Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா ..என்.. வெண்ணிலா-02

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா ..என்.. வெண்ணிலா-02

பார்த்திபன் தன் நன்பனை செல்லில் அழைத்தார். ராம் , “உங்க ஸ்கூல் டீச்சர் யாரோ ஈஷ்வரை திட்டியிருகாங்க, பவன் விஷியத்தில...”

”அப்படியா டீச்சர் பேர் என்னப்பா சொல்லு என் பொண்ணுக்கிட்ட சொல்லுறேன்”. ராம் ஒரு நிமிஷம். ”டேய் பவன் அந்த டீச்சர் பெயர் என்னடா”.

ரூமிற்குள் நுழைய இருந்த பவனை பார்த்து கேட்க. ”ம்ம் மூன் தான் சண்டை போட்டுச்சு” என்றான்.

”ராம் யாரோ மூணாம், எப்படி பெயர் வச்சிருக்காங்க பாருப்பா, வெளிநாட்டு டீச்சரோ.. ”

”தெரியிலேடா, இன்னும் என் பொண்ணு வரல, கேட்டு சொல்லவா”.

”அதுவா முக்கியம் , அடுத்த வாரம் பார்த்துக்கலாம். சண்டே மார்னிங் ஒரு பத்து மணிக்கு வருவோம்பா”.

”டேய் பார்த்தி காலையில நம்ம வீட்டில தான் சாப்பாடு சொல்லிட்டேன்”.

”வேணாடா, கல்யாணம் முடியட்டும். என் பையன் இதுக்கே கீழயும் மேலயும் குதிப்பான். சரி குட் நைட்ப்பா”.

விக்கி வீட்டிற்குள் வர, ” டேய் விக்கி சாப்பிடாம் நீ மாட்டிட்டு போற”.

”அப்பா நான் மூட் அவுட், என்னை தொந்தரவு செய்யாதீங்க..நான் வெளியேவே சாப்பிட்டேன் என்ன விஷியம்”.

”அது விக்கி, நம்ம ஈஷ்வருக்கு ஞாயிற்றி கிழமை பொண்ணு பார்க்க போறோம். நீயும் வரனும். ”

”ஓ , உங்க ஊர் பிரண்ட்டோட பொண்ணு, ஏன்ப்பா அண்ணா எவ்வளவு மார்டன், நீங்க என்னடான்னா கிராமத்து பொண்ணை கட்டி வைக்கிறீங்க”.

”ஏய் அவங்க சென்னையில தான் இருங்காங்க, அந்த பொண்ணு ஸ்கூல் நடத்திறா, பார்த்து பேசு, உனக்கு அண்ணியாக வரவ.இந்த மாதிரி எண்ணம் உன் மனசில வரக்கூடாது விக்கி. நீ சண்டே வரனும் அவ்வளவுதான் பேச்சு”.

அடுத்த நாள் மதியம் லன்சு பிரேக்கில், மரத்துக்கடியில் கையில் டிபன் பாக்ஸ் வைத்துக்கொண்டு ஸ்பூனால் கிளறினான் பவன். ”சீக்கிரம் சாப்பிட்டு வாடா டைம் ஆயிடுச்சு, நான் கிளாஸ் ஓர்க் எழுதனும். கிளம்பறேன்”, பவன் பிரண்ட் சொல்ல.

சரிடா எங்கியோ பார்த்துக்கொண்டே சொன்னான் பவன், ரவுண்ட்ஸ் வந்த நிலா கண்ணில் பவன் பட. அவனருகில் சென்றாள்.

”என்ன லன்ச் பவன்”,குட் ஆப்டர்நுன் மிஸ். தலையை அசைத்து ”ஏன் சாப்பிடாத உட்கார்ந்திருக்க, என்ன லன்ச்ன்னு கேட்டேன்”.

ம்ம் இது என்ன சாதம் என்று யோசித்து, ” ஏதோ வெரட்டி ரைஸ் மிஸ்”.

”பிடிக்கலையா,அப்படியே வச்சிருக்கே. ”

ம்ம் தலையை அசைத்து சிரித்தான், ” வீட்டில வேலை செய்யற குக் அண்ணா கொடுத்துவிட்டாங்க மிஸ், சுமாரா இருக்கு”.

