நிறம் மாறிய நேசம் 6

Advertisement

Sarayu R

Member
Member
மீரா பெற்றோர் கிட்ட சொன்னப்ப,
ஆபீஸ்காரா தானே
சும்மா பாடு டா

என்ன!!!! சினிமா சாங்ஸ் தெரியணம்.
காலேஜ் ஆர்கெஸ்ட்ரால பாடின மாதிரி தானே!!!!

பிடிக்காட்டி வேண்டாம். 2 வாரத்துல புரோகிராம் இருக்கும். அது முடிந்து தான் வர முடியும். என்னிக்கு என்று தெரிந்து சொல்லறேன்......மீரா

என்னடி கண்ணா, பயமா இருக்கா?
உனக்கு பிடிக்காட்டி வேண்டாம் டா.

சரிப்பா டிரை பண்ணி பார்க்கறேன்.

ஃபோனை வைத்ததும் கொஞ்சம் யோசித்தாள். சரியான முடிவா? இல்லையா?

இப்பவே சொல்லலாமா? நாளைக்கு சொல்லவா?

ஒரே குழப்பம்......
திடீரென ஒரு மெஸேஜ்
புதிய நம்பர்

பேசியாச்சா மீரா?.
கிரீன் சிக்னல் ஆர் ரெட் சிக்னல்?
கொஞ்ச நாள் தான் இருப்பதால் சீக்கிரம் சாங்ஸ் செலக்ட் பண்ணி பிராக்டீஸ் பண்ண வேண்டும்.

சொல்லு டா!!!!!!!!!

புரிந்து விட்டது. யார் என்று.
எப்படி பதில் சொல்ல?

🟢

இப்படி அனுப்பினாள்.

அடுத்த வினாடி,
தேங்க்ஸ் டா ரொம்ப டென்ஷனா இருந்தேன்.......
பேசலாமா?
உனக்கு லேட் ஆகலையே?.......பிளீஸ்

🟢

முதல் ரிங் மீரா எடுத்து விட்டாள்
ஆனால் பேசவில்லை.

ஹலோ
ஹலோ மீராம்மா,

ம்ம்
பேச மாட்டியா?
கோவமா?

அங்க இருந்து தலை ஆட்டினா இங்க தெரியாது.
வாயாடிக்கு பேச தெரியாதா?.
சரி வீடியோ கால்ல வரேன்.

வேண்டாம்.

வேணும்......
நீ ஓகே சொல்லறது பார்க்கணம்.

கண்ணாடில ஒரு தடவை பார்த்து விட்டு வீடியோவில் வந்தாள்.
சொல்லு, சேர்ந்து பாடலாமா?

ம்ம்
வாய திறந்து சொல்லு.

தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.

வாயை திறக்காட்டி எப்பிடி பாட?

இதுவரைக்கும் நீ பாடி கேட்கவே இல்லை.
ஜஸ்ட் 1 பல்லவி பாடு.

நீ பாடாட்டி சிங்கார வேலனே தேவா பாட்டு ஆரம்பத்துல ஜெமினி கணேசன் சொன்ன டயலாக் சொல்லிடுவேன்!!!!

இதற்கும் மேல தாக்கு பிடிக்க முடியாமல் மீரா என்ன வேணும்?

கிரீன் சிக்னல் அனுப்பியாச்சே போறாதா?

வாயால சொன்னா முத்தா உதிரும்?.
என்ன சொன்னா உங்காத்துல?

எல்லா அட்வைஸ் மழைக்கு அப்பறம் பாடு. ரொம்ப ரொமான்டிக் சாங்ஸ் என்றால் பார்த்து இரு.

ரொம்ப வழிஞ்சா ஒரு போடு
போடு. பாட மாட்டேன் என்று சொல்லி விடு.

பெரிய சுசிலா, ஜானகின்னு நினைப்பு.

கூட பாடற ஆளு SPBன்னு நினைச்சா நாங்களும் நினைப்போம்.

இது தான் வாயாடி. நான் ஊமையோ என்று பயந்து போய்ட்டேன்.

எனக்கு சினிமா சாங்ஸ் கொஞ்சம் கஷ்டம். கிளாசிக்கல் தான் தெரியும்.
கொஞ்சம் பயமா இருக்கு ...மீரா

நான் தான் இருக்கேனே கண்ணம்மா
என்ன பயம்?....ஷ்யாம்

கண்ணம்மா என்று கேட்டதும் மீரா திகைத்தாள். ஐய்யோ இது சரியா வருமா? .
இவன் கிட்ட விழுந்தா எப்பிடி சொல்லுவேன் ஆத்துல!!!!

