Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என் ....வெண்ணிலா-07

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என் ....வெண்ணிலா-07
என்ன செய்யறது தெரியல ராகவ், நிலாவ சேப்பா பார்த்துக்கனும். அன்று இரவு, தன் மேல் ஏதோ கணமாக இருப்பதாக ஈஷ்வர் உணர,இது கனவா இருக்குமோ, நினைக்கையில் அம்மா என்ற அலறல் சத்தமோடு கீழே விழுந்திருந்தான் ஈஷ்வர். அவன்மேல் நம்ம நிலா விழுந்திருக்க...

ஏய் எரும , இப்படியா என்ன கீழே தள்ளி விடுவ. நான் கார்னர்ல தான படுத்திருந்தேன். என் முதுகுபோச்சு எழுந்திருடி ,நல்லா திம்சு மாதிரி இருந்திட்டு.

எதுவும் தெரியாது போல் கண்ணை விழித்து முழித்தாள்,நிலா. என்னாச்சு மகி...

நோன்ன, என்னை மேலிருந்து கீழே தள்ளிட்டு, என்னாச்சாம். என்னால வையிட் தாங்க முடியில இறங்குடி.

கோவம் வந்தது, நிலாவுக்கு, அவ்வளவு வையிட்டா இருக்கேன் , சொல்லிக்கொண்டே மகியை முறைத்தாள்.

என் முதுகு வலிக்குதுடி எழுந்திரும்மா... அவள் எழுந்து ஈஷ்வருக்கு கையை க்கொடுத்தாள், அவள் கையை பிடித்து எழுந்தான்.

இவ்வளவு இடம் பத்தாதா உனக்கு , பல்லை கடிக்க...

ஐயோ தெரியாத தள்ளிட்டேன், சாரி ... அதுக்கு இப்படி சொல்விங்களா. ச்சே எதுக்கெடுத்தாலும் சிடுசிடு மூஞ்சியை காட்டறது போ மகி... சாரி எனக்கே தெரியல, தன் கண்கள் கலங்க கணவனை பார்த்தால் நிலா...

நிலாவின் முகம் வாடுவதை பார்த்த ஈஷ்வர், ரொம்ப திட்டிட்டோம் போல ,ச்சே என்ன இப்படி பேசிட்டோம் ,பயப்படுறா நம்மல பார்த்து
இல்லையே இவ ராக்காயி ஆச்சே, சீன போடுவா... மைன்டில் யோசிக்க.. சரி தூங்கு..

அந்த பக்கமாக ஓருகளித்து படுத்தால் நிலா... சிறிது நேரம் கழித்து தன் தலையை தூக்கி நிலா தூங்கிட்டாலா என்று பார்த்தான் ஈஷ்வர்... அப்பா தூங்கிட்டா , தன் காலை எடுத்து அவள் கால் பாதத்தின் மேல் வைத்தான்.

நிலா தூங்காமல், ஈஷ்வர் கால் தன் மேல் இருப்பதை உணர்ந்தாள், கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள். மகிகிகி... மகி என்று மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

அதை புரிந்துக்கொண்டான் ஈஷ்வர், பேசாமா தூங்குடி, சும்மா நை நைன்னு.

மனதில் ரொம்ப சந்தோஷம் நிலாவுக்கு, எந்த வித எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தன்னை ஏற்று கொள்ளவேண்டும் தன்னவன்.கனவன் மனைவி என்ற புரிதல் வேண்டும். இரண்டு வருடமா ஈஷ்வரிடம் எதிர்பார்த்தது இதை தானே. மகி உனக்கு என்னை பிடிக்குமா...
அதிகமான ஆசை நிலா உனக்கு என்று அவள் மணம் கேலி செய்தது.

அடுத்த நாள் விக்கி நிலாவிடம், அண்ணி இன்னிக்கு எக்ஸாம் முடியபோகுது, சோ பிரண்ட்ஸ் எல்லோரும் சினிமா போறோம் வர 9.30 மேல ஆகும்...

சரி விக்கி , இந்தா லன்ச் எடுத்துக்கோ.

இதை விடமாட்டிங்களா...நீ சாப்பிடு இல்லைன்னா யாருக்காவது கொடு விக்கி..
நிலா ஸ்கூல் ரெடியாகி வெளியே வர... என் கூடவே வா நிலா கார்ல போலாம், ஈஷ்வர் கூப்பிட்டான்..

ஐயோ மகி, நீ ஏன் பயப்படற... எனக்கு டூவிலர்ல போறதுதான் பிடிக்கும்...ப்ளீஸ். என் இஷ்டத்திற்கு விடு மகி...

உனக்கு டூவிலர்ல போகனும்... விக்கி ,ஷெட்டுல இருந்து டூகாட்டி எடுத்திட்டு வா ... சரி அண்ணா.