”சரி உங்க அண்ணாகிட்ட நல்லா அடி வாங்கினீயா பவன்”,

”சாரி மிஸ், நான் தப்பு பண்ணிட்டேன் இனிமே செய்யமாட்டேன். அண்ணா அடிக்கல , பேசவேயில்ல என்கிட்ட”. முகத்தை சோகமாக வைத்து சொன்னான்

”சாரி, கேட்டியா பவன்”.

”கேட்டேன் மிஸ் , அண்ணா கோவிச்சிட்டாங்க , உங்கமேல வேற கோவம். ”

”நல்ல மார்க் எடுத்து உன் அண்ணாகிட்ட காட்டு, அவரே வந்து பேசுவாரு. நீ வொரி பண்ணாதே. டைம் ஆயிடுச்சு கிளாஸ்க்கு போ”. சரி என்று தலையை அசைத்து நிலாவை பார்த்துக்கொண்டே போனான்

ஞாயிறு மணி 9.00 பல்லாவரம் ராம்மூர்த்தி வீட்டில், ” கமலா, கமலா.. ” ராம் ஏறக்குறைய கத்த, வீட்டில் வேலை செய்யும் பெண்மணி.

”ஐயா, கூப்பிட்டிங்களா”..

எல்லா ரெடியாம்மா...ஆச்சிங்க ஐயா. சமையல் அறையிலிருந்து வெளியே வந்த நிலாவை பாரத்து.. ராம்மூர்த்தி ஏன்ம்மா இன்னும் நீ ரெடியாகலையா.

”அப்பா இப்ப எதுக்கு இவ்வளவு ஆர்பாட்டம், நான் ஸ்கூல் போற மாதிரி சிம்பிளா தான் சாரி கட்டுவேன்”,

”என் செல்லமில்ல கொஞ்சம் நகை போட்டுக்கோடா”...

”நான் இப்படிதான் இருப்பேன் , வந்தவனுக்கு புடிக்கலன்னா வேணா சொல்லிட்டு போகட்டும்”.

காம்பவுண்டுக்குள் கார் சத்தம் கேட்க. வந்துட்டாங்க போல சீக்கீரம் பூ வைச்சிட்டு வாடா. ச்சே அலுத்துக்கொண்டே ரூமிற்குள் சென்றாள் நிலா.

வாசலுக்கு சென்று அனைவரையும் வரவேற்றார். ”வாங்க, வா பார்த்தி”.பவன், விக்கி, ஈஷ்வர் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தார்கள்.

ராம் பக்கத்தில் பார்த்தி உட்கார்ந்தார்.ஒரே பரப்பரப்பு நம்ம ராம்மூர்த்திக்கு, பொண்ணை பார்த்து என்ன சொல்லுவார்களோ என்றோ இல்ல நம்ம பொண்ணு என்ன பேசுமோ பயத்திலிருந்தார்.

தனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை என்று ஈஷ்வர் எந்த உணர்வுமில்லாமல் உட்கார்ந்திருந்தான். ராம், ”இவர் ஈஷ்வர் என் முதல் பையன் சொல்ல”, ராம் ஈஷ்வரை பார்த்து புன்னகை புரிய ,மாப்பிள்ளையை நன்றாக பார்த்தார். மாப்பிள்ள அழகாக ஸ்மார்டா இருக்காரு. எனக்கு புடிச்சிருக்கே நம்ம பொண்ணு என்ன சொல்லும் என்று மனதில் சொல்லிக்கொண்டார்.

”விக்கி என்னுடைய அடுத்த பையன் , மூண்றாம் வருடம் காலேஜிக்கு போறான். இதோ கடைக்குட்டி பவன் உனக்கே தெரியும். உன் ஸ்கூல்தான் படிக்கிறான்”.

”கமலா காபி கொண்டுவாம்மா” என்று கூப்பிட. கமலாதான் பெண் என்று நினைத்து எல்லோரும் பார்க்க ஆர்வமானர்கள்.

”கமலா காபி கொடுத்துட்டு பாப்பாவை வரசொல்லும்மா”. இவங்க எங்க வீட்டில சமையல் செய்யறவங்க ஊரிலிருந்து எங்ககூடவே வந்துட்டாங்க.

