ஆபீஸ்ல ஒரே பிசி, புது புராஜக்ட் பற்றி பேச்சு.....
பஞ்ச பாண்டவர் டீம்க்கு ஆன்லைன் ட்ரைனிங் அன்ட் கிளாஸ். அதனால் பேசக்கூட நேரம் இல்லை.
எப்படியோ 4 மணி வரை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி ஆச்சு.
4 மணிக்கு ஸ்டாஃப் மீட்டிங் . வேறு வழி இல்லை.போக வேண்டும்.
ஷ்யாம், நந்திதா ,நியூ புராஜக்ட், அதற்கான பார்ட்டி பிளானிங் பற்றி பேசினர்.
ஷ்யாம் மீரா இருக்கும் திசை கூட திரும்பவில்லை.
மீட்டிங் முடிந்து எல்லாரும் போன பின்னால் மீரா ஷ்யாமுக்காக காத்திருந்தாள். அவன் வீட்டு முகவரி தெரிந்தால் தான் அவள் போக முடியும்.
ஆனால், ஷியாம் வேண்டும் என்று அவளை பார்க்காமல் இருக்க, மீரா மெஸேஜ் அனுப்பினாள். பதில் இல்லை
ஃபோன் பண்ணி பார்த்தாள். எடுக்கவே இல்லை
என்ன தான் நினைக்கிறான்?
ஷ்யாம் கேபின் வாசலில் நாசுக்காக தட்டி, மே ஐ கம் இன்? பதிலே இல்லை.
நந்திதா என்னவென்று கண்ணால் கேட்க, மீரா கை விரித்தாள்.
உள்ள போ.... சைகை காட்ட
மெதுவாக கதவை திறக்க அவளுக்கு முதுகை காட்டி இருந்த ஷ்யாம்,
பெர்மிஷன் கேட்டு வரணம். இது கூட தெரியாதா?.....
மீரா, கண்ணில் நீர்......
ஷ்யாம் நான் ஃபோன் பண்ணினேன். மெஸேஜ் அனுப்பினேன். நீங்க பார்க்கலை போல இருக்கு.
பெர்மிஷன் ஆபீஸ் அனுமதித்த தளங்கள் மூலமா கேட்கணம். தெரியாதா?......ஷ்யாம்
எனக்கு உங்க அட்ரஸ் வேணும்.
பாட்டு பிராக்டீஸ் பண்ண.
அதுவும் அப்படி தான் கேட்கணமா?...
ஓகே இப்போ போய் அனுப்பறேன் என்று மீரா திரும்ப,
ஒன்னும் வேண்டாம் என்று ஷ்யாம் சொல்லி இது தான் அட்ரஸ் என்று மெஸேஜ் அனுப்பினான்.
நீங்க போய்ட்டு சொன்னா, நான் வரேன். நீங்க இல்லாம நான் எப்பிடி போக?
அவாளுக்கு என்னை தெரியாதே!!!!!
இதுக்கும் மேல முடியாமல் ஷ்யாம் திரும்ப, மீரா கண் கலங்கி இருப்பதை பார்த்து.....
அழுதியா?
ம்ம்
ஏன்?
அட்ரஸ் இல்லாம எப்பிடி வர முடியும்?
வேணும் என்றே ஃபோன் பண்ணினா. மெஸேஜ் அனுப்பினா, நீங்க அவாய்ட் பண்ணிட்டு இப்போ என்ன கேள்வி ஏன்? எதுக்கு? என்ன நக்கலா?
என்னை பார்த்தா லூசு மாதிரி இருக்கா?
நீ மட்டும் என்னை அவாய்ட் பண்ணு. அது சரி.
நான் பண்ணினா தப்பு இல்லையா?
என்ன நடந்தது என்று யோசி.
நைட் என்ன நடந்தது, காலைல ஃபோன் ஸ்விட்ச் ஆஃப், அப்போ நான் எப்பிடி நடக்கணம் சொல்லுங்க மேடம்.
உனக்கு என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?
உன் பின்னாடி வரேன்னு......
பிளீஸ்....... முதல்ல ரெண்டு பேரும் கொஞ்சம் பேசணும். சும்மா சண்டை போட்டுண்டு இருக்க முடியாது .
அண்டர்ஸ்டாண்ட் ஷ்யாம்....
சரி நான் போறேன்.....
வெளில வந்த மீராவை நந்திதா விஷ்வாவின் கேபினுக்கு கூட்டிக்கொண்டு போய், என்ன ஆச்சு? அழுத்தியா? ஷ்யாம் திட்டினானா?.