உம்மாச்சி காப்பாத்து !!!!!!

2 வரி பாடி காமி டா. மூவி சாங்

என்ன ராகம்?
சஹானா...
சஹானாவா?.....

லேசா ஹும் பண்ணி பாரத்துட்டு.

"பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்"...

ஓகே வா?...

சான்ஸே இல்லை மீரா...
நான் இதையே பாடவா?

ம்ம்...

"கொடி தேன், இனி எங்கள் குடி தேன்
என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்
துளி தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்......

பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்"...

ஓகேவா?

ம்ம்
பாடலா, அதன்வரிகளா, அர்த்தமா, ரெண்டு பேரும் ஒரு நிலையில் இல்லை.

சரி . நீங்க பாட்டு செலக்ட் பண்ணிட்டு சொல்லுங்கோ.
எனக்கு தூங்கணம். குட் நைட்.

ஹே!!!? ஒரு நிமிஷம் ரெண்டு பேர் வாய்ஸ்ம் சேருமா பாக்கலாமா?.....
1 தடவை பல்லவி மட்டும் பாடலாமா?

நினைத்ததை சாதிக்காம விட மாட்டியாப்பா?
உடனே நாக்கை கடித்தாள் "ப்பா " என்று சொன்னதற்கு.
ஷ்யாம் மனசுக்குள்ள ஒரே குஷி.

பிளீஸ் 1 தடவை பாடி பார்க்கலாமே.
1,2,3,4...
"பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்"....

மீரா .... ஃபேண்டஸ்டிக்
தேங்க்ஸ் குட் நைட்.

ரெண்டு பேருக்கும் அது தூங்காத இரவு தான்.

காலை ஷ்யாம் குஷியாக பாட்டை ஹம் பண்ணும் போதே கிருஷ்ணா,
சுமித்ராவிற்கு சந்தேகம்.
என்ன கண்ணா பாட்டு தூள். என்ன விஷயம்?

வந்து ஆபீஸ் பார்ட்டிக்கு நானும் மீராவும் பாடப் போறோம்.
சோலோ வா?... சுமித்ரா
இல்லை டூயட்.

சொல்லி முடித்து ஷ்யாம் பை அம்மா, அப்பா என்று ஓடி விட
சுமித்ராவின் கிருஷ்ணாவும் முகத்தில் அர்த்த புன்னகை.

என்னடி உன் பிள்ளை இப்பிடி ஓடறான்?
இப்போ தான் அவன் அப்பா பிள்ளையாய் ரொமான்டிக் ஹீரோவா மாறி இருக்கான்.

வெட்கம் என்ன பெண்களுக்கு மட்டுமா? ஆண் வெட்கப்பட்டாலும் அழகு தான்.


அன்று, இருவரும் எதுவுமே நடக்காத மாதிரி ஆபீஸ்ல நடந்து கொள்ள,
நந்திதா என்ன ஆச்சு என்று தலை வெடிக்க காத்து இருந்தாள்.

ஷ்யாம் பாட்டு லிஸ்ட் அனுப்பினான்.
எல்லாம் ஒரே காதல் பாட்டு தான்

எங்க போய் முடியுமோ தெரியலையே!!!! பகவானே காப்பாத்து.

4 பாட்டு போறும் என்று சொல்லுவோம்.
வேணும்ன்னா சோலோ பாடிக்கட்டம்.

1. முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்தது.....
2. சுந்தரி கண்ணால் ஒரு சேதி.....
3. நலம் நலமறிய ஆவல்.....
4. தொட தொட மலர்ந்ததென்ன...
5. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வோ..
6. காற்றே என் வாசல் வந்தாய் ....


தாங்கலை டா சாமி.
நந்திதாவிற்கு தெரியுமோ, இல்லையோ என்று மீரா போய் பாடப்போவதை சொன்னாள்.
சென்சார் பண்ணித்தான் சொன்னாள்.

ஷ்யாம் வாயவே திறக்கலை .
மவனே இருக்குடா உனக்கு மண்டக படி.......
Karaoke ரெக்கார்டிங், லிரிக்ஸ், மீரா போனுக்கு மெஸேஜஸ் வந்து கொண்டே இருந்தது.

ஆபீஸ் முடியும் போது நந்திதா ஒன்னுமே தெரியாதது போல
என்ன ஹீரோ சார் என்ன விஷயம்?. மீரா பாட போராளா இல்லை நான் பாடவா?

என்னது நீ பாட போறியா?
செத்துடுவேன் டி!!!??
நான் பாடினா என்ன குறைச்சல்?