”நிலா ரூமிலிருந்து வெளியே வர, வாம்மா நிலா எல்லோருக்கும் வணக்கம் சொல்லும்மா” என்று ராம் சொன்னவுடன். ”பார்த்தியை பார்த்து வாங்க மாமா” என்றாள்.

”ஹய்யா எங்க மூன் டீச்சர் தான் அண்ணியா, சூப்பர் , சூப்பர் டாடி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” என்று பவன் கத்த, தலை நிமிர்ந்து பார்த்த ஈஷ்வரும் நிலாவும்” நீயா, நீயா” என்று இருவரும் சொன்னார்கள்.

இதை கேட்ட பார்த்திபனுக்கு தான் பூமியே சுத்தற மாதிரி இருந்த்து. முடிச்சிடுச்சு ராம் அவ்வளவுதான் ராமை பார்த்தார்.

”ஏன்ப்பா இவருக்கு தான் இவ்வளவு பில்டப்பா, நீங்களும் நல்லவன் வல்லவன் சொன்னத பார்த்து ஏதோ நினைச்சேன்”.

”ஏய் கொஞ்சம் வாயை அடக்கிறீயா, நானும் எங்கப்பா சொன்ன மகாலஷ்மி, அமைதியான பொண்ணு எப்படியோ இருப்பா நினைச்சேன் , கடைசில நீ புல் ஷிட்”.

”அய்யோ , ஐய்யா எலிசபெத் ராணி வருவாங்க நினைச்சாரா... ”

இவங்க போடுற சண்டையை பார்த்து ராம்மூர்த்தியும் , பார்த்திபனும் தலைமேல் கையை வைத்தனர். விக்கிக்கு பிடிக்கவில்லை என்ன சண்டைக்கோழி மாதிரி இப்படி பேசறாங்க என்று நினைத்தான்.

பவன் தான் ஆசையாக நிலாவை பார்த்துக்கொண்டிருந்தான்.

”கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்திறீங்களா” பார்த்திபன் கத்த, இருவரும் அமைதியானார்கள். கண்டிப்பா இரண்டுபேருக்கும் கல்யாணம் நடக்கும் அதான் எங்க முடிவு சொல்லிட்டேன்.

ஈஷ்வர் பார்த்தியை பார்த்து முறைக்க, நிலா தன் அப்பாவை பார்த்து ”அவர்கிட்ட தனியா பேசனும்”...

”நானும் பேசணும்” என்று எழுந்து நின்றான் ஈஷ்வர்.

”தராளமா பேசுங்க ஆனா இந்த வாரத்தில கல்யாணம் சொல்லிட்டேன்” –பார்த்தி.

வாங்க ரூமிற்கு அழைத்து சென்றாள். அவள் பின்னாடியே சென்றவன் அண்ணா என்று பவன் ஈஷ்வர் கையை பிடித்தான்.

திரும்பி என்ன என்று பார்வையால் கேட்க” நிலா மிஸ் ரொம்ப நல்லவங்க அண்ணா பீளீஸ் வேணா சொல்லாதீங்க” . பிறகு விக்கி பக்கத்தில் உட்கார்ந்தான். ”டேய் பவன் நிலா நம்ம வீட்டுக்கு வந்துட்டா, உனக்கு பிரட்டிகல் மார்க் கிடைக்கும் அப்பறம் படிக்கலன்னு ஸ்கூல்ல கம்பளைன் வராதுதான அதுக்குதான் அண்ணியா வரனும் சொன்னே” விக்கி கேட்க.

”நான் இப்படி யோசிக்கலையே, இதுவும் என் நல்லதுக்கு தான் மூன் எங்க அண்ணி சொல்லி பந்தா பண்ணிப்பேன்.. சூப்பர் இல்ல”.விக்கி தலையில் அடித்துக்கொண்டான்.

வாங்க நிலா பேசிக்கொண்டே பால்கனி கதவை திறந்தாள். மாமரத்து காற்று இதமாக வருடியது.சிறிது நேரம் மௌனம் நிலவியது. அமைதியை கலைத்து ஈஷ்வர் ஆரம்பித்தான். என்னுடைய பாஸ்ட் லைப் பத்தி தெரிஞ்சிக்கனம்மா.

”வேணாம் , ஏற்கனவே உன்னைப்பத்தி கேள்விப்பட்டேன்”.

”என்ன கேள்விப்பட்ட”...