விசும்பலோட நடந்ததை சொல்ல,
நந்திதா என்ன ஆச்சு ஷ்யாமுக்கு? ஏன் இப்பிடி?
அவளை சமாதான படுத்தி விட்டு ஷ்யாமை பார்க்க போனாள்
என்ன ஆச்சுடா? ஏன் அவள அழ விடற?.
சின்ன பொண்ணுடா?
உன்னோட ஆசை புரியரது.
ஆனா இப்பிடியா பண்ணுவா?
நான் அப்பா, அம்மா கிட்ட பேசவா?.
நீ சீக்கிரம் மீரா ஆத்துல பேசு.
ஆபீஸ்ல எல்லாரும் போயாச்சு.
அந்த பொண்ணு இன்னும் இருந்தா தப்பா பேச மாட்டாளா?.
சரி நாம கிளம்பலாம். அவ கொஞ்சம் ரெஃபிரேஷ் பண்ணிக்கட்டம்.
அழுத முகத்தோடு வர வேண்டாம்.
அவளை எதாவது படித்தினா இருக்கு மவனே!!!!!!
என் கூட வர மாட்டளாம். அவ வண்டில வருவாளாம். என்ன பயம் என் கிட்ட?
கடிச்சா முழுங்க போறேன்....
ரொம்பத்தான்...... முணுமுணுத்தான்.
மூன்று பேரும் கிளம்ப, மீரா நான் கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வரேன்.
நீங்க போங்கோ.... என்றாள்.
முதன் முதலாக அவாத்துக்கு போவதால் பூ, பழம், ஸ்வீட்ஸ் வாங்கிண்டு கிளம்பினாள்.
ஷ்யாம் வீட்டுக்குள்ள போகாமல் தெரு முனையில் காத்திருந்தான்.
ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்து சேர,
கீ குடு, வண்டிய உள்ள விடறேன் .....
ம்ம். இதோ இருக்கு
வண்டியை பார்க் பண்ணிட்டு ஷ்யாம் வா மீரா. வெல்கம்..... ரெண்டு பேரும் சேர்ந்து வர சுமித்ரா
மேட் ஃபார் ஈச் அதர். கண்ணே பட்டுடும் போல இருக்கு என நினைத்தாள்.
வாடா கண்ணா, வாம்மா மீரா
உள்ளே நுழையும் பொழுது
ஷ்ஷ் .. மீரா கூப்பிட
என்ன?...
வண்டி கீ....
முடிஞ்சா என் கிட்ட இருந்து எடுத்துக்கோ.
அப்பறம் வலது கால் வைத்து உள்ள வா,...... அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,
சிரித்துக்கொண்டே ஷ்யாம் போக
பகவானே எப்பிடி சமாளிக்க போறேன்?
சிரித்துக்கொண்டே உள்ளே வந்து சுமித்ரா கையில் அந்த பூ, பழம் ஸ்வீட் அடங்கின பையை குடுத்தாள்.
எதுக்குடா? இது என்ன பார்மாலிடி?
ஃபேஸ் வாஷ் பண்ணிண்டு வா. காஃபி , பஜ்ஜி சாப்பிடலாம்.
பஜ்ஜி பிடிக்குமா?
ம்ம்
காஃபி குடிக்க மாட்டேன்.
பால் இருக்கா,?
இதோ வரேன். நான் ஹெல்ப் பண்ணரேன்.
தலை வாரி, ரெப்ரேஷ் ஆகி வந்த மீராவும் சுமித்ராவின் பேசிக்கொண்டே காஃபி, பால் குடிக்க.. ...
அம்மா காஃபி!!!!!!
ஐ லவ் யூ டி சும்மிம்மா என்று செல்லம் கொஞ்சினான் ஷ்யாம்.
என்ன பேபி ரொம்ப கொஞ்சல்?
என் கிட்ட என்ன காரியம் ஆகணம்?.
மீரா கிண்டல் அடிப்பாடா
விடு... டா....
தனக்குள் சிரித்துக் கொண்டே மீரா, கொஞ்ச நேரம் முன்னாடி பெரிய மேனஜர் ரேஞ்ச், அப்பறம் துர்வாசர், இப்போ பேபி. என்ன பர்சனாலிட்டி????
தப்பா எடுத்துக்கமாட்டியே இவன் இப்பிடி தான்.
ஹை சுமி டார்லிங், நான் வந்தாச்சு. என்னையும் கொஞ்சம் பாரும்மா!!!!!