நாங்க பாட்டு எல்லாம் செலக்ட் பண்ணி, சேர்ந்து பாடி பார்த்தும் ஆச்சு. இப்போ வந்து கேளு.....

என்னடா நடக்கிறது?
சுமித்ராவை கூப்பிடு..... என்றாள் நந்து
சும்மா இருடி நந்து.

அப்போ,நேற்று என்ன நடந்தது? சொல்லு.
ஷ்யாம் நடந்ததை சொல்ல,

கங்கிராஜுலேஷன் da மாப்பிள்ளை.
நடத்து நடத்து.
போற போக்குல இந்த பார்ட்டி தான் உங்க எங்கேஜ்மென்ட் பார்ட்டியா இருக்கும் போல.

மீரா மேடம் போட்ட 1 வருஷம் எல்லாம் கோவிந்தா கோவிந்தா.

சோ ஹேப்பி டா.
ரெண்டு பேருக்கும் மை பெஸ்ட் விஷெஸ்.

ஆஃபீஸ்ல கொஞ்சம் பார்த்து நடந்துக்கணம்.
Conflict of interest ஆக கூடாது.

பஞ்ச பாண்டவர்களும் வெவ்வேறு டீம். ஜாப் ரோட்டேஷன்.

ஷ்யாம் விஷ்வாவிடம் மீராவும் தன் கூட பாட போவதை ஏதோ கல்யாணம் ஃபிக்ஸ் ஆன மாதிரி பகிர்ந்து கொண்டான்.
பாட்டு பிராக்டீஸ் எங்கே பண்ணுவது என்று ஒரே குழப்பம்.
ஆபீஸ்ல மீரா, ஷ்யாம் தனியாக ஆபீஸ் டைம் முடிந்து பிராக்டீஸ் பண்ணுவது முடியாது.

ஹாஸ்டல்லயும் முடியாது. ஷ்யாம் தன் அப்பா அம்மா கிட்ட பேசிய போது, இங்க வந்து பண்ணட்டும். ஆனா முதல்ல சனிக்கிழமை கூட்டி கொண்டு வராதே.
நாளைக்கு வெள்ளி கிழமை, முகூர்த்த நாள். சாயந்தரம் கூட்டிண்டு வா.
எல்லாருமா ஜாலியா இருக்கலாம். நீங்க பாட, அப்பா மிருதங்கம் வாசிக்க நான் வீணை வாசிக்கரேன். நைட் இங்க தங்கினாலும் சரி. இல்லாட்டா ஹாஸ்டல் போய்ட்டு வரட்டம். 2 வாரம் தானே.
சொல்லி பாரு. நான் வேணா கூப்பிடறேன்.
அவ பேரன்ட்ஸ் கிட்ட சொல்லணம்.

அம்மா இப்போ அவ கிட்ட சொல்லறேன். அவ பேரன்ட்ஸ் கிட்ட பேசட்டம். ஓகே யா?

அப்ப அம்மா முன்னால் பேச முடியாமல் தன்னோடு ரூம்ல இருந்து மீராவை கூப்பிட்டான்
1 ரிங்ல எடுத்த மீரா,
ம்ம்.....
ஏன் மீரா ஹலோ சொல்ல மாட்டியா?
ம்ஹூம்
ஏன்?....
தெரியாது......
பாட்டு எப்பிடி பிராக்டீஸ் பண்ண போறோம்?
எனக்கு தெரியாது....
ஆபீஸ் முடிஞ்சு ரெண்டு பேரும் தனியா ஆஃபீசில்பிராக்டீஸ் பண்ணறது முடியாது.
உன்னோட ஹாஸ்டல்ல சான்ஸே இல்லை.
நான் ஒன்னு சொல்லவா?
ம்ம்
அப்பா அம்மா நாம இங்க ஆத்துல பண்ணலாம் என்று சொன்னா.
அப்பா மிருதங்கம் வாசிப்பார்,அம்மா வீணை வாசிப்பா. கூட நம்ம பாடலாம். நீ ஆபீஸ் விட்டு நாளைக்கு வா. நீ இங்கேயே தங்கிக்கலாம். Sunday நைட் ஹாஸ்டல் போகலாம்.
உனக்கு முடியாட்டி ஹாஸ்டல் போய்ட்டு காலைல வரலாம்.
உங்க பேரன்ட்ஸ் கிட்ட பேசறையா? இல்லை அம்மா அவா கிட்ட பேசுவா.