தன் பிங் நிற சேலையை சரி செய்துக்கொண்டே , மகி நீ வண்டியெல்லாம் ஓட்டுவீயா. ஈஷ்வர் முறைக்க, அவன் முறைப்பே கேள்வியாக வந்தது. என்ன கேள்வி இது..
அது நீங்க ரொம்ப வசதி கார்லே தானே போவீங்க அதான்கேட்டேன்-நிலா..

மாட்டுச்சு மூன், வச்சு செய்வானே அண்ணா...

வண்டியை ஸ்டார்ட் செய்து , அவள் உட்கார வரை பொறுத்தான் என்று சொல்ல வேண்டும். ஈஷ்வர் எடுத்த வேகத்தில் அவன் இடுப்பை அழுத்தி பிடித்து கண்ணை மூடினவள் தான். சிறிது நேரத்தில் எங்கியோ நின்ற எண்ணம் வர தன் கண்ணை திறந்தாள். ஸ்கூல் முன்னாடி வண்டி நின்றிருந்தது. ஏதோ ரோலர் கோஸ்ட் போன மாதிரி இருந்தது அவளுக்கு. அப்பா என்று மூச்சை விட்டாள்.

அவன் இடுப்பிலிருந்து கையை எடுத்து இறங்கினாள். அவனை பார்த்து வரேன் என தலையை ஆட்ட, ஈஷ்வரும் தலையை ஆட்டினான். இருவரும் பேசிக்கொள்ள வில்லை. அவன் வண்டியை திருப்பும் அழகை பார்த்துக்கொண்டே நின்றாள் நிலா.

ஹலோ என்ன அண்ணி எங்க அண்ணாவையே சைட் அடிச்சிட்டு அப்படியே நிற்கிறீங்க, போங்க உங்க பிரண்ட்ஸ் எல்லாம் பார்க்கிறாங்க.

போடா , உங்க அண்ணா என்ன இப்படி பேய் மாதிரி வண்டியை ஓட்டுறான்.

பின்ன இருக்காதா பைக் ரேஸசர் எங்க அண்ணா, சும்மா பறப்பாங்க தெரியுமா...

என்னது ரேஸசரா, அதான் முறைச்சானா. ஓரு பார்வையில எத்தனை ஒளிச்சு வைப்படா மகி என்று எண்ணினாள். சரி கிளாஸ்க்கு போ டைமாயிடுச்சு.

அப்பறம் அண்ணி , அண்ணா உங்க கூடவே ஈவனிங் வர சொன்னாங்க, என்னை விட்டு போயிடாதீங்க.

மாலை மணி ஆறு, ஈஷ்வர் , நிலாவை போனில் அழைத்தான், நிலா, நான் இன்னிக்கு வர எட்டுமேல ஆயிடும்.பாரின் பார்ட்டியோட சின்ன டின்னர், ராகவ் வேற ஊருக்கு போயிருக்கான், நான்தான் பார்க்கனும்...
எந்த ஹோட்டல்...
சோழா, வேற ஏதாவது டீடைல் வேணும்மா.. சும்மா கொஸ்டினா கேட்காதே நிலா, எனக்கு ஆயிரம் வேலையிருக்கு...

இல்ல சும்மாதான் கேட்டேன். ம்ம் சரி சீக்கிரம் வந்திடுங்க... பவன் பர்த் டே வருது பர்சேஸ் பண்ணனும் நினைச்சேன், சரி நாளைக்கு போறேன், என்று போனை வைத்தாள் நிலா.
வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்டு படுக்க... என்ன நிலா இன்னும் ஈஷ்வர் வரல..-பார்த்தி .

ஏதோ டின்னராம் பாரின் பார்ட்டிக்கு சொன்னாரு,வர டைம்தான் மாமா நீங்க போய் தூங்குங்க...

மணி 10.00 ஆக , ஈஷ்வரிடமிருந்து வாய்ஸ் கால் , சீக்கிரம் வா நிலா மயக்கமா இருக்கு ...
என்னாச்சோ என்ற பதட்டத்தில் காரை எடுக்க சென்றாள். வீட்டிற்குள் நுழைந்த விக்கி ,நிலா போவதை பார்த்து எங்கே போறீங்க என்று கேட்டான்.

உங்க அண்ணாவ கூப்பிட விக்கி, நீ போய் தூங்கு...

இல்ல மூன் , நானும் வரேன் இந்த டைம்ல தனியாவா நோ...இருவரும் காரில்
அமர்ந்தார்கள், காரை விக்கி ஓட்டினான்.

சோழா ஹோட்டல் பார்க்கிங்கில், ஈஷ்வர் தன் பி.ஏ மதுபாலா தோள் சாய்ந்து நடந்து வந்தான். நிலா அவர்களை பார்த்து கண்கள் கலங்க, விக்கி நிலாவின் கையை பிடித்து தப்பாக எண்ணிவிடாதே என்பது போல் தலையை ஆட்டினான்.

கதவை திறந்து ஈஷ்வர் என்று நிலா கூப்பிட மது அங்கே நின்றாள். அவன் அருகே சென்று , அவளிடமிருந்து ஈஷ்வரை பிரித்தாள்.