சொல்லிக்கொண்டே கிருஷ்ணா உள்ளே நுழைய.....
சரி தான் அப்பா பிள்ளை ஒரே ஜாதி போல..... மீரா மனசுக்குள்....
மீரா தப்பா நினைக்காதே !!!!!!
ரெண்டு பேரும் இப்பிடித்தான்....
அவா ஆத்துலையும் இப்பிடி தான் இருக்கும். சும்மா எங்களை சொல்லாதே சும்மிமா !!!!!!....ஷ்யாம்
வாம்மா மீரா,
ஹவ் ஆர் யூ?
நீ வந்ததுல ரொம்ப சந்தோஷம்.
ஃபீல் கம்பார்டபிள் என்று சொல்லிக்கொண்டே பக்கத்து சோஃபாவில் உட்கார்ந்தார் கிருஷ்ணா.
சொல்லுமா ஜாப் எப்பிடி போறது?.
இவன் வேலை செய்யரானா இல்லை வேலை வாங்கரானா?. சரியான சோம்பேறி!!!!
டாட்......
சும்மா இருடா....
பயப்படாதே மீரா.
இங்க சொல்லறது இங்கேயே தான் இருக்கும்.
அப்பறம் உன்னை பற்றி, உங்க ஃபேமிலி பற்றி சொல்லலாம் என்றால் சொல்லுமா.....
அப்பா அம்மாவை பார்த்து 2 வாரம் ஆனதால் சுமித்ரா கிருஷ்ணா கேட்டவுடன் கண் கலங்கி விட்டது.
என்னம்மா ஆர் யூ ஓகே?
சுமி குழந்தையை பாரு.
தள்ளு ஷ்யாம், என்னடா ஆச்சு?
வந்து.... வந்து.... அப்பா அம்மாவ பார்த்து 2 வாரம் ஆரது. நீங்க பேச பேச அவா ஞாபகம் வந்துடுது.
அம்மா இப்போ இவதான் பேபி.....
சுமித்ரா அவளை கட்டிக்கொண்டு,
கண்ணை தொடைச்சுக்கோ.
வா விளக்கு ஏற்றலாம் .
பூ வைச்சுப்பியா?
ம்ம்.....
அம்மா இதுதான் அவ டிரேட் மார்க் பதில்.
ஷ்யாம் கொஞ்சம் சும்மா இருக்கியா?
வாடி ராஜாத்தி.....
பூ வைத்து விடறேன்.
எனக்கு பொண்ணு இல்லாததால் இது எல்லாம் பண்ண ஆசை.
...
விளக்கு ஏற்றி ஆச்சு, 1 கீர்த்தனை பாட முடியுமா?
பாடுன்னு சொல்லுங்கோ. பாடறேன்
நான் உங்களை மாமா, மாமின்னு கூப்பிடுவா?
தாராளமா!!!!!!
ஷ்யாம் படுத்துக்காதே....
சுருதி வேணுமா? தம்புரா இல்லை.
பரவாயில்லை. App download பண்ணி இருக்கேன்
என்ன ராகம் அல்லது ஸ்வாமி?
அம்பாள்..... ஓகே யா?
கண்ணை மூடிக் கொண்டு
ஶ்ரீ ராகத்தில் தீக்ஷிதர் கிருதி
ஶ்ரீ வரலக்ஷ்மி நமஸ் துப்யம்....... பாட ஆரம்பித்தாள்.
அடுத்த 8 நிமிஷம் அவள் இந்த உலகத்திலேயே இல்லை. பாடப் பாட கல்பனாஸ்வரம் கொட்ட பாடி முடிக்கும் போது காலைல இருந்த ஸ்ட்ரெஸ், டென்ஷன் போய் மனசு லேசா உணர்ந்தாள்
கண்ணம்மா,,....... சாக்ஷாத் அம்பாள்
வந்து பாடின மாதிரி இருந்தது.
சுமித்ரா வந்து கட்டிண்டு நெற்றியிலும், கன்னத்திலும் முத்தம் இட்டாள்.
மீராக்கு ஒரு மாதிரி இருந்தது.
ஷ்யாம் அங்கே இருந்து பார்த்து கொண்டே இருந்தான். அம்மா செய்வதை தன்னால் செய்ய முடியலையே என்று நினைத்துக்கொண்டே....... மீராவை பார்வையால் வருடினான்.....
கிருஷ்ணா வந்து தட்டி குடுத்து, தோளை அணைத்து, பிரமாதம் மீரா.
