடித்துக்கொண்டு அவன் மேல் சாய்ந்து கண் மூடினாள்.

காத்திருந்த டிரைவர் வந்து சின்னம்மா எப்பிடி இருக்கீங்க என்று ஓடி வர,
அண்ணே நல்ல இருக்கீங்களா? வீட்டில எல்லாரும் நல்லசொகமா?
மீராவின் உடல் மொழி, ஸ்லாங் எல்லாமே மாறியது. சின்னம்மா தோரணையா?

ஆபீஸில் ஒரு லீடராக , இங்கிலீஷில் பேசும் மீரா, வீட்டில் பிராமண பாஷை பேசும் மீரா, தம்பி தங்கையிடம் 5 பாஷை பேசும் கண்டிப்பான ஆனால் அன்பான மீரா, பெரியவர்கள் பேச்சுக்கு மதிப்பு குடுக்கும் மீரா, ஷியாமிடம் கோவம், கொஞ்சல் காண்பிக்கும் மீரா...
நவரச நாயகியா?

மாப்பிள்ளை சார் வாங்க... ஐயா, அம்மா வாங்க.... பொட்டிய குடுங்க... உள்ளாரா வைக்கென்....
ஐயா நீங்க முன்னக்க இருக்கீங்களா? இல்லை மாப்பிள்ளை சார் இருக்கட்டா?.
மாப்பிள்ளை இருக்கட்டும்.......

சின்னம்மா மாப்பிள்ளை கூட முத மொதலா வண்டில ஏறி இருக்கீங்க. ஒரு செதரு காய் போட்டுட்டு வாரேன்.

டிரைவர் போய் இருக்கும் போது என்ன சின்னம்மா .... என்று ஷ்யாம் கலாய்க்க
பாருங்கோப்பா....
ஆமாம் அது என்ன பாஷை பேசரேள்?
எங்க ஊரு பாஷை....
போகும் வழி முழுவதும் டிரைவரும் மீராவும் ஒரே பேச்சு.
டிரைவர் மனைவி தையல் வகுப்பில் இருந்து, அவரின் குழந்தைகள் படிப்பு, அவரின் பெற்றோர் உடம்பு .....
வாய் ஓயவே இல்லை....

மற்ற மூவரும் எப்படி ஒவ்வொருவரின் நிலைக்கு தகுந்தவாறு மனித உறவை தக்க வைக்க முயற்சிக்கிறாள் என்று வியந்தனர்......

ஷ்யாம் டிரைவரிடம் எங்க கிட்ட எல்லாம் பேச மாட்டீங்களா? உங்க சின்னம்மா கிட்ட மட்டும் தானா?
மாப்பிள்ளை சார் நீங்க பெரிய இடம், படிச்சவங்க.... எங்க கிட்ட எல்லாம் பேசுவீங்களா....
உங்க சின்னம்மா மாதிரி தான் நாங்க.... பேசலாம்.
ஆமாம் நான் உங்க சின்னம்மாவுக்கு சரியான ஜோடி தானா?
அதென்ன அப்புடி கேட்டுடீங்க.... காதல் கோட்டை சினிமால வர அஜித் மாதிரி இருக்கீங்க....
எங்க வீட்டு அளகு ராணிக்கு ஏத்த அளகு ராசா நீங்க....

அண்ணே மாப்பிள்ளை சார் நல்ல சினிமா பாட்டு பாடுவாரு.....
பாட சொல்லுவோமா.....
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடுங்க கேப்போம்.....
நாளைக்கு பெரிய ஐயா வீட்டுக்கு போகணம். அவரு அடிக்கற கூத்து ஒரே சிரிப்பாணியா இருக்கு!!!!
நாளைக்கு பாருங்க உங்களுக்கும் சிரிப்பாணியா இருக்கும்....
வீடு வந்திட்டு.... நான் பொட்டிய உள்ளார கொண்டு வரேன்.....

மீரா, உன்னுடைய மனித வள உறவு முறை கிரேட் டா...... நிஜமாவே சான்ஸே இல்லை. .....
கௌரி வந்து ஆரத்தி எடுத்தாள்....
ஹை ஜிஜாஜி..,... என்று மோஹன், அம்ரு வர,
யேய் என்ன கொழுப்பா? நான் கண்ணுல தெரியலையா?
என்ன ஜிஜாஜி? ..... ஜிலேபி?....