நீ பேசிட்டு என்கிட்ட சொல்லு.
ஓகே?
இருப்பா.( என்ன இது ரொம்ப சகஜமா ஆகி விட்டது???)
நான் இப்போ என்னோட பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன். உங்க அம்மா கூப்பிடுவா என்று சொல்லறேன். அப்போ உங்க அம்மா, கௌரி ( என்னோட அம்மா) கிட்ட பேசட்டம்.
அவா என்ன செய்ய சொல்லராளோ கேக்கலாம்.

நான் பேசிட்டு கூப்பிடரேன்.

மீரா அவ பேரன்ட்ஸ் கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கிட்டு ஷ்யாம் கிட்ட அவன் அம்மா ஃபோன் நம்பர் வாங்கி கெளரி கிட்ட குடுத்தாள்.
கௌரி பேசி முடித்து விட்டு,
மீரா உனக்கு நாள் இல்லையே. அப்படின்னா 2 நாள் அவா கூட இருந்துட்டு Sunday ஹாஸ்டல் வந்துடு.
நல்ல மாதிரியா இரு.
சமத்தா இரு.
வேலைல ஹெல்ப் பண்ணு.
ஐ லவ் யூ டா ராஜாத்தி......

மீரா உடனே ஷ்யாமின் அம்மா நம்பரை கூப்பிட்டாள்.
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு, கிருஷ்ணாவிடமும் பேசி விட்டு தூங்க போனாள்.

ஷ்யாம் அவள் கூப்பிடுவாள் என்று எதிர் பார்த்து ஃபோன் வராததால் மீராவை கூப்பிடும் போது மணி 11.
தூக்க கலக்கத்தில் இருந்த மீரா யாரு? இப்போ டைம் தெரியுமா? என்று சொல்ல

ஆமாம், இங்க ஒருத்தன் நீ கூப்பிடுவாய் என்று காத்த்துண்டு இருந்தா நீ எல்லார் கிட்டவும் பேசிட்டு தூங்க போயாச்சு. என்னை நியாபகம் இருக்கா? கோபமாக கேட்க....

என்னப்பா, பேபி மாதிரி .. . .
நாள் பூரா ஆஃபீஸ்ல பார்த்தாச்சு.
அப்பறம் பேசியாச்சு.
உன்னோட பேரன்ட்ஸ் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு சாப்பிட போனேன். அங்க ஒரே பேச்சு.
வந்து தூங்கிட்டேன்
இப்பிடி எழுப்பி .......
ஷ்யாம் பிளீஸ் டா. புரிஞ்சுக்கோ

அவளின் பிளீஸ் டா அவனை என்னவோ செய்ய, சாரி டா,
தூங்கு.
உன் கிட்ட பேசாட்டி என்னமோ மாதிரி இருக்கு.

நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணறை.
குட் நைட்.

குட் நைட். எப்பிடி இவ்வளவு பொசெசிவா இருந்தா சமாளிக்கரது? மீராவின் தூக்கம் போயே போச்சு. போயிந்தே.

அவள் கவலை அவளுக்கு.
ஷ்யாமை நம்ம ஆத்துல பிடிக்கணமே.
ஆனா, அவா எப்பிடி ஷ்யாமை கண்டு பிடிப்பா?
தலை சுத்தரது!!!!!

பேசாம பேக் அடிக்கட்டா?

யோசித்து யோசித்து எப்போ தூங்கினாள் என்றே தெரியாது.

ஆபீஸ் கிளம்பும் போதே 2 நாளைக்கு தேவையானதை பேக் பண்ணி விட்டாள்.

ஆபீஸ்ல ஷ்யாமை பார்க்க கூடாது. மனதை கட்டுபடுத்த வேண்டும்.
நான் பாட தான் போறேன் . வேற எதுவும் மனதில் இல்லை. மீரா உன்னால முடியும். கவலை படாதே.

ஒரு மெஸேஜ்!!!!!!
குட் மார்னிங் மீரா,

ஆபீஸ் முடிஞ்சு என் கூட தானே வருவாய்?
அப்போ இப்ப நானே வந்து பிக் அப் பண்ணவா?

மார்னிங் ஷ்யாம்,
நான் நேர ஆபீஸ் வந்துட்டு, என்னோட வண்டில உங்க ஆத்துக்கு வரேன்.
ஆபீஸ்ல வம்புக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
பிளீஸ் அண்டர்ஸ்டேண்ட்.

சி யூ.....
அவன் பேச இடமே குடுக்காம ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி விட்டாள்.

ஆபீஸ்ல என்ன நடக்கும்?
ஷ்யாம் கோபம் மீராவை பாதித்ததா?
 

Advertisement

Advertisement

Back
Top