ஆனா, நான் நினைத்ததை நீ பாடலையே.!!!!!
நீயோ மீரா, உன்னோட ஷ்யாமகிருஷ்ணனை பற்றி பாட்டு பாடுவாய் என்று நினைத்தேன்.
ஷ்யாம் அங்க இருந்து ஒரு கள்ள சிரிப்பு சிரித்தான்.....
எனக்கு குட்டி கிருஷ்ணன் தான் பிடிக்கும். பெரிசா ஆகி, நிறைய பேரை கல்யாணம் பண்ணிண்ட கபட நாடக ஷ்யாமகிருஷ்ணாவை பிடிக்காது.
அது போல முருகர் கோயிலுக்கு சின்ன வயசுல போக மாட்டேன் 2 பொண்டாட்டி உம்மாச்சி என்று.
அது எப்பிடி ஒருத்தருக்கு ஆசை காமிச்சு விட்டு மத்தவா கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்?.போகலாம்?
இப்போ அதோட தாத்பர்யம் தெரிந்தாலும்...... சொல்லுவேன்.
அதுக்குன்னு பாட மாட்டேன்னு இல்லை.
உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கவா?
எதோ தோணறது.
மகராஜியா மகாராணி மாதிரி சந்தோஷமா ஆயுசோட இருக்கணம்.
நைட் என்ன டின்னர் பண்ணலாம்? உனக்கு என்ன பிடிக்கும்?
எல்லாமே சாப்பிடுவேன்.
எனக்கு தயிர் சாதம் போறும்.
அம்மா தாயே மீரா, நீ வந்ததால் ஸ்பெஷலா எதாவது இருக்கும்ன்னு காத்துண்டு இருக்கேன். தயிர் சாதம்ன்னு சொல்லி காயப்போடாதே.......பிளீஸ் மீரா
ஏமாத்தாதே தாய் குலமே..... மித்த்தும்மா
வெளில போலாமா?
பாட்டு பிராக்டீஸ் பண்ணணமே !!! வெளில போனா டைம் ஆகிடுமே....
அப்பா அம்மா கிட்ட பேசிட்டு வந்துடறேன்.
அப்பா அவாத்த்துக்கு வந்தாச்சு.
நன்னா பழகறா.
பூ வைத்து விட்டா மாமி. பாடினேன்.
உங்களை மாதிரி பாடின உடனே கட்டி பிடிச்சு கிஸ் பண்ணினா.
உங்க ரெண்டு பேர் ஞாபகம் வந்துடுது. அழுதுட்டேன்.........
தாத்தா கிட்ட நான் சொல்லலை. நாளைக்கு சொல்லறேன்.
வாலு 2 பேரும் என்ன செய்யறா?
...
ஓகே ஐ லவ் யூ போத்.
மாமி நான் ஹெல்ப் பண்ணறேன்.
ரொட்டி, சப்ஜி, தயிர் சாதம், சாம்பார் காய் இருக்கு. போறுமா?.....
ரசமலாய் வேற இருக்கு....
நான் ரொட்டி பண்ணவா?
ஐ கேன் kneed the dough.
அப்போ நாங்க ரெண்டு பேரும் என்ன பண்ண?...
தெய்வமே என்கிட்ட இந்த மாதிரி கேட்டு இருக்கேளா?...... இப்போ அப்பா பிள்ளை டிராமா போடறேளா?
வாங்கோ. காய் கட் பண்ணுங்கோ..
அப்ப நீ உன்ன பத்தி சொல்ல மாட்டியா? என்ற கிருஷ்ணாவிடம்
யாரு சொன்னா? நாங்க எல்லாம் மல்டி டாஸ்க் பண்ணுவோம்.
டீம் ஒர்க்.
உங்க பிள்ளைக்கு இதெல்லாம் தெரியாது. நாம எல்லாம் சொல்லி குடுக்கலாம்.
யேய் எனக்கு தெரியாதா? நீ சொல்லி குடுக்க போறியா? டூ மச்..... ஷ்யாம்
ஓகே என்னை பற்றி..... ஷ்யாம் காதை மூடிக்கலாம் உங்களுக்கு தெரியுமே!!!
மீரா சங்கர். தூத்துக்குடி,
அப்பா,அம்மா ரெண்டு பேரும் அங்க காலேஜ் பிரின்சிபாலா இருக்காங்க.
SSN college, வாக் இன் வாக் அவுட் ஸ்காலர்ஷிப் recipient.
பரத நாட்டியம், கர்நாடக இசை, வயலின் அரங்கேற்றம் ஆகி இருக்கு.
