நிறம் மாறிய நேசம் 8

Advertisement

Sarayu R

Member
Member
பீச்ல இருந்து வந்த பின் கொஞ்ச நேரம் கழித்து தூங்க போனார்கள்.

மீராவும் ஷ்யாமும் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்து,
மெஸேஜ் அனுப்ப முடிவு செய்து ஒரே நேரத்தில்..... ஃபோனை எடுத்தார்கள்.

ஷ்யாம் தூக்கம் வரலை.
மாமா மாமி கிட்ட சொன்ன மாதிரி Sunday நைட் ஹாஸ்டல் போறேன். உங்களுக்கு ஓகே யா?

உனக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே கண்ணா.....
எதையும் நினைக்காமல் தூங்கு.....
*****
காலை 5: 30க்கு எழுந்து குளித்து விட்டு வாசல்ல கோலம் போட்டு தோட்டத்தில் நடந்து கொண்டே பாட்டை ஹம் பண்ணி கொண்டு இருந்தாள் மீரா.

வேலைக்கு வந்ததும் ரூம்ல பாட முடியாததால் காலை வாக்கிங் போது பாட்டு பிராக்டீஸ் நடக்கும். பெரிசா பாட முடியாது என்பதால் ஜஸ்ட் ஒரு ரிவிஷன்.

சுமித்ரா, கிருஷ்ணா எழுந்து வரும்போது வாசலில் கோலம், துளசி மாடம்ல கோலம் போட்டு விளக்கு ஏற்றி.....
குட் மார்னிங் மீரா, தூங்கினியா? ....
எப்போ எழுந்துண்டு கோலம் போட்டு ....
ஏன் ..... புது இடம் ..... தூக்கம் வரலையா?....
கேட்டுக்கொண்டே...
பால் காய்ச்சரேன் ....
என்ன ப்ரேக் பாஸ்ட் பண்ணலாம்?....

எதுன்னாலும் ஓகே....

மாமா மாமி நீங்க உங்க ஃபேமிலி பற்றி சொல்லலையே!!!!!

கடலூர் ரெண்டு பேருக்கும்.

அப்போ ஆரம்பித்த லவ் இப்போ வரை போறதா? சிரித்துக்கொண்டே கேட்ட மீராவை பார்த்து ,
டேய் நீ செம ஷார்ப்....

ரெண்டு பேர் அப்பாவும் வக்கீல்.
சுமி அண்ணாவும் நானும் கிளாஸ் மேட். இப்போ அவன் அங்க வக்கீலா பிராக்டீஸ் பண்ணரான். சுமி ஆத்துல,
ஒரு தங்கை பாண்டிச்சேரில இருக்கா.
ரெண்டு பேருக்கும் 1 பையன் 1 பொண்ணு.

என் பக்கம் நான் தான் கடைக்குட்டி.
2 அண்ணா ரெண்டு பேரும் கடலூர், சிதம்பரம்ல இருக்கா. ரெண்டு பேரும் வக்கீல் தான்.
1 அக்கா 1 தங்கை இங்க நங்கநல்லூர்ல இருக்கா.
நான் இங்க தலைமை செயலகம்ல
சீஃப் எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் IAS லெவல். மாமி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியால VRS.
கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பம்.
இப்போ எல்லாரும் நன்னா இருக்கோம்.

வாவ். உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்கோ......
பெரிசா ஒன்னும் இல்லை. ரெண்டு ஃபேமிலியும் தெரியும்.
அடிக்கடி இவ அண்ணாவை பார்க்க போய் இவ கிட்ட விழுந்துட்டேன்.
இன்னும் எழுந்துக்கலை......

சும்மா இருங்கோ...... சின்ன பொண்ணு கிட்ட பேசரதை பாரு.....
இவளா சின்ன பொண்ணு....
சுமி நீ மாறவே மாட்டியா?

நான் பார்த்தேனே........ மீரா சிரித்தாள்.

குட் மார்னிங் கைஸ், என்ன காலைலவே வட்ட மேசை மாநாடு?

ஷ்யாம் எழுந்து வந்து அம்மா காஃபி தாம்மா, நைட் தூங்க லேட் ஆயிடுது.
அம்மா போடற ஸ்ட்ராங் காஃபி இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி !!!!

நன்னா ஐஸ் வை.