ரெஃப்ரெஷ் பண்ணிண்டு வாங்கோ... லைட்டா ஸ்நாக்ஸ், காஃபி குடிச்சுட்டு அப்பறமா சாப்பிடலாம்.
ஷ்யாம் ஸ்வாமி மாமா உனக்கு ஸ்பெஷலா பண்ணி இருக்கார்.

எனக்கு?..... என்ற மீராவிடம்
நீ இனிமேல் செகண்டரி என்று மோஹன், அம்ரு மீராவை நக்கல் அடிக்க.....

ரெப்ரேஷ் ஆகி வந்ததும்,
கௌரி ஒரு ஆசை.... மீரா ஆடி பார்க்கவே இல்லை....
ஆட சொல்லலாமா?
அம்ரு கூட ஆடுவாளா?
ஆடு என்று சொல்லுங்கோ சுமி ஆடுவா ரெண்டு பேரும்

கண்ணா, ரொம்ப நாள் ஆச்சு ரெண்டு பேரும் சேர்ந்து ஆடுங்கோ .....
டான்ஸ் காஸ்ட்யூம் மாறி, கால்ல சலங்கை கட்டி டான்ஸ் ரூம் போனார்கள்.
மீரா ஆட ஆரம்பிக்க.... அம்ரு சேர்ந்து கொண்டாள்.
காதலன் காதலி பாவ பாட்டுக்கள் தான் அம்ரு தேர்ந்து எடுத்தாள்....
வாரணம் ஆயிரம்..... மீராவின் ஸ்பெஷல்.....
ஆண்டாளாக மாறி, கண்ணனுக்காக உருகி வெட்கப்பட்டு ஆடும்போது கடைசியில் கண்ணனாக இருந்த அம்ருக்கு மாலை சூட வரும் பொழுது அம்ரு ஷ்யாமை கை பிடித்து இழுத்து அங்கு தள்ள, மீரா அவனுக்கு மாலையிட..... ஒரு பரவச நிலை இருவருக்கும்....
குட் ஜாப் அம்ரு பெர்பெக்ட் மூவ் என்று சங்கர் சொல்ல, மீரா வெட்கத்தில் தன்னுடைய ரூமுக்கு போய் விட்டாள்.

டிரஸ் மாற்றி டின்னர் சாப்பிட வரும்போது சுவாமி மாமா, பாரு மாமியிடம் ஒரே பேச்சு... விசாரணை...
ஷ்யாமை பார்க்கவே இல்லை .....

சுமித்ரா வந்து ஃப்ளைட்ல கொஞ்சல், சண்டை, சமாதானம் இப்போ டூயட்டா?..

உங்களுக்கு எப்பிடி தெரியும்?. நாங்களும் இந்த வயச கடந்தவா தான்.
இப்பவே சொல்லிட்டேன்,
என் பிள்ளை வெயிட் பண்ண மாட்டான்.
கண்டிப்பா, இன்னும் 10 மாசத்துல நான் பாட்டி தான்.... என்று சொல்லி அவளை வெட்கப்பட வைக்க, ஆண்டாளா என்னமா இருந்த தெரியுமா?. கண்ணே பட்டுடும்.

நீ ஏன் தனியா இருக்க? நாங்க கல்யாண ஏற்பாடு பேசப்போறோம்...
ஷ்யாம் கூட போய் இரு. மோஹன், அம்ரு அங்க தான் இருக்கா...

தயங்கி தயங்கி நானும் வரவா?...
யோசித்து சொல்லறோம்..... வாக்கா....கையை பிடித்து இழுக்க,
ஒரே சிரிப்பு, கிண்டல்... கேம்ஸ், நேரம் போனதே தெரியவில்லை.
மூவரும் இவளை கிண்டல் அடிக்க பில்லோ எடுத்து அவர்களை அடிக்க இவள் துரத்த.....
நாளைக்கு ஊருக்கு போகணம் தூங்கலாம் வாங்கோ. எல்லாரும்.....
மீரா நாளை என்ன நடக்குமோ என்று தூங்கவில்லை!!!!!
ஷ்யாம் மீராவின் சர்ப்ரைஸ் கிஸ், ஆண்டாள் டான்ஸ், மாலை ... உன்மத்த நிலை.... தூங்க முடியவில்லை....

புலர்ந்தது இனிய காலையா? இன்னல் தந்த காலையா?....
 

Advertisement

Advertisement

Back
Top