Music மூச்சு மாதிரி.
சமுதாயத்திற்கு ஏதாவது பண்ண ஆசை. கோவில் அர்ச்சகர், மடபள்ளில வேலை பார்க்கற குடும்பத்துக்கு அவங்க குழந்தைகளுக்கு ஒரு Charity நடத்தரேன்.
வாலி பால் பிளேயர். பாரதி, சுஜாதா ,கண்ணதாசன், வாலி, என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரீடிங் ரொம்ப பிடிக்கும். ஆத்துல ஒரு library இருக்கு.
அதை விட debate / argue பண்ண ரொம்ப பிடிக்கும்.
1 தம்பி, 1 தங்கை ரெண்டு பேரும் மெடிசின் பண்ணறா.
நான் செம வாயாடி. (புரிஞ்சு இருக்குமே)
தமிழ், இங்கிலீஷ், மலையாளம், ஹிந்தி , பெங்காலி பேச, எழுத தெரியும்.
அம்மா வளர்ந்தது கோல்கட்டா. அம்மா வழி பாட்டி கேரளா. வேலை விஷயமாக இருந்தது கோல்கட்டா.
அம்மா MA முடிச்ச உடனே கல்யாணம். அம்மாக்கு வேலைக்கு போக ஆசை.
கரஸ்ல படிச்சா. ஜூன் மாசம் கல்யாணம். மார்ச்ல நான்.
ரெண்டு பக்க தாத்தா பாட்டி தான் பார்த்ததுண்டா.
அப்போ , அங்க லேடீஸ் காலேஜ் ஆரம்பிச்சா. வேலை, அப்பறம் மேல படிப்பு, 3 வருஷத்துல டிவின்ஸ்.
அப்பா அம்மா வேலை முடிஞ்சது.( ஐ மீன் குழந்தை பெத்து குடுக்கரது) அம்மா வழி தாத்தா பாட்டி கோல்கட்டாவ விட்டு வந்துட்டா. மாமா அங்க இருந்த பிசினஸ் பார்த்துக்கரார்.
அப்பா வழி தாத்தா பாட்டி, பக்கத்துல
கிராமம் .
பண்ணையார் மாதிரி.
ஷ்யாம் உடனே,
மீரா இந்த சினிமால வருமே அப்பிடியா?
சின்னம்மா..... பெரிய ஐயா....
அதெல்லாம் சினிமாக்கு தான்.
பாட்டு, டான்ஸ், வயலின் அது ஒரு பக்கம். ஸ்கூல் ஒரு பக்கம்.
அப்பா அம்மா ரெண்டு பேரும் புரோபசர், பிரின்சிபால் என்று அவா வழி.
ஃபேமிலி பிசினஸ், கிராமத்துல ஒரு ஸ்கூல், 8 பஸ் தூத்துக்குடி திருச்செந்தூர் வழில ஓடறது.
அப்பளாம், வத்தல், பொடி, ஊறுகாய் சுத்தி இருக்கற கிராமத்துல ( திருநெல்வேலி மாவட்டம் பூரா) பண்ணி, ஆல் இந்தியா, ஃபாரின் போறது.
சித்தப்பா 2 பேர் இதெல்லாம் பாதுக்கறா.
அப்பறம் ஃபேமிலி Charity. நம்ம சமுதாயத்தை சேர்ந்த கஷ்டப்படரவாளுக்கு.
ஃப்ரீ கம்ப்யூட்டர் கிளாஸ் வேற நடக்கிறது.
Wow இவ்வளவு தானா? இன்னும் இருக்கா?...
இப்போதைக்கு இவ்வளவு தான்.
2 தலைமுறையாய் பொண்ணு கிடையாது. நான் தான் குலக்கொழுந்து. ஆனா, என்னோட தங்கை, சித்தப்பா ஆத்துல 2 கசின் இந்த தலைமுறையில் பொண்ணுங்க இருக்கோம். என்னோட இஷ்டப்படி படிப்பு, வேலை என்று விட்டு குடுத்து இருக்கா.
சினிமா மாதிரி தான் இருக்கு......ஷ்யாம்
இருக்கட்டம்.....உங்களுக்கு என்ன?
மாமி சப்ஜி ரெடியா?
ஷ்யாம் செட் தே டேபிள்.... என்று மீரா சொல்ல,
சுமித்ராவும் கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஷ்யாம் தட்டு, தண்ணீர், ...எல்லாம் எடுத்து வைத்தான்.