பேச்சு, பாட்டு பிராக்டீஸ், கிண்டல் நேரம் போனதே தெரியலை .....

கௌரி கிட்ட இருந்து ஒரு பெரிய கூரியர் .....அப்பளாம், வத்தல், பொடி, ஊறுகாய், ஸ்வீட்( மாலாடு), பக்ஷணம்
என்னதும்மா.... இவ்வளவு அனுப்பி இருக்கா...
முந்தா நேற்று உங்க அம்மா எங்க இருக்கேள் என்று இதுக்கு தானா கேட்டா?
முறுக்கு, மாலாடு சான்ஸே இல்லை ..


உங்க அம்மா கிட்ட தேங்க்ஸ் சொல்லு.
இரு இரு நானே சொல்லறேன்....
என் கிட்ட தான் நம்பர் இருக்கே.....

இன்னிக்கு சாயந்தரம் கோயில் போகலாமா?.
ம்ம்
திரும்ப ஆரம்பிச்சுட்டா...... சிக்நேச்சர் பதில்...

மாமி, சாரி யா? சுடிதாரா?
எதுவானாலும் ஓகே டா...

மரூன் கலர் ஆர்கன்சா சாரில வந்த மீராவை பார்த்து மயங்கி நின்ற ஷ்யாம் அப்பொழுது தான் கவனித்தான், அவனும் அதே கலர் குர்த்தா அணிந்து இருந்ததை.

ஹே என்ன கோஇன்சிடென்ஸ்.
சேம் வேவ் லெந்த்.....

ரெண்டு பேரும் ஒரே கலர் டிரஸ்ல வந்ததை கண்ணால் பருகினர் கிருஷ்ணா தம்பதியினர்.

கோவில்ல அர்ச்சனை குடுக்கும் போது
கண்ணம்மா உன்னோட நக்ஷத்திரம் சொல்லு.....

பிரசாதம் குடுக்கும் போது என்ன மாமி பிள்ளைக்கு கல்யாணம் ஆனதை சொல்லவே இல்லையே!!!!!
ஜோடி பொருத்தம் பிரமாதம்....
நன்னா இருக்கணம்.
இந்தாங்கோ உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல் பிரசாதம்.......என்று மீரா, ஷ்யாம் கையில் பூ, பழம், மாலை என்று குடுத்து, சுமித்ராவை பேச விடாமல் அர்ச்சகர் பேசிக்கொண்டே போனார்.

மீராவுக்கும் ஷ்யாமுக்கும் தர்ம சங்கடமான நிலை....
கிருஷ்ணா சுமித்ராவுக்கும் தான்......

வெளியில் வந்து, மௌனத்தை உடைத்தது கிருஷ்ணா தான்.
தெரியாம சொல்லிட்டார்.
யாரு கண்டா!!!??? தெய்வ சங்கல்பமோ என்னவோ......
வெளியில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பும் வரை மீரா பேசவே இல்லை.

வீடு வந்ததும்,
மீரா உன்கிட்ட ஒன்னு பேசலாமா?
என்ன என்று கிருஷ்ணாவை பார்த்தாள்..
ஷ்யாமுக்கு உன்னை பிடித்து இருக்கு.
இது வரை அவன் படிப்பு, வேலை என்று இருந்துட்டான்.
உன்னை பார்த்ததுல இருந்து கொஞ்சம் ஏதோ ஃபீலிங்.
உனக்கு தெரியாம உன்னை ஆபீஸ்ல வந்து பார்த்தோம். எங்க ரெண்டு பேருக்கும் பிடித்து இருக்கு.
நேற்று நீ வந்ததில் இருந்து நீ இல்லாம நாங்க இல்லை என்று ஃபீல் பண்ணரோம்.
வயசு, படிப்பு, வேலை, அழகு, பேரு, கோத்திரம், நக்ஷத்திரம் கூட பொருத்தமா இருக்கு.
எங்க பிள்ளையை பிடித்து இருக்கா?
எங்காத்துக்கு மாட்டு பொண்ணா வர உனக்கு இஷ்டமா?
கட்டாய படுத்தலை. வந்தா ரொம்ப சந்தோஷம்.
சும்மா மனசுல வைச்சுக்காம கேட்டுட்டேன். தப்பு என்றால் விட்டு விடு....
கிருஷ்ணா இப்பிடி பேசியதும் 3 பேருக்கும் அதிர்ச்சி.....
சுமித்ரா வந்து மீரா கையை பிடித்துக் கொண்டாள்....