”உன் பெயரு மகேஷ்வர் தானே, நீ ரொம்ப செக்ஸ் டார்ச்ர் செஞ்சதால உன் பொண்டாட்டி டைவர்ஸ் வாங்கிட்டாலாம். ”

”ம்ம் அப்படியா, சரி கல்யாணம் எதுக்கு பண்ணுவாங்க ஒருத்தர் ஒருத்தர் மூஞ்சியை பார்த்திட்டு இருக்கவா, சொல்லு” பல்லை கடித்தான்.

”எனக்கு நேத்து ஒரு போன் வந்தது. அதுல உனக்கு பார்த்த மாப்பிள்ள இப்படி சொன்னாங்க”.

”உனக்கு கல்யாணம் பிடிக்கலையன்னா விட்டுட்டு. நோ ப்ராம்பளம்”..

”எனக்கு தேவையில்லதான், ஆனா நான் உள்ளே வரசொல்லவே அப்பா கண்கலங்க பார்த்தாரு, ஒரு மூனு மாசமா உன்னைபத்தி தான் பேச்சு... அவருக்கு பயம் வந்திடுச்சு அவருக்கு அப்பறம் நான் தனியா நிப்பேன். அவருக்காக தான் உன்ன மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவெடுத்தேன்”.

”நான் கூட எங்கப்பா டார்ச்சர் தாங்க முடியில, போனவாரம் தற்கொலை பண்ணிக்குவேன் மிரட்டினாரு. சரி நாம்ம ஆசைப்பட்ட கல்யாணம் தான் தப்பா போயிடுச்சு. அப்பா விருப்பதிற்கே எந்த கழுதையை காட்டினாலும் கல்யாணம் செஞ்சிக்கலாம் நினைச்சேன்”.

” ம்ம் அப்ப கழுதையை கல்யாணம் செஞ்சிக்கிற அளவுக்கு உன் மார்கெட் டவுன் ஆயிடுச்சு. ”

”என்ன வாய்பேச்சு உனக்கு, பேசி பேசியே உன் எக்ஸ ஒட வைச்சிருப்ப”.

”அய்யோ சாரு கண்டுபிடிச்சிட்டாரே நல்ல புத்திசாலிதான்..அப்பறம் உங்க வீட்டில நான் எனக்கு புடிச்ச மாதிரிதான் இருப்பேன். உனக்கு உங்க தம்பிங்களுக்கு சேவகம் செய்ய வரல புரியுதா”. ஒகேவா.

”அதே போல என் ஸ்பேஸ்ல நீ வர கூடாது” ஈஷ்வர் சொல்ல..

”ஸ்பேஸ்ன்னா உன்விட்டு கொஞ்சம் தள்ளி நிக்கனும்மா”.

”ஆண்டவா, என் வாழ்க்கை முழுக்க, உன்னைய எப்படி சமாளிப்பேன் தெரியில”.

ஜோக் அடிக்கிறத நிறுத்து ஈஷ்வர்... ம்ம் எந்நேரம் லூஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் மனதில் நிலாவை திட்டிக்கொண்டான்.

ஈஷ்வர் உங்கிட்ட என்னபத்தி பேசனும் ,சட்டென்று தன்னை மாற்றினாள் நிலா. ஈஷ்வர் அவளுடைய சீரியஸ்சான முகம் மாறுதலை பார்த்தான். ”அது அப்பா உங்கிட்ட மறைச்சிருப்பாங்க. அது” சொல்ல தயங்க..

”சொல்ல முடியிலைன்னா விட்டுட்டு நிலா. ஐ டோன்ட் மைன். ”

”நோ நோ ஈஷ்வர் , நீங்க தெரிஞ்சிக்கனும்.... நான் டூ இயர்ஸ் பேக், சுயநினைவு இல்லாமல் இருந்தேன், கவுன்சிலிங் பிறகுதான் நார்மல் ஆனேன். கிட்டதட்ட மென்டல் டிப்ரேஷன்.. ”.

அப்ப நாம்ம கரக்டா தான் கெஸ் செஞ்சிருக்கேன் லூஸ்தான்னு மனதில் நினைத்து வெளியெ சிரித்தான் ஈஷ்வர்.

------- நிலாவை பிடித்தேன்
 
Top