ரொட்டி பண்ணிடறேன். நீங்க உட்காருங்கோ. நான் முடிச்சுட்டு வரேன். 3 பேரும் மீரா வேலை செய்யும் வேகத்தை பார்த்து ( அடுப்பு, கவுன்டர்ல ரொட்டி இடறது, சாப்பிட சூடா கொண்டு போடறது என ) மலைத்து நிற்க,
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
சான்ஸே இல்லை மீரா எப்பிடி சமையல் எல்லாம் தெரியும்?... ரொட்டி நார்த் இந்தியன் மாதிரி!!! எப்பிடி?.... கிருஷ்ணா
ஆத்துல குக் இருந்தாலும் Saturday, Sunday எங்க duty. மாடர்ன் சமையல் இல்லை என்றாலும் பேசிக் தெரியும்.
பாட்டி அம்மா கோல்கட்டா என்பதால் ரொட்டி, பெங்காலி dishes தெரியும்.
என்னோட தங்கையும், தம்பியும் செமயா சமைப்பா.
நானும் சொல்லலாம் குக்கிங் என்னோட passion என்று சொல்லியவாறே ஷ்யாமை பார்த்தாள். முகத்தில் சிரிப்பு மட்டும் தான்.
மாமி ரொம்ப பேசறேனா? நானே வாயாடி.
இல்லடா, உன்னை புதுசா பார்க்கற மாதிரி இல்லை. இப்போ தான் வீடு
கல கலன்னு இருக்கு.
வீடு நிறைஞ்சு இருக்கு .......
அச்சச்சோ!!!!!!
மாமி நான் அத்தரை குண்டா? ஐயையோ......
இப்போ வாலுங்க கிட்ட பேசற டைம்.
இல்லாட்டா ஒரு வழி பண்ணிடுவா.
10 நிமிஷம் மணிப்ரவாளமாக தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி .ஒரே சிரிப்பு. ஒரு சிணுங்கல், வெட்கம்,
நான் சினிமா சாங் பாடி அனுப்பறேன்
கிண்டலா? போங்கடா.
குட் நைட் கண்ணா, கண்ணம்மா.
லவ் யூ டா .....
ஷ்யாம் முகத்தில் ஒரு ஏக்கம்.
தனக்கு இப்பிடி உடன் பிறப்பு இல்லையே என்று.
ஃபோட்டோஸ் காமி மீரா.
Chromecast பண்ணவா?
வாவ் வீடு அழகா ரொம்ப பெரிசா இருக்கு.
யா, 4 கிரவுண்ட்...... தம்பி தங்கை மெடிசின் முடிச்ச உடனே இதை ஹாஸ்பிடலா கட்டபோரோம். பக்கத்துல கொஞ்சம் இடம் வாங்கி இருக்கோம்.
யாரு இதெல்லாம்?
நீ உங்க அப்பா மாதிரி. கலர், ஹைட், தலை முடி அம்மா மாதிரி.
ரெண்டு பக்கம் தாத்தா, பாட்டி என்ன நிறைஞ்சு இருக்கா?.
ஹே இது யாரு? நீயா? காமெடியா இருக்கு...... ஷ்யாம்
மாமா பாருங்கோ, கிண்டல் பண்ணறான்....
நிஜமாகவே ஷ்யாம் இந்த உலகத்தில் இல்லை. இவ்வளவு ஒட்டிக்கொண்டு இருப்பாள் என்று ....
நந்திதா வேற இடைல ஒழுங்காக இருக்கியா இல்லை...
அம்மா தாயே, இங்க சுமி, கிருஷ்ணா ரெண்டு பேரும் மீராவை ஒரே தாங்கு தாங்கு. என்னை கவனிக்கவே இல்லை. இங்க நான் மட்டும் இல்லை,
அவா ரெண்டு பேரும் மீரா கிட்ட மயங்கி இருக்கா.அம்மா கட்டிக்கறது, கொஞ்சறது, கிஸ் பண்ணறது வேற லெவல் .
நான் lonely யா ஃபீல் பண்ணரேன்.
என்ன காதுல புகையா?
போ, அவா கூட ஜாயின் பண்ணு. குட் நைட்......
ஷ்யாம் பாட்டு....? வந்த வேலை தவிர வம்பு தான் நடக்கிறது.
அவன் பாடுகிற நிலையில் இல்லை
தேங்க்ஸ் ஷ்யாம் ஃபார் திஸ் ஈவ்னிங்.
உன்னால தான் மாமா, மாமி இந்த ஹேப்பி டைம் எல்லாம்.