மாமா...... வந்து....

மீரா லீவ் இட். விடுடா.....அப்பா தெரியாம சொல்லிட்டார்.....ஷ்யாம்.

தட்ஸ் ஓகே ஷ்யாம்

மாமா, மாமி, எங்காத்துல
தாத்தா பாட்டி, வந்து என்னை என்னோட அம்மா மாதிரி உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லறா. நான் 1 வருஷம் டைம் கேட்டு இருக்கேன்.
வேலை, பணம் பெரிசு இல்லை.

என்னை பொறுத்த வரை எங்க ஆத்துல பார்க்கற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
அது யாரா இருந்தாலும்.
நிச்சியம் பண்ணும் வரை அது யார் என்று கூட பார்க்க மாட்டேன்.

எனக்கு என் குடும்பம் மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு பொருத்தமா பார்ப்ப்பா என்று.
இது என்னோட ஃபேமிலிக்கு நான் குடுக்கற மரியாதை, நன்றி கடன்.
ரெண்டு பக்கம் தாத்தா பாட்டி அவா சப்போர்ட் , வளர்ப்பு, பிரார்த்தனை இல்லாட்டா நான் இன்னிக்கு இல்லை.

இப்போ ஆசையை வளர்த்துண்டு அப்பறம் முடியாது என்றால் கஷ்டம்.
அப்பறம் இந்த மனச வேற ஒருத்தர் கிட்ட எப்பிடி பகிர்ந்த்துக்க?.
கிருஷ்ணா உம்மாச்சியை சொல்லறது தானே எனக்கும்.

நேத்திக்கு உங்க பிள்ளை கிட்ட இது பற்றி பேசினேன்.

இப்போ உங்க பிள்ளை மேல எனக்கு இருக்கறது மரியாதையா, லவ்வா, infatuation ஆ தெரியலை.

பிளீஸ்...... தப்பா எடுத்துக்க வேண்டாம்.

கேட்ட 3 பேரும் இப்பிடி ஒரு தேவதையா? என்ன அன்பு, நம்பிக்கை குடும்பம் மேல!!!!!!!!
புண்ணியம் பண்ணின குடும்பம்.

சுமித்ரா, கிருஷ்ணா வந்து கட்டிக்கொண்டு ராஜாத்தி, இப்போ இன்னும் உன்மேல ஆசை, மரியாதை வரது.
உன்னோட இஷ்டம் இல்லாம எதுவும் நடக்காது. சத்தியமா சொல்லரோம்.

இந்த விஷயம் பற்றி இனிமேல் பேசலை என்று விட்டு விடலாம். டீல்!!!!

மாமா மாமி தெரியுமா?
ஒன்னு நிச்சியம்!!!!!
நிச்யதார்த்தம் முடிந்து கல்யாணத்துக்குள்ள திகட்ட திகட்ட லவ் பண்ணி விடுவேன்......மீரா.
அப்போதான் என்னோட பாரதியின் வார்த்தையை மதிச்ச மாதிரி இருக்கும்.


சரி சரி இப்போ நம்ம 4 பேரும் 1 குட்டி கச்சேரி பண்ணலாம்.
சரியா?

ம்ம்

அப்போ அப்போ எப்பிடி மாற முடியரது மீரா. இன்டர்ஸ்டிங்.....
இப்போ தான் பெரிய....... லெக்சர்.உடனே மம்..... என்று பதில்.

ஷ்யாம் சும்மா இருடா.....அவ கிட்ட வம்புக்கு போகாதே....

மீரா பாட, ஷ்யாம் வயலின், சுமித்ரா வீணை, கிருஷ்ணா மிருதங்கம் வாசிக்க 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.

மனசு லேசா ஆகி தூங்க போகும்போது 12 மணி.
ஒரு மெஸேஜ் ஷ்யாமிடம் இருந்து.....
நீ அப்பா அம்மா கிட்ட "இப்போ உங்க பிள்ளை மேல எனக்கு இருக்கறது மரியாதையா, லவ்வா, infatuation ஆ தெரியலை" என்று சொல்லும் போது ஒரு குழந்தை மாதிரி இருந்தது.
அழற குழந்தையை சமாதான படுத்தற மாதிரி உன்னை கட்டிண்டு சமாதான படுத்த தோணித்து.
நீ தான் என்னோட ஃபர்ஸ்ட் பேபி.