சாருக்கு போதை அதிகமாயிட்டு, எப்பவும் அதிகமாயிட்டா என் கூடவே எங்க வீட்டுக்கு வந்துடுவாரு, மது நக்கலாக நிலாவை பார்த்து சொல்ல...

அவர் பொண்டாட்டி நான் இருக்கேன் அவரை பார்த்துக்க , நீ உன்னுடைய வேலையை பார்... விக்கி, நிலா இருவரும் ஈஷ்வரை தாங்களாக பிடித்துக்கொண்டு காரில் ஏற்றினர்.

அப்போழுது போதையில் உளறினான். ஏய் மது என்னைய தொடாதே, எனக்கு ஓரு மாதிரியா இருக்கு கிட்ட வரா... நிநி லா வாடி மயக்கமா இருக்கு...

அண்ணா, என்ன ஆச்சி விக்கி கேட்க.. சாப்பிட்டேன் , கடைசியா மில்க் ஷேக் ... மயக்கமா..மய.. வாய் மூனுக, கண்கள் சொறுகி நிலாவின் தோளில் சாய்ந்தான். வீட்டில் ஈஷ்வர் ரூமில் படுக்க வைத்து சென்றான் விக்கி...

ஷு,ஷாக்ஸை கழிட்டி , பெல்ட் ரீலிஸ் செய்து ஷர்ட்டை கழிட்டினாள். ஈஷ்வர் போதையில் தடுமாற, ஏய் மது விடு என்னை தொடாதே ப்ளீஸ்....

நிலா கண் கலங்க ,மகி நான் நிலா நம்ம வீட்டில் தான் இருக்கோம்.

நிலா என்று சொல்லி , அவள் கையை இறுக்க பிடித்துக் கொண்டான்... மறுநாள் விடியலில் கண்ணை விழித்தான் ஈஷ்வர். தலை ஓரு பக்கமாக வலி எடுத்தது... எப்படி வந்தோம் .. நிலா.. நிலா என்று நிலாவை கூப்பிட்டான்.

கையில் காபியுடன் ரூமில் நுழைந்தாள். தன் நிலையை பார்த்தான். ஷார்ட் மட்டும் கழிற்றிருந்தன. ஊக்கித்துக் கொண்டான் நிலா தான் செய்திருப்பாள். என்னாச்சு நேற்று...

மகி ஃபிரஷ் ஆயிட்டு வாங்க...காபி வைச்சிருக்கேன் சொல்லி வெளியேற..


நிலா ஓரு நிமிஷம்.....என்னவென்று பார்த்தாள்..

நான் குடிக்கல பிஸினஸ் விஷியமா தான் டின்னர்... கடைசியா கிளம்ப சொல்ல மில்க் ஷேக் குடிச்சேன் .. அப்பவே மயக்கமா இருந்தது. மதுகிட்ட போலாம் சொன்னேன், அவ ரெஸ்ட் ரூம் போயிட்டுவரேன் சொன்னா நிலா, அதான் நான் உடனே உனக்கு வாய்ஸ் மெசேஸ் போட்டேன். நான் குடிக்கல, ஏதோ கலந்திருப்பாங்க நினைக்கிறேன்.
எல்லாத்தையும் கேட்டுக் கொண்டாள், மகி எனக்கு புரியுது...குளிச்சிட்டு வாங்க...கீழே இறங்கினாள்.

மாலை பவன் நிலாவிடம், இன்னிக்கு என்ன சூப் மூன்... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு... கமலா எடுத்திட்டு வந்து தர..

நல்லா சாப்பிட்டு குண்டு பூசனி மாதிரி ஆயிடு பவனை விக்கி கலாய்த்தான், மூவரும் இப்படியே பேசிக் கொண்டிருக்க, ராமும் பார்த்தியும் வாக்கிங் சென்றார்கள்.

உள்ளே வந்த ஈஷ்வர் நேரே ரூமுற்குள் செல்ல, அவன் முகத்தை பார்த்த நிலாவிற்கு ஏதோ சரியில்லை என்று மனதில் பட்டது. விக்கி , கொஞ்சம் பவனை பார்த்துக் கோ , உங்க அண்ணா மூட் அவுட் போல நான் போய் பார்க்கிறேன் . மாடி ஏறினாள்.

பேக் ஒரு பக்கமும் ஷு ஒருபக்கம் இருக்க தலையை தலையனையில் புதைந்து குப்புற படுத்திருந்தான்.

மகி.. மகி அவள் கூப்பிட...

நிலா நான் மூட் அவுட் என்கிட்ட வராதே... என்னை கொஞ்சம் தனியா இருக்கவிடு...கண்களை மூடிக்கொண்டே சொன்னான் ஈஷ்வர்.

-----நிலாவை பிடித்தேன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
என்ன ஆச்சு
அந்த மது கழுதை ஏதாவது
சொல்லி குழப்பறளா
 
Top