4 பேருமா குட்டி கச்சேரி பண்ணலாமா அல்லது பீச் போகலாமா? ....கிருஷ்ணா
குட்டிம்மா என்ன? எங்க?
யாரு குட்டிம்மா? என்னை எல்லாரும் மறந்துட்டெளா?
ஷ்யாம் என்னடா கண்ணா?
ஓகே நீ சொல்லு? பாட்டு அல்லது பீச்?
பீச்......
மீரா நீ.....
எனக்கு இருட்டுல பீச் பயம்மா இருக்கும்.....
நாங்க இருக்கோம்.
அப்பா நீங்க? நீ சொல்லறது தான் சுமி டியர்......
ஓகே பீச்.
மீரா இன்னிக்கும் நாளைக்கும் எங்க கூட தானே ஸ்டே?
ம்ம்
சரி கிளம்புங்கோ. நான் கதவு பூட்டிண்டு வரேன்.
ஷ்யாம் போக அவன் பின்னால் போன மீரா, ஷ்யாம் வண்டி கீ தாயேன்
எதுக்கு?
இப்போ எங்க போகணம்?
டிரஸ் அதுல இருக்கு. அது தான்.....
கீ நீ திரும்ப போகும் போது தரேன்.
டிரஸ் நானே வந்து எடுத்து தரேன்.
பிராக்டீஸ் என்று சொல்லிட்டு
இப்பிடி சும்மா.....
யேய் படுத்தாதேடி.
பேசாம என் கூட இருந்துட மாட்டியா?
நிஜமா சொல்லறேன். பிளீஸ் டி
என் கூடவே ஆயுசு பூரா இரு டா கண்ணம்மா!!!!!!!!?
மீராவுக்கு ஒன்னுமே புரியலை. ஏன் "டி" போட்டு பேசறான்.
ஆத்துல பார்த்துக் கொண்டே இருந்தான். என்ன ஆச்சு?
ஷ்யாம் வண்டி எடு.
மீரா, அம்மா பின் சீட். நான் உன் கூட.
ஓகே.
ஷ்யாம் ரொம்ப தள்ளி போகாதே.
நான் தண்ணில இறங்க மாட்டேன்...
மீரா ஜஸ்ட் வாக்கிங் தான். பயப்படாதே.
ஷ்யாம், அவனுக்கு லெப்ட்ல மீரா, சுமித்ரா, கிருஷ்ணா என்று நடக்க....
கிருஷ்ணா பழக்க தோஷத்தில் சுமித்ராவை அணைத்து நடக்க சுமித்ரா கிருஷ்ணா கையை தட்டி விட, மீராவுக்கு என்ன செய்ய என்று தோன்றாமல், ஷ்யாம் பக்கமாக பார்க்க, எங்க ரொமான்டிக் ஹீரோ இப்பிடி தான்.
சரி நாம இப்பிடியே நடக்கலாம். ரெண்டு ஜோடிகளும் பேசியபடியே நடக்க, லேசாக ஷ்யாம் கை மீரா கையை உரச, விரல்கள் இணைய முயல, வெடுக்கென்று கையை எடுத்து கட்டிக்கொண்டு நடந்தாள்.
ஷ்யாம் நான் ஒன்னு சொல்லவா?
நாளைக்கு காலைல பிராக்டீஸ் பண்ணிட்டு நான் ஹாஸ்டல் போறேன். போற போக்கு சரி இல்லை.
வீணா ஆசையை வளர்க்க வேண்டாம்.
உங்க ஆத்துல நான் ரொம்ப உரிமை எடுத்து கொண்டேன். சாரிப்பா.
என்ன ஆனாலும் எங்க ஆத்துல பார்க்கற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
உங்க மனசுல ஆசையை வளர்த்து, நானும் ஆசைப்பட்டு, அப்பறம் எங்காத்துல வேண்டாம் என்று சொன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். பேசாம ஆரம்பத்திலேயே இதை விட்டுடலாம்.
சரி மீரா நான் கண்ட்ரோல் பண்ணிக்கரேன்.
ஆனா ஒன்னு சொல்லு. என்னை பிடிச்சு இருக்கா?
தெரியலை ஷ்யாம். இது லவ் ஆ அல்லது infatuation aa புரியலை
ஃபேமிலி தவிர பழகற முதல் வெளி ஆள் நீங்க தான்.
எனக்கும் உலகம் தெரியலை.