நான் பாஸிட்டிவா இருக்கேன். புரியரதா?

குட் நைட்.
நாளைக்கு 1 டைம் பிராக்டீஸ் பண்ணினா போறும்.
நம்ம கெமிஸ்ட்ரி நன்னா இருக்கு......
லவ் யூ டா.

மீரா எப்படி இவனை திருத்த? என்று எண்ணியவாறு தூங்கினாள்.
காலை 5: 30க்கு எழுந்து குளித்து விட்டு வாசல்ல கோலம் போடும் போது,
குட் மார்னிங் மீரா என்று ஷ்யாம் வாசலில் வந்து கோலம் போடுவதை பார்க்க, என்ன ஆச்சு என்று விழியால் கேட்ட மீராவிடம் ஜாகிங் போறேன். சீ யூ ....

அன்று சாதரணமாக பொழுது போக, மாலையில் மீரா கிளம்பும்போது
சுமித்ரா குங்குமம் குடுத்து, தலையில் பூ வைத்து விட்டு, 1 டிசைனர் சாரி, மாட்சிங் அக்ஸ்ஸரீஸ் வைத்து குடுத்தாள்.

எதுக்கு மாமி இதெல்லாம்?.
பொண்ணு இல்லாத குறை போயிடுத்து உன் கூட இருந்தப்ப. பிளீஸ் கண்ணா என்னோட திருப்திக்காக....

அடிக்கடி வாம்மா.
உடம்பை பார்த்துக்கோ.

ஷ்யாம் அவர்களுக்கு தெரியாமல் வண்டி கீயை குடுத்தான்
அவனும் கூடவே 2 வீலர்ல கிளம்பினான்.

உள்ளே நுழைந்த கிருஷ்ணா சுமித்ரா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பிளான் பண்ண ஆரம்பித்தனர்.

விஷ்வா வர ஆஃபீஸ் வேலை பிசியாக 1 வாரம் ஓடியது.
விஷ்வா ஷ்யாமிடம் எல்லாம் கேட்டு தெரிந்து மீரா விஷயத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

பீச் ரிசார்ட்டில் நாள் முழுதும் ஒரே கொண்டாட்டம். சுமித்ரா குடுத்த ஸாரியில் தேவதையாய் மீரா. சுமித்ரா கிட்ட வந்து நான் நன்னா இருக்கேனா இந்த சாரில என்று செல்லம் கொஞ்சினாள்.....
Karaoke செம hit
மீரா ஷ்யாம் உடன் 6, விஷ்வா கூட 1 பாட்டு "ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
யாவும் இசை ஆகுமடா......
பாடினாள்.

ஷ்யாம் உடன் பாடும் போது மீரா அவனை பார்க்கவே இல்லை.
அவனை பார்த்தால் எங்கே தன்னை தொலைத்து விடுவோமோ என்று இருந்தாள் . ஆனால் பாட்டின் அர்த்தம் .. பாவத்தை அவள் முகத்தில், உடல் மொழியில் காட்டினாள்.
ஷ்யாம் அவளை பார்த்து கொண்டே பாடினான். எதை பற்றியும் யாரை பற்றியும் கவலையே படவில்லை. அங்கு அவனும் மீராவும் மட்டும் இருப்பதாய் எண்ணி தன்னையே அவளிடம் தந்தான்.

ஆனால் மீரா,விஷ்வா கூட பாடும் பொழுது அவனை பார்ப்பது, சிரித்துக்கொண்டே என்று பாடினாள்.