இன்னிக்கு அவாய்ட் பண்ணணம் என்று தான் அப்படி இருந்தேன். ஆனா மெஸேஜ் வரலை, ஃபோன்ல பேசலை. கஷ்டமா இருந்தது.
துடிச்சு போய்ட்டேன்.
அது தான் உங்க கேபின்ல வைத்து அழுகை வந்துடுது.
ஒன்னு தெரியுமா? விஷ்வா இன்டர்வியூ பண்ணிட்டு வந்து நீ எனக்கு தான் என்று ஆசையை வளர்த்தான்.
முதல் நாள் உன்னை பார்த்து, உன்னோட அழகு, பர்சனாலிட்டி, உன்னோட
காளைமாட்டு கண்ணு ( எல்லாரும் முட்டை கண்ணு என்று சொல்லுவா. ஆனா மாட்டோட கண்ணு இயற்கையாகவே மை இட்ட மாதிரி பெரிசா காது வரை நீண்டு இருக்கும். உன்னோட கண்ணும் அப்படி தான் இருக்கு) , உன்னோட கலர், அட்டிடியுட், கான்பிடென்ஸ் சொல்லின்டே போகலாம். விழுந்துட்டேன்.
இது வரை நான் எந்த பொண்ணு பத்தியும் பேசினதே இல்லை.
உன்ன பத்தி பேசினது பார்த்து அப்பா, அம்மா, " கண்ணா, மேனேஜர் இன்டர்ன் உறவு மெயின்டெய்ன் பண்ணு. அந்த பொண்ணுக்கும் கெட்ட பெயர் வரக்கூடாது. அவளை பற்றி ஒன்னுமே தெரியதப்ப ஆசையை வளர்க்க கூடாதுன்னு சொன்னா.
அப்பறம் உன்னை பற்றி பேசலை. ஆனா டெய்லி உன்னை பார்க்க பார்க்க எனக்கு ஆசை கூடிண்டே போச்சு. உனக்கு தெரியாம உன்னை ஃபோட்டோ எடுத்தேன். சாரி டா கண்ணம்மா.
பெங்களூர், டெல்லி போனப்ப மனசே சரி இல்லை. என்னவோ இழந்த மாதிரி ஃபீலிங்.
நீ என் கூட பாடத்தான் ஓகே சொன்ன, பட் நான் கல்யாணம் பண்ணிக்க ஓகே சொன்ன மாதிரி ஃபீல் பண்ணிட்டேன்.
நேத்திக்கு அந்த பாட்டு உன்னை அறியாமல் நீ பாடிக்காட்ட, அது எதோ தெய்வ சங்கல்பம் போல இருந்தது. அதுதான் அந்த சரணம் கட கட என்று தேடி பாடினேன். அதை ரெகார்ட் பண்ணி ராத்திரி பூரா கேட்டேன்.
நந்திதா கொஞ்சம் கெஸ் பண்ணிட்டா.
நீ போற போக்கு சரி இல்லை. ரொம்ப பொசசிவா நடக்கற.
இப்போ பிரப்போஸ் பண்ணாதே.
இன்னிக்கு நீ ரூம்ல இருந்து போனப்பறம் உன்கிட்ட பேசிட்டு வந்து நல்ல திட்டி விட்டாள்.
ஆபீஸ் முடிஞ்சா அக்கா மாதிரி இருப்பா.
ஆனா முடியலைடி.
புரிஞ்சுக்க பாருடா.
சத்தியமா வரம்பு மீரமாட்டேன்.
ஒரே பையனா வளர்ந்ததால் ரொம்ப ஆளுக்காக ஏங்கி இருக்கேன்.
நீ தான் எனக்கு என்று சரண்டர் ஆயிட்டேன்
தெரியலை ஷ்யாம். உன்னோட நிலமை புரியரது. நான் கன்ட்ரோல் பண்ணிண்டு இருக்கேன். இங்கேயும் அதே நிலை தான். ஆனா ஒன்னு மட்டும் நிச்சியம். கல்யாணம் என்னோட ஃபேமிலி இஷ்டம்.
அப்போ ஆசைப்பட்ட நம்ம நிலமை?
நீ செலக்ட் பண்ணின சாங்ஸ் யோசி. அது இன்னும் ஃபீலிங்ஸ் கூட விளையாடாதா?.
நம்ம ரெண்டு பேரன்ட்ஸ் எவ்வளவு நம்பி விட்டு இருக்கா. அந்த நம்பிக்கையை வீணாக்கலாமா?
நம்பிக்கை இருந்ததா? இல்லை தகர்ந்ததா?