புரோகிராம் முடியும் போது வீட்டில் இருந்து 4 மிஸ்டு கால் வந்திருந்ததால் மீராவிற்கு டென்ஷன்.
ஷ்யாம் கிட்ட வந்து "ஆத்துல இருந்து 4 மிஸ்டு கால். என்ன என்று தெரியலை
நான் கிளம்பரேன்...... விஷ்வா கிட்ட சொல்லி விடு என்று கிளம்ப,

லூசாடி, இங்க இருந்து இந்த நேரத்தில் எப்பிடி போக.....,
ம்ம். இரு நான் வரேன்.
அம்மா கிட்ட பேசு. என்ன விஷயம் என்று..... கேளு.
விஷ்வா கிட்ட பேசி, அதற்குள் தன் பைக் எடுத்துக்கொண்டு (கால் டாக்சி உடனே கிடைக்கவில்லையாம்) மீரா விடம் வந்தான்.....
பேசினியா? என்ன சொன்னா?
இப்போ ட்ரெயின், ஃப்ளைட் இல்லை.
நான் கூட வரவா?
டிரைவ் பண்ணி கூட்டிண்டு போறேன். சரியாடா.....
ஆத்துல போய் கார் எடுத்துக்கொண்டு போகலாம்....

அம்மாவோட அப்பா அம்மா (தாத்தா பாட்டி) வந்து இருக்கா. என்னை பார்க்கணமாம்.
இப்போ போய்ட்டு Monday வந்துடறேன்.
பஸ்ல போய் விடுவேன்.
என்னை பஸ் ஸ்டாப்ல விட முடியுமா?

நிஜமா.....தனியா போக முடியுமா?.நான் வரேன் டா......
காலம் கெட்டு கிடக்கு.....

அதெல்லாம் ஒன்னும் இல்லை.
இப்பிடியே போகலாம்.

டிரஸ் எடுத்துக்க வேண்டாமா?.....
இல்லை..... ஆத்துல இருக்குமே. 1 டே தானே.

Live 360 app ரெண்டு ஃபோன்லயும் போட்டுக்கலாம். நான் உன்னை ட்ராக் பண்ணிப்பேன்.
தேங்க்ஸ் ,....
பிளீஸ்...... ஆனா நான் திரும்பி வந்ததும் டெலீட் பண்ணி விடணம். Okppa

ராட்சஸி....இதெல்லாம் பேசு...... நல்லா வாய் கிழிய...( மனசுக்குள்.... )

அப்பொழுது தான் ஷ்யாம் அவள் கையை பிடித்து கொண்டு இருந்ததை உணர்ந்ததாள்.

மெதுவாக கையை விடுத்தாள்.

கண்ணம்மா, எல்லாரும் என் கிட்ட வந்து, நிஜமாகவே உங்க ரெண்டு பேர் பெர்பார்மன்ஸ் சூப்பர். செம கெமிஸ்ட்ரி.
உண்மையா லவ் இல்லாட்டா இது சான்ஸே இல்லை என்று சொல்லறா....

ஆனா நீ தான் என்னை பார்த்து கூட பாடலை ஏன்டா? வெட்கமா?
ஆனா விஷ்வாவை பார்த்து சிரிச்சு பாடின தெரியுமா? எனக்கு ஒரே பொறாமை......

மீரா காதில் எதுவும் விழவில்லை....

ஓகே app ரெண்டு ஃபோன்லயும் டவுன்லோட் பண்ணி ஆச்சு.
நந்திதா வீடியோ அனுப்பி இருக்கா. ஆத்துல காமி.

எனி பிராப்ளம் கூப்பிடு.
ஃபோன் ல சார்ஜ் இருக்கா? கார்டு, கேஷ், இருக்கா?. நீ போய் சேர்ந்து கூப்பிடு.
தூங்காம வெயிட் பண்ணுவேன்.

ஷ்யாம் நீங்க கிளம்புங்கோ. டேக் ரெஸ்ட். குட் நைட்.
விஷ்வாவும், நந்திதாவும் கூப்பிட்டு
ஷ்யாம், நீ திரும்ப பீச் ரிசார்ட் வர வேண்டாம். நாளைக்கு பார்க்கலாம்.....

ஆல் ஓகே?.....
யா யா....
நந்திதா உன் பேரென்ட்ஸ் ஐ கூட்டி கொண்டு வருவா.
மற்ற எல்லாரும் போய் சேர்ந்து மெஸேஜ் வந்தாச்சு.டேக் ரெஸ்ட். குட் நைட்.

ஏன் வர சொன்னா,? என்ன விஷயம்? மீரா, ஷ்யாம் தூங்கவே இல்லை.
ஷயாமுக்கு ஒரே எக்சைட்மெண்ட், டென்ஷன், மீராவிற்கு டென்ஷன்.

ஏன், எதற்கு?
 

Advertisement

Advertisement

